Jump to content

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்.... இசை நிகழ்ச்சியில் முட்டை வீச்சு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரசோதரன் said:

இவையெல்லாம் காரணங்கள் என்றால், உலகில் எங்கும் மூன்று ஈழத்தமிழர்கள் ஒன்றாக கூடுவதற்கே எதிராக ஐநா சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதை ஏகமனதாக நிறைவேற்ற வேண்டும். 

‘மூன்று பேர் ஒரு வேலைத் தளத்தில் இருந்தால், ஒருவர் தனிமைப் படுத்தப் பட்டு இருவர் குழுவாக இருப்பார்கள்’  என யேர்மனியில் சொல்வார்கள். 

ஒற்றைமையின்மை எல்லா நாட்டு இனத்திலும் இருக்கிறது.ஆனால்  நாங்கள் எதிலும் தீவிரமாக இருப்போம். 

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

நிழலி

CTC கனடிய மற்றும் ஏனைய ஈழத்தமிழர்களிற்கு செய்தது மிக மோசமான வஞ்சனை. காலம் பூராவும், இலங்கை அரசு இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என்று முழங்கி விட்டு, மகிந்தவையும் கோத்தாவையும் போர் குற்றவாளிகள் என்று அற

ரசோதரன்

👍........... எல்லோர் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை இருக்கின்றது என்பது உண்மையே. உதாரணமாக, தெலுங்கு மக்கள் எல்லோரும் மிக ஒற்றுமையானவர்கள் என்று ஒரு காலத்தில் தமிழர்கள் சொன்னார்கள். தமிழர்கள்

ஈழப்பிரியன்

ஏற்கனவே எதிர்ப்புகள் வந்தபோது கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். என்ன தான் செய்துவிட முடியும் என்று தொடங்கியதால் வந்தவினை போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

முட்டை  வீசியத்தைப் பற்றி எழுதுபவர்கள்... அதன் படத்தையும்  போட்டு எழுதவும்.
அப்பதான்... நீங்கள் சொல்வதில்  அர்த்தம் இருக்கும். 

 

8 hours ago, Kandiah57 said:

இது உங்களுக்கும் பொருந்தும் இல்லையா  ??   படம் எங்கே  ??   

தயவுசெய்து படத்தை இணைக்கவும். 😂😂

 

24-66cd64a57652d.webp

 

கனடா தமிழர் தெரு விழாவில் குழப்பம்....இசை நிகழ்ச்சியில் முட்டைவீச்சு! | Amali Thumali At The Canada Tamil Street Festival

24-66cd62a1498b8.webp

 

 

கந்தையா அண்ணை...  பாடகர் சிறிநிவாஸ் அந்த மேடையில்,  இரண்டு பாடல்களை மட்டும் பாடியதாக அறிய முடிகின்றது. அவர் பாடும் படங்கள் மேலே இணைக்கப் பட்டுள்ளதுடன்... அவரை மேடையில் இருந்து காவல் அதிகாரிகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் காணொளி  காட்சிகளும் பதிவாகி உள்ளது.

இதில் உள்ள எந்தப் படத்திலும்... அவர்  மீது முட்டை வீசியதற்கான அறிகுறிகள் அறவே இல்லை. அப்படி இருக்க... முட்டை  கதையை கட்டி விடுபவர்கள் அதனை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் அல்லவா. 

இல்லாத ஒன்றை சொல்லும் போது... அவரின் அபிமானிகளான  தென் இந்திய தமிழர்களின்  மனதிலும் ஒரு காயத்தை ஏற்படுத்தி இரண்டு நாட்டு தமிழர்களிடமும் மேலும் விரிசலை ஏற்படுத்தும் என்பதை இவர்கள் உணராமல் எழுதுவது ஆபத்தானது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் ஶ்ரீநிவாஸ் மீது முட்டை வீசியதை விடுங்கள். அதை விட மோசமாக அவரை மிகவும் மோசமான வசை சொற்கால் ஏசி உள்ளது வீடியோக்களில் பதிவாகி உள்ளது. போடா துரோகி, வடக்கத்தையன் இது விட தூஷண வார்ததைகளை அவருக்கு கூறி உள்ளார்கள். மேடையில் இருந்து அந்த ஆர்பாட்டம் செய்த  கொடிகளை கையில் வைத்திருந்த காடையர்களை நோக்கி மிகவும் பண்பான முறையில் அவர் உரையாடினார். கனிவாக பேசினார். ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காத  அந்த காடையர்கள் அதை மீறி வடக்கத்தையான் போடா என்று பல தூஷண வார்ததைகளை  வார்ததைகளை உபயோகித்தார்கள். இது நிச்சயம் தமிழக மக்களை சென்றடையும். 

  • Thanks 1
Link to comment
Share on other sites


 

தெருவிழா போராட்டக்காரர்களால் திருவிழாவாக மாறிய சம்பவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த பல வருடங்களாக சிறப்புடன் நடைபெற்றுவந்த தமிழர் திருவிழாவை ஒருவழியாக நிற்பாட்டியாயிற்று. 

பண்பு அற்ற, படிப்பறிவற்ற, ஒழுக்கம் அற்ற, காடையர் கூட்டம் ஒன்று கனேடியத் தமிழர்களுக்குத் தலைமையேற்க ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

பாடகர் ஶ்ரீநிவாஸ் மீது முட்டை வீசியதை விடுங்கள். அதை விட மோசமாக அவரை மிகவும் மோசமான வசை சொற்கால் ஏசி உள்ளது வீடியோக்களில் பதிவாகி உள்ளது. போடா துரோகி, வடக்கத்தையன் இது விட தூஷண வார்ததைகளை அவருக்கு கூறி உள்ளார்கள். மேடையில் இருந்து அந்த ஆர்பாட்டம் செய்த  கொடிகளை கையில் வைத்திருந்த காடையர்களை நோக்கி மிகவும் பண்பான முறையில் அவர் உரையாடினார். கனிவாக பேசினார். ஆனால் எதையும் காது கொடுத்து கேட்காத  அந்த காடையர்கள் அதை மீறி வடக்கத்தையான் போடா என்று பல தூஷண வார்ததைகளை  வார்ததைகளை உபயோகித்தார்கள். இது நிச்சயம் தமிழக மக்களை சென்றடையும். 

முட்டை வீசுவது ஒரு வகையில் மற்றவர்களை இழிவுபடுத்துவதற்காக, இங்கு தென்னிந்திய திரை இசை கலைஞர்கள் மேல் இவ்வாறு நிகழ்த்தப்பட்டமையாலேயே இதனை பேசு பொருளாக்குகிறார்கள் ஆனால் இதே விடயங்களை கனடிய தமிழர் பேரவை உறுப்பினர் மீது நிகழ்த்தப்பட்டால் அதனை சரியான செயல் என கூறியிருப்பார்கள் ( இப்போது இவர்களால் தமது மானம் கப்பலேறிவிட்டது என்பதால் இந்த கவலையாக இருக்கலாம்).

மற்ற இனத்தவர்களும் இவ்வாறு மற்றவர்கலை கேவலப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவதுண்டு, அவர்கலை கண்டிக்காமல் அவர்களுக்கு ஊக்கமளிக்க சன்மானமும் வழங்குவார்கள்.

10 years ago, an Iraqi journalist threw a pair of shoes at George W. Bush.  "I didn't feel the least bit threatened by it . . . That's what happens in  free

இதனால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய திரை உலகம் முழுவதும் இந்த அவமதிப்பிற்கெதிராக இனி புலம்பெயர் தேசங்களில் நிகழ்வுகளில் கலந்து கொள்ளமாட்டோம் என இவர்களை புறக்கணிப்பார்களா?

எமது புராண இதிகாசங்களிலே கூட இவ்வாறு ஒருவரை அவமதிக்கும் போது கண்ணன் வந்து காப்பாற்றுவதாக கூறப்பட்டுள்ளது, இதனை கேட்டு வளரும் குழந்தைகள் அதே மாதிரி செய்யாமல் வேறுமாதிரி நடந்தால்தானே தவறு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

பண்பு அற்ற, படிப்பறிவற்ற, ஒழுக்கம் அற்ற, காடையர் கூட்டம்

இது எல்லாம் கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்களுக்கு இல்லையா??     

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
48 minutes ago, Kandiah57 said:

இது எல்லாம் கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்களுக்கு இல்லையா??     

 

231218%20CTC%20Rajapaksa4.jpg

231218%20CTC%20Rajapaksa3.JPG

231215%20GTF%20Tour%20(5).jpeg

231218%20CTC%20Rajapaksa5.JPG

நீங்கள், அடிமடியிலை... கை  வைக்கிறீர்கள். 😂 🤣

அவர்களாக போய்... புத்த பிக்குகளிடம் குனிந்து ஆசிர்வாதம் வாங்கலாம்.
சஜித், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை... பின்கதவால் சந்திக்கலாம்.
அதை  எல்லாம்.... நீங்கள் கண்டாலும், காணாத மாதிரி இருக்க வேண்டும் என நினைக்கின்றார்கள்.

இந்தப் பிரச்சினை தோன்றியதன் முக்கிய  மூல  காரணமே,  கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்கள் செய்த செயல் என்பதை இவர்கள் தெரிந்தும்... தெரியாத மாதிரி கதை அளந்து கொண்டு இருப்பதை பார்க்க சகிக்க முடியவில்லை. 😡

அவர்கள்... இல்லாத முள்ளமாரித்தனம் எல்லாம் செய்தவனை கண்டிக்க வக்கில்லாமல், 
மற்றவனுக்கு... "வகுப்பு"  எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  😂

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kandiah57 said:

இது எல்லாம் கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்களுக்கு இல்லையா??     

.ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்,.....இது வேற,....

🤦🏼‍♂️

38 minutes ago, தமிழ் சிறி said:

 

231218%20CTC%20Rajapaksa4.jpg

231218%20CTC%20Rajapaksa3.JPG

231215%20GTF%20Tour%20(5).jpeg

231218%20CTC%20Rajapaksa5.JPG

நீங்கள், அடிமடியிலை... கை  வைக்கிறீர்கள். 😂 🤣

அவர்களாக போய்... புத்த பிக்குகளிடம் குனிந்து ஆசிர்வாதம் வாங்கலாம்.
சஜித், சந்திரிக்கா, மகிந்த, கோத்தாவை... பின்கதவால் சந்திக்கலாம்.
அதை  எல்லாம்.... நீங்கள் கண்டாலும், காணாத மாதிரி இருக்க வேண்டும் என நினைக்கின்றார்கள்.

இந்தப் பிரச்சினை தோன்றியதன் முக்கிய  மூல  காரணமே,  கனடா தமிழ் பேரவையில் உள்ளவர்கள் செய்த செயல் என்பதை இவர்கள் தெரிந்தும்... தெரியாத மாதிரி கதை அளந்து கொண்டு இருப்பதை பார்க்க சகிக்க முடியவில்லை. 😡

அவர்கள்... இல்லாத முள்ளமாரித்தனம் எல்லாம் செய்செய்தவனை கண்டிக்க வக்கில்லாமல், 
மற்றவனுக்கு... "வகுப்பு"  எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  😂

வன்முறையையும் அடாவடித் தனத்தையும்  எப்படி ஆதரிப்பீர்கள்? 

இந்தச் செயலின் விளைவுகள் என்னவென்று தங்களுக்குப் புரியவில்லையா? 

வி புக்கள் பேச்சுவார்த்தைக்குப் போகலாம் . ஆனால் மற்றவன் கதைக்கக்கூடாது.. இதுதானா உங்கள் நிலைப்பாடு? 

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
31 minutes ago, Kapithan said:

வன்முறையையும் அடாவடித் தனத்தையும்  எப்படி ஆதரிப்பீர்கள்? 

இந்தச் செயலின் விளைவுகள் என்னவென்று தங்களுக்குப் புரியவில்லையா? 

வி புக்கள் பேச்சுவார்த்தைக்குப் போகலாம் . ஆனால் மற்றவன் கதைக்கக்கூடாது.. இதுதானா உங்கள் நிலைப்பாடு? 

😏

அப்படி யாரும் சொல்லவில்லை.
தமிழர் நலன் சார்ந்து  இருக்கின்ற கனடிய தமிழர் பேரவை... 
தனியே ஸ்ரீலங்கா போய்...
"இமாலய பிரகடனம்" என்ற ஒப்பந்தத்தை செய்த பின் தான்....
தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்களும்..
இமாலய பிரகடனம் என்றால்.. என்ன என்று தெரியாமல் விழித்தார்கள்.

தாயக மக்களுக்கே... தெரியாமல் புத்த பிக்குகளையும், பல்லாயிரம் மக்களை கொன்று  போரை நடத்தியவர்களை சந்தித்ததைத்தான்.... தவறு என்றும், இவ்வளவு பிரச்சினை ஆரம்பமாக உள்ள முக்கிய காரணம் என்று குறிப்பிடுகின்றோம்.

உங்களுக்கு நடந்த  பல விடயங்கள் தெரியும். 
ஆனால்... தெரியாத மாதிரி நடிக்கின்றீர்கள் அல்லது அதனை ஒத்துக் கொள்ள 
உங்கள் சுயமரியாதை இடம் தரவில்லை  என்றே கருத வேண்டி உள்ளது.

ஆரம்பமான முக்கிய பிரச்சினையை வசதியாக மறைத்துக் கொண்டு,
திரும்பத் திரும்ப ஒரே கருத்தை சொல்லிக் கொண்டு இருப்பது 
உங்களுக்கே அலுப்பு அடிக்கவில்லையா.

நன்றி, வணக்கம். 

Edited by தமிழ் சிறி
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

அப்படி யாரும் சொல்லவில்லை.
தமிழர் நலன் சார்ந்து  இருக்கின்ற கனடிய தமிழர் பேரவை... 
தனியே ஸ்ரீலங்கா போய்... இமாலய பிரகடனம் என்ற ஒப்பந்தத்தை செய்த பின் தான்....
தாயகத்தில் மட்டுமல்ல புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற மக்களும்..
இமாலய பிரகடனம் என்றால்.. என்ன என்று தெரியாமல் விழித்தார்கள்.

தாயாக மக்களுக்கே... தெரியாமல் புத்த பிக்குகளையும், பல்லாயிரம் மக்களை கொன்று   போரை நடத்தியவர்களை சந்தித்ததைத்தான்.... தவறு என்றும், இவ்வளவு பிரச்சினை ஆரம்பமாகவும் உள்ள முக்கிய காரணம் என்று குறிப்பிடுகின்றோம்.

உங்களுக்கு நடந்த  பல விடயங்கள் தெரியும். 
ஆனால்... தெரியாத மாதிரி நடிக்கின்றீர்கள் அல்லது அதனை ஒத்துக் கொள்ள 
உங்களை சுயமரியாதை இடம் தரவில்லை  என்றே கருத வேண்டி உள்ளது.

சப்பைக்கட்டு கட்ட வேண்டாம். 

இங்கே விவாதிக்கப்படுவது தமிழர் திருவிழாவில் படிப்பறிவற்ற, ஒழுக்கம் அற்ற,  காடையர் கூட்டத்த்ன் செயல்கள் பற்றித்தான். CTC யில் அரசியல் பற்றி அல்ல.

இந்தத் திருவிழா கனேடியத் தமிழர்களுக்கானது. அதைக்  குழப்புவதற்கும் அதற்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கும் வெட்கப்பட வேண்டும். 

திருவிழாவிற்கு வந்திருந்தது இவை தொடர்பாக ஏதும் அறியாத சாதாரண மக்களே. இவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்தார்கள்.

நாளை இந்தப் பிள்ளைகள் திரும்ப இப்படி ஒரு தமிழர் விழாக்களிற்கு  வருவார்களா? 

பாடகர் சிறீநிவாஸ் அவர்கள் அவமரியாதை செய்யப்பட்டதற்கு தென்னிந்திய திரையுகம் எப்படி எதிர்வினையாற்றும்? 

இப்படி ஒரு  விழாவிற்கு திரும்பவும் City of Toronto அனுமதி தருமா? 

Toronto Police ன் எதிர்வினை எப்படி இருக்கும்?  

இதைப்பற்ரியெல்லாம் யோசிக்க மாட்டீர்களா? 😏

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

சப்பைக்கட்டு கட்ட வேண்டாம். 

இங்கே விவாதிக்கப்படுவது தமிழர் திருவிழாவில் படிப்பறிவற்ற, ஒழுக்கம் அற்ற,  காடையர் கூட்டத்த்ன் செயல்கள் பற்றித்தான். CTC யில் அரசியல் பற்றி அல்ல.

இந்தத் திருவிழா கனேடியத் தமிழர்களுக்கானது. அதைக்  குழப்புவதற்கும் அதற்கு சப்பைக்கட்டு கட்டுவதற்கும் வெட்கப்பட வேண்டும். 

திருவிழாவிற்கு வந்திருந்தது இவை தொடர்பாக ஏதும் அறியாத சாதாரண மக்களே. இவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்தார்கள்.

நாளை இந்தப் பிள்ளைகள் திரும்ப இப்படி ஒரு தமிழர் விழாக்களிற்கு  வருவார்களா? 

பாடகர் சிறீநிவாஸ் அவர்கள் அவமரியாதை செய்யப்பட்டதற்கு தென்னிந்திய திரையுகம் எப்படி எதிர்வினையாற்றும்? 

இப்படி ஒரு  விழாவிற்கு திரும்பவும் City of Toronto அனுமதி தருமா? 

Toronto Police ன் எதிர்வினை எப்படி இருக்கும்?  

இதைப்பற்ரியெல்லாம் யோசிக்க மாட்டீர்களா? 😏

 

அப்போ  நடந்த சம்பவங்கள் எதற்கும்.... உங்கள் அபிமான  கனடிய தமிழர் பேரவை பொறுப்பாளி அல்ல  என்பதுதானே உங்கள் வாதம். 

இந்த தெருவிழா நடக்க முன்பே பல தமிழர்  அமைப்புகள் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்ததாக அறிகின்றோம். அந்த நேரமாவது கனடிய தமிழர் பேரவை சம்பந்தப் பட்டவர்களை அணுகி என்ன பிரச்சினை என்பதனை பேசித் தீர்த்திருந்தால் இந்த அசம்பாவிதங்களை தவிர்த்து இருக்கலாமே. 
அதற்கு... அவர்களுக்கு தடையாக இருந்தது எது? 

ஒரு நகரத்தில் நடக்கும்  நிகழ்வை  ஓரிரு  தமிழர் அமைப்புடன்   கலந்து பேசி சுமூகமாக 
நடத்தி முடிக்க வேண்டிய தார்மீக   பொறுப்பு கனடா தமிழர் பேரவைக்கு இல்லை என்றால்....

சிங்களவனுடன் "இமாலய பிரகடனம்"  செய்வதில் ஏதாவது அர்த்தம் உண்டா. 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொது மக்கள் கலந்து கொள்ளும் ஒரு இனிய பொழுதான நிகழ்வில் தமிழ் குண்டர்கள் செய்த காவாலித்தனங்களை நியாயப்படுத்துவது கேவலம். 

சீடீசி உடன் பிரச்சனை என்றால் அவர்கள் அலுவலம் முன் சென்று போராட்டம் செய்யலாமே. பொதுமக்கள் கலந்துகொள்ளும் நிகழ்வில் தங்கள் ஊத்தைவாலித்தனங்களை காட்டவேண்டியதில்லை. 

 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
58 minutes ago, தமிழ் சிறி said:

அப்போ  நடந்த சம்பவங்கள் எதற்கும்.... உங்கள் அபிமான  கனடிய தமிழர் பேரவை பொறுப்பாளி அல்ல  என்பதுதானே உங்கள் வாதம். 

இந்த தெருவிழா நடக்க முன்பே பல தமிழர்  அமைப்புகள் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்ததாக அறிகின்றோம். அந்த நேரமாவது கனடிய தமிழர் பேரவை சம்பந்தப் பட்டவர்களை அணுகி என்ன பிரச்சினை என்பதனை பேசித் தீர்த்திருந்தால் இந்த அசம்பாவிதங்களை தவிர்த்து இருக்கலாமே. 
அதற்கு... அவர்களுக்கு தடையாக இருந்தது எது? 

ஒரு நகரத்தில் நடக்கும்  நிகழ்வை  ஓரிரு  தமிழர் அமைப்புடன்   கலந்து பேசி சுமூகமாக 
நடத்தி முடிக்க வேண்டிய தார்மீக   பொறுப்பு கனடா தமிழர் பேரவைக்கு இல்லை என்றால்....

சிங்களவனுடன் "இமாலய பிரகடனம்"  செய்வதில் ஏதாவது அர்த்தம் உண்டா. 

தமிழர் திருவிழா என்பது தமிழர் எல்லோருக்கும் பொதுவானது. 

இதைக் குழப்புவது தகுதியான  செயலா? 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kavi arunasalam said:

‘மூன்று பேர் ஒரு வேலைத் தளத்தில் இருந்தால், ஒருவர் தனிமைப் படுத்தப் பட்டு இருவர் குழுவாக இருப்பார்கள்’  என யேர்மனியில் சொல்வார்கள். 

ஒற்றைமையின்மை எல்லா நாட்டு இனத்திலும் இருக்கிறது.ஆனால்  நாங்கள் எதிலும் தீவிரமாக இருப்போம். 

👍...........

எல்லோர் மத்தியிலும் இந்த ஒற்றுமையின்மை இருக்கின்றது என்பது உண்மையே.

உதாரணமாக, தெலுங்கு மக்கள் எல்லோரும் மிக ஒற்றுமையானவர்கள் என்று ஒரு காலத்தில் தமிழர்கள் சொன்னார்கள். தமிழர்கள் தான் ஒற்றுமையில்லாதவர்கள் என்றனர் தமிழகத்து மக்கள். இந்திய ஐடி துறை தமிழர்களாலும், தெலுங்கு மக்களாலும் நிரம்பி வழிந்து கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த ஒப்பீடும், பேச்சுக்களும் அங்கே எப்போதும் இருக்கும். பின்னர், தெலுங்கு பேசும் மக்கள் இரு தேசங்களாகவே, ஆந்திரா மற்றும் தெலுங்கானா, என்று பிரிந்தார்கள். தெலுங்கு மக்களின் அபிப்பிராயமே வேறு மாதிரி இருக்கின்றது. அவர்களின் கூற்றுப்படி தமிழர்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள், ஆனால் தெலுங்கு மக்கள் ஒற்றுமை அற்றவர்கள் அல்லது குறைந்தவர்கள். இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது போல. இது கிட்டத்தட்ட எல்லா மக்கள் தொகுதிகளுக்கும் பொருந்துகின்றது.

ஆனாலும், பலரும் உலகெங்கும் ஒரே குரலில் என்றும் சொன்னது ஈழத்தமிழர்கள் மிகவும் ஒற்றுமையானவர்கள் என்று. ஒரு படி மேலே போய், அதற்கான காரணத்தையும் சிலர் சொன்னார்கள். ஒடுக்கப்படும், துரத்திக் கலைக்கப்படும் மக்கள் மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்பதே அவர்கள் சொன்ன காரணம்.

கிட்டத்தட்ட ஒரு ஒற்றைத் தலைமையின் கீழ் நாங்கள் இருந்ததும் எங்களின் அன்றைய ஒற்றுமைக்கு இன்னொரு காரணமாக இருக்கக்கூடும். வேறு சிலர் சிறு தலைமைகளாக இருந்தாலும், அவர்களும் கூட பொதுவெளியில் இருந்தோரே. 'யார் இவர்...?' என்று எங்களை நினைக்க வைத்த ஒரு அமைப்போ அல்லது தனிநபரோ அன்று இருக்கவில்லை.

இன்று எங்களில் பலர் ஒடுக்கப்படும், துரத்திக் கலைக்கப்படும் மனநிலையில் இல்லை. பலர் அங்கங்கே நிரந்தரம் ஆகிவிட்டார்கள். தலைமை என்பது அறவே இல்லை. எல்லோரும் தலைவர்கள்.  

புதுமைப்பித்தன் ஒரு தடவை சொல்லியிருந்தார்: மூன்று நேரத்திற்கும் வழி (சாப்பாடு) இருந்தால், அடுத்ததாக ஆச்சாரமும், கலாச்சாரமும் அந்த வீடுகளில் புகும் என்று. ஆச்சாரமும் கலாச்சாரமும் மட்டும் இல்லை, அதிகாரமும் அந்த மனங்களில் புகும் என்று அதை திருத்தி எழுதவேண்டும். சுதந்திரம் அல்ல, சின்னச் சின்ன அதிகாரங்கள் வேண்டி அலைக்கழிய ஆரம்பித்துள்ளோம்.

எந்த நிலையிலும், ஒரு தனிமனிதனின் மதிப்போ அல்லது ஒரு சமூகத்தின் மதிப்போ  அந்த மனிதனின், அதன் நடவடிக்கைகளாலேயே மற்றவர்களால் தீர்மானிக்கப்படும். செயல்களைப் போன்றே வார்த்தைகளும் முக்கியமானவை (இங்கு களத்திலும் எழுத்தில் வார்த்தைகள் முக்கியமானவையே.....😜). நாங்கள் இவற்றை இலகுவில் மறந்து விடக்கூடும், கடந்து விடக்கூடும், ஆனால் இவை மட்டுமே மற்றவர்களுக்கு நினைவில் தங்கியிருக்கும். 

    

  • Like 7
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

தமிழர் திருவிழா என்பது தமிழர் எல்லோருக்கும் பொதுவானது

உண்மை  தான் சரியான கருத்து 

8 hours ago, Kapithan said:

இதைக் குழப்புவது தகுதியான  செயலா? 

இல்லை தான்  ஆனால்  கனடா தமிழ் பேரவை  நடத்தத் கூடாது  பேரவைக்கு  தகுதி இல்லை என்பது தான் செல்லப்பட்ட செய்தி கனடா வாழ். தமிழர்கள் எல்லோருக்கும் பொதுவான தெருவிழாவை நடத்தும் தகுதி  தற்போது கனடா தமிழ் பேரவைக்கு உண்டா  ??? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

அவர்களாக போய்... புத்த பிக்குகளிடம் குனிந்து ஆசிர்வாதம் வாங்கலாம்.

இது மிக மோசமான செயல்  வன்மையாகக் கண்டிக்கின்றேன்.  அதிக குழந்தைகள் பெற்று வளர்க முடியாத  பொருளாதார வசதிகள் அற்ற. சிங்களவர்கள். பிள்ளைகளை மிகச் சிறிய வயதில்  புத்தபிக்குவாக  மடங்களில்.  சேர்த்து விடுகிறார்கள்     இப்படி வளர்த்தவர்களுக்கு   அரசியல் தீர்வு பற்றி என்ன தெரியும்  ??  எப்படி தீர்வு தாருவார்கள??  இவர்கள் கனடா தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து விட்டார்கள்     இதை விட   ஒவ்வொரு கனடா தமிழனையும்.  பேரவையில் அங்கத்துவர்களாக.  இணைத்து இருக்கலாம்  

Toronto இல. பல பகுதிகளில் பேரவையின். கிளைகளை நிறுவி   மக்கள் கருத்துகளை அறிந்து  செயல்படுத்தினால் சிறப்பு   

ஒரு மாதம் ஒரு கனடா டொலர்  அங்கத்துவப் பணம் என்றால் வருடம் 12 டொலர்  4 லட்சம் தமிழரும். இணையும் போது   வருடாந்தம் 4 லட்சம் கனடா டொலர்  வரும்  இதுவே போதும்  வடக்கு கிழக்கு நல்ல நிலைக்கு கொண்டு வர.  

Just now, Kandiah57 said:

இது மிக மோசமான செயல்  வன்மையாகக் கண்டிக்கின்றேன்.  அதிக குழந்தைகள் பெற்று வளர்க முடியாத  பொருளாதார வசதிகள் அற்ற. சிங்களவர்கள். பிள்ளைகளை மிகச் சிறிய வயதில்  புத்தபிக்குவாக  மடங்களில்.  சேர்த்து விடுகிறார்கள்     இப்படி வளர்த்தவர்களுக்கு   அரசியல் தீர்வு பற்றி என்ன தெரியும்  ??  எப்படி தீர்வு தாருவார்கள??  இவர்கள் கனடா தமிழர்களின் ஒற்றுமையை குலைத்து விட்டார்கள்     இதை விட   ஒவ்வொரு கனடா தமிழனையும்.  பேரவையில் அங்கத்துவர்களாக.  இணைத்து இருக்கலாம்  

Toronto இல. பல பகுதிகளில் பேரவையின். கிளைகளை நிறுவி   மக்கள் கருத்துகளை அறிந்து  செயல்படுத்தினால் சிறப்பு   

ஒரு மாதம் ஒரு கனடா டொலர்  அங்கத்துவப் பணம் என்றால் வருடம் 12 டொலர்  4 லட்சம் தமிழரும். இணையும் போது   வருடாந்தம் 4 லட்சம் கனடா டொலர்  வரும்  இதுவே போதும்  வடக்கு கிழக்கு நல்ல நிலைக்கு கொண்டு வர.  

வருடாந்தம். 4*12=48 லட்சம்.  டொலர்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருடாந்தம் 4 லட்சம் கனடா டொலர்  வரும் ]

வருடாந்தம். 4*12=48 லட்சம்.  டொலர்  ]

கந்தையா அண்ணா நிதி சேகரிப்பில் குறியாக இருக்கின்றாரே😄

Link to comment
Share on other sites

CANADA TAMIL FEST கனடிய தமிழர் பேரவையின் திமிர்த்தனமான அறிக்கை.தமிழ் மக்களை இன்னும் தூரப்படுத்தும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

உண்மை  தான் சரியான கருத்து 

இல்லை தான்  ஆனால்  கனடா தமிழ் பேரவை  நடத்தத் கூடாது  பேரவைக்கு  தகுதி இல்லை என்பது தான் செல்லப்பட்ட செய்தி கனடா வாழ். தமிழர்கள் எல்லோருக்கும் பொதுவான தெருவிழாவை நடத்தும் தகுதி  தற்போது கனடா தமிழ் பேரவைக்கு உண்டா  ??? 

பெருசு,.🤦🏼‍♂️

உங்கள் மனைவியுடன் பிரச்சனையென்றால் வீதியின் போய் நின்றுகொண்டு,  தூசணத்தில கத்தியபடி  உங்கள்   வீட்டிற்கே  கல்லெறிந்துவிட்டு, உங்கள் மனைவிக்கு உங்களுடன் குடும்பம் நடாத்தத் தகுதி இல்லை என்று சேதி சொல்லப்பட்டதாக உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு  கூறுவீர்களாக்கும்,..🤣

🤦🏼‍♂️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

பெருசு,.🤦🏼‍♂️

உங்கள் மனைவியுடன் பிரச்சனையென்றால் வீதியின் போய் நின்றுகொண்டு,  தூசணத்தில கத்தியபடி  உங்கள்   வீட்டிற்கே  கல்லெறிந்துவிட்டு, உங்கள் மனைவிக்கு உங்களுடன் குடும்பம் நடாத்தத் தகுதி இல்லை என்று சேதி சொல்லப்பட்டதாக உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு  கூறுவீர்களாக்கும்,..🤣

🤦🏼‍♂️

 

எனது மனைவி ஒரு தனி நபர்   கனடா தமிழ் பேரவை   கிட்டத்தட்ட 4 லட்சம்  தமிழர்களின் பொது அமைப்பு   இங்கே ஒரு சின்ன பிழை விட்டாலும் லட்சக்கணக்கானவர்கள் கேள்வி கேட்பார்கள்  எனது மனைவி விடயத்தில் எவருமே கேட்க முடியாது  

Link to comment
Share on other sites

 

கனடாவில் என்ன நடக்கிறது ? தெருவிழாவில் களேபரம் ! ||

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

வருடாந்தம் 4 லட்சம் கனடா டொலர்  வரும் ]

வருடாந்தம். 4*12=48 லட்சம்.  டொலர்  ]

கந்தையா அண்ணா நிதி சேகரிப்பில் குறியாக இருக்கின்றாரே😄

இது கனடா தமிழ் பேரவைக்கு   சொன்னேன்   அவர்கள்  பிக்குமாரின்.  காலில் விழக்கூடாது அவசியமில்லை பிரயோஜனம் இல்லை   மேலும் மாதம் ஒரு டொலர்  மட்டுமே பெரிய  காசு இல்லை   ஆனால் கனடா தமிழர்கள் ஒன்றிணைப்பதால் இலங்கையில் தமிழ் பகுதிகளில்  பெரிய மாற்றங்கள் ஏற்படும்  ஏற்படுத்தலாம். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

இங்கே விவாதிக்கப்படுவது தமிழர் திருவிழாவில் படிப்பறிவற்ற, ஒழுக்கம் அற்ற,  காடையர் கூட்டத்த்ன் செயல்கள் பற்றித்தான். CTC யில் அரசியல் பற்றி அல்ல.

2009 இல் சிட்னியில் இலங்கையில் நிகழும் மனித அழிவை தடுத்து நிறுத்த கோரி மக்கள் பல வெளிநாட்டு தூதரங்களுக்கு மனுக்கொடுத்தார்கள், இந்திய தூதரகத்திற்கு மனுக்கொடுத்த போது அதனை அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள், அந்த நிகழ்வுகளை முன்னின்று நிகழ்த்திய ஒரு மாணவர் (25 வயதிற்கு மேலான அவர் வெளிநாட்டு மாணவராக கல்வி கற்று கொண்டிருந்தார் என நினைக்கிறேன்), உடனடியாக ஒரு கோசம் ஒன்றினை ஆரம்பித்தார்; "சோனியா, மாபியா!" என அவரை பின்பற்றி மற்றவர்களும் அவர் சோனியா என கூற மற்றவர்கள் மாபியா என கூற அங்கு நின்ற மற்றொருவர் வேண்டாம் என்றார், அவர் கூறிய உடல்மொழியில் அந்த கோசம் எவ்வளவு அருவருக்கதக்கதாக இருந்தது என்பதனை கோசமிட்டவர் உணர்ந்து உடன் நிறுத்திவிட்டார் (ஆனால் அவர் இதனை முன் கூட்டியே திட்டமிட்டே வந்திருப்பார் என நினைக்கிறேன்).

படித்தவர்கள்தான் மற்றவர்களை தமது சுய நலஙளுக்காக தவறாக வழிநடத்துவார்கள், இந்த நிகழ்வில் சில  சுயநலமிகள் தங்கள் விருப்பத்தினை மற்றவர்களை உசுப்பேற்றி நிகத்தியுள்ளார்கள், கலகக்காரர்கள் வெறும் அம்பு மட்டும்தான்.

இதில் கலகம் செய்தவர்கள் உண்மையாக தமது சமூகத்திற்கு நன்மை செய்ய விரும்பியிருப்பார்கள், ஆனால் இந்த தவறாக வழிநடத்துபவர்கள் ஒரு இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் மாதிரி தாம் சார்ந்த சமூகத்தினை கூட விற்று வயிறு வளப்பவர்கள், அவர்கள் உள்ளேயும் இருப்பார்கள் வெளியேயும் இருப்பார்கள், மோசமானவர்கள்.

எமது சமூகம் பல சமூக பீடைகளால் பீடிக்கப்பட்டுள்ள சமூகம், ரசோதரன் கூறுவது போல ஆதிக்க வெறியினை எம்மை நல்வழி படுத்தும் மதங்களூடாகவே பெறுகிறார்கள், இஸ்லாமியர்களை குறை கூறும்  நாம் அவர்களவிற்கு இல்லை என்ற்றாலும் அதே அடிப்படை பண்புகள் அவர்களை குறை கூறும் இவர்களிடமும் உள்ளது.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பெருசு,.🤦🏼‍♂️

உங்கள் மனைவியுடன் பிரச்சனையென்றால் வீதியின் போய் நின்றுகொண்டு,  தூசணத்தில கத்தியபடி  உங்கள்   வீட்டிற்கே  கல்லெறிந்துவிட்டு, உங்கள் மனைவிக்கு உங்களுடன் குடும்பம் நடாத்தத் தகுதி இல்லை என்று சேதி சொல்லப்பட்டதாக உங்கள் அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு  கூறுவீர்களாக்கும்,..🤣

🤦🏼‍♂️

 

ஏன்யா உங்களுக்கு  வேறு ஒரு உவமையும் கிடைக்கவில்லையா ?

கடந்த வாரம் மார்க்கம்  பக்கம் உள்ள பேக்கரி பக்கம் நமது நண்பர் கூட்டிக்கொண்டு போனார் வழக்கம்போல் உனது வாலை சுருட்டி கொள் என்று உன்கடை ஆட்கள் தான் சொல்ல சொல்ல கேட்காமல் வாலை நீட்டுகினம் என்றார் அதோடை தமிழனின் மானத்தையும் வாங்குவார் என்றார் ?

நம்மை பொறுத்தவரை கதைத்து பேசி முடிவுக்கு கொண்டு வர வேண்டிய விடயம் இவ்வளவுக்குக்கு பெருத்து  போக வேண்டி இருக்காது .

நிழலி வழக்கம்போல் பாஸ் வேர்ட் மறக்க உதவி செய்தார் நன்றி நிழலிக்கு.

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   18 SEP, 2024 | 08:47 AM (லியோ நிரோஷ தர்ஷன்) ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கையாக உளள்ளது. எனவே முதலில் பாராளுமன்ற தேர்தலும் அடுத்தப்படியாக  மாகாண சபை தேர்தலும் நடைப்பெறும். இலங்கையின் தேர்தல் குறித்து இந்தியா ஆர்வத்துடன் உள்ளது. ஏனெனில் பங்களதேசத்தின் நிலைமைகளின் பின்னர் இலங்கையின் அரசியல் ஸ்தீர நிலைமை குறித்து டெல்லி அக்கறையுடன் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிப்பெறுவது உறுதியான விடயமாகும். எனவே பிளான் ' பி ' குறித்து பேச வேண்டிய தேவையில்லை.  சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்கவும் எதிர்காலத்தில் என்றோவொரு நாள் ஜனாதிபதியாவார்கள். ஆனால் இம்முறை சாத்தியமில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஊடகவியலாளர்களை சந்தித்து எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்தினார். இதன் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், ஜனாதிபதி முறைமை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இரத்து செய்வது மற்றும் 13 ஆவது திருத்தம் போன்றவை குறித்து பேசி காலத்தை வீணடித்துள்ளோமே தவிர நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து யாரும் அவதானம் செலுத்த வில்லை. எனவே தான் எனது இலக்கை பொருளாதாரத்திற்குள் வைத்துள்ளேன். அதனை மையமாக கொண்டே கொள்கைகளை வகுத்துள்ளேன். குறிப்பாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த யாரும் அதனை செய்ய வில்லை. இந்த கதிரையில் அமர்ந்த யாரும் அதனை செய்ய மாட்டார்கள் என்று ஜே.ஆர். ஜயவர்தன அன்று எனக்கு கூறியமை இன்றும் நினைவில் உள்ளது. சர்வதேச நாணய நிதியம் நாட்டின் பொருளாதாரத்தை மையப்படுத்திய தேர்தலாகவே சனிக்கிழமை இடம்பெற கூடிய ஜனாதிபதி தேர்தல் அமைகின்றது. சிறந்த பொருளாதார கொள்கையுடன் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதன் அவசியம் குறித்து சிந்திக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பது எனது நிலைப்பாடாகும். ஆனால் ஏனைய வேட்பாளர்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒன்றிணைந்து பயணிப்பதா ? இல்லையா ? என்பதை தீர்மானிக்க வேண்டும். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்ட வரைபுக்குள் உட்பட்டதாகவே தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு - செலவு இடைவெளியை எடுத்துக்கொண்டால் ஆயிரம் பில்லியனாகும். இதனை கடனாக பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் எமது மொத்த தேசிய வருமானத்திற்கு அமைவாக 5 வீதத்தை கடனாக பெற்றுக்கொள்ள சர்வதேச நாணய நிதியம் அனுமதியளிக்கிறது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) வரவு - செலவு திட்டம் குறித்து பேச வில்லை. இருப்பினும் அவர்களது தேர்தல் வி ஞ்ஞாபணத்தை அடிப்படையாக கொண்டு ஜே.வி.பியின் வரவு - செலவு திட்டத்தை கணிப்பிட்டால் வரவு - செலுவு திட்ட இடைவெளி 4 பில்லியன் டொலர்களாகும். இத்தொகையினை மொத்த தேசிய வருமானத்துடன் ஒப்பிடுகையில், 11.2 வீதமாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை மீறும் வகையிலேயே இந்த எண்ணிக்கை உள்ளது. மீறி செயல்பட்டால் நாணய நிதியத்திலிருந்து வெளியேறும் நிலை உருவாகும். இதன் பின்னர் ஏற்பட கூடிய நாட்டின் பொருளாதார நிலைகள் டொலர் ஒன்றின் பெறுமதியை 500 ரூபாவுக்கு கொண்டு செல்லும். எனவே இது குறித்து விவாதத்திற்கு அழைத்தால் அவர்கள் யாரும் வருவதில்லை.   ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டில் அமையப்பெறும் புதிய ஆட்சி இதுவரையில் பாதுகாக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார முன்னேற்றங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் கடந்த வாரம் தெளிவாக கூறியுள்ளது. அனுரகுமார திசாநாயக்கவோ சஜித் பிரேமதாசவோ சர்வதேச நாணய நிதியத்துடன் தேர்தல் விஞ்ஞாபணத்தில் குறிப்பிட்டுள்ள விடங்கள் குறித்து பேச வில்லை என்பதே உண்மை. மக்களுக்கு போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர். பெறுமதி வரிசேர் வரியை இரத்து செய்வதாக அனுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார் என்றால், இன்றிலிருந்தே மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றை சேமித்து வைக்க வேண்டும். எனவே தற்போதைய பொருளாதார திட்டங்களில் இருந்து விலக இயலாது. இன்னும் இரு வாரங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர் மட்ட குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளனர். ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பதை அவர்களுக்கு கூற வேண்டும். ஊழல் ஒழிப்பு திட்டம் ஊழலை ஒழிக்க சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஊழல் மோசடி குறித்து 400 கோப்புகள் உள்ளன. அவற்றை விசாரிக்கும் வகையில் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதே போன்று மோடிகள் ஊடாக சம்பாதித்த சொத்துக்களை அரச உடைமையாக்குவதற்கு சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் ஊழல் மற்றும் மோசடி ஒழிப்புக்கான 5 ஆண்டுகால திட்டத்தை தயாரித்து வருகின்றோம். இவற்றை புதிய சட்டங்கள் ஊடாகவே முன்னெடுக்க வேண்டும். எனவே நடைமுறையில் இருக்கும் சட்டங்களில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும். அப்போது தான் ஊழலில் ஈடுப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், புதிய சட்டங்களை நடைமுறைபடுத்தல் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு பயிற்சிகள் தேவைப்படுகின்றது. உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அடுத்த ஆண்டில் இத்தகைய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க தீர்மானித்துள்ளோம். ஆனால் சஜித் பிரேமதாசவும் அனுரகுமார திசாநாயக்கவும் சட்டங்கள் குறித்து பேசாது திருடர்களை பிடிப்பதாக கூறுகின்றனர். வரவு - செலவு திட்டத்திற்கு தேவையான நிதியை திருடர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்திய பின்னர் பெற்றுக்கொள்வதாக இருவருமே கூறுகின்றனர். அது சாத்தியமான விடயமல்ல. ஏனெனில்  சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக வழங்கு தொடர்ந்து அவர்களிடம் மோடி செய்து பெற்றக்கொண்ட சொத்துக்களை பெற்றுக்கொள்ள குறைந்தது நடைமுறையில் உள்ள சட்டத்தின் பிரகாரம் சுமார் 10 வருடம் ஆகலாம். அது வரைக்கும் வரவு - செலவு திட்டம் இல்லாது எவ்வாறு நாட்டை நிர்வகிக்க முடியும். மக்களை ஏமாற்ற கற்பணை கதைகளை கூறலாம். நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை அவர்கள் பேசுவதில்லை. புதிய சட்டங்களை நிறைவேற்றி திருடர்களை பிடிக்க யதார்த்தமான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்கள் சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறுவதாக அனுரகுமார திசாநாயக்க கூறுகின்றார். அவ்வாறு தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்க முடியாது. உதாரணமாக இந்தியாவுடன் செய்துக்கொண்ட ஒப்பந்தங்களில் இருந்து வெளியில் வந்தால், அந்த நாடு இலங்கையுடன் சினம் கொள்ளும். நாடு  அநாவசியமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். இதில் சிறந்த விடயம் யாதெனில் அனுரவோ சஜித்தோ அதிகாரத்திற்கு வர போவதில்லை. குறைப்பாடுகள் இருந்தால் இருதரப்பு பேச்சு வார்த்தைகள் ஊடாக தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்தங்களில் தனித்து தீர்மானங்களை எடுக்க கூடாது.  கோட்டாபய ராஜபக்ஷ தன்னிச்சையாக ஒப்பந்தங்களை இரத்து செய்து நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பை நினைவுப்படுத்த விரும்புகின்றேன். ஜப்பான் இலகு ரயில் திட்டத்திற்கான நிதி இலங்கைக்கு கிடைக்காமல் போனது. சீனா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனான திட்டங்களை நிறுத்தினால் பாதிக்கப்பட போவது நாடு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  நட்பு நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட திட்டமிட்டுள்ளோம். அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் இலங்கைக்கு இல்லை. இந்தியாவுடனும் சீனாவுடனும் புதிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட உத்தேசித்துள்ளோம். மலேசியா, இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கை கடற்பரப்பிற்குள் இந்தியாவுக்கும்  சீனாவுக்கும் இடையில் எவ்விதமான மோதலும் ஏற்பட்டதில்லை. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையில அதிகார போட்டி நிலை பிராந்தியத்தில் உள்ளது. எவ்வாறாயினும் அந்த நாடுகளுடன் நீண்ட காலமாக இராஜதந்திர நிலையில் தொடர்புகளை பேணி வருகின்றோம். இலங்கையின் இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பாடாத வகையில்  சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயல்படுகிறோம். https://www.virakesari.lk/article/193977
    • குழப்பி அடிக்க தானே தமிழ் பொது வேட்பாளர் இறங்கி உள்ளார்.அவருக்கு போடுகின்ற  ஒவ்வொரு  வாக்குகளும் வீணாணவை
    • Published By: DIGITAL DESK 7   18 SEP, 2024 | 08:46 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சனிக்கிழமை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளமையானது, வடக்கு கிழக்கு மக்களின் என்மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் அந்த தீர்மானத்தை ஏற்காத நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரையில் எவ்விதமான அறிவிப்பையும் விடுக்க வில்லை என்பதை நினைவில் கொள்ளுமாறு சுட்டிக்காட்டியுள்ளார். ஊடகவியலாளர்களை நேற்று செவ்வாய்க்கிழமை (17) சந்தித்த ஜனாதிபதி ரணில் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், இன மற்றும் மதவாத பிரச்சினைகள் இல்லாத சூழல் ஒன்றில் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுகின்றது. 13 ஆவது அரசியலமைப்பில் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. மாறாக அதன் அமுலாக்கம் குறித்தே சில சிக்கல்கள் உள்ளன. எனது ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். எனவே எதிர்வரும் நாட்களில் 13 ஆவது அரசியலமைப்பு அமுலாக்கம் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு யாரையும் ஆதரிப்பதாக இதுவரையில் அறிவிக்கவில்லை. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் உள்ளன. அதில் ஒன்று தான் தமிழரசுக் கட்சி. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக சுமந்திரன் மாத்திரம் கூறியுள்ளார். ஆனால் ஏனையவர்கள் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார பிரச்சினையை கருத்தில் கொண்டே தமிழரசுக் கட்சியின் பெரும்பாலானவர்கள் நடுநிலையாக உள்ளனர். எவ்வாறாயினும் சுமந்திரனின் தீர்மானம் எந்த வகையிலும் வடக்கு கிழக்கு மக்களின் என் மீதான ஆதரவுக்கு பாதிப்பாக அமையாது. அந்த மக்கள் ஏற்கனவே எனக்கு வாக்களிக்க தீர்மானித்து விட்டனர் என்றார். https://www.virakesari.lk/article/193976
    • படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், சென்னை 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்? இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இவர்கள் தவிர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.   2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை (எஸ்எல்பிபி) சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஸ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார். ஆனால், 2022ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் (ஜனதா அரகலய) இறங்கினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியையடுத்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகிக் கொள்ள, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 9வது ஜனாதிபதியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி பதவியேற்றார்.   இலங்கையின் அரசமைப்புச் சட்டப் பிரிவு நாற்பதின் படி, இடைக்காலத்தில் ஜனாதிபதியாக பதவியேற்பவர் அந்தப் பதவிக் காலம் முடியும் வரைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த நிலையில்தான் புதிய ஜனாபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தற்போது நடக்கவிருக்கிறது. இலங்கையைப் பொருத்தவரை பலவிதங்களில் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. கடந்த சில தசாப்தங்களோடு ஒப்பிட்டால், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது. சுமார் 20 ஆண்டுகளாக இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி ராஜபக்ஸ சகோதரர்கள் இந்தத் தேர்தலில் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர். அதேபோல, இலங்கையின் பாரம்பரிய கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் (யுஎன்பி) கிட்டத்தட்ட சிதைந்துபோய்விட்டன. ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி (என்பிபி) ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் 39 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஏ. முகமது இலியாஸ் என்பவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி மரணமடைந்தார். ஆகவே தற்போது 38 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் பிரதான போட்டியென்பது எதிர்க் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸவுக்கும் மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான அனுரகுமார திஸநயகேவுக்கும் தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கும் இடையில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுமார் 20 ஆண்டுகளாக இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஸ சகோதரர்கள் இந்தத் தேர்தலில் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவர்கள் யார்? தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜபக்ஸவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து ராஜபக்ஷ உருவாக்கிய கட்சி) அவருக்கு நாடாளுமன்றத்தில் பக்கபலமாக நின்றது. இப்போது ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தங்கள் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவைக் களத்தில் இறக்கியிருக்கிறது. ரணிலைப் பொருத்தவரை இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்தாலும், சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார். அவருக்கு பொதுஜன பெரமுனவின் சிலரும் ஆதரவளித்துள்ளனர். டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவையும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைப் பொறுத்தவரை, சமாகி ஜன பலவெகய (Samagi Jana Balawegaya) என்ற ஐக்கிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பில் போட்டியிடுகிறார். இஸ்லாமியக் கட்சிகளான ஆல் சிலோன் மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசனின் தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகியவை சஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவரான அனுரகுமார திஸநாயக்கே தேசிய மக்கள் சக்தி என்ற முன்னணியின் சார்பில் களத்தில் நிற்கிறார். பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த முன்னணியில் மார்க்ஸிய - லெனினிய சார்பு கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன முக்கியமான கட்சியாக இருக்கிறது. 1970களிலும் 80களிலும் அரசுக்கு எதிராக உருவான சிங்கள இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சிகளின் பின்னணியில் இந்தக் கட்சியே இருந்தது. தற்போதைய நாடாளுமன்றத்தில் இந்தக் கட்சிக்கு மூன்று இடங்களே இருந்தாலும், இந்த தேர்தலில் ஒரு வலுவான வேட்பாளராக உருவெடுத்திருக்கிறார் அனுரகுமார திஸநாயக்கே. மகிந்த ராஜபக்ஸவின் மகனும் ஹம்பந்தோட்டா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். தங்கள் கட்சியில் பலர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கப் போவதாகச் சொன்னதும், தங்களுடைய வாக்கு வங்கியை மொத்தமாக இழந்துவிடாமல் இருக்க கடைசித் தருணத்தில் களமிறங்கியிருக்கிறார் அவர். இவர்கள் தவிர, தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில் சில தமிழ் அமைப்புகளும் சிவில் குழுக்களும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழர்களுக்கான பொது வேட்பாளராக களத்தில் இறக்கியுள்ளனர். இவருக்கு டெலோ, ஈபிஆர்எல்எப் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. போருக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி, அதிகாரப் பகிர்வு போன்ற எதிலுமே தங்களுக்கு எவ்வித பங்களிப்பையும் தராத தென்பகுதி அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவை களம் இறக்கியுள்ளது எதைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள்? ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை, 'We can Srilanka' என்ற கோஷத்துடன், ஸ்திரத்தன்மையை முன்னிறுத்தி வாக்குகளை கோரி வருகிறார். பொருளாதார நெருக்கடியில் இருந்த நாட்டை, கடந்த இரு ஆண்டுகளில் மீட்சியை நோக்கி வழிநடத்தியதாகச் சொல்லி, தனக்கே மீண்டும் வாக்களிக்கும்படி கோருகிறார். எதிர்க்கட்சித் தலைவரான சஜித்தைப் பொருத்தவரை, எல்லோருக்குமான வளர்ச்சியைத் தருவேன் என்றும் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றும் கூறி வாக்குகளை சேகரிக்கிறார். தான் வெற்றிபெற்றால், தன்னுடைய அரசு எல்லோருக்குமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார். அனுரகுமார திஸாநாயக்கவைப் பொறுத்தவரை, ஊழலற்ற ஆட்சியை முன்னெடுக்கப் போவதாகக் சொல்கிறார். இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து ஆட்சியில் இருந்தவர்கள்தான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணம் எனக் குறிப்பிடும் அனுரகுமார, மக்களை வைத்து தேச விடுதலை இயக்கத்தை உருவாக்கப்போவதாகவும் சொல்லியிருக்கிறார். இலங்கை தேர்தல் எப்படி நடக்கும்? இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதாவது, வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம். 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளரும் 50 சதவிகித்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும். ஒரு கோடியே 70 லட்சம் பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றனர். இதில் சிங்களம் பேசும் மக்களின் வாக்குகள் 75 சதவிகிதம். வடக்கில் உள்ள தமிழர்கள், கிழக்கில் உள்ள இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய சிறுபான்மையினரின் வாக்குகள் மீதமுள்ள 25 சதவீதம். "இந்த முறை ரணில் விக்ரமசிங்க - சஜித் பிரேமதாஸ - அனுரகுமார திஸநாயகே என மும்முனைப் போட்டி நிலவுவதால் ஒருவருக்கும் 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்றுதான் கருதுகிறேன். ஆகவே, விருப்ப வாக்குகளை எண்ண வேண்டியிருக்கும். இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான ஜனாதிபதி தேர்தலாக இது இருக்கும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான வீரகத்தி தனபாலசிங்கம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான ஜனாதிபதி தேர்தலாக இது இருக்கும் தாக்கம் செலுத்தும் பிரச்னைகள் என்னென்ன? 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் பிரச்னை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு விலைவாசி வெகுவாக அதிகரித்திருப்பதால், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கின்றது. வாழ்க்கைத் தரம் மோசமடைந்திருக்கிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. "இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பொருளாதார நெருக்கடிதான் வாக்குகளை முடிவு செய்யக்கூடிய முக்கியப் பிரச்னையாக இருக்கும். புதிதாக வரும் ஜனாதிபதி இலங்கைக்கும் சர்வதேச நிதியத்திற்கும் இடையில் உள்ள ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. தமிழர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மக்களைப் பொருத்தவரை எதிர்காலத்தில் அவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுமா, அதிகாரப்பகிர்வு கிடைக்குமா என்ற கேள்விகள் இருக்கின்றன. மேலும், யுத்தம் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் வடகிழக்கில் ராணுவம் மற்றும் தொல்பொருள்துறையின் காணி அபகரிப்பு காணப்படுகிறது. ஆனால், புதிய அரசு இவ்வாறான விஷயங்களைத் தீர்த்துவைக்குமா என்ற கேள்வியும் இருக்கவே செய்கிறது." என்கிறார், அரசியல் பொருளாதார ஆய்வாளரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் பிரச்சனை இதே கருத்தையே எதிரொலிக்கிறார் தனபாலசிங்கம். "எல்லோருமே சர்வதேச நிதியம் வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை சீர்செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். அந்த சீர்திருத்தங்களை தான் மட்டுமே செய்ய முடியும் என்கிறார் ரணில். அனுரவும் சஜித்தும் சில மாற்றங்களுடன் அவற்றைச் செய்வோம் என்கிறார்கள். ஆனால், எல்லோருமே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊதியத்தைக் கூட்டுவோம் என்கிறார்கள். பாட சாலைகளில் மாணவர்களை அடிப்பதை நிறுத்துவோம் என்கிறார் ரணில். வறுமை ஒழிப்புக்கு பணம் கொடுப்போம் என்கிறார்கள். இதெல்லாம் சாத்தியமே இல்லாத வாக்குறுதிகள்" என்கிறார் அவர். இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவினாலும், அனுரகுமார திஸநாயகேவுக்கும் சஜித்திற்கும் இடையில்தான் உண்மையான போட்டி நிலவுகிறது என்கிறார் அகிலன் கதிர்காமர். "ரணில் ஏற்கனவே மக்கள் ஆதரவை இழந்துவிட்டார். மக்களிடம் ரணிலுக்கு எதிரான மனப்போக்குதான் இருக்கிறது. ஆகவே, அவருடைய ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பகுதி வாக்குகள் இந்த முறை சஜித்திற்குத்தான் செல்லும். மற்றொரு பக்கம், ராஜபக்ஷேக்களின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பகுதி வாக்குகள் அனுரகுமார திஸநாயக்கேவுக்கு செல்லும். இந்தத் தேர்தலில் அனுரகுமார திஸநாயக்கேவை நோக்கிய அலை ஒன்று காணப்படுகிறது. இளைஞர்கள், கிராமப்புறத்தினர் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவு தென்படுகிறது" என்கிறார் அகிலன். ரணிலுக்கு ஆதரவு கிடைக்காமல் போக காரணம் என்ன? ஆனால், இந்தக் கருத்தில் மாறுபடுகிறார் தனபாலசிங்கம். கடந்த தேர்தலில் 3 சதவீத வாக்குகளையே பெற்ற அனுரகுமார, எப்படி 50 சதவீத வாக்குகளை நெருங்க முடியும் என்கிறார் அவர். "மக்கள் போராட்டத்திற்குப் பிறகு அவருக்கான செல்வாக்கு அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால், அது வெற்றியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்" என்கிறார் தனபாலசிங்கம். இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. மிக நெருக்கடியான தருணத்தில் ஜனாதிபதி பொறுப்பை ஏற்று நடத்திய ரணிலுக்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கருதுவது ஏன்? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "ரணில் சிக்கலான நேரத்தில் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்றாலும் அவருடைய பொருளாதார கொள்கைகள் எல்லாம் கொழும்பு நகரை மையமாகக் கொண்ட மேட்டுக் குடியினருக்குத்தான் சாதகமாக இருந்தன. ரணில் மின்சாரக் கட்டணத்தைக் கடுமையாக அதிகரித்தார். இதனால் 65 லட்சம் குடும்பங்களில் 13 லட்சம் குடும்பங்களால் மின் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. அவர்களது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தவிர, வறுமையும் அதிகரித்திருக்கிறது. எனவே பொருளாதார சிக்கலை அவர் சிறப்பாக கையாண்டார் எனக் கூற முடியாது. ஆதரவு குறைந்ததற்குக் காரணம் அதுதான்" என்கிறார் அகிலன். ராஜபக்ஷேக்களைப் பாதுகாக்கிறார், மேட்டுக்குடிகளுக்கான ஆட்சி நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமடைந்திருப்பதும் ரணிலுக்கு எதிராக இருக்கிறது என்கிறார் தனபாலசிங்கம். "ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை, ராஜபக்ஸ ஆட்களுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகிறார். பொருளாதார நெருக்கடிக்கு அவர்களை பொறுப்புக்கூற வைக்காமல் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு வலுவாக இருக்கிறது. அதேபோல, அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது. ஆகவே, தன்னுடைய கட்சியை நம்பி தேர்தலில் நிற்பது சரியல்ல என்பதை அவர் புரிந்துகொண்டிருக்கிறார். தற்போது பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தாலும் தட்டுப்பாடு ஏதும் இல்லை. ஆகவே, மேல் நடுத்தர வர்க்கம் திருப்தியடைந்திருக்கிறது. ஆனால், விலை உயர்வினால் கீழ்தட்டு மக்களுக்கு பிரச்னைதான். ஆகவே அவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்" என்கிறார் தனபாலசிங்கம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராஜபக்ஸக்களைப் பாதுகாக்கிறார், மேட்டுக்குடிகளுக்கான ஆட்சி நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் ரணிலுக்கு எதிராக இருக்கிறது சிறுபான்மையினரின் வாக்குகள் யாருக்கு? சிறுபான்மையினரைப் பொருத்தவரை, எல்லாப் பிரிவினருமே பிரிந்துகிடப்பதால் அவர்களது வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என கணிப்பது கடினம். இந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழர் அரசியல் சிதறும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார் அகிலன் கதிர்காமர். "இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழர் அரசியல் குழப்பமான நிலையில் இருக்கிறது. சில தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டில் இருக்கும் சக்திகளின் நிதியுதவியுடன் ஒரு பொது தமிழ் வேட்பாளரை முன்வைத்துள்ளனர். தெற்குடன் இணைந்து போகாமல் பிளவுபடுத்தும் அரசியலை முன்வைப்பதுதான் அதன் நோக்கம். என்னைப் பொருத்தவரை, ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசும் சக்தியாக தமிழர் அரசியல் உருப்பெற வேண்டும். ஆனால், தற்போதுள்ள தமிழ் அரசியல் சக்திகள் தமிழர்களுக்கு என ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்துவது அல்லது தேர்தலைப் புறக்கணிப்பது ஆகிய இரு வாய்ப்புகளையே முன்வைக்கின்றனர். வடக்கில் தமிழ் தேசியவாதத்தையும் தெற்கில் சிங்கள பௌத்தவாதத்தையும் இவர்கள் உருவாக்க நினைக்கிறார்கள்." என்கிறார் அவர். மேலும் தொடர்ந்த அவர், "சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், இந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த தேசியம் பெரிய அளவில் தாக்கம் செலுத்தப் போவதில்லை. நிலைமை இப்படியிருக்கும் போது வடக்கில் இவ்வாறான தேசியவாதத்தை முன்னெடுப்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தைத் தூண்டிவிடும் செயலாகத்தான் இருக்கும். தமிழர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் சஜித்திற்கும் அனுரகுமார திஸநாயகேவுக்கும்தான் வாக்களிப்பார்கள் என்று கருதுகிறேன். யாழ்ப்பாணத்தில் இருக்கும் சில நடுத்தர வர்க்கத்தினர் மட்டும் பொது வேட்பாளர் குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், பொதுவாகவே இலங்கை தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்பம் இருக்கிறது. இதனால், தேர்தலுக்குப் பிறகு தமிழர் அரசியல் சிதறும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இஸ்லாமியர்களைப் பொருத்தவரை பல முஸ்லிம் கட்சிகளும் மலையக கட்சிகளும் சஜித்திற்கு ஆதரவாக இருக்கின்றன." என்கிறார் அகிலன் கதிர்காமர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், இந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த தேசியம் பெரிய அளவில் தாக்கம் செலுத்தப்போவதில்லை தமிழர் அரசியல் இப்போதே சிதறிப் போய்தான் கிடக்கிறது என்கிறார் தனபாலசிங்கம். "கடந்த மூன்று தேர்தல்களாக தமிழர்கள் பொதுவாக ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களித்தார்கள். இந்த முறை தமிழ் பொது வேட்பாளர் என ஒருவர் நிறுத்தப்பட்டிருந்தாலும், கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற 3,30,000 வாக்குகளை இவர் பெற்றாலே அதிகம். தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்கிறது. அதே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான மாவை சேனாதிராஜாவும் ஸ்ரீதரனும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது? ஆகவே, தமிழரசுக் கட்சி சொல்வதை மக்கள் கேட்க மாட்டார்கள். தங்கள் விருப்பத்தின்படியே வாக்களிப்பார்கள்" என்கிறார் அவர். ஆனால், இந்தத் தேர்தலில் இனவாதப் பிரசாரம் சுத்தமாக இல்லை என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது என்கிறார் அவர். "மூன்று பிரதான வேட்பாளர்கள் இருப்பதால், தென்னிலங்கையின் வாக்குகள் மூன்றாகப் பிரியும். ஆகவே வெற்றிபெற வேண்டுமானால் சிறுபான்மையினரின் வாக்குகள் மிக முக்கியம். ஆகவே, எந்த பிரதான வேட்பாளரும் இனவாதப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. நாமல் ராஜபக்ஸ மட்டும் வடக்கிற்கு அதிகாரத்தை பகிர மாட்டோம் எனப் பேசுகிறார். மற்றவர்கள் அப்படி எதுவும் பேசுவதில்லை" என்கிறார் தனபாலசிங்கம். ஆனால், தேர்தலுக்குப் பிறகு புதிதாக வரும் ஜனாதிபதிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக சில தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி சபை தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. அதேபோல, மாகாண சபை தேர்தல்களும் காலவரையின்றி ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியாக வேண்டும். வேறு சில சவால்களும் இருக்கின்றன. "பொருளாதார நெருக்கடியின்போது வாங்கிய கடனை இன்னும் திருப்பிக் கட்டத் துவங்கவில்லை. 2028க்குப் பிறகு கடனைக் கட்ட ஆரம்பிக்கும்போது நெருக்கடி ஆரம்பிக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதையெல்லாம் புதிய ஜனாதிபதி சமாளித்தாக வேண்டும்" என்கிறார் தனபாலசிங்கம். இந்தத் தேர்தலில் ராஜபக்ஷேக்களின் சார்பில் நாமல் ராஜபக்ஸ போட்டியிடுகிறார். தேர்தலுக்குப் பிறகு, ராஜபக்ஸ குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்விக்கு, "ராஜபக்ஸக்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு. ஆனால், புதிதாக வரும் ஆட்சி பொருளாதார நிலையை சரியாகக் கையாளாவிட்டால், அவர்கள் மீண்டும் செல்வாக்குப் பெறலாம். பிலிப்பைன்ஸில் இமெல்டா மார்கோஸின் மகன் மீண்டும் அதிபராகியிருப்பதைப் போல இங்கேயும் நடக்கலாம். அவர்களைப் பொருத்தவரை அரசியலுக்குள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றே கருதுகிறார்கள்" என்கிறார் அகிலன் கதிர்காமர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2546j35zqo
    • இனப்பிரச்சினை, அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் நின்றுவிடாதீர்கள்; தேசிய அரசியல், பொருளாதார சூழ்நிலைகளைப் பகுத்தாராய்ந்து வாக்களியுங்கள் - 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தல் Published By: VISHNU  18 SEP, 2024 | 07:21 AM   நாம் எமது ஜனாதிபதித்தெரிவினை மேற்கொள்ளும்போது தனியே இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுக்குள் மாத்திரம் குறுக்கிவிடாது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார சூழ்நிலை குறித்துப் பகுத்து ஆராய்வது அவசியமாகும். தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் 15 கல்விமான்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் கலாநிதி ஏ.அந்தோனிராஜன், கலாநிதி எஸ்.அறிவழகன், பேராசிரியர் பி.ஐங்கரன், கலாநிதி எஸ்.ஜீவசுதன், கலாநிதி ஏ.கதிர்காமர், பேராசிரியர் ஆர்.கபிலன், கலாநிதி என்.ராமரூபன், கலாநிதி எம்.சர்வானந்தன், என்.சிவகரன், பேராசிரியர் ஆர்.ஸ்ரீகரன், கலாநிதி ஆர்.தர்ஷன், கலாநிதி எம்.திருவரங்கன், கலாநிதி என்.வரதன், பேராசிரியர் கே.விக்னரூபன் மற்றும் எஸ்.விமல் ஆகிய 15 புத்திஜீவிகள் இணைந்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:  எதிர்வரும் 21 ஆம் திகதி ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட மிகமோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக உருவான மக்கள் எழுச்சிப்போராட்டங்களின் பின்னர் நாடு சந்திக்கும் முதலாவது மிகமுக்கிய தேர்தல் இதுவாகும்.  கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் இந்நாட்டில் வாழ்க்கைச்செலவு கடந்த இரு வருடங்களில் பன்மடங்காக உயர்வடைந்திருக்கிறது. வறுமையும், வேலையின்மையும் மக்களை வாட்டுகிறது. உரம் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றுக்கான மானியக்குறைப்பின் காரணமாக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வட்டிவீத அதிகரிப்பு சிறு முயற்சியாளர்களின் வருமானத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.  கட்டடத்துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியினால் நகர்ப்புற முறைசாரா மற்றும் கிராமப்புற மக்களின் தொழில்வாய்ப்புக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து, எரிபொருள், மின்கட்டண அதிகரிப்பினால் சகல தரப்பினரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகளை நாம் தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையான வாழும் நாட்டின் வட, கிழக்குப் பகுதிகளிலும் அவதானிக்கிறோம். போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஆயுதக்கலாசாரம், வன்முறைகள், இந்திய இழுவைப்படகுப் பிரச்சினை போன்றனவும் வடக்கை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. இவ்வாறு நிலைமை மோசமடைந்து செல்கையில் நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஊழலில் ஈடுபட்டு நாட்டின் வளங்களையும், செல்வத்தையும் கொள்ளையிட்டவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். இவற்றால் மக்கள் வெகுவாக அதிருப்தியுற்றிருக்கிறார்கள். இத்தகு பின்னணியில் 2022 இல் மக்கள் எழுச்சியின் அடிப்படையாகக் காணப்பட்ட 'கட்டமைப்பு மாற்றம்' என்ற கோஷம் தற்போது குறிப்பாக தென்னிலங்கையில் ஓங்கி ஒலிப்பதனைக் காணமுடிகிறது. போராட்டத்தின் மூலம் ஏற்படாத மாற்றங்களைத் தேர்தலின் மூலமாகவேனும் ஏற்படுத்தவேண்டும் என்பதில் தெற்கு மக்கள் ஆர்வமாக இருப்பதை உணரமுடிகிறது. இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலை வடக்கு, கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் மிகக்கவனமாகவும், புத்திசாதுரியமாகவும் கையாளவேண்டியது அவசியமாகும். தென்னிலங்கையில் பல தசாப்தங்களின் பின்னர் இனவாதத்தினை முன்னிறுத்தாத தேர்தல் பிரசாரத்தினை பிரதான வேட்பாளர்கள் முன்னெடுத்துவருவதாக அறிகிறோம். மக்களின் நலனை முன்னிறுத்தும் பொருளாதார ரீதியான மாற்றங்கள், ஆட்சி முறைமையில் மாற்றம், ஊழல் ஒழிப்பு போன்ற கோஷங்களை முன்வைக்கும் வேட்பாளர்களின் பின்னால் தென்னிலங்கை மக்கள் பெருமளவில் திரள்வதையும் நாம் தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பார்க்கிறோம்.  எனவே தமிழ், முஸ்லிம் மற்றும் மலையகத் தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தென்னிலங்கையில் மாற்றத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் மக்களுடன் இம்முறைத்தேர்தலில் பயணிப்பது குறித்து ஆராயவேண்டும். அதேவேளை கடந்த 5 ஆண்டுகளில் நாட்டை மோசமான நிலைக்குத் தள்ளியவர்களைத் தோற்கடிப்பதும் அவசியம்.  இனப்பிரச்சினைக்கான தீர்வு, மதச்சார்பற்ற அரசினை உருவாக்குதல், போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளல் போன்ற விடயங்களில் பிரதான வேட்பாளர்கள் முற்போக்கான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தாமை குறித்து நாம் சுட்டிக்காட்டுகின்றோம். அதேவேளை பொருளாதார நெருக்கடியும், ஊழலினால் ஏற்படும் பொருளாதார, அரசியல் சீர்கேடுகளும் சிறுபான்மை சமூகங்களையும் மோசமாகப் பாதித்துள்ளன என்பதை மனதிலிருத்தி இம்முறைத் தேர்தலில் நாம் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது அவசியம். சர்வதேசத்தினால் தான் எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை குறித்து நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். இன்றைய சூழலில் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் நாம் எமது தேர்தல் தெரிவுகளை மேற்கொள்வது அரசியல் ரீதியாக உள்நாட்டில் எம்மை மேலும் பலவீனப்படுத்தக்கூடும். இவ்வாறான காரணங்களால் தமிழ்த்தேசிய அரசியலை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக்கொண்டு தேர்தலில் வாக்குக்கோருவதும், தமிழ்த்தேசிய அடிப்படையிலே தேர்தலைப் புறக்கணிப்பதும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். பொருளாதார ரீதியில் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எமது சமூகங்களும், ஊழல் மற்றும் ஏனைய சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள எமது பொது நிறுவனங்களும் முன்னேறுவதற்கு இந்தத் தேர்தல் ஏதாவதொரு வழியில் சந்தர்ப்பங்களைத் திறக்குமா என நாம் சிந்திக்கவேண்டியது அவசியம். தென்னிலங்கையில் இனவாதம் சற்று அடங்கியிருக்கும் இவ்வேளையிலே, ஒட்டுமொத்த இலங்கையிலும் ஜனநாயகத்தன்மை மிக்க, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை வலியுறுத்துகின்ற அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக நாம் இந்தத் தேர்தலை நோக்குவது பொருத்தமானதாக இருக்கும் என நாம் கருதுகின்றோம்.  அதன்படி தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்து, முற்போக்கானதும், ஊழலுக்கு எதிரானதும், பொருளாதார மீட்சியில் அக்கறை கொண்டதும், முற்போக்கான அரசியல், பொருளாதார மாற்றங்களுக்கான கோஷங்களுக்கு செயல்வடிவம் கொடுக்கக்கூடியதும், நம்பகத்தன்மை வாய்ந்ததும், இனங்களை ஒற்றுமைப்படுத்தக்கூடியதுமான ஒரு வேட்பாளருக்கு சிறுபான்மையின மக்கள் வாக்களிப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/193969
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.