Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2024-08-28-at-2.12.53-PM.

வட மாகாண வைத்தியா்கள் குறித்து அமைச்சர் சுரேன் ராகவன் வெளியிட்ட கருத்து!

வடக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றி வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”வவுனியா மன்னார் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் இலங்கையில் உயர்தர கல்வியில் சித்தியாகவில்லை.

வட மாகாண சுகாதர திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வைத்தியர் ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு அனுமதி கிடைத்திருக்க வேண்டும்.  அவர் எங்கு படித்தார் என்பது எமக்கு கவலையில்லை.  அவர் படித்த கல்லூரி சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும்.

உயர்தரம் இருந்ததோ இல்லையோ என்பது இங்கே கேள்வியல்ல. இவர்கள் தரமான கல்வி கற்றார்களா என்பதே முக்கியம்.உயர்தரம் என்பது எமது நாட்டில் ஒருவரின் வாழக்கையை திசை திருப்பும் ஒரு திருப்பு முனையாக காணப்படுகிறது.

உயர்தரத்தில் 3 ஏ சித்தி பெற்றுள்ள கொழும்பு மாவட்ட பிள்ளைகள் பலர் மருத்துவம் படிக்க இயலாமல் காணப்படுகின்றனர்.

அவர்களுக்கு நாம் என்ன சொல்லப்போகின்றோம்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

https://athavannews.com/2024/1397398

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன்

அப்பன் குதிருக்குள் இருப்பது எனக்குச் சத்தியமாகத் தெரியாது.🤔

  • கருத்துக்கள உறவுகள்

As a perpetual turn-coat, Suren Raghavan is a specialist in public deception. He became a Budhhist to get a big Scholarship to Oxford, Became a Marxist to get closer to SLFP. Allegedly claimed refugee status in Canada and became a Canadian citizen to get the Ontario Studnet Assistance Program (OSAP) scholarship also contributed from the taxes of the Tamil Canadians who are now demanding clarifications from the Government of Onatario. More truth about this shady character will be unveiled soon.

https://www.adaderana.lk/news/81922/suren-raghavan-stripped-of-his-positions-in-slfp

தமிழாக்கம்:
சுரேன் ராகவன் ஒரு சந்தர்ப்பவாதி. பொதுஜனங்களை ஏமாற்றி  பிழைப்பு நடாத்துவதில் நிபுணர்.
ஒக்ஸ்போர்டில் பெரிய புலமைப்பரிசில் பெறுவதற்கு அவர் ஒரு பௌத்தரானார், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் நெருங்கி வர மார்க்சிஸ்ட் ஆனார். கனடாவில் அகதி அந்தஸ்து கோரி  அதன் மூலம் ஒன்டாறியோ மாணவர் உதவித் திட்டம் (OSAP) வழங்கிய புலமைப்பரிசில்  உதவித்தொகையைப் பெறுவதற்காக கனேடியக் குடிமகனாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த புலமைப்பரிசில் வழங்கிய உதவித்தொகைக்கு  தமிழ் கனடியர்களின் வரிகளில் இருந்தும் பங்களிப்பு செய்யப்பட்டிருந்தது.
  இப்போது தமிழ் கனடியர்கள் ஒன்டாரியோ அரசாங்கத்திடம் இருந்து இதற்கு  விளக்கம் கோரிவரும் நிலையில்  இந்த ஏமாற்றுப் பேர்வழியின் கதாபாத்திரம் குறித்த கூடுதல் உண்மைகள் விரைவில் வெளியாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Paanch said:

அப்பன் குதிருக்குள் இருப்பது எனக்குச் சத்தியமாகத் தெரியாது.🤔

31 minutes ago, vanangaamudi said:

சுரேன் ராகவன்... பிறப்பால் தமிழராக இருந்து கொண்டு,
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்  இனத்தையே கேவலப் படுத்தி,
சிங்களவர்களை குளிர்விக்கும் ஒரு கீழ்த்தரமான சிந்தனை உடைய மனிதன்.

குறுகிய வழியில் பணம் சம்பாதிப்பதற்காக...  
இப்படிப் பட்டவர்கள் பலர்  இப்போ திடீரென தோன்றியுள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

சுரேன் ராகவன்... பிறப்பால் தமிழராக இருந்து கொண்டு,
சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தன்  இனத்தையே கேவலப் படுத்தி,
சிங்களவர்களை குளிர்விக்கும் ஒரு கீழ்த்தரமான சிந்தனை உடைய மனிதன்.

குறுகிய வழியில் பணம் சம்பாதிப்பதற்காக...  
இப்படிப் பட்டவர்கள் பலர்  இப்போ திடீரென தோன்றியுள்ளார்கள். 

அது எங்கள் இனத்தின் பிறவிக் குணம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அது எங்கள் இனத்தின் பிறவிக் குணம். 

உண்மைதான்.. மற்ற இனத்தில் காணக் கிடைக்காத பழக்கம் எம் இனத்தில் அதிகமாக உள்ளது.
பணத்திற்காக எதனையும் செய்யத் தயாராக உள்ள மனச் சாட்சி  இல்லாத மனிதர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுரேன் ஆளுனராக இருந்த போது யாழ் நகரில் ஒரு புத்தகக் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார். மிகவும் நன்றாக இருந்தது என்று இதில் பரிச்சயம் மிக்க நண்பர்கள் சொல்லியிருந்தனர். ஈழத்து எழுத்து, எங்களின் பதிப்பகம் என்று இந்த துறையில் எங்கள் மீது இருக்கும் தமிழ்நாட்டின் அளவு மீறிய செல்வாக்கை கட்டுக்குள் கொண்டு வர இது ஒரு ஆரம்பமாகவும் இருக்கும் என்றும் சொல்லப்பட்டது....... (ஆனால் அப்படி நடக்கவில்லை...)

பின்னர் கனடாவில் ஒரு கூட்டத்தில் இலங்கையில் இனப் படுகொலை நடக்கவே இல்லை என்று சுரேன் சொன்னார். தொடர்ந்து இதே போன்ற இலங்கை அரசுக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். இன்னொரு லக்‌ஷமன் கதிர்காமர் ஆவதே இவரின் இலட்சியம் போலுள்ளது. அதற்கான கல்வித் தகுதி ஏற்கனவே உள்ளது, பிற தகுதிகளை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்..........

University of Kent மற்றும் University of Ottawa இல் தான் படித்திருக்கின்றார். ஆதலால் ஒக்ஸ்ஃபோர்ட் புலமைப் பரிசில் தகவல் சரியானதாகத் தெரியவில்லை. அதே போன்றதே இவர் பௌத்த மதத்திற்கு மாறினார் என்பதும். மதம் எதுவும் இல்லை (Other) என்றே இவரின் இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் விபரத்தில் இருக்கின்றது.

கனடாவில் அகதியாகப் பதிவது, பின்னர் கனடா குடியுரிமை பெறுவது, அரச உதவிகள் பெறுவது, இவை எல்லாம் ஒரு விடயங்களே அல்ல. இது எல்லோரும் செய்யும் மற்றும் சட்டத்திற்கு எதிரான விடயங்களும் இல்லை.

வில்லங்கமான விசயம் என்னவென்றால், எந்தக் கட்சி, தலைவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்தாலும் இவர் ஒரு அமைச்சராகவே இருப்பார். இருந்து கொண்டே இப்படியான கருத்துகளையும் தெரிவிப்பார். இப்படியானவர்களும் என்றும் வந்து கொண்டே இருப்பார்கள். அந்த நாளில் குமாரசூரியர் என்று ஒருவர் இருந்தாரே...............

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சுரேன் ராகவன்... பிறப்பால் தமிழராக இருந்து கொண்டு,

சில கொழும்பு தமிழர்களுக்கு இன்றும் கேரளாவில் உறவுகள் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

குணா கவியழகன் ஒரு ஒளிபரப்பில்  கூறியிருந்தார்..
வடபகுதி மக்களுக்கு டாக்குத்தர் மார் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் சமுகத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் ...அவர்கள் சமுகபண்பாட்டு தளத்தில் ஏதாவது கூறினால் அது உண்மையாக இருக்கும் என நம்பக்கூடியவர்கள்...

அந்த நன்மதிப்பை கெடுக்கும் வண்ணம் டொக்டர் அர்ஜுனா,மற்றும் ராகவன் போன்றோர் தேர்தல் காலத்தில் களம் இறக்கப்பட்டுள்ளனர் போலும் 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

அது எங்கள் இனத்தின் பிறவிக் குணம். 

அப்ப இது....

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, putthan said:

வடபகுதி மக்களுக்கு டாக்குத்தர் மார் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் சமுகத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் ...அவர்கள் சமுகபண்பாட்டு தளத்தில் ஏதாவது கூறினால் அது உண்மையாக இருக்கும் என நம்பக்கூடியவர்கள்...

👍......... 

பெரிதாகப் படித்து, ஆங்கிலமும் தெரிந்து இருந்தால், அது இன்னமும் நம்பிக்கையைக் கூட்டும்.

சுரேன் ஒரு ஒரு கலாநிதி (Ph.D. in Political Science and International Relations from University of Kent, England ). இவரின் முழுக் கல்வியும் ஆங்கில வழியிலேயே போலுள்ளது.

ஆனாலும் இன்றைய கல்வி என்பது பெரும்பாலும் ஒரு தொழிற் பயிற்சி மட்டுமே. அது எந்த அளவில் - பாடசாலை, இளநிலை, முதுநிலை, கலாநிதி - இருந்தாலும். மேற்படிப்பு ஆராய்ச்சிகள் என்பது இன்னும் இன்னும் ஒரு மனிதனை ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே தள்ளும். வாழ்க்கை அனுபவங்களும், பல்வேறுபட்ட சக மனிதர்களும், பரந்த திறந்த வாசிப்பும், முரண்பட்ட சுய சிந்தனைகளுமே ஒரு மனிதனின் பார்வையை அகலப்படுத்தும்.

எங்களின் நிலத்தை எந்த விதத்திலும், அங்கு வாழ்ந்தோ அல்லது அதை வாசித்தோ, அறியாதவர்கள் தான் எங்களின் பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக் கொள்ளும் ஒரு காலகட்டத்தில் இருந்து வெளியே வந்து விட்டோம் என்பது ஒரு ஆறுதல்.  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதி மக்களுக்கு டாக்குத்தர் மார் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் சமுகத்தில் உச்சத்தில் இருப்பவர்கள் ...அவர்கள் சமுகபண்பாட்டு தளத்தில் ஏதாவது கூறினால் அது உண்மையாக இருக்கும் என நம்பக்கூடியவர்கள்... ]

பெரிதாகப் படித்து, ஆங்கிலமும் தெரிந்து இருந்தால், அது இன்னமும் நம்பிக்கையைக்   கூட்டும்.]

🤣

டாக்குத்தர் அர்சுனாவை மக்கள் தூக்கி வைத்து மூன்று பாட்டுக்கள் அவருக்கு என்று பாடிவிட அவர் அடிக்கின்ற கூத்துக்கள் தெரியும் தானே

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

டாக்குத்தர் அர்சுனாவை மக்கள் தூக்கி வைத்து மூன்று பாட்டுக்கள் அவருக்கு என்று பாடிவிட அவர் அடிக்கின்ற கூத்துக்கள் தெரியும் தானே

👍.......

அவர் எதிர்பார்க்கப்பட்டதிற்கு மேலாகவே நின்றுபிடித்தார். அவரின்  'மண்ணின் மைந்தன்' என்ற ஒரு பிம்பமும், ஆதரவும் அதற்கான பிரதான காரணங்கள் ஆகும். இவரே கொழும்பில் பிறந்து வளர்ந்து, ரஷ்யாவில் படித்து விட்டு வந்திருந்தால், பேராதனை இடமாற்றத்துடன் நம்மவர்கள் இவரை மறந்திருப்பார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2024 at 21:50, ரசோதரன் said:

மண்ணின் மைந்தன்' என்ற ஒரு பிம்பமும், ஆதரவும் அதற்கான பிரதான காரணங்கள் ஆகும்.

ஈழதமிழர்களை பொறுத்தவரை இது ஒரு ஆழமான உண்மை என்பதை அறிகிறேன் இந்த  பிம்பம்  கிடைத்துவிட்டால் போதும் என்ன அநியாயங்கள் சுத்துமாத்துகளும் செய்யலாம். நீ தான் எங்களுக்கு வேண்டும் என்று நம்மவர்கள் நிற்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி, சொல்வது, உயர்தரம் சித்தியடையதோர் மருத்துவர்களாக பணியாற்றுகிறார்கள் என்றால், அது எந்த பொறுப்பில் தவறு?

அரச மருத்துவ துறையை நிர்வகிக்கும் அமைச்சும், உயர்கல்வி அமைச்சும் தானே அமைச்சர் ராகவன் அவர்களே. 

எவ்வாறு அப்படியானவர்கள், மருத்துவர் என்ற துறைசார் தகமையுடன்,  அரச மருத்துவ சேவைக்குள் உள்வாங்கப்பட்டார்கள்?

நீங்கள் எந்த படிப்பு படித்து இருந்தாலும், அமைச்சராக உங்கள் கடமையை ஆக குறைந்தது புறக்கணித்து இருக்கிறீர்கள் என்பதை, பொல்லை கொடுத்து ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் அல்லவா? 

ஏனெனில், சாதாரண கேள்விகேட்ட அர்ச்சுனாவை, கொழும்பு அழைத்து விசாரணை.

மறுவளமாக, வெளிநாட்டு பல்கலைக்கழங்கள், உங்கள் அமைச்சு சான்றாக வழங்கும் உயர்தர பெறுபே றுகளின் அடிப்படையாக கொண்டே, இலங்கை உயர்தர மாணவரை பயில அனுமதிப்பது.

அல்லது, வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டு மருத்துவர்களை வரவழைத்து, மருத்துவ சேவை வழங்குகிறீர்களா? 

எனவே முழுப் பொறுப்பும் அரச மருத்துவ துறையை நிர்வகிக்கும் அமைச்சும், உயர்கல்வி 
அமைச்சும் தான்,  அமைச்சர் ராகவன் அவர்களே.

கொழும்பிலோ  அல்லது வேறு எந்த இடத்திலும் 3 ஏ எடுத்தவர்கள், மருத்துவம் படிக்கமுடியாமல் இருப்பதற்கும், அமைச்சுக்கள் பொறுப்பை சரியாக நிறைவேற்றாது ஒரு பகுதி காரணம்.

நீங்கள் குற்றம் சொல்லும் வைத்தியர்கள் அல்ல.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.