Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   29 AUG, 2024 | 03:46 PM

image
 

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் இன்று வியாழக்கிழமை (29) இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அஜித் குமார் டோவல்  இந்தியாவிற்கான முன்னாள் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை சந்தித்துள்ளார்.

இதன்போது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச திட்டங்கள் அடங்கிய அறிக்கையை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் வழங்கியுள்ளார்.

வீதி, ரயில் மார்க்கம், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகிய பிரிவுகளின் கீழ் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நேரடி தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைப்பின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகள் வலுப்பெற்று இலங்கையின் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3 வீதத்தில் இருந்து 6 வீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல், இன்று மாலை தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்களைச்  சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

image_084ac6cafa.jpg

https://www.virakesari.lk/article/192303

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரை சந்தித்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

29 AUG, 2024 | 05:41 PM
image
 

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இன்று வியாழக்கிழமை (29) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

இதன்போது, இலங்கை - இந்திய இருதரப்பு உறவை பலப்படுத்த வேண்டும் என  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/192336

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் முக்கிய சந்திப்புகளில் அஜித் டோவல்

Published By: VISHNU   29 AUG, 2024 | 09:08 PM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை  மேற்கொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே. டோவல்  வியாழக்கிழமை (29) கொழும்பை  வந்தடைந்தார். எதிர்வரும்  செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மூன்று வாரங்களுக்கு முன்னதாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே. டோவலின் விஜயம் அமைந்துள்ளதுடன் உயர்மட்ட அரசியல் தலைவர்களுடனும் சந்திப்புகளில் கலந்துக்கொண்டுள்ளார்.  

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அநுரகுமார திசாநாயக்க மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்களை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்திருந்தது.  எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், அவர் இதுவரையில் டெல்லி செல்லவில்லை.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஓரிரு முறை உத்தியோகப்பூர்வ அழைப்பின் பேரில் டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டு இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டிருந்தார். ஆனால் சகாலத்தில் இலங்கையில் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியில் பிரபல்யமாகியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க டெல்லிக்கு அழைத்திருந்த போது அஜித் கே. டோவலுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.

மறுபுறம் சீன கப்பல்கள் மூன்று கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நங்கூரமிட்டிருந்தது. இத்தகைய சீன போர்க் கப்பல்களின் பிரசன்னத்தினால் இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை தளம் விரிவடைவதுடன், இப்பிராந்தியத்தில் கூடுதல் தளவாடத் தங்குமிடங்களை பெய்ஜிங் தேடுவதாக கருதப்படுகின்றது. இந்த நிலைமையானது பிராந்தியத்தில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இத்தகைய சவால்கள் இலங்கை ஊடாக எதிர்ககொள்ள நேரிடும் என்ற சந்தேகம் எப்போதும் டெல்லிக்கு உள்ளது.

உதாரணமாக இந்தியாவுடன் நட்பில் இருந்த மாலைத்தீவில் தேர்தல் ஊடாக இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தின்  ஊடாக சீன இராணுவ பிரசன்னங்கள் அங்கு அதிகரித்துள்ளன. மாலைத்தீவில் முகமது முய்சு தலைமையிலான புதிய அரசு இந்திய எதிர்ப்பு கொள்கையில் உள்ளது. எனவே தான் ஜனாதிபதி முகமது முய்சு  வெற்றிப்பெற்ற உடன் இந்திய இராணுவத்தை அந்நாட்டில் இருந்து வெளியேற்றினார். அதன் பின்னரே சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட்டார்.

இலங்கையிலும் இத்தகைய சூழ்நிலை உருவாகக் கூடும் என்ற சந்தேகம் டெல்லிக்கு இல்லாமல் இல்லை.  ஏனெனில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி இலங்கையிலும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த  தேர்தலில் பதவியில் இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடும் போட்டி நிலைமையை உருவாக்கியுள்ள, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் (ஜே.வி.பி) அநுரமார திசாநாயக்க சீனாவுக்கு ஆதரவானவராக பார்க்கப்படுகின்றார்.

எனவே மாலைத்தீவு போன்தொரு அரசியல் சூழல் இலங்கையில் உருவானால் பிராந்தியத்தில் சீனாவின் கரம் பலமடங்கில் வலுப்பெறும். உண்மையான இராணுவம் கட்டுப்பாட்டு நில எல்லையில் இந்திய - சீன மோதல்கள் இந்திய பெருங்கடலிலும் விஸ்தரிக்க கூடும்.

இவ்வாறானதொரு நிலையிலேயே அஜித் தோவால் கொழும்பில் சந்திப்புகளில் ஈடுப்படுகின்றார். இலங்கையின் உத்தேச ஜனாதிபதி தேர்தல் இந்தியாவுக்கு புவிசார் அரசியல் மூலோபாய ரீதியில் முக்கியமாகின்றது. ஏனெனில் இந்திய திட்டமான ஆசிய நெடுஞ்சாலை இணைப்பு திட்டங்களில் இலங்கையின் பங்களிப்பு முக்கியமாகின்றது.

இதே வேளை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் கே. டோவலை வியாழக்கிழமை சந்தித்த மிலிந்த மொரகொட, பாத்ஃபைண்டர் அமைப்பின் இலங்கை - இந்திய  பௌதீக இணைப்பு தொடர்பிலான அறிக்கையை கையளித்தார்.

சாலை, ரயில், மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் ஆகிய துறைகளில் பௌதீக இணைப்புக்கான விரிவான வரைபடத்தை உருவாக்கும் வகையில் பாத்ஃபைண்டர் அமைப்பின் அறிக்கை அமைகின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒருங்கிணைப்பு மூலம் இலங்கையின் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதத்தை 3 முதல் 6வீதம் வரை அதிகரிப்பதே இந்த முயற்சியின் இறுதி இலக்கு என்று குறிப்பிடப்படுகின்றது.  

மேலும் இலங்கையுடனான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல துறைசார்ந்த பௌதீக இணைப்புகள் குறித்து அஜித் கே. தோவால் கொழும்பு சந்திப்புகளில் கவனம் செலுத்த உள்ளார்.  அதே போன்று இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் இடையிலான முத்தரப்பு பிராந்திய முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உள்ளடக்கங்களின் மறுபரிசீலனை குறித்தும் அஜித் கே. தோவால்  கொழும்பு சந்திப்புகளில் அவதானம் செலுத்த உள்ளார்.

இந்த முத்தரப்பு பாதுகாப்பு மாநாட்டில் மொரிஷியஸ் மற்றும் பங்களாதேஷ் உறுப்பினர்களாகவும், சீஷெல்ஸ் ஒரு பார்வையாளராகவும் இருப்பதுடன் இந்தியா, மொரிஷியஸ், மாலைத்தீவுகள் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் ஐந்தாவது உறுப்பு நாடாக பங்களாதேஷ் இணைத்துக்க கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 https://www.virakesari.lk/article/192344

எப்படியும் சஜித்தையும் ரணிலையும் ஒற்றுமையாக்கி ஒரு உடன்படிக்கையின் கீழ் ரணிலுக்கு சஜித்தை ஆதரவழிக்க வலுயுறுத்துவார் என நினைக்கிறேன்.

இதன் மூலம் அனுரை வெல்ல முடியாமல் செய்யலாம். அனுர /ஜேவிபி சீன சார்பு என்பதால் இதனை இந்தியா முயற்சிக்கும்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அனைவரும் ஒருமித்துநின்று தமிழர் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது - தமிழ் பிரதிநிதிகளிடம் அஜித் டோவல் 

Published By: VISHNU   29 AUG, 2024 | 10:37 PM

image

(நா.தனுஜா)

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் வியாழக்கிழமை (29) நடைபெற்ற சந்திப்பின்போது தமிழ் பொதுவேட்பாளர் விவகாரம், தேர்தல் புறக்கணிப்பு கோஷம் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்து வெளியிட்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எவ்வாறு செயற்படவேண்டும் என்பது குறித்து தான் எதனையும் கூறப்போவதில்லை எனவும், இருப்பினும் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்த தீர்மானமாக அமையும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்தார். 

இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலுக்கும் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் கலந்துகொள்வதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனுக்கும், ரெலோவின் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனுக்கும், புளொட் சார்பில் அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி சந்திப்பில் சிறிதரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்த போதிலும், வெளிநாட்டுப் பயணமொன்றுக்குச் செல்லவேண்டியிருந்ததன் காரணமாக, சந்திப்பின் தொடக்கத்திலேயே சிறிதரன் வெளியேறினார்.

அதற்கமைய இச்சந்திப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கடந்த 75 வருடகால அனுபவத்தில் தமிழ் மக்களால் ஒற்றையாட்சியின் கீழ் வாழமுடியாது என்பதைத் தாம் புரிந்துகொண்டிருப்பதாகவும், அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்நோக்கிச் செல்லமுடியாது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஜித் டோவலிடம் எடுத்துரைத்தார்.

ஆகவே 13 ஆவது திருத்தத்தையும், 2015 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி முறைமையை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைபையும் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்த கஜேந்திரன், வட, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி முறைமையை வென்றெடுப்பதற்கு இந்தியா உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை குறித்தும், தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான தமிழ் பொதுக்கட்டமைப்பின் தீர்மானம் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்பிலும், தமிழ் மக்களின் வாக்குவீதம் குறித்தும் கேட்டறிந்த அஜித் டோவல், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக ஒருமித்து நின்று, தமிழ் மக்களின் வாக்குகளை உபயோகமான முறையில் பயன்படுத்துவதே சிறந்தது என ஆலோசனை வழங்கினார். 

அத்தோடு தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் எத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என்று தான் கூறப்போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் இத்தகைய தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகள் ஜனநாயகத்தில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பது குறித்து சிந்தித்து செயலாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

https://www.virakesari.lk/article/192347

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

கடந்த 75 வருடகால அனுபவத்தில் தமிழ் மக்களால் ஒற்றையாட்சியின் கீழ் வாழமுடியாது என்பதைத் தாம் புரிந்துகொண்டிருப்பதாகவும், அதேபோன்று அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதன் காரணமாக அதனூடாக தமிழ் மக்களால் முன்நோக்கிச் செல்லமுடியாது எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் அஜித் டோவலிடம் எடுத்துரைத்தார்.

ஆகவே 13 ஆவது திருத்தத்தையும், 2015 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி முறைமையை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைபையும் தாம் நிராகரிப்பதாகத் தெரிவித்த கஜேந்திரன், வட, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையுடன்கூடிய சமஷ்டி முறைமையை வென்றெடுப்பதற்கு இந்தியா உதவவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தேவையான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையிலும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே செயற்பட்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களின் எந்த ஒரு ஆலோசனையையும் தமிழர்கள் கருத்திற்கெடுக்க வேண்டியதில்லை. இந்தியா வேண்டுமானால் 1987 இல் செய்து கொண்ட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு இலங்கை அரசை வற்புறுத்தி   தனது கையெழுத்தின் பெறுமதியை உறுதிப்படுத்த வேண்டும்.மற்றும்படி எங்களுக்கு ஆலோசனை சொல்ல எந்த நாட்டுக்கும் உரிமையில்லை. நாங்கள் கேட்கும் நியாயமான உரிமைகளை ஏற்றுக் கொண்டாலே  போதும்.ஏன்ன்றால் இதன்நன்மை தீமைகளை அனுபவிக்கப் போவது தமிழர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

வீதி, ரயில் மார்க்கம், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகிய பிரிவுகளின் கீழ் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையே நேரடி தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எப்ப இந்தியா ரூபாவை இங்கு பாவிப்பதற்கான முயற்சியில் இடுபட போறீயல்..
டாவல் தொடர்ந்து வருவார்... படம் காட்டுவார்...போய்விடுவார்...

தேர்தலுக்கு முன் இவர் இங்கு வந்து இப்படியான அறிக்கைகளை விட இந்திய எதிர்ப்பு வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்..
 

  • கருத்துக்கள உறவுகள்

WhatsApp-Image-2024-08-29-at-8.52.31-PM.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் தமிழ் பிரதிநிதிகள் சந்திப்பு!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் தமிழ் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மரியாதை நிமித்தமாகக் கொழும்பில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது, இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான உறவை வழுப்படுத்துதல் மற்றும் சமூக பொருளாதார விடயங்களை மேம்படுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைருமான செந்தில் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார், தொழில் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1397506

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் - ஜனாதிபதி ரணில் சந்திப்பு

Published By: DIGITAL DESK 3   30 AUG, 2024 | 02:10 PM

image

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டார். 

https://www.virakesari.lk/article/192392

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டோவல் நாமல் ராஜபக்ஷவுடன் சந்தித்துப் பேச்சு

Published By: VISHNU   30 AUG, 2024 | 09:15 PM

image
 

இலங்கை வந்திருந்த இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் வெள்ளிக்கிழமை (30) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கையில் பல்வேறு தரப்பினரையும் அஜித் டோவல் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் வெள்ளிக்கிழமை (30) நாமல் ராஜபக்ஷவுடனும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, இரண்டு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/192435

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பங்களாதேஷின் நிலைமைகள் குறித்து ஜனாதிபதி ரணிலுடன் கலந்துரையாடல்

01 SEP, 2024 | 10:23 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

அரசியல் - பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து ஈராண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் அமைதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்தியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராட்டியுள்ள இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் , பங்களாதேசத்தின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்தும் கொழும்பு விஜயத்தின் போது கவனம் செலுத்தியுள்ளார்.

இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை (09) கொழும்பை வந்தடைந்த இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாடு திரும்புவதற்கு முன்னர் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே  அஜித் தோவால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராட்டியுள்ளார்.

இந்தியா, இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் இடையிலான முத்தரப்பு பிராந்திய முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் உள்ளடக்கங்களின் மறுபரிசீலனை குறித்து கவனம் செலுத்தியிருந்த  அஜித் கே. தோவால், முத்தரப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திருந்தார். இருப்பினும் இதற்கு அப்பால் அரசியல் சந்திப்புகளுக்கே  கொழும்பு விஜயத்தில் அஜித் தோவால்  முக்கியத்துவம் அளித்திருந்தார்.

குறிப்பாக இலங்கையின் அடுத்த ஐந்து ஆண்டுக் காலத்தை அரசியல் ரீதியில் தீர்மானிக்க கூடிய ஜனாதிபதி தேர்தல் இடம்பெற மூன்று வாரங்களுக்கும் குறைவான நாட்கள் இருக்கையில் கொழும்பை வந்தடைந்த  அஜித் தோவால் அனைத்து பிரதான வேட்பாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.ஆனால் அவர்களுடன் பேசப்பட்ட எந்தவொரு விடயமும்  இதுவரையில் இருதரப்பினருமே வெளிப்படுத்த வில்லை.

அநுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர், அஜித் தோவாலை சந்தித்த புகைப்படங்களை கூட வெளியிட வில்லை. அந்த சந்திப்புகளின் உள்ளடக்கங்களின் இரகசிய தன்மையைப் பாதுகாக்கும் வகையில் அனைவருமே செயல்பட்டுள்ளனர்.

இருப்பினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அஜித் தேவாலுக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடலின் போது,  முக்கிய தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெறவுள்ள நிலையில் , அதற்கான  அமைதியான சூழல் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் பங்களாதேசத்தில் அண்மைய அமைதியின்மைகள் பிராந்திய ஒருமைப்பாட்டில் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும், கூடிய விரைவில் நிலைமை சீர்படுத்த புதிய நிர்வாகத்திற்கு ஒத்துழைப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையில் தேர்தல் முடிவடைந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கான திகதி தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் இதன் போது குறிப்பிடப்பட்டது.   

எவ்வாறாயினும் இலங்கையின் தேர்தல் இந்தியாவுக்கு மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் என்பதாலேயே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின் கொழும்பு விஜயம் அமைந்துள்ளதாக  புவிசார் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக சீன கப்பல்களின் இலங்கை நோக்கி தொடர் விஜயங்கள் இந்தியாவை எறிச்சல் ஊட்டுவதாகவே அமைந்துள்ளது. மாலைத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களின் பின்னரான சீனாவின் இந்திய பெருங்கடல் நகர்வுகள் அதிகரித்துள்ளன. இத்தகைய சூழலில் இலங்கையில்  முக்கிய தேர்தல் இடம்பெறுகின்ற நிலையில் அஜித் தோவாலின்  கொழும்பு விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/192516

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2024 at 22:46, நிழலி said:

எப்படியும் சஜித்தையும் ரணிலையும் ஒற்றுமையாக்கி ஒரு உடன்படிக்கையின் கீழ் ரணிலுக்கு சஜித்தை ஆதரவழிக்க வலுயுறுத்துவார் என நினைக்கிறேன்.

இதன் மூலம் அனுரை வெல்ல முடியாமல் செய்யலாம். அனுர /ஜேவிபி சீன சார்பு என்பதால் இதனை இந்தியா முயற்சிக்கும்.

 

ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முயன்றாரா டோவல்? இராஜதந்திர வட்டாரங்கள் மறுப்பு

Published By: RAJEEBAN  01 SEP, 2024 | 01:44 PM

image
 

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையி;ல் ஐக்கியத்தை ஏற்படுத்தும் இறுதி முயற்சிகளில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித்டோவல் ஈடுபட்டார் என வெளியாகும் தகவல்களை இராஜதந்திர வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.

இருவருக்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி இணைந்து போட்டியிடச்செய்வதற்கான இறுதி முயற்சிகளிற்காகவே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என தெரிவிப்பதை இந்திய தூதரகத்தின் உயர் வட்டாரங்கள் நிராகரித்துள்ளன என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறான தேவை ஏற்பட்டிருந்தால் டோவல்  புதுடில்லியிலிருந்தே குறிப்பிட்ட தலைவர்களை தொடர்புகொண்டிருப்பார்  அவர்இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கவேண்டியதில்லை என சிரேஸ்ட இராஜதந்திர வட்டாரமொன்று தெரிவித்தது என ஐலண்ட் குறிப்பிட்டுள்ளது.

அவர் இலங்கையின் அரசியல் தலைவர்களை நேரடியாக சந்திக்க விரும்பியிருந்தால் ஊடகங்களிற்கு தெரியாமல் சந்தித்திருக்கலாம்,கடந்த காலங்களில் அவர் அவ்வாறு செயற்பட்டுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் தொடர்பில் இந்தியாவின் விருப்பங்களை திணிப்பதற்காகவே டோவல் இலங்கையின் அரசியல் தலைவர்களை சந்தித்தார் என தெரிவிப்பது ஆதாரமற்ற விடயம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/192552

7 hours ago, ஏராளன் said:

ரணிலுக்கும் சஜித்திற்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த முயன்றாரா டோவல்? இராஜதந்திர வட்டாரங்கள் மறுப்பு

Published By: RAJEEBAN  01 SEP, 2024 | 01:44 PM

image
 

ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையி;ல் ஐக்கியத்தை ஏற்படுத்தும் இறுதி முயற்சிகளில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்  அஜித்டோவல் ஈடுபட்டார் என வெளியாகும் தகவல்களை இராஜதந்திர வட்டாரங்கள் நிராகரித்துள்ளன.

இருவருக்கும் இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி இணைந்து போட்டியிடச்செய்வதற்கான இறுதி முயற்சிகளிற்காகவே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார் என தெரிவிப்பதை இந்திய தூதரகத்தின் உயர் வட்டாரங்கள் நிராகரித்துள்ளன என ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறான தேவை ஏற்பட்டிருந்தால் டோவல்  புதுடில்லியிலிருந்தே குறிப்பிட்ட தலைவர்களை தொடர்புகொண்டிருப்பார்  அவர்இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கவேண்டியதில்லை என சிரேஸ்ட இராஜதந்திர வட்டாரமொன்று தெரிவித்தது என ஐலண்ட் குறிப்பிட்டுள்ளது.

அவர் இலங்கையின் அரசியல் தலைவர்களை நேரடியாக சந்திக்க விரும்பியிருந்தால் ஊடகங்களிற்கு தெரியாமல் சந்தித்திருக்கலாம்,கடந்த காலங்களில் அவர் அவ்வாறு செயற்பட்டுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் தொடர்பில் இந்தியாவின் விருப்பங்களை திணிப்பதற்காகவே டோவல் இலங்கையின் அரசியல் தலைவர்களை சந்தித்தார் என தெரிவிப்பது ஆதாரமற்ற விடயம் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/192552

நான் மேலே எழுதிய மாதிரித்தான் நடந்துள்ளது. ஆனால் இந்த விடயத்திலும் இந்தியா தோற்று விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிழலி said:

நான் மேலே எழுதிய மாதிரித்தான் நடந்துள்ளது. ஆனால் இந்த விடயத்திலும் இந்தியா தோற்று விட்டது. 

 

இந்தியாவுக்கு ஆப்படிப்பதில் சிங்களத்திற்கு பல கால அனுபவமுண்டு. அதென்ன மாயமோ சிங்களம் தொடர்ந்து வெல்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

இந்தியாவுக்கு ஆப்படிப்பதில் சிங்களத்திற்கு பல கால அனுபவமுண்டு. அதென்ன மாயமோ சிங்களம் தொடர்ந்து வெல்கிறது 

சுண்டெலி மாதிரி இருந்து கொண்டு, யானையின் காதில் புகுந்து விளையாடுது. 😂

பிற்குறிப்பு: இந்தியாவை யானை என்ற உதாரணம் ஓவர்தான். அதற்காக மன்னிக்கவும். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.