Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   30 AUG, 2024 | 03:21 AM

image
 
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக திருகோணமலை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தலைமையில் திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (29) காலை 10.00 மணியளவில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதற்கு தாம் விரும்புவதாகவும் குறித்த முடிவை மத்திய செயற்குழுவிற்கு அறிவிக்குமாறும் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

குறித்த கலந்துரையாடலில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களினால் எடுக்கப்பட்டுள்ள முடிவு தொடர்பாக எதிர்வரும் 1ஆம் திகதி இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தெரியப்படுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சி ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை முடிவினை அறிவிக்காத நிலையில் வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் அவற்றை பரிசீலித்து முடிவினை அறிவிக்கலாம் என தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். 

இதேவேளை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட தரப்பினர் தமிழ் பொதுவேட்பாளருக்கு வெளிப்படையாகவே ஆதரவினையும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/192351

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான சந்தர்ப்பங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடிய தலைமைகள் தான் இன்று தேவை. நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா. 

அதாவது மகா ஜனங்களே,...

தீர்க்கமான முடிவை முதலை போல அல்லது மூர்க்கன்போல  யாரும் எடுக்கலாம். அதற்கு புத்தி தேவை இல்லை. முட்டாளாலும் தீர்க்கமான முடிவை எடுக்க முடியும். ஆனால் அது பயன்தருமா? 

ஆனால் அந்தத் தீர்க்கமான முடிவு புத்தியைப் பாவித்து எடுக்கப்பட்டால் மாத்திரமே அது பயன் தரும். 

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6964.jpeg.3333055edad2ccb2c6f3

  • கருத்துக்கள உறவுகள்

@விசுகுகு

உங்களுக்கு -1 போடுவது ஏன் என்று தெரியுமா? 

அதுசரி விசுகர்,

 இலங்கை சனாதிபதியாகப் போட்டியிடும் அரியநேந்திரனின் கொள்கைப் பிரகடனம் என்ன என்று கூறுங்கள் பார்க்கலாம்? 

அதுசரி தான் ஏன் போட்டியிடுகிறேன் என்று அவருக்கே தெரியாதபோது அவரை உசுப்பிவிடும் உங்களைப்போன்ற ஆட்களுக்குத் தெரியவா  போகிறது? 

😁

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6964.jpeg.3333055edad2ccb2c6f3

எப்படி இருந்தவர்

இப்படி ஆகிட்டாரே.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

@விசுகுகு

உங்களுக்கு -1 போடுவது ஏன் என்று தெரியுமா? 

அதுசரி விசுகர்,

 இலங்கை சனாதிபதியாகப் போட்டியிடும் அரியநேந்திரனின் கொள்கைப் பிரகடனம் என்ன என்று கூறுங்கள் பார்க்கலாம்? 

அதுசரி தான் ஏன் போட்டியிடுகிறேன் என்று அவருக்கே தெரியாதபோது அவரை உசுப்பிவிடும் உங்களைப்போன்ற ஆட்களுக்குத் தெரியவா  போகிறது? 

😁

-1 மற்றவரின் மூளை மற்றும் அறிவை அளவிட்டு முட்டாள் பட்டம் கொடுக்கும் உங்கள் மூளைக்காக.

2- புலத்தில் இருந்து கொண்டு புலம்பெயர் தமிழர்களின் மூளை மற்றும் அறிவை அளவிட்டு முட்டாள்கள் என்று பட்டம் கொடுத்தபடி அதே முட்டாள் கூட்டத்தில் ஒருவரான நீவீர் தாயக மக்களையும் முட்டாள்கள் என்று புலம்புவதற்காக. 

3- உங்கள் நோக்கம் ஒன்றே தான். தாயகத்தின் மீது எவர் பற்று வைத்து இருந்தாலும் அவர்கள் அறிவற்ற மூளையற்ற முட்டாள்கள். சிறீலங்காவை ஏற்றுக் கொண்டு சிங்களவருக்கு வாக்களித்து மரத்தில் படரும் கொடி போன்று உயிர் வாழ பழகுங்கள். அது தான் தமிழர்கள் தாயகத்தில் உயிர் வாழ ஒரே வழி. 

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

👇  தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை உறுப்பினர்கள் – அரியநேத்திரனுக்கு ஆதரவு. 😂

FOSNxWnXwAIpJZo.jpg

சுமந்திரன், சாணக்கியன் மற்றும் சிலரின்  மைண்ட் வாய்ஸ்:  ஐயோ..  எரியுதடி மாலா.     animiertes-gefuehl-smilies-bild-0435.gif😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

என் கேள்விக்கு இது பதில் இல்லையே,......🙄

57 minutes ago, தமிழ் சிறி said:

maxresdefault.jpg

👇  தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை உறுப்பினர்கள் – அரியநேத்திரனுக்கு ஆதரவு. 😂

FOSNxWnXwAIpJZo.jpg

சுமந்திரன், சாணக்கியன் மற்றும் சிலரின்  மைண்ட் வாய்ஸ்:  ஐயோ..  எரியுதடி மாலா.     animiertes-gefuehl-smilies-bild-0435.gif😂 🤣

தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் என்ன? 

அவர் தன்னை ஒரு இலங்கை அரசியல் யாப்பை ஏற்றுத்தானே தேர்தலில் போட்டியிடுகிறார்? 

😉

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240831-WA0067.jpg?resize=750,375

தேர்தலை இலக்கு வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதி பத்திரங்கள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தந்தையான சதாசிவம் இராமநாதனை பினாமியாக வைத்து மதுபானசாலைக்கான அனுமதியை கிளிநொச்சியில் பெற்றார் என குற்றஞ்சாட்டினார்.

யாழ் ஊடக அமையத்தில்  இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மதுவரி திணைக்களத்திற்கு அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் எழுதியதாக தெரிவித்த கடிதமொன்றையும் வெளிப்படுத்தினார்.

இதேவேளை அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பு தமிழ் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு ஆதரவளிப்பதாகவும், மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழருக்கு எதிரானவர்களை சங்கறுக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

https://athavannews.com/2024/1397649

  • கருத்துக்கள உறவுகள்

https://m.facebook.com/story.php/?story_fbid=528282889572876&id=100071735088932

இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் தமிழ் மக்களின் 8 சத வீத வாக்குகளை ஒன்றாக வைத்திருக்கும் பட்சத்தில் அவை தான் ஜனாதிபதி வேட்பாளாரை நிர்ணயிக்கும் என கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கைப் பார்த்தா யாழிலும் பலருக்கு சங்கு ஊதுப்படும் போல இருக்கு.

வாழ்க சங்கு.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

போறபோக்கைப் பார்த்தா யாழிலும் பலருக்கு சங்கு ஊதுப்படும் போல இருக்கு.

வாழ்க சங்கு.

ஈழப்பிரியன் அரிநேந்திரன் ஒன றில் ஜனாதிபதியாக வர வேண்டும். இல்லை வட கிழக்கில்,  நாம் சமஸ்டி கேட்கும் பிரதேசத்தில் 50 வீதத்துக்கு மேல் எடுத்து  சர்வதேசத்துக்கு அதை காட்டி உலகநாடுகள் அதை அங்கீகரிக்க வேண டும். இரண்டுல்  எது நடந்தாலும் அவருக்கு வெற்றி.

இரண்டிலும் அவர் தோற்றால் அவரை நிறுத்திய எல்லோருக்கும் சங்குதான். இறுதியில் அது தான் நடக்கப்போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டிக்கும் சங்கு ஊதி முடித்து வைக்க தமிழ் தேசியத்தின் காவலன் தமிழரசு கட்சியின் நாயகன்  ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் வருகிறார்   வருகிறார்   வருகிறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்; செல்வம் அடைக்கலநாதன்

Published By: DIGITAL DESK 7  01 SEP, 2024 | 09:20 AM

image
 
இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை தமிழ் கட்டமைப்பின் சிறந்த முடிவாக பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவளித்து சங்கு சின்னத்தை தீர்மானித்த முடிவு வரவேற்கத்தக்கது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (31) இடம் பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்தார்.

இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் உட்பட கட்சி பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

மேலும் கருத்துரைத்த அவர் இந்த புரட்சிகரமான முடிவால் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஊடாக அனைவரும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும். எங்கள் ஒற்றுமை தமிழ் கட்டமைப்பு ஒற்றுமையை காட்டியுள்ளது. இதனால் தான் 22 உறுப்பினர்களை பெற்றிருக்கிறோம். சங்கு சின்னம் ஊடாக அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கும் ஒரே குடையின் கீழ் ஒன்றினைத்து மக்களுக்கு பலமான செய்தியை சொல்ல வேண்டும். எங்களுக்குள் பிரிவினையற்ற நிலை இல்லாது தமிழ் தேசியத்துக்கு அந்த பலத்தை கொண்டு செல்ல வேண்டும். பிரிவினைகள் மக்களுக்கு கோபத்தை உண்டு பண்ணும், இதனால் இருக்கின்ற 10 பிரநிதித்துவம் ஐந்தாக குறையலாம். இந்த கூட்டு தேர்தலுக்கான கூட்டாகவன்றி மக்கள் பிரச்சினைகளை வெளிக்கொனரவும் போராட்டங்களை முன்னெடுக்கவும் ஆலமரமாக இருக்க வேண்டும் திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியின் முடிவால் கிளிநொச்சி மாவட்ட கட்சி கிளையும் இதே முடிவெடுத்துள்ளது என்றார்.

இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தமிழ் கட்சிகள் சிறு சிறு கட்சிகளாக இருக்காமல் அனைவரும் ஒன்றினைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாக பயணித்து இழந்த உரிமைகளை மீளப் பெறுவோம். 1948ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால் தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/192512

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

இந்து மத பூஜைகளில் ஏன் சங்கு ஊதப்படுகிறது தெரியுமா? அதனால் கிடைக்கும்  அற்புத பலன்கள் என்ன தெரியுமா? | Why We Blow Shankha Before Puja? - Tamil  BoldSky

அடேங்கப்பா... தமிழீழம் எங்கும், சங்கு சின்னத்துக்கு ஆதரவு. 😂
சங்காரம் நிஜம் என்று சங்கே முழங்கு.  💪

  • கருத்துக்கள உறவுகள்
On 30/8/2024 at 10:36, Kavi arunasalam said:

large.IMG_6964.jpeg.3333055edad2ccb2c6f3

கடைசியில இவனுக்கு விளக்கு பிடிக்கும் நிலை கவி அருணாச்சலத்திற்கு வந்து விட்டது🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.