Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தின்  பெயரில் மக்களை ஏமாற்றும் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு முடிவு வரப்போகின்றது என்பதில் பெருமகிழ்ச்சி!

  • Replies 165
  • Views 10.8k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இந்தக் கூட்டத்திற்கு மாவை சேனாதிராஜா, ஸ்ரீதரன் போன்றவர்கள் சமூகமளிக்கவில்லை.  இது... சுமந்திரன் குரூப்பின், மற்றுமொரு  தில்லாலங்கடி வேலை. 😎 கட்சியை நடுத் தெருவில் வைத்து,  நாறப் பண்ணிக் கொண்டு இரு

  • சாணக்கியனும் சுமந்திரனும் சஜித்துக்கு வாக்கை போட சொன்ன படியால் தமிழ் மக்கள் நான் முந்தி  நீ முந்தி என வாக்களிக்க போகிறார்கள்.  மிக முக்கியமாக தமிழருக்கு தீர்வொன்று வர போகிறது. மேற்கு நாடுகளுக்க

  • நிழலி
    நிழலி

    சஜித்தின் தோல்வியை இனி எவராலும் தடுக்க முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

பொதுவேட்பாளருக்கு மட்டும் புள்ளடி போடச் சொல்கிறார்கள் பொதுக்கட்டமைப்பைச் சேர்ந்தோர். 

large.IMG_7002.jpeg.41a77c9b7655d3c85869

  • கருத்துக்கள உறவுகள்

சஜித்திற்கே வாக்களியுங்கள் - தமிழரசுக் கட்சி உயர்மட்டக்குழு

Published By: DIGITAL DESK 3   16 SEP, 2024 | 02:35 PM

image
 
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான தீர்மானம் மிக்க உயர்மட்ட கலந்துரையாடல் வவுனியா தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (16) நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறிதரன், செயலாளர் ப.சத்தியலிங்கம், முன்னாள் மட்டுமாநகரசபை மேயர் சரவணபவன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டனர். 

குறித்த கலந்துரையாடலின் பின்னர் தமிழரசுக்கட்சியின் தீர்மான அறிக்கை கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜாவால் வாசிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இத்தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பரிசீலிக்கப்பட்டன. இத்தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பாக தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரதேசங்களின் பொருளாதார மேம்பாடு பற்றி கவனம் செலுத்தப்பட்டது. 

இவ்விஞ்ஞாபனங்களில் புதிய அரசியலமைப்பு உருவாக்குதலும் ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ள பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுலாக்குவதும் ஆகும். ஒற்றையாட்சி மற்றும் புத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதனவாகும். அதற்குப் பதிலாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சமஷ்டிக் கட்டமைப்பின் மூலம் தீர்வு காணப்படுதல் வேண்டும் என்பது பிரதானமாகும். 

முக்கியமாக இவ்விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாச, ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக ஆகியோருடன் நேரடியாக பேச்சுக்கள் நடைபெற்றன. தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ்ப் பேசும் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு இணைப்பாட்சி அடிப்படையிலான சமஷ்டிக் கட்டமைப்பில் முழுமையான தன்னாட்சி சம்பந்தமாக தொடர்ந்து போராடி வந்துள்ளோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் பொருட்டு தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தீர்வுக்கான பிரேரணை முன்வைக்கப்படுதல் வேண்டும். 

தமிழ்ப் பேசும் மக்கள் என்ற வகையில் முஸ்லீம் சமூகத்துடனும் மலையக தமிழர்களுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும். 13ஆவது அரசியல் திருத்தம் அரசியலமைப்பின் ஒற்றையாட்சிக்குட்பட்டது. இதனை அரசியல் தீர்வாக எம்மால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். இருப்பினும் தமிழினத்தின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடையும் வரை இந்திய அரசின் நட்புறவுடன் 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நடைமுறையிலிருக்கும் மாகாண அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். 

2002 டிசம்பரில் ஏற்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டில் சில அடிப்படைக் கோட்பாடுகளின் மீது இணக்கம் காணப்பட்டது. அக்கோட்பாடு பின்வருமாறு அமைந்தது. இந்த வரலாற்று நிகழ்வு இன்றும் பரிசீலனைக்குரியது. "ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ்பேசும் மக்களின் வரலாற்று ரீதியான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல் என்பதாகும். சர்வதேச நியமங்களின் படியும், சர்வதேச சாசனங்களின் படியும் தமிழர்களாகிய நாங்கள் தனிச்சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம். 

ஒருமக்கள் குழாமான நாங்கள் பேரினவாதத்தின் பிடிக்கு ஆட்படாது கெளரவத்துடனும் சுயமரியாதையுடனும், சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நாட்டின் ஏனைய மக்களுடன் சமத்துவமுள்ள மக்களாக வாழ விரும்புகிறோம். 2015 இல் இலங்கை வந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 13இல் இலங்கையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார். “எமது சமூகத்திலுள்ள அனைத்துப் பாகங்களின் அபிலாசைகளுக்கு நாம் மதிப்பளிக்கும் போது எம்நாட்டின் ஒவ்வொரு பிரஜையின் சக்திகளையும் எமதுநாடு உள்வாங்கிக் கொள்ளும். மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்களை இவ்வாறு வலுவூட்டும் பொழுது நாடு மென்மேலும் மேம்படும் கூட்டுச் சமஷ்டியில் நான் திடமான நம்பிக்கை கொண்டவன்" என்பதையும் குறிப்பிட்டார். 

"இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு அரசிடம் அல்ல என்பதை நாம் வலியுறுத்துகிறோம். "ஜனாதிபதித் தேர்தல் முடிந்தபின் எங்களால் சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்புக்கான அறிக்கையில் குறிப்பிடப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கான அரசியல் தீர்வை அடைவதற்கும், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கும் தீர்வுகாண வெற்றிபெறும் ஜனாதிபதியுடனும் அரசுடனும் வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம்." தமிழ்த்தேச மக்கள் அரசியல் தீர்வைத் தீர்மானிப்பதிலும் அந்த இலட்சியத்தை அடைவதற்கும் இடர்களோ முரண்பாடுகளோ ஏற்படாமல் நல்லெண்ணத்துடன், ஒற்றுமை உணர்வுடன் தேர்தலின் போதும், எதிர்காலத்திலும் ஒன்றாக நின்று உழைப்போம் என திடமான தீர்மானத்தைக் கொண்டிருக்கிறோம்.' 

இந்த நோக்கத்தை நாடளாவிய ரீதியில் செயல்படுத்துவதற்கென நாம் கடந்த காலத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் எமது பெரும் பங்களிப்பை வழங்கி இருந்தோம். ஆனால் பெரும் ஏமாற்றங்களும், வெறுப்பும், வேதனைகளுமே எஞ்சியுள்ளன. இப்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எம்மால் பரிசீலிக்கப்பட்ட மூன்று பிரதான வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் எதுவும் எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை முழுமையாக உள்ளடக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்கிறோம். இந்த விஞ்ஞாபனங்களின் அடிப்படையில் எமது தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற எமது அடிப்படைக் கோட்பாடுகளில் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாத வகையில் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் விஞ்ஞாபனம் ஒப்பீட்டு ரீதியில் ஓரளவு திருப்தியாகக் காணப்படுகின்றது. 

எனவே, 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பின் போது ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென்ற எமது கட்சியின் மத்திய குழுத் தீர்மானத்திற்கு அமைவாக வாக்காளர்கள் உரியவாறு தங்கள் வாக்கை அவருக்கு வழங்க வேண்டும் என அன்புடன் கோருகின்றோம் என்றுள்ளது.

இதேவேளை இன்றையதினம் கலந்துகொண்ட ஆறு உறுப்பினர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாத்திரம் குறித்த தீர்மானத்திற்கு  இணக்கப்பாடு தெரிவிக்காதநிலையில் ஏனைய ஐவரும் தமது இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/193852

சஜித் தலைகீழாக நின்றாலும், வெல்ல மாட்டார். மூன்றாவதாக வந்து, அரசியலில் இருந்து மேலும் ஓரங்கட்டப்படுவார்.

போட்டி, ரணில் Vs அனுர என்று ஆகியுள்ளது. 

தோற்றுப் போகின்றவருக்கு மீண்டும் ஆதரவு கொடுத்து, தமிழரசுக் கட்சி மேலும் நகைப்புள்ளாக போகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

சஜித் தலைகீழாக நின்றாலும், வெல்ல மாட்டார். மூன்றாவதாக வந்து, அரசியலில் இருந்து மேலும் ஓரங்கட்டப்படுவார்.

போட்டி, ரணில் Vs அனுர என்று ஆகியுள்ளது. 

தோற்றுப் போகின்றவருக்கு மீண்டும் ஆதரவு கொடுத்து, தமிழரசுக் கட்சி மேலும் நகைப்புள்ளாக போகின்றது

இங்கே வெற்றி தோல்வி முக்கியமா?? அல்லது தமிழர்களின் கோரிக்கைகளை ஓரளவேனும் செவி சாய்ப்பவர் முக்கியமா??? 

9 minutes ago, விசுகு said:

இங்கே வெற்றி தோல்வி முக்கியமா?? அல்லது தமிழர்களின் கோரிக்கைகளை ஓரளவேனும் செவி சாய்ப்பவர் முக்கியமா??? 

வெற்றி தோல்வி முக்கியம் இங்கு.

அனுர வருவதை முழு மனத்துடன், வெறுப்பாக பார்க்கின்றேன். என்னைப் பொறுத்தவரைக்கும் அனுர / ஜேவிபி என்பது கடும் இனவாத முகத்தை சமூக நீதி எனும் முக மூடி போட்டுக் மறைக்கும் ஒரு கட்சி. 

அனுர தனிப்பட்ட ரீதியில் இனவாதமற்றவராக இருக்கலாம் (அப்படி தான் எல்லாரும்  சேர்டிபிகேட் கொடுக்கின்றனர்), ஆனால் அவரது கட்சி, மற்ற இனவாதக் கட்சிகளான ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சிகள் கூட செய்ய தயங்கிய விடயமான வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பை நீதிமன்று போய் இல்லாமல் செய்த கட்சி.

சஜித் ,ரணில் எனும் போது, இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், தெரிந்த பிசாசுகள். ஓரளவுக்கேனும் மேற்குலகுடன் அனுசரித்துப் போகக் கூடியவர்கள். 

இருவரில் ஒருவர் வந்து பொருளாதார விடயத்தில் இப்ப இருப்பதை விட ஒரு படி அதிகம் செய்தாலே, ஊரில் இருந்து வெளி நாட்டுக்கு படையெடுக்கும் இளைய சமூகத்தின் எண்ணிக்கையில் குறைவாவது ஏற்படும். தாயகம் மேலும் ஆட்களற்று சிறுத்துப் போவது குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

வெற்றி தோல்வி முக்கியம் இங்கு.

அனுர வருவதை முழு மனத்துடன், வெறுப்பாக பார்க்கின்றேன். என்னைப் பொறுத்தவரைக்கும் அனுர / ஜேவிபி என்பது கடும் இனவாத முகத்தை சமூக நீதி எனும் முக மூடி போட்டுக் மறைக்கும் ஒரு கட்சி. 

அனுர தனிப்பட்ட ரீதியில் இனவாதமற்றவராக இருக்கலாம் (அப்படி தான் எல்லாரும்  சேர்டிபிகேட் கொடுக்கின்றனர்), ஆனால் அவரது கட்சி, மற்ற இனவாதக் கட்சிகளான ஐ.தே.க. மற்றும் சுதந்திரக் கட்சிகள் கூட செய்ய தயங்கிய விடயமான வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பை நீதிமன்று போய் இல்லாமல் செய்த கட்சி.

சஜித் ,ரணில் எனும் போது, இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், தெரிந்த பிசாசுகள். ஓரளவுக்கேனும் மேற்குலகுடன் அனுசரித்துப் போகக் கூடியவர்கள். 

அப்படியானால் உங்கள் கருத்துப்படி ரணில் உங்கள் தானே தெரிவு?!?

4 minutes ago, விசுகு said:

அப்படியானால் உங்கள் கருத்துப்படி ரணில் உங்கள் தானே தெரிவு?!?

ரணில் அல்லது சஜித். இருவரில் ஒருவர் சனாதிபதியாக வந்தால், இன்னும் கொஞ்சம் சனம் மூச்சு விடும். அனுர வந்தால், நிலமை மோசமாகும்.
 
ஆகவே இருவரில் ஒருவர் வருவதை எதிர்பார்க்கின்றேன்.

ஆனால் கள நிலவரம், அனுரவுக்கே சாதகமாக உள்ளது. வடக்கு மக்களை இரண்டாம் விருப்பு வாக்கில் இவரை தெரிவு செய்யாமல் விட்டால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இதேவேளை இன்றையதினம் கலந்துகொண்ட ஆறு உறுப்பினர்களில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மாத்திரம் குறித்த தீர்மானத்திற்கு  இணக்கப்பாடு தெரிவிக்காதநிலையில் ஏனைய ஐவரும் தமது இணக்கப்பாட்டினை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

large.IMG_7032.jpeg.bef6ac7d86e102458c9a

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

ரணில் அல்லது சஜித். இருவரில் ஒருவர் சனாதிபதியாக வந்தால், இன்னும் கொஞ்சம் சனம் மூச்சு விடும். அனுர வந்தால், நிலமை மோசமாகும்.
 
ஆகவே இருவரில் ஒருவர் வருவதை எதிர்பார்க்கின்றேன்.

ஆனால் கள நிலவரம், அனுரவுக்கே சாதகமாக உள்ளது. வடக்கு மக்களை இரண்டாம் விருப்பு வாக்கில் இவரை தெரிவு செய்யாமல் விட்டால் நல்லது.

தமிழ் மக்கள் தம்மு முதலாவது அல்லது  இரண்டாவது தெரிவை ரணிலுக்கு அளிப்பதே தற்போதைய நிலையில் நல்லது. ரணில் வந்து பாலாறும. தேனாறும. ஓடப்போவதில்லை. ஆனால், இன்றைய நிலையில் அதுவே பொருளாதார நீங்கள் சொன்னது போல் தாயக மக்கள்  சற்றேனும் பொருளாதார மீட்சி பெற்று வடகிழக்கில் தமிழர் இருப்பை பேண சற்றேனும் கைகொடுக்கும்.  அதுவே இன்றைய தேவை.  

எது எப்படியோ ஆட்சிக்கு வரும்  ஜனாதிபதியுடன் சுயநலமற்று  

(அது சாத்தியமில்லாதுவிட்டால் அல்லது சுயநலத்துடன் சேர்த்து  பொதுநலத்தை சற்றேனும் ஆர்வம் கொண்ட வட கிழக்கு மக்களின் அபிவிருத்தியில்  ஆர்வம் உடைய)  

தமிழ் மக்களின் பொதுவான பொருளாதார நன்மைகளை பேணக்கூடிய வட கிழக்கு அபிவிருத்தி, உற்பத்தி திறன், வேலைவாய்ப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தக்கூடிய  ஒரு சிலராவது சேர்ந்து வேலை செய்ய வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

இது தான் சரியான தெரிவு என்று தெரிகின்றது............. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

ரணில் அல்லது சஜித். இருவரில் ஒருவர் சனாதிபதியாக வந்தால், இன்னும் கொஞ்சம் சனம் மூச்சு விடும். அனுர வந்தால், நிலமை மோசமாகும்.
 
ஆகவே இருவரில் ஒருவர் வருவதை எதிர்பார்க்கின்றேன்.

ஆனால் கள நிலவரம், அனுரவுக்கே சாதகமாக உள்ளது. வடக்கு மக்களை இரண்டாம் விருப்பு வாக்கில் இவரை தெரிவு செய்யாமல் விட்டால் நல்லது.

அனுர கூடாது 

சயித் தோற்கப்போறவர்

எனவே ரணில் மட்டுமே தெரிவு??

ஆனால் தாயக கட்சிகளில் எதுவுமே ரணிலை மக்களுக்கு சிபாரிசு செய்யவில்லையே. அப்படியானால் தாயகமும் எம் போன்ற புலம்பெயர் தமிழர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கிறதா???

42 minutes ago, விசுகு said:

அனுர கூடாது 

சயித் தோற்கப்போறவர்

எனவே ரணில் மட்டுமே தெரிவு??

சஜித் தோற்றால் அது தமிழ் மக்களாலாக இருக்காது.

அவர் தனக்கு வந்த நல்ல வாய்ப்பை தவற விட்டவர் என சிங்கள மக்கள் எண்ணுகின்றனர். ரணிலுக்கு பதிலாக அவரைத் தான் கோத்தா உட்பட பலர் முதலில் தொடர்பு கொண்டனர் என்றும் அவர் அன்றிருந்த இலங்கையின் பொருளாதார நிலையில் சனாதிபதியாக பொறுப்பேற்று மேலும் நாடு மோசமானால் தன் அரசியல் எதிர்காலமே நாசமாகிவிடும் என்று பயந்தமையால் அவர் பொறுப்பேற்கவில்லை என்றும் சிங்கள மக்கள் எண்ணுகின்றனர். அத்துடன் அவருடன் இருப்பவர்கள் பலர் ஏற்கனவே ஊழலில் பழம் தின்ற பெருச்சாளிகள் என்பதால், ஒரு மாற்றை எதிர்பார்க்கின்றனர்.

42 minutes ago, விசுகு said:

ஆனால் தாயக கட்சிகளில் எதுவுமே ரணிலை மக்களுக்கு சிபாரிசு செய்யவில்லையே. அப்படியானால் தாயகமும் எம் போன்ற புலம்பெயர் தமிழர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கிறதா???

ரணில் வரக்கூடாது என்றுதானே பொது வேட்பாளரை களம் இறக்கியுள்ளனர் என்று சனம் பேசிக் கொள்வது அப்ப பொய்யா?

மற்றது, இன்னும் தாயகத்தில் உள்ளவர்களுடனான அரசியல் ரீதியிலான இடைவெளி நெருக்கமாக இருக்கு என்றா நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள்?

கடந்த வருடம் போலிகாவை இறக்கிய போதே, அது பற்றி தாயக மக்கள் கொஞ்சம் கூட அக்கறையற்று இருந்த போதே இது புரியவில்லையா?
 
On 12/9/2024 at 09:50, வாலி said:

தமிழ்த் தேசியத்தின்  பெயரில் மக்களை ஏமாற்றும் கட்சிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஒரு முடிவு வரப்போகின்றது என்பதில் பெருமகிழ்ச்சி!

வாலி இப்படிச் சொன்னது தான் நடக்கப் போகின்றது - இக் கட்சிகளின் நடைமுறையில் தோல்வியடைகின்ற  முடிவுகளால்.

ஈற்றில் தேசியக் கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து தமிழ் தேசிய அரசியல் நீர்த்துப் போக போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தடம் மாறப் போவதில்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடுமாறுகின்றதா தமிழரசு கட்சி?

Oruvan

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்தார். 

இந்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

எனினும், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, மாவை சேனாதிராஜா கிளிநொச்சியில் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவை தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

தேர்தல் விஞ்ஞாபனங்களை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழரசு கட்சியின் ஆறு பேர் கொண்ட குழு நேற்று வவுனியாவில் கூடியது.

மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், கட்சியின் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம், சிரேஷ்ட பிரதித் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மட்டக்களப்பு முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாவை சேனாதிராஜா பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை வலியுறுத்தி, 21ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் அவருக்கு ஆதரவளிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தினார். 

சமூகம் எதிர்நோக்கும் அழுத்தமான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வாக்காளர்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இருந்த போதிலும், மாவை சேனாதிராஜா கிளிநொச்சி கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன்போது தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

“நாங்கள் இலங்கையில் பல ஆண்டுகளாக இந்த விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். எங்களது எண்ணங்களும் தீர்மானங்களும் அர்ப்பணிப்புகளும் விடுதலைக்காகவே அமைந்திருக்கின்றன.

அரசியல் சூழலில் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் எமது இனத்தின் விடுதலையை நாங்கள் மறந்து விட மாட்டோம். எங்களது உயிரை அர்ப்பணிப்பதற்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கின்றோம்.” என்றார்.

எவ்வாறாயினும் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேத்திரனுக்கு எதிராக நாங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

மேலும், அவரிடத்தில் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டிருக்கின்றது. எங்கள் கூட்டங்களுக்கு அவர் வருவதற்கு நாங்கள் தடை விதித்திருக்கின்றோம். 

அவருடன் இணைந்து பிரசாரத்தில் ஈடுபடும் எங்கள் உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம்.” எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

https://oruvan.com/politics/2024/09/17/mavai-who-took-the-stage-in-support-of-the-tamil-general-candidate

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text2கிழைமைக்கு முன் ஒரு கருத்து 2 கிழமைக்குப் பின் இன்னொரு கருத்து. இடையில் நடந்த டீல் என்ன? அது வேற வாய் இது நாறவாய்????May be an image of 1 person and text

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.