Jump to content

சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும் - பா.அரியநேத்திரன்

Published By: VISHNU   03 SEP, 2024 | 09:01 PM

image

சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும் என தமிழ் தேசிய கட்டமைப்பின் ஐனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை வெளியடப்பட்டது.

இதன்போது உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்;

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்களிடையே பெரும் ஆதரவு பெருகிவருகிறது. அதை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர். சிலர் எரிச்சல் படுகின்றனர். சிலர் எச்சரிக்கை செய்கின்றனர். அவ்வாறானவர்களை சிரிப்போடு கடந்து செல்வோம். அவர்களின் பெயர்களை கூறி அவ்வாறானவர்களை பிரபல்யப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. தவறுகள் என்பது எல்லோரிடமும் இருக்கின்றது. தவறு இழைத்தவர்கள் அத்தனைபேரும் வருகின்ற 22 ஆம் திகதி தமிழ் மக்கள் அளிக்கும் முடிவைப்பார்த்து திருந்துவார்கள்.

சீரழிந்து போயிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையவேண்டும். ஒன்றிணைந்த வட கிழக்கில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வுக்காக பலரும் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அதை நோக்கியதான தமிழ்ப்பொது வேட்பாளர் நிலைப்பாட்டை வெற்றிபெற வைப்பதற்காக தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம்வகிப்பவர்களும் தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களும், புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் உறவுகள் என பலவேறு தரப்பினரும் இரவு பகலாக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

சில கட்சிகள் பொது வேட்பாளரை ஆதாரிக்காவிடில் அது செய்தி அல்ல. சங்கை ஆதரித்தால் அதுதான் செய்தி 21 ஆம் திகதிக்கு இடைபட்ட நாட்களில் பல்வேறு கதைகள் வரும். வதந்திகள் வரும். மக்கள் அவை எதையும் பொருட்படுத்தாது சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தவறிழைப்பவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். முடிவு எவ்வாறு அமையும் என எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

எஞ்சி இருக்கும் 15 நாட்களுக்குள் தவறான முடிவெடுத்தவர்கள் திருந்திவரவேண்டும். தந்தை செல்வநாயகத்தின் கொள்கைக்காக தமிழரசுக் கட்சியில் இணைந்து செயற்பட்டுவரும் நான் அந்த கொள்கைக்காகவே தமிழ்த் தேசிய பொதுக்கடமைப்பின் அழைப்பை ஏற்று தமிழ்ப் பொதுவேட்பாளராக இந்த தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றேன். இதனை உணர்ந்துகொண்டு செப்டெம்பர் 21 ஆம் திகதி தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமிழர் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/192785

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஏராளன் said:

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்களிடையே பெரும் ஆதரவு பெருகிவருகிறது. அதை பார்த்து சிலர் பொறாமைப்படுகின்றனர். சிலர் எரிச்சல் படுகின்றனர். சிலர் எச்சரிக்கை செய்கின்றனர். அவ்வாறானவர்களை சிரிப்போடு கடந்து செல்வோம்.

large.IMG_6974.jpeg.38090709b45b4b67b36c

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கு சின்னத்திற்கு வாக்களித்து வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும்; தமிழர்களிடம் அழைப்பு விடுத்திருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி

தமிழ்ப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனுக்கே எமது ஆதரவு என தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் பரமசிவம் சிறீதரன், தமிழ் மக்கள் அனைவரும் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து தமது வரலாற்று கடமையை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈழத் தமிழர்கள் கடந்த 15 ஆண்டுகளாக அரசியல் அனாதைகளாக அலைந்து திரிகிறார்கள். நாம் நம்பிய அனைவருமே தேர்தல்களின் பின்னர் எம்மை ஏமாற்றியே வருகிறார்கள். தேர்தலில் வாக்குறுதி கொடுத்த யாருமே அதன் பின்னர் எம்மை மதித்ததில்லை.

இம்முறை எமக்கு ஒரு புதிய தெம்பு பிறந்துள்ளது. வெற்றி பெறப்போவதில்லை எனத் தெரிந்து கொண்டே நாம் ஒரு வேட்பாளருக்கு வாக்களிக்கப் போகிறோம்.

நாம் நம்பிய அனைவரும் எம்மைக் கைவிட்ட போதும், நாம் எமது உரிமைகளுக்கான போராட்டத்தைக் கைவிடவில்லை என்பதையும், அதற்காகப் போராடும் எமது உணர்வுகளை இன்னும் இழந்து விடவில்லை என்பதையும் அத்துடன் எமது வலிகளையும் வேதனைகளையும் இந்த உலகுக்கு உரக்கச் சொல்லப் போகிறோம்.

வெற்றி பெறும்வரை எமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகளை அடுத்த அடுத்த தலைமுறைக்கு ஊட்டுவது எமது வரலாற்றுக் கடமை.

கடந்த காலங்களில் கூட்டணியின் தலைமை பல துரோகங்களுக்குத் துணைபோய் இருக்கிறது என்பது. ஆனால், இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை தமிழ் இனத்தின் வரலாற்றுக் கடமையைச் செய்யத் தயங்காது என்றுள்ளது.

https://thinakkural.lk/article/309013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது- அரியநேந்திரன் கூறுகிறார்

தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது எனவும் எங்களுடைய மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் எனவும் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொது வேட்பாளரில் நீங்கள் அளிக்கும் வாக்கும் சிந்திக்க வைத்துள்ளது. இப்பொழுது சிந்திக்க வைத்துள்ளார்கள். தென்பகுதியில் அவர்கள் பிரச்சாரம் செய்வதற்கு 24 மாவட்டங்கள் இருக்கின்றது. ஆனால் நாங்கள் வடக்கு கிழக்கிலே 8 மாவட்டங்களில் மட்டும் தான் பிரச்சாரப்பணியை மேற்கொள்கிறோம்.

ஆனால் அவர்கள் இங்கே வந்து முகாமிட்டு யாழ்பாணமாக இருக்கலாம், மட்டக்களப்பாக இருக்கலாம், திருகோணமலையாக இருக்கலாம், தாங்களும் வருகின்றார்கள் தங்கள் மனைவிகளை அனுப்புகின்றார்கள், பிள்ளைகளை அனுப்புகின்றார்கள், அவ்வாறு அனுப்பி எங்கள் வாக்கை சிதரடிப்பார்களேயானால் தமிழ் மக்கள் என்ன சிந்திக்க தெரியாதவர்களா? அல்லது வட கிழக்கு மக்கள் அவர்களது கோரிக்கையை நம்புவதற்கு எங்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மையாக இருக்கிறது.அவர்கள் முகவர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

முகவர்களாக செயற்படுகின்றவர்கள் ஒன்றை உணர வேண்டும். தமிழ் மக்களுக்கான நீண்ட கால தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்ற போது இந்தமுறை ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி அந்த செய்தியை சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு எடுத்த முயற்சியை இவர்கள் சிதைக்கின்றார்கள்.

நான் 8 மாவட்டத்திலும் பிரச்சார பபணிகளை மேற்கொண்டுள்ளேன் . 8 மாவட்ட மக்களும் தெளிவாக இருக்கின்றார்கள். இந்த முறை நாங்கள் எல்லோருமே சங்கு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/309283

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

தமிழர் பிரதேசங்களில் வாக்குகளை சிதறடிக்க முடியாது- அரியநேந்திரன் கூறுகிறார்

ஆகவே தமிழர் வாக்குகளை சிதறாமல் ஒன்றாக கட்டி……….

large.IMG_7328.jpeg.6b89568279bb4bbb9824370286daf5ec.jpeg

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியத்துக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இரண்டு விடயத்தை கையாளலாம்..

1. புலிகளை முடித்துவிட்டு இதோ தீர்வு தருகிறோம் என்ற ஹிந்தியாவிற்கும்.. மேற்குலக வல்லாதிக்க சக்திகளுக்கும்.. உங்கள் வாக்குறுதிக்கு என்னானது.. நாம் தமிழ் மக்கள் இன்னும் சுயநிர்ணய உரிமைக்கான தேவையோடு.. தமிழ் தேசிய இனமாக ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை சொல்லலாம். 

2. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அரசியல் போட்டா போட்டிக்குள் சிங்களவர்கள் தமக்கான அரசின் ஆட்சித் தலைமையை தெரிவு செய்வதில் இருந்து தமிழ் மக்கள் விலகி நிற்கலாம். இது உலகிற்கு இன்னொரு செய்தியை சொல்லும்.. இலங்கையில்.. இரு வேறு தேசிய இனங்கள்.. இரு வேறு கொள்கைகளுடன் அரசியல் தேவைகளுடன் உள்ளன என்பதை. அதனை சர்வதேசம் தேசிய நல்லிணக்கம்.. அது இதென்று போலி வார்த்தைகளால் மூடி மொழுகி விட முடியாது. தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் தீர்வை பெற்றுத்தருவதில் கருசணை கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லலாம். 

சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பின் கீழ்... அரியத்தை இறக்கியது தேவை இல்லாத ஆணி ஆக தோன்றினாலும்.. அதனை தேவையாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம். 

Edited by nedukkalapoovan
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/9/2024 at 02:17, ஏராளன் said:

தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு தமிழ்மக்களிடையே பெரும் ஆதரவு பெருகிவருகிறது.

நானும் விசாரித்ததில் இது உண்மையென்றே சொல்கிறார்கள்.

ஒருவரைத் தன்னும் இப்படி வாக்கு போடுங்கோ என்று இதுவரை சொன்னதில்லை.

ஏராளன் உங்களுக்கு நிலமைகள் ஓரளவு விளங்கியிருக்கும்.

உண்மை நிலவரத்தை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nedukkalapoovan said:

அரியத்துக்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்கள் இரண்டு விடயத்தை கையாளலாம்..

1. புலிகளை முடித்துவிட்டு இதோ தீர்வு தருகிறோம் என்ற ஹிந்தியாவிற்கும்.. மேற்குலக வல்லாதிக்க சக்திகளுக்கும்.. உங்கள் வாக்குறுதிக்கு என்னானது.. நாம் தமிழ் மக்கள் இன்னும் சுயநிர்ணய உரிமைக்கான தேவையோடு.. தமிழ் தேசிய இனமாக ஒன்றிணைந்து நிற்கிறோம் என்பதை சொல்லலாம். 

2. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் அரசியல் போட்டா போட்டிக்குள் சிங்களவர்கள் தமக்கான அரசின் ஆட்சித் தலைமையை தெரிவு செய்வதில் இருந்து தமிழ் மக்கள் விலகி நிற்கலாம். இது உலகிற்கு இன்னொரு செய்தியை சொல்லும்.. இலங்கையில்.. இரு வேறு தேசிய இனங்கள்.. இரு வேறு கொள்கைகளுடன் அரசியல் தேவைகளுடன் உள்ளன என்பதை. அதனை சர்வதேசம் தேசிய நல்லிணக்கம்.. அது இதென்று போலி வார்த்தைகளால் மூடி மொழுகி விட முடியாது. தமிழ் மக்கள் வேண்டி நிற்கும் அரசியல் தீர்வை பெற்றுத்தருவதில் கருசணை கொள்ள வேண்டும் என்பதைச் சொல்லலாம். 

சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பின் கீழ்... அரியத்தை இறக்கியது தேவை இல்லாத ஆணி ஆக தோன்றினாலும்.. அதனை தேவையாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம். 

அதே.... நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நானும் விசாரித்ததில் இது உண்மையென்றே சொல்கிறார்கள்.

ஒருவரைத் தன்னும் இப்படி வாக்கு போடுங்கோ என்று இதுவரை சொன்னதில்லை.

ஏராளன் உங்களுக்கு நிலமைகள் ஓரளவு விளங்கியிருக்கும்.

உண்மை நிலவரத்தை எங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாமே?

என்னுடைய பெற்றோர் பொதுவேட்பாளருக்கு போடுவதாக இருக்கிறார்கள். ஏனைய நண்பர்களிடம் விசாரித்து சொல்கிறேன் அண்ணை.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களியுங்கள் - அரியநேந்திரன் தெரிவிப்பு!

Published By: DIGITAL DESK 7   13 SEP, 2024 | 05:44 PM

image

ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

எட்டு மாவட்டங்களிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்த வாக்குக்களை விட அதிக வாக்குகள் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு வந்துள்ளது. 

மக்களிடம் நாம் சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம். ஆனால் சிலர் சங்கு சின்னத்துக்கு வாக்களித்த பின்னர் விரும்பிய மற்றைய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சிலர் கூறு கின்றனர். இது எனதோ, பொது கட்டமைப்பை சார்ந்தவர்களுடைய கருத்தோ இல்லை. 

தற்போதைய நிலவரப்படி எவருமே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டு பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். 

நல்லூர் திருவிழாவிற்கு காப்புக்கடை போடுவது போன்று, கொக்கட்டிசோலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் இனிப்பு கடை போடுவது போன்று, வடக்கு கிழக்கில் வந்து தங்கி பிரச்சாரம் செய்கின்றனர். 

அவர்களுக்கு முகவர்களாக சில தமிழர்கள் செயற்படுகின்றனர். எமது இனத்திற்காக அவர்கள் சிந்தித்து சங்கு சின்னத்திற்கு ஆதரவு வழங்க முன் வரவேண்டும் என மேலும் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/193618

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற உபாயம், தமிழ் தேசிய மக்களை ஒன்று திரட்ட பயன்படப்போகும் ஒரு அடையாளம், தமிழ் மக்களின் பிரச்சனைகளை சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல ஒரு வாய்ப்பாக கொள்ளவேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்கிறார்கள். 

உண்மையில் இந்த தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற விடயம்,  தமிழ் தேசியத்தின் பெயரில் அரசியல் செய்ய நினைக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரித்து ஒரு புள்ளியில் நின்று, மக்களிடம் சென்று ஆதரவு திரட்டிவதென்பது மிக நல்ல விடயம். மிக மிக நல்ல விடயம். தமிழ் தேசிய அரசியலில் ஒரு தீர்மானமிக்க புள்ளி! 

இதன் மூலம் இத் தேர்தல் முடிவில், நீண்டகாலமாக தமிழ் மக்களுடம் கோரிக்கை அளவில் மட்டும் இழுபட்டு வந்த பல விடயங்களுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி போட்டுவிடமுடியும். 

1. வடக்கில் (யாழ்/வன்னி) மட்டும் ஓரளவு வாக்குகளைப் பெற்று- கிழக்கில் பெருத்த அடி வாங்குவதன் மூலம், வடக்கு கிழக்கு இணைப்பென்பது வெறும் மடையர்களின் கோரிக்கை மட்டுமே- கிழக்கு தமிழ் மக்கள் ஆணை கிடைக்காத அதை மொத்தமாக இனி உதாசீனப்படுத்திவிடலாம் என்கின்ற செய்தியையும், 

2. ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தமிழ் வாக்குகளில் 50% வீதத்தையேனும் பெறாத தமிழ் தேசிய வேட்பாளர் என்பது- வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரித்து- தமிழ் தேசிய அரசியல்வாதிகளை நிராகரித்து,  தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள் என்கின்ற செய்தியையும், 

3. தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை பெரும்பான்மை தமிழ் மக்கள் புறக்கணித்திருப்பதானது தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்வதுபோல் உண்மையில்  பிரச்சனைகள் இல்லை- அரசியல்வாதிகள் தான் தமிழ் தேசியத்தினை அரசியல் -பொருளாதார லாப நோக்கிற்காக பயன்படுத்துகிறார்கள் என்கின்ற செய்தியையும், 

4. பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்த தமிழ் பொதுவேட்பாளர் தரப்பை நாங்களும் நிராகரிப்பதே சரி- இவர்களுக்கு தீர்வென்பது இனி தேவையே இல்லாத ஒன்று என்கின்ற செய்தியை சிங்களத்துக்கும் உலகிற்கும் 

சொல்லத் துணிந்து, தமிழ் மக்களின் இத்தனைகால உரிமைப் போராட்டத்தை முட்டாள்தனமான சுயலாப அரசியல் முடிவினால் விற்கத் துணிந்திருக்கும் ஶ்ரீதரன்- மாவை- செல்வம்- விக்கி- சித்தார்த்தன்- சுரேஷ் போன்ற தமிழ்தேசியத் தூண்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக! 

தமிழ் வேட்பாளர் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை 50% க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறத்தவறும் பட்சத்தில், 

மக்களின் ஆணைக்கிணங்க, இத்தேர்தலில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள்/ கொள்கைகள் எவற்றையும் எதிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பதுதான் உங்கள் அரசியலுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பதன் பொருள்!

செய்வீர்களா?

( முகநூலில் வாசித்தது)

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

தமிழ் வேட்பாளர் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை 50% க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறத்தவறும் பட்சத்தில், 

மக்களின் ஆணைக்கிணங்க, இத்தேர்தலில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள்/ கொள்கைகள் எவற்றையும் எதிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பதுதான் உங்கள் அரசியலுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பதன் பொருள்!

செய்வீர்களா?

அப்படி எல்லாம் எதிர்பார்ப்பு இருக்கின்றதோ 😂
சிறிதரன் சொன்னது தெரியாது போல் உள்ளது. ஜனாதிபதி தமிழ் வேட்பாளரை நிறுத்தியது இத்துடன் நிற்றுவிடாது எதிர்காலத்திலும் நாம் ஜனாதிபதி தமிழ் வேட்பாளரை நிறுத்துவோம்
குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதோடு தமிழ் மக்களையும் எங்களது இலாபம் கருதி குண்டு சட்குள்ளே வைத்து கொள்வோம் என்பதில் உறுதியாக தான்  இருக்கின்றனர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற உபாயம், தமிழ் தேசிய மக்களை ஒன்று திரட்ட பயன்படப்போகும் ஒரு அடையாளம், தமிழ் மக்களின் பிரச்சனைகளை சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல ஒரு வாய்ப்பாக கொள்ளவேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்கிறார்கள். 

உண்மையில் இந்த தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற விடயம்,  தமிழ் தேசியத்தின் பெயரில் அரசியல் செய்ய நினைக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரித்து ஒரு புள்ளியில் நின்று, மக்களிடம் சென்று ஆதரவு திரட்டிவதென்பது மிக நல்ல விடயம். மிக மிக நல்ல விடயம். தமிழ் தேசிய அரசியலில் ஒரு தீர்மானமிக்க புள்ளி! 

இதன் மூலம் இத் தேர்தல் முடிவில், நீண்டகாலமாக தமிழ் மக்களுடம் கோரிக்கை அளவில் மட்டும் இழுபட்டு வந்த பல விடயங்களுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி போட்டுவிடமுடியும். 

1. வடக்கில் (யாழ்/வன்னி) மட்டும் ஓரளவு வாக்குகளைப் பெற்று- கிழக்கில் பெருத்த அடி வாங்குவதன் மூலம், வடக்கு கிழக்கு இணைப்பென்பது வெறும் மடையர்களின் கோரிக்கை மட்டுமே- கிழக்கு தமிழ் மக்கள் ஆணை கிடைக்காத அதை மொத்தமாக இனி உதாசீனப்படுத்திவிடலாம் என்கின்ற செய்தியையும், 

2. ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தமிழ் வாக்குகளில் 50% வீதத்தையேனும் பெறாத தமிழ் தேசிய வேட்பாளர் என்பது- வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரித்து- தமிழ் தேசிய அரசியல்வாதிகளை நிராகரித்து,  தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள் என்கின்ற செய்தியையும், 

3. தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை பெரும்பான்மை தமிழ் மக்கள் புறக்கணித்திருப்பதானது தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்வதுபோல் உண்மையில்  பிரச்சனைகள் இல்லை- அரசியல்வாதிகள் தான் தமிழ் தேசியத்தினை அரசியல் -பொருளாதார லாப நோக்கிற்காக பயன்படுத்துகிறார்கள் என்கின்ற செய்தியையும், 

4. பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்த தமிழ் பொதுவேட்பாளர் தரப்பை நாங்களும் நிராகரிப்பதே சரி- இவர்களுக்கு தீர்வென்பது இனி தேவையே இல்லாத ஒன்று என்கின்ற செய்தியை சிங்களத்துக்கும் உலகிற்கும் 

சொல்லத் துணிந்து, தமிழ் மக்களின் இத்தனைகால உரிமைப் போராட்டத்தை முட்டாள்தனமான சுயலாப அரசியல் முடிவினால் விற்கத் துணிந்திருக்கும் ஶ்ரீதரன்- மாவை- செல்வம்- விக்கி- சித்தார்த்தன்- சுரேஷ் போன்ற தமிழ்தேசியத் தூண்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக! 

தமிழ் வேட்பாளர் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை 50% க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறத்தவறும் பட்சத்தில், 

மக்களின் ஆணைக்கிணங்க, இத்தேர்தலில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள்/ கொள்கைகள் எவற்றையும் எதிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பதுதான் உங்கள் அரசியலுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பதன் பொருள்!

செய்வீர்களா?

( முகநூலில் வாசித்தது)

வடக்கு கிழக்கு இணைப்பு என்பது இனி ஒரு போதும் சாத்தியப்படாது என்று முகநூலில் எழுதிய மடையனுக்கு தெளிவு வரட்டும் அதன் பிறகு மிச்சத்தை மற்றவர்களுக்கு கூறலாம்

Link to comment
Share on other sites

On 12/9/2024 at 12:42, island said:

ஆகவே தமிழர் வாக்குகளை சிதறாமல் ஒன்றாக கட்டி……….

large.IMG_7328.jpeg.6b89568279bb4bbb9824370286daf5ec.jpeg

சிங்கள இனவாதிகளுக்கு வாக்களிப்போம்.

17 hours ago, island said:

தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற உபாயம், தமிழ் தேசிய மக்களை ஒன்று திரட்ட பயன்படப்போகும் ஒரு அடையாளம், தமிழ் மக்களின் பிரச்சனைகளை சிங்களத்திற்கும் சர்வதேசத்திற்கும் சொல்ல ஒரு வாய்ப்பாக கொள்ளவேண்டும் என்று கூறி பிரச்சாரம் செய்கிறார்கள். 

உண்மையில் இந்த தமிழ் பொதுவேட்பாளர் என்கின்ற விடயம்,  தமிழ் தேசியத்தின் பெயரில் அரசியல் செய்ய நினைக்கும் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரித்து ஒரு புள்ளியில் நின்று, மக்களிடம் சென்று ஆதரவு திரட்டிவதென்பது மிக நல்ல விடயம். மிக மிக நல்ல விடயம். தமிழ் தேசிய அரசியலில் ஒரு தீர்மானமிக்க புள்ளி! 

இதன் மூலம் இத் தேர்தல் முடிவில், நீண்டகாலமாக தமிழ் மக்களுடம் கோரிக்கை அளவில் மட்டும் இழுபட்டு வந்த பல விடயங்களுக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி போட்டுவிடமுடியும். 

1. வடக்கில் (யாழ்/வன்னி) மட்டும் ஓரளவு வாக்குகளைப் பெற்று- கிழக்கில் பெருத்த அடி வாங்குவதன் மூலம், வடக்கு கிழக்கு இணைப்பென்பது வெறும் மடையர்களின் கோரிக்கை மட்டுமே- கிழக்கு தமிழ் மக்கள் ஆணை கிடைக்காத அதை மொத்தமாக இனி உதாசீனப்படுத்திவிடலாம் என்கின்ற செய்தியையும், 

2. ஒட்டுமொத்த வடக்கு கிழக்கு தமிழ் வாக்குகளில் 50% வீதத்தையேனும் பெறாத தமிழ் தேசிய வேட்பாளர் என்பது- வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தை நிராகரித்து- தமிழ் தேசிய அரசியல்வாதிகளை நிராகரித்து,  தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்துவிட்டார்கள் என்கின்ற செய்தியையும், 

3. தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் நிலைப்பாட்டை பெரும்பான்மை தமிழ் மக்கள் புறக்கணித்திருப்பதானது தமிழ் மக்களுக்கு இவர்கள் சொல்வதுபோல் உண்மையில்  பிரச்சனைகள் இல்லை- அரசியல்வாதிகள் தான் தமிழ் தேசியத்தினை அரசியல் -பொருளாதார லாப நோக்கிற்காக பயன்படுத்துகிறார்கள் என்கின்ற செய்தியையும், 

4. பெரும்பான்மை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் நிராகரித்த தமிழ் பொதுவேட்பாளர் தரப்பை நாங்களும் நிராகரிப்பதே சரி- இவர்களுக்கு தீர்வென்பது இனி தேவையே இல்லாத ஒன்று என்கின்ற செய்தியை சிங்களத்துக்கும் உலகிற்கும் 

சொல்லத் துணிந்து, தமிழ் மக்களின் இத்தனைகால உரிமைப் போராட்டத்தை முட்டாள்தனமான சுயலாப அரசியல் முடிவினால் விற்கத் துணிந்திருக்கும் ஶ்ரீதரன்- மாவை- செல்வம்- விக்கி- சித்தார்த்தன்- சுரேஷ் போன்ற தமிழ்தேசியத் தூண்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் உரித்தாகுக! 

தமிழ் வேட்பாளர் வடக்கு கிழக்கில் பெரும்பான்மை 50% க்கு மேற்பட்ட வாக்குகளைப் பெறத்தவறும் பட்சத்தில், 

மக்களின் ஆணைக்கிணங்க, இத்தேர்தலில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகள்/ கொள்கைகள் எவற்றையும் எதிர்காலத்தில் நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பதுதான் உங்கள் அரசியலுக்கும் மக்களுக்கும் உண்மையாக இருப்பதன் பொருள்!

செய்வீர்களா?

( முகநூலில் வாசித்தது)

இது கடந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டு விட்டதே. திருப்பி ஏன் இந்த மாய்மாலம்?

On 4/9/2024 at 08:17, Kavi arunasalam said:

large.IMG_6974.jpeg.38090709b45b4b67b36c

இது நாமலுக்கு தான் சரியாக பொருந்தும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1977 ம் ஆண்டு தமிழீழத்துக்கு முழு தமிழ் தலைவர்களும் ஆறுமுகன் தொண்டமானில் இருந்து எல்லோருமே வாக்குக்காக குரல் கொடுத்திருந்தும். 50 வீதமான வாக்குகள் கிடைக்கவே இல்லை என்று அண்மையில் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லோருக்கும் உங்கள் கருத்துக்கும், அது பொருத்தமோ பொருத்தம் இல்லா விட்டாலும் , வரலாற்றையும் உண்மையையும் சிந்திக்கா விட்டாலும், எனது நன்றிகள் ! ஒரு தொடக்கம், பல  கருத்து, கட்டாயம் யாரோ சிலரை சிந்திக்க , திரும்பி பார்க்க ஒரு முறையாவது வைக்கும்!!  மீண்டும் நன்றிகள் எல்லோருக்கும் !!!
    • தேர்தல் வாக்குறுதிகளைப் பார்க்கிலும் வரலாறே முக்கியம் எம்.எஸ்.எம்.ஐயூப் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் (கடந்த 22 ஆம் திகதி காலஞ்சென்ற டொக்டர் ஐ.எம். இல்யாசைத் தவிர) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்களில் பெரும்பாலானோர் இது வரை ஒரு பிரசார கூட்டமேனும் நடத்தவில்லை எனத் தெரிய வந்துள்ளது. தெற்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட சர்வஜன கட்சியின் வேட்பாளர் திலித் ஜயவீர ஆகியோரும் வடக்கில் தமிழ் பொது வேட்பாளர் பி.அரியநேத்திரனும் மட்டுமே பிரசார கூட்டங்களை நடத்துவதாக தெரிகிறது. மேலும் சில வேட்பாளர்கள் தாமும் களத்தில் இருப்பதைக் காட்டுவதற்காக ஏதாவது செய்கிறார்கள். இதேவேளை இவ்வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களையும் வெளியிட்டு இருக்கிறார்கள். ஒருபோதும் இல்லாதவாறு இம் முறை இந்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார பிரச்சினையே குறிப்பாக பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வது எவ்வாறு என்பதே முன்னுரிமை பெற்றுள்ளது. தற்போதைய் பொருளாதார நெருக்கடியே அதற்கான காரணமாகும். இந்த விடயத்தில் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால் தேர்தல் விஞ்ஞாபனங்கள் என்று முன்வைக்கப்பட்டுள்ள வாக்குறுதி பட்டியல்களை எவ்வாறு நம்பவுது என்பதேயாகும். ஏனெனில் பல தசாப்தங்களாக ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல்வாதிகள் வழங்கிய வாக்குறுதிகளை அவர்கள் பதவிக்கு வந்து நிறைவேற்றவில்லை. அல்லது அவர்கள் ஒருசில வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் அவர்களது வாக்குறுதிகளின் பொதுவான நோக்கமான வளமான வாழ்க்கை என்பதற்கு எதிராகவே அவர்கள் பதவிக்கு வந்து செயற்பட்டுள்ளனர். 1970 ஆண்டுக்கு பின்னரான 45 ஆண்டு கால வரலாற்றை எடுத்துக் கொண்டால் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. 1960 களில் நாட்டில் பெரும்பான்மையான ஏழைகளுக்கு வாரமொரு முறை ஒரு நபருக்கு இரண்டு கொத்து (சுமார் ஒரு கிலோ) வீதம் அரிசி மானிய விலைக்கு வழங்கப்பட்டு வந்தது. 1965 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் அரசாங்கம் அதில் ஒரு கொத்து அரிசியை மட்டும் இலவசமாக வழங்கி மற்றைய ஒரு கொத்து மானிய அரிசியை இரத்துச் செய்தது. இது பெரும்பாலான மக்களை வெகுவாக பாதித்தது. 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினதும் அதன் தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய முன்னணி என்ற கூட்டணியினதும் தலைவியான சிறிமா பண்டாரநாயக்க 'சந்திர மண்டலத்திலிருந்தேனும்' கொண்டு வந்து முன்னர் போல் இரண்டு கொத்து அரிசியை மானிய விலையில் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்தார். இது இலங்கையின் தெர்தல் வரவாற்றில் முக்கிய வாக்குறுதியொன்றாக இன்னமும் பேசப்படுகிறது. ஐக்கிய முன்னணி அத்தேர்தலில் வாரலாற்றில் முதன்முறையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் பெற்று பதவிக்கு வந்த போதிலும் அவ்வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. சிறிமா பண்டாரநாயக்கவின் அந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் வiலாறு காணாத உனவுப் பஞ்சமும் ஏற்பட்டது. எனவே 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்த வாக்குறுதி மீறலை கடுமையாக விமர்சித்த ஐக்கிய தேசிய கட்சி தாம் பதவிக்கு வந்தால் வாரத்துக்கு ஒரு நபருக்கு எட்டு இறாத்தல் (அக்காலத்தில் இலங்கையில் மெற்றிக் அளவீட்டு முறை அமுலில் இருக்கவில்லை) வீதம் தானியம் மானிய விலையில் வழங்குவோம் என்று வாக்குறுதியளித்தது. ஐதேக அத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்தது. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, ஐதேக பொதுத் தேர்தலை நடத்தர்து தொடரந்து 17 வருடங்களாக மோசமான கொடுங்கொள் அட்சியொன்றை நடத்தியது. எனவே வயிற்றுப் பசியைப் பார்க்கிலும் ஜனநாயக உரமைகள் முன்னிலை பெற்றது. அதன் விளைவாக 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது ஸ்ரீலசுக உள்ளிட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி நிறைவேற்று ஜனாதிபதி முறைறை ஒழிப்பதை தமது முதன்மை வாக்குறுதியாக முன்வைத்தது. 62 வீத வாக்குகளைப் பெற்று பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவி சந்திரிகா குமாரதுங்க அத்தேர்தலில் ஜனாதிபதியானார். ஜனாதிபதித் தேர்தலொன்றில் அந்தளவு மக்கள் ஆதரவு பெற்றவர் சந்திரிகா மட்டுமே. எனினும் அவர் தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் அதே வாக்குறுதியை வழங்கினார். ஆயினும் அதனை நிறைவேற்றவும் இல்லை அதற்கான நாடாளுமன்ற பெரும்பான்மை அவரிடம் இருக்கவும் இல்லை. அதனை அடுத்து 2005 மற்றும் 2010 ஆம் ஜனாதிபதரித் தேர்தல்களின் போது மஹிந்த ராஜபக்ஷவும் இதே வாக்குறுதியை வழங்கினார். 2010 ஆம் ஆண்டு அதற்காக அவரது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தும் அவர் அதனை நிறைவேற்றாது தமது அதிகாரங்களை மேலும் அதிகரித்துக்கொள்ளும் வகையில் அந்த பெரும்பான்மை பலத்தை பாவித்தார். இவ்வாறே 2015 ஆம் ஆண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதாக மைத்திரிபால சிறிசேனவும், வளமான நாட்டை (சௌபாக்கியயே தெக்ம) உருவாக்குவதாக 2019 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷவும் வாக்குறுதியளித்தனர். இவ்வாறு தொடர்ந்து பல தலைவர்கள் வாக்றுதிகளை வழங்கி இறுதியில் 2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது. இந்த வரலாற்றை மறந்து தேர்தல் விஞ்ஞாபனங்களை நம்புவதா என்ற கேள்வி மக்கள் முன் உள்ளது. இன்றைய ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருக்கும் பிரதான கடசிகளில் ஐதேகவின் வரலாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் வரலாறும் ஒன்றாகும். ஏனெனில் 2020 ஆண்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தி ஐதேகவிலிருந்து பிரிந்து சென்றது. அந்தப் பிளவும் கொள்கை ரீதியிலான வேறுபாடுகள் காரணமாக ஏற்படவில்லை. அது கட்சித் தலைமை பதவிக்காக ரனிலுக்கும் சஜித்துக்கும்; இடையே ஏற்பட்ட பலப் போரின் விளைவாகும். எனவே ஐதேகவின் கடந்த காலத்துக்கான பொறுப்பிலிருந்து தற்போதைய ஐதேகவுக்கோ ஐசமவுக்கோ தப்பிவிட முடியாது. அக்கட்சி இனப் பிரச்சினையைப் பற்றி இன்று எதைக் கூறினாலும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்கக் கூடிய நிலையில் இருந்த அப் பிரச்சினையை பாரிய யுத்தமாக மாற்ற ஜே.ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான ஐதேக அரசாங்கத்தின் கொடிய அடக்குமுறையே காரணமாகியது. சஜித்தின் தந்தையான ரணசிங்க பிரேமதாசவும் ரணில் விக்ரமசிங்கவும் அவ்வரசாங்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்தனர். அவ்வரசாங்கம் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால். 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்திருக்கலாம். 1983 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி புலிகள் 13 இராணுவத்தினரை கொன்ற போது அவர்களில் உடல்களை அவரவரது கிராமங்களுக்கு அனுப்பாது அவற்றை கொழும்புக்கு கொண்டு வந்தமை பிரச்சினையை ஊதிப்பெருக்கி பெரும்பான்மை மக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டிவிட்டதற்குச் சமமாகும். அதன் விளைவை நாடு பின்னர் அனுபவித்தது. இந்தப் போரின் போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை எங்கும் அறிக்கையிடப்படவில்லை. சில அறிக்கைகளின் படி இவ்வெண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகும். அதேபோல் ஜனநாயக நீரோட்டத்தில் இருந்த மக்கள் விடுதலை முன்னணியை எவ்வித ஆதாரமுமின்றி கருப்பு ஜூலை கலவரத்தோடு தொடர்புபடுத்தி தடை செய்து அதனை மீண்டும் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளியதும் ஐதேகவேயாகும். பின்னர் அக்கிளர்ச்சியை அடக்குவதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,000க்கும் அதிகமாகும் என கூறப்படுகிறது. 1989 ஆம் ஆண்டு ரனசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றன் பின்னர் நாட்டில் பல பகுதிகளில் வீதிகளில் பிணங்கள் சிதறிக் கிடந்த காட்சி அக்காலத்தில் பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்தது. பட்டலந்த, எலியகந்த போன்ற சித்திர வதை முகாம்களை  பற்றி எத்தனையோ கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சியின் போது சுதந்திர வர்த்தக வலயங்கள், பாரிய நீர் தேக்கங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அதிகரித்து வந்த கடன் சுமைக்கு அது எவ்வகையிலும் பரிகாரம் ஆகவில்லை. அதன் பின்னர் 2021 ஆம் ஆண்டும் 2015 ஆம் ஆண்டும் ஐதேக ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஐதேக ஆட்சி அமைத்தது. சஜித்தும் அரசாங்கங்களில் அமைச்சராக இருந்தார். இன்று போலவே வாக்குறுதிகளை வழங்கி அவ்வாறு பதவிக்கு வந்தாலும் அபிவிருத்தி என்று எதுவுமே நடைபெறவில்லை. அக்காலத்திலும் அதிகரித்து வந்த கடன்களே 2022 ஆம் ஆண்டு நாட்டை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியது. பொதுஜன முன்னணியின் வரலாற்றைப் பற்றி இந்hநட்டு சிறுபான்மை மக்களுக்கு புதிதாக எதையும் கூறத் தேவையில்லை. மக்கள் விடுதலை முன்னணி சந்திரிக்காவின் காலத்தில் 14 மாதங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்று முன்மாதிரியாக நடந்து காட்டியுள்ளது. வன்முறை அரசியலை கைவிட்டு சுமார் 35 ஆண்டுகளாக ஜனநாயக அரசியலிலும் முன்மாதிரியாக இருந்து காட்டியுள்ளது. தமது பழைய பிழையான நிலைப்பாடுகளையும் படிப்படியாக கைவிட்டு வந்துள்ளது. ஆயினும் அக்கட்சி பூரண அதிகாரத்துடன் இது வரை ஆட்சியில் இருந்ததில்லை. அவ்வாறான நிலையில் நிலைமை என்னவாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தேர்தல்-வாக்குறுதிகளைப்-பார்க்கிலும்-வரலாறே-முக்கியம்/91-343898
    • புட்டினின்... இனிப்பான செய்தியை பதிந்த 16 மணித்தியாலத்துக்கு இடையில்... 46 கருத்துக்களும், 1000 பார்வையாளர்களும் வந்து பிரித்து மேய்ந்து விட்டார்கள். 😂 ஜனாதிபதி தேர்தல்... அமளிக்குள், மக்களுக்கு கிளுகிளுப்பும் தேவைப்பட்டிருக்குது என்றால்... பாருங்கோவன். 🤣
    • பிரதான வேட்பாளர்களின் இறுதி பிரசாரக் கூட்டங்கள் கொழும்பில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரக் காலம் இன்று (18) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்கிரமசிங்க,சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க,  நாமல் ராஜபக்ஷ,  திலித் ஜயவீர, நுவன் போககே ஆகியோர் தலைநகரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை இன்று நடத்தவுள்ளனர். இதனால் கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கொழும்பு கிரான்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொஸ்கஸ் சந்தியில் இன்று பிற்பகல் 2 மணிக்க இடம்பெறவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஞ்சிகாவத்தை வீதி டவர் மண்டபத்துக்கு முன்பாக இன்று பி.ப. 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகேகொட ஆனந்த சமரகோன் மைதானத்தில் இன்று பி.பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோமவீர சந்திரசிறி மைதானத்தில் இன்று பி.ப 2 மணிக்கு இடம்பெறவுள்ளது. சர்வஜன அதிகார ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று  பி.ப. 2 மணிக்கு கொட்டாவ பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெறவுள்ளது. மக்கள் போராட்டம் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நுவன் போபகேவின்  தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கிரிபத்கொட பகுதியில் இன்று பி.ப.3 மணிக்கு இடம்பெறவுள்ளது.   http://www.samakalam.com/பிரதான-வேட்பாளர்களின்-இற/    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.