Jump to content

இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா (India) 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதென இலங்கையின் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (07) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் நிதியுதவிகள் 

மேலும், இந்த நிதி வழங்கலுக்கமைய குறித்த துறைமுகம் விரைவில் கப்பல் பயணங்களுக்கு தயாராகி விடும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம் | Kankesanturai Port Expanding By 65 M Indian Fund

ஏற்கனவே, வடக்கில் விமான நிலையம், தீவுகளில் காற்றாலை மின்சாரம் மற்றும் தொடருந்து போக்குவரத்து துறைகளில் இந்தியா நிதியுதவிகளையும் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/kankesanturai-port-expanding-by-65-m-indian-fund-1725723887

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அடுத்த ஆக்கிரமிப்பு....பொருளாதார,ஆத்மீக ஆக்கிரமிப்பு
அன்று பிரித்தானியா நாடுகளை கைப்பற்றி பாலம் ,துறைமுகம்,ரயில்பாதை,மதம் பரப்பினர்
இன்று இந்தியா ,சீனா  போன்ற நாடுகள் அதை செய்கின்றனர் ..அபிவிருத்தி என்ற போர்வையில்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இந்தியாவின் நிதியுதவிகள் 

என்னதான் கிந்தியா முக்கினாலும் எல்லாம் ரூ லேட்.
சிறிலங்காவில்  சீனாவின் பலமான அடித்தளம் எப்போதே உருவாகி விட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

என்னதான் கிந்தியா முக்கினாலும் எல்லாம் ரூ லேட்.
சிறிலங்காவில்  சீனாவின் பலமான அடித்தளம் எப்போதே உருவாகி விட்டது.

இந்தியா அடி தடியில் இறங்கினால் சில சமயம் இலக்கை அடையலாம் ஆனால் அந்த துணிவு இந்தியாவுக்கு இல்லை...கச்சை தீவையே பிடிக்க ஏலாத இந்தியா .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

இந்தியா அடி தடியில் இறங்கினால் சில சமயம் இலக்கை அடையலாம் ஆனால் அந்த துணிவு இந்தியாவுக்கு இல்லை...கச்சை தீவையே பிடிக்க ஏலாத இந்தியா .....

இந்திரா காந்தியின் தோழி சிறிமா பண்டாரநாயக்க கூட சீன ஆதரவாளர் தான்.
எனவே  காந்தி தேச வெருட்டல்கள் சிறிலங்காவில் எடுபடாது.

சிங்களவர்கள் ஹிந்தி பாட்டு கேட்பதுடன் தமது இந்திய உறவை நிறுத்தி விடுவார்கள்.🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு கடந்த 2500 வருடங்களாகக் கடுக்காய் கொடுத்த சிங்களத்திற்கு இன்னும் ஒரு 25 வருடங்கள் கடுக்காய் கொடுக்க முடியாதா என்ன? 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்தியாவிற்கு கடந்த 2500 வருடங்களாகக் கடுக்காய் கொடுத்த சிங்களத்திற்கு இன்னும் ஒரு 25 வருடங்கள் கடுக்காய் கொடுக்க முடியாதா என்ன? 

😁

2500 வருடங்கள் ஏற்றுகொள்ளமுடியாது.... கட‌ந்த 75 வருடங்களாக கடுக்காய் கொடுக்கினம் என சொல்லுங்கோ...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

2500 வருடங்கள் ஏற்றுகொள்ளமுடியாது.... கட‌ந்த 75 வருடங்களாக கடுக்காய் கொடுக்கினம் என சொல்லுங்கோ...
 

சுண்டைக்காய் சிங்களம்  தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது.

அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி.

மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை.

இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்).  ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல.

இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு. 

ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது. 

(வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

சுண்டைக்காய் சிங்களம்  தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா? 

சிங்களத்தின் தனித்துவம் என்ன?

பெரிய பிரித்தானியா இலங்கையை கை விட்ட பின் இனக்கலவரம் மூலம் ஈழத்தமிழர்களை அழித்ததுதான் சிங்களத்தின் தனித்துவமா?

இதை விட சிங்களம் 70 வருடங்களுக்கு மேலாக தனித்து நின்று சாதித்தது என்ன?

இன்று சீனா தானே சகலதையும் கட்டியெழுப்புகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2024 at 00:14, Kapithan said:

சுண்டைக்காய் சிங்களம்  தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா? 

அப்படி பார்க்கப்போனால் இந்தியாவின் பெளத்தம் ஆக்கிரமித்துள்ளது...மேலும் சோழர்கள் படையெடுப்புக்கள் ....சிங்கள்ம் 70 ஆண்டுகள் தாக்குபிடிக்குது என்பது தான் உண்மை அதுவும் தற்போதைய உலக ஒழுங்கின் சீமான்கள் தங்கள் நல்னுக்காக உருவாக்கிய நாட்டை பாதுகாக்கின்றனர்
  
 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.