Jump to content

இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா (India) 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதென இலங்கையின் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (07) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் நிதியுதவிகள் 

மேலும், இந்த நிதி வழங்கலுக்கமைய குறித்த துறைமுகம் விரைவில் கப்பல் பயணங்களுக்கு தயாராகி விடும் எனவும் அவர் கூறியுள்ளார். 

இந்தியா வழங்கும் பாரியளவு நிதியில் விஸ்தரிக்கப்படவுள்ள காங்கேசன்துறை துறைமுகம் | Kankesanturai Port Expanding By 65 M Indian Fund

ஏற்கனவே, வடக்கில் விமான நிலையம், தீவுகளில் காற்றாலை மின்சாரம் மற்றும் தொடருந்து போக்குவரத்து துறைகளில் இந்தியா நிதியுதவிகளையும் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://tamilwin.com/article/kankesanturai-port-expanding-by-65-m-indian-fund-1725723887

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அடுத்த ஆக்கிரமிப்பு....பொருளாதார,ஆத்மீக ஆக்கிரமிப்பு
அன்று பிரித்தானியா நாடுகளை கைப்பற்றி பாலம் ,துறைமுகம்,ரயில்பாதை,மதம் பரப்பினர்
இன்று இந்தியா ,சீனா  போன்ற நாடுகள் அதை செய்கின்றனர் ..அபிவிருத்தி என்ற போர்வையில்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இந்தியாவின் நிதியுதவிகள் 

என்னதான் கிந்தியா முக்கினாலும் எல்லாம் ரூ லேட்.
சிறிலங்காவில்  சீனாவின் பலமான அடித்தளம் எப்போதே உருவாகி விட்டது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

என்னதான் கிந்தியா முக்கினாலும் எல்லாம் ரூ லேட்.
சிறிலங்காவில்  சீனாவின் பலமான அடித்தளம் எப்போதே உருவாகி விட்டது.

இந்தியா அடி தடியில் இறங்கினால் சில சமயம் இலக்கை அடையலாம் ஆனால் அந்த துணிவு இந்தியாவுக்கு இல்லை...கச்சை தீவையே பிடிக்க ஏலாத இந்தியா .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

இந்தியா அடி தடியில் இறங்கினால் சில சமயம் இலக்கை அடையலாம் ஆனால் அந்த துணிவு இந்தியாவுக்கு இல்லை...கச்சை தீவையே பிடிக்க ஏலாத இந்தியா .....

இந்திரா காந்தியின் தோழி சிறிமா பண்டாரநாயக்க கூட சீன ஆதரவாளர் தான்.
எனவே  காந்தி தேச வெருட்டல்கள் சிறிலங்காவில் எடுபடாது.

சிங்களவர்கள் ஹிந்தி பாட்டு கேட்பதுடன் தமது இந்திய உறவை நிறுத்தி விடுவார்கள்.🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிற்கு கடந்த 2500 வருடங்களாகக் கடுக்காய் கொடுத்த சிங்களத்திற்கு இன்னும் ஒரு 25 வருடங்கள் கடுக்காய் கொடுக்க முடியாதா என்ன? 

😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

இந்தியாவிற்கு கடந்த 2500 வருடங்களாகக் கடுக்காய் கொடுத்த சிங்களத்திற்கு இன்னும் ஒரு 25 வருடங்கள் கடுக்காய் கொடுக்க முடியாதா என்ன? 

😁

2500 வருடங்கள் ஏற்றுகொள்ளமுடியாது.... கட‌ந்த 75 வருடங்களாக கடுக்காய் கொடுக்கினம் என சொல்லுங்கோ...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

2500 வருடங்கள் ஏற்றுகொள்ளமுடியாது.... கட‌ந்த 75 வருடங்களாக கடுக்காய் கொடுக்கினம் என சொல்லுங்கோ...
 

சுண்டைக்காய் சிங்களம்  தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது.

அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி.

மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை.

இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்).  ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல.

இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு. 

ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது. 

(வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

சுண்டைக்காய் சிங்களம்  தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா? 

சிங்களத்தின் தனித்துவம் என்ன?

பெரிய பிரித்தானியா இலங்கையை கை விட்ட பின் இனக்கலவரம் மூலம் ஈழத்தமிழர்களை அழித்ததுதான் சிங்களத்தின் தனித்துவமா?

இதை விட சிங்களம் 70 வருடங்களுக்கு மேலாக தனித்து நின்று சாதித்தது என்ன?

இன்று சீனா தானே சகலதையும் கட்டியெழுப்புகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2024 at 00:14, Kapithan said:

சுண்டைக்காய் சிங்களம்  தனது தனித்துவத்தை இந்தியப் பாதிப்பின்றி இன்றளவும் தொடர்வது 1000 ஆண்டுகளுக்கும் மேலல்லவா? 

அப்படி பார்க்கப்போனால் இந்தியாவின் பெளத்தம் ஆக்கிரமித்துள்ளது...மேலும் சோழர்கள் படையெடுப்புக்கள் ....சிங்கள்ம் 70 ஆண்டுகள் தாக்குபிடிக்குது என்பது தான் உண்மை அதுவும் தற்போதைய உலக ஒழுங்கின் சீமான்கள் தங்கள் நல்னுக்காக உருவாக்கிய நாட்டை பாதுகாக்கின்றனர்
  
 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நுணா அண்ணாவினதும் குடும்பத்தினரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கிறோம்.. அன்னாரின் ஆன்னா சாந்தி அடையட்டும்..
    • எல்லோருக்கும் நன்றிகள்  
    • "பிரியமான தோழிக்கு [நண்பிக்கு]"     இலங்கையின் தலைநகரமான கொழும்பு நகரத்தில், வெள்ளவத்தை என்ற குட்டி யாழ்ப்பாணத்தில், இனியா மற்றும் ஓவியா என்ற இரண்டு நெருங்கிய நண்பிகள் வாழ்ந்தனர். அவர்கள் குழந்தை பருவத்திலிருந்தே பிரிக்க முடியாதவர்களாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்தனர், சிறு குழந்தை பருவத்தில் ஒன்றாக விளையாடியும், பின் ஆரம்ப பாடசாலையிலும் உயர் பாடசாலையிலும் ஒன்றாக கற்றனர். அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள ஒவ்வொரு ரகசியத்தையும், கனவுகளையும், சாகசங்களையும் ஒன்றாக ஒளிவு மறைவு இன்றி பகிர்ந்து கொண்டனர். அவர்களின் பிணைப்பு பிரிக்க முடியாதது, அவர்கள் வெள்ளவத்தையின் இரட்டையர் என்று கூறும் அளவுக்கு அங்கு பிரபலமாக இருந்தனர்.   பறவைக்கு கூடு, மாட்டுக்குத் தொழுவம், சிலந்திக்கு வலை, மனிதனுக்கு நட்பு. அது இதயங்கள் இரண்டும் கலந்த ஆழமான உறவு! இயற்கைக் காற்று எந்த தடையும் இன்று சுவாசிக்கலாம். தாய் பிள்ளை, கணவன் மனைவி என்ற உறவுகளுக்கு ஈடாக கருதப்படும் மற்றும் ஒரு உறவு தான் நட்பு அல்லது நண்பர்கள். அதற்கு இந்த இனியாவும் ஓவியாவும் நல்லதொரு சான்றாகும். "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு" என்கிறார் வள்ளுவர். சங்ககாலம் முதல் இன்று வரை நம்மை உயிர்ப்போடு வைத்திருக்கும் ஒரு உன்னத உறவே நண்பர்கள் ஆகும். நல்ல நண்பர்கள் வாய்ப்பது ஒருவரின் வாழ்நாளில் பெரிய பாக்கியம் ஆகும். அந்த பாக்கியம் கொண்டவர்கள் தான் இந்த இனியா ஓவியா என்றால் மிகையாகாது!   இனியா ஒரு கலகலப்பான மற்றும் உற்சாகமான பெண்ணாக, மற்றவர்களையும் சிரிக்க வைக்கும் புன்னகையையும் கொண்டு இருந்தார், அதே நேரத்தில் ஓவியா கனிவான இதயத்துடன் அமைதியான இருப்பைக் கொண்டிருந்தார். அவர்கள் எப்போதும் துன்பத்திலும் இன்பத்திலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தனர், தங்கள் தங்கள் முயற்சிகளில், படிப்புகளில் ஒருவரையொருவர் ஆதரித்ததுடன் தேவைப்படும் போதெல்லாம் ஒருவருக்கு ஒருவர் உதவியும் செய்தனர்.   “கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாகும் நட்பாரும் இல்” (நாலடியார் 215)   கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும்” என்று நட்பின் பெருமையின் படி இனியா ஓவியா வெள்ளவத்தையை கலக்கிய இரு அழகிய மலர்கள் என்று கூட கூறலாம். இந்த அவர்களின் நட்பு, இனம், மதம், சமயம், மொழி, நாடு என்ற எல்லாத் தடைகளையும் தாண்டி உள்ளப்புணர்ச்சி கொண்டு பழகும் உறவாகும்.   ஒரு வெயில் நாளில், அவர்கள் தங்களுக்குப் பிடித்த வெள்ளவத்தை கடற்கரை ஓரத்தில் இருந்த ஒரு பெரிய மரத்தின் நிழலின் கீழ் அமர்ந்திருந்தபோது, ஓவியாவின் கண்களில் ஒரு மின்னல் ஏற்பட்டது போல, இனியா சடுதியாக எதோ ஒன்றை தன் கைப்பையில் இருந்து எடுத்து திரும்பினார். அழகாகச் சுற்றப்பட்ட அந்த பொட்டலத்தை தன் இரு கைகளாலும் பிடித்து "அன்புள்ள பிரியமான தோழிக்கு, ஓவியாவுக்கு," என்று ஒரு ஒளிரும் புன்னகையுடன், ஓவியாவிடம் கொடுத்தாள்.   கவனமாகப் பொட்டலத்தைப் பிரித்த ஓவியாவின் கண்களில் ஆர்வம் மிளிர்ந்தது. ஆனால் உள்ளே, அவள் ஒரு குறிப்பு புத்தகத்தை மட்டுமே கண்டாள், அதன் பக்கங்கள் காலியாகவும், ஒன்றும் எழுதாமலும் இருந்தன. அது அவளை ஆச்சிரியத்திலும் அதே நேரம் வெறும் தாள்களைக் கொண்ட பரிசைக் கண்டு ஓவியாவின் மனம் வெதும்பியது.   இனியா ஓவியா வெதும்பியது கண்டதும், தன் பரிசுவின் நோக்கம் என்ன என்று உடனடியாக விளக்கினார், "இந்தப் குறிப்பு புத்தகம் சாதாரணப் தாள்கள் அல்ல, என் பிரியமான தோழியே. இது நமது கனவுகள், அபிலாஷைகள் மற்றும் சாகசங்களைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு புத்தகம். நமது ஆழ்ந்த எண்ணங்கள் மற்றும் நேசத்துக்குரிய நினைவுகளைப் படம்பிடித்து ஒருவருக்கொருவர் எழுதுவோம். அது எங்கள் நட்பின் பொக்கிஷம் என்றும் இருக்கும்" என்று கூறி முடித்தாள்.   "இந்த நட்பை நாங்கள் முறிக்க மாட்டோம் என் வலிமையே உடைந்தாலும் உன் நட்பை உடையவிட மாட்டேன் என்னுடைய வெற்றி உன்னுடைய வெற்றி உன் தோல்வி என்னுடைய தோல்வி கேள் இதை என் நண்பனே உன் துக்கம் என் துக்கம் என் உயிர் உன் உயிர் (போன்றது) அப்படிப்பட்டது நம்முடைய நட்பு உயிருடன்கூட விளையாடுவேன் உனக்காக எதிர்கொள்வேன் உலகத்தின் அனைத்து எதிர்ப்பையும் மற்றவர்களுக்கு நாம் இருவராகத் தோன்றலாம் ஆனால் நாம் இருவர் அல்ல நமக்குள் பிரிவோ சினமோ இல்லை" [படம் தளபதி. பாடல் வரிகள் வாலி.]   அதை கேட்டு மகிழ்ச்சியில் மூழ்கிய ஓவியா, இனியாவை இறுகத் தழுவினாள். அவர்கள் இருவரும் தம் நேரத்தை வீணடிக்கவில்லை, உடனடியாக குறிப்பு புத்தகத்தின் வெற்று பக்கங்களில் தங்கள் இதயங்களை பிழிந்து எடுத்து ஊற்றத் தொடங்கினர். உலகத்தை ஆராய்வது, நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவது மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையில் தேவையான மாற்றத்தை ஏற்படுத்துவது போன்ற அவர்களின் கனவுகளைப் பற்றி அவர்கள் இருவரும் மாறி மாறி எழுதினார்கள்.   காலப்போக்கில், இருவரும் தம் தம் பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் செய்து, ஓவியா தன் கணவருடன் லண்டன் நிரந்தரமாக போய்விட்டார். ஆனால் இனியா வெள்ளவத்தையிலேயே தங்கி, அங்கேயே வேறு ஒரு வீட்டில் தன் கணவருடன் தனிக்குடித்தனம் போய்விட்டார். என்றாலும் ஓவியா லண்டனுக்கு போகமுன்பு, முன்னையது போலவே, ஒரு குறிப்பு புத்தகம் வாங்கி, இனியாவுக்கு கொடுத்து விட்டுத்தான் போனார். அதில் இனியா தொடரவேண்டும் என்ற வேண்டுகோளுடன்.   இப்ப ஓவியா லண்டனில் இருந்தாலும் , அந்த குறிப்பு புத்தகம் அவளின் நிலையான இன்னும் ஒரு துணையாக மாறியது. இனியாவும் ஓவியாவும் தம் தம் குறிப்பு புத்தகங்களில் வெற்றிகள், சவால்கள் மற்றும் இடையில் அனுபவித்த, கண்ட அனைத்தையும் சிரிப்பு மற்றும் கண்ணீரின் மூலம் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் உடல் ரீதியாக இப்ப பிரிந்திருந்தாலும் அவர்களை இணைக்கும் எழுத்து வார்த்தைகளில் ஆறுதல் கண்டனர்.   ஆண்டுகள் பறந்தன, இரண்டு நண்பர்களும் வயதாகினர். அவர்களின் கனவுகள் மற்றும் பொறுப்புகளைத் தொடர வாழ்க்கை அவர்களை தனி பாதையில் அழைத்துச் சென்றது. ஆயினும்கூட, அவர்கள் உருவாக்கிய பிணைப்பு பிரிக்க முடியாததாக இருந்தது, நேசத்துக்குரிய குறிப்பு புத்தக தாள்களால் அது தொடர்ந்து தொகுக்கப் பட்டுக் கொண்டே இருந்தது.   ஒரு நாள், ஓவியா பழைய சாமான்களுக்கு மத்தியில் மறைத்து வைத்திருந்த குறிப்பு புத்தகத்தின் தாள்களில் தடுமாறினாள். அவளுக்கு நினைவுகள் வெள்ளமாகத் திரும்பியது, அவள் இனியாவை எவ்வளவு தவறவிட்டாள் என்பதை உணர்ந்தாள். தன் அன்பான தோழியுடன் மீண்டும் ஒரு முறையாவது இணைய வேண்டும் என்று முடிவு செய்தாள்.   நடுங்கும் கைகளுடன் ஓவியா, இனியாவுக்கு ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை வரைந்தார். அவளுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பழக்கமான அந்த தாள்களில் கொட்டினாள். தனது வெற்றிகள் மற்றும் சவால்கள், தான் சந்தித்த மனிதர்கள் மற்றும் அவள் கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் பற்றிய கதைகளைப் பக்கம் பக்கமாக வடித்தாள். அதை பிரதியெடுத்து "பிரியமான தோழிக்கு" என்ற தலைப்புடன் இ மெயில் இல் அணுப்பினாள்.   நாட்கள் வாரங்களாக மாறியது, ஓவியா பதிலுக்காக ஆவலுடன் காத்திருந்தாள். பின்னர், ஒரு அழகிய மாலை பொழுது , மின்னஞ்சலில் இனியா விடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தன் அருமை தோழி எழுதிய வார்த்தைகளை படித்த சாராவின் கண்களில் கண்ணீர் பெருகியது. இனியா புற்றுநோய் ஒன்றினால் பீடிக்கப்பட்டு, எந்தநேரமும் தன் உலக வாழ்வை முடிக்கும் நிலையில் இருப்பதாய் அறிந்தாள்.   ஏக்கத்தால் துக்கத்தால் நிரப்பப்பட்ட ஓவியா மூன்று மாத லீவில், இனியாவுடன் மீண்டும் இணைய முடிவு செய்தாள். அவர்கள் இருவரும் அந்த பழைய வெள்ளவத்தையின் பெரிய மரத்தின் கீழ் அவர்களுக்கு பிடித்த இடத்தில் தொடர்ந்து சந்தித்தனர், அவர்கள் தாம் தாம் பகிர்ந்துகொண்ட , தம் பயணக் குறிப்புகளை ஆளுக்கு ஆள் நினைவுகூர்ந்தபோது அவர்களின் சிரிப்பு காற்றில் எதிரொலித்தது. கடலின் அலைகளின் ஓசையையும் அது வென்றது.   அந்த நாளிலிருந்து, இனியாவும் ஓவியாவும் தங்கள் நட்பை ஒரு முன்னுரிமையாக மாற்ற சபதம் செய்தனர், தூரம் அல்லது கடந்து செல்லும் ஆண்டுகள் எதுவாக இருந்தாலும் சரி. அவர்களின் அன்பு, நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத நட்பின் அடையாளமாக இந்த குறிப்பு புத்தகம் என்றும் இருக்க வேண்டும் என்று இருவரும் நினைத்தனர்.   ஆனால், ஓவியா லண்டன் திரும்பி, ஒரு சில கிழமையில் "பிரியமான தோழிக்கு" என்ற குறிப்புடன் இனியாவின் குறிப்பு புத்தகம் தபால் மூலம் அவளுக்கு வந்தது. அதனுடன் இருந்த செய்தி அவளை அப்படியே அதிர செய்து விட்டது. இன்னும் சில ஆண்டுகள் ஆவது இனியா இருப்பாள் என்று நினைத்தவளுக்கு இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஓ .. அப்படியே கதறிவிட்டாள்.   பிரியமான, அன்பான தோழி, இந்த மண்ணை விட்டு போனாலும் அவர்களின் கதை மட்டும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • கவி அருணாசலம், நீங்கள்.. சுமந்திரனுக்கு வெள்ளை அடிப்பது எமக்கும் தெரிகின்றது. அது உங்களது தனிப்பட்ட விடயம். அதைப்பற்றி நானும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால்... தமிழரசுகட்சியின் முன்னணி அரசியல்வாதி எனப்படுபவர், தனது முதல் பத்திரிகையை சிங்களவராகிய சஜித்துக்கு கொடுத்து அறிமுகம் செய்தது பற்றியதுதான் இங்கு பேசு பொருள். முதல் பத்திரிகையை, முதலில் கொடுக்க ஒரு தமிழறிஞர் கூட கிடைக்கவில்லையா...? என்பதுதான் எமது ஆதங்கம். புரிந்தால் சரி.
    • நல்ல வரிகள். இதை வாசித்ததன் பின்னர் பாவை விளக்கு திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காவியமா இல்லை ஓவியமா..’ பாடலை ஒருதரம் கேட்டுப் பார்த்தேன் என்னாளும் அழியாத நிலையிலே காதல் ஒன்றையே தான் நாடும் இந்த உலகிலே கண்முன்னே தோன்றும் அந்த கனவிலே உள்ளம் கலந்திடுதே ஆனந்த உணர்விலே கனியில் ஊறிடும் சுவையை மீறிடும் இனிமை தருவதுண்மை காதலே காலம் மாறினும் தேகம் அழியினும் கதையில் கவிதையில் கலந்தே வாழுவோம்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.