Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அவனுக்கு வயது 44. ஜனவரி 26 மாலை 6:15 மணியளவில் Ulm நகரத்தில் Muensterplatz இல் உள்ள ஸ்டார்பக்ஸ் கோப்பிக் (Starbucks Coffee) கடைக்குள் நுளைந்த போது அவனிடம் துப்பாக்கி ( HK416) ஒன்றும், கைத்துப்பாக்கி ஒன்றும் இரண்டு கத்திகளும் இருந்தன

கோப்பியை ருசித்தவனுக்கு இப்பொழுது சிகரெட் தேவைப்பட்டது. கோப்பிக் கடைக்குள் புகைக்க அனுமதி இல்லை. கடைக்கு வெளியே போனால்தான் சிகரெட் பிடிக்க முடியும். எழுந்து கொண்டான். தனது மேசைக்குப் பக்கத்தில் இருந்த ஒரு தம்பதியிடம், “நான் புகைக்க விரும்புகிறேன். எனது பையைப் பார்த்துக் கொள்ளுங்கள்என்று  கனிவுடன் கேட்டுக் கொண்டான்.

வாயில் இருந்து புகை தானாகவே வரும் அளவுக்கு வெளியே குளிர் இருந்தது. சிகரெட் புகையையும் அதனுடன் கலந்து விட்டான். கோப்பியில் கிடைத்த கொபைன் தந்த உற்சாகம், புகைபிடித்ததால் கிடைத்த  நிக்கோட்டின் தந்த இன்பம் இரண்டும் கலந்த நிலையில் கடைக்குள் திரும்பி வந்தான். தனது பையைப் பாதுகாத்த தம்பதிகளுக்கு நன்றி சொன்னான். கூடவே ஒரு காகிதத் துண்டை அவர்களிடம் கொடுத்தான்

“வெளியே போய் விடுங்கள். பொலிஸைக் கூப்பிடுங்கள். மிக்க நன்றி”  காகிதத்தில்  இருந்த வாசகத்தைப் பார்த்ததும், தம்பதிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. “நாங்கள் எதற்காகப் போக வேண்டும்?” அவர்கள் தங்கள் ஆட்சேபணையை வெளிப்படுத்தினார்கள். அவன் தன்னிடம் இருந்த 185 யூரோக்களை எடுத்து அவர்களிடம் நீட்டினான்.  “பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். காகிதத்தில் எழுதி இருப்பதைச் செய்யுங்கள்என்றான். மீண்டும் தம்பதிகள் அவன் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.

“நாங்கள், எங்கள் பணத்தில் ஆறுதலாக இருந்து கோப்பி குடிக்கவே இங்கே வந்திருக்கிறோம். இவன் யார் எங்கள் இனிய மாலைப் பொழுதைக் கலைக்க?” தம்பதிகளின் பார்வைகளிலேயே அவர்கள் நினைப்பதை அவன் விளங்கிக் கொண்டான். பதட்டமே இல்லாமல் தனது ஜாக்கெட்டைத் திறந்து துப்பாக்கியைக் காண்பித்தான். இப்பொழுது தம்பதிகள் நிலைமையைப் புரிந்து கொண்டார்கள். இருக்கையில் இருந்து எழுந்து வேகமாகக் கோப்பிக் கடையை விட்டு வெளியேறினார்கள். இப்படித்தான் 26.01.2024 அன்று பணயக் கைதிகள் விவகாரம் Ulm நகரத்தில் ஆரம்பமானது.

 நீதிபதிக்கு முன்னால் நின்ற சிறிய உருவம் கொண்ட அவனுக்கு இடது முன்கையில் பச்சை குத்தி இருந்தது. முகத்தின்  வலது பக்கத்தில், கீழ்த் தாடையில் ஒரு பகுதி இல்லை. வாய் திறந்திருந்தது. வாயில் இருந்து வழியும் உமிழ்நீரை அடிக்கடி துடைத்துக் கொள்ள அவன் கையில் ஒரு துணி இருந்தது.

“நான் இறந்து மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்க வேண்டியவன். ஆனால் உங்கள் முன்னால் நிற்கிறேன்

நீதிபதியைப் பார்த்து அவன் சொன்னான்.அவனது தாடையில் ஏற்பட்டிருந்த காயங்களால் அவனது உரையாடலைப் புரிந்து கொள்வது நீதிபதிக்குச் சற்றுச் சிரமமாக இருந்தது.

“நான் Iserlohn என்ற நகரத்தில் பிறந்தேன். எலக்ட்ரிக்கல் மெக்கானிக் படிப்பை முடித்து ஒரு வருடம் வேலை செய்தேன். பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்டேன். எனது 12 வருட இராணுவச் சேவையில், இரண்டு தடவைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் பணிபுரிந்திருக்கிறேன்.

ஆப்கானிஸ்தானில் இருந்த சூழ்நிலைகள் எனக்கு மிகுந்த அழுத்தங்களைத் தந்தன. இடைவிடாத ரொக்கெட் தாக்குதல்கள், என் கண்களுக்கு முன்னால் தலையில் சுடப்பட்ட ஒரு ஆப்கானிஸ்தானியரின் மரணம், காயமடைந்தவர்கள், இறந்தவர்கள்...  என்று எல்லாவற்றையும் பார்க்கும் போது, இரவில் தூக்கம் இல்லாது போனது. மனதில் எப்போதும் ஏதோ ஒன்று அழுத்துவது போன்றிருந்தது. உண்ண முடியவில்லை. உறங்க முடியவில்லைஒவ்வொரு நாளையும் எங்கிருந்து தொடங்குவது என்ன செய்வது என்று  எதுவுமே எனக்குத் தெரியாதிருந்தது.

2021இல் ஆப்கானிஸ்தானில் இருந்து எங்கள் படைகள் முற்றாக வெளியேறிய போது நானும் இங்கே வந்து விட்டேன். எங்கேயாவது பலமான சத்தங்கள் கேட்டால் எனது உடல் நடுங்க ஆரம்பிக்கும். ஆப்பானிஸ்தானில் இருந்து இங்கே வந்து அகதிகளாகத் தஞ்சம் அடைந்தவர்களைக் காணும் போதெல்லாம் இனம் புரியாத பயம் என்னை ஆட்கொள்ளும். எனது மனநிலைக் குழப்பத்துக்காக இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது. அந்தச் சிகிச்சை எனது நிலைக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றும் தகுதியையும் நான் இழந்தேன். இராணுவத் துறையால் எனக்குத் தரப்படும் சிறு உதவித் தொகையும் எனது வாழ்க்கைக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இவைகளிலிருந்து எனது கவனத்தை வேறெங்காவது திசை திருப்ப எண்ணிய போது, சூதாட்டமும், போதை மருந்துகளும், மதுவும் இலகுவாக என்னைப் பற்றிக் கொண்டன.

எனது மனைவி 2020இல் கர்ப்பமான பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மது, போதை, சூதாட்டம் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு, ஒரு இனிமையான வாழ்வைத் தொடங்க முடிவு செய்தேன்ஆனால் இன்று, நாளை அல்லது மறுநாள் எல்லாவற்றையும் விட்டு விடலாம் என்ற எண்ணத்துடன் நாட்கள் தள்ளிப் போனதே தவிர, எனது பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் எதுவும் ஏற்படாமல் இன்னும் இன்னும் அவற்றுக்கு நான் அடிமையாகப் போய்க் கொண்டிருந்தேன்.

மகனும் பிறந்து விட்டான். அவன் அழும் போதெல்லாம் என்னால் அமைதியாக இருக்க முடியாதிருந்தது. எனது காதுகளுக்குள் இருந்து யாரோ அலறும் சத்தமாக அவனின் அழுகை எனக்கு இருந்தது. ஏதோ ஒன்று எனது ஆழ் மனதில் இருந்து என்னைக் குழப்பிக் கொண்டேயிருந்தது. இதை எவ்வளவு காலங்களுக்குத்தான் தாக்குப் பிடிக்க முடியும் என்று எனக்குத் தெரியாதிருந்தது.

செப்ரெம்பர் 2023 என் மனைவியுடனான திருமண ஒப்பந்தமும் முடிவுக்கு வந்தது. வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். மனைவி, மகன் உறவும் போய்விட்டதுடிசம்பரில் எனது பிறந்தநாள். வாழ்த்த யாரும் வரவில்லை. கிறிஸ்மஸ் வந்தது. அதை என்னுடன் கொண்டாட எவரும் இல்லை. என்னை விட்டு எல்லோரும் போய்விட்டார்கள். என்னை ஒதுக்கி விட்டார்கள். இனி வாழ்ந்துதான் என்ன? செத்துவிடலாமா?

எனது நகரத்தில்(Iserlohn) இருந்து தெற்கு நோக்கி நெடுஞ்சாலையில் எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் காரில் பயணித்துக் கொண்டிருந்தேன்.  Ulm நகரத்துக்குத் திரும்புவதற்கான அறிவித்தல் தெரிந்தது. அந்த நகரத்துக்கு நான் இதுவரை சென்றதில்லை.  Ulm இல் இராணுவ மருத்துவமனை ஒன்று இருப்பதை முன்னரே அறிந்திருந்தேன். அங்கே எனக்கு மருத்துவ உதவி கிடைக்கலாம் என்ற எண்ணம் வந்தது. காரை Ulm நகரத்துக்கான பாதையில் திருப்பினேன். வழியில் கோப்பி குடிப்பதற்காக ஸ்டார்பக்ஸ் கோப்பிக் கடைக்கு வந்தேன். அங்கே மகிழ்ச்சியாக எல்லோரும் இருப்பதைப் பார்த்த போது, எனது மனைவியுடன் மகிழ்வாக இருந்த நாட்கள் மனதுக்குள் ஓடின. அப்பொழுதுதான் முடிவெடுத்தேன்.

இன்று இல்லாவிட்டால் இனி இல்லைஎன்ற முடிவுதான் அது”

அவன் சொல்ல வேண்டியதை அவனிடம் இருந்து உள்வாங்கி ஒரு மனநல மருத்துவர் நீதிபதிக்குச் சொல்லி முடித்தார்.

அனைத்தையும் கேட்ட நீதிபதி, ஒக்ரோபர் 10ம் திகதி வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதாகச் சொல்லி எழுந்து கொண்டார்.

 

வன் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளில் 14 வயதுச் சிறுமியும் சிறுவனும் இருந்தார்கள். அங்கிருந்த சூழ்நிலை, அவர்களைப் பயத்தின் உச்சத்துக்கு கொண்டு போயிருந்தது. இருவரும் அழ ஆரம்பித்துவிட்டார்கள். அவன் அந்தச் சிறுவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான். அவர்கள் இரண்டுபேரையும் முதலில் வெளியே போக அனுமதித்தான்சிறுவர்கள் இருவரும் வெளியே போவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பி தான் பிடித்து வைத்திருந்த மற்றவர்களைப் பார்த்தான். அவர்களும் பயத்தில் இருந்தார்கள்என்ன நினைத்தானோ, கடையின் சொந்தக்காரியைத் தவிர மற்ற எல்லோரையும் வெளியே போக  அனுமதித்தான். ஆக அவன் பிடித்து வைத்திருந்த 12 பணயக் கைதிகளும் ஆபத்தின்றி வெளியேறி விட்டார்கள்.

கடைக்கு வெளியே சிறப்புப் பயிற்சி பெற்ற பொலிஸார் ஆயுதங்களுடன் நின்றிருந்தனர். உள்ளே கடை உரிமையாளருடன் இவன் நின்றான். பணயக் கைதிகள் விவகாரம் எதற்காக என்பது யாருக்கும் தெரியவில்லை. அவன் அறிவிக்கவுமில்லை

“இப்பொழுது நாங்கள் வாசல் கதவைத் திறந்து கொண்டு வெளியே போகப் போகிறோம். உன் கழுத்தில் என் துப்பாக்கி இருக்கும். வெளியில் இருந்து பொலிஸார் சுட்டால் நீ உன்னைக் காப்பாற்றிக் கொள்ள இவற்றைச் செய்துகொள்என்று சில வழிமுறைகளைக்  கடை உரிமையாளருக்குச் சொல்லிக் கொடுத்தான். அவளுக்கு அங்கே என்ன நடக்கிறது என்பதில் குழப்பமாக இருந்தது. இவன் ஏன் இப்படி நடந்து கொள்கிறான்? இவனுக்கு என்னதான் தேவைப்படுகிறதுஎன்ற கேள்விகள் மனதுக்குள் எழுந்தாலும், அதையும் தாண்டி கழுத்தில் அவனது கைத்துப்பாக்கி அழுத்தி நின்ற பயம் மேலோங்கி நின்றது.

கடையின் வாசலில் உரிமையாளரின் கழுத்தில் கைத்துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு அவன் நின்றான். பத்து மீற்றர் தூரத்தில் சுவருக்குப் பின்னால் நின்ற ஒரு பொலிஸின் இலக்கில் தான் நிற்பதை அவன் அறிந்தே வைத்திருந்தான். இரண்டு துப்பாக்கிச் சூடுகள். ஒன்று அவனது கையிலும் மற்றையது அவனது தாடையிலும் பாய்ந்தன. நிலத்தில் இரத்தத்தில் தோய்ந்திருந்தான்

இராணுவத்தில் அவன் பங்காற்றிய சண்டைகள், அதனால் வந்த விளைவுகள் எல்லாமே அவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்தன. அதற்கான தண்டனையாக தான் துப்பாக்கிக் குண்டுகளால் இறக்க வேண்டும் என்று நினைத்தவனைக் காப்பாற்ற, அவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அவனது துப்பாக்கிகளை ஆரய்ந்த சிறப்பு பொலீஸ் அதிகாரி, “இது என்ன? அவனது கைத்துப்பாக்கி விளையாட்டுத் துப்பாக்கியாக இருக்கிறதேஎன்று சொல்லிக் கொண்டார்.

ஒக்ரோபர் 10ம் திகதி, நீதிபதி என்ன தீர்ப்பைச் சொல்லிவிடப் போகிறார்?

 

அவனைப் பார்கக விரும்பினால்

https://www.swp.de/lokales/ulm/geiselnahme-im-ulmer-starbucks-22-jaehrige-geisel-ich-habe-die-augen-geschlossen-und-gebetet-77514017.html

 


 


  • Like 5
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
57 minutes ago, Kavi arunasalam said:

 

இராணுவத்தில் அவன் பங்காற்றிய சண்டைகள், அதனால் வந்த விளைவுகள் எல்லாமே அவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்தன. அதற்கான தண்டனையாக தான் துப்பாக்கிக் குண்டுகளால் இறக்க வேண்டும் என்று நினைத்தவனைக் காப்பாற்ற, அவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள்.

இந்த மனநிலை  இலங்கை இராணுவத்துக்கு வரவில்லையா  ?? 

நல்ல கதை  இப்படியானவர்களை   இராணுவத்தில் சேர்க்க கூடாது    கவலையளிக்கிறது   அவனில்  பிழை இருப்பதாக தெரியவில்லை    

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவனால் பிடித்து வைக்கப் பட்டிருந்தவர்களில் எத்தனை பேர் பிரமை பிடித்து அலைகின்றார்களோ தெரியாது . .........குறிப்பாக அந்த இரண்டு சிறு பிள்ளைகள் . .........!   😴

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பகிர்விற்கு நன்றி ...போராளிகளுக்கும் இப்படியான மனவேதனை வரக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படத்தை பார்க்கும் போது அவனை கொலை செய்திருக்கலாம் என தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போரில் நேரடியாக ஈடுபட்டாலோ அல்லது ஒரு கடுமையான போர்ச் சூழலில் வாழ்ந்தாலோ, உளச்சிதைவு, மன அழுத்தம், அதிகப்படியான அதிர்ச்சி என்பன ஒருவரைத் தாக்கும் சாத்தியம் மிக அதிகம் என்று சொல்வார்கள். இங்கு ஒரு பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், இவை பற்றி பலரும் பல ஊடகங்களில் உரையாடுவார்கள்.

ஆனாலும், எங்களில் இந்த வகையான தாக்கம் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகின்றது. பல கொலைகளையும், கொடுமைகளையும் அனுபவித்தும், நேரில் பார்த்த பின்னும், ஆனால் எந்த விதமான கவுன்சிலிங்/சிகிச்சை எதுவும் இல்லாமல் எப்படி எங்களால் சாதாரணமாக வாழ்க்கையை தொடர முடிகின்றது என்பது கொஞ்சம் வியப்பே. நாங்கள் வாழ்க்கையை நோக்கும் விதமே வேறு போன்று.

இப்படியான முடிவு எடுப்பவர்கள் தனியே தற்கொலை செய்து கொள்ளாமல், அந்தக் கணத்தில் ஏதுமறியாத இன்னும் சிலரையும் எதற்காகக் கொல்கின்றனர் என்றும் யோசித்ததுண்டு. நல்ல காலம், இந்தச் சம்பவத்தில் அவர் எவரையும் கொல்ல நினைக்கவில்லை, ஆனாலும் தனியே தன் கைகளால் சாகவும் விரும்பவில்லை.

போன வருடம் என்று நினைக்கின்றேன். கேரளாவில் ஒரு பேராசிரியர், அவர் ஒரு சமூகப் போராளியும் கூட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேந்தவர், தற்கொலை செய்து கொண்டார். பொதுவாக இந்தச் சமூகத்தில் இருக்கும் வெறுப்பு என்றே காரணம் எழுதியிருந்தார். அதே வாரம் இங்கு லாஸ் வேகாஸில் அதே வயதுடைய ஒரு பேராசிரியர் இங்குள்ள பல்கலையில் சில மாணவர்களை சுட்டுக் கொன்று விட்டு தானும் இறந்து போனார்.             

  • Like 2
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆனாலும், எங்களில் இந்த வகையான தாக்கம் மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகின்றது. பல கொலைகளையும், கொடுமைகளையும் அனுபவித்தும், நேரில் பார்த்த பின்னும், ஆனால் எந்த விதமான கவுன்சிலிங்/சிகிச்சை எதுவும் இல்லாமல் எப்படி எங்களால் சாதாரணமாக வாழ்க்கையை தொடர முடிகின்றது என்பது கொஞ்சம் வியப்பே. நாங்கள் வாழ்க்கையை நோக்கும் விதமே வேறு போன்று.

இங்கு கனடாவுக்கு உண்மையான  தாயக போர் சூழலில் அகப்பட்டு தப்பி வந்தவர்கள் பலருக்கு மனத்தாக்கம்  இருந்தது பின் புறச்சூழல் மாற காலம் வலியை ஆற்றியது . தூக்கத்தில் திடுக்கிட்டு விழிப்பார்கள். கத்துவார்கள்  பாதுகாப்பாய் இருக்கிறோம் எனும் எண்ணமே மனதை ஆற்றியது. பலர் மருத்துவ உதவியை நாடியது கேள்விப்பட்டு இருக்கிறேன். விமானத்தில் ஏறபயந்தவர்கள்பலர்.  . 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கடந்த மாதம் அமெரிக்காவில் ஒரு வைத்தியர் தனது மனைவியை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்திருக்கிறார்..அறைக்கு வெளியில் 8 வயதுக்கு உட்பட்ட 3 பிள்ளைகள்.நீண்ட நேரம் பெற்றோர் அறையை விட்டு வெளியே வராததால் அயலவர்களின் உதவியோடு பெற்றோர் இறந்துள்ளதை அறிந்து கொண்டாராம் முதல் பிள்ளை.அவர்களை இப்போ அயலில் உள்ள இந்திய குடும்பம் ஒன்று தான் வைத்துப் பார்ப்பதாகவும் முதல் பிள்ளை ஏன் தங்களது தந்தை இப்படி செய்தார் என்ற கேள்வியை ஒரே கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் ஒரு லிங்கில் பார்த்தேன்.அந்தக் குழந்தைகளை பொறுப்பாக பார்க்கும் குடும்பத்திற்கு 3 குழந்தைகள் இருக்கிறார்களாம்..இவர்களளோடு சேர்த்து ஆறு..தற்போதைய காலத்தில் ஆறு குழந்தைகளை வைத்து பராமரிப்பது என்பது சாத்தியபடாத ஒன்று.

Edited by யாயினி
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நல்ல ஒரு பகிர்வுக்கு நன்றி கவி…!

ஒரு மான்குட்டியை ஒரு சிங்கமோ அல்லது புலியோ பிடித்து வைத்து விளையாடுவதைக் கண்டிருக்கிறீர்களா?

கடலின் வெளியே துடித்துக் கொண்டிருக்கும் மீனை,ஒரு கொக்கு ஒன்று தூக்கித் தண்ணீரில் போடுவதைக் கண்டுள்ளீர்களா?

வலையில் பிடி படும் குஞ்சு மீன்கள் மற்றும் பாம்பு, பேத்தை போன்றவற்றைத் திரும்பவும் கடலில் விடுவதற்கான காரணம் என்ன? இந்திய மீனவர் விதி விலக்கு.

இயற்கையில் ஒரு விதி இருக்கின்றது. அது எம்மை அறியாமலே உயிர்களை இயக்குகின்றது.

அவ்வாறான ஒரு நிகழ்வே இந்த இளைஞனின் கதை.

பிரம்மஹத்தி என்று சைவம் கூறிவது இதைத் தான்.

எம்மை இயக்கும் இயற்கையின் சூத்திரங்களில் இதுவும் ஒன்றே ….! 

Edited by புங்கையூரன்
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

படத்தை பார்க்கும் போது அவனை கொலை செய்திருக்கலாம் என தோன்றுகின்றது.

இதே நினைவுதான் எனக்கும் வந்தது. விரும்பிச் சாகப் போனவனைக் காப்பாற்றி, சட்டம் தண்டனை தரப் போகிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்வதற்கு உடல் நலம் மட்டுமல்ல உள நலமும் தேவை.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, புங்கையூரன் said:

நல்ல ஒரு பகிர்வுக்கு நன்றி கவி…!

ஒரு மான்குட்டியை ஒரு சிங்கமோ அல்லது புலியோ பிடித்து வைத்து விளையாடுவதைக் கண்டிருக்கிறீர்களா?

கடலின் வெளியே துடித்துக் கொண்டிருக்கும் மீனை,ஒரு கொக்கு ஒன்று தூக்கித் தண்ணீரில் போடுவதைக் கண்டுள்ளீர்களா?

வலையில் பிடி படும் குஞ்சு மீன்கள் மற்றும் பாம்பு, பேத்தை போன்றவற்றைத் திரும்பவும் கடலில் விடுவதற்கான காரணம் என்ன? இந்திய மீனவர் விதி விலக்கு.

இயற்கையில் ஒரு விதி இருக்கின்றது. அது எம்மை அறியாமலே உயிர்களை இயக்குகின்றது.

அவ்வாறான ஒரு நிகழ்வே இந்த இளைஞனின் கதை.

பிரம்மஹத்தி என்று சைவம் கூறிவது இதைத் தான்.

எம்மை இயக்கும் இயற்கையின் சூத்திரங்களில் இதுவும் ஒன்றே ….! 

பல நேரங்களில் நாம் சாக நினைத்தாலும் சாக முடியாது.
ஏனென்றால் விதி வலியது.

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு:  அவசர செய்தி! உயிர்காக்க விரைவாகப் பகிருங்கள்   நிலமை கடும் தீவிரமாகச் செல்கிறது. எலிக்காய்ச்சல் யாழ்ப்பாணத்தில் வெகு வேகமாகப் பரவுகின்றது.   பருத்தித்துறை வைத்தியசாலை மருத்துவ நிபுணர் வெளியிட்டுள்ள செய்தியில் ,    இதுவரை பருத்தித்துறை வைத்தியசாலையில் மட்டுமே 5 பேர் உயிரிழந்துள்ளனர். பத்து நோயாளிகள் நோய் தீவிரமாகி யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.   உங்களுக்கு காய்சல் , உடம்பு வலி , மூட்டு வலி , கண் சிவப்பாதல், சிறுநீர் கழிப்பது குறைதல், கண் சிவப்பாகுதல், வயிற்று வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.   சேற்று நிலங்களில் வேலை செய்தவர்கள், விவசாயிகள், மீனவர்கள் , அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெள்ள நீரில் நடந்து திரிந்தவர்கள் பருத்தித்துறை சுகாதார பணிமனையை தொடர்புகொண்டு (MOH office) , நோய் வருவதற்கு முன்பான மாத்திரைகளை பயன்படுத்தி உங்களை உயிராபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். இவை தடுப்பூசிகள் அல்ல , அன்டிபயட்டிக் மாத்திரைகள். தடுப்பூசிக்கு பயப்படுவார்கள் கூட அச்சப்படாமல் இதைப் பயன்படுத்தலாம்.   அவசரமாக பகிருங்கள். உங்களுக்குத் தெரிந்து மேலே சொன்னதுபோல தேங்கி நிற்கும் நீர் நிலைகளோடு தொடர்பு பட்டு ஆபத்தில் உள்ளவர்களை உடனடியாக சுகாதார பணிமனைக்கு ( MOH office) யிற்கு அழைத்துப் போங்கள்.   உங்களுக்குத் தெரிந்த எல்லோருக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். நீங்களும் யாரோ ஒருவரை மரணத்தில் இருந்து காப்பாற்றலாம். இதை புறக்கணிக்காமல் பகிருங்கள்.   தகவல் மூலம் : செல்லத்துரை பிரசாந், பொது மருத்துவ நிபுணர் பருத்தி துறை ஆதார வைத்தியசாலை . பிரதி - சி.சிவச்சந்திரன் https://www.facebook.com/share/p/18UmzZibeV/
    • நெளிவு சுளிவு தெரிந்தவர்களிடம் கழுத்தைக் குடுக்க வேண்டும் ...... கண்டபடி யாரிடமும் குடுக்கக் கூடாது . ........ அதுக்கென்றே பிறந்த சிலர் இருக்கின்றார்கள் .....அவர்களை நாடவேண்டும் . ......!    
    • நேரம் கிடைத்தால்…. இஸ்லாமியர்களின்    தலைமயிர் வெட்டும் காணொளிகளை பாருங்கள். படு பயங்கரமாக தலையில் அடிப்பார்கள், திடீரென்று கழுத்தை  எதிர்பாராத கோணத்தில் திருப்புவார்கள், நெருப்பு கொழுத்துவது என்று ஒரே… பயங்கரமாக இருக்கும். “யூ ரியூப்பில்” பார்வையாளர்களை கவர்வதற்காக செய்கிறார்கள் போலுள்ளது. ஆனாலும்…. தலையை கொடுத்தவன், உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டும்.  
    • இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.  வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.