Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆக… யாழ்ப்பாணம், நல்லூர் தொகுதிகளில் கூட… 
தமிழரசு கட்சியின் சுமந்திரன் பிரிவினர் ஆதரவு கொடுத்த சஜித்தால் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை.

  • Replies 283
  • Views 40.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    👍.......... என்னுடைய batchmate அநுர ஜனாதிபதியாக வந்தது மிகச் சந்தோசம்.......... இலங்கைப் பக்கம் போகும் போது இந்த தொடர்பு கை கொடுக்கும் என்று ஒரு நம்பிக்கை............🤣. ஆனாலும் அங்கு படிக்கு

  • இது புலம்பெயர்ஸ்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தி.  புலம்பெயர்ஸ்  இனியாவது நிலத்தில் உள்ள மக்களின் மனநிலையறிந்து தேவையறிந்து செயற்பட வேண்டும்.  தற்போதும் காலம் கடந்துவிடவில்லை. 

  • ரசோதரன்
    ரசோதரன்

    தாங்களும் ஒரு பிரதேச வல்லரசு, அப்படியே சந்தர்ப்பம் கிடைத்தால் உலக வல்லரசு ஆகி விடுவோம் என்ற ஒரு ஆசை தான்..................🤣. சுற்றிவர இருக்கும் நாடுகளில் பூட்டானைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் வேறு

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் , நல்லூர் தொகுதிகளில் அரியநேந்திரம் என்ற தமிழ் பொது வேட்பாளர்  முறையே 27 , 32 வீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறார்.  மிகுதி. 70 வீதத்தை சிங்கள வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள்.  சங்கே  முழங்கு என்று  உசுபேற்றியவர்களுக்கு மக்கள் சங்கூதி உள்ளார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை…. தமிழரசு கட்சி  செய்த அரசியலை,
சிங்கள கட்சிகள் எடுக்கும் என்று… முன்பே எதிர்வு கூறப்பட்டதுதான்.
அது புதிய விடயம் அல்ல. 

இப்போ…. நிரூபணம் ஆகி உள்ளது. 
வரும் பாராளுமன்றத் தேர்தலில்… தமிழரசு கட்சி இதை விட பலத்த அடி வாங்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
All Island Results - Cumulative
candidate-image

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 
531,343 Votes

52.67%

candidate-image

SAJITH PREMADASA

SJB

party-icon
 
219,835 Votes

21.79%

candidate-image

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 
191,618 Votes

18.99%

candidate-image

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 
24,768 Votes

2.46%

others.png

Others

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, island said:

யாழ்ப்பாணம் , நல்லூர் தொகுதிகளில் அரியநேந்திரம் என்ற தமிழ் பொது வேட்பாளர்  முறையே 27 , 32 வீதத்தை மட்டுமே பெற்றிருக்கிறார்.  மிகுதி. 70 வீதத்தை சிங்கள வேட்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள்.  சங்கே  முழங்கு என்று  உசுபேற்றியவர்களுக்கு மக்கள் சங்கூதி உள்ளார்கள். 😂

பாவம் அரியம் யாழ்பாணத் தொகுதியில் மூன்றாம் இடம்!😂

  • கருத்துக்கள உறவுகள்

இது வரைக்கும் வந்த முடிவுகளின் படி : 

All Island Results - Cumulative
candidate-image

ANURA KUMARA DISSANAYAKE

NPP

party-icon
 
531,343 Votes

52.67%

candidate-image

SAJITH PREMADASA

SJB

party-icon
 
219,835 Votes

21.79%

candidate-image

RANIL WICKREMESINGHE

IND16

party-icon
 
191,618 Votes

18.99%

candidate-image

NAMAL RAJAPAKSA

SLPP

party-icon

18,655 Votes

1.85%

ARIYANETHIRAN PAKKIYASELVAM

IND9

party-icon
 
24,767 Votes

2.45%

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மாவட்டத்தில் தபால் வாக்குகளில் அரியம் நான்காவது  இடத்தில் உள்ளார்.  சஜித் முதலாவது இடத்தில். 

  • கருத்துக்கள உறவுகள்

பெலியட்ட தேர்தல் தொகுதியில் ரணிலுக்கும், நாமலுக்கும் கடும் போட்டி நடந்துள்ளது. ரணிலுக்கு 5460 வாக்குகள், நாமலுக்கு 5385 வாக்குகள்..........

அநுரவும் (34321), சஜித்தும் (16820) நல்லா முன்னால் எப்பவோ ஓடிவிட்டார்கள்........... 

ரணில் தான் இந்த நாட்டைக் காப்பாற்றின டாக்குத்தர் என்று ஆஸ்பத்திரி - நோயாளி உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தனர் ரணிலின் ஆதரவாளர்கள். இப்ப உடனடியாக ரணிலுக்கு நல்ல ஒரு டாக்குத்தரை தேட வேண்டிய நிலை வந்திட்டுதே..........

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாவட்டத்தில் 34 ஆயிரம் வாக்காளர்களா இருக்கின்றனர்🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

யாழ் மாவட்டத்தில் 34 ஆயிரம் வாக்காளர்களா இருக்கின்றனர்🤔

புத்தன்… இது தபால் மூலம் வாக்களிக்கப் பட்ட அரச ஊழியர்களின் வாக்குகள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

யாழ் மாவட்டத்தில் 34 ஆயிரம் வாக்காளர்களா இருக்கின்றனர்🤔

2 minutes ago, தமிழ் சிறி said:

புத்தன்… இது தபால் மூலம் வாக்களிக்கப் பட்ட அரச ஊழியர்களின் வாக்குகள்.

யாழ் மாவட்டத்தில் இதுவரை மூன்று முடிவுகள் வந்துள்ளன:

  1. தபால் வாக்குகள் - செல்லுபடியானவை 24061
  2. நல்லூர் தேர்தல் தொகுதி - 31526
  3. யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி - 24786
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

ரணில் தான் இந்த நாட்டைக் காப்பாற்றின டாக்குத்தர் என்று ஆஸ்பத்திரி - நோயாளி உதாரணம் சொல்லிக் கொண்டிருந்தனர் ரணிலின் ஆதரவாளர்கள். இப்ப உடனடியாக ரணிலுக்கு நல்ல ஒரு டாக்குத்தரை தேட வேண்டிய நிலை வந்திட்டுதே..........

ஆட்சியில் இருப்பவரை சுற்றி…. ஒரு கோஷ்டி “ஜால்ரா” அடித்துக் கொண்டே இருக்கும். அதை நம்பி கனவு  காண வெளிக்கிட்டால் அம்போதான்.

அதே கோஷ்டி… எந்த வெட்கமும் இல்லாமல், அடுத்து வருபவருக்கு ஜால்ரா அடிக்க கிளம்பி விடும்.

டக்ளஸ், செந்தில் தொண்டமான், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை கவனித்துக் கொண்டு இருங்கள், எல்லோரும் இரண்டு மூன்று மாதத்தில் அனுர கூடாரத்துக்கு போய் விடுவார்கள். ரணில்… கோவில் திருவிழாவில் தொலைந்த பிள்ளை மாதிரி தனியே நிற்பார். 😂

6 minutes ago, தமிழ் சிறி said:

ஆட்சியில் இருப்பவரை சுற்றி…. ஒரு கோஷ்டி “ஜால்ரா” அடித்துக் கொண்டே இருக்கும். அதை நம்பி கனவு  காண வெளிக

டக்ளஸ், செந்தில் தொண்டமான், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை கவனித்துக் கொண்டு இருங்கள், எல்லோரும் இரண்டு மூன்று மாதத்தில் அனுர கூடாரத்துக்கு போய் விடுவார்கள். ரணில்… கோவில் திருவிழாவில் தொலைந்த பிள்ளை மாதிரி தனியே நிற்பார். 😂

சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்?

அது அவருக்கே தெரியாதாம்.😀

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்?

அது அவருக்கே தெரியாதாம்.😀

இவர் வேறை சாமத்தில் சிரிப்பு மூட்டுகிறார் .

இங்கு லண்டனில் மூன்று மணி அடக்கி வாசிங்க பெருமக்களே .😀

  • கருத்துக்கள உறவுகள்

அநேகமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நினைக்கின்றேன். இந்த அலையைப் பயன்படுத்தி ஜேவிபி அதிக ஆசனங்களைப் பெற முயற்சிக்கும். நிச்சயம் புது அரசியலமைப்பு யாப்பு கொண்டுவரப்படும்,

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

டக்ளஸ், செந்தில் தொண்டமான், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை கவனித்துக் கொண்டு இருங்கள், எல்லோரும் இரண்டு மூன்று மாதத்தில் அனுர கூடாரத்துக்கு போய் விடுவார்கள். ரணில்… கோவில் திருவிழாவில் தொலைந்த பிள்ளை மாதிரி தனியே நிற்பார். 😂

அநுரவிற்கு இவர்கள் எவரும் தேவையில்லை, இவர்கள் எவரையும் கிட்ட நெருங்க விடாமல் இருந்தால் இன்னும் அதிக தமிழ் வாக்குகள் இவருக்கு அடுத்த தடவை கிடைக்கும்........👍.

ரணிலையும், ஏனைய சிங்கள தலைவர்களையும் தமிழர்கள் வெறுப்பது புரிந்து கொள்ளப்படக்கூடியதே. ஆனால் ரணிலை ஏன் சிங்கள் மக்கள் இந்த அளவிற்கு வெறுக்கின்றனர்.......... போன தடவை தேர்தலில் அவரின் கட்சி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இந்த தடவை அவர் தான் நாட்டையே மீட்டெடுத்தார் என்ற பிரச்சாரம் கூட, மற்றும் அதில் ஓரளவு உண்மையும் உண்டு, அவரின் நிலையை கொஞ்சம் கூட சிங்கள மக்கள் மத்தியில் மாற்றவில்லை.......

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

அநேகமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நினைக்கின்றேன். இந்த அலையைப் பயன்படுத்தி ஜேவிபி அதிக ஆசனங்களைப் பெஅர்செ முயற்சிக்கும். நிச்சயம் புது அரசியலமைப்பு யாப்பு கொண்டுவரப்படும்,

அப்படி வந்தால் அது சிங்கள தேசத்துக்கு அழிவே .

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன்… அனுர பக்கம் போவதற்கு வித்தியாதரன் மூலமாக காய் நகர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது போல் தெரிகின்றது. 😂
சுமந்திரன் வீட்டிற்கு அடங்கி நடக்கும் பிள்ளை அல்ல. அவருக்கு… ஊர் சுற்றிக் கொண்டு இருப்பதுதான் பிடிக்கும். 🤣

7 minutes ago, நிழலி said:

சுமந்திரன் எந்தப் பக்கம் இனி போவார்?

அது அவருக்கே தெரியாதாம்.😀

6 hours ago, புலவர் said:

அனுரா சுமத்திரனுக்கு தொலைபேசி எடுத்து 2 சுற்றுக்கு போகாமலேயே தான் வெற்றி பெறுவேன் என்று சொல்லியதாக வித்தியாதரன் அறிவித்துள்ளார். சுமி அனுராவின் பக்கம் தாவமாட்டார் என்பது என்ன நிச்சயம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

அப்படி வந்தால் அது சிங்கள தேசத்துக்கு அழிவே .

3 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

நாமல் மிக நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்............... 2.2% இலிருந்து 2.9% இற்கு வந்துள்ளார்.........

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாலி said:

3 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக்கொண்டு எதையும் செய்யமுடியாது!

பார்ப்போம் காலையில் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாலி said:

அநேகமாக பாராளுமன்றம் கலைக்கப்பட்டு காபந்து அரசாங்கம் அமைக்கப்படும் என நினைக்கின்றேன். இந்த அலையைப் பயன்படுத்தி ஜேவிபி அதிக ஆசனங்களைப் பெற முயற்சிக்கும். நிச்சயம் புது அரசியலமைப்பு யாப்பு கொண்டுவரப்படும்,

தான் வென்றால் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதாக அநுர முன்னரேயே சொல்லியிருந்தார். இடைக்கால அமைச்சரவையில் திறமை வாய்ந்தவர்கள் எல்லா சமூகங்களிலிருந்தும் உள்வாங்கப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால் புதிய யாப்பு ஒன்றுக்கு பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை தேவை. அதைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

நாமல் மிக நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றார்............... 2.2% இலிருந்து 2.9% இற்கு வந்துள்ளார்.........

நாமலின் இலக்கு… 2029 ஜனாதிபதி தேர்தல்.
இப்போ போட்டியிடுவது… அவரது கட்சியை பொதுமக்கள் மறக்காமல் இருக்கவும், சித்தப்பா பசில் ஜனாதிபதி கோதாவில் இறங்க முதல்…. மகிந்த உயிருடன் இருக்கும் காலத்திலேயே… ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதியாக வர “நாமல் ரெடி” என்ற செய்தியை சொல்லி… “லைன் கிளியர்” பண்ணி வைத்திருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரசோதரன் said:

தான் வென்றால் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதாக அநுர முன்னரேயே சொல்லியிருந்தார். இடைக்கால அமைச்சரவையில் திறமை வாய்ந்தவர்கள் எல்லா சமூகங்களிலிருந்தும் உள்வாங்கப்படுவார்கள் என்றும் சொல்லியிருந்தார்.

ஆனால் புதிய யாப்பு ஒன்றுக்கு பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை தேவை. அதைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினம்.

எனக்கு சரியாக தெரியவில்லை, பாராளுமன்றில் 2/3   பெரும்பான்மை இல்லாவிட்டால் நேரடியாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தலாம்.

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

நாமலின் இலக்கு… 2029 ஜனாதிபதி தேர்தல்.
இப்போ போட்டியிடுவது… அவரது கட்சியை பொதுமக்கள் மறக்காமல் இருக்கவும், சித்தப்பா பசில் ஜனாதிபதி கோதாவில் இறங்க முதல்…. மகிந்த உயிருடன் இருக்கும் காலத்திலேயே… ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதியாக வர “நாமல் ரெடி” என்ற செய்தியை சொல்லி… “லைன் கிளியர்” பண்ணி வைத்திருக்கின்றார்கள்.

உண்மை, சிறி அண்ணா. ஆனால் அவர்களுக்கு இப்ப விழுந்து கொண்டிருப்பது ஒரு மரண அடி. தெற்கிலிருந்து - அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி - வரும் முடிவுகள் அப்படியே ராஜபக்சாக்களிடமிருந்து 180 பாகையில் திரும்பி அநுரவின் பக்கம் போயுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.