Jump to content

இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமார திஸாநாயக்க


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமர திஸாநாயக்க - நேரலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

22 செப்டெம்பர் 2024, 01:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தேர்தலில் வென்றுள்ளார். அவர் இந்தத் தேர்தலில் 57,40,179 வாக்குகளைப் பெற்றுள்ளார். அதன்படி, இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார பதவியேற்பார் என பிபிசி சிங்கள சேவை தெரிவிக்கிறது. இலங்கை தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இந்தத் தேர்தலில்தான் விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.

தான் அதிபராவது குறித்து அநுர குமார தெரிவித்துள்ள செய்தியில், “நூற்றாண்டுகளாக நாம் கண்ட கனவு இறுதியில் இன்று நனவாகியுள்ளது. இந்தக் கனவு நனவாக உழைத்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முயற்சிகள் இன்று பலித்துள்ளது.”

அதற்காக உங்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். ஏனெனில், இது என்னுடைய முயற்சி மட்டுமல்ல, நம் அனைவருடைய கூட்டுப் பணியும்கூட. இந்த வெற்றி நம் எல்லோருக்குமானது.”

இந்த வெற்றிக்காக நாம் மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் ரத்தம், கண்ணீர், வியர்வை மற்றும் தங்கள் உயிரையும்கூடத் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் இந்தத் தியாகங்கள் வீண்போகவில்லை. அவர்களின் தியாகங்கள் வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும். இலங்கையின் வரலாறு மாற்றி எழுதப்பட்டுள்ளது.”

கனவை நனவாக்க, இந்த நிலத்திற்குப் புதிய தொடக்கம் தேவை. சிங்களர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஒற்றுமை, புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கும். இதன் அடிப்படையில்தான் மறுமலர்ச்சி தோன்றும். வாருங்கள், எல்லோரும் இதற்காகக் கைகோர்ப்போம்!” எனத் தெரிவித்துள்ளார்.

ரணில் என்ன சொன்னார்?

இதுகுறித்து ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனவும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாகத் தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டு வந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டு வர முடியும் என நம்புவதாகவும் ரணில் அந்த தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாத நிலையில், இரண்டாவது விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் உள்ளார். அவருக்கு 42.31% வாக்குகள் கிடைத்துள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவுக்கு 32.76% வாக்குகளும், மூன்றாவது இடத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 17.27% வாக்குகளும் பதிவாகியுள்ளது

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை தாண்டவில்லை.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் இரண்டாவது விருப்ப வாக்கை எண்ணுவது இதுவே முதல்முறையாகும்.

இரண்டாவது விருப்ப வாக்குகளை எண்ணும் நடைமுறையின்படி, ''அநுர குமார திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச தவிர மற்ற அனைத்து வேட்பாளர்களும் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்'' என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ரத்னநாயக்க கூறியுள்ளார்.

''இவ்வாறு போட்டியிலிருந்து நீக்கப்பட்ட ஏனைய வேட்பாளர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வாக்குகள், போட்டியிலுள்ள வாக்காளர்களுக்கு சாதகமாக உள்ளதா என்பதை கணக்கிடப்படும்''

''22 தேர்தல் மாவட்டங்களிலும் தற்போது போட்டியிலுள்ள வேட்பாளர்களுக்கு சாதகமாக கிடைத்த வாக்குகள் எண்ணப்பட்டு கிடைக்கப் பெறும் விருப்ப வாக்குகள், ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குகளுடன் சேர்த்து அதில் அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளர் ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

'அநுர குமார வென்றதாக ஏற்கிறோம்'

தேசிய மக்கள் கட்சியின் அதிபர் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க வென்றுவிட்டதாகக் கூறியுள்ள அக்கட்சியின் எம்.பி விஜிதா ஹேரத், அதனால் கட்சியினர் பதற்றமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அக்கட்சியால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட காணொளியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டாலும், 50% வாக்குகள் இல்லாததால் விதிகளின்படி அநுர குமார திஸாநாயக்க வென்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, அநுர குமார வென்றுவிட்டதாக தாங்கள் ஏற்றுக் கொள்வதாக சஜித் பிரேமதாசவின் கட்சியின் எம்.பி ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஜனநாயக ரீதியாக அநுரவின் வெற்றியை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், சில வாக்கு எண்ணும் நிலையங்களில் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்புக்கு முன்னதாகவே விருப்ப வாக்குகளை எண்ணியதாகவும் அதுகுறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நிலையங்களில் வாக்குகளை மீண்டும் எண்ண வலியுறுத்திய நிலையில், அதை ஆணைக்குழு ஏற்றுக்கொண்டதாக, பிபிசி தமிழின் இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் தகவல் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு நடந்த முதல் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், நேற்றிரவே இலங்கையில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 1,703 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

அநுர குமார திஸாநாயக்க, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகிய மூவருக்கும் இடையே மும்முனைப் போட்டி நிலவிய இந்த தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே மக்களின் ஆதரவு அநுர குமார திஸாநாயக்கவுக்கு அதிகம் இருந்தது புலப்பட்டது.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வாக்கு எண்ணிக்கை நிலவரம்

  • அநுர குமார திஸாநாயக்க - 56,34,915 (42.31%)
  • சஜித் பிரேமதாச - 43,63,035 (32.76%)
  • ரணில் விக்ரமசிங்க -22,99,767 (17.27%)

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, ஒட்டுமொத்தமான பதிவான வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். தொடக்கத்தில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்த அநுர குமார திஸாநாயக்கவின் வாக்கு சதவீதம் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குறைந்தது.

அதேநேரத்தில், சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் தொடர்ச்சியாக அதிகரித்தது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் தொடர்கிறார்.

நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு

வாக்குப்பதிவு நாளான நேற்று (செப்டம்பர் 21) இரவு 10 மணி முதல் இன்று (செப்டம்பர் 22) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக போலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தது.

பொது பாதுகாப்பு சட்டத்தில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதிக்கு வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானிக்கு அமைய ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது அமைதியான சூழல் நிலவுகின்ற போதிலும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் நேரத்தில் வீட்டிலேயே நேரத்தைச் செலவிடுமாறு போலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை காலையிலும் தொடர்ந்த நிலையில் இலங்கை முழுவதும் இன்று நண்பகல் 12 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

 

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஜனாதிபதி தேர்தலில் 38 பேர் போட்டி

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 39 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆகவே, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷேவின் மகன் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்செக, தமிழர்களின் பொது வேட்பாளர் என்ற பெயரில் பா.அரியநேத்திரன் உள்ளிட்ட 38 பேர் களத்தில் இருந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Edited by ஏராளன்
மா
Link to comment
Share on other sites

  • ஏராளன் changed the title to இலங்கையின் 9வது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் அனுர குமார திஸாநாயக்க
  • கருத்துக்கள உறவுகள்

அநுரவின் வெற்றி பன்மைத்துவம் மற்றும் சமூகநீதியை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் - மனோகணேசன் 

Published By: VISHNU   22 SEP, 2024 | 07:23 PM

image

(நா.தனுஜா)

அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் என தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலின் முதலாவது வாக்குகள் எண்ணப்பட்டு வெளியான முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்த வேளையில், அவரது வெற்றிக்கு வாழ்த்துக்கூறி தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்த மனோகணேசன், அப்பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

'மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்ட அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்கள். அதேபோன்று சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக நாம் கடுமையாகப் பணியாற்றிய மத்திய, மேல், சப்ரகமுவ, ஊடக மாகாணங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு நாம் நன்றி கூறுகின்றோம். ஜனநாயக செயன்முறை வெளிப்பட்டிருக்கிறது. அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த வெற்றி பன்மைத்துவம், சமூகநீதி ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய புதிய இலங்கைக்கான ஆரம்பமாக அமையும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்திருக்கிறார்.

https://www.virakesari.lk/article/194551

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு

Published By: VISHNU   22 SEP, 2024 | 08:46 PM

image

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ஜனாதிபதி தேர்தல் வாக்குகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்  அனுரகுமார திஸாநாயக்க 5,634,915 (42.31%) வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்தார்.

இரண்டாவது இடத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ 4,363,035 ( 32.76% ) வாக்குகளைப் பெற்று 2 ஆவது இடத்தில் இருந்தார்.

ஜனாதிபதியும் சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க 2,299,767 ( 17.27%) வாக்குகளைப் பெற்று 3 ஆம் இடத்தில் இருந்தார்.

இந்நிலையில், எவரும் 50 சதவீதமான வாக்குகளைப் பெறாத நிலையில், விருப்பு வாக்கின் அடிப்படையில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நிலை ஏற்பட்டது.

இந்த விருப்பு வாக்கின் அடிப்படையில் 22 தேர்தல் மாவட்டங்களை அடிப்படையாக வைத்து விருப்பு வாக்கு கணக்கெடுப்பு இடம்பெற்று இறுதியில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாம் விருப்பு வாக்கில் அகில இலங்கை ரீதியாக சஜித் பிரேமதாஸவுக்கு 167,867 வாக்குகளும் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 105, 264 வாக்குகளும் கிடைத்தன.

இறுதியில் 5,634,915 முதல் சுற்று வாக்குகளுடன் 105,183 விருப்பு வாக்குகளை சேர்த்து மொத்தமாக 5,740,098 (55.87%) வாக்குகளைப் பெற்று அநுரகுமார திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

சஜித் பிரேமதாஸ 4,363,035 முதல் சுற்றுவாக்குகளுடன் 170,867 விருப்பு வாக்குகளை சேர்த்து மொத்தமாக 4,533,902 (44.13% ) வாக்குகளைப் பெற்றார்.

https://www.virakesari.lk/article/194554

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வரலாற்றில் இதுவரை யாரும் எதிர்பாரா விதமாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றுள்ளார்.

இதுவரை நாட்களிலும் அரச தரப்பு மற்றும் எதிர்தரப்பில் இருந்து போட்டியிட்டு பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று வந்திருந்த நிலையில் தற்போது முதன்முறையாக யாரும் எதிர்பாரா விதமாக அநுரவின் இந்த வெற்றி பதிவாகியிருக்கின்றது.

இலங்கை மாத்திரமல்லாமல் உலக நாடுகளும் வியந்து நோக்கும் அளவுக்கு இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது.

மாற்றத்தை நோக்கிய பயணம்

மிக நேர்த்தியான ஒழுங்கமைப்பு, திட்டமிடல் போன்றவை அநுரவின் வெற்றிக்கு வழிவகுத்திருக்கின்றது.  இதற்கு முன்னரான நாட்களில் பரம்பரையாக நாங்கள் இந்த கட்சிக்கு ஆதரவு எனவே இந்த முறையும் அதே கட்சிக்குத் தான் வாக்களிப்போம் என்ற மரபு மாற்றமடைந்திருந்ததை கண்கூடாக காண முடிந்துள்ளது இந்த தேர்தலில். 

குறிப்பாக மாற்றத்தை நோக்கிய அநுரவின் பயணம் என்ற கொள்கை நிறைவேறியுள்ளது என்று கூட கூறலாம். 

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு | Sri Lanka New President Anura

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுள்ள  ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள  முதியன்சேலாகே அநுர குமார திசாநாயக்க 1968 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம் திகதி இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புதேகம கிராமத்தில் பிறந்தார்.

அவரது தந்தை ஒரு தொழிலாளி அவரது தாய் ஒரு இல்லத்தரசி. திசாநாயக்க, தம்புத்தேகம காமினி மகா வித்தியாலயம் மற்றும் தம்புதேகம மத்திய கல்லூரியில் தனது கல்வியைப் பெற்று, கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக பிரவேசத்தைப் பெற்ற முதல் மாணவராக அவர் இருந்திருக்கின்றார். 

பள்ளிப் பருவத்திலிருந்தே  மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகளால் ஈர்க்கப்பட்டு குறித்த அணியில் இணைந்திருந்த  அநுர குமார, 1987இல் ஜே.வி.பி.யில் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார்.

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு | Sri Lanka New President Anura

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பின் அச்சுறுத்தல் காரணமாக வெளியேறினார். ஒரு வருடம் கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார். பின் 1995 இல் பௌதீக விஞ்ஞானத்தில் இளங்கலை பட்டம் பெற்றதோடு அதே ஆண்டில், அவர் சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராகவும் ஜேவிபியின் மத்திய செயற்குழுவிலும் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஜேவிபி கட்சியின் தலைவர்  சோமவன்ச அமரசிங்கவின் கீழ் பிரதான அரசியலில் மீண்டும் பிரவேசித்த ஜே.வி.பி, 1994 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்கவை ஆதரித்தது, இருப்பினும் விரைவில் குமாரதுங்க நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்தது.

2000 ஆண்டு  நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர், இன்று வரை எம்.பியாக இருக்கிறார். 2004 இல் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு | Sri Lanka New President Anura

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணி அரசாங்கத்தில் , விவசாய அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவி வகித்தார். 2005இல் சந்திரிகா அரசில் இருந்து விலகினார்.

2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். 2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார் அநுர குமார.

அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது. 2015இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார்.

2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார்.

ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும்

1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுனரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதன் பின்னர் 1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது. 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது.

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு | Sri Lanka New President Anura

2019இல் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க மூன்று வீத வாக்குகளை மட்டும் சுமார் நான்கு லட்சத்து எண்பத்து ஐயாயிரம் அளவிலான வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றிருந்தார். அதன் பின்னரான நாடாளுமன்றத் தேர்தலிலும் 3 எம்பிக்களை மட்டுமே அவர் தரப்பால் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரமுடிந்தது. 

அதனையடுத்து, இடம்பெற்ற பொருளாதார நெருக்கடி காலமும், அதனோடான போராட்டக் காலமும் இன்றைய அநுரவின் வெற்றிக்கு வித்திட்ட  வித்து என்று கூட கூறலாம். 

கிட்டத்தட்ட, 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் எப்படி கோட்டாபயவின் வெற்றிக்கு வழிவகுத்ததோ, அப்படியொரு  நிலையையே அநுரவின் வெற்றிக்கு அரகலய காலம் வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றது என்பதும் மறுக்க முடியாத ஒன்று. 

குறிப்பாக, இம்முறை முதன்முறையாக   வாக்களிக்கத் தகுதிப்பெற்ற இளையோர்களின்  முதன்நிலை தெரிவாக அநுர இருந்திருக்கின்றார் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.  

அத்தோடு, ரணில் இழைத்த தவறுகளும் கூட அநுரவின் வெற்றிக்கு  வழி ஏற்படுத்திக் கொடுத்தன. குறிப்பாக அரகலயவின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைதுகள், ஒடுக்குறைகள் போன்றவை ரணில் மீதான அதிருப்திக்கும், அநுர மீதான ஈர்ப்புக்கும் காரணமாகியிருந்தன. 

இலங்கை வரலாற்றை திருப்பி போட்ட தேர்தல் முடிவுகள்! போராடி வெற்றி வாகை சூடிய அநுர தரப்பு | Sri Lanka New President Anura

அத்தோடு, அரச ஊழியர்கள் சம்பள பிரச்சினையின் போதும் போராட்டங்களின் போதும் அதனை கையாள்வதற்கு ரணில் மேற்கொண்ட நடவடிக்கைகள் ரணில் மீதான அரச ஊழியர்களின் வெறுப்புக்கு காரணமாகியதோடு, அது அநுரவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

எது எவ்வாறாயினும் மாற்றத்தை விரும்பிய பலருக்கு அநுரவின் வெற்றி சிறிய அல்ல மிகப்பெரிய மாற்றமாகவே அமைந்துள்ளது.

https://tamilwin.com/article/sri-lanka-new-president-anura-1726963033

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டுக்காக கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - புதிய ஜனாதிபதி அநுர வேண்டுகோள்!

Published By: VISHNU   22 SEP, 2024 | 09:20 PM

image

ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றமை முதல் வெற்றியாகும் என புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சவால்களைத் தனி நபராலும், அணியாலும் வெற்றி கொள்ள முடியாது. நாட்டுக்காகக் கட்டம் கட்டமாக அனைவரும் ஒன்றிணைய வேண்டும், அதற்கான  பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

எனக்கு ஆதரவளித்த மற்றும் ஆதரவளிக்காத அனைத்து பிரஜைகளையும் இலங்கையர் என்ற அடிப்படையில் பேதமற்ற வகையில் ஒன்றிணைத்து செயற்படுவேன் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/194556

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து !

ShanaSeptember 22, 2024
 
1727025473-461054101_829751952665228_5544168413727147361_n%20(1).jpg

 

நடைபெற்று முடிந்த 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திஸாநாயக்கவுக்கு இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இந்தியத் தலைமையின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன்,மக்கள் ஆணையை வென்றதற்கான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.battinews.com/2024/09/blog-post_598.html

அனுரகுமாரதிசநாயக்கவிற்கு அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வாழ்த்து !

September 22, 2024
 
Julie-Chung.webp

ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றிக்காக அமெரிக்கா அனுரகுமாரதிசநாயக்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

தங்கள் ஜனநாயக உரிமைகளை அமைதியான முறையில் பயன்படுத்தியமைக்காக இலங்கை மக்களை பாராட்டுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரப்பட்ட முன்னுரிமைகளின் அடிப்படையில் இணைந்து செயற்பட தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
 

https://www.battinews.com/2024/09/blog-post_278.html

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என்ன அரியம் வெண்டதுக்கு ஸ்ரீதரன் எம் பி ண்ட bar லதான் பாட்டியாம்..?
    • 1991-1993 யாழ்ப்பாணத்தில்                            
    • இனி அசைலமும் ஒரு நாடும் குடுக்காது.. கடைசி நாடு கனடாக்காரனும் சுத்துப்போட்டிட்டான்.. இனி பட்டாளமாய் வெளிக்கிடுற கதை எல்லாம் முடிஞ்சிடும்.. இப்பவே குறைஞ்சிட்டு.. முந்தின மாதிரி ஒண்டு ரெண்டு வெளிக்கிடும்.. மற்றும்படி இப்ப கொஞ்சநாளாய் விசிற்விசாவில் ஊரே அள்ளுப்பட்ட கதை எல்லாம் முடிஞ்சு வந்திட்டு..
    • வரவேற்கத்தக்கது. இது வேண்டும் தேவை. ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் இன்னும் சில வருடங்களில் இங்கே இருக்கமாட்டார்கள் என்பது தான் களம் நிஜம். பார்க்கலாம். 
    • தக்கன பிழைக்கும் என்பார்கள்.. தப்பி பிழைத்து வாழ்ந்து இனத்தை பெருக்கும் முஸ்லீம்களைப்போல் வாழ ஊரில் இப்பொழுது கற்றுத்தேறிக்கொண்டிருக்கிறார்கள் எம்மக்கள்.. இன்னும் இரண்டொரு தேர்தலுக்குள் புலம்பெயர் பொதுவேட்பாளர் ஆதரவு கோஸ்ட்டிகள் ஊரில் இருப்பவர்களுக்கு துரோகிப்பட்டம் வழங்குவார்கள்.. என்ன அவ்வளவு சனத்துக்கும் வழங்க பெரிய துரோகிப்பட்டமாய் வேணும்.. யாரும் கணக்கில் எடுக்கமாட்டார்கள்.. 20k கிட்ஸ் வேற வெளிநாட்டில இருந்து ஊருக்கு போறவனையே கனக்கில எடுக்கமாட்டாங்கள் இதில வெளிநாட்டில இருந்து கூவி கேக்க போறான்..
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.