Jump to content

ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஈரானிய உளவாளி இஸ்ரேல் தரப்புக்கு தெரிவித்துள்ளார்.

ஈரானியர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை😅 ...ஒற்றுமை இருந்திருந்தால் அவர்கள் எப்பவோ இஸ்ரேலை துவசம் பண்ணியிருக்கலாம்  ,எமது சொல்லை கேட்கவில்லை😅 ...சகோதர படுகொலைகளை செய்த காரணத்தால் தான் இவர் கொலை செய்யப்பட்டார் .😅..
லெபனானின் இறையாண்மையை மீறியமையும் ஒரு காரணம்...
தொடர்ந்து நாம் சொல்வது என்ன என்றால் இஸ்ரேலுடன் இவர்கள் இணக்க அரசியல் செய்ய வேண்டும் அப்படியென்றால் இவர்களின் இருப்பை தக்க வைக்கலாம்...😅
லெபனான் மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்த்து இருப்பை தக்க வைக்க வேணும் வீர வசனம் பேசுவதில் பயனில்லை😅

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தீராத கோபத்தையும், தீராத பழியையும் தன்னகத்தே  சேகரித்து வைத்திருக்கும் இஸ்ரேல் எத்தனை நாட்களுக்கு/காலத்திற்கு தன் மக்களை சுதந்திரமாக வாழ பாதுகாப்பு கொடுக்கும்?

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைதான் இஸ்ரேல் பொதுமக்கள் வாழ்க்கை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/9/2024 at 19:13, putthan said:

 

 

இதில் ஒர் வித்தியாசம் உண்டு பலஸ்தீனருக்காக ஏனைய முஸ்லீம்கள் போராடினார்கள் ஆனால் எமது மண்ணில் எமது போராளிகள் மட்டுமே போராடினார்கள்....நாம் இனத்திற்காக போராடியவ்ர்கள் அவர்கள் மதத்திற்காக போராடுகிறார்கள் 

ஆரம்ப காலங்களில் பல தமிழ் இயக்கங்களுக்கு இராணுவ பயிற்சியும் ஆயுத கொள்வனவுக்கான முகவர்களையும் பாலஸ்தீனியர்களே வழங்கினார்கள்

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்கள்  கீரியும், பாம்பும்...........  மாதிரி இருப்பது,  அனுர கட்சிக்கு அதிக இடங்கள்  கிடைக்கலாம்.
    • ஜனாதிபதியின் தீர்மானத்த‍ை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு! நெற்செய்கையாளர்களுக்கு உயர் பருவத்தில் 25,000 ரூபா கொடுப்பனவும், மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் போது இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களின் பாதகத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் உரிய பொதுக் கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. ஆணைக்குழு நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401702
    • பொதுத் தேர்தலுக்கு முன்னர் தொடரப்போகும் அதிரடிகள் – அகிலன் September 30, 2024   ஜனாதிபதித் தோ்தல் நடைபெற்று முடி வடைந்த நிலையில், அதிரடியான அரசி யல் நகா்வுகளை கடந்த சில தினங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. ஜனாதிபதி பதவியேற்பு, புதிய பிரதமா், மூன்று உறுப்பினா் அமைச்சரவை நியமனம் என்பவற்றைத் தொடா்ந்து நாடாளு மன்றமும் கலைக்கப்பட்டுவிட்டது. குறுகிய காலத்துக்குள் அடுத்த பொதுத் தோ்தலை நாடு சந்திக்கப்போகின்றது. அரசியல் கட்சிகள் அனைத் துமே பொதுத் தோ்தலை எவ்வாறு சந்திப்பது என்பதில் தமது கவனத்தைக் குவித்துள்ளன. ஜனாதிபதித் தோ்தலைப் பொறுத்தவரை யில் அதன் முடிவு ஓரளவுக்கு ஊகிக்கப்பட்டதுதான். அதேவேளையில், பல்வேறு கருத்துக் கணிப்புக் களும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் என்பதை உறுதிப்படுத்தியிருந்தன. அதேவேளையில், எந்தவொரு வேட்பாளரும் 50 வீததத்தைப் பெறமுடியாத நிலையில், இரண்டாவது தெரிவு கணிப்பிட வேண்டிய நிலை வரலாம் என்பதும் எதிா்வு கூறப்பட்டிருந்தது.  அவ்வாறே நடைபெற்றும் உள்ளது. அநுரகுமார திசநாயக்கவின் வெற்றிக் கான அடிக்கல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே நாட்டப்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.  2022 இல் இலங்கையில் இடம்பெற்ற மக்கள் கிளா்ச்சி நாட்டில் ஒரு முறைமை மாற்றத்தை-அதாவது சிஸ்ரம் சேஞ்சை எதிா்பாா்த்ததாகவே இருந்தது. ஆனால், ஆளும் தலைவா்கள் மாறினாா்களே தவிர, பழைய நிலைமைதான் தொடா்ந்து. அதாவது, கோட்டாபய போக ரணில் அதிகாரத்துக்கு வந்தாா். ரணிலின் தலைமை பொருளாதார குற்றங்களைச் செய்வா்கள் என நீதிமன்றத்தினாலேயே அடையாளம் காணப்பட்ட ராஜபக்ஷக்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. பதிலாக அவா்களைப் பாதுகாத்தது. நெருக்கடியிலிருந்து நாட்டைப் பாது காத்தவா் என்று ரணில் தரப்பினா் அவரை முன்னிலைப்படுத்திய போதிலும், மக்கள் ரணிலைத் தோற்கடிக்துள்ளாா்கள். அதற்கு பிர தான காரணங்களில் ஒன்று ராஜபக்ஷக்களை அவா் பாதுகாத்ததுதான்.  நாடாளுமன்றத்தில் ரணிலுக்குப் பெரும்பான்மை இருக்கவில்லை. ராஜபக்ஷக்களுக்கு ஆதரவான நாடாளுமன்றத்தை நம்பித்தான் அவா் ஆட்சியைக் கொண்டு நடத்த வேண்டியவராக இருந்தாா். “கோட்டா கோ கம” என்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், அவா்கள் கோட்டாவை வீட்டுக்கு அனுப்புவதை மட்டும் எதிா் பாா்த்திருக்கவில்லை. அவா்கள் எதிா்பாா்த்தது அரசியல் முறைமையில் ஒரு முழுமையான மாற்றத்தைத்தான். அரசியல் தலைமை மாற்றத்தை மட்டுமல்ல. ரணில் அதனைச் செய்யவில்லை.  படை பலத்தைப் பயன்படுத்தி போராட் டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தாா். மறுபுறம் ராஜபக்ஷக் களைப் பாதுகாத்தாா். அவரது தோல்விக்கு அவைதான் காரண மாகியது. சஜித் பிரேமதாசவும் ஏதோ ஒரு வகையில் பாரம்பரிய அரசியல் கட்சிகளின் தொடா்ச்சி யாகவே உள்ளாா். அவா் அதிகாரத் துக்கு வந்தாலும், ஏதோ ஒருவகையில் பழை யநிலைமைகள்தான் தொடரும், சில விடயங்களில் அவா் கடுமையாக நடந்துகொள்ள முடியாதவராக இருக்கும் என்று தான் மக்கள் பாா்த்தாா்கள். அவா் அமைத்த அரசி யல் கூட்டணிகளும் அதற்குக் காரணம். “முறைமை மாற்றம்” ஒன்றை ஏற்படுத்த வேண்டுமாக இருந்தால், பாரம்பரிய கட்சிகளை நிராகரித்துவிட்டு புதிய தலைமை ஒன்றை தோற்றுவிக்க வேண்டும் என்று சிங்கள மக் கள் சிந்தித்தாா்கள்.  அதன் விளைவுதான் அநுரகுமார வின் வெற்றி! மற்றையவா்களின் படுதோல்வி!!ஆக, அநுரகுமாரவிடம் மக்களின் எதிா்பாா்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. குறிப்பாக, ஊழல் போ்வழிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றாா்கள். அதற்கான ஒரு திட்டத்துடன்தான் அநுரவின் அரசாங்கம் செயற் படுவதாகவும் தெரிகின்றது. இந்த விடயத்தில் அதிரடியான சில செயற்பாடுகளை அடுத்துவரும் வாரங்களில் எதிா்பாா்க்கலாம். மறுபுறத்தில் ஊழல் மோசடிப்  போ்வழிகள், அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவா்கள் பலா் பெரும் அச்சத்துடன் இருக்கின்றாா்கள். முக்கியமான சிலா் தோ்தலுக்கு முன்னரே விமானம் ஏற்விட்டாா்கள். வேறு சிலா் தோ்தல் முடிந்து – முடிவுகள் வெளிவருவதற்கு முன்னா் தப்பிச் சென்றுவிட்டாாா்கள். அநுர ஜனாதிபதியாக அதிகாரத்தை கைகளில் எடுத்த பின்னா் வெளிநாடு செல்ல முயன்ற சிலா் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 30 நபா்களுடைய பட்டியல் ஒன்று கட்டுநாயக்க மற்றும் பலாலி விமான நிலையங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பெயா்பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தவறானதாக இருந்தாலும், தமது பெயா்களும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் வெளிநாடு செல்ல விரும்பிய பலா் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றாா்கள் என்பதையும் அறிய முடிகின்றது. கடந்த காலங்களில் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல்களில் ஈடுபட்டவா்கள் எந்தளவுக்கு அச்சமடைந் திருக்கின்றாா்கள் என்பதற்கு, காலி முகத்திடல், சுதந்திர சதுக் கம் உட்பட பல பகுதிகளிலும் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ள சொகுசு வாகனங்கள் சாட்சி யாகவுள்ளது. சுமாா் 3 கோடி முதல் 5 கோடி வரையில் பெறுமதியான 500 க்கும் அதிகமான சொகுசுவாகனங்கள் இவ்வாறு கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளன. முன்னைய ஆட்சிக் காலத்தில் அமைச் சா்கள், அமைச்சா்களின் செயலாளா்கள், மற்றும் அதிகாரிகளால் அந்த வாகனங்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பராமரிப்பு மற்றும் எரிபொருள் என்பவற்றுக்காக மாதாந் தம் மூன்றரை இலட்சம் ரூபா வரையில் செல விடப்பட்டிருக்கின்றது என்பது மற்றொரு அதிா்ச்சியான தகவல். மக்களின் வரிப்பணத்தில் சொகுசுவாழ்க்கையை அதிகாரத்தில் இருந்த ஒரு தரப்பினா் நடத்திவந்திருக்கின்றாா்கள் என்பதைத் தான் இந்த வாகனங்கள் பறைசாற்றி நிற்கின்றன. வழமையாக ஆட்சிகள் மாறினாலும் முன்னைய அமைச்சா்கள், அதிகாரிகள் வாகனங்களை ஒப்படைப்பதில்லை. அல்லது பல மாதங்களின் பின்னா்தான் அவற்றை ஒப்படைப் பாா்கள். ஆனால், அநுர பதவிப் பிரமாணம் செய்த உடனடியாகவே இந்த வாகனங்கள் கொண்டுவரப்பட்டு கைவிடப்பட்டிருப்பது அவா்களுடைய அச்சத்தைக் காட்டுகின்றது. புதிய ஆட்சி அதிரடியாக ரெய்ட் எதனையாவது முன்னெடுப்பதற்கு முன்னதாக அவற்றை ஒப் படைத்துவிடுவது தமக்கு பாதுகாப்பு என்று அவா்கள் கருதியிருக்கலாம். நான்கு விடயங்களை அநுர அரசு கைகளில் எடுக்கும் என்று எதிா்பாா்க்கலாம். முதலாது, ஊழல்-மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் செய்தவா்களின் கோவைகள் அவா்களிடம் உள்ளது. இரண்டாவது, உயிா்த்த ஞாயிறு தாக்குதல். மூன்றாவது கடந்த காலங்களில் இடம்பெற்ற பத்திரிகையாளா்கள், மற்றும் படுகொலைகள். நான்காவது மத்திய வங்கி பிணைமுறி விற்பனை மோசடி. இவை அனைத்துக்கும் தேவையான கோவைகள் அநுர தரப்பினரிடம் இருப்பதாகவே தெரிகின்றது. இவை குறித்து நீதிமன்றத்தின் மூலமாகவே விசாரணைகளை முன்னெடுப்பதுதான் அவா்களு டைய திட்டம் என்று தெரிகின்றது. பொதுத் தோ்தலில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்வது என்பதுதான் தேசிய மக் கள் சக்தியின் அடுத்த இலக்கு. ரணில் அரசு எதனைச் செய்வதற்கு அஞ்சியதோ அதனைச் செய்வதன் மூலமாக தமது செல்வாக்கை இன்னும் பலப்படுத்துவது அவா்களது உபாயமாக இருக்க லாம்.  அவற்றை முன்னெடுப்பதன் மூலமாகவே எதிரணியினரை மீண்டும் எழ முடியாத நிலையை ஏற்படுத்தலாம் என்பதும் அவா்களுக்குத் தெரியும். பொதுத் தோ்தலுக்கு முன்னதாக பல அதிரடிகளை எதிா்பாா்க்கலாம் என்கிறாா்கள் தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமாகவா்கள்.   https://www.ilakku.org/பொதுத்-தேர்தலுக்கு-முன்/
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.