Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக  முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். 

இவ் விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை  உணரப்பட்டது. அதன் விளைவுதான் அநுரகுமார திசாநாயக ஜனாதிபதியாகியமை. 

அதைப்போலவே வடக்குகிழக்கில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றனர். அது புதியவர்களையும், இளையோரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்பதாகும். 

மக்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும்  இந்த மன மாற்றத்துக்கு நாம் தடையாக இருக்க முடியாது. 

அதற்கு வழிவிட  வேண்டியது தவிர்க்க முடியாததாகும். மக்கள் மனங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதே அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்கவேண்டும். 

என்னுடையதும் ஏனைய சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களதும்  போட்டியிடாதிருக்கின்ற முடிவு ஏனையவர்களும் உணர்ந்து முடிவெடுக்க உந்துதலாக அமையும் என கருதுகின்றேன்.

வன்னி மாவட்டத்தில் அரசியல் தெளிவுள்ள, ஆளுமைமிக்க இளம் தலைவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற மக்களின், இளைஞர்களின் விருப்பங்கள் நிறைவேற மக்கள் மனதறிந்து எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

க. அகரன்

https://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-எம்-பி-வினோ-அதிரடி-அறிவிப்பு/175-344806

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் வினோ.... 👍
மாவை சேனாதிராசா, ஆபிரகாம் சுமந்திரன்.. ஆகியோரின் அறிவிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். 😁
அவை இரண்டு பேரும் போனவுடன் தமிழரசு கட்சிக்கு... மஞ்சள் தண்ணி தெளித்து புனிதமாக்க வேண்டும். 😂
அதுக்குப் பிறகு  தமிழரசு  கட்சிக்கு ஏறுமுகம் தான்.  📈  ⬆️   ✔️
இல்லையேல்... ஆறடி குழி தோண்டி, புதைத்து விட வேண்டியதுதான்.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

ஆபிரகாம் சுமந்திரன் என்பது அவரின் முழுப்பெயர் அல்ல. 

மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் என்பதுதான் அவரது முழுப்பெயர். 

😁

  • கருத்துக்கள உறவுகள்

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் நரியின் கதைதான் நினைவில் வருகுது!  😂

  • கருத்துக்கள உறவுகள்

வினோ எம்பி 90 களில் இருந்து வேலைவாய்ப்பு முதல் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்த தமிழ் மக்களை வெளியே எடுத்து விடும் வேலை என்று செய்து பார்த்த காசு கோடிகள் தாண்டும். அவரிடம் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன என்ற கணக்கு அவருக்கே தெரிந்திருக்காது, இனியேன் வினோ எம்பி க்கு உழைப்பு அவசியம்? இருந்தே சாப்பிடலாம்😂!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

வாழ்த்துக்கள் வினோ.... 👍
மாவை சேனாதிராசா, ஆபிரகாம் சுமந்திரன்.. ஆகியோரின் அறிவிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். 😁
அவை இரண்டு பேரும் போனவுடன் தமிழரசு கட்சிக்கு... மஞ்சள் தண்ணி தெளித்து புனிதமாக்க வேண்டும். 😂
அதுக்குப் பிறகு  தமிழரசு  கட்சிக்கு ஏறுமுகம் தான்.  📈  ⬆️   ✔️
இல்லையேல்... ஆறடி குழி தோண்டி, புதைத்து விட வேண்டியதுதான்.  🤣

தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுவுக்குள் சுமந்திரன் சார்பானவர்கள் அதிகம். சிறிதரனை பொதுத்தேர்தலில் நிற்காமல் பண்ணும் அளவிற்கு போக முயற்சிக்கின்றார்கள். சிறிதரன் சுயேட்சைக்குழு ஊடாக தேர்தலில் நிற்கவேண்டி வரலாம் என்று செய்திகள் உலாவுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுவுக்குள் சுமந்திரன் சார்பானவர்கள் அதிகம். சிறிதரனை பொதுத்தேர்தலில் நிற்காமல் பண்ணும் அளவிற்கு போக முயற்சிக்கின்றார்கள். சிறிதரன் சுயேட்சைக்குழு ஊடாக தேர்தலில் நிற்கவேண்டி வரலாம் என்று செய்திகள் உலாவுகின்றன.

இம்முறை மாவைக்கும் பார் சிறீதரனுக்கும் தமிழரசுக் கட்சி சார்பில் சீட்டு கிடைக்காது.  மத்திய குழு கட்சி முடிவை மீறி சங்கூதியவர்களை இடைநிறுத்தப் போவதாகவும் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட்டு தோல்வியுற்றவர்களுக்கும் இடம்கிடைக்காது என உறுதியாக நம்பலாம். 

அது தான் பார் சிறீதரன் டக்கெண்டு அநுரவை பார்க்க ஓடினவர். அநுர கொடுப்புக்குள்ள சிரித்திருப்பார்!😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

முன்னாள் எம்.பி வினோ அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக  முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். 

இவ் விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை  உணரப்பட்டது. அதன் விளைவுதான் அநுரகுமார திசாநாயக ஜனாதிபதியாகியமை. 

அதைப்போலவே வடக்குகிழக்கில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றனர். அது புதியவர்களையும், இளையோரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்பதாகும். 

மக்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும்  இந்த மன மாற்றத்துக்கு நாம் தடையாக இருக்க முடியாது. 

அதற்கு வழிவிட  வேண்டியது தவிர்க்க முடியாததாகும். மக்கள் மனங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதே அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்கவேண்டும். 

என்னுடையதும் ஏனைய சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களதும்  போட்டியிடாதிருக்கின்ற முடிவு ஏனையவர்களும் உணர்ந்து முடிவெடுக்க உந்துதலாக அமையும் என கருதுகின்றேன்.

வன்னி மாவட்டத்தில் அரசியல் தெளிவுள்ள, ஆளுமைமிக்க இளம் தலைவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற மக்களின், இளைஞர்களின் விருப்பங்கள் நிறைவேற மக்கள் மனதறிந்து எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

க. அகரன்

https://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-எம்-பி-வினோ-அதிரடி-அறிவிப்பு/175-344806

ஏன்  போட்டியிட்டுத்தான் பாருமன்,.....😏

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

ஏன்  போட்டியிட்டுத்தான் பாருமன்,.....😏

போற சனியனை ஏனையா பிடிச்சு மடிக்குள்????

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2024 at 17:33, கிருபன் said:

தமிழரசுக் கட்சியின் பொதுக்குழுவுக்குள் சுமந்திரன் சார்பானவர்கள் அதிகம். சிறிதரனை பொதுத்தேர்தலில் நிற்காமல் பண்ணும் அளவிற்கு போக முயற்சிக்கின்றார்கள். சிறிதரன் சுயேட்சைக்குழு ஊடாக தேர்தலில் நிற்கவேண்டி வரலாம் என்று செய்திகள் உலாவுகின்றன.

சுமந்திரனும், சிறீதரனும் இப்ப சினேகிதமாம்.
இருக்கின்ற பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்று சினேகிதம் ஆகியுள்ளார்கள். பாராளுமன்ற தேர்தல் முடிவதற்குள் என்ன கூத்துகள் எல்லாம் பார்க்கப் போகின்றோமோ. 
வெட்கம் கெட்டவர்கள். படு பயங்கர சுயநலவாத கும்பல்கள்.

மக்களை பைத்தியக்காரர் என நினைத்துக் கொண்டு,  தினமும் லூசுத்தனமான அறிக்கைகளை விட்டுக் கொண்டு திரிகிறார்கள். 

இவர்களை நம்பி பின்னால் போனவர்கள் பாடுதான், திண்டாட்டம். 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

மக்களை பைத்தியக்காரர் என நினைத்துக் கொண்டு,  தினமும் லூசுத்தனமான அறிக்கைகளை விட்டுக் கொண்டு திரிகிறார்கள். 

large.IMG_7165.jpeg.62d08d69464bb9c683ed

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2024 at 09:24, தமிழ் சிறி said:

வாழ்த்துக்கள் வினோ.... 👍
மாவை சேனாதிராசா, ஆபிரகாம் சுமந்திரன்.. ஆகியோரின் அறிவிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றேன். 😁
அவை இரண்டு பேரும் போனவுடன் தமிழரசு கட்சிக்கு... மஞ்சள் தண்ணி தெளித்து புனிதமாக்க வேண்டும். 😂
அதுக்குப் பிறகு  தமிழரசு  கட்சிக்கு ஏறுமுகம் தான்.  📈  ⬆️   ✔️
இல்லையேல்... ஆறடி குழி தோண்டி, புதைத்து விட வேண்டியதுதான்.  🤣

இவர்கள் எல்லோரும் வீட்டுகுள். நிற்கலாம்    ஆனால் தேர்தலில் நிற்க கூடாது   தமிழரசு கடசிக்கு இனிமேல் ஏறுமுகம். இல்லை  யாழ்ப்பாணத்திலும்.  பாராளுமன்ற தேர்தலில் அனுர அலை. வீசும்.    பொறுத்து இருந்து பார்ப்போம்  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின்  சுத்து. மாத்துகள்.  இன்னும் வெளிவரும் 🙏😂🤪🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மக்களை பைத்தியக்காரர் என நினைத்துக் கொண்டு,  தினமும் லூசுத்தனமான அறிக்கைகளை விட்டுக் கொண்டு திரிகிறார்கள். 

1 hour ago, Kavi arunasalam said:

large.IMG_7165.jpeg.62d08d69464bb9c683ed

தினமும்…. லூசுத்தனமான அறிக்கை விடுபவர்களில் சுமந்திரன் உங்கள் கண்ணில் படவில்லையா. அல்லது உங்கள் ஆளுக்கு வெள்ளை அடிக்க நினைத்து அவரை கருத்தோவியமாக வரைய மனம் இடம் கொடுக்கவில்லையா.

சுமந்திரன் தானே…. ஶ்ரீதரனை தேர்தலில் போட்டியிடாமல் செய்ய, பல திருகுதாளங்கள் செய்து கொண்டு இருந்தவர். பிறகு ஏன்… அவரை இணைத்தவர்? துணிவு இருந்திருந்தால் ஶ்ரீதரனை நீக்கி இருக்கலாமே.

ஶ்ரீதரன் இல்லாமல்… தேர்தலில் தமிழரசு கட்சி போட்டியிட்டால், தோல்வி வரும் என்ற பயம்  சுமந்திரனுக்கு வந்து விட்டது என்பதே யதார்த்தம்.
இப்போ…. ஶ்ரீதரனின் செல்வாக்கில்…. சுமன் குளிர்காய நினைக்கின்றார் என்பதே உண்மை. நிஜம் கசக்கும்தான்… அதுக்காக உண்மைக்கு புறம்பானவற்றை எழுதியோ, வரைந்தோ கொண்டு இருந்தால்… உங்கள் மேல் மற்றவர்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விட சந்தர்ப்பங்கள் அதிகம். 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kandiah57 said:

இவர்கள் எல்லோரும் வீட்டுகுள். நிற்கலாம்    ஆனால் தேர்தலில் நிற்க கூடாது   தமிழரசு கடசிக்கு இனிமேல் ஏறுமுகம். இல்லை  யாழ்ப்பாணத்திலும்.  பாராளுமன்ற தேர்தலில் அனுர அலை. வீசும்.    பொறுத்து இருந்து பார்ப்போம்  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின்  சுத்து. மாத்துகள்.  இன்னும் வெளிவரும் 🙏😂🤪🤣

இளைஞர்களுக்கு வழி விடாமல், தேர்தல் என்றவுடன் முன்னுக்கு வந்து நிற்கும் கிழட்டு   தமிழ் அரசியல் வாதிகள் எல்லோருக்கும், இந்த முறை பென்சன் கொடுத்து வீட்டிற்க்கு அனுப்பப் போகின்றார்கள்.

வீட்டில்…. சாய்மனைக் கதிரையில் அமர்து நிரந்தரமாக ஓய்வு எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

தினமும்…. லூசுத்தனமான அறிக்கை விடுபவர்களில் சுமந்திரன் உங்கள் கண்ணில் படவில்லையா. அல்லது உங்கள் ஆளுக்கு வெள்ளை அடிக்க நினைத்து அவரை கருத்தோவியமாக வரைய மனம் இடம் கொடுக்கவில்லையா.

சிறி, உங்கள் வேகத்துக்கு என்னால் ஓட முடியவில்லை. நான் இன்னமும் ‘சங்கு’க்குள்ளேயே சுத்திக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் அதைத் தாண்டிப் போய்விட்டீர்கள்.

பொது வேட்பாளர் விடயத்தில், போட்டியிடுகிறவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடக் கூடாது, சின்னமும் பயன் படுத்தக் கூடாது என்றுதான் தீர்மானம் எடுத்தார்கள். இப்பொழுது நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவர்கள் சங்கு சின்னத்தைப் பயன் படுத்துவதாகச் சொல்வது தப்புத்தானே. ஆக பொது வேட்பாளர் என்ற மாயமானை அவர்கள் கொண்டு வந்ததே நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி என்றுதானே அர்த்தம்.

ஒரு கட்சியின் தலைவராக தன்னை முன்னிறுத்தும் ஒருவர், (அதுவும் ஒரு  ஆசிரியர்)   கட்சியின் தீர்த்துமானக்கு முரணாக வெளி இடத்தில் நடந்து கொள்ளும் விதம் நன்றாகவா இருக்கிறது? இவர் எப்படி தமிழர்களின் நலன்களைப் பேணப் போகிறார்?

ஆக  அர்ச்சுனன் கண்களுக்கு எப்படி கிளி மட்டும் தெரிந்ததோ அது போல் எனக்கு சிறீதரன் மட்டும்தான் தெரிகிறார்.

ஒரு பெரிய கோட்டை சிறிதாக்க வேண்டுமானால் அதன் பக்கத்தில் அதைவிட பெரிய ஒரு கோட்டை  வரைய வேண்டும் என்பார்கள். அந்த வேலையைத்தான் சிறீதரன் செய்து கொண்டிருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Kavi arunasalam said:

கவி அருணாசலம்.....  நீங்கள் சங்கு கட்சியின் ஆதரவாளர் இல்லைத்தானே.... 
அவர்கள் சங்கை... யார் வைத்திருந்தால் உங்களுக்கு என்ன வந்தது.  
ஏன், முதலைக் கண்ணீர்  வடிக்கின்றீர்கள். அது சிவில் சமூக செயல் பாட்டாளர்களுக்கும் அந்தக் கட்சியுடன் ஒப்பந்தம் வைத்துக் கொண்ட சில அரசியல் கட்சிகளுக்கும்  உள்ள பிரச்சினை. 
அதனை அவர்கள்  பார்த்துக் கொள்வார்கள், உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாமே.   

தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், தமிழரசு கட்சியையும் துண்டு துண்டாக உடைத்துக் கொண்டிருக்கும் வக்கீல்  சுமந்திரனை... விமர்சிக்க தெம்பு இல்லாத நீங்கள், சிறிதரனை விமர்சிக்கும் தார்மீக   உரிமையையும் இழந்து விடுகின்றீர்கள். 

நித்திரை கொள்பவர்களை எழுப்பலாம். நித்திரை போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது என்பதற்கு இணங்க.... இது சம்பந்தமாக உங்களுடன் விவாதித்து எனது பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பவில்லை 

முக்கிய பிற் குறிப்பு: தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில்....  சங்கு சின்னத்தில் நின்ற அரியநேத்திரனுக்கு  கொடுத்த எனது  ஆதரவானது வர ஜனாதிபதி தேர்தலின் போது.... இரண்டு லட்சத்து  இருபத்தி ஆறாயிரம் வாக்குகள் பெற்ற திருப்தியுடன் நிறைவுக்கு வந்தது. எனது ஆதரவின் எல்லையை... புரிந்து கொண்டு இருப்பீர்கள் என நினைக்கின்றேன்.  நன்றி,  வணக்கம். 🙏

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

கவி அருணாசலம்.....  நீங்கள் சங்கு கட்சியின் ஆதரவாளர் இல்லைத்தானே.... 
அவர்கள் சங்கை... யார் வைத்திருந்தால் உங்களுக்கு என்ன வந்தது.  
ஏன், முதலைக் கண்ணீர்  வடிக்கின்றீர்கள்

சிறி, நீங்கள் யதார்த்தத்தை விட்டு விலகி ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். நான் அவர்கள் கட்சி ஆதரவாளர் இல்லை. அவர்கள் இனவாதம் பேசினார்கள். தங்கள் நிலைப்பாட்டைச் சொன்னார்கள். எழுதினார்கள்.  

அவர்களது நோக்கம் நாடாளுமன்றத் தேர்தலை நோக்கியே இருந்தது என்பது இப்பொழுது உ றுதியாயிற்று என்று குறிப்பிட்டேன். அவ்வளவுதான். அவர்கள் மக்களுக்கு தேசியம் என்ற படத்தைக் காட்டி தங்களுக்கான  இலாபங்களைத் தேடுகிறார்கள்.  இது என் கணிப்பு.

பொது வேட்பாளருக்கு இரண்டு லட்சத்துக்கு மேல் வாக்கு விழுந்தால் என்ன அது உங்களால்தான் கிடைத்தது என்றால் என்ன, பொது வேட்பாளர் என்பவர் தமிழினத்தின் கேலிச் சித்திரம்.

ஆனாலும் “சங்குச் சின்னத்தை எந்தக் கட்சி எடுத்தது அதற்கு ஆதாரம் இருக்கிறதா?” என்று ஒரு திரியில் ஆவேசமாகக் கேட்டிருந்தீர்கள். நானும் ஆதாரத்தை இணைத்திருந்தேன். இப்பொழுது, “உனக்கென்ன.. உனக்கென்ன..” என்று பாடுகிறீர்கள்.

இருட்டினில் வாழும் இதயங்களே

கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kavi arunasalam said:

கவியர், இவர்கள் வாழ்வது சமாந்தர பிரபஞ்சத்தில்! அந்தப் பிரபஞ்சத்தில் தரவுகள், ஆதாரங்கள், எண்ணிக்கை எதுவும் கணக்கிலெடுக்கப் படாது! மூளையின் random firing உம் தகரடப்பா ஒலியும் தான் கணக்கு😂!

  • கருத்துக்கள உறவுகள்
On 3/10/2024 at 01:02, Justin said:

வினோ எம்பி 90 களில் இருந்து வேலைவாய்ப்பு முதல் வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்த தமிழ் மக்களை வெளியே எடுத்து விடும் வேலை என்று செய்து பார்த்த காசு கோடிகள் தாண்டும். அவரிடம் எத்தனை வாகனங்கள் இருக்கின்றன என்ற கணக்கு அவருக்கே தெரிந்திருக்காது, இனியேன் வினோ எம்பி க்கு உழைப்பு அவசியம்? இருந்தே சாப்பிடலாம்😂!

ஆகவே, மற்றவர்களும் கோடிக்கணக்கில் பணம், கணக்கில்லா வாகனங்கள் சேர்க்க வேண்டும். கொஞ்சம் இடம் விடுங்கப்பா, அப்பதான், சும்மா இருந்து சாப்பிடலாம் வயோதிபத்தில். மொத்தத்தில், பணம் வாகனம் பார்க்க. மக்கள் தலையில் அரசியல்! மக்கள் எப்பாடு பட்டாலும் பரவாயில்லை. இந்த வாதமும்  நல்லாய்த்தானே இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/10/2024 at 16:48, கிருபன் said:
On 2/10/2024 at 16:48, கிருபன் said:

வடக்குகிழக்கில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றினை எதிர்பார்த்து நிற்கின்றனர். அது புதியவர்களையும், இளையோரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்பதாகும். 

அதற்கு வழிவிட  வேண்டியது தவிர்க்க முடியாததாகும். மக்கள் மனங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, ஏற்றுக் கொண்டு இளைஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இடம் கொடுப்பதே அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்கவேண்டும்

இது கரெக்ட்! 

சிலருக்கு, தமிழ் வாசித்து கிரகிப்பதில் சிக்கலுள்ளது போலும். வினோ, தான் தேர்தலில் போட்டியிடாமைக்கு காரணத்தை தெளிவாக விளக்கியிருக்கிறார். மக்களின் எதிர்பார்ப்புக்கு மதிப்பளித்து, புதியவர்களுக்கு இடமளிப்பதற்காக போட்டியிடாமல் தவிர்ப்பதற்காக.. தான் சேர்த்த பணம் வாகனம் பற்றி ஏதும் குறிப்பிடவில்லையே. சம்பந்தப்பட்டவர்கள் தமக்கு சார்ந்தவர்கள், அதற்காகவே போட்டியிடுகின்றனர் என்று சொல்ல வருகின்றனரா? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.