Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

எமது பிரதிநிதிகள் தமிழர்களிடம் வாக்குகளை வாங்கி சிங்களவனை ஆதரிப்பதைவிட சிங்களவனுக்கு நேரடியாக அந்த வாக்கை போட்டு அவனை ஆதரித்தால் இரண்டுக்குமிடையில் என்ன வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்தவர்கள் கூறவும்.

அனுரவின். கடசியிலும். தமிழர்களை தான் வடக்கு கிழக்கில் நிறுத்தி உள்ளார்கள்  அவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு வாக்கு போடலாம்    

தமழரசுகட்சிக்கு   தீர்வு தரும் தகுதி இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

தேசியத்தை உதறிதள்ளிவிட்டு சிங்களவனுடன் சேரவா என்று கேட்கிறீர்கள் 

தற்கால தமிழர் அரசியலில் தேசியத்தை விசுவாசமாக காவி திரியும் தமிழர் தலைமை எவரும் இல்லையென்றும் நீங்களே பதிலும் சொல்கிறீர்கள்.

நான் தற்போதைய நிலமைபற்றி சொன்னது தமிழர்கள் இப்படி செய்தால் நல்லாயிருக்கும் என்பதல்ல, இப்படித்தான் செய்யபோகிறார்கள் என்றே குறிப்பிட்டிருக்கிறேன்

23 minutes ago, விசுகு said:

நாம் ஒவ்வொருவரும் என்ன செய்தோம் செய்கிறோம். பதில் பூச்சியம் தானே? அப்படியானால் அந்த அரசியல்வாதிகளை மட்டும் கை நீட்டி என்ன பிரயோஜனம்???

ஆயுதபோராட்டகாலத்தில் தாயகமும் புலமும் சேர்ந்து நின்று எம் தேச அரசியலில் நின்றோம், இன்று அவ்வாறல்ல அங்கு தமிழர் அரசியல் கட்சிகளுக்கு நம்பி வாக்களிக்கும் மக்களே தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள் , எம்மால் அந்த கட்சிகளின்மீது எந்த செல்வாக்கும் செலுத்தமுடியாது  மனதில் பட்டதை மட்டுமே பேசமுடியும் அதுமட்டுமே எம் எல்லை. அதனால்தான் அங்கே கட்சிகள் ஆளுக்கொரு திசையில் ஆடுகிறார்கள். 

நாம் மக்களில் ஒருவர் மக்கள் பிரதிநிதிகள் அல்ல, 2009 இன் பின்னரான இலங்கை தமிழர் அரசியலில் புலம்பெயர்ந்தவர் நாம் என்ன செய்தோம் என கேட்க முடியாது நமது மக்கள் அங்கே நம்பி தேர்வு செய்த அரசியல்வாதிகள் என்ன செய்தார்கள் என்று மட்டுமே கேட்க முடியும்,

எமது இனம் என்ற ஒன்று அங்கிருக்கும்வரை, அவர்கள் உறவென்று நாம் இங்கிருக்கும்வரை ஒருவர்மேல் ஒருவர் அக்கறை கொண்டேயிருப்போம்.

ஆயுதபோராட்ட காலத்தில்தான் நாம் என்ன செய்தோம் என்று ஒவ்வொரு மனிதனும் தன்னைதானே கேட்கமுடியும்,ஏனெனில் புலமும் அகமும் சேர்ந்து செதுக்கியது அந்த காலகட்டம். தன்னால் முடிந்ததை தாயக விசுவாசமுள்ள ஒவ்வொரு தமிழனும் எமது இயக்கத்துக்கும் மக்களுக்கும்  தன்னையறியாமல்கூட தன்னால் முடிந்தவரை  உதவியிருக்கிறான், உதவியிருப்பான் நீங்களுட்பட.

அதனால் நாம் என்ன செய்தோம் என்று இப்படி ஒரு கேள்வியை இன்னொருமுறை எழுப்பாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

ஜயா

இதெல்லாம் தெரிந்தது தான்.

எனவே  தமிழர் நிலம் மற்றும் தமிழ்தேசியம் என்பதை உதறித் தள்ளிவிட்டு சிறீலங்கன் என்று எல்லோரும் ஜேவிபியில் கலந்து விடலாம் என்கிறீர்களா?  சுத்தி வளைக்காமல் ஆம் இல்லை என்று மட்டும் பதில் சொல்லுங்கள். 

கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டி இடுவதன் மூலம்  நாங்கள் இலங்கையன்.  என்று தான் சொல்லி கொண்டிருக்கிறார்கள் தமிழர் நிலம் தமிழ்தேசியம். உதறிவிட்டுத்தான். உள்ளார்கள்   

இங்கே நான் இருக்கும் இடத்தில் ஒரு தமிழ் பிள்ளை.  உயர்தரத்தில். பெறுபேறு.  1.      எடுத்தது  அந்த பாடசாலையில்

22  வருடங்களுக்கு பின்  எட்டப்பட்ட பெறுபேறு.   எங்கள் மாகாணத்தில் உள்ள அரசியல் கட்சி இதனை அறிந்து   

ஆறு ஆண்டுகளுக்கு மாத மாதம் 1300 யூரோ   வழங்குகிறது மருத்துவம் படிக்க   இது மிகவும் அதிகம்   

இந்த தமிழரசுகட்சி    தமிழ் மக்களுக்கு என்ன செய்துள்ளது ??  

சனத்தொகையை. அதிகரிக்க நடவடிக்கை எடுத்ததா??    இல்லை 

ஏழைகளை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்ததா. ?? இல்லை 

கோழி பண்ணை     ஆட்டு பண்ணை    மாட்டுப் பண்ணை   ....  போன்றவற்றிற்கான ஆலோசனை  பண உதவி   பல ஆண்டுகளுக்கு குத்தகைக்கு நிலம்   இப்படி ஏதாகினும் செய்துள்ளார்களா   ?? இவர்கள் 

எந்த திட்டமிடலுமற்றவர்கள்.    சோம்பேறிகள். 

பாராளுமன்றத்தை  படுக்கையறையாக. மட்டுமே பயன்படுத்தி கொண்டார்கள்   😂🤣

  • கருத்துக்கள உறவுகள்

சோசலிஸ்ட்களின் தோழர் ஆயிரம் பூக்கள் மலரட்டும்  என சொன்னால் கை தட்டுகிறோம் ..எங்கன்ட ஆட்கள் அதை நடைமுறைப்படுத்தினால் கத்துகின்றோம் ஒற்றுமையில்லை

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2024 at 03:07, ஏராளன் said:

1 hour ago, விசுகு said:

எம் தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்பது தான் நான் சொல்வது. அதற்காக நாம் ஒவ்வொருவரும் என்ன செய்தோம் செய்கிறோம். பதில் பூச்சியம் தானே? அப்படியானால் அந்த அரசியல்வாதிகளை மட்டும் கை நீட்டி என்ன பிரயோஜனம்???

சோசலிஸ்ட்களின் தோழர் ஆயிரம் பூக்கள் மலரட்டும்  என சொன்னால் கை தட்டுகிறோம் ..எங்கன்ட ஆட்கள் அதை நடைமுறைப்படுத்தினால் கத்துகின்றோம் ஒற்றுமையில்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

ஆக நான் முக்கி முக்கி எழுதினதில் நீங்கள் புரிந்து கொண்டது ஜேவிபியுடன் தமிழர்களை இணைய சொல்கிறேன் என்பதா விசுகு அண்ணா?

சிங்களவனுடன் நான் இணைய சொல்லவில்லை சிங்களவர்களுடன் தமிழர்களை இணைக்கும் வேலையை தமிழர் கட்சிகளே செய்து கொண்டிருக்கின்றன என்ற கள யாதார்த்தத்தை தட்டிவிட்டிருக்கிறேன்.

சரி என்னிடம் நீங்கள் ஒரு கேள்வி கேட்டதால் உங்களிடமும் நான் ஒரு கேள்வி கேட்கிறேன் ஒரேவரியில் சொல்லிவிடுங்கள்.

தமிழர்தேசத்தில் தற்கால தமிழர் அரசியலில் தமிழ் தேசியத்தையும் தமிழர் நிலப்பரப்பையும் அடையாளமாய் விசுவாசமாய் விட்டுக்கொடுப்பில்லாமல்  தாங்கி நிற்கும் தமிழ் கட்சியும் தலைவரும் எது & யார்?

தமிழ்க் கட்சிகள் மட்டுமா? 

புலம்பெயர் ஸ் எங்கே போனார்கள்? அவர்கள்தான் இலங்கைத் தமிழரின் 2009க்குப் பிந்திய அவல நிலைக்குப் பிரதான காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

தமிழ்க் கட்சிகள் மட்டுமா? 

புலம்பெயர் ஸ் எங்கே போனார்கள்? அவர்கள்தான் இலங்கைத் தமிழரின் 2009க்குப் பிந்திய அவல நிலைக்குப் பிரதான காரணம். 

நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியாது. ஆனால் நான் 2009க்கு முன்னரும் பின்னரும் என்னால் முடிந்ததற்கும் மேலாக செய்திருக்கிறேன். 

2009 க்கு பின்னர் 2010? இல் பிரான்சில் மாவை சேனாதிராஜா சிறீதரன் மற்றும் வித்யாதரன் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது. (வித்தியாதரன் மேடையில் இல்லாமல் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தார்) அதில் கூட்டமைப்பு சார்பாக ஏதாவது செய்ய முனைகிறார்கள் நாமும் ஏதாவது செய்யலாம் என்று அதில் கலந்து கொண்டேன். ஆனால் அங்கே தமிழரசுக் கட்சியின் கிளை ஒன்றை பிரான்ஸில் திறக்கும் திட்டம் பற்றி பேச்சு நடந்தது.  முதல் ஆளாக நான் எழுந்து கூட்டமைப்பு அதன் தொடர்பான விடயங்களை பேசுவதாக இருந்ததால் பேசலாம். தமிழரசுக் கட்சி பற்றியே அதன் கிளை திறப்பு சார்ந்தோ இங்கே பேசவேண்டாம். அந்த நோக்கத்தோடு பிரான்சுக்கு வரவும் வேண்டாம் என்றபோது வந்திருந்த அனைவரும் அதனை ஆமோதித்தனர். இதுவரை பிரான்ஸில் தமிழரசுக் கட்சிக்கு கிளை இல்லை.

இன்று கூட்டமைப்பு அழிந்து தமிழரசுக் கட்சியும் அழிந்து நிற்கும் நிலை 15 வருடங்களுக்கு முன்னர் நான் கூட்டமைப்பு சார்ந்த தூரநோக்கோடு எதற்காக தமிழரசுக் கட்சியை தனியே வளர்ப்பதை தடுக்க முனைந்தேனோ அதற்கு சாட்சியாக எம் கண் முன்னே வரலாறாகி நிற்கிறது..

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

சோசலிஸ்ட்களின் தோழர் ஆயிரம் பூக்கள் மலரட்டும்  என சொன்னால் கை தட்டுகிறோம் .

அநுரகுமார திசாநாயக அப்படி வேறு சொல்லியிருக்கின்றாரா 🤣
யாழ்பாணத்தில் அநுரகுமார திசாநாயக ஒரு புழுவை வேட்பாளராக நிறுத்தினால் அந்த புழு வெற்றி பெறுமாம் தமிழர்கள் அவருக்கு இவ்வளவு துரம் ஆதரவு கொடுப்பதனால் அவர் ஏழை தமிழர்களுக்கு கோழி பண்ணை  ஆட்டு பண்ணை  மாட்டுப் பண்ணை அமைத்து கொடுத்து  கொடுக்கலாமே 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாத் தமிழர்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் புழுக்கள் ஆடுகள்  மாடுகள் கோழிகளை

தான் விளங்கிக் கொள்ள வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

எமது பிரதிநிதிகள் தமிழர்களிடம் வாக்குகளை வாங்கி சிங்களவனை ஆதரிப்பதைவிட சிங்களவனுக்கு நேரடியாக அந்த வாக்கை போட்டு அவனை ஆதரித்தால் இரண்டுக்குமிடையில் என்ன வித்தியாசம் உள்ளது என்பதை புரிந்தவர்கள் கூறவும்.

நேரிடையாக கடவுளிடம் வேண்டி வரத்தை பெறுவதை விட எதற்கு நடுவில் பூசாரி என்கிற சிம்பிள் லாஜிக் தான். இந்த பூசாரிகள் கடவுள் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான் வகையறாக்கள். பூசாரி எங்களிடம் மாவீரர் தமிழ் தேசியம் என்று பூச்சாண்டிகாட்டி தேசிக்காய்கள் ஆக்கிவிட்டு கடவுளிடம் அவர்களுக்கு மட்டுமே வரம் வாங்கி டிக்கிக்கு கீழே அமுக்குவதில் வல்லவர்கள். நான் பிறந்து வளர்ந்த கல்முனை மண்ணில் தமிழ் பிரதேச சபை தரமுயர்த்தலையே செய்ய முடியாத கையறு நிலையில் எமது தமிழர்கள் இருப்பது எனக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. இப்போது அனுரவின் அரசில் முஸ்லிம்களும் பற்கள் பிடுங்கப்பட்டு உட்காரவைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஒரு சிறிய வெளிச்சம் தெரிகிறது. அரசாங்கத்தால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு தாபிக்கப்பட்ட ஒரு நிர்வாக அலகை நடைமுறைப்படுத்த முடியாமல் முட்டுக்கட்டை போட்டது இந்த நிமிடம் வரை முஸ்லிம்களின் அரசியல் பலம் மட்டுமே. இம்முறை அனுரவின் அம்பாறை மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஒரு தமிழ் பல்கலை மாணவன் இந்த தரமுயர்த்தலை நடத்திக்காட்டுவதாக சூளுரைத்துள்ளார். ஆனால் பூசாரிகளுக்கு குத்தோ குத்து என்று குத்திவிட்டு அநுரவிடம் போய் நாக்கை தொங்கப்போட முடியாது பாருங்கோ. எமது மக்களை நம்ப முடியாது என்பதால் பூசாரிகளின் அட்டகாசம் தொடர்கிறது. ஆனால் இம்முறை முழுதாக களம் இறங்கியுள்ளோம். பூசாரிகளை இம்முறை எப்படியும் தேசிக்காய்கள் ஆக்கியே தீருவது என்று கங்கணம் கட்டியுள்ளோம்.         

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நல்ல செய்தி     இந்த பூசாரிகள்    தங்களுக்கு பிடிக்காத ....தங்களின் சொல்லு கேட்க்காத.   அரச உத்தியோகத்தர்கள் காட்டுப் பிரதேசங்களுக்கு இடம்மாற்றுவதில். வல்லவர்கள்.   தற்போது வடமாகாண சபை ஆளுநர் வேதநாயகம்.     அரச அதிபர்  ஆக இருந்த போது  தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்  தொல்லை கொடுத்தது என்று வாசித்த ஞாபகம்   விபரங்களை மறந்து விட்டேன்    

உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

வெளிப்புற பொறிமுறையை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – மனித உரிமை பேரவை தீர்மானத்தை நிராகரித்தது இலங்கை

image

எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும்; அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த அறிக்கையில் இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

குறிப்பிட்ட தீர்மானத்தின்[57/L.1] நகல்வடிவம் ஐக்கிய நாடுகள் தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கின்றது.

மனித உரிமை ஆணைக்குழுவின் தீர்மானத்தையும் 51/1அதற்கு முந்தைய தீர்மானத்தையும் 46/1 இலங்கை நிராகரித்துள்ளது. இந்த தீர்மானத்தின் மூலமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை ஏற்படுத்தப்பட்டது.

நாங்கள்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலிருந்து எங்களை விலக்கிக்கொள்கின்றோம்; அதற்கான காரணங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.

தொடர்புபட்ட நாடு என்ற அடிப்படையில் இலங்கையின் சம்மதம் இன்றியே  51/1 தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. வாக்கெடுப்பின் போது உலக நாடுகள் அந்த தீர்மானம் குறித்து பிளவுபட்டிருப்பது வெளிப்பட்டது.

இதன் காரணமாக அந்த  51/1  தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆணையை மேலும் நீடிக்கும் தீர்மானம் மனித உரிமை பேரவையின் பொது உடன்பாடு அற்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்குள் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை ஏற்படுத்துவது முன்னர் ஒருபோதும் இடம்பெறாத விடயம்.

எந்தவொரு இறையாண்மையுள்ள அரசாலும்  அதன் அரசமைப்பிற்கு முரணான மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையை கட்டாயமாக திணிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

https://www.virakesari.lk/article/195898

  • கருத்துக்கள உறவுகள்

அநுரகுமார திசாநாயக்கவின் தமிழர்களுக்கான பிரசார காணொளி ஏற்கெனவே வந்துவிட்டதே
ஐயர்மார்கள் இனி எங்களுக்கு வேண்டாம் அந்த கடவுளே நேரிடையாக எமக்கு அனுப்பிவைத்த பிள்ளை தான் அநுரகுமார திசாநாயக்க. சிங்கள மக்கள் தெரிவு செய்ததினால் அவர் ஜனாதிபதியானார் என்று நினைத்துவிட வேண்டாம்  அந்த பிள்ளையை ஆதரித்து பலப்படுத்துவோம்.

கடவுளை நம்பிக்கை இல்லாதோர் சிங்கள மக்கள் தமிழர்களுக்காக எப்போதும் சிறந்ததை தான்  தெரிவு செய்வார்கள் என்று எடுத்து கொள்லலாம்🙄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

நேரிடையாக கடவுளிடம் வேண்டி வரத்தை பெறுவதை விட எதற்கு நடுவில் பூசாரி என்கிற சிம்பிள் லாஜிக் தான். இந்த பூசாரிகள் கடவுள் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான் வகையறாக்கள். பூசாரி எங்களிடம் மாவீரர் தமிழ் தேசியம் என்று பூச்சாண்டிகாட்டி தேசிக்காய்கள் ஆக்கிவிட்டு கடவுளிடம் அவர்களுக்கு மட்டுமே வரம் வாங்கி டிக்கிக்கு கீழே அமுக்குவதில் வல்லவர்கள். நான் பிறந்து வளர்ந்த கல்முனை மண்ணில் தமிழ் பிரதேச சபை தரமுயர்த்தலையே செய்ய முடியாத கையறு நிலையில் எமது தமிழர்கள் இருப்பது எனக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. இப்போது அனுரவின் அரசில் முஸ்லிம்களும் பற்கள் பிடுங்கப்பட்டு உட்காரவைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஒரு சிறிய வெளிச்சம் தெரிகிறது. அரசாங்கத்தால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு தாபிக்கப்பட்ட ஒரு நிர்வாக அலகை நடைமுறைப்படுத்த முடியாமல் முட்டுக்கட்டை போட்டது இந்த நிமிடம் வரை முஸ்லிம்களின் அரசியல் பலம் மட்டுமே. இம்முறை அனுரவின் அம்பாறை மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஒரு தமிழ் பல்கலை மாணவன் இந்த தரமுயர்த்தலை நடத்திக்காட்டுவதாக சூளுரைத்துள்ளார். ஆனால் பூசாரிகளுக்கு குத்தோ குத்து என்று குத்திவிட்டு அநுரவிடம் போய் நாக்கை தொங்கப்போட முடியாது பாருங்கோ. எமது மக்களை நம்ப முடியாது என்பதால் பூசாரிகளின் அட்டகாசம் தொடர்கிறது. ஆனால் இம்முறை முழுதாக களம் இறங்கியுள்ளோம். பூசாரிகளை இம்முறை எப்படியும் தேசிக்காய்கள் ஆக்கியே தீருவது என்று கங்கணம் கட்டியுள்ளோம்.         

இவ்வாறு நேரிடையாக கடவுளிடம் வேண்டி வரத்தை பெறலாம்  எதற்கு நடுவில் பூசாரி என்கிற சிம்பிள் லாஜிக்கில் புகுந்து கடவுளின் காலில் விழுந்த பலர் நம்மில் உள்ளனர். அவர்கள் படைச்சதையும் ஆட்டையை போட்ட வரலாறு எம்முடையது. எனவே கடவுள் தான் பைசாரிகளை வைத்திருக்கும் நிலையை ( நாம் எவரைத்தான் மாற்றி மாற்றி அனுப்பினாலும்) தான் நாம் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

நேரிடையாக கடவுளிடம் வேண்டி வரத்தை பெறுவதை விட எதற்கு நடுவில் பூசாரி என்கிற சிம்பிள் லாஜிக் தான். இந்த பூசாரிகள் கடவுள் கொடுத்தாலும் பூசாரி விடமாட்டான் வகையறாக்கள். பூசாரி எங்களிடம் மாவீரர் தமிழ் தேசியம் என்று பூச்சாண்டிகாட்டி தேசிக்காய்கள் ஆக்கிவிட்டு கடவுளிடம் அவர்களுக்கு மட்டுமே வரம் வாங்கி டிக்கிக்கு கீழே அமுக்குவதில் வல்லவர்கள். நான் பிறந்து வளர்ந்த கல்முனை மண்ணில் தமிழ் பிரதேச சபை தரமுயர்த்தலையே செய்ய முடியாத கையறு நிலையில் எமது தமிழர்கள் இருப்பது எனக்கு மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. இப்போது அனுரவின் அரசில் முஸ்லிம்களும் பற்கள் பிடுங்கப்பட்டு உட்காரவைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஒரு சிறிய வெளிச்சம் தெரிகிறது. அரசாங்கத்தால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு தாபிக்கப்பட்ட ஒரு நிர்வாக அலகை நடைமுறைப்படுத்த முடியாமல் முட்டுக்கட்டை போட்டது இந்த நிமிடம் வரை முஸ்லிம்களின் அரசியல் பலம் மட்டுமே. இம்முறை அனுரவின் அம்பாறை மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஒரு தமிழ் பல்கலை மாணவன் இந்த தரமுயர்த்தலை நடத்திக்காட்டுவதாக சூளுரைத்துள்ளார். ஆனால் பூசாரிகளுக்கு குத்தோ குத்து என்று குத்திவிட்டு அநுரவிடம் போய் நாக்கை தொங்கப்போட முடியாது பாருங்கோ. எமது மக்களை நம்ப முடியாது என்பதால் பூசாரிகளின் அட்டகாசம் தொடர்கிறது. ஆனால் இம்முறை முழுதாக களம் இறங்கியுள்ளோம். பூசாரிகளை இம்முறை எப்படியும் தேசிக்காய்கள் ஆக்கியே தீருவது என்று கங்கணம் கட்டியுள்ளோம்.         

வாழ்த்துக்கள் 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/10/2024 at 18:07, ஏராளன் said:

இலங்கை தொடர்பான எந்தவொரு ஜெனீவா தீர்மானத்திற்கும் அனுர அரசாங்கம் எதிர்ப்பு - யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது - விஜித ஹேரத்

யுத்தகுற்றங்களை விசாரிக்க வேண்டுமாயின்...... அதற்கு உதவி செய்த நாடுகளையும் விசாரிக்க வேண்டும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

யுத்தகுற்றங்களை விசாரிக்க வேண்டுமாயின்...... அதற்கு உதவி செய்த நாடுகளையும் விசாரிக்க வேண்டும் அல்லவா?

ஒம்.  இந்தியாவை விட்டுட்டு மற்றைய நாடுகளை விசாரிக்கலாம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

யுத்தகுற்றங்களை விசாரிக்க வேண்டுமாயின்...... அதற்கு உதவி செய்த நாடுகளையும் விசாரிக்க வேண்டும் அல்லவா?

சட்டபுட்டுன்னு விசாரிச்சு முடிங்கப்பா... காணாமலாக்கப்பட்டவர்களின் எலும்புகளும் உக்கத்தொடங்கி விட்டதுமல்லாமல் கூத்தாடி தாத்தா தமிழீழம் பார்க்காமலேயே மலையேறிட்டார். இந்த ஐ. நா கொடியை பதாகையில் பதித்துவிட்டு தெருவோரம் குந்திக்கொண்டிருக்கும் பாட்டிமார்களும் ஒவ்வொன்றாக மலையேறுகினம். இப்படியே போனால் ஐ.நா கொடியின் மதிப்பு என்னாவது ...?  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.