Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் ஒழிப்புச் சங்கம்.

Featured Replies

காதல் ஒழிப்புச் சங்கம். :lol::lol::lol:

கலகல கலக்கல்.

யாழ்க்களத்தில் உலாவரும் பல வாய்ச்சொல் வீரர்களைக் கோழையாக்கும் காதலை ஒழிப்பதற்காக குடுகுடு நெடுக்கு தலைமையில், சன்சைன் சாத்து, சீற்றச் சின்னா, இடக்குக் கலைஞன், இல்லறப் புத்தன், ஏழைக் கந்து, எடக்கு டங்கு ஆகிய அறுவரின் அருமருந்தான ஆலோசனைகளுடன் அறுவை ஆதியின் அடக்கத்துடனும் இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் காதற் கோழையாகிய விகடகவியே இச்சங்கம் உருவாவதற்குப் பெருங்காரணியாக இருப்பதை நாங்கள் கூறத்தேவையில்லை. கவிப்பூங்காவில் நீங்களே அதனை நேரில் தரிசிக்கலாம்.

இதன் நோக்கம் காதலில் இருந்து தப்பிக் கொள்வது எப்படி?

பழைய பாணியில் (அந்தக்காலம்) சாத்து, சின்னா, கந்து ஆகியோர் காதல் வராமல் நம்மைக் காப்பது எப்படி என்றும்,

புதிய பாணியில் (இந்தக் காலம்) கலைஞன், புத்தன், டங்கு

காதல் வராமல் நம்மைக் காக்கச் சில வழிகளையும் இங்கு வந்து எடுத்துரைக்கும்படி கொசுறு ஆதி கேட்டுக் கொள்கிறேன்.

நெடுக்கு அப்பப்போ இவர்களின் ஓட்டத்தை தொகுத்து கடிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றைத்தாங்கிக் கொள்ள இந்த வீரர்களுக்கு திராணி உள்ள காரணத்தாலும் இந்த கலகல கலக்கல் கலங்கல் குட்டையாகத் தெரியும்.

ஓ.. பார்வையாளர்களாக வருபவர்களும் கலக்கல் கருத்தை வைத்து குடுகுடு நெடுக்கையும், சன்சைன் சாத்துவையும், சீற்றச் சின்னாவையும், ஏழைக் கந்துவையும், இல்லறப்புத்தனையும், இடக்குக் கலைஞனையும், எடக்கு டங்குவையும் கதற வைக்கலாம். அப்படிக் கதற வைக்கப்போகின்ற கண்மணிகளுக்கு யாழ்க்களத் தசமத்தலையன் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவிப்பார்.

  • Replies 103
  • Views 19.8k
  • Created
  • Last Reply

காதல் ஒழிப்புச் சங்கம். :lol::lol::lol:

அண்மையில் காதற் கோழையாகிய விகடகவியே இச்சங்கம் உருவாவதற்குப் பெருங்காரணியாக இருப்பதை நாங்கள் கூறத்தேவையில்லை. கவிப்பூங்காவில் நீங்களே அதனை நேரில் தரிசிக்கலாம்.

அடடா நிச்சயமா இது காமடிதான்.. :lol:

ஒரு நல்ல சங்களம் அமைச்சு இளைஞர்களைக் காப்பற்ற சினைத்த ஆதிக்கு வாழ்த்துகள்..

அதற்கு நானும் ஒரு காரணமென்றறிந்ர் பெருமையாயக இருக்கு..

ஆதி என்னை பற்றி தெரிஞ்சவங்க கனடாலயும் இருக்காங்கப்பா.. இதுக்கு போய் உங்களுயும் சேர்த்தெல்லா வையப்போறாங்க..

காதல் ஒழிப்புச் சங்கம். :lol::lol::lol:

கலகல கலக்கல்.

யாழ்க்களத்தில் உலாவரும் பல வாய்ச்சொல் வீரர்களைக் கோழையாக்கும் காதலை ஒழிப்பதற்காக குடுகுடு நெடுக்கு தலைமையில், சன்சைன் சாத்து, சீற்றச் சின்னா, இடக்குக் கலைஞன், இல்லறப் புத்தன், ஏழைக் கந்து, எடக்கு டங்கு ஆகிய அறுவரின் அருமருந்தான ஆலோசனைகளுடன் அறுவை ஆதியின் அடக்கத்துடனும் இச்சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் காதற் கோழையாகிய விகடகவியே இச்சங்கம் உருவாவதற்குப் பெருங்காரணியாக இருப்பதை நாங்கள் கூறத்தேவையில்லை. கவிப்பூங்காவில் நீங்களே அதனை நேரில் தரிசிக்கலாம்.

இதன் நோக்கம் காதலில் இருந்து தப்பிக் கொள்வது எப்படி?

பழைய பாணியில் (அந்தக்காலம்) சாத்து, சின்னா, கந்து ஆகியோர் காதல் வராமல் நம்மைக் காப்பது எப்படி என்றும்,

புதிய பாணியில் (இந்தக் காலம்) கலைஞன், புத்தன், டங்கு

காதல் வராமல் நம்மைக் காக்கச் சில வழிகளையும் இங்கு வந்து எடுத்துரைக்கும்படி கொசுறு ஆதி கேட்டுக் கொள்கிறேன்.

நெடுக்கு அப்பப்போ இவர்களின் ஓட்டத்தை தொகுத்து கடிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றைத்தாங்கிக் கொள்ள இந்த வீரர்களுக்கு திராணி உள்ள காரணத்தாலும் இந்த கலகல கலக்கல் கலங்கல் குட்டையாகத் தெரியும்.

ஓ.. பார்வையாளர்களாக வருபவர்களும் கலக்கல் கருத்தை வைத்து குடுகுடு நெடுக்கையும், சன்சைன் சாத்துவையும், சீற்றச் சின்னாவையும், ஏழைக் கந்துவையும், இல்லறப்புத்தனையும், இடக்குக் கலைஞனையும், எடக்கு டங்குவையும் கதற வைக்கலாம். அப்படிக் கதற வைக்கப்போகின்ற கண்மணிகளுக்கு யாழ்க்களத் தசமத்தலையன் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவிப்பார்.

ஆகா..... அருமையான அவசியமான சங்கம். உங்கள் சங்கம் வாழ்க.. வளர்க.... :lol::wub:

இதில் பெண்கள் யாரும் இல்லையா?? :lol: அப்ப ஆண்கள் கூடி பெண்களிடம் இருந்து தப்புவது எப்படி என்று தீர்வுகான போறீங்கள்.... :lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அதான் பெண்கள் சார்பில உங்கள nபோடலாம்னு இருக்கம் மான் நீங்க றெடியா?

காதல்ல பாதிக்கப்படுறது ஆண்கள் தான் கூட அதான் ஆன்கள் மெம்பர்ஸ் கூடவா இருக்கு..

காதல் ஒழிப்பா முடியுமா?

ஆதி வாசி ங்க அடக்கமா

வாள் எடுத்து வரப்போகுது வனிதையர் கூட்டம்

வால் அறுந்து எடுக்கப் போறார் ஆதிவாசி ஓட்டம்

சங்கம் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

யாரப்பா பொருளாளர்? :lol::lol::lol:

:lol::lol::lol:

என்னக் கேக்காமல் என்னையும் சேர்த்து சங்கம் ஒண்டு துவங்கிப் போட்டாங்கள்..

இதுக்கு எனது எதிர்ப்பை தெரிவிப்பதோடு, இந்த சங்கத்திற்கு போட்டியாக 'காதல் வளர்ப்புச் சங்கம்' என்ற ஒன்றை நான் ஆரம்பிக்கின்றேன்.

எமது காதல் வளர்ப்புச் சங்கத்தின் தேசியப் பொருட்களாக கீழ்வருபவை தெரிவு செய்யப்பட்டுள்ளன.

எமது சங்கத்தின் தேசிய கீதத்தை இங்கே கேளுங்கள்..

எமது சங்கத்தின் தேசிய பறவையை இங்கே பாருங்கள்..

lovebirds.jpg

எமது சங்கத்தின் தேசிய பூவை இங்கே பாருங்கள்..

Rose.jpg

மிச்சம் பிறகு..

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டாம்பி.. வயசு போன நேரத்தில தலைமைப் பதவி தந்து தலையைக் கொய்யப் போறியளே. laugh.gif

சரி சரி.. தலை போற காதல் தொலைஞ்சா.. பல தலைகள் குழம்பாமல் இருக்குமில்ல.

bleedingheart2nh7.jpg

எமது சங்கத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை. இதனை பிரதி எடுத்தல்... எமது ஒப்புதல் இன்றி பாவித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சங்கத்தில காதலிச்சு ஏமாற்றப்பட்டவங்க ஏமாந்தவங்க.. திருமணம் ஆகி காதலிச்சு.. மனிசிமாரட்ட அடி குட்டு ஏச்சு வாங்கிறவங்க.. கணவன் மாரட்ட சித்திரவதைப் படுறவங்க.. திருமணமாகாமலே.. டேட்டிங் போன இடத்தில.. யுனிக்கிப் போன இடத்தில.. கோப்பி குடிக்கப் போன இடத்தில.. தியேட்டருக்கு போன இடத்தில.. கிளப்புக்குப் போன இடத்தில என்று..இணையத்தில உலாத்தேக்க...இப்படி போன இடத்தில தொத்திக் கொண்ட காதல் என்ற பெயரில ஒட்டுண்ணிகளாக உங்களோட ஒட்டிக் கொண்டு உங்க உயிரை, கிரட்டிட் காட்டை சுரண்டுற.. சீவங்களிட்ட இருந்து .. கவர்ச்சிகரமான காதல் கவிதையால காந்தமும் இரும்பும் போல இழுபட்டு.. நொஞ்சி போனவங்க.. இவற்றில இருந்து விடுதலை வேண்டி நிக்கிறவை.. இதில.. இணைய முன்னுரிமை அளிக்கப்படுகின்றர் என்பதை வழுக்கைத் தலையை தடவியபடி.. நெடுக்கு தாத்தா இத்தால் அறியத் தருகிறார். laugh.gifbiggrin.gif

ஏண்டாம்பி ஆதி.. நெடுக்கு தாத்தாவை அவமானப்படுத்தனும் என்று எத்தின நாள் பிளான். ஆதித்தம்பி அறியாமத்தான் கேட்கிறன்.. சங்கம் அமைக்கேக்க.. எவன் எவள் எல்லாம் குறுக்கால போங்கள் என்று தெரிஞ்சு அமைக்கிறதில்லையே.

காதல் மயக்கத்தில கிடக்கிற.. வண்டுகளை சங்கத்துக்க கொண்டு வந்தா அதுகள் மலரைத் தேடித்தானே பறக்குங்கள்..! என்னால கொள்கைப் பிடிப்பில்லாத ஆக்களோட சங்கத்துக்க இருக்க முடியாது. இது அப்புறம் சக்கடத்தார் ஏறிக் கவிழ்ந்த மண் குதிரைதான் போல ஆகிடும்..!
biggrin.giflaugh.gif

Edited by nedukkalapoovan

ஆதிவாசி அண்ணா! என்ன பாதிப்பு ராசா உனக்கு? காதலை ஒழிக்கப் புறப்பட்ட கர்ம வீரனே! கலைஞன்,புத்தன், டங்கு இவர்களெல்லாரையும் துணைக்கழைத்ததென்ன? நெடுக்கு சரி சரி.. தலை போற காதல் தொலைஞ்சா.. பல தலைகள் குழம்பாமல் இருக்குமில்ல. இப்படிச் சொன்னதால் கூட்டமாய்ச் சேர்ந்தே ஒழிச்சுக்கட்டப் போறீங்களா? வேண்டாம் ஐயா? வம்புல மாட்டிக்கப் போறீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் பயங்கரவாதத்தின் ஒரு பக்கம்...

picgt2.png

பட விளக்கம்: ஒரு பெண்ணால் காதல் என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு உருக்கழிக்கப்பட்ட மனிதர்களின்.. பழிவாங்கல். அப்பெண்ணிடமிருந்து பல மனிதர்களைக் காப்பாற்றல்... முயற்சியில்.. மரணங்கள் மிகுதல். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஆ காதல் ஒழிப்புக்கு ஒரு சங்கமா?

அதான் பெண்கள் சார்பில உங்கள nபோடலாம்னு இருக்கம் மான் நீங்க றெடியா?

காதல்ல பாதிக்கப்படுறது ஆண்கள் தான் கூட அதான் ஆன்கள் மெம்பர்ஸ் கூடவா இருக்கு..

நோ நோ... நான் வரவில்லை.... :lol::lol:

ஆண்களிற்கு தான் அவசியமான சங்கம் இது, ஏன் எனில் ஆண்கள் தான் காதலே வாழ்கை என நினைத்து வாழ்பவர்கள். :lol:

அப்புறம் ஆண்கள் காதலிக்காவிட்டால் காதலிக்கும் ஒரு சில பெண்களும் தப்பிவிடுவார்கள். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காதல் ஒழிப்புச் சங்கத்தின் உத்தியோக பூர்வ அறிவிப்புக்கள்.

 

எமது சங்க சர்வதேச இலச்சினை.

 

bleedingheart2nh7.jpg

 

 

இலச்சினை விளக்கம்: முள்ளுள்ள சிவப்பு ரோஜா போல.. வரும் காதல் எனும் கொடிய ஆயுதம். அது உங்கள் இதயத்தை ஈவு இரக்கமின்றி குத்திக் கிழித்து உங்கள் வாழ்வை அழிக்கும் அதனால் காதல் எனும் அவ்வாயுதத்தை ஒழிப்போம் அல்லது கட்டுப்படுத்துவோம்.

எமது சங்கத்தின் தெரிவு வர்ணம்:

கறுப்பு + சிவப்பு

இதயத்தில் இருந்து வடியும் இரத்தத்தின் சிவப்பு

காதல் ஒழிப்பு சங்கத்தின் சர்வதேசப் பறவை.

manakinredgr3.jpg

தெரிவு விளக்கம்: தனிமையில் இருக்கும் போது கம்பீரம் மிகுந்த சுய ஆதிக்கமுள்ள சுதந்திர நிலை. என்னை காதலோடு அணுக வேண்டாம் என்று..எச்சரிக்கை வழங்க சிவப்பு தலை. அழகைக் காட்டி ஆக்களை ஏமாற்றாத கறுப்பு உடல். காதலை மட்டுமே ஒழிக்கப் போறம் ஆனால் மனிதாபிமானம், ஜீவகாருணியம் காப்போம் என்று சொல்ல.. மங்கலமான மஞ்சள் நிறத்தில் உடலைத் தாங்கி நிற்கும் கால்கள்.

காதல் ஒழிப்பு சங்கத்தின் சர்வதேச விலங்கு.

deer-looking-for-dear-ones-wallpaper.jpg

கவரிமானை அடையாளப்படுத்த இம்மான் பாவிக்கப்ப அனுமதிக்கப்படுகிறது.

தேர்வு விளக்கம்: கொள்கையில் உறுதி வேண்டும். கொள்கையை இழந்தல் என்பது உயிரை இழந்தல் போன்றது. காதல் என்பது கொள்கையை மட்டுமல்ல.. தனிமனித சுதந்திரத்தையே இழக்கப்பண்ணி விடுவதால். காதல் பண்ணுறது ஆபத்தானது. வாழ்ந்தால் கொள்கையோடு கவரிமான் போல் அது உதிரா நிலை கொண்டு வாழ வேண்டும். மயிர் இழந்ததும் உயிரிழக்கும் கவரிமான் போல.. கொள்கை இழந்து ஒரு காதலா..??! தேவையா அது.

எமது சங்கத்துக்கான சர்வதேச மலர்

bleedingheartod2.jpg

இரத்தம் வழியும் இதய மலர்.

பொதுப் பெயர்: Bleeding Heart

தாவரவியல் பெயர்: Dicentra spectabilis

தேர்வு விளக்கம்: தோற்றமும் வர்ணமும் காதல் என்பது இதயத்தைக் கிழித்து.. காயப்படுத்தி உன்னை அழிக்கும். உன் இதயம் இந்த மலர் போல... காட்சியளிக்கும் காதல் என்ற ஆயுதத்தால் கிழிக்கப்படும் போது என்று காட்டல்.

எமது சங்கத்தின் சர்வதேசத்துக்கான உத்தியோகபூர்வ விழிப்புணர்வுப் பரிசுப் பொருள் அல்லது படம்.

roseatbleedingsz1.jpg

படம் அல்லது பரிசுத் தெரிவுக்கான விளக்கம்.காதலின் பெயரால் வதைக்கப்படும் அழகிய மொட்டுக்களின் வாழ்க்கை என்பதைக் காட்ட வாடிக் கருகிய ரோஜாச் செண்டு (பரிசுப் பொருளாக). காதல் வாழ்வின் சுதந்திரத்தை அழித்து ஒழுக்கத்தை அழித்து இருளுள் தள்ளும் என்பதைக் காட்ட இருள் சூழ்ந்த பின்னணி. காதல் வலிகள் மிகுந்தது ஆபத்தானது என்பதைக் காட்ட இரத்தத் துளிகள்.பிளவுத் தளம்.. காதல் உறுதியானதல்ல.. சுயநலம் மிகுந்தது.. கொள்கை அற்றது.. காலம், சூழல், நட்பு,பெற்றோர், வசதி, வருமானம், மற்றும் தேவைகள் கருதி ஆள் விட்டு ஆளுக்கு தாவக் கூடியது என்ற எச்சரிக்கைக்கு.

(மு.கு: வாடிய ரோஜாச் செண்டாகப் பாவிக்க இயற்கையான ரோஜாச் செடிகளை வதைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. செயற்கையான வகையில் உருவாக்கப்பட்ட சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கையாக உக்கக் கூடிய இழைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட ரோஜாச் செண்டுகள் மட்டும் பாவிக்கப்பட வேண்டும்.)

காதல் ஒழிப்பு சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட காதல் ஒழிப்பு சர்வதேச புராதன அடையாளம்

everesttrekqm7.jpg

எவரெஸ்ட் மலைச் சிகரம்.

தேர்வு விளக்கம்: இலகுவில் காதல் என்ற பெயரில் மனதை சலனப்படுத்த இடமளிக்காத தன்மை. தனித்துவமாக உயர்ந்திருந்து உலகை வியக்க வைக்கும் இயற்கையின் அற்புதம். நடை உலகில் நடைமுறையில் உள்ளதெல்லாம் போலிக் காதல்கள் என்ற வகையில் அதை ஒழிக்கப் புறப்பட்ட நாம் தனித்து விடப்படவில்லை. நட்பு என்ற மிகப் பலம் பொருந்திய அத்திவாரத்தூடு ஒருங்கிணைந்திருத்தல் என்பதைக் காட்டல். காதல் போல கண்டவரும் கட்டியணைக்க என்று இல்லாமல்..இலகுவில் அடைய முடியாத ஒன்றாக மலை போல் உறுதி கொண்டு திகழ்தல். கொள்கைகளால் உலகின் உச்சியில் நாம் என்பதைக் காட்டல்..!

மிகுதி தொடரும்...

Edited by nedukkalapoovan

அண்ணா உங்கள் சங்கதிற்கு தேசிய கீதம் இல்லயா? ம்ம் லைக், காதல் பன்னாதீங்க காதலே பன்னாதீங்க... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா உங்கள் சங்கதிற்கு தேசிய கீதம் இல்லயா? ம்ம் லைக், காதல் பன்னாதீங்க காதலே பன்னாதீங்க... :lol::lol:

எங்கள் காதல் ஒழிப்பு சங்கத்தில் இணைய ஆண் - பெண் என்ற வேறுபாடு கிடையாது. ஆண்கள் தங்களை ஏமாற்றிய பெண்களைப் பற்றி சொல்லலாம். அல்லது ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வு கொடுக்கலாம். பெண்கள்.. ஆண்களைப் பற்றி விழிப்புணர்வு செய்யலாம்.

எமது சங்கத்துக்கான கீதத்தை நீங்களே தெரிவு செய்து வழங்க.. எமது சங்கத்தின் முதற் பெண் உறுப்பினராக உங்களை அங்கீகரித்து அழைக்கின்றோம்.. வாருங்கள்.. வந்து கீதத்தை இணையுங்கள்..! :D

  • தொடங்கியவர்

என்ன விகடம் ஒண்ணுமே புரியல்லை.

கனடாவில உங்களை வைய யாரு இருக்காங்க?

ஒரு வேளை உங்களைக் காதற்கோழை ஆக்கிய அவாவா?

ஆன் ஆதியை வையப்போறாங்க? ஆதி நல்லதைத்தானே செய்ய நினைக்கிறன்.

  • தொடங்கியவர்

ஆகா..... அருமையான அவசியமான சங்கம். உங்கள் சங்கம் வாழ்க.. வளர்க.... :lol::D

இதில் பெண்கள் யாரும் இல்லையா?? :lol: அப்ப ஆண்கள் கூடி பெண்களிடம் இருந்து தப்புவது எப்படி என்று தீர்வுகான போறீங்கள்.... :lol::lol::lol:

அட உங்களுக்கு விசயமே தெரியாதா?

ஒரு நாட்டார் பாடல் தாறன் பாருங்கோ

ஆண் - ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தே?

பெண் - பாம்புக் குட்டிக்குப் பல்லு விளக்கினேன் சும்மாவா இருந்தேன்?

ஆண் - ஏண்டி குட்டி என்னடி குட்டி என்னடி செய்தே?

பெண் - அம்மியடியில கும்மி அடிச்சேன் சும்மாவா இருந்தேன்?

என்று நீண்டுகொண்டே போகும் யாருக்கேணும் இப்பாடல் தெரிந்தால் இங்கு சேர்த்துவிடுங்கப்பா.

இப்படிப்பட்ட வேலைகள் அவர்களுக்கு இருக்கு.

கவரி என்ன இந்தச் சங்கத்தை ஒழிச்சுக் கட்டுற பிளானோ? :lol:

  • தொடங்கியவர்

குடுகுடு நெடுக்கு, ஆகா அசத்தலோ அசத்தல்.

ஆமா இடக்குக் கலைஞன் எங்கே?

  • தொடங்கியவர்

காதல் ஒழிப்பா முடியுமா?

ஆதி வாசி ங்க அடக்கமா

வாள் எடுத்து வரப்போகுது வனிதையர் கூட்டம்

வால் அறுந்து எடுக்கப் போறார் ஆதிவாசி ஓட்டம்

விவி சிவா, வெளிநாடுகளில இருக்கிற வனிதையர் கூட்டம்????

வாய்ச் சொல் எடுக்கவே பயப்பிடுவினம் இதில வாள் எடுத்து ஆதியில் வால் அறுக்கிறதோ? தைரியமிருந்தா இந்த இடத்தில குடுகுடு நெடுக்கைத் தாண்டி(முதல் வெட்டு :lol: குடுகுடு நெடுக்கிற்குத்தானே) ஆதியின் வாலை அறுக்கட்டும் பார்ப்போம்.

  • தொடங்கியவர்
ஏண்டாம்பி.. வயசு போன நேரத்தில தலைமைப் பதவி தந்து தலையைக் கொய்யப் போறியளே. :lol: சரி சரி.. தலை போற காதல் தொலைஞ்சா.. பல தலைகள் குழம்பாமல் இருக்குமில்ல.bleedingheart2nh7.jpgஎமது சங்கத்தின் உத்தியோகபூர்வ இலச்சினை. இதனை பிரதி எடுத்தல்... எமது ஒப்புதல் இன்றி பாவித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.இந்தச் சங்கத்தில காதலிச்சு ஏமாற்றப்பட்டவங்க ஏமாந்தவங்க.. திருமணம் ஆகி காதலிச்சு.. மனிசிமாரட்ட அடி குட்டு ஏச்சு வாங்கிறவங்க.. கணவன் மாரட்ட சித்திரவதைப் படுறவங்க.. திருமணமாகாமலே.. டேட்டிங் போன இடத்தில.. யுனிக்கிப் போன இடத்தில.. கோப்பி குடிக்கப் போன இடத்தில.. தியேட்டருக்கு போன இடத்தில.. கிளப்புக்குப் போன இடத்தில என்று..இணையத்தில உலாத்தேக்க...இப்படி போன இடத்தில தொத்திக் கொண்ட காதல் என்ற பெயரில ஒட்டுண்ணிகளாக உங்களோட ஒட்டிக் கொண்டு உங்க உயிரை, கிரட்டிட் காட்டை சுரண்டுற.. சீவங்களிட்ட இருந்து .. கவர்ச்சிகரமான காதல் கவிதையால காந்தமும் இரும்பும் போல இழுபட்டு.. நொஞ்சி போனவங்க.. இவற்றில இருந்து விடுதலை வேண்டி நிக்கிறவை.. இதில.. இணைய முன்னுரிமை அளிக்கப்படுகின்றர் என்பதை வழுக்கைத் தலையை தடவியபடி.. நெடுக்கு தாத்தா இத்தால் அறியத் தருகிறார். :lol::Dஏண்டாம்பி ஆதி.. நெடுக்கு தாத்தாவை அவமானப்படுத்தனும் என்று எத்தின நாள் பிளான். ஆதித்தம்பி அறியாமத்தான் கேட்கிறன்.. சங்கம் அமைக்கேக்க.. எவன் எவள் எல்லாம் குறுக்கால போங்கள் என்று தெரிஞ்சு அமைக்கிறதில்லையே.காதல் மயக்கத்தில கிடக்கிற.. வண்டுகளை சங்கத்துக்க கொண்டு வந்தா அதுகள் மலரைத் தேடித்தானே பறக்குங்கள்..! என்னால கொள்கைப் பிடிப்பில்லாத ஆக்களோட சங்கத்துக்க இருக்க முடியாது. இது அப்புறம் சக்கடத்தார் ஏறிக் கவிழ்ந்த மண் குதிரைதான் போல ஆகிடும்..! :D:lol:
சக்கடத்தார் ஏறினா அது மண் குதிர்தான் மாற்றமில்லை.குடுகுடு நெடு ஏறினா அது கற்குதிரை (விழமாட்டீங்க, அப்படியே குதிரை அசையாமல் நிற்கும் நீங்கதான் நெடுக்கு, களைச்சுத் தவிச்சு ஓடுற மாதிரி பாவைனை காட்ட வேணும்) :lol:
:lol::D:lol: என்னக் கேக்காமல் என்னையும் சேர்த்து சங்கம் ஒண்டு துவங்கிப் போட்டாங்கள்..இதுக்கு எனது எதிர்ப்பை தெரிவிப்பதோடு, இந்த சங்கத்திற்கு போட்டியாக 'காதல் வளர்ப்புச் சங்கம்' என்ற ஒன்றை நான் ஆரம்பிக்கின்றேன். எமது காதல் வளர்ப்புச் சங்கத்தின் தேசியப் பொருட்களாக கீழ்வருபவை தெரிவு செய்யப்பட்டுள்ளன.எமது சங்கத்தின் தேசிய கீதத்தை இங்கே கேளுங்கள்..எமது சங்கத்தின் தேசிய பறவையை இங்கே பாருங்கள்..lovebirds.jpgஎமது சங்கத்தின் தேசிய பூவை இங்கே பாருங்கள்..Rose.jpgமிச்சம் பிறகு..
இடக்கு என்று பேர் வச்சப்போவே இடறி இருக்கே எப்படிக் கவனிக்காம விட்டேன்?(ம்.......குடுகுடு இருக்கிற வரைக்கும் கவலையில்லை :lol: )
  • தொடங்கியவர்
ஆதிவாசி அண்ணா! என்ன பாதிப்பு ராசா உனக்கு? காதலை ஒழிக்கப் புறப்பட்ட கர்ம வீரனே! கலைஞன்,புத்தன், டங்கு இவர்களெல்லாரையும் துணைக்கழைத்ததென்ன? நெடுக்கு சரி சரி.. தலை போற காதல் தொலைஞ்சா.. பல தலைகள் குழம்பாமல் இருக்குமில்ல. இப்படிச் சொன்னதால் கூட்டமாய்ச் சேர்ந்தே ஒழிச்சுக்கட்டப் போறீங்களா? வேண்டாம் ஐயா? வம்புல மாட்டிக்கப் போறீங்க.
ஆமா இல்ல....இறை ரொம்பப் பயமுறுத்த வேணாம். :lol: இந்தக் கலைஞன் காலை வாரிவிட்டு எதிர்க்கட்சி ஆரம்பிச்சிட்டார்...இந்த இல்லறப் புத்தனையும், எடக்கு டங்குவையும் காணேல்லையே... பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்று ஓடிவிட்டார்களா?ஆமா எங்கே நம்ம சன்சைன் சாத்து, சீற்றச் சின்னா? :lol: படம் போட்டுத்தான் ஆட்களைத் தேடவேணுமோ?
ஆஆஆஆஆஆஆஆஆ காதல் ஒழிப்புக்கு ஒரு சங்கமா?
இன்னும் இந்த வாயைப்பிளந்து அலறுவதை நீங்க நிற்பாட்டவில்லையோ?
  • தொடங்கியவர்

குடுகுடு நெடுக்கு,

கோழையாதலைத் தடுக்கத்தாம்பா காதல் ஒழிப்புச்சங்கம்

போற போக்கைப் பாத்தா...... படு பயங்கரமா இருக்கே....

எதுக்கும் நான் மரப்பொந்தில ஒளிச்சுக் கொள்ளுவம் :lol:

ஆதியின் காதல் ஒழிப்புச் சங்கம் ஏன் ஆதியால் ஆரம்பிக்கபட்டது என்பதை டங்குமாமாவின் புலனாயின் உதவியுடன் அமெரிக்க எவ்.பி.யை கண்டுபிடித்துள்ளது :lol: ...........அதை பற்றிய திடுகிடும் தகவல் தான் இது........... :lol: !!

ஆதிவாசி காலகண்ணாடி செய்வதிற்காக மரத்தை விட்டு இறங்கி வந்தவர் தானே அந்த நேரத்தில் ஆதியின்ட கையில வாழைபழம் வேற இருந்தது :lol: .........அவர் இறங்கி நடந்து கொண்டு இருக்கும் போது ஒரு அழகிய பெண் ஆதி ஒன்று அந்த வழியா போய் இருக்கு உடனே நம்ம ஆதி தன் இதயத்தை தொலைத்துவிட்டார்!! :D

இதயத்தை தொலைத்த ஆதி உடனே தன் கவி திறமைய காட்டினார்!!

மழை கொண்ட காற்றே

துளியாக வா....

மனம் கொண்ட காற்றே

இசையாகி வா....

இலை வருடும் காற்றே

இமை மூடி வா..

இமை வருடும் காற்றே

இதயம் கொண்டு வா..!!

உடனே பெண் ஆதி நம்ம ஆதியை பார்த்து ஒரு சிரிப்பு சும்மாவா சொன்னவர் நம்ம நெடுக்ஸ் தாத்தா "சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று"...ஆனா மரத்தில் இருந்து கீழே இறங்கிய ஆதிக்கு அந்த யோசணை வரவில்லை :D இவரும் தன் கையில் இருந்த வாழைபழத்தை எல்லாம் அவளுக்கு கொடுத்தார் அந்த பெண் ஆதியும் எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு தன்னுடைய காதலன் வர ஆதியிடம் வாழைபழ தோல்களை கொடுத்து விட்டு சென்று விட்டது :lol: .........அதனால் மனுமுடைந்த ஆதி காலகண்ணாடியை கூட சற்று தாமதித்து தான் தந்தவர் :lol: ..........இப்ப மனம் பொறுக்கமுடியாமல் "காதல் ஒழிப்பு சங்கத்தையும்" ஆரம்பித்துள்ளார் என்றும் அந்த அறிக்கையில் சுட்டி காட்டபட்டிருந்தது!!

தற்போது ஆதி வரைந்த கவிதை ஒன்றையும் எவ்.பி.ஜை கண்டுபிடித்துள்ளது அது இது தான்!!

ஓரு ஆணை (குரங்கோ மனிதனோ)

நல்ல பேபியாக (ஜம்மு பேபி மாதிரி)

நல்ல மாணவனாக

நல்ல கலைஞனாக (ஜெனரல்)

நல்ல காதலனாக (சுண்டல் அண்ணா)

நல்ல கணவனாக (தயா அண்ணா)

நல்ல தாத்தாவாக (நெடுக்ஸ் தாத்தா மாதிரி)

பெரும் ஞானியாக

ஏன் புத்தனாக கூட மாற்றும்

பெண் தான் அவனை

பித்தனாகவும்

மூடனாகவும்

மிருகமாகவும் (ஆதி)

தெருவில் (காட்டில்)

அலையவிடுகிறாள்!!

இது ஆதி கண்ணீர்சொட்ட சொட்ட இழந்த வாழைபழத்தை நினைத்து எழுதிய கவிதை என்பதையும் எவ்.பி.ஜை டங்கு மாமாவின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளது!! :lol:

மேலதிக தகவல்கள் கிடைக்க பெற்றவுடன் ஆதியின் வால் வெட்டும் பருவம் ஆரம்பிக்கும் :lol: மீண்டும்!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"தொடங்க முன்யோசி!!இல்லையேல் பின்பு யோசிக்க வேண்டும்"

எங்கள் காதல் ஒழிப்பு சங்கத்தில் இணைய ஆண் - பெண் என்ற வேறுபாடு கிடையாது. ஆண்கள் தங்களை ஏமாற்றிய பெண்களைப் பற்றி சொல்லலாம். அல்லது ஏமாறாமல் இருக்க விழிப்புணர்வு கொடுக்கலாம். பெண்கள்.. ஆண்களைப் பற்றி விழிப்புணர்வு செய்யலாம்.

எமது சங்கத்துக்கான கீதத்தை நீங்களே தெரிவு செய்து வழங்க.. எமது சங்கத்தின் முதற் பெண் உறுப்பினராக உங்களை அங்கீகரித்து அழைக்கின்றோம்.. வாருங்கள்.. வந்து கீதத்தை இணையுங்கள்..! :lol:

எல்லோரின் வேண்டுகோளை ஏற்று நானும் காதல் ஒழிப்பு சங்கத்தில் இனைந்து கொள்கின்றேன். (இந்த சங்கத்தில் இருப்பவர்களிற்கு +30 இருக்கும் போல. இவர்கள் இந்த சங்கத்தில் இருப்பது நியாயம் :lol: , ஆனா நானோ 19 :lol: சோ... வருகிற காலங்களில் சங்கம் விட்டி சங்கம் மறலாம் என்பதை இத்தால் எமது சங்க உறுப்பினர்களிற்கு மனவருத்ததுடன் அறியதருகிறேன்.)

எமது தேசிய கீதமாக காதல் பன்னாதிங்க... காதலே பன்னாதிங்க (படம்: பார்வை ஒன்றே போதும்) என்னும் பாடலை தெரிவு செய்கின்றோம்.

பாடலை கேட்க: http://www.raaga.com/channels/tamil/movie/T0000328.html

பாடல் விளக்கம்:

எமது தேசிய கீதத்தை தினமும் காலையிலும், இரவு படுக்க போகும் முன்பும் கேட்டால், பகலில் காதல் உங்களை தீண்டாமலும், நீங்கள் காதலை தீண்டாமலும் உங்களை நீங்கள் பாதுகாத்து கொள்ளமுடியும். அத்துடன் இரவில் கேட்பதன் மூலம் கனவு கன்னி இல்லை கனவு மன்னன் தொந்தரவுகளை தவிர்த்து கொள்ள முடியும். :lol::lol::D

எனது சேவை நேரம் கிடைக்கும் போது தொடரும்.... :lol::lol:

கவரி என்ன இந்தச் சங்கத்தை ஒழிச்சுக் கட்டுற பிளானோ?

இல்லை ஆதி தாத்தா, அதுதான் நானும் உங்க சங்கத்தில சேர்ந்திட்டன் எல்லோ.... :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.