Jump to content

வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்க கடற்படை ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறது.

அது சரியாக முடிந்தால் அனுராவுக்கு இலங்கைக்கு சுபீட்சம் வரலாம்.

தமிழருக்கு எப்படி??   நன்மையா  ?? தீமையா.??    தீமை எனில்   ஜேர்மனியில் இருக்கும் யாழ் கள உறுப்பினர்கள்  ஒப்பந்தம் கையெழுத்திட விடமாட்டோம்.  🤣🤣🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இலங்கை பொருளாதார பிரச்சினையும், சிறுபான்மைஇனரின் பிரச்சினையும் இரண்டும் வேறு வேறாக இருந்தாலும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளது.

இலங்கை பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல எந்த நாட்டிலும் ஒரு நாட்டில் பொருளாதாரத்தில் தளம்பல் ஏற்படும் போது அது உடனடியாக நேரிடையாக அடித்தட்டு மக்க்ளையே பாதிப்பிற்குள்ளாக்குகிறது.

ஆனால் சிறுபான்மையினரின் பிரச்சினைக்குக்காரணம் பொருளாதார பிரச்சினைதான் என கூறுவதும் வடக்கினை மட்டும் நிலவுவதாக கூறுவதும் ஒரு திட்டமிட்ட முயற்சியாக தெரிகிறது.

இலங்கை பொருளாதார பிரச்சினைக்கு சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறையின் நேரடி பிரதி விளைவாகவும் ஊழல் அரசியல்வாதிகளாலும் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆனால் இடது சாரிகளின் கோட்பாடான் சமூக சமத்துவம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் ஆனால் இவர்கள் தற்போது கூறிவரும் அரசியல் சீர்திருத்தம் இல்லை எனும் கருதுகோளினூடாக வழமையான இலங்கை பேரினவாத அரசியலைமைப்பினூடாக சிறுபான்மையினரின் உயிட் உடமைக்கு உத்தரவாதமற்ற அதே இலங்கை ஆட்சிமுறைமையினையே நடாத்த விளைகின்றனர்.

அரசுகளால் அடிப்படைக்கட்டுமான மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் நிலையினை மாற்ற முற்படலாம், ஊழல் அரசியல்வாதிகள், அரச திணைக்களங்களில் நடவடிக்கை எடுத்தல் என்பவற்றினூடாக மாற்றங்களை ஏற்படுத்தலாம் ஆனால் அரசு அடிப்படை கட்டுமான மாற்றங்கள் தொடர்பாக எந்த மாற்றமும் ஏற்படுத்த உள்ளது என்பதனை கூட கூறாத நிலையில் வெறும் திறமையற்ற ஊழல்நிறைந்த தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவதனூடாக எமது மக்களின் வறுமையை காரணம் காட்டி அதனை தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துகிற நிலையே காணப்படுகிறது.

பொருளாதார ரீதியாக ஒவ்வொரு அரசும் சிறுபான்மையினரை இரண்டாம் பட்சமாகவே அணுகிறார்கள், இந்த அரசு எந்த விதத்தில் இதிலிருந்து வித்தியாசமாக உள்ளது, அவ்வாறாயின் அது என்ன என்பதாவது யாருக்காவது தெரியுமா? (அத்துடன் தமிழர்களின் பொருளாதார நிலையினை பாதிக்க செய்வதில் கடந்த காலத்தில் இருந்த ஒவ்வொரு அரசிற்கும் பங்கிருந்தது)

எதற்காக சிங்களவர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்?  (விடயத்தினை உணர்பூர்வமாக அணுகுகிறீர்கள் என கருதுகிறேன்)

சிறுபான்மையினர் உரிமைகளை மறுப்பதாலேயே கிளர்ச்சிகள் உருவானது, ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சமம் எனவே சட்ட ரீதியாக கூறப்படுகிறது, நீங்கள் கூறுவது இந்தியா போன்ற நாடுகளில் சிலவேளை சரியாக இருக்கலாம், அங்கே தான் திருமண உறவில் இருக்கும் துணையினை வல்லுறவில் ஈடுபடுவது சட்ட அங்கீகாரம் உள்ள விடயம், இவ்வாறான சட்டத்தினை இயற்றுபவர்கள் படித்தவர்களாக இருப்பது இன்னும் ஆச்சரியமழிக்கிறது.

உங்களது பார்வை உங்களுக்கு சரியாக இருக்கும், பெரும்பாலானோருக்கு சரியாக இருக்கலாம் அதில் தவறில்லை ஆனால் மற்றவர்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம்.

உரிமைகளை மறுப்பவர்கள் தாமாக உரிமைகளை கொடுக்க மாட்டார்கள், இப்படி ஏதாவது செய்துதான் பிடுங்கி எடுக்க வேண்டும்.

உங்களது கருத்திற்கு எதிராக கருத்து வைக்கவேண்டும் என்பதற்காக எழுதவில்லை, ஆனால் உங்கள் அடிப்படை நிலையினை என்னால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது, சிலவேளை எமது புரிதல்கள் வித்தியாசமாக இருக்கலாம்.

 நாலைந்து வருடங்களுக்கு முன்னர் எனது உறவினர் ஒருவரின் திருமண பந்தத்தில் சிக்கல் உருவானது, மணமகனில் பெரும்பாலும் தவறு இருந்தது, மணமகன்  எனக்கு நெருங்கிய உறவு சிறிய வயதில் நல்ல தொடர்பிருந்தது பின்னர் தொடர்பில்லை, அந்த விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன் என கூறினாலும் வலுக்கட்டாயமாக என்னை இணைத்து விட்டார்கள் வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது அதில்  தலையிடாமல் எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன், மணமகள் கேட்டது மணமகன் மன்னிப்பு கோரவேண்டும் என இதற்கு ஏன் பெரிதாக மணமகனின் சகோதரர்கள் கொல்லுப்படுகிறார்கள் என மணமகனின்  சகோதரனிடம் தனிமையில் கேட்டேன் அதற்கு அவர் கூறினார் " யாராவது தவறே செய்திருந்தாலும் பொம்பிளையளிட்ட மன்னிப்பு கேட்பார்களா?" என கேட்டார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் மன்னிப்பு கோருவது சரியென நான் நினைப்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதனால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

அருமை வசி! அதிலும் ஒரு கருத்தை முன்வைக்கும் பக்குவம் இருக்கின்றதே, அருமையிலும் அருமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர் அநுரகுமாரவை வானளவாகப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவரை வந்த சிங்களத் தலைவர்களை விடவும் இவர் தமிழர்களைப் பொறுத்தவரை சிறப்பானவர் என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால் அநுர பேசும் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சி என்பது தனியே தமிழருக்கு மட்டுமே பொருந்துவதில்லை. ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருந்துவது, குறிப்பாக 80 வீதமாக சனத்தொகையில் இருக்கும் சிங்களவர்களுக்கானது. டில்வின் சில்வாவின் கூற்றில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் "புலம்பெயர் உறவுகள்" என்பதனூடாக அவர் யாழ்ப்பாணத்தவர்களுக்கு அதிகம் பிரச்சினை இருப்பதாக ஒத்துக்கொள்ளவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். வன்னியிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் டில்வின் சில்வா கூறுவது போல கஸ்ட்டத்திலேயே வாழ்கிறார்கள். அது உண்மைதான்.

அதுசரி, அநுரவுக்குச் செம்புதூக்கும் அடிவருடிகளும், பக்தகோடிகளும் தமிழரின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அவர் என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்பதையாவது இதுவரை கேட்டார்களா? 

அல்லது தமிழர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளைக் காட்டிலும் வேறு பிரச்சினைகளும் இருக்கின்றனவா?  இன்று அநுரவைத் தூக்கிக் கொண்டாடும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்பிரச்சினைகள் குறித்து என்ன முடிவில் இருக்கிறார்கள்? ஒன்றில் அவர்கள் தமிழர்களுக்கு வேறு பிரச்சினைகள் இல்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும் அல்லது அப்பிரச்சினைகளைக் கடந்து சென்றுவிடலாம், இனி அதுகுறித்துப் பேசத் தேவையில்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும். இவற்றுள் எதனை அவர்கள் தெரிவுசெய்தாலும் தமிழர்களின் நிலை ஒரு இனமாகப் பலவீனப்படப் போகின்றதே ஒழிய பலமடையப்போவதில்லை. சிங்களவருக்கு இருப்பதைப் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகத்தான் தமிழர்கள் சுதந்திர காலத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் உறவுகளைக் காவுகொடுத்து போரிட்டார்களா என்று இன்று அநுரவுக்கு விசுவாசம் காட்டும் புலம்பெயர் தமிழர்களைக் கேட்கத் தோன்றுகின்றது. 

Edited by ரஞ்சித்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

தமிழருக்கு எப்படி??   நன்மையா  ?? தீமையா.??    தீமை எனில்   ஜேர்மனியில் இருக்கும் யாழ் கள உறுப்பினர்கள்  ஒப்பந்தம் கையெழுத்திட விடமாட்டோம்.  🤣🤣🤣

அதுக்காக ஜேர்மனி கள உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து தீக்குளித்து விடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

இங்கு புலம்பெயர் நாடுகளில் வாழும் பலர் அநுரகுமாரவை வானளவாகப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். இதுவரை வந்த சிங்களத் தலைவர்களை விடவும் இவர் தமிழர்களைப் பொறுத்தவரை சிறப்பானவர் என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால் அநுர பேசும் நாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சி என்பது தனியே தமிழருக்கு மட்டுமே பொருந்துவதில்லை. ஒட்டு மொத்த நாட்டிற்கும் பொருந்துவது, குறிப்பாக 80 வீதமாக சனத்தொகையில் இருக்கும் சிங்களவர்களுக்கானது. டில்வின் சில்வாவின் கூற்றில் இருக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களின் "புலம்பெயர் உறவுகள்" என்பதனூடாக அவர் யாழ்ப்பாணத்தவர்களுக்கு அதிகம் பிரச்சினை இருப்பதாக ஒத்துக்கொள்ளவில்லை என்றே எடுத்துக்கொள்ளலாம். வன்னியிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்கள் டில்வின் சில்வா கூறுவது போல கஸ்ட்டத்திலேயே வாழ்கிறார்கள். அது உண்மைதான்.

அதுசரி, அநுரவுக்குச் செம்புதூக்கும் அடிவருடிகளும், பக்தகோடிகளும் தமிழரின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு அவர் என்ன தீர்வு வைத்திருக்கிறார் என்பதையாவது இதுவரை கேட்டார்களா? 

அல்லது தமிழர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளைக் காட்டிலும் வேறு பிரச்சினைகளும் இருக்கின்றனவா?  இன்று அநுரவைத் தூக்கிக் கொண்டாடும் புலம்பெயர்ந்த தமிழர்கள் இப்பிரச்சினைகள் குறித்து என்ன முடிவில் இருக்கிறார்கள்? ஒன்றில் அவர்கள் தமிழர்களுக்கு வேறு பிரச்சினைகள் இல்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும் அல்லது அப்பிரச்சினைகளைக் கடந்து சென்றுவிடலாம், இனி அதுகுறித்துப் பேசத் தேவையில்லை என்கிற முடிவிற்கு வந்திருக்க வேண்டும். இவற்றுள் எதனை அவர்கள் தெரிவுசெய்தாலும் தமிழர்களின் நிலை ஒரு இனமாகப் பலவீனப்படப் போகின்றதே ஒழிய பலமடையப்போவதில்லை. சிங்களவருக்கு இருப்பதைப் போன்ற பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகத்தான் தமிழர்கள் சுதந்திர காலத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் உறவுகளைக் காவுகொடுத்து போரிட்டார்களா என்று இன்று அநுரவுக்கு விசுவாசம் காட்டும் புலம்பெயர் தமிழர்களைக் கேட்கத் தோன்றுகின்றது. 

தமிழர்களுக்கு தனித்துவம் தேவையில்லை என கூறுபவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை தமிழர் தரப்பிலும் உண்டு ...சிங்கள தரப்பிலும் உண்டு  இதன் விகிதாசாரம் காலத்துக்கு காலம் மாறு படுகின்றது..வெள்ளைகள்(துதரக அதிகாரிகள்) தங்கள் நலன் கருதி சில கருத்துக்களை வெளியிடுதுகள் அல்லோ அதை பார்த்திட்டு இந்த புலம்பெயர்ஸும் ஏக்க ராஜ்ய கொண்சப்ட்டுக்குள்ள மூக்கை நுழைக்கினம்... எது எப்படியோ அனுராவின் ஆட்சி 5 வருடங்களின் பின் நிலைத்து நிற்காவிடில் என்ன நடக்கும் தமிழர் நிலை?என சிந்திக்க தவறுகின்றனர் சில எம்மவர்கள்...

சிறிலங்காவில் ஒர் ஸ்தீரனமான ஆட்சி வேணும் என இன்றைய வெளிநாட்டு சக்திகள் விரும்புகின்றது..அது அணுராவுக்கு ஒர் வரப்பிரசாதமாகிவிட்டது...அமெரிக்காவுக்கு நிரந்தர தளம் இந்து சமுத்திரத்தில் தேவைப்படுகிறது .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

இலங்கை பொருளாதார பிரச்சினையும், சிறுபான்மைஇனரின் பிரச்சினையும் இரண்டும் வேறு வேறாக இருந்தாலும் ஒன்றோடொன்று தொடர்புபட்டுள்ளது.

இலங்கை பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல எந்த நாட்டிலும் ஒரு நாட்டில் பொருளாதாரத்தில் தளம்பல் ஏற்படும் போது அது உடனடியாக நேரிடையாக அடித்தட்டு மக்க்ளையே பாதிப்பிற்குள்ளாக்குகிறது.

ஆனால் சிறுபான்மையினரின் பிரச்சினைக்குக்காரணம் பொருளாதார பிரச்சினைதான் என கூறுவதும் வடக்கினை மட்டும் நிலவுவதாக கூறுவதும் ஒரு திட்டமிட்ட முயற்சியாக தெரிகிறது.

இலங்கை பொருளாதார பிரச்சினைக்கு சிறுபான்மையினரின் மீதான அடக்குமுறையின் நேரடி பிரதி விளைவாகவும் ஊழல் அரசியல்வாதிகளாலும் இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆனால் இடது சாரிகளின் கோட்பாடான் சமூக சமத்துவம் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் ஆனால் இவர்கள் தற்போது கூறிவரும் அரசியல் சீர்திருத்தம் இல்லை எனும் கருதுகோளினூடாக வழமையான இலங்கை பேரினவாத அரசியலைமைப்பினூடாக சிறுபான்மையினரின் உயிட் உடமைக்கு உத்தரவாதமற்ற அதே இலங்கை ஆட்சிமுறைமையினையே நடாத்த விளைகின்றனர்.

அரசுகளால் அடிப்படைக்கட்டுமான மாற்றங்கள் கொண்டு வருவதன் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் நிலையினை மாற்ற முற்படலாம், ஊழல் அரசியல்வாதிகள், அரச திணைக்களங்களில் நடவடிக்கை எடுத்தல் என்பவற்றினூடாக மாற்றங்களை ஏற்படுத்தலாம் ஆனால் அரசு அடிப்படை கட்டுமான மாற்றங்கள் தொடர்பாக எந்த மாற்றமும் ஏற்படுத்த உள்ளது என்பதனை கூட கூறாத நிலையில் வெறும் திறமையற்ற ஊழல்நிறைந்த தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுவதனூடாக எமது மக்களின் வறுமையை காரணம் காட்டி அதனை தமது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துகிற நிலையே காணப்படுகிறது.

பொருளாதார ரீதியாக ஒவ்வொரு அரசும் சிறுபான்மையினரை இரண்டாம் பட்சமாகவே அணுகிறார்கள், இந்த அரசு எந்த விதத்தில் இதிலிருந்து வித்தியாசமாக உள்ளது, அவ்வாறாயின் அது என்ன என்பதாவது யாருக்காவது தெரியுமா? (அத்துடன் தமிழர்களின் பொருளாதார நிலையினை பாதிக்க செய்வதில் கடந்த காலத்தில் இருந்த ஒவ்வொரு அரசிற்கும் பங்கிருந்தது)

எதற்காக சிங்களவர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்?  (விடயத்தினை உணர்பூர்வமாக அணுகுகிறீர்கள் என கருதுகிறேன்)

சிறுபான்மையினர் உரிமைகளை மறுப்பதாலேயே கிளர்ச்சிகள் உருவானது, ஒரு நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் சமம் எனவே சட்ட ரீதியாக கூறப்படுகிறது, நீங்கள் கூறுவது இந்தியா போன்ற நாடுகளில் சிலவேளை சரியாக இருக்கலாம், அங்கே தான் திருமண உறவில் இருக்கும் துணையினை வல்லுறவில் ஈடுபடுவது சட்ட அங்கீகாரம் உள்ள விடயம், இவ்வாறான சட்டத்தினை இயற்றுபவர்கள் படித்தவர்களாக இருப்பது இன்னும் ஆச்சரியமழிக்கிறது.

உங்களது பார்வை உங்களுக்கு சரியாக இருக்கும், பெரும்பாலானோருக்கு சரியாக இருக்கலாம் அதில் தவறில்லை ஆனால் மற்றவர்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம்.

உரிமைகளை மறுப்பவர்கள் தாமாக உரிமைகளை கொடுக்க மாட்டார்கள், இப்படி ஏதாவது செய்துதான் பிடுங்கி எடுக்க வேண்டும்.

உங்களது கருத்திற்கு எதிராக கருத்து வைக்கவேண்டும் என்பதற்காக எழுதவில்லை, ஆனால் உங்கள் அடிப்படை நிலையினை என்னால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்கிறது, சிலவேளை எமது புரிதல்கள் வித்தியாசமாக இருக்கலாம்.

 நாலைந்து வருடங்களுக்கு முன்னர் எனது உறவினர் ஒருவரின் திருமண பந்தத்தில் சிக்கல் உருவானது, மணமகனில் பெரும்பாலும் தவறு இருந்தது, மணமகன்  எனக்கு நெருங்கிய உறவு சிறிய வயதில் நல்ல தொடர்பிருந்தது பின்னர் தொடர்பில்லை, அந்த விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன் என கூறினாலும் வலுக்கட்டாயமாக என்னை இணைத்து விட்டார்கள் வாக்கு வாதம் நடந்து கொண்டிருந்தது அதில்  தலையிடாமல் எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன், மணமகள் கேட்டது மணமகன் மன்னிப்பு கோரவேண்டும் என இதற்கு ஏன் பெரிதாக மணமகனின் சகோதரர்கள் கொல்லுப்படுகிறார்கள் என மணமகனின்  சகோதரனிடம் தனிமையில் கேட்டேன் அதற்கு அவர் கூறினார் " யாராவது தவறே செய்திருந்தாலும் பொம்பிளையளிட்ட மன்னிப்பு கேட்பார்களா?" என கேட்டார். அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் மன்னிப்பு கோருவது சரியென நான் நினைப்பது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதனால் எனது கருத்து தவறாக இருக்கலாம்.

நன்றி 

அண்மையில் நான் ஒரு கட்டுரை ஒன்றை வாசித்தேன். Noyal நடேசன் எழுதியது. உங்கள் கேள்விக்கு அது பதிலாக அமையலாம்.

//

சிங்கள மக்கள் விடயத்தில்  உண்மையான யதார்த்தமுள்ளது. அவர்களது  2500 வருட இந்திய எதிர்ப்பு உண்மையானது. சேர சோழ பாண்டிய நாயக்க அரசுகளின் படையெடுப்பால் காலம் காலமாக இலங்கை மக்கள் அழிந்தது உண்மை .

அதேபோல் அவர்கள்  தங்களது பவுத்த மதத்திற்கு இந்தியாவால் ஆபத்துவருமென்று  எண்ணியதால் மகாவம்சம் உருவாகியது.  அதையும் பொய் எனச் சொல்லமுடியாது.

தென்னிந்தியாவில் இருந்து பவுத்த மதம் அழிந்துபோனதை அவர்கள் கண்டார்கள்.  அப்படி தங்களுக்கு வரலாம் என நினைக்கிறார்கள் . அந்தப் பயம் உண்மையா என்பது விவாதமில்லை

போராட்ட இயக்கங்களுக்கு போர் பயிற்சி இந்தியாவில் நடந்தது உண்மையானது  பின்பு ராஜீவ் – ஜேஆர் ஒப்பந்தம் என்பன இந்தியாவின் திணிப்பு நடவடிக்கையே.  பிற்காலத்தில் விடுதலைப்புலிகளைத் தேவையற்றபோது ஒடுக்குவதற்கு உதவினார்கள் என்பது அவர்களுக்கு வசதியானபோதே செய்தார்கள் .

தற்போது தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் கூட ஒருகாலத்தில் இலங்கைமீதான இந்தியாவின் ஆதிக்கத்தில்  பணயக் கைதிகளாக முடியும்.

இப்படியான தன்மைகளால் சிங்கள மக்கள் கிராமத்திற்குள் வழிதவறி வந்து மூலைக்குள் ஒதுங்கிய காட்டு மிருகத்தின் நிலைக்கு தள்ளப்படுகிறாரகள். இதுபோதாதென்று இலங்கையில் நடந்த இஸ்லாமிய  தீவிரவாதிகளின் ஈஸ்டர்குண்டு வெடிப்பும் அவர்களை மேலும் பல பக்கங்களிலுமிருந்து வரும் அபாயமெனப் பயமுறுத்துகிறது.  கடைசியாக நடந்த தேர்தல்களின் தெரிவுகள் இதையே காட்டுகின்றன.

75 வீதமான சிங்கள பவுத்த மத மக்கள் கொண்ட  இலங்கையில் சமாதானம்,  இனங்களின்  பரஸ்பர நல்லிணக்கத்தாலேதான்  உருவாகமுடியும். மற்றைய தீர்வுகள் எந்த உருவில் வந்தாலும் எதுவும் நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல்  இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள்.

நடைமுறைச்சாத்தியமற்றது. இதுவரை வட கிழக்கு தமிழருக்கு மட்டும் இருந்த நூடில்ஸ் போன்ற சிக்கல்  இஸ்லாமியர்களும் இந்த விடயத்தில் சேர்ந்து இடியப்ப சிக்கலாகிறார்கள்.

தமிழர்களுக்கு,  அரசியல்வாதிகளின்  மடியைத் தடவி பால்கறக்க 20 வருடம் தேவைப்பட்டது.  ஆனால் இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இந்த வேகத்தில் போனால் பாதிக்காலம்தேவைப்படாது.

  மூன்று இனங்களும் இனவாதத்தால் கூர்மையாக்கப்படும்போது யாருக்கும் நன்மை வராது தொடர்ச்சியான முறுகல் நிலை ஏற்பட்டால் பாதிப்புகள்தான்  தொடரும் .  இலங்கை மீதோ அல்லது   சிங்கள மக்கள் மீதோ  உலக நாடுகளால் எந்த முடிவையும் திணிக்கமுடியாது. ஆனால்,   இலங்கையை ஒரு ஏமன்  அல்லது   சோமாலியாவாக்க முடியும்.//

Edited by பகிடி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kandiah57 said:

இதை பூரணமாக எற்க முடியும் எற்கவேண்டும்.  அப்படியென்றால் வருட வருடம்  இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் மில்லியன் கணக்கான பணம்   எங்கே??? 

அது தங்களுக்கு வாக்குப் போட்ட இடங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவினம் அண்ணை!

வன்னியில் எவ்வளவோ வீட்டுத் திட்ட வீடுகளில் மக்கள் இல்லை. ஆனாலும் பலர் குடிசைகளில் வாழ்கிறார்கள்! ஏனெனில் பொருத்தமான திட்டங்கள் இல்லை. மக்கள் வாழக் கூடிய பகுதிகளில்/ வேலை வாய்ப்பு உள்ள இடங்களில் வீட்டுத்திட்டம் அமைவதில்லை. அரசு ஒரே இடத்தில் 50 வீடுகளைக் கட்டி வழங்கி மாதிரிக் கிராமம் என பெயர் சூட்டும்! ஆனால் பாதி வீடுகளில் மக்கள் வசிப்பதில்லை.

மல்லாவி ஐயங்கன்குளம் என நினைக்கிறேன் சந்தைக்கென கட்டிய கட்டிடத்தில் மாடுகள் படுத்துறங்குகின்றன!

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகள் உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும் - நிமல் லான்சா எம்.மனோசித்ரா கத்தோலிக்க திருச்சபை மற்றும் கத்தோலிக்க மக்களை ஏமாற்றாமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவற்றில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருந்தால் அவை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார். நீர்கொழும்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகவும் உணர்ச்சிகரமான விடயமாகும். எனவே அந்த தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையும் கத்தோலிக்க மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இது நாடகம் அல்ல. கத்தோலிக்க மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை நம்புகின்றனர். எனவே அந்த நம்பிக்கையை அவர் பாதுகாக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தது.  ஆனால், அவர் பதவியேற்ற பின்னர், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. நல்லாட்சியின்போதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. ஊதிய முரண்பாடுகளைக் களைய குழுக்கள் நியமிக்கப்பட்டன. பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. ஆனால் தற்போது தாம் சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறவில்லை என்று அவர்கள் மறுக்கின்றனர்.  சுமார் 80 சதவீத அரச ஊழியர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தனர். எனவே அவர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றக்கூடாது என்றார்.  https://www.virakesari.lk/article/196511
    • போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀 யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆
    • எங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கமாக இருப்பதாக முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சுயேட்சை குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட சுயேட்சைக்குழுவானது அரிக்கன் இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகசந்திப்பு வவுனியாவில் வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்; வன்னியில் அவையவங்களை இழந்த பலபோராளிகள் உள்ளனர். அன்றாட உணவுக்கே அவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அநாதைகளாக உள்ள அவர்களை  இந்த அரசியல் வாதிகள் யாருமே கண்டுகொள்வதில்லை. எம்மை வைத்து வியாபாரம் செய்வதே அவர்களது நோக்கம். எனவே நேரடியாக பாதிக்கப்பட்ட எமக்கே அந்த விடயங்கள் புரியும். எனவே எமது தேவைகளை பூர்த்திசெய்வதற்காக இந்த தேர்தலில் நாம் நிற்கிற்றோம் என்றனர். https://www.virakesari.lk/article/196540
    • பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, பெற்றோரை கொலை செய்தபின் அவர்களின் ஓய்வூதியத்தை விர்ஜினியா பயன்படுத்தி வந்துள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் ஆடம்ஸ் & டெபி டப்பி பதவி, பிபிசி நியூஸ், எசக்ஸ் 17 அக்டோபர் 2024 [எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.] காவல்துறையினர் தனது வீட்டின் கதவை உடைத்து ஏன் உள்நுழைந்தார்கள் என விர்ஜினியா மெக்கல்லாவிற்கு (Virginia McCullough) தெரியும். ஆனால், அதற்குக் காவல்துறை இவ்வளவு நாட்களை எடுத்துக்கொண்டது ஏன் என அவர் ஆச்சர்யப்பட்டார். “உற்சாகமாக இருங்கள், குறைந்தபட்சம் நீங்கள் குற்றவாளியைப் பிடித்துவிட்டீர்கள்,” என தனக்குக் கைவிலங்கு மாட்டிய அதிகாரிகளிடம் அவர் அமைதியாகக் கூறினார். ஜான் (John) மற்றும் லூயிஸ் மெக்கல்லா (Lois McCullough) இருவரும் கடலோரத்தில் வசித்து வருவதாக அவர்களின் அண்டை வீட்டார் நினைத்திருந்தனர். ஆனால், உண்மையில் இருவரும் தன் மகளால் இரக்கமற்ற வகையில் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். பிரிட்டனில் இருக்கும் செல்ம்ஸ்ஃபோர்ட், எசக்ஸ் (Chelmsford, Essex) அருகில் உள்ள கிரேட் பேடோ (Great Baddow) என்ற பகுதிக்கு அருகில் உள்ள மெக்கல்லாவின் குடும்ப வீடு பெரும் ரகசியமானதாகவே இருந்து வந்தது. மெக்கல்லா தம்பதி அவர்களது உறவினர்களிடம் தங்களிடமிருந்து விலகி இருக்குமாறு கூறியிருந்தனர். இந்நிலையில், அவர்கள் கிளாக்டன் பகுதியில் உள்ள எசக்ஸ் சன்ஷைன் கடற்கரை பகுதியில் வசிப்பதாக நண்பர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பயங்கரமான உண்மைச் சம்பவம் மிகவும் வித்தியாசமானது. பம்ப் ஹில் (Pump Hill) குடியிருப்புப் பகுதியின் மூடிய கதவுகளுக்கு உள்ளே நடந்த இந்தச் சம்பவத்தை கண்டுபிடிக்க 4 வருடங்கள் ஆகியிருக்கிறது. எப்போதும் திரையால் மூடப்பட்ட வீடு கொடிய விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட ஜான் மெக்கல்லா ஓய்வு பெற்ற வணிகவியல் விரிவுரையாளர். 70 வயதான அவரது உடலை வீட்டில் போர்வைகள், மணல், மற்றும் சிமென்ட் கலவையாலான இலகுரகக் கற்களைக் கொண்டு கல்லறை போன்ற அமைப்பில் மறைத்து வைக்கப்பட்டது. 71 வயதான அவரது மனைவி லூயிஸ்-இன் உடல் மாடியில் உள்ள அலமாறியின் படுக்கை விரிப்புக்குப் பின் மறைத்து வைக்கப்பட்டது. லூயிஸ் மெக்கல்லா சுத்தியலால் தாக்கப்பட்டார். அதனுடன், அவருடைய மகள் அவருக்கு பரிந்துரைக்கபட்ட மருந்துகளுடன் விஷத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 11), 36 வயதான விர்ஜினியா மெக்கல்லாவிற்கு, இந்தக் கொலைகளைச் செய்ததற்காக செல்ம்ஸ்ஃபோர்ட் க்ரௌன் (Chelmsford Crown) நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவர் குறைந்தபட்சம் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். “அவரது வீடு எப்போதும் திரையால் மூடப்பட்டிருக்கும், உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதைக்கூடப் பார்க்க முடியாது,” என மெக்கல்லாவின் வீட்டிற்கு அருகில் 20 ஆண்டுகளாக வசிக்கும் ஃபில் சார்ஜெண்ட் (Phil Sargeant) தெரிவிக்கிறார். தன்னுடைய அண்டை வீடு ஏன் இவ்வளவு ரகசியமாக இருந்தது என்பதற்கான காரணத்தை சார்ஜெண்ட் இப்போது தெரிந்து கொண்டார். “விர்ஜினியா தனது பெற்றோரைக் கொலை செய்து விட்டார் என்பதைச் சொல்லக் கூட மிகவும் கடினமாக இருக்கிறது,” என்கிறார் சார்ஜெண்ட். “அவள் அமைதியாகவும் இனிமையாகவும் இருந்தார். அவர் வேடிக்கையான ஒரு நபர். எதிலும் தலையிட மாட்டார்", என்கிறார் சார்ஜெண்ட்.   பட மூலாதாரம்,STEVE HUNTLEY/BBC படக்குறிப்பு, விர்ஜினியாவின் பெற்றோரின் சடலங்கள் நான்கு ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளன ‘கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்’ 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எசக்ஸ் பாதுகாப்புக் குழுவிடம் இருந்து எசக்ஸ் காவல்துறைக்கு ஒரு ஃபோன் அழைப்பு வந்தது. மெக்கல்லா தம்பதியின் நலனில் அக்கறை கொண்ட குடும்ப மருத்துவர் அவர்களைச் சில காலம் பார்க்கவில்லை என்பதால் அதுகுறித்துக் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சந்திப்பின் போதும், வெவ்வேறு காரணங்களைக் கூறி தனது பெற்றோரால் மருத்துவப் பரிசோதனைக்கு வர முடியாது என அவர்களது சார்பாக விர்ஜினியா கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் நிலவியதும் அவருக்குச் சாதகமாக அமைந்தது. அதனால், அவருடைய பெற்றோர் நீண்ட காலமாக வெளியே தென்படவில்லை. ஆனால், காவல்துறை மெக்கல்லாவிடம் பேசியபோது, அவர் எதையோ மறைக்கிறார் என்பது தெரியவந்தது. ஏன் அவரது பெற்றோர்கள் எப்போதும் நகரை விட்டு வெளியே இருக்கிறார்கள் என்பது தெளிவாகியது. மெக்கல்லாவிற்குத் தொலைக்காட்சியை வாடகைக்குக் கொடுத்த ஆலன் தாம்சன் என்பவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அவரது பெற்றோர்கள் சார்பாக, விர்ஜினியா மெக்கல்லா திடீரென ஃபோன் செய்து தொலைக்காட்சியை உரிமையாளரான ஆலன் தாம்சனிடமே கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். தொலைக்காட்சியைப் பெற தாம்சனின் பணியாளர் அவரது வீட்டிற்கு வந்தபோது, வீட்டுக்குள் நுழையக் கூடாது என்றும் தொலைக்காட்சி முன்வாசலில் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது என்றும் விர்ஜினியா கூறியுள்ளார். “அவர் ஓரளவுக்குக் கற்பனையிலேயே வாழ்பவர் என நினைத்தேன். ஆனால் ஒரு கொலைகாரர் என்று நான் நினைக்கவே இல்லை,” என்கிறார் தாம்சன்.   பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, ஜான் மெக்கல்லாவின் உடல் போர்வைகள் மற்றும் ஓவியங்களாலான கல்லறை போன்ற அமைப்பில் மறைத்து வைக்கப்பட்டது. 'நான் இதற்கு தகுதியானவள் தான்' விர்ஜினியாவின் வீட்டுக்கு காவல்துறை விசாரணைக்ககச் சென்றபோது, அவர்கள் அங்கு செல்வது முதல்முறை அல்ல. உடல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, தான் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறிக் காவல்துறையினரை விர்ஜினியா தன் வீட்டுக்குள் அழைத்தார். காவல்துறையினரை அழைத்ததன் நோக்கம் அவருக்குத் தான் தெரியும். ஆனால், நிலைமையைச் சோதித்துப் பார்க்க காவல்துறையினரை வீட்டுக்குள் அழைத்ததாகச் சிலர் கருதினர். இறுதியில், தான் தாக்கப்பட்டதாக அவர் கூறியது உண்மையில்லை என தெரியவந்தது. 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறையினர் வீட்டுக்கு வந்தபோதும் மெக்கல்லா முன்கூட்டியே தயாராக இருந்தார். “இந்த நாள் எப்படியும் வரும் என எனக்கு தெரியும்,” என்று அவர் ஒப்புக்கொண்டார். “இந்தத் தீர்ப்பு எனக்குக் கிடைக்க வேண்டியது தான், அதை ஏற்கிறேன். அதை ஏற்பதுதான் சரி. அது எனக்கு கொஞ்சம் அமைதியைத் தரும்,” என்று அவர் கூறினார். அவரது வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் விர்ஜினியா தன் பெற்றோரிடம் நிதி சம்பந்தமானப் பிரச்னையை மறைக்கத் தீவிரமாக முயற்சித்தது தெரிய வந்தது. அவர்களது நம்பிக்கையை கெடுக்கும் வகையில், வாடகை இல்லாமல் வாழ்ந்துள்ளார். அவர்களது பணத்தைப் பயன்படுத்தியும், அவர்களது கிரெடிட் கார்டையும் அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். மோசடியால் பணம் இழந்துவிட்டீர்கள் என்று போலியான கடிதங்களைக் காட்டித் தனது பெற்றோரை மெக்கல்லா நம்ப வைத்துள்ளார். உண்மையில், அந்த பணம் விர்ஜினியாவால்தான் ‘ஏமாற்றப்பட்டது’.   பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, விர்ஜினியாவின் தாய் சுத்தியலால் தாக்கப்பட்டும் விஷம் கொடுத்தும் கொல்லப்பட்டார். தந்தை விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் எதற்காக கொலை செய்தார்? அவரது பெற்றோர்களைப் பொறுத்தவரை, விர்ஜினியா நல்ல தகுதி உடையவர், பொருத்தமான வேலையில் இருப்பவர், மேலும், கலைஞராக வருவதற்குக் கடுமையாக உழைத்தார் என்று நினைத்தனர். மேலும், பிற்காலத்தில் நிதி சார்ந்த உதவிகளைத் தனது பெற்றோருக்கும் செய்வதாக அவர்களிடம் கூறியிருந்தார் விர்ஜினியா. அதற்குப் பதிலாக, விர்ஜினியா சூழ்ச்சியுடன் தன் பெற்றோரின் பணத்தைப் பயன்படுத்தி வந்தார். தன் பெற்றோரின் இரக்கத்தை நன்றாகப் பயன்படுத்தியும், துஷ்பிரயோகம் செய்தும் வந்துள்ளார். அவர்களது ஓய்வூதியம், கிரெடிட் கார்ட் பயன்பாடு, சொத்துக்களை விற்றல் என மொத்தமாக விர்ஜினியா தனது பெற்றோரைக் கொலை செய்ததன் மூலம் 1,49,697 பவுண்டுகள் (தோராயமாக 1.6 கோடி ரூபாய்) பயனடைந்துள்ளார். 2019 - 2023 ஆண்டுக்கிடையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்காக 21,000 பவுண்டுகள் (தோராயமாக 23 லட்சம் ரூபாய்) செலவழித்ததையும் நீதிமன்றம் விசாரித்தது. தான் கூறிய பொய்கள் மற்றும் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் காரணமாக, இறுதியில் தனது பெற்றோரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வினியார்ட்ஸ் வணிக மையத்தில் காய்கறிக் கடை வைத்திருக்கும் பால் ஹேஸ்டிங்ஸ் (Paul Hastings) என்பவரும் விர்ஜினியாவின் பெற்றோர் வெளியே வராததை கவனித்துள்ளார். அவருடைய கடையில் பொருட்கள் வாங்கும் தனது பெற்றோர், தற்போது கிரேட் பேட்டோவில் வாழவில்லை என்று கடைக்காரரிடம் விர்ஜினியா தெரிவித்துள்ளார். எந்த விஷயத்தையும் சந்தேகப்படாத அளவிற்கு அவரால் சொல்ல முடியும் என்பதுதான் அவருடைய தனித்துவம் வாய்ந்த இயல்பு என ஹேஸ்டிங் தெரிவித்தார். “விர்ஜினியா, என் கடைக்கு வந்து, ‘காவல்துறை என்னை பின் தொடர்கிறார்கள், நான் என் அம்மா, அப்பாவைக் கொலை செய்திருக்கலாம் என அவர்கள் நினைக்கின்றனர்’ என தெரிவித்தார்,” என அவர் கூறினார். “எனக்கு அது வித்தியாசமாக தோன்றியது. ஆனால் அதைப்பற்றி வேறு எதையும் நான் யோசிக்கவில்லை. அது அவருடைய விசித்திரமான இயல்பு என்று நான் நினைத்தேன்,” என்கிறார் ஹேஸ்டிங். சில சமயங்களில் அவர் தனது கடைக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை வருவார், அடுத்த 15 நாட்கள் காணமல் போவார் என ஹேஸ்டிங் கூறுகிறார்.   பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, விர்ஜினியா தன் பெற்றோரின் நல்லெண்ணத்தைத் தவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார் கிர்பி ‘கர்ப்பிணி போல நடித்தார்’ அவர் தனது கடைக்கு வந்து உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவார் என்று விர்ஜினியாவின் விட்டருகே பூக்கடை நடத்தி வரும் டெப்பி பொல்லார்ட் (Debbie Pollard) கூறிகிறார். “அவர் வித்தியாசமானவர் என எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் இப்படிச் செய்வார் என்று நாங்கள் கனவிலும் நினைத்ததில்லை,” என்கிறார் டெப்பி. “அவருடைய அம்மா, அப்பாவின் சடலங்களுடன் இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கிறார். நினைத்தாலே பயமாக இருக்கிறது,” என்கிறார். விர்ஜினியா கர்ப்பிணியைப் போன்று கூட நடித்திருக்கிறார் என்றும் தன் ஆடையின் உள்ளே போலியான பொருள் மூலம் தனது வயிற்றைப் பெரிதாகக் காட்டியிருக்கிறார் என்றும் ஹேஸ்டிங்ஸ் மற்றும் டெப்பி கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,STUART WOODWARD/BBC படக்குறிப்பு, "மிகவும் அனுபவம் வாய்ந்த துப்பறிவாளர்களுக்குக் கூட இந்த கொலைகளின் விவரங்கள் அதிர்ச்சியையும் திகிலையும் அளிக்கும்" என்கிறார் ராப் கிர்பி தீர்ப்பு வழங்கப்பட்ட அக்டோபர் 11 அன்று விர்ஜினியா பெரும்பாலும் எவ்வித உணர்ச்சியும் இன்றி தரையையே பார்த்துக் கொண்டிருந்தார். தன் தாயை எப்படிக் கொலை செய்தேன் என காவல்துறையினரிடம் தான் கூறியதன் பதிவைப் பின்னர் கேட்கும் போதுதான் அவர் அழத்தொடங்கினார். "அவர் (தாய்) மிகவும் அப்பாவியாக இருந்தார். வானொலியைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருப்பார்," என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார். “தைரியத்தை வரவைக்க மூன்றுமுறை உள்ளே சென்றேன். பின்னர் தயங்காமல் இதை செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அவர் (தாய்) நம்ப முடியாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்,” என்றார் விர்ஜினியா.   பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, விர்ஜினியா மெக்கல்லாவிற்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது எசக்ஸ் காவல்துறையின் துப்பறிவுக் கண்காணிப்பாளர் ராப் கிர்பி (Rob Kirby), நீதிமன்றத்தில் அவரது அமைதியானச் செயல்பாடுகள், ஒரு ‘திட்டமிட்டக் கொலைகாரரது செயல்பாடுகள் போல’ அமைதியாக இருந்தன என்கிறார். “அவர் செய்த வஞ்சகம், துரோகம், மோசடி ஆகியவை குறித்த பரந்த அளவிலான விசாரணையை நாங்கள் மேற்கொண்டோம்,” என்கிறார் அவர். “இது அதிர்ச்சியூட்டும் வகையிலும், பெரிய அளவிலும் இருந்தது. விர்ஜினியா தனது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பொய் சொல்லியிருக்கிறார். அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் ஏமாற்றியிருக்கிறார். கேலிக்கூத்தாக்கி இருக்கிறார். மேலும், தெளிவாக அவரது பெற்றோரின் நம்பிக்கையை பயன்படுத்தியிருக்கிறார்,” என்கிறார். “தனது பெற்றோர்களைப் பற்றியோ, அல்லது அவர்களது இழப்பால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றியோ யோசிக்காமல் கொடூரமாக அவர்களைக் கொலை செய்துள்ளார். அவர் ஒரு புத்திசாலி, விஷயங்களைத் திறமையாக கையாளுபவர்,” என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg4qwrlqnp3o
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.