Jump to content

விபத்துக்களை தடுக்க வல்லையில் விசேட நடவடிக்கை!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
image

யாழ்ப்பாணம் - வல்லைப் பாலத்தில் அண்மைக் காலங்களாக விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் “எங்கள் உயிர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளுவோம்“ எனும் முயற்சியில் கோப்பாய் பிரதேச செயலகம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.    

காலையிலும் மாலையிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் இருவர் சிவப்புக் கொடியுடன் நின்று அவ்வீதியால் பயணிக்கும் வாகன சாரதிகளிடம் மெதுவாகப் பயணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

01__3_.jpg

01__1_.jpg

https://www.virakesari.lk/article/196413

Free Stock Photo of Speed hump | Download Free Images and Free Illustrations

பாலத்தின் இருபுறமும் வேகத்தை குறைக்க படத்தில் உள்ளதுபோல மேடுகளை(road bump) அமைக்கலாமே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஏராளன் said:

பாலத்தின் இருபுறமும் வேகத்தை குறைக்க படத்தில் உள்ளதுபோல மேடுகளை(road bump) அமைக்கலாமே?!

    அதைதான் பலரும் யோசிப்பார்கள்,

ஒரு சில கிலோமீற்றர் நீளமான வல்லைவெளி வாகனங்களின் எண்ணிக்கை குறைவான காலங்களிலேயே விபத்துக்கும் உயிர்பலிகளுக்கும் பெயர் போனது, இப்போ வீட்டுக்கு மூன்று இரு சக்கர மற்றும் வாகனங்கள் உள்ள காலத்தில் விபத்துக்கான சாத்தியங்கள் சொல்லவே தேவையில்லை..

அந்த இடத்தில் கொளுத்தும் வெயிலில் நின்றுகொண்டு 40 வருடங்களுக்கு முற்பட்ட  சமிஞ்சைகளை கையாள்வது  அந்த ஊழியர்களின் உடலுக்கும் உயிருக்கும் ஆப்பு வைக்கும் செயல், அவர்களை சில முரட்டு ஆசாமிகள் மதிக்கவும் போவதில்லை,

குறுந்தூர இடைவெளியில் வேக தடுப்புகளூம் அங்கங்கே போக்குவரத்து பொலிசாரை நிறுத்தி  பெரும்தொகை  அபராதமும், சாரதி அனுமதி பத்திரம் பறிமுதலும் செய்தால் அரசுக்கும் வருமானம் ஆகும், அங்கவீனம் மற்றும் உயிர்பலிகளும் குறையும். 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் இன்றைய சனாதிபதியின்...அபிவிருத்தி முன்நகர்த்தல்...🤣

உதிலை நிக்கிற 2 ஊழியரின் சம்பளம் காணும்  4 வேகத்தடை போட...

Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் - வல்லைப் பாலத்தில் அண்மைக் காலங்களாக விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் “எங்கள் உயிர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளுவோம்“ எனும் முயற்சியில் கோப்பாய் பிரதேச செயலகம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. 

நல்ல செயல் 👍🏼
இப்படி ஒவ்வொரு நகரங்களிலும் தன்னார்வு செயலகர்கள் உருவாக வேண்டும்.  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  •  
  • கருத்துக்கள உறவுகள்
 
Free Stock Photo of Speed hump | Download Free Images and Free Illustrations

பாலத்தின் இருபுறமும் வேகத்தை குறைக்க படத்தில் உள்ளதுபோல மேடுகளை(road bump) அமைக்கலாமே?!

அங்கே கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு இந்தடை போதாது இன்னும் பெரிதாக அமைக்க வேண்டும் இந்தியாவில் பெரிய றோட்டு தடைகள் உள்ளது என்றார்கள் அது மாதிரி

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.