Jump to content

இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்களை புறந்தள்ளி கறைபடியா கரங்களுடைய இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தகுதியான வேட்பாளர்களுடன் களமிறங்கியுள்ளோம். 

இந்த தேர்தல் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தியல் காணப்படுகிறது.

தென்னிலங்கை மக்கள் பழைய ஆட்சியாளர்களை துடைத்தெறிந்து, ஊழலற்ற, நேர்மையான அரசியல்வாதிகளை கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளார்கள். அதனால், தென்னிலங்கையில் இருக்கக்கூடிய பல மூத்த அரசியல்வாதிகள் தேர்தலில் இருந்து விலகியுள்ளனர். ஆனால், வடக்கு அரசியல்வாதிகள் தொடர்ந்து போட்டியிட வேண்டும் என்ற பேரார்வத்துடன் காணப்படுகின்றனர். 

வடக்கில் எமது கட்சித் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரம் தான் தேர்தலில் இருந்து விலகி இளையோரிடம் கையளித்துள்ளார். மற்றையவர்கள் 15 வருடங்களுக்கு மேலாக நாடாளுமன்றில் இருந்தும் மக்களை எதுவும் செய்யாத நிலையிலும் தொடர்ந்தும் ஆசைப்படுகின்றனர்.

கடந்த காலங்களில் இருந்தவர்களுக்கு ஓய்வு வழங்க வேண்டும். வடக்கிலும் ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும். அதனால் தான் கற்றறிந்த இளையோரை நாங்கள் களமிறக்கியுள்ளோம். தமிழ் மக்கள் எங்களுக்கு ஒட்டுமொத்த ஆதரவையும் தர வேண்டும்.

நாங்கள் தமிழ் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் செயற்படுவோம்.  

தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில் ஆளுமைமிக்க ஆற்றல் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். 

தமிழ் மக்களின் உரிமைகள் ஒரு கண் எனில் நீடித்த பொருளாதாரமும் மற்றைய கண்ணாக இருக்க வேண்டும். இரண்டு கண்களும் தமிழ் மக்களுக்கு தேவையானது. நாம் இரண்டையும் சேர்த்தே முன்னெடுத்துச் செல்வோம். 

கடந்த காலங்களில் யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றை நிர்வகித்துள்ளோம். அதில் எங்களுடைய நிர்வாக ஆளுமைகளை காட்டியுள்ளோம். தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை முன்னெடுத்துச் சென்ற அதேவேளை, பொருளாதாரத்தையும் முன்னெடுத்துச் சென்றோம். 

நாம் மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றில் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில்தான் கொரோனா தொற்றும் அதை தொடர்ந்து, பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட்டன. அவ்வாறான இடர் மிகுந்த காலப்பகுதியில் நாங்கள் 45 உறுப்பினர்களை கொண்ட மாநகர சபையில் 10 உறுப்பினர்களுடன் வினைத்திறனுடன் செயற்பட்டோம். 

நாடு தற்போதும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளாத போதிலும் தற்போதும் தென்னிலங்கை கட்சிகள் இனவாத சிந்தனைகளுடன்தான் காணப்படுகின்றன. எனவே தென்னிலங்கை கட்சிகள் வடக்கில் கால் பதிப்பது ஆபத்தானது என மேலும் தெரிவித்தார். 

அதேவேளை இந்த ஊடக சந்திப்பில் அக்கட்சியின் வேட்பாளரான சட்டத்தரணி உமாகரன் இராசையா கருத்து தெரிவிக்கும்போது, 

தமிழர்களின் அடிப்படை உரிமைகளை கைவிட்டு விட்டு, பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல முடியாது. ஆங்கிலேயர்கள் இலங்கையில் இருந்து செல்லும்போது தமிழ் மக்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். ஆனால், அவர்களிடம் அரசியல் பலம் அன்று இருக்கவில்லை. பின்னரான கால பகுதியில் தமிழர்களிடம் கல்வியுடன் பொருளாதார பலமும் காணப்பட்டது. அப்போதும் அவர்களிடம் அரசியல் பலம் இல்லாததால் தான் கல்வி, பொருளாதாரம் என அனைத்தையும் இழக்க வேண்டி ஏற்பட்டது. தற்போதும் எமக்கான அரசியல் பலம் போதாது. எமக்கான தனித்துவமான அரசியல் பலம் வேண்டும். 

40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளை இழந்தும் இலட்சக்கணக்கான மக்களை இழந்து ரில்லியன் கணக்கான சொத்துக்களையும் இழந்துள்ளோம். அப்பேற்பட்ட நிலையில் எங்கள் இலட்சியங்களை தூக்கி ஏறிய முடியாது. 

தற்போதைய அரசாங்கம் இனவாதம் பேசவில்லை என கூறுகின்றார்கள். ஆனால் அடுத்து வருவோரும் அவ்வாறு இருப்பார்கள் என்றில்லை. மீண்டுமொரு இனக்கலவரமோ, தனி சிங்கள சட்டமோ கொண்டுவரப்பட்டால் நாம் எமக்கான தனித்துவமான அரசியல் பலம் இல்லாது அதனை எவ்வாறு கையாள்வது? ஆகவே மாற்றத்தை விரும்புவோர் எமக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிழம்பு said:

வடக்கில் எமது கட்சித் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் மாத்திரம் தான் தேர்தலில் இருந்து விலகி இளையோரிடம் கையளித்துள்ளார்

விக்கி அய்யா விக்கி அய்யா என்று பட்டாசு கோஷ்டி விதந்தோற்றிய விக்கி, பல பார்களின் உரிமையாளரான அபலைப் பெண்ணின் வாழ்வாதாரத்துக்காக சிபாரிசு கடிதம் கொடுத்திராவிட்டால் இப்ப அவர்தான் முதன்மை வேட்பாளர்!😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் பதவிக்காக யார்காலையும் பிடிப்பார். கட்சித்தலைமையை மீறி ஈபிடிபியுடன் நகூட்டுச்சேர்ந்து மாநகரசபை மமேயரான கதை எல்லோருக்கும் தெரியும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் பரப்பில் முற்றுமுழுதான மாற்றத்தையே மத தலைவர்களும் விரும்புகிறார்கள் - மணிவண்ணன் 

image

தமிழ் அரசியல் பரப்பில் முற்றுமுழுதான மாற்றத்தையே மத தலைவர்களும் விரும்புகிறார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்கள் கூட்டணியினர் நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். 

4__3_.jpg

தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் சக வேட்பாளர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (18) காலை நல்லை ஆதீனத்துக்கு சென்று, குருமுதல்வர்  ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

4__5_.jpg

அதனை தொடர்ந்து, ஆயர் இல்லத்துக்கு சென்றவர்கள் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதுடன், கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். 

இந்த சந்திப்பின் பின்னர், மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டோம். அவருடனான கலந்துரையாடலின்போது, அவர் தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், அவர்களின் போக்குகள் மாறிவிட்டதாகவும் எம்மிடம் குறைபட்டுக்கொண்டார். 

மேலும், தமிழ் அரசியல் பரப்பில் மாற்றம் ஒன்று நிகழ வேண்டும் என தான் விரும்புவதாக சொன்னார். 

அவரை தொடர்ந்து யாழ். ஆயரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினோம். அவரும் முற்று முழுதான மாற்றத்தையே விரும்புகிறார். நாமும் அதனை வரவேற்று , எமது வேட்பாளர்கள் தொடர்பிலும் அவர்களின் தகைமைகள், ஆளுமைகள் தொடர்பிலும் எடுத்துக்கூறி இருந்தோம். 

மத தலைவர்கள் போன்று தமிழ் மக்களும் மாற்றத்தையே விரும்புகிறார்கள். அதனால் எமக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மணிவண்ணன் தெரிவித்தார். 

மேலும், மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் இன்றைய தினம் முதல் எமது கட்சியினர் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/196597

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பிழம்பு said:

கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்களை புறந்தள்ளி கறைபடியா கரங்களுடைய இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

சகல கட்சிகளிலும் இளையோர்கள் களமிறங்கியுள்ளார்கள்.

யாரை ஆதரிப்பது?மக்களுக்கு ஒரோ குழப்பமாக உள்ளது.

இன்றுவரை இவருக்கு வாக்கு போடலாம் என்று எவரையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நல்லகாலம் வாக்கு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2024 at 23:16, புலவர் said:

மணிவண்ணன் பதவிக்காக யார்காலையும் பிடிப்பார். கட்சித்தலைமையை மீறி ஈபிடிபியுடன் நகூட்டுச்சேர்ந்து மாநகரசபை மமேயரான கதை எல்லோருக்கும் தெரியும் 

எமது தமிழ் அரசியல்வாதிகளுக்கு இன ஆசையை விட கதிரை ஆசை கூடி விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமக்கு போட்டியானவர்களை தொடர்ந்து ஓரங்கட்டிக்கொள்வது. கேட்டால்; பதவியாசையில் நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு அலைகிறார்கள் என்று தங்கள் அநாகரிக பாஷையில் விமர்சிப்பது.  தாங்கள் தொடர்ந்து இருப்பது மட்டும் ஞானி குடில்,. உண்மையை சொல்பவர்களை இழிவு படுத்துவது, கேள்வி கேட்பவர்களை விரட்டுவது. தம்மை மறைத்து முந்திக்கொண்டு மற்றவரை குற்றவாளியாக்குவது. கட்சியின் கொள்கைகளை கடைப்பிடிக்காதவர்கள், உடன் அங்கத்தவரின் உரிமைகளை மறுக்கிற சர்வாதிகாரிகள் எப்படி மக்களைப்பற்றி சிந்திப்பார்கள் என நாம் எதிர்பாக்கலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

சகல கட்சிகளிலும் இளையோர்கள் களமிறங்கியுள்ளார்கள்.

யாரை ஆதரிப்பது?மக்களுக்கு ஒரோ குழப்பமாக உள்ளது.

இன்றுவரை இவருக்கு வாக்கு போடலாம் என்று எவரையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

நல்லகாலம் வாக்கு இல்லை.

இதுதான் அங்குள்ள உண்மையான நிலைமை... ஒருமாயை அங்கு உருவாக்கப் படுகிறது...அதற்கு உதவியாக அலைந்து திரியும் யூ டியூப் காரர் களமிறக்கப் பட்டிருக்கினம்...அவையும் ஆகா ஓகோ என்று புழுகினம்...வடக்கில் எதற்கும் துணிந்த விடுகாலி அரசியல்வாதிகள் இருப்பதை  மறந்து...ஒரு சிலரைத்தவிர மக்கள் பெரிதாக இதை அலட்டிக் கொள்வதில்லை..என் அனுபவம்..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு  கட்சிக்கும் ஒவ்வொரு ஆசனந்தான் வரும் போல் உள்ளது. இதனால் கட்சித்தலைமைகள் 2பேர் பழைய ஆட்களாக வைச்சுக்கொண்டு மிச்ச ஆட்களை இளைஙர்களைப் போட்டு  எங்கள் அணியில் இளைஞர்களுக்கு இடம் கொடுத்துள்ளோம் என்று மக்களைப் பேய்க்காட்டுகிறார்கள்.  அவர்களை வைத்து ப் பெறப்படும் வாக்குகளை வைத்து தேசியப்பட்டியல் மூலமாகப் பழையபடி பழையவர்கள் பாராளுமன்றத்தற்கு செல்வதே அவர்களின் திட்டம். இளைஙர்களுக்கும் இது தெரிந்தும் மாகாணசபை>உள்ளூராட்சபைத் தேர்தல்களில் நிற்க இடம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். இப்பொழதெல்லாம் இந்த உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கெல்லாம் சம்பளம் கொடுக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமசபைகள் இருந்த காத்தில் அங்கத்தவர்களுக்கு ஊதியம்வழங்கப்hடுவதில்லை.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

இதுதான் அங்குள்ள உண்மையான நிலைமை... ஒருமாயை அங்கு உருவாக்கப் படுகிறது...அதற்கு உதவியாக அலைந்து திரியும் யூ டியூப் காரர் களமிறக்கப் பட்டிருக்கினம்...அவையும் ஆகா ஓகோ என்று புழுகினம்...வடக்கில் எதற்கும் துணிந்த விடுகாலி அரசியல்வாதிகள் இருப்பதை  மறந்து...ஒரு சிலரைத்தவிர மக்கள் பெரிதாக இதை அலட்டிக் கொள்வதில்லை..என் அனுபவம்..

திட்டமிட்டு சில யூடியூப் காரரை களமிருக்கியிருக்கின்றனர் என்பது என்றால் உண்மை போல தான் தெரிகின்றது அதில் சிலருக்கு அரசியல் சுத்தம் ஆனால் அணுரா புராணம் நன்றாக சொல்லி கொடுத்துள்ளனர் ....தேசிய ஆதரவாக பேசிய ஒர் யூ டியுப்பரை புலனாய்வாலர்கள் எச்சரித்த சம்பவம் நடந்துள்ளது...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

திட்டமிட்டு சில யூடியூப் காரரை களமிருக்கியிருக்கின்றனர் என்பது என்றால் உண்மை போல தான் தெரிகின்றது அதில் சிலருக்கு அரசியல் சுத்தம் ஆனால் அணுரா புராணம் நன்றாக சொல்லி கொடுத்துள்ளனர் ....தேசிய ஆதரவாக பேசிய ஒர் யூ டியுப்பரை புலனாய்வாலர்கள் எச்சரித்த சம்பவம் நடந்துள்ளது...

இதுதான் உண்மை...இன்னும் பலர் களமிறக்கப்படுவர்....

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாநிதி ஜெகான் பெரேரா முக்கியமான தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறை எச்சரிக்கையுடனானதாகவும் முன்னைய அரசாங்கம் தீர்மானித்த திசையில் தொடர்வதாகவும் அமைந்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையையும்  அதன் இறுக்கமான நிபந்தனைகளையும் பின்பற்றுவதில் இது தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய கடுமையாக கண்டனத்துக்குள்ளான முக்கியமான அதிகாரிகளே பொருளாதாரத்தைக் கையாளுவதற்கு பதவிகளில் தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த வாரம் ஜெனீவாவில் தீர்மானத்துக்காக முடிவெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தின் வடிவில் வந்த மிகவும் உடனடியான சர்வதேச சவாலை எதிர்கொண்டதிலும் முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த எச்சரிக்கையுடனான அதே அணுகுமுறையையே அரசாங்கம் கடைப்பிடித்தது. ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே கொள்கையையே அரசாங்கமும் கடைப்பிடித்த போதிலும் தீர்மானத்தை நிராகரிப்பதில் பெருமளவுக்கு இணக்கப்போக்கான மொழியைப் பயன்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. முன்னைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய கொள்கைகளின் பயன்களை இந்த அரசாங்கம் அறுவடை செய்கிறது என்று அதை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்ட முனைகிறார்கள். அதே கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் விளைவாகவே முன்னைய அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. ஆனால் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் வரை எச்சரிக்கை தொடரும் சாத்தியம் இருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கும் சமூக உறுதிப்பாட்டுக்கும் பயனுடையதாக அமைந்திருக்கிறது. அது குறித்து குதர்க்கம் செய்வது முறையல்ல. பொருளாதாரம் கத்திமுனையில் இருந்தது என்றும் அரசாங்க மாற்றம் ஒன்று பொருளாதாரத்தை ஒரு எதிர்மறையான நிலைக்குள் மூழ்கடித்து விடக்கூடும் என்றும் நாட்டின் வர்த்தகத் தலைவர்களினாலும்  சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகத்தினாலும்  கணிசமான அக்கறை  வெளிப்படுத்தப்பட்டது. தேர்தலுக்கு பிறகு வன்முறை எதுவும் மூளாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் மிகவும் நேர்மறையான நடவடிக்கைகளை எடுத்ததற்கு அதுவே காரணம். பாற்சோறு சமைத்து பரிமாறி பட்டாசுகளும் கொளுத்தி பாரம்பரியமாக வெற்றியைக் கொண்டாடுவதைப் போன்று தனது வெற்றையைக் கொண்டாட வேண்டாம் என்று ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க  மக்களிடம் விடுத்த வேண்டுகோளும் அந்த நேர்மறையான நடவடிக்கைகளில் அடங்கும். கடந்த காலத்தில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் வன்முறைக்கும் அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்ததுடன் நாட்டின் பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியது.  ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியையும் அதை தொடர்ந்து சம்பாதித்த நற்பெயரையும் அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான தந்திரோபாயத்தை அரசாங்கம் வகுக்கிறது. அதிகாரத்தில் இருந்த முதல் இரு மாதங்களிலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு  நேர்மறையான ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை  அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரும். ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்த 42 சதவீதமான வாக்காளர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் ஒரு எதிர்ப்பு வாக்கை பதிவு செய்வதற்கே அவரை ஆதரித்தார்கள். பாரம்பரிய வழியில் வாக்களிப்பதில் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். அபிவிருத்திக் கொள்கை  அல்லது ஊழல் ஒழிப்பு தொடர்பில் புதிதாக எந்த திட்டத்தையும் முன்வைக்காதவர்கள் என்று தாங்கள் கண்டுகொண்ட மற்றைய  வேட்பாளர்களை வேட்பாளர்களை மக்கள் நிராகரித்தார்கள். இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் பெரும்பாலான பாகங்களில் மக்கள் நேர்மறையான வாக்கொன்றை அளிப்பார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது. மனங்கள் சந்தித்தல்  இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் ஜனாதிபதி பெரும்பான்மையான வாக்குகளைப்  பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜே வி.பி. ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இன, மத சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாசைகளை ஆதரிக்கவில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் கோரிக்கைகளின் விளைவாக இலங்கையின் ஐக்கியத்துக்கும் சுயாதிபத்தியத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்ற பெரும்பான்மைச் சமூகத்தின் பொதுவான கருத்தையே ஜே வி.பி.யும் கொண்டிருந்தது. இந்த பழைய மனப்போக்கு செய்த பாதகத்தை ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி திசாநாயக்க ஏற்றுக்கொண்டார். கடந்த காலத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதை தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை வெளிக்காட்டும் வகையிலான உரைகளை அவர் நிகழ்த்தினார். சிறுபானமைச் சமூகங்களின் வேதனைகளைப் புரிந்துகொண்டவராக அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு உண்மையான முயற்சிகளை எடுக்கப்போவதாக அவர் சூளுரைத்தார். புதிய அரசாங்கம் முதல் மூன்று வாரங்களிலும் முன்னெடுத்த நடவடிக்கைகள் தேசிய மக்கள் சக்தி தாங்கள் முன்னர் அறிந்திருந்த ஜே வி.பி. அல்ல என்ற என்ற ஒரு நம்பிக்கையை சிறுபான்மைச் சமூகங்களுக்கு கொடுத்திருக்கிறது போன்று தெரிகிறது. அண்மையில் கிழக்கு மாகாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தமிழ்,  முஸ்லிம் சிவில் சமூகம், மதத் தலைவர்கள் மற்றும் கல்விமான்களுடன் நடத்திய சந்திப்புகள்  நாடு முழுவதையும் தழுவியதாக மனங்களின் சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகிறது என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தின. ஒரு மாற்றத்துக்கும் புதிய முகங்களுக்குமான விருப்பம் சகல பிரிவினரிடமும் காணப்படுகிறது. வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பாரம்பரிய கட்சிகள் மீது மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தாங்கள் தெரிவுசெய்த அரசியல்வாதிகள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தேவையான சேவையைச் செய்யவில்லை என்று அந்த மக்கள் பெரும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள். இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்கு நேர்நிகரான அரசியல் சக்தி தற்போது இல்லை. அதனால் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செய்வதைப் போன்று சிறுபானமைச் சமூகங்களைச் சேர்ந்த பலரும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க விரும்பக்கூடிய சாத்தியம் இருக்கிறது. கடந்த மூன்று வாரங்களில் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடியதாகவோ அல்லது பிரச்சினைகளை தோற்றுவிக்கக்கூடியதாகவோ சர்ச்சைக்குரிய எதுவும் இடம்பெறவில்லை என்பது புதிய கட்சியையும் புதிய தலைவர்களையும் தெரிவுசெய்வதற்கான அவர்களின் விருப்பத்தை வலுப்படுத்தும் எனலாம். கடந்த ஏழு தசாப்தங்களாக மக்களுக்கு பயனுடைய சேவைகளைச் செய்யாதவர்களை நிராகரித்து புதியவர்களை வரவேற்கும் மனநிலை மக்களுக்கு ஏற்படிருக்கிறது. ஆனால், வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தேசிய மக்கள் சக்தி பெருளவுக்கு யதார்த்தபூர்வமாக செயற்பட்டிருக்க முடியும். கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்ற அதேவேளை, வாக்காளர்களுக்கு நன்கு தெரியாதவர்கள் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று கருதமுடியாது. மட்டுப்பட்டுத்தப்பட்ட கலந்தாலோசனை கிழக்கில் வெளிப்படுத்தப்பட்ட இந்த அக்கறைகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் மடடுப்படுத்தப்பட்ட அளவில் கலந்தாலோசனைகள் இடம்பெற்றிருந்தன என்று தெரிகிறது. சகல தரப்பினரையும் உள்வாங்கியதாக இல்லாமல் ஒரு பிரத்தியேகமான முறையில் கட்சியின் உயர்மட்டத்தினால் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் போன்று தோன்றுகிறது. பாரம்பரியமாக ஜே.வி.பி. வாக்குகளைப் பெறுகின்ற - உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற பகுதிகளில் இது ஒரு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம்.  அந்த உறுப்பினர்கள் அந்த பகுதிகளின் மக்கள் அறிவார்கள். ஆனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் ஜே.வி.பி. உறுப்பினர்களை பெரிதாக தெரியாது. அதனால் மக்களுக்கு நன்கு சேவை செய்து அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற வேட்பாளர்களை அடையாளம் காண்பதற்கு பரந்தளவில் சிவில் சமூகத்துடன்  தீவிரமான கலந்தாலோசனைச் செயன்முறை தேவைப்பட்டிருக்கலாம். மேற்கூறப்பட்டது அரசாங்கம் அவசியமாக கையாளவேண்டிய முதலாவது பிரச்சினை என்றால், இன, மத சிறுபான்மைச் சமூகங்களினதும் சர்வதேச சமூகத்தினதும் உறுதியான நம்பிக்கையாக இருந்துவரும் அதிகாரப் பரவலாக்கம் மீதான பற்றுறுதியை வெளிக்காட்ட வேண்டியது இரண்டாவது பிரச்சினையாகும். அரசியலமைப்புக்கான  13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும், உரைகளிலும் உறுதியளித்தார். எந்தவொரு ஜனநாயகத்திலும் பெரும்பான்மையே ஆட்சி செய்கிறது. இன, மத அடையாளங்கள் என்று வருகின்றபோது அங்கு தேர்தல் முறைமையினால் சமத்துவமானதாக்க முடியாத நிரந்தரமான பெரும்பான்மையினரும் நிரந்தரமான சிறுபான்மையினரும் இருப்பார்கள். உள்ளூர் பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்படுகின்ற மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலமாக மாத்திரமே தங்களது அபிலாசைகள் மதிக்கப்பட்டு அரவணைக்கப்படுவதாக  சிறுபான்மையினரை உணரச்செய்யமுடியும். இது விடயத்தில் மூன்று கட்டச் செயற்றிட்டம் ஒன்று கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தினால் சிபாரிசு செய்யப்படுகிறது.  முதலாவதாக, மாகாணங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் என்றாலும், மாகாண சபை தேர்தல்களை தாமதமின்றி  நடத்துவதன் மூலமாக 13வது திருத்தத்தை உடனடியாக  நடைமுறைப்படுத்துவது. இரண்டாவதாக, அரசியலமைப்பில் இருக்கின்ற போதிலும் கூட இன்னமும் பரவலாக்கம் செய்யப்படாமல் இருக்கின்ற அதிகாரங்களையும் திட்டமிட்ட முறையில் அல்லது புறக்கணிப்பு மனப்பான்மையுடன் மாகாணங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களையும் மீளக்கையளிப்பது. மூன்றாவதாக, முன்னெடுக்கப் போவதாக  அரசாங்கம் உறுதியளித்திருக்கும் விரிவான அரசியலமைப்புச் சீர்திருத்த செயற்திட்டத்தில் அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை மேம்படுத்துவது. வேறுபட்ட பிராந்தியங்கள் வேறுபட்ட  பொருளாதாரத் தேவைகளையும் வாய்ப்புக்களையும் கொண்டிருக்கின்றன என்பதை அங்கீகரித்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு புறம்பாக அதிகாரப் பரவலாக்க கோட்பாட்டை பொறுத்தவரை நோர்வேயின் பிரபலமான சமாதான கல்விமான் பேராசிரியர் ஜோஹான் கல்ருங் கூறிய அறிவார்ந்த வார்த்தைகளை கருத்தில் எடுக்கவேண்டியது அவசியமாகும். "எமக்கு சொந்தமானவர்கள் சற்று  இரக்கமில்லாதவர்களாக இருந்தாலும் கூட அவர்களால் ஆளப்படுவதையே நாம் விரும்புகிறோம்" என்று அவர் விடுதலைப் புலிகளுடனான போர்க்காலத்தில் இலங்கையில் கூறினார். https://www.virakesari.lk/article/196580
    • படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பழனியாண்டி பணத்தை பெற்றுக் கொண்டார். கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ், இலங்கை 22 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் மலையகத்தில் 1970களில் தான் திருடிய தொகைக்கு ஈடாக, சுமார் ஐம்பது ஆண்டுகள் கழித்து பன்மடங்கு அதிக பணத்தை திரும்பக் கொடுத்திருக்கிறார் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர். யார் அவர்? என்ன நடந்தது? 50 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது? இலங்கையின் மஸ்கெலிய மாவட்டத்தில் அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை எஸ்டேட்டில் பணியாற்றிய சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர் தங்களின் குடியிருப்பு பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு செல்ல முடிவெடுத்தனர். 1970களின் மத்திய காலம் அது. வீட்டை காலி செய்யும் போது, வேலைகளை செய்ய உதவியாக பக்கத்து வீட்டில் வசித்து வந்த பதின்வயது சிறுவனான ரஞ்சித்தின் உதவியை அந்த தம்பதியினர் நாடியுள்ளனர். பொருட்களை பழைய வீட்டிலிருந்து மாற்றி, புதிய வீட்டில் வைக்கும் வேலை பரபரப்பாக நடந்தது. பொருட்களை மாற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் ரஞ்சித். அப்போது பழைய வீட்டில் இருந்த ஒரு தலையணையைப் புரட்டியபோது, அதற்கு அடியில் ஒரு சிறு தொகை இருந்தது. அந்த தொகை அவருடைய வாழ்க்கையை மாற்றும் என்று அன்று அவர் எதிர்பார்க்கவில்லை.   தலையணையின் அடியில் மொத்தமாக ரூ. 37.50 இருந்தது. வேலை ஏதும் இல்லாமல் இருந்த ரஞ்சித், அந்தப் பணத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டார். வீடு மாறும் மும்முரத்தில் இருந்த எழுவாய்க்கு தலையணைக்கு அடியில் பணம் வைத்திருந்தது வெகு நேரத்திற்குப் பிறகே நினைவுக்கு வந்தது. வீடு மாறிய பிறகு, பணத்தைத் தேடியவர், தயக்கத்துடன் ரஞ்சித்திடம் அந்தப் பணத்தைப் பற்றிக் கேட்டுள்ளார். ஆனால், அப்படி பணம் எதையும் தான் பார்க்கவில்லையென ரஞ்சித் மறுத்துவிட்டார். அந்த காலகட்டத்தில், தோட்டத் தொழிலாளர்களின் வறுமைச் சூழலில் 37 ரூபாய் என்பது சற்றுப் பெரிய தொகைதான். இதையடுத்து, கோவிலுக்குப் போய் சாமியிடம் முறையிடப் போவதாகச் சொல்லியிருக்கிறார் எழுவாய். இதைக் கேட்டு சற்று அதிர்ந்து போனாலும், இவரும் எழுவாயுடன் கோவிலுக்கு சென்றுள்ளார் ரஞ்சித். எழுவாய், கடவுளிடம் முறையிட்டுவிட்டுச் சென்றவுடன் இவரும் கடவுள் சிலை முன்பு நின்று, "அந்தப் பணத்தை நான்தான் எடுத்தேன் என்னை ஒன்றும் செய்துவிடாதே" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டுவிட்டார்.   படக்குறிப்பு, சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதியர் மலையகத்தில், தோட்டத் தொழிலாளர்களாக வேலை பார்த்துவந்தனர். வீட்டில் நகைகளை எடுத்துக் கொண்டு தமிழகம் வந்த ரஞ்சித் ரஞ்சித்தின் தாய் மாரியம்மாள், தந்தை பழனிச்சாமி ஆகிய இருவருமே இலங்கையின் மலையகத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகப் பணியாற்றியவர்கள். ரஞ்சித்திற்கு மூன்று அண்ணன்கள், இரண்டு மூத்த சகோதரிகள் என பெரிய குடும்பம். வறுமை காரணமாக, அவரால் இரண்டாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை. 1977ஆம் ஆண்டில், ரஞ்சித்திற்கு 17 வயதான போது தமிழ்நாட்டிற்குச் சென்று பிழைத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தார். இதையடுத்து வீட்டிலிருந்து கொஞ்சம் நகைகளை எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு புறப்பட்டு விட்டார். தமிழ்நாட்டிற்கு சென்ற பிறகு ஆரம்பம் அவ்வளவு சிறப்பாக இல்லையென்றாலும் போகப்போக நிலைமை மாறியது என்று நினைவுகூர்கிறார் ரஞ்சித். "வீட்டில் திருடிக் கொண்டு வந்த நகையை விற்று, ஒரு பெட்டிக் கடையை வைத்தேன். அதில் திவாலாகி தெருவுக்கு வந்து விட்டேன். அதன்பின் உணவகங்களில் டேபிள் துடைக்கும் வேலை, ரூம் பாய் வேலைகளைப் பார்த்தேன். பிறகு, பேருந்து நிலையத்தில் முறுக்கு விற்பது, மூட்டை தூக்குவது போன்ற வேலைகளையும் செய்தேன். நான் செய்யாத வேலையே கிடையாது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சமையல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எனக்குச் சீக்கிரமே அது கைவந்த கலையாகிவிட்டது. பிறகு சிறிய அளவில் ஒரு கேட்டரிங் நிறுவனத்தை துவங்கினேன். தற்போது அந்த நிறுவனம் 125 பேர் பணியாற்றக் கூடிய பெரிய அளவிலான நிறுவனமாகியிருக்கிறது" என்கிறார் ரஞ்சித்.   படக்குறிப்பு, நுவரேலியாவுக்கு அருகில் சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதி வசித்த அலகொல பகுதி எஸ்டேட் கடன்களை திருப்பி அளிக்க முடிவு செய்த ரஞ்சித் ஒரு முறை உடல்நலம் சரியில்லாமல் போன போது ரஞ்சித் பைபிளைப் படித்துள்ளார் . பைபிளில் இருந்த 'துன்மார்க்கர்கன் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் போகிறான். நீதிமான் இறங்கிச் சென்று திரும்பக் கொடுக்கிறான்’ என்ற வாசகம் அவரை மிகவும் யோசிக்க வைத்துள்ளது. "இதற்குப் பிறகு, எங்கெங்கு யார் யாரிடமெல்லாம் சின்னச் சின்னக் கடன்களை வாங்கினேனோ, அவற்றையெல்லாம் தேடித்தேடிப் போய்த் திரும்பக் கொடுத்தேன். வங்கியில் செலுத்தாமல் இருந்த 1500 ரூபாயையும் கூட, பல ஆண்டுகள் கழித்துப்போய்ச் செலுத்திவிட்டேன். ஆனால் அந்த எழுவாய் பாட்டியிடம் திருடிய 37 ரூபாயைத் திருப்பிக் கொடுக்கவில்லையே என்ற உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது." என்கிறார் ரஞ்சித். மேலும் தொடர்ந்த அவர், "அந்த பாட்டி இறந்திருப்பார் என்று தெரியும். ஆனால், அவருடைய வாரிசுகளைத் தேடிக் கண்டு பிடித்தாவது, அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று நினைத்தேன். இலங்கையிலுள்ள என்னுடைய நண்பர்கள் மூலமாக அவர்களைத் தேட ஆரம்பித்தேன். நீண்ட காலத் தேடுதல்களுக்குப் பின், அந்தப் பாட்டியின் மகன்கள் வசிக்கும் இடத்தை கடந்த ஆண்டில் வாங்கி விட்டேன். அந்தப் பாட்டிக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். மகன்களில் ஒருவர் இறந்து விட்டார். மகள், தமிழ்நாட்டிற்கு வந்து விட்டதாகத் தகவல் கூறினார்கள்" என்று விவரித்தார்.   படக்குறிப்பு, மலையகத்தில் தனது பெற்றோரின் வீடு இருந்த இடத்தில் கிருஷ்ணன். இந்த இடத்தில் இருந்து வீட்டை மாற்றும் போதுதான் ரஞ்சித் பணத்தை எடுத்தார். ரூ.37.50-ஐ பன்மடங்காக திருப்பி அளித்த ரஞ்சித் சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதிக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் என மூன்று ஆண் குழந்தைகளும் வீரம்மாள், அழகம்மாள், செல்லம்மாள் என மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். இதில் முருகையா இறந்துவிட்டார். அவருக்கு மனைவியும் நான்கு மகன்களும் இருந்தனர். பழனியாண்டி கொழும்பு நகரத்திற்கு அருகிலும் கிருஷ்ணன் நுவரேலியாவுக்கு அருகில் உள்ள தலவாக்கலையிலும் வசித்துவந்தனர். இவர்களைத் தொடர்புகொண்ட ரஞ்சித், சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதியின் குழந்தைகளுக்கான தனது கடனைத் தீர்க்க விரும்புவதாகக் கூறினார். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதியன்று கொழும்பு நகருக்கு சென்ற ரஞ்சித், சுப்பிரமணியன் குடும்பத்தாரை உணவகம் ஒன்றில் சந்தித்தார். அவர்களிடம் 1970களில் நடந்த சம்பவத்தை விவரித்த ரஞ்சித், அவர்களுக்கென எடுத்துவந்த புதிய ஆடைகளைப் பரிசளித்தார். அதற்குப் பிறகு, தான் திருடிய ரூ.37.50-க்குப் பதிலாக முருகையா, பழனியாண்டி, கிருஷ்ணன் ஆகியோரின் குடும்பத்திற்கு இலங்கை மதிப்பில் தலா 70,000 ரூபாயை பரிசளித்தார். இந்த நிகழ்வு, சுப்பிரமணியன் - எழுவாய் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்தத் தம்பதியின் இரு மகன்களான பழனியாண்டியும் கிருஷ்ணனும் இன்னமும் ஆச்சரியம் விலகாமல் இருக்கின்றனர்.   படக்குறிப்பு, ரஞ்சித் பணத்துடன் சேர்த்து பரிசளித்த பேனாவை மகிழ்ச்சியுடன் காட்டும் பழனியாண்டி. ஆச்சர்யத்தில் ஆழ்ந்த எழுவாய் - சுப்ரமணியம் தம்பதியின் மகன்கள் தற்போது கொழும்பு நகரில் வசிக்கும் பழனியாண்டி, "ரஞ்சித் செய்த காரியம் எங்களை நெகிழ வைத்தது. இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மனிதர் இருக்கிறாரா என்று தோன்றியது. அறியாப் பருவத்தில் செய்த செயலுக்காக திரும்பவும் வந்து பணத்தைக் கொடுத்தது, சந்தோஷத்தை அளித்தது. இந்த நேரத்தில் இந்தக் காசு வந்தது எல்லோருக்குமே உதவியாகத்தான் இருந்தது. குறிப்பாக என்னுடைய தம்பிக்கும் அண்ணனின் மனைவிக்கும் மிகுந்த உதவியாக இருந்தது. அவர்கள் மிகுந்த சந்தோஷமடைந்தார்கள்" என்கிறார். பழனியாண்டிக்கு இப்படி பணம் திருடுபோனது தெரியாது. "நான் 12 - 13 வயதிலேயே கொழும்பு நகருக்கு வந்துவிட்டேன். அம்மாவும் அப்பாவும் ஊரில் இருந்தார்கள். அந்த நேரத்தில் என்ன நடந்ததென்பது எனக்குத் தெரியாது. அம்மாவுக்கும் இவர்தான் எடுத்தார் என உறுதியாகத் தெரியாது. இப்போது இவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இதைப் பற்றித் தெரிந்திருக்காது" என்கிறார் பழனியாண்டி. எழுவாயின் இரண்டாவது மகன் பழனியாண்டியின் மகள் பவானி, கொழும்புக்கு அருகில் உள்ள வத்தலையில் வசிக்கிறார். "எங்கள் பாட்டியை நான் பார்த்ததுகூட கிடையாது. இத்தனை வருடங்கள் கழித்து, எனது பாட்டி வழியில் இப்படியொரு தொகை எங்களுக்கு வரும் என்று துளியும்கூட நாங்கள் நினைத்துப் பார்க்கவேயில்லை. இந்தக் காலத்தில் இவ்வளவு நன்றியுடன் இருக்கும் மனிதர்களைப் பார்க்கும் போது, நேர்மையும், மனிதநேயமும் இன்னும் மரணிக்கவில்லை என்று தெரிகிறது. இலங்கையில் இப்போது விலைவாசி கடுமையாக உயர்ந்திருக்கிறது. பொருளாதாரச் சூழல் மிக மோசமாக இருக்கிறது. இந்த நேரத்தில் கிடைத்த இந்தத் தொகை எங்களுக்கு பெரிய உதவிதான்" என பிபிசியிடம் தெரிவித்தார் பவானி. படக்குறிப்பு, கோவை தொழிலதிபர் ரஞ்சித்திடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட பவானி மற்றும் குடும்பத்தினர். தற்போது இவர்களது குடும்பத்தினர் யாருமே, பழைய ஊரில் வசிக்கவில்லை. கிருஷ்ணனின் குடும்பத்தினர் நுவரேலியா தலவாக்கலை அருகில் உள்ள செயின்ட் கோம்ஸ் என்ற இடத்தில் வசிக்கின்றனர். அலகொல பகுதியில் சுப்பிரமணியன் - எழுவாய் தம்பதி வசித்த வீடு இருந்த பகுதி தற்போது தரைமட்டமாகக் காட்சியளிக்கிறது. அந்த இடத்தில் நின்றபடி பிபிசியிடம் பேசிய கிருஷ்ணன், "எனக்குக் கொடுத்த பணத்தை என் பிள்ளைகள் நான்கு பேருக்கும் பத்தாயிரம், பத்தாயிரம் என கொடுத்துவிட்டேன். சரியான சந்தோஷம். அவ்வளவு கஷ்டத்தில் இருந்தோம். இப்போது அம்மா இருந்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பார்கள்" என நெகிழ்ந்துபோய் பேசுகிறார். எழுவாயின் ஒரு மகளான செல்லம்மாளின் குடும்பம், திருச்சிக்கு அருகில் இருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில்அந்த குடும்பத்தினருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க முயற்சி செய்து வருவதாக கூறுகிறார் ரஞ்சித். "இந்தப் பணத்தைத் திரும்பக் கொடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது" என்கிறார் ரஞ்சித். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0e103g5925o
    • வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற கொலை; என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடியவாறு கருத்து தெரிவித்தவர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு - வியாழேந்திரன்  எனது வீட்டுக்கு முன்பாக இடம்பெற்ற கொலை தொடர்பில் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் கருத்து தெரிவித்தவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அங்கு இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த 17ஆம் திகதி மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான மற்றும் முற்றுமுழுதான பொய்யான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,  எனது வீட்டுக்கு முன்பாக நடைபெற்ற கொலை தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடைபெற்றுள்ளன. எனது அனைத்து தகவலும் பெறப்பட்டன. எனது கையடக்க தொலைபேசி மற்றும் மெய்க்காவலர் என அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.  இச்சம்பவம் நடைபெற்றபோது நான் இருந்த இடம் தொடர்பிலான அனைத்து தகவல்களும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டன. ஆனால், இவையெல்லாம் வழங்கப்பட்டுள்ள நிலையில் எனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் முன்வைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளேன். அதேபோன்று கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் என்பவர் முகப்புத்தகம் ஊடாக நேரலை செய்து எனது பெயருக்கும் எனது முற்போக்கு கழகத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை முன்வைத்து வருகின்றார். முன்பு ஒரு தடவை அவருக்கு எதிராக இவ்வாறு கருத்துகளை தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்தபோது, தான் இனி அவ்வாறு செயற்படமாட்டேன் என எங்களிடம் வந்து தெரிவித்ததையடுத்து அந்த வழக்கினை வாபஸ் செய்தேன். ஆனால், அவர் மீண்டும் எனது பெயருக்கும் முற்போக்கு தமிழர் கழகத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் தகாத வார்த்தைகள் மூலமாகவும் முகப்புத்தகத்தில் நேரலை செய்துள்ளார். அவருக்கு எதிராகவும் முறைப்பாட்டினை இன்று பொலிஸ் தலைமையகத்தில் செய்துள்ளேன் என்றார். https://www.virakesari.lk/article/196659
    • (எம்.மனோசித்ரா) ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அரச நிதி முகாமைத்துவ சட்டத்தை எதிர்த்த ஜே.வி.பி. இன்று அந்த சட்டத்துக்கமையவே செயற்பட்டு வருகிறது. நல்லாட்சி அரசாங்கத்திலேயே அதிகளவான கடன் பெறப்பட்டதாக அன்று குற்றஞ்சுமத்தப்பட்ட போதிலும், அதனை விட அதிகக் கடனைப் பெற வேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டினார். பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக வாரத்துக்கொரு முறை புதிய கடனை பெற வேண்டும் என்ற யதார்த்தத்தை தற்போது ஜே.வி.பி. உணர்ந்திருக்கும் எனக் குறிப்பிட்ட கலாநிதி ஹர்ஷ, வருமானத்தை அதிகரிப்பதற்காக அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதை அவதானித்துக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் தொடர்ச்சியாக கடன் பெற்றுக்கொண்டிருக்கிறது. அரசியலுக்கு அப்பால் இதற்கான காரணிகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியிருக்கிறது. நிதி தொடர்பான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. அரசியலமைப்பின் 148ஆம் உறுப்புரைக்கமைய பாராளுமன்றத்துக்கே அந்த அதிகாரம் காணப்படுகிறது. பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரதான மூலம் கோப் குழுவாகும். அதன் முன்னாள் தலைவர் என்ற ரீதியிலேயே இவ்விடயங்களை நான் மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அரசாங்கத்துக்கு அன்றாட பணிகளுக்கு நிதி தேவைப்பாடு காணப்படுகிறது. அதனை எங்கிருந்து பெற்றுக்கொள்வது? அதற்கு இரு பிரதான வழிமுறைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று வரி உள்ளிட்ட அரச வருமானத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்படும் திறைசேரி கணக்கில் காணப்படும் நிதியாகும். இரண்டாவது கடன் பெற்றுக்கொள்ளலாகும். திறைசேரியில் மேலதிக அல்லது மிகையான நிதி காணப்படுமானால், கடனை மீள செலுத்துவதற்காக அதனைப் பயன்படுத்த முடியும். மிகை நிதி என்பது அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் செலவுகளைக் கழித்த பின்னர், எஞ்சும் தொகையில் வட்டியையும் குறைத்த பின்னர் மீதப்படும் தொகையாகும். மிகை நிதியானது தேசிய உற்பத்தி வருமானத்துக்கு சமாந்தரமாக 2.3 சதவீதமாக பேணப்படும் என்று கடந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டை எட்டியது. எனவே, இந்த மிகை நிதியானது கடந்த ஆண்டும் இவ்வாண்டும் அதிகாரிகளால் முகாமை செய்யப்பட்டு வருகிறது. எனவே, பெற்ற கடனை மீள செலுத்தும்போது அந்த மிகை நிதியில் ஒரு தொகை பயன்படுத்தப்படும். இது நீண்ட காணப்படாத இல்லாத ஒன்றாகும். கடுமையான அரச நிதி ஒழுக்கத்தினால் தற்போது மிகை நிதி காணப்படுகிறது. இதற்காக அரச நிதி முகாமைத்துவ சட்டம் கடந்த அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அன்று எதிர்க்கட்சி என்ற ரீதியில் அந்த சட்டத்துக்கு நாம் ஒத்துழைப்பை வழங்கினோம். ஆனால், அன்று அதனை எதிர்த்த ஜே.வி.பி., இன்று அந்த சட்டத்துக்கமையவே மிகை நிதியைப் பேணி வருகிறது. எவ்வாறிருப்பினும் மிகை நிதி போதவில்லை எனில் வாரத்துக்கொரு முறை கடன் பெற வேண்டியுள்ளது. ஏற்கனவே பெற்ற கடனை மீள செலுத்துவதற்காக புதிதாகக் கடன் பெற வேண்டும். அவ்வாறில்லையெனில் பணத்தை அச்சிட வேண்டும். எனினும், நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய மத்திய வங்கியால் பணத்தை அச்சிட முடியாது. மத்திய வங்கி சுயாதீனப்படுத்தல் சட்டத்துக்கமைய பணத்தை அச்சிட்டு அரசாங்கத்துக்கு வழங்கவும் முடியாது. மத்திய வங்கி சுயாதீனமயப்படுத்தல் சட்டத்துக்கும் அன்று ஜே.வி.பி. ஆதரவளிக்கவில்லை. இந்த சட்டத்தை மாற்றுவதாக அன்று ஜே.வி.பி. கூறினாலும், அவ்வாறு எதனையும் கூறாமல் இவ்வாறு சென்றுகொண்டிருக்கின்றனர். எனவே, மத்திய வங்கியிடம் கடன் பெற முடியாது என்பதால், அரசாங்கம் வர்த்தக சந்தையில் கடன் பெற்றுக் கொண்டிருக்கிறது. நல்லாட்சி அரசாங்கத்திலேயே அதிகளவான கடன் பெறப்பட்டதாக ஜே.வி.பி. அன்று குற்றஞ்சுமத்தியது. எமது ஆட்சியில் பெற்றுக்கொள்ளப்பட்ட மொத்த கடனில் 89.9 சதவீதமானவை 2015க்கு முன்னர் பெற்றுக் கொண்ட கடனுக்கான வட்டியை செலுத்துவதற்காகவே பெறப்பட்டது. எனினும் அதில் நம்பிக்கை கொள்ளாமல் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இவ்வாறு கடன் பெற வேண்டுமா என்று கேட்டனர். ஆனால், இன்று என்ன நடக்கிறது? இவ்வாறு தொடர்ச்சியாக சென்றால் கடந்த அரசாங்கத்தை விட 2024இல் தெரிவான அரசாங்கம் அதிகக் கடனைப் பெறும் நிலைமையே காணப்படுகிறது. எமக்கு இவ்வாறு கடன் பெறவேண்டிய தேவையில்லை. கடன் பெறுவதால் என்ன அர்த்தமுள்ளது, கடந்த அரசாங்கம் பாரியளவில் கடன் பெற்றுள்ளது என அரசியல் தளங்களில் கூறினாலும் இதுவே யதார்த்தமாகும். அவற்றை  தெரிந்துகொள்ளாமல் கூறினார்களா? அவ்வாறில்லை எனில் மக்களை ஏமாற்றுவதற்காக கூறினார்களா என்பது எமக்குத் தெரியாது. பழைய கடனை மீள செலுத்துவதற்கு வாரத்துக்கொரு முறை புதிய கடனைப் பெற வேண்டும் என்பதே யதார்த்தமாகும். மிகை நிதியை மேலும் அதிகரித்துக்கொண்டால் மாத்திரமே புதிதாகப் பெற்றுக்கொள்ளும் கடன் தொகையையும் குறைத்துக்கொள்ள முடியும். மிகை நிதியை பலப்படுத்த வேண்டுமெனில் அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். செலவுகள் குறைக்கப்பட வேண்டும். வருமானத்தை அதிகரிப்பதற்கான பிரதான வழிமுறை வரியைப் பெற்றுக் கொள்வதாகும். வரியைக் குறைப்பதாகக் கூறினாலும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. அது தொடர்பில் எந்தப் பேச்சும் இல்லை. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து நேரடியாகப் பெற்றுக்கொள்ளும் வரியை அதிகரிப்பதாக முன்னர் கூறப்பட்ட போதிலும், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வரியில் விலக்களிப்பை வழங்கினால் பிரிதொரு வரி அறவிடப்பட வேண்டும். வீடுகளை வாடகைக்கு வழங்குவதன் மூலம் பெற்றுக்கொள்ளும் வருமானத்துக்கு வரியை அறவிடுவதற்கு கடந்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. அதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் பிரிதொரு வரியை அறிமுகப்படுத்த வேண்டும். அதே போன்று வட் வரி நீக்கப்பட்டாலும், அதற்கு பதிலாகவும் வேறு வரி அறவிடப்பட வேண்டும். எனவே இந்த அரசாங்கம் கூறிய மாற்றங்களை எவ்வாறு செய்யப் போகிறது என்பதை பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/196653
    • ஹமாஸ் தலைவரின் மரணம் காஸாவில் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை முடிவுக்கு கொண்டு வருமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 55 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரில் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது இஸ்ரேலுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. . சின்வாரின் மரணம் ஹமாஸுக்கு விழுந்த பெரிய அடி. ஹமாஸை அவர் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக மாற்றினார், அதன் விளைவாக இஸ்ரேல் அரசு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. சின்வார் இஸ்ரேல் சிறப்புப் படைகளின் திட்டமிட்ட நடவடிக்கையில் கொல்லப்படவில்லை, மாறாக காஸாவின் தெற்கில் உள்ள ரஃபாவில் தற்செயலாக ரோந்து மேற்கொண்ட இஸ்ரேலியப் படைகள் நடத்திய ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டார். சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம், போர் உடை அணிந்திருந்த சின்வார் ஷெல் குண்டு வீச்சு தாக்குதலில் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் இறந்து கிடந்ததைக் காட்டுகிறது.   இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ராணுவ வீரர்களைப் பாராட்டிய அதே சமயத்தில், எவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், அது போரை முடிவுக்குக் கொண்டு வராது என்றார். நெதன்யாகு மேலும் கூறுகையில், "நமக்கு தீங்கு செய்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை நாம் மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தி இருக்கிறோம். தீமையை `நன்மை’ வீழ்த்தியதை இன்று மீண்டும் ஒருமுறை உலகிற்குக் காட்டியுள்ளோம். ஆனால் போர் இன்னும் முடிவடையவில்லை. இது கடினமான நேரம். நாம் செய்ய வேண்டியது இன்னும் இருக்கிறது” என்றார். "நமக்கு முன்னால் இன்னும் பெரிய சவால்கள் உள்ளன. நமக்கு சகிப்புத்தன்மை, ஒற்றுமை, தைரியம் மற்றும் உறுதிப்பாடு தேவை. நாம் ஒன்றாகப் போராட வேண்டும், கடவுளின் உதவியால், நாம் ஒன்றாக வெற்றி பெறுவோம்" என்றும் அவர் கூறினார்.   பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பணயக்கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர். காஸா போரை ஆதரிக்கும் நெதன்யாகு மற்றும் பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் வெற்றிக்காக காத்திருக்கின்றனர். நெதன்யாகு தனது போர் இலக்குகளை பலமுறை பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறார். "ஹமாஸின் அரசியல் மற்றும் ராணுவ பலத்தை அழித்து இஸ்ரேல் பணயக்கைதிகளை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும்." என்பதே அவரின் இலக்கு. ஒரு வருடமாக தொடரும் போரில் குறைந்தது 42,000 பாலத்தீனர்களைக் கொன்று, காஸாவின் பெரும் பகுதிகளை தரைமட்டம் ஆக்கிய போதிலும், இலக்கு இன்னும் அடையப்படவில்லை என்று இஸ்ரேல் கருதுகிறது. மீதமுள்ள பணயக்கைதிகளின் விடுதலை, இஸ்ரேலிய படைகள் மீது ஹமாஸ் நடத்தும் தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்பதே இஸ்ரேலின் நோக்கம். சின்வாரைக் கொன்றது இஸ்ரேல் விரும்பிய வெற்றி என்ற போதிலும் போரின் மற்ற இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு கூறுகிறார்.   யாஹ்யா சின்வார் யார்? சின்வார் 1962 ஆம் ஆண்டு காஸா பகுதியில் இருக்கும் கான் யூனிஸ் நகரில் அகதிகள் முகாமில் பிறந்தார். 1967 மத்திய கிழக்குப் போரில் இஸ்ரேல், காஸா முனையைக் கைப்பற்றிய போது அவருக்கு ஐந்து வயது தான் ஆகியிருந்தது. 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலியப் படைகளால் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட அல்லது தப்பியோடிய 700,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்களில் சின்வாரின் குடும்பமும் ஒன்று. அவரது குடும்பத்தினர் காஸா பகுதியின் வடக்கு எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அஷ்கெலோன் நகரத்தை சேர்ந்தவர்கள். இஸ்ரேல் சிறையில் 22 ஆண்டுகள் அடைக்கப்பட்டிருந்த போது, அவர் ஹீப்ரு மொழியைக் கற்றுக் கொண்டார். சின்வார் இஸ்ரேல் சிறையில் இருந்ததால், அவரது பல் மாதிரிகள் மற்றும் அவரது டிஎன்ஏ மாதிரிகள் இஸ்ரேலிடம் உள்ளன. அவையே காஸாவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் அவருடையதா இல்லையா என்பதை தீர்மானிக்க உதவின. 2011-ஆம் ஆண்டு பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாத் ஷாலித் என்பவரை விடுவிக்க, இஸ்ரேலின் பிடியில் இருந்த 1,000க்கும் மேற்பட்ட பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் சின்வாரும் ஒருவர். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதியன்று, கவனமாக திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம் சின்வாரும் அவரது ஆட்களும் சேர்ந்து இஸ்ரேலுக்கு மிக மோசமான தோல்வியை கொடுத்தார்கள். இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சுமார் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சின்வாரின் மரணத்தைக் கொண்டாடும் விதமாக மக்கள் இஸ்ரேலிய தேசியக் கொடிகளை அசைத்து ஆரவாரம் செய்தனர் பணயக்கைதிகளை இஸ்ரேல் பொருட்படுத்தவில்லையா? காஸாவில் எஞ்சியிருக்கும் 101 இஸ்ரேல் பணயக்கைதிகளில் பாதி பேர் ஏற்கனவே இறந்திருக்கலாம் என்று இஸ்ரேல் கூறுகிறது. பணயக் கைதிகள் பிடித்துச் செல்லப்பட்ட அதே இடத்தில் அவர்களின் குடும்பத்தினர் ஒன்றுகூடி, அவர்களை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகளை இஸ்ரேலிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். பணயக்கைதியான மதன் ஜாங்கவுக்கரின் தாயார், “நெதன்யாகு, பணயக்கைதிகளை புதைத்து விடாதீர்கள். மத்தியஸ்தர்கள் மற்றும் பொதுமக்களை அணுகி, புதிய முயற்சியை முன்வையுங்கள். பணயக்கைதிகளை மீட்பது உங்களால் மட்டுமே முடியும்” என்றார். அவர் மேலும் கூறுகையில் "நெதன்யாகு இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால், ஒரு புதிய இஸ்ரேலிய ஒப்பந்தத்தை முன்வைக்க முன்வரவில்லை என்றால் அவர் பணயக்கைதிகளாக இருக்கும் எங்கள் குடும்பங்களை கைவிட்டுவிட்டார் என்று தான் அர்த்தம்.” "அவர்களுக்காக போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் தயாராக இல்லை. மாறாக நெதன்யாகு போரை இன்னும் அதிகப்படுத்தி வருகிறார். அனைவரும் திரும்பும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ” என்றார். "சின்வாரும் அவரது ஆட்களும் இஸ்ரேலைத் தாக்கும் அளவுக்கு அதன் பாதுகாப்பு பலவீனமாக இருந்துள்ளது. நெதன்யாகு, இந்த பாதுகாப்புத் தோல்விகளில் தனது பங்கை மறைக்கவும், கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணையை காலவரையின்றி ஒத்திவைக்கவும் காஸா போர் சூழலை ஆதரிக்கிறார்." என்று அவர் குற்றம்சாட்டினார். நெதன்யாகு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார். காஸாவில் ஹமாஸை வீழ்த்தி "முழுமையான வெற்றி" கண்டால் மட்டுமே இஸ்ரேலிய பாதுகாப்பை மீட்டெடுக்க முடியும் என்று அவர் கூறுகிறார். இஸ்ரேல் காஸாவுக்குள் செய்தி நிறுவனங்களை அனுமதிப்பதில்லை. ராணுவ மேற்பார்வையின் கீழ் அரிதான பயணங்களை மட்டுமே அனுமதிக்கிறது. பிபிசிக்கும் இதே நிலைதான்.   சின்வாரின் சொந்த ஊர் மக்களின் நிலைப்பாடு சின்வாரின் சொந்த ஊரான கான் யூனிஸில், பிபிசிக்காக சில நம்பகமான உள்ளூர் பத்திரிகையாளர்கள் பாலத்தீனர்களை பேட்டி கண்டனர். அவர்களும் போர் தொடரும் என்றே கூறினார்கள். டாக்டர் ரமலான் ஃபாரிஸ் கூறுகையில் “இந்தப் போர் சின்வார், ஹனியே அல்லது மிஷால் அல்லது எந்தத் தலைவரையோ அல்லது அதிகாரியையோ சார்ந்தது அல்ல, இது பாலத்தீன மக்களுக்கு எதிரான அழிவுகரமானப் போர். இது நாங்கள் அனைவரும் அறிந்து கொண்ட உண்மை. சின்வார் உள்ளிட்டவர்களை தாண்டி இது மிகப்பெரிய பிரச்னை” என்றார். சிலர் சின்வாரின் மரணத்தால் சோகமாக இருப்பதாகவும், மற்றவர்கள் அலட்சியமாக இருப்பதாகவும் அட்னான் அஷூர் கூறினார். அஷூர் மேலும் கூறுகையில், "அவர்களுக்கு நாங்கள் மட்டுமல்ல, முழு மத்திய கிழக்கும் வேண்டும். அவர்கள் லெபனான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுடனும் சண்டையிடுகிறார்கள். இது 1919 முதல், அதாவது 100 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்கும் யூதர்களுக்கும் இடையேயான போர்" என்று கூறினார். சின்வாரின் மரணம் ஹமாஸை பாதிக்குமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. "இல்லை என்று நம்புகிறேன், ஹமாஸ் என்பது வெறும் சின்வார் என்ற தனி நபரை சார்ந்தது அல்ல" என்றார் அவர்.   'ஹமாஸை அழிக்க முடியாது’ காஸாவில் போர் தொடர்கிறது. 25 பாலத்தீனர்கள் வடக்கு காஸாவில் ஒரு தாக்குதலில் கொல்லப்பட்டனர். அந்த தாக்குதல் மூலமாக ஹமாஸ் கட்டளை மையத்தைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறியது. உள்ளூர் மருத்துவமனை மருத்துவர்கள் அந்த தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்பதை உறுதிப்படுத்தினர். இஸ்ரேல் அதிக உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தியதை அடுத்து பாராசூட் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. 1990களில் இருந்து ஒவ்வொரு ஹமாஸ் தலைவர்களும் இஸ்ரேலால் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆனால் அடுத்தடுத்து ஒரு வாரிசு வந்து விடுகிறார். சின்வார் கொல்லப்பட்டதை இஸ்ரேல் கொண்டாடும் அதே வேளையில், ஹமாஸ் பணயக்கைதிகளை இன்னும் வைத்திருக்கிறது, இன்னும் சண்டையிட்டு கொண்டிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwy97j0985go
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.