Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற தேர்தல் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றையதினம் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்றையதினம் நெல்லியடி பகுதியில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தற்போது அவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/197009

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில நாட்களில் விடுதலை செய்யப்பட்டு, “ சிறை மீண்ட செம்மலாக” வாக்கு கேட்டு வருவார். 😂

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரினால் வியாழக்கிழமை (24) மாலை கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்த பின்னர் பொலிஸ் பிணையில் பொலிஸார் விடுவித்துள்ளனர்.

அதேவேளை பருத்தித்துறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளரான வரதராஜன் பார்த்திபனை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கஜேந்திரகுமார் பிணையில் விடுவிப்பு | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சிறை மீண்ட செம்மல் ஈழ தமிழர்களிடையே   ஒரு கவர்ச்சியான  பட்டம் தான் 😃
சிறை மீண்ட செம்மலாக உரிமை பெறுவதற்கு குறைந்தது எத்தனை மணித்தியாலங்கள்    பொலிஸால்  தடுத்து வைக்கபட்டிருக்க வேண்டும்?
அர்ச்சுனா ஏற்கெனவே அப்படி  வலம் வருகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். செய்யவும் போவதில்லை. ஆனால் எவனாவது களத்தில் இறங்கி செயற்பட்டால் அல்லது சிறை சென்றால் நக்கல் நையாண்டி??

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். செய்யவும் போவதில்லை. ஆனால் எவனாவது களத்தில் இறங்கி செயற்பட்டால் அல்லது சிறை சென்றால் நக்கல் நையாண்டி??

தமிழ்த் தேசியப் பரப்பில் கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் சிங்களப்படைகளின்  அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் இடையூறுகளைக் கடந்து ஒரேகொள்கையோடு உறுதியாக நிற்பதென்பது சிங்களத்துக்கு மட்டுமல்ல இன்னும் பலருக்கும் இடையூறாக உள்ளது. அதன்விளைவேயாகும்.
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

கஜே - குதிரை கஜே கும்பல்  தாங்கள் தினமும் தமிழர் மத்தியில் பிதற்றும் இரு தேசம் கோரிக்கைக்காக போராடி கைது செய்யப்படவில்லை.  ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மீது தாங்கள் விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான தமது  தேர்தல்  போட்டியில் தேர்தல் விதிமுறை மீறல் என்றே கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் இலங்கை அரசில் கஜேக்கு இருக்கும் உள்மட்ட செல்வாக்கை பயன்படுத்தி முடிந்து விடும். எனவே உசுப்பேத்து புலம் பெயர் கோஷடிகளே கவலை வேண்டாம் உங்கள் தலைவர் அடுத்த பாராளுமன்றம் கூடும் போதும் இலங்கை ஒற்றையாட்சிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்று  சத்தியம் செய்யத்தான் போகிறார். அவரசு இரு தேசத்தில் ஒரு தேசமான  ஶ்ரீலங்கா தேசத்தில் தான் செய்துள்ள பாரிய முதலீடுகளை கண்காணிக்கவும் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள தொடர்பாடல்களை வளர்ககவும் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளவும் அவர் பாராளுமன்றம் செல்வது அவசியம் தானே! 

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, island said:

தேர்தல்  போட்டியில் தேர்தல் விதிமுறை மீறல் என்றே கைது செய்யப்பட்டிருக்கிறார்

துண்டுப் பிரசுரம் விநியாகிப்பது குற்றம் என்று தேர்தல் திணைக்களம் அறிவித்தபின் அதை ஒரு சட்டத்தரணியான கஜே செய்திருக்கின்றார் என்றால் இது ஒருவிதமான தேர்தல் பிரச்சார உத்திதான்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, island said:

கஜே - குதிரை கஜே கும்பல்  தாங்கள் தினமும் தமிழர் மத்தியில் பிதற்றும் இரு தேசம் கோரிக்கைக்காக போராடி கைது செய்யப்படவில்லை.  ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மீது தாங்கள் விசுவாசமாக இருப்பதாக சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான தமது  தேர்தல்  போட்டியில் தேர்தல் விதிமுறை மீறல் என்றே கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் இலங்கை அரசில் கஜேக்கு இருக்கும் உள்மட்ட செல்வாக்கை பயன்படுத்தி முடிந்து விடும். எனவே உசுப்பேத்து புலம் பெயர் கோஷடிகளே கவலை வேண்டாம் உங்கள் தலைவர் அடுத்த பாராளுமன்றம் கூடும் போதும் இலங்கை ஒற்றையாட்சிக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன் என்று  சத்தியம் செய்யத்தான் போகிறார். அவரசு இரு தேசத்தில் ஒரு தேசமான  ஶ்ரீலங்கா தேசத்தில் தான் செய்துள்ள பாரிய முதலீடுகளை கண்காணிக்கவும் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள தொடர்பாடல்களை வளர்ககவும் அனுகூலங்களை பெற்றுக் கொள்ளவும் அவர் பாராளுமன்றம் செல்வது அவசியம் தானே! 

எதையும் எவரையும் கள்ளராகவும்  சுயநலவாதிகளாகவும் பேசும், பார்க்கும் ஒருவர் நிச்சயமாக உடல் முழுவதும் வஞ்சகம் கொண்டவராகவே இருக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உருட்டப்பா! சிங்க கொடி இருக்கிற இடத்துக்கு போகமாட்டாராம். சிங்க கொடி பறக்கும் ஶ்ரீலங்கா நாடாளுமன்றம் செல்ல பேராசையாம்.   இப்படி ஒரு பம்மாத்து கும்பலும் இந்த தேர்தலில் வேட்பாளராம். 😂

5 minutes ago, விசுகு said:

எதையும் எவரையும் கள்ளராகவும்  சுயநலவாதிகளாகவும் பேசும், பார்க்கும் ஒருவர் நிச்சயமாக உடல் முழுவதும் வஞ்சகம் கொண்டவராகவே இருக்கமுடியும்.

ரொம்ப தான் சுட்டுப்போட்டுதோ. 😂

என்ன செய்வது கள்ளர்களை தூக்கி சுமக்கும் உங்கள் மனநிலை எனக்குல்லையே? 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

. 😂

ரொம்ப தான் சுட்டுப்போட்டுதோ. 😂

என்ன செய்வது கள்ளர்களை தூக்கி சுமக்கும் உங்கள் மனநிலை எனக்குல்லையே? 

அந்த மண்ணில் மட்டுமல்ல எங்குமே இவ்வாறு அல்லல்படவேண்டிய அவசியம் அற்ற பிறப்பால் கோடீஸ்வரப்பிள்ளை.  உலகின் எந்த மூலையிலும் போய் ராசாவாக வாழ்ந்திருந்திருக்கலாம். வாழலாம்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, island said:

என்ன உருட்டப்பா! சிங்க கொடி இருக்கிற இடத்துக்கு போகமாட்டாராம். சிங்க கொடி பறக்கும் ஶ்ரீலங்கா நாடாளுமன்றம் செல்ல பேராசையாம்.   இப்படி ஒரு பம்மாத்து கும்பலும் இந்த தேர்தலில் வேட்பாளராம். 😂

2009ம் ஆண்டு சிங்கள தேச கொடியை தூக்கி ஆட்டியதன் பலனை தமிழ்மக்கள் சந்தோசமாக அனுபவிக்கின்றனர் :cool:

Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கொடியும்  பிடியும்!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

2009ம் ஆண்டு சிங்கள தேச கொடியை தூக்கி ஆட்டியதன் பலனை தமிழ்மக்கள் சந்தோசமாக அனுபவிக்கின்றனர் :cool:

Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: கொடியும்  பிடியும்!

அப்ப ஆட்டாதேங்கோ. அங்க போகாதேங்கோ. சிங்க கொடி பறக்கும் பாராளுமன்றம் போக பேராசை படுபவர் இதை கூறியது தான் நகைச்சுவை. 😂

சிங்க கொடி பறக்கும் நாடாளுமன்றம் செல்ல நாக்கை தொங்க விட்டு அலைபவர் இதை கூறலாமா? 

Edited by island

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, island said:

அப்ப ஆட்டாதேங்கோ. அங்க போகாதேங்கோ. சிங்க கொடி பறக்கும் பாராளுமன்றம் போக பேராசை படுபவர் இதை கூறியது தான் நகைச்சுவை. 😂

சிங்க கொடி பறக்கும் நாடாளுமன்றம் செல்ல நாக்கை தொங்க விட்டு அலைபவர் இதை கூறலாமா? 

ஒரு தமிழன் பாராளுமன்றம் போகவேண்டும் என்றால்   நாட்டுக்கொடியை அரவணைக்க வேண்டும் என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கஜே-கயே குழுவுக்கு இம்முறை ரஜபக்‌ஷ குடும்பம் ஓரங்கட்டப்பட்டது பேரிழப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

ஒரு தமிழன் பாராளுமன்றம் போகவேண்டும் என்றால்   நாட்டுக்கொடியை அரவணைக்க வேண்டும் என்கிறீர்கள்.

நீங்கள் topic ஐ மாற்ற முனைகின்றீர்கள்

சொல்ல வந்தது, சிங்க கொடி இருக்குமிடத்துக்கு செல்ல மாட்டேன் என்று  பீலா விடும்  ஒருவர் சிங்க கொடி பறக்கும் பாராளுமன்றம் செல்ல பேராவல் கொண்டிருப்பது உங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லையா?  

இது சம்பந்தர் சிங்ககொடி பிடித்ததை விட மோசமானதல்லவா?

சம்பந்தர் கொடிபிடித்தது நீங்கள் கூறியது போல் 2009 அல்ல 2016 ல்.  மக்கள் அழிவுக்கு  காரணம் சம்பந்தர் கொடி பிடித்தல்ல. 2009  முன்பு சிங்க கொடி  பிடிக்காத போதே  பேரழிவு வந்துவிட்டது.

 40000 சவப்பெட்டிகளை சடலங்களுடன் யாழ்ப்பாணத்தில்  இருந்து அனுப்புவோம் என்று பாராளுமன்றத்தில்  உரையாற்றி யுத்த இறுதிக் காலத்தில்     மக்களை பேரழிவுக்குள் தள்ளியதில் கஜே கட்சி உறுப்பினர் குதிரை கஜேக்கும்  பங்குண்டு என்று அண்மையில்  விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் பசீர் காக்காவே கஜே மீது பகீரங்கமாக தொலைக்காட்சி உரையாடலில் குற்றம் சாட்டியதை தாங்கள் அறியவில்லையா?  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.