Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஜே.வி.பியினர் தங்களை மார்க்சியவாதிகளாகக் காட்டிக்கொண்டு பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலையே முன்னெடுத்து வருகின்றனர் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் சனநாயகத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சனநாயகத் தமிழரசுக் கூட்டமைப்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடும் பொ. ஐங்கரநேசன் ஞாயிற்றுக்கிழமை கோண்டாவிலில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இனங்களுக்கிடையே கலைஞர்களின் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 2003ஆம் ஆண்டு கொழும்பு நகர மண்டபத்தில் தமிழ், சிங்கள கலை இலக்கியவாதிகள் இணைந்து கலைக்கூடல் நிகழ்ச்சியை நடாத்தியிருந்தனர்.

இதனை ஏற்பாடு செய்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இன நல்லிணக்கத்தைச் சகிக்கமுடியாத ஜே.வி.பியினர் புத்தபிக்குகள் சகிதம் ஊர்வலமாக வந்து தாக்குதல்களை மேற்கொண்டனர். தமிழர்கள்மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பியை தமிழ் மக்களே ஆதரிப்பது அரசியல் மடைமைத்தனமாகும்

மார்க்சியம் இன மத மொழி பேதங்களைக் கடந்து மனிதர்களை நேசிக்கக் கற்றுக் கொடுக்கும் ஒரு தத்துவம் ஆகும். ஆனால் ரோகண விஜயவீராவின் மறைவுக்குப் பின்னர் ஜே.வி.பி ஏனைய சிங்களக்  கட்சிகளைப் போன்றே முற்றுமுழுதாக பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியாக மாறிவிட்டது.

இந்திய – இலங்கை ஒப்பந்த காலப் பகுதியில் அதனை ஆதரித்தமைக்காக சந்திரிகா அம்மையாரின் கணவர் விஜய குமாரதுங்காவின் ஆதரவாளர்கள் பலரையும் விக்கிரமபாகு கருணரட்னவின் ஆதரவாளர்கள் பலரையும் தம் இனம் என்றும் பாராமல் சுட்டுக் கொன்றவர்கள் இவர்கள் தான்.

தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கை நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் துண்டாடியவர்கள் இவர்கள்தான். விடுதலைப் புலிகளை அழித்ததில் அமெரிக்காவின் பங்களிப்புக்காக அமெரிக்கத் தூதரகம் சென்று கைகுலுக்கியவர்களும்  இவர்கள்தான்.

ஜே.வி.பி இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியுடன் தேர்தல் அரசியலில் ஈடுபட்டுவருகிறது. ஜனாதிபதித் தேர்தலின்போது ராஜபக்சாக்களின் மீதும் ரணில் தரப்பின் மீதும்  சிங்கள மக்கள் கொண்டிருக்கும் வெறுப்பு தென்னிலங்கையில் அரசியல் தலைமையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த மாற்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

அமைச்சர் பதவிக்காகத் தமிழ் மக்களை ஜே.வி.பியிடம் அடகு வைப்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு ஜே.வி.பியை வடக்கு கிழக்கில் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/311246

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, ஏராளன் said:

படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

தமிழ்  கட்சிகள் மீது தமிழ் மக்களுக்கு வெறுப்பு வரக்காரணம் என்னவென்று கூற முடியுமா? நீங்களும் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறுகிறீர்கள், உங்கள் செயலற்ற தன்மை விடுவெளியை ஏற்படுத்திற்று, அந்த விடுவெளிக்குள் அவர்கள் புகுந்துள்ளார்கள். இதற்கு யார் காரணம்? எத்தனை ஆண்டுகள் அவகாசம் தந்து உங்களுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுத்து காத்திருந்தார்கள்? உங்களுக்கு வாக்கு, சுகவாழ்க்கை வேண்டும். மக்களின் ஏமாற்றம், உங்கள்மேல் ஏற்பட்ட வெறுப்பே அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது, அதை நீங்கள் சிந்திக்க, ஏற்றுக்கொள்ள, திருந்த தயாரில்லை. மக்களை குற்றம் சாட்டாதீர்கள். சாதாரண மக்களைப்போல் வாழப்பழகிக்கொள்ளுங்கள். இனிமேல் அதுதான் உங்கள் நிரந்தர வாழ்க்கை. 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆறுமுகன் சோதரனின் நேசா ! 

சிங்கள நண்பர் ஒருவர் ,  AKD கட்சியின்  தென் பகுதி  தேர்தல் அலுவலக செலவிற்கு  என்னிடம் நிதி பங்களிப்பு கோரியிருந்தார் .
அனுப்பியிருந்திருக்கிறேன் ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, satan said:

 உங்களுக்கு வாக்கு, சுகவாழ்க்கை வேண்டும். மக்களின் ஏமாற்றம், உங்கள்மேல் ஏற்பட்ட வெறுப்பே அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது, அதை நீங்கள் சிந்திக்க, ஏற்றுக்கொள்ள, திருந்த தயாரில்லை. மக்களை குற்றம் சாட்டாதீர்கள். சாதாரண மக்களைப்போல் வாழப்பழகிக்கொள்ளுங்கள். இனிமேல் அதுதான் உங்கள் நிரந்தர வாழ்க்கை. 

சரியாக சொன்னீர்கள். இன்னும் தங்களை சுயபரிசோதனை செய்ய தயாரில்லை. இவர்கள் வாழாவிருந்துவிட்டு இப்ப மற்றவர்கள் தான் பிளை என்று புது வியாக்கியானம் பண்ணுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, சாமானியன் said:

ஆறுமுகன் சோதரனின் நேசா ! 

சிங்கள நண்பர் ஒருவர் ,  AKD கட்சியின்  தென் பகுதி  தேர்தல் அலுவலக செலவிற்கு  என்னிடம் நிதி பங்களிப்பு கோரியிருந்தார் .
அனுப்பியிருந்திருக்கிறேன் ...

நான்  முப்படையின்ருக்கு நிதி அனுப்பியிருக்கிறேன் 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, putthan said:

நான்  முப்படையின்ருக்கு நிதி அனுப்பியிருக்கிறேன் 

புத்தனாயிருந்து , இப்ப பிள்ளையாராகிட்டீங்கன்னுட்டு சொல்லவேயில்லயே ..  உங்களோட டூ .. 😀

2 minutes ago, சாமானியன் said:

புத்தனாயிருந்து , இப்ப பிள்ளையாராகிட்டீங்கன்னுட்டு சொல்லவேயில்லயே ..  உங்களோட டூ .. 😀

அது சரி , கேட்டுத் தான்   அனுப்பினீகளா , கேளாமலே  கொடுத்தீகளா, அடி ஆத்தி ?   

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, putthan said:

நான்  முப்படையின்ருக்கு நிதி அனுப்பியிருக்கிறேன் 

முப்படையின்ருக்கும் கட்டளை கொடுக்கும் அதிகாரம் கொண்ட தலைவன் அனுரகுமார திசநாயக்கவின் மீதான பாசத்தால் நிதி அனுப்பி இருக்கிறீர்கள்  புல்லு அரிக்குது அண்ணா

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/10/2024 at 18:17, ஏராளன் said:

அந்த மாற்றம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. படித்தவர்கள் சிலர்கூட இதனைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்க் கட்சிகளின் மீது கொண்டிருக்கும் வெறுப்புக் காரணமாக ஜே.வி.பியை ஆதரிக்கத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

அமைச்சர் பதவிக்காகத் தமிழ் மக்களை ஜே.வி.பியிடம் அடகு வைப்பதற்கும் சிலர் தயாராக இருக்கிறார்கள். தமிழ் மக்கள் இதனைப் புரிந்துகொண்டு ஜே.வி.பியை வடக்கு கிழக்கில் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை  நிரந்தர நண்பணும் இல்லை என்பார்கள். 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, சாமானியன் said:

புத்தனாயிருந்து , இப்ப பிள்ளையாராகிட்டீங்கன்னுட்டு சொல்லவேயில்லயே ..  உங்களோட டூ .. 😀

அது சரி , கேட்டுத் தான்   அனுப்பினீகளா , கேளாமலே  கொடுத்தீகளா, அடி ஆத்தி ?   

கேட்காமலயே அனுப்பி போட்டன்... அப்பே சகோதரயாக்கள் தானே ...😅என்ட பழைய நண்பன் ஜனாதிபதியா வந்திட்டார் இனி பாலும் தேனும் தான் ஓடப்போகிறது ...இப்படி காசை கிசை அனுப்பி ஆளை கைக்குள்ள போடத்தான் ...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

முப்படையின்ருக்கும் கட்டளை கொடுக்கும் அதிகாரம் கொண்ட தலைவன் அனுரகுமார திசநாயக்கவின் மீதான பாசத்தால் நிதி அனுப்பி இருக்கிறீர்கள்  புல்லு அரிக்குது அண்ணா

அனுரா மாத்தையா இப்ப புலட்புரூவ் காரில போக தொடங்கிட்டாராம்...அவரின்ட காருக்கு பெற்றோல் காசு  "நானும் புலம்பெயர்ஸ் தான்" என்ற வகையில் அனுப்புகிறேன்...
நாளைக்கு எதிர்கட்சிகள் சொல்லக்கூடாது இவர் அரசாங்க காசில் பெற்றோல் போடுகிறார் எண்டு ....
முடிந்தால் "புலம்பெயர்ஸ் நிதியம்" ஒன்றை தொடங்கி அவரது பெற்றோல் செலவை நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டும்....😅

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, putthan said:

கேட்காமலயே அனுப்பி போட்டன்... அப்பே சகோதரயாக்கள் தானே ...😅என்ட பழைய நண்பன் ஜனாதிபதியா வந்திட்டார் இனி பாலும் தேனும் தான் ஓடப்போகிறது ...இப்படி காசை கிசை அனுப்பி ஆளை கைக்குள்ள போடத்தான் ...

கூடப்படித்த @ரசோதரன் எவ்வளவு அனுப்பியிருப்பார்?

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

கூடப்படித்த @ரசோதரன் எவ்வளவு அனுப்பியிருப்பார்?

அண்ணை, கடும் ரகசியம் ஒன்று........... அவர் போய் வருகிற அந்தக் கார் அரசாங்கக் கார் இல்லை...... நாங்கள் நாலு பேர்கள் சேர்ந்து வாங்கிக் கொடுத்தது..............🤣.

பெட்ரோல் வாங்க காசு கொடுத்து விட்டே பெருமை பேசும் இந்த உலகில், காரையே வாங்கிக் கொடுத்து விட்டு நாங்கள் கம்மென்று இருக்கின்றோம்...........😜

இலங்கையில் இப்ப இருப்பது ஒரே ஒரு பிரச்சனை தான்.......... கார் பிரச்சனை மட்டுமே.......... அங்கே எந்தக் காரை யார் வைத்திருக்கின்றார்கள் என்பதே அங்குள்ள ஒரு பிரச்சனை..............😀

முழு இலங்கையையும் ஒரு 'சொப்பன சுந்தரி' என்று இந்திய நண்பர்கள் சொல்லிச் சிரிப்பார்கள்.......... இப்ப எவர் வைத்திருக்கின்றார்கள் என்று கேட்பார்கள்.............  

கோவிட் தொற்றுக் காலத்தில் ஐங்கரநேசன் ஒரு அறிக்கை விட்டிருந்தவர். அதை வாசித்த பின், வாழ்நாளில் இனி ஐங்கரநேசனின் ஒரு சொல்லைக் கூட வாசிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். அடக் கடவுளே............ இன்றைக்கு விரதம் உடைந்து, வாசிக்க வேண்டியதாகப் போய் விட்டதே...........🤣.   

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழர்கள் மீது தீரா பகை கொண்ட  பிரேமதாச, தீரா பகை கொண்ட  சந்திரிகா, தீரா பகை கொண்ட ரணில் இப்படியே சொல்லி சொல்லிக் கொண்டு  வந்து இப்ப தீரா பகை கொண்ட ஜேவிபி என்று வந்து நிற்கிறது.  ஏற்கனவே தம்மால் இவ்வாறு  எடுக்கப்பட்ட முன்முடிவுகளை தமிழர் மீது திணித்த அரசியலே தமிழ் தலைமைகள் இன்றுவரை செய்து வந்துள்ளன.  அதை விடுத்து அந்த பகைமையை தீர்கக தாம் எடுத்த அரசியல், ராஜதந்திர நடவடிக்கைகள் என்ன என்றால் அது பூஜ்ஜியமே! 

ஐங்கரனேசன் என்ற அதி புத்திசாலியிடம் நான் கேட்பது தீரா பகை என்றால் அவ்வாறான தீரா பகை கொண்டவர்கள் ஆட்சியில் இருக்கும் நாட்டில் இருக்காமல் நாட்டை காலி செய்து விட்டு போய்விடுங்கள் என்ற செய்தியை இளைஞர்களிடம் கடத்துகிறரா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, putthan said:

முடிந்தால் "புலம்பெயர்ஸ் நிதியம்" ஒன்றை தொடங்கி அவரது பெற்றோல் செலவை நாங்கள் பொறுப்பெடுக்க வேண்டும்....😅

அதற்கான தேவை இருப்பதாக தெரியவில்லையே காரணம் புலம்பெயர்ஸ் ஈழம் தமிழ்ஸ் அனுரகுமார திசநாயக்கவின் கட்சி தேவைகள்  அவரது வாழ்கை தேவைகளை தாங்களே போட்டி போட்டு நிறை வேற்றுகின்றார்கள் 😂
நாளைய தீபாவளி அனுரகுமார திசநாயக்கவிடம் இருந்து கிடைக்க போகின்ற வாழ்த்தை கொண்ட ஈழதமிழ் மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் வரலாற்று சிறப்பு கொண்ட தீபாவளி

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 hours ago, ரசோதரன் said:

ஐங்கரநேசன் ஒரு அறிக்கை

சுன்னாகம் கழிவு எண்ணெய்க்கு விட்டாரே அது போலவா?

Edited by villavan
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதற்கான தேவை இருப்பதாக தெரியவில்லையே காரணம் புலம்பெயர்ஸ் ஈழம் தமிழ்ஸ் அனுரகுமார திசநாயக்கவின் கட்சி தேவைகள்  அவரது வாழ்கை தேவைகளை தாங்களே போட்டி போட்டு நிறை வேற்றுகின்றார்கள் 😂
நாளைய தீபாவளி அனுரகுமார திசநாயக்கவிடம் இருந்து கிடைக்க போகின்ற வாழ்த்தை கொண்ட ஈழதமிழ் மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் வரலாற்று சிறப்பு கொண்ட தீபாவளி

வடசப் குறூப்புக்களில் ஏற்கனவே  தோழர் அனுராவின் வாழ்த்து செய்தி உலா வரத்தொடங்கிவிட்டது அதுவும் அலை அலையாக  ...முக்கியமா  80 களில் பல்கலைகழக ங்களில் பட்டம் பெற சென்ற நண்பர்களின் வட்சப் குறூப்புக்க்க்ளில் 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ரசோதரன் said:

அண்ணை, கடும் ரகசியம் ஒன்று........... அவர் போய் வருகிற அந்தக் கார் அரசாங்கக் கார் இல்லை...... நாங்கள் நாலு பேர்கள் சேர்ந்து வாங்கிக் கொடுத்தது..............🤣.

பெட்ரோல் வாங்க காசு கொடுத்து விட்டே பெருமை பேசும் இந்த உலகில், காரையே வாங்கிக் கொடுத்து விட்டு நாங்கள் கம்மென்று இருக்கின்றோம்...........😜

இலங்கையில் இப்ப இருப்பது ஒரே ஒரு பிரச்சனை தான்.......... கார் பிரச்சனை மட்டுமே.......... அங்கே எந்தக் காரை யார் வைத்திருக்கின்றார்கள் என்பதே அங்குள்ள ஒரு பிரச்சனை..............😀

முழு இலங்கையையும் ஒரு 'சொப்பன சுந்தரி' என்று இந்திய நண்பர்கள் சொல்லிச் சிரிப்பார்கள்.......... இப்ப எவர் வைத்திருக்கின்றார்கள் என்று கேட்பார்கள்.............  

கோவிட் தொற்றுக் காலத்தில் ஐங்கரநேசன் ஒரு அறிக்கை விட்டிருந்தவர். அதை வாசித்த பின், வாழ்நாளில் இனி ஐங்கரநேசனின் ஒரு சொல்லைக் கூட வாசிக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். அடக் கடவுளே............ இன்றைக்கு விரதம் உடைந்து, வாசிக்க வேண்டியதாகப் போய் விட்டதே...........🤣.   

தோழர் அனுரவுக்கு எனது நட்பின் அடையாளமக உடுக்கை இழந்தவன் கை போலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பென்பதற்கிணங்க ஒரு இடுப்பு பட்டி எனது உபயம், 135 ஆசனங்கல் கிடைக்குமாம் என தேசிய புலனாய்வு கூறியிருக்காம் சுமோ, கஜேக்கு  மொத்தமாக 15 கிடைக்குமாம், கூட்டணி அமைச்சால் 150 வருமாம், அதனால நான் உங்கள் நண்பர் (யாழ்கள உறவுகள் அனைவரும் நண்பர்களே) உங்கள் நண்பர் எனக்கும் நண்பர்தானே?

அனுரவுக்கு மட்டும் அறுதிப்பெரும்பான்மை  கிடைக்காவிட்டால் சும்மும், கஜேயும்  அந்த அணியில் இருப்பதால் ஒரு பாதுகாப்பிற்கு அந்த இடுப்பு பட்டி. 

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, vasee said:

இப்ப என்னப்பா..
ஏதோ புதிசாய் இருக்கப்போகுது போல ஒரு பிம்பத்த குடுக்கினம். அடுத்த நாலு வருசத்துக்கு என்ன நடக்குதெண்டு பாப்பமே.

எடுத்துக்கெல்லாம் இப்ப குத்தி முறியத்தேவையில்லை எண்டது என்ர அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஈழப்பிரியன் said:

கூடப்படித்த @ரசோதரன் எவ்வளவு அனுப்பியிருப்பார்?

உஷ் உஷ் புலானாய்வு பிரிவுகள் இந்த தகவலை சேகரித்து வைத்தால் பிரச்சனை

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

இப்ப என்னப்பா..
ஏதோ புதிசாய் இருக்கப்போகுது போல ஒரு பிம்பத்த குடுக்கினம். அடுத்த நாலு வருசத்துக்கு என்ன நடக்குதெண்டு பாப்பமே.

எடுத்துக்கெல்லாம் இப்ப குத்தி முறியத்தேவையில்லை எண்டது என்ர அபிப்பிராயம்.

உண்மை தான் ..4 வருடம் பார்ப்போம் ..என்.பி.பி யின் கொழும்பு தமிழ் வேட்பாளர் சொல்லியிருக்கிறார் 30 வருடங்களுக்கு தோழர் அனுரா தான் ஆட்சியில் இருப்பார் எண்டு...(ர்ஸ்யா,சீனா போல வருமோ)
 40 வருசத்திற்கு மேலாக அரசியலில் இருந்த எங்களை போல ஆட்களுக்கு கை சும்மா இருக்குதில்லை ....
அரசியல் வாதிகளுக்கு வாய் சும்மா இருக்காது
கருத்து கந்தசாமிகளுக்கு (என்னை சொல்லுறன்)கை சும்மா இருக்காது...அதுவும் யாழ் களம்  தந்த வெளி அதை மேலும் மேலும் கருத்து கந்தசாமியாக வலம் வர வைத்துவிட்டது😅

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, putthan said:

30 வருடங்களுக்கு தோழர் அனுரா தான் ஆட்சியில் இருப்பார் எண்டு...(ர்ஸ்யா,சீனா போல வருமோ)

அனுர தமிழர்களின் உரிமையை மதித்து/ஏற்று ஆட்சி செய்வாராயின் நூறு வருடங்களும் ஆட்சி செய்யட்டும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

அனுர தமிழர்களின் உரிமையை மதித்து/ஏற்று ஆட்சி செய்வாராயின் நூறு வருடங்களும் ஆட்சி செய்யட்டும்.

முக்கியாமா வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு  காணி அதிகாரம் வழங்கி செயல் பட அனுமதிக்க வேணும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, putthan said:

முக்கியாமா வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு  காணி அதிகாரம் வழங்கி செயல் பட அனுமதிக்க வேணும்

இலங்கையின் காணி அதிகார சட்டங்கள் மாகாணத்திற்கு மாகாணம் மாறுபடுகின்றதா புத்தன்? எனக்கு தெரியவில்லை. அதனால் கேட்கின்றேன்.

எனது ஊர் என் காணியை மாற்ற வந்ததில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.அதனால் கேட்கின்றேன்.
போர்த்துக்கீசர் சட்டங்கள்,ஆங்கிலேயர் சட்டங்கள் இன்றும் இலங்கையில் உலாவுகின்றனவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

இலங்கையின் காணி அதிகார சட்டங்கள் மாகாணத்திற்கு மாகாணம் மாறுபடுகின்றதா
போர்த்துக்கீசர் சட்டங்கள்,ஆங்கிலேயர் சட்டங்கள் இன்றும் இலங்கையில் உலாவுகின்றனவா?

தேச வழமை சட்டம் என ஒர் சட்டம் இருந்தது அது தற்பொழுது இல்லை...என நினைக்கிரேன் சோசலிச குடியரசு ஆன பின்பு பல சட்டங்கள் மாற்றப்பட்டுவிட்டது என அறிந்தேன் என்க்கும் உண்மை நிலை தெரியாது,,,

திட்டமிட்ட குடியேற்றங்களை தடை செய்ய இந்த அதிகாரம் தேவை என நினைக்கிறேன்..அர்சியல்வாதிகள்.புத்த பிக்குமார் நினைத்த இடத்தில் குடியேற்றங்களை தடை செய்ய சில அதிகாரங்கள் தேவை...

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, putthan said:

கருத்து கந்தசாமிகளுக்கு (என்னை சொல்லுறன்)கை சும்மா இருக்காது...அதுவும் யாழ் களம்  தந்த வெளி அதை மேலும் மேலும் கருத்து கந்தசாமியாக வலம் வர வைத்துவிட்டது😅

🤣

எனக்கே அனுரகுமார திசநாயக்கவுக்காக ஈழம் தமிழ்ஸ் அடிக்கின்ற புகழ் அலம்பல்கள் இருளுக்கு எதிரான ஒளியாக வந்தவனே  முடியவில்லை

53 minutes ago, putthan said:
8 hours ago, ஈழப்பிரியன் said:

கூடப்படித்த @ரசோதரன் எவ்வளவு அனுப்பியிருப்பார்?

உஷ் உஷ் புலானாய்வு பிரிவுகள் இந்த தகவலை சேகரித்து வைத்தால் பிரச்சனை

எனக்கு கிடைத்த உளவு தகவலின்படி 23 செப்ரெம்பர் 2024 ல் இருந்து ரசோதரன் அண்ணா தன்னுடன் கூடப்படித்த தலைவருக்கு மாதம் மாதம் பணம் அனுப்பி வைக்கும் படி தனது வங்கிக்கு    standing order கட்டளை வழங்கியுள்ளார்.

  • Haha 2

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.