Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

83 இல் தமிழரும் சிங்களவரும் அடித்து கொண்டார்கள் என யாரோ எழுதியது போல இருக்கு ஜி.

சுன்னாகத்தில், சிவிலில் நிக்கும் ஒரு பொலிஸ் கூட்டத்தின் மேல் - ஒரு சாதாரண வான் காரார் தானாக போய் கைவைத்திருப்பார் என நம்புகிறீர்களா ஜி?

செய்தி ஒரு வேனும் மோட்டார்சைக்கிளும் விபத்து என்று சொல்கின்றது.

வேன் சாரதி விபத்து நடந்த இடத்தில் இருந்து போயுள்ளார்

சிவில் உடையில் பொலிஸார் மறித்தபோது தர்க்கப்பட்டுள்ளார். மோதல் நடந்துள்ளது. யார் முதலில் கை வைத்தது என்பது தெளிவில்லை.

இதை இனக்கலவரத்துடன் ஒப்பிடவேண்டியதில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகம் பொலிஸாரின் அராஜகம்; 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நிறுத்தம்!

image

சுன்னாகம் பொலிஸாரின் அராஜகத்தை தொடர்ந்து, குறித்த அராஜகத்தை மேற்கொண்ட பொலிஸாரான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என நால்வர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு விசேட இடமாற்றம் செய்வதாகவும் பொலிஸ் தரப்பு தகவல் தெரிவிக்கின்றன.

சுன்னாகம் பொலிஸார் விபத்து ஒன்று இடம்பெற்ற பகுதிக்கு சென்று அங்கிருந்த பெண்கள் உட்பட பலர் மீது கொடூர தாக்குதல் மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இவ்வாறான பின்னணியிலேயே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அவர்கள் வருகை தந்து சென்ற சில மணி நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/198399

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2024 at 15:40, ஏராளன் said:

யாழ். சுன்னாகத்தில் வாகனமொன்றின் மீது இருவர் மதுபோதையில் வந்து மோதிய சம்பவத்தை

On 10/11/2024 at 15:40, ஏராளன் said:

நாங்கள் வீதியால் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எங்கள் வாகனத்தை முந்தி செல்ல முயன்று தாங்களே அடிபட்டு கீழே விழுந்தார்கள்.

On 10/11/2024 at 15:40, ஏராளன் said:

நானும் எனது கணவரும் அக்காவும் எங்களது வாகனத்தில் வந்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றதால் நாங்கள் நின்றுவிட்டோம்.

    சிவிலில் மதுபோதையில் வந்து வாகனத்தை முந்திக்கொள்ள முயற்சித்து விழுந்தவர்கள் போலீஸ்காரரோ? தம்மை மறைக்க அடிதடியில் தொடங்கியிருக்கின்றனர். காயமடைந்த போலீஸ் எப்படி அவர்களை நின்று தாக்கியது? சிவில் உடையில் வந்தவருக்கு என்ன அதிகாரமிருக்கிறது? வடபகுதியில் போலிக்காரரினாலே சமூக சீர்கேடுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன, ஊழல் கைலஞ்சம் தாராளமாக புழங்குமிடமும் இதுதான். இப்போ அனுர இவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். கைலஞ்சம் வாங்கா விட்டால் பொலிஸாருக்கு கை அரிக்கும். அதனாலேயே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பார்கள். போலீசார் தங்கள் மேல் தவறில்லையென்றால், எதற்காக காணொளி எடுத்த கைபேசியை பறித்து சென்றனர்? அதை ஆராய்ந்தால் யாரில் பிழை என்பதை கண்டுகொள்ளலாம்.

20 hours ago, தமிழ் சிறி said:

தமிழரசு கட்சி  சுமந்திரன்... அந்தப் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. 

மக்கள் வாக்களித்தும், அவர்களுக்காக அவர் போலீசாருடன் மோதியதில்லை. இப்போ, பதவியில்லை என்கிற அறிவிப்பு அவரை சினமடைய வைத்திருக்கும், அவர் ஏன் வாறார்? பதவி என்றால் ஓடி வந்து பெரிய ஊடக அறிக்கை பறந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சைகிளில் வந்தவர்களின் மேல் மட்டும் தவறு இல்லை, வானினை ஒட்டின இவர்களிலும் தவறுள்ளது, முந்தும் மோட்டார் சைகிளை  வான் இடித்துள்ளது எனும் பட்சத்தில் இரு தரப்பிலும் தவறு இருக்கலாம், அதனால் காவல்துறையினர் வாகன சாரதியின் வாகன சாரதி பத்திரத்தினை கோரி உள்ளார்கள் ஆனால் அதனை கொடுக்காமல் காவல் துறையினரின் செயற்பாட்டிற்கு இடையூறு செய்துள்ளார்கள் இது கூட சட்டப்படி குற்றம், இந்த நிகழ்வில் மோட்டார் வாகன சாரதி (குடித்துவிட்டு ஓடியதாக அது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால்), மற்றும் வான் சாரதி விபத்தினை உருவாக்கியது, விசாரணைக்கு ஒத்துழையாமை என இரண்டு குற்றங்கள் செய்துள்ளனர், காவல்துறை வன்முறையில் ஈடுபட்டு அதன் பங்கிற்கு தவறிழைத்துள்ளது ஆனால் வான் சாரதியே அதிகமாக தவறிழைத்துள்ளார் (அவர்களிடம் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இருந்த்திருக்காதோ என சந்தேகமாக உள்ளது அவ்வாறாயின் அது மேலும் ஒரு தவறாகும்).

இவ்வளவு தவறுகளையும் செய்துவிட்டு காவல்துறை மேல் குற்றம் கூறுவதன் மூலம் தம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டுவது கண்டிக்கத்தக்கது அதே நேரம் சட்ட அமலாக்க பிரிவான காவல்துறையே சட்ட மீறலில் ஈடுபடுவதனை தடுக்க எதிர்காலத்தில் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டங்களினை உடனடியாக சீர்திருத்தம் செய்ய மேன்மை தாங்கிய அதி உத்தம ஜனாதிபதி அனுர அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

உடனடியாக சீர்திருத்தம் செய்ய மேன்மை தாங்கிய அதி உத்தம ஜனாதிபதி அனுர அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

 உத்தம ஜனாதிபதி அது அந்த காலம். 

இப்ப,   ஜனாதிபதி சகோதரய. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

மோட்டார் சைகிளில் வந்தவர்களின் மேல் மட்டும் தவறு இல்லை, வானினை ஒட்டின இவர்களிலும் தவறுள்ளது, முந்தும் மோட்டார் சைகிளை  வான் இடித்துள்ளது எனும் பட்சத்தில் இரு தரப்பிலும் தவறு இருக்கலாம், அதனால் காவல்துறையினர் வாகன சாரதியின் வாகன சாரதி பத்திரத்தினை கோரி உள்ளார்கள் ஆனால் அதனை கொடுக்காமல் காவல் துறையினரின் செயற்பாட்டிற்கு இடையூறு செய்துள்ளார்கள் இது கூட சட்டப்படி குற்றம், இந்த நிகழ்வில் மோட்டார் வாகன சாரதி (குடித்துவிட்டு ஓடியதாக அது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால்), மற்றும் வான் சாரதி விபத்தினை உருவாக்கியது, விசாரணைக்கு ஒத்துழையாமை என இரண்டு குற்றங்கள் செய்துள்ளனர், காவல்துறை வன்முறையில் ஈடுபட்டு அதன் பங்கிற்கு தவறிழைத்துள்ளது ஆனால் வான் சாரதியே அதிகமாக தவறிழைத்துள்ளார் (அவர்களிடம் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இருந்த்திருக்காதோ என சந்தேகமாக உள்ளது அவ்வாறாயின் அது மேலும் ஒரு தவறாகும்).

இவ்வளவு தவறுகளையும் செய்துவிட்டு காவல்துறை மேல் குற்றம் கூறுவதன் மூலம் தம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டுவது கண்டிக்கத்தக்கது அதே நேரம் சட்ட அமலாக்க பிரிவான காவல்துறையே சட்ட மீறலில் ஈடுபடுவதனை தடுக்க எதிர்காலத்தில் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டங்களினை உடனடியாக சீர்திருத்தம் செய்ய மேன்மை தாங்கிய அதி உத்தம ஜனாதிபதி அனுர அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் எங்கேயோ போய்டியள் ..புலம்பெயர்ந்த காரணத்தால் உங்கள் சிந்தனை ,கருத்து எல்லாம் உச்சத்தில் இருக்கு நீங்கள் வாழும் நாட்டில் எப்படி பொலிசும் மக்களும் செய்ல படுகின்றனரோ அது போல சிறிலங்கனும்ஸ்  செயல் பட வேணும் என நினைக்கிறீயள்.....

இந்த சிறிலங்கன் பொலீஸ் 1977 லில் யாழ் நகரில் என்ன செய்தார்களோ அதையே இன்றும் செய்கிறார்கள்...இவர்களுக்கு பொலிஸ் பயிற்சி கல்லூரிகளில் இதெல்லாம் சொல்லி கொடுப்பார்களோ தெரியவில்லை...

எது எப்படியோ இன்று தொழில்நுடபம் வளர்ந்த்துள்ளது யாவற்றையும் படம் பிடித்து  யாவரும் அறிய முடியும்...

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

என்ன செய்தாலும் நீ சிங்களத்தின் காலைப்பிடி என்பதை வேதமாக ஏற்றுவிட்டோம். எனவே ....

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

என்ன செய்தாலும் நீ சிங்களத்தின் காலைப்பிடி என்பதை வேதமாக ஏற்றுவிட்டோம். எனவே ....

சிங்களத்தின் காலை பிடி என வகுப்பு எடுப்பவர்களை ...நாம் என்ன செய்ய முடியும் ...சிங்கள பொலிசார் உத்தமர்கள் என சொல்ல முடியாது ...மீண்டும் சொல்கின்றேன் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முக்கிய் காரணம் சிங்கள் பொலிசார் இது இன்றைய இளசுகளுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அன்றைய இளசுகளுக்கு நன்றாகவே தெரியும்...

சிங்களத்தின் காலை பிடி என்பதை எவனும் ஏற்று கொள்ளமாட்டான் ....ஆனால் டமிழன் அமைதியாக வாழ் நினைப்பவன் ..அவனுக்கு பல சமுகங்களுடன் வாழ்ந்து முன்னுக்கு வந்த அனுபவம் உண்டு..பல தடவைகள் கை நீட்டியுள்ளான் சிங்களத்துடன் ...மீண்டும் நீட்டுகிறான் ...பார்ப்போம் அடுத்த ஐந்து வருடம் என்ன  நடக்கின்றது என.......எது எப்படியோ 75 வருட அனுபவம் பாடங்கள் இனி வரும் சந்த்ததிக்கும் கிடைக்குமல்லோ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாக பொலிஸாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

நியாயமான கேள்வி.

ஆனால் இது பிரான்ஸ் இல்லையே அண்ணை. இலங்கை.

அரசு இயந்திரம் சிங்களவரான (?),  பொலிஸ் பக்கம் சாராமல் தமிழரான (?) வான் சாரதி பக்கம் சாய்வது கொஞ்சம்…புதிசு கண்ணா புதுசு.

உங்கள் கருத்து மீது முரண்பாடில்லை சகோ. சட்டம் ஒழுங்கு சரியான முறையில் விதைக்கப்படணும் அவை எல்லோருக்கும் பொதுமானதாக பக்கச்சார்பற்றதாக இருக்கணும். நாம் கண்ட கனவு தேசம் என நமக்கு மறுக்கப்பட்டாலும் எவருக்குமே நீதிக்கான அநீதிக்கெதிரான எமது பார்வை ஒன்றே மாறாதது. மாறக்கூடாதது. அல்லவா? அத்திவாரம் தவறானால்??

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

செய்தி ஒரு வேனும் மோட்டார்சைக்கிளும் விபத்து என்று சொல்கின்றது.

வேன் சாரதி விபத்து நடந்த இடத்தில் இருந்து போயுள்ளார்

சிவில் உடையில் பொலிஸார் மறித்தபோது தர்க்கப்பட்டுள்ளார். மோதல் நடந்துள்ளது. யார் முதலில் கை வைத்தது என்பது தெளிவில்லை.

இதை இனக்கலவரத்துடன் ஒப்பிடவேண்டியதில்லை.

1. விபத்து நடந்த இடத்தில் இருந்து போகக்கூடாது என்பது எப்போதும் இல்லை, விபத்து நடந்த இடத்தில் உடனடியாக நிப்பாட்டினால் அவருக்கு ஆபத்து என பயந்தால், அல்லது வேறு தக்க காரணம் இருந்தால் போகலாம். போய்விட்டு முடிந்தளவு விரைவில் அருகில் உள்ள பொலிஸ்நிலையம் போகலாம். அல்லது அவசர இலக்கத்தை தொடர்பு கொள்லலாம்.

மோட்டார் சைம்கிளில் வந்தோர் பொலிசார் என்பது கவனிக்கப்பட வேண்டியது.

2. இனக்கலவரம் - இதைத்தான் சொன்னேன் . 83 இல் நடந்தது இன கலவரம் அல்ல. கலவரம் எண்டால் (இரு) பகுதியும் அடித்து கொள்வது. 
83 இல் நடந்தது ethnic riots அல்ல, pogrom.

இனவழிப்பு எனலாம்.

4 hours ago, satan said:

சிவிலில் மதுபோதையில் வந்து வாகனத்தை முந்திக்கொள்ள முயற்சித்து விழுந்தவர்கள் போலீஸ்காரரோ? தம்மை மறைக்க அடிதடியில் தொடங்கியிருக்கின்றனர். காயமடைந்த போலீஸ் எப்படி அவர்களை நின்று தாக்கியது? சிவில் உடையில் வந்தவருக்கு என்ன அதிகாரமிருக்கிறது? வடபகுதியில் போலிக்காரரினாலே சமூக சீர்கேடுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன, ஊழல் கைலஞ்சம் தாராளமாக புழங்குமிடமும் இதுதான். இப்போ அனுர இவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். கைலஞ்சம் வாங்கா விட்டால் பொலிஸாருக்கு கை அரிக்கும். அதனாலேயே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பார்கள். போலீசார் தங்கள் மேல் தவறில்லையென்றால், எதற்காக காணொளி எடுத்த கைபேசியை பறித்து சென்றனர்? அதை ஆராய்ந்தால் யாரில் பிழை என்பதை கண்டுகொள்ளலாம்.

👆👍

அதே

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

மோட்டார் சைகிளில் வந்தவர்களின் மேல் மட்டும் தவறு இல்லை, வானினை ஒட்டின இவர்களிலும் தவறுள்ளது, முந்தும் மோட்டார் சைகிளை  வான் இடித்துள்ளது எனும் பட்சத்தில் இரு தரப்பிலும் தவறு இருக்கலாம், அதனால் காவல்துறையினர் வாகன சாரதியின் வாகன சாரதி பத்திரத்தினை கோரி உள்ளார்கள் ஆனால் அதனை கொடுக்காமல் காவல் துறையினரின் செயற்பாட்டிற்கு இடையூறு செய்துள்ளார்கள் இது கூட சட்டப்படி குற்றம், இந்த நிகழ்வில் மோட்டார் வாகன சாரதி (குடித்துவிட்டு ஓடியதாக அது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால்), மற்றும் வான் சாரதி விபத்தினை உருவாக்கியது, விசாரணைக்கு ஒத்துழையாமை என இரண்டு குற்றங்கள் செய்துள்ளனர், காவல்துறை வன்முறையில் ஈடுபட்டு அதன் பங்கிற்கு தவறிழைத்துள்ளது ஆனால் வான் சாரதியே அதிகமாக தவறிழைத்துள்ளார் (அவர்களிடம் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இருந்த்திருக்காதோ என சந்தேகமாக உள்ளது அவ்வாறாயின் அது மேலும் ஒரு தவறாகும்).

இவ்வளவு தவறுகளையும் செய்துவிட்டு காவல்துறை மேல் குற்றம் கூறுவதன் மூலம் தம்மை பாதிக்கப்பட்டவர்களாக காட்டுவது கண்டிக்கத்தக்கது அதே நேரம் சட்ட அமலாக்க பிரிவான காவல்துறையே சட்ட மீறலில் ஈடுபடுவதனை தடுக்க எதிர்காலத்தில் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டங்களினை உடனடியாக சீர்திருத்தம் செய்ய மேன்மை தாங்கிய அதி உத்தம ஜனாதிபதி அனுர அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

எல்லாத்தையும் விடுங்கோ பாஸ்,

சுன்னாகத்தில் பொலிஸ்காரார் மீது தமிழ் ஆள் முதலில் கைவைக்கவா?

அல்லது தமிழ் ஆளில் பொலிஸ் கைவைக்க வா சாத்தியம் கூட ?

இங்கே உள்ளதில் பெரிய பிழை அவரை அடித்தது, குழந்தையை தூக்கி ஏறிந்து பயணிகளா கூட வந்தோரை இம்சித்தது.

இதை எல்லாம் விட்டுட்டு, வானுக்கு பெல் இருக்கா, லைட் இருக்கா என பாக்கிறியள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

எல்லாத்தையும் விடுங்கோ பாஸ்,

சுன்னாகத்தில் பொலிஸ்காரார் மீது தமிழ் ஆள் முதலில் கைவைக்கவா?

அல்லது தமிழ் ஆளில் பொலிஸ் கைவைக்க வா சாத்தியம் கூட ?

இங்கே உள்ளதில் பெரிய பிழை அவரை அடித்தது, குழந்தையை தூக்கி ஏறிந்து பயணிகளா கூட வந்தோரை இம்சித்தது.

இதை எல்லாம் விட்டுட்டு, வானுக்கு பெல் இருக்கா, லைட் இருக்கா என பாக்கிறியள்🤣.

இது ஒரு வகை அடிமைத்தனம்?? அல்லது தாழ்வு மனப்பான்மை?? எம்மவர் மீது தான் தவறு இருக்கும் அல்லது எம்மவர் தான் எல்லாவற்றையும் விட்டு கொடுத்து போகணும் என்று உடல் முழுவதும் பரவி விட்டது?? இது @vasee க்கானது அல்ல பொதுவாக.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

காவல்துறையினர் வாகன சாரதியின் வாகன சாரதி பத்திரத்தினை கோரி உள்ளார்கள் ஆனால் அதனை கொடுக்காமல் காவல் துறையினரின் செயற்பாட்டிற்கு இடையூறு செய்துள்ளார்கள் இது கூட சட்டப்படி குற்றம், இந்த நிகழ்வில் மோட்டார் வாகன சாரதி (குடித்துவிட்டு ஓடியதாக அது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டால்), மற்றும் வான் சாரதி விபத்தினை உருவாக்கியது, விசாரணைக்கு ஒத்துழையாமை என இரண்டு குற்றங்கள் செய்துள்ளனர், காவல்துறை வன்முறையில் ஈடுபட்டு அதன் பங்கிற்கு தவறிழைத்துள்ளது ஆனால் வான் சாரதியே அதிகமாக தவறிழைத்துள்ளார் (அவர்களிடம் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இருந்த்திருக்காதோ என சந்தேகமாக உள்ளது அவ்வாறாயின் அது மேலும் ஒரு தவறாகும்).

முன்னுக்கு பின் முரணாக நிறைய அனுமானங்களோடு தீர்ப்பையும் நீங்களே சொல்லிவிட்டிர்கள் வசி!!!

சிவில் உடை, டீ-ஷர்டில் POLICE Title  போட்ட நபருக்கு எல்லாம் அதிகாரம் இருக்கு என்று எண்ணத் தேவை இல்லை.

வீதி போக்குவரத்து போலீஸ் வரட்டும் என்று கேட்பதில் தவறு இல்லை.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

பின்கதை என்னவாக இருந்தாலும், குழந்தையையும், தாயையும் தாக்கியது மிகவும் தவறான செயல். பிள்ளை நலமாக இருக்கிறதாமா?

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகம் பொலிஸ் நிலையம் அன்றுதொட்டே பிரச்சனைக்குரிய ஒன்றுதான்.

அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் போலிசார் பாராட்டப்படக்கூடிய வகையில் செயற்பட்டார்கள். இதற்கு கரிபூசினாற்போல் இந்த சம்பவம் வேறுபாடாக அமைந்தது துர்ப்பாக்கியம்.

பச்சிளம் குழந்தையை தூக்கி எறியும் ஒருத்தன் போலிசில் பணியாற்றுவதற்கே தகுதி அற்றவன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் போலீஸ் நிலையங்களுக்கு போகிறவர்கள் லஞ்சம் கொடுக்கக்கூடியவர்களாக இருந்தாலே, அங்கு அவர்களுக்கு வேண்டியது நடக்கும். நீதியின் படி நடப்பவர் லஞ்சம் கொடுக்க முன்வரார், அதுவே தவறு. அதனால் தவறு செய்பவன் லஞ்சத்தை கொடுத்து யோக்கியவானாக திரிவான். மொத்தத்தில் தார்மீகம், ஒழுக்கம், அறிவு அற்ற, ஊழல் பேர்வழிகளே போலீசார். காசு உள்ளவனுக்கு தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நீதிக்கு மாறாக செயற்படுவார்கள். இது நான் சிறுவயதிலிருந்து பார்த்து அறிந்த அனுபவம். 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, goshan_che said:

எல்லாத்தையும் விடுங்கோ பாஸ்,

சுன்னாகத்தில் பொலிஸ்காரார் மீது தமிழ் ஆள் முதலில் கைவைக்கவா?

அல்லது தமிழ் ஆளில் பொலிஸ் கைவைக்க வா சாத்தியம் கூட ?

இங்கே உள்ளதில் பெரிய பிழை அவரை அடித்தது, குழந்தையை தூக்கி ஏறிந்து பயணிகளா கூட வந்தோரை இம்சித்தது.

இதை எல்லாம் விட்டுட்டு, வானுக்கு பெல் இருக்கா, லைட் இருக்கா என பாக்கிறியள்🤣.

அட நீங்களுமா? 

கொஞ்சம் 

 விபரமான ஆளாக இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன்😁.

20 hours ago, vasee said:

மேன்மை தாங்கிய அதி உத்தம ஜனாதிபதி அனுர அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இது ஒரு எதிர்மறை உளவியல், அனுரவின் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டால் நியாயம் கிடைத்தது என கருதுபவர்களிற்கான பதில், கடந்த காலத்தில் கூட அதிகார வர்க்கத்திற்கும், பாதுகாப்பு தரப்பிற்குமிடையேயான உறவு நிலவி வந்துள்ளது, மக்களுக்கு இலகுவாக நியாயம் கிடைக்கு நிலையில் தற்போதய அரசு இயந்திரம் இல்லை, இதற்காகவே பயங்கறவாத தடை சட்டத்தினை நீக்குவதற்கு இந்த அரசு விரும்பவில்லை, இந்த பயங்கரவாத தடை சட்டமே பாதுகாப்பு தரப்பிற்கு அதிக அதிகாரங்களை வழங்கி பல மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கிறது அதே சட்டம் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்கள் தாம் விரும்பியதை நிறைவேற்றும் அதிகாரத்தினை வழங்குகிறது.

சம சமூக நீதி என கூறும் இந்த அரசுக்கும் கடந்த காலத்தில் இருந்த அரசுக்களுக்கும் எந்த வித்தியாசமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

கொஞ்சம் 

 விபரமான ஆளாக இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன்😁

🤣….உங்கள் மிகை மதிப்பீட்டுக்கு நான் பொறுப்பல்ல🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

இது ஒரு எதிர்மறை உளவியல், அனுரவின் அரசியல் பிரமுகர்களின் தலையீட்டால் நியாயம் கிடைத்தது என கருதுபவர்களிற்கான பதில்

இப்பவெல்லாம் எங்க எதை செய்வது என்ற விவஸ்த்தை இல்லாமல் போய்விட்ட்தில்ல🤣

காதுகள் பத்திரம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இப்பவெல்லாம் எங்க எதை செய்வது என்ற விவஸ்த்தை இல்லாமல் போய்விட்ட்தில்ல🤣

காதுகள் பத்திரம்🤣.

நீங்கள் சிரிப்பு குறி இட்டிருந்தாலும் நான் உங்கள் மனதை நோகடித்துவிட்டேனோ என கருதுகிறேன், எனது கருத்துக்கள் வெறும் வெட்டியான கருத்துக்கள் அதன் மூலம் சில வேளைகளில் என்னையறியாமலே மற்றவர்களை காயப்படுத்திவிடுகிறேன் என கருதுகிறேன், அதற்காக வருந்துகிறேன் அனைவருடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, vasee said:

நீங்கள் சிரிப்பு குறி இட்டிருந்தாலும் நான் உங்கள் மனதை நோகடித்துவிட்டேனோ என கருதுகிறேன், எனது கருத்துக்கள் வெறும் வெட்டியான கருத்துக்கள் அதன் மூலம் சில வேளைகளில் என்னையறியாமலே மற்றவர்களை காயப்படுத்திவிடுகிறேன் என கருதுகிறேன், அதற்காக வருந்துகிறேன் அனைவருடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

இல்லை முழுக்க முழுக்க சிரிப்புத்தான்.

காயம் ஏதுமில்லை.

ஆனால் நீங்கள் அடித்த அந்தர் பல்டியை பார்த்து அசந்து போனேன் என்பது உண்மைதான்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.