Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/198370

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பார்த்தா என் பி பி யாழில் 6/6 எடுக்கும் போல கிடக்கு🤣.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிக்க வைத்து வேட்டியை உருவுகிறார் அனுரா.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

போற போக்கை பார்த்தா என் பி பி யாழில் 6/6 எடுக்கும் போல கிடக்கு🤣.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிக்க வைத்து வேட்டியை உருவுகிறார் அனுரா.

இந்தக் கூட்டத்தின் பின் கந்தப்புவின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தால் கொஞ்சம் வித்தியாசமாக பதிலளித்து புள்ளிகளும் பெற்றிருக்கலாம்.

3 minutes ago, goshan_che said:

தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிக்க வைத்து வேட்டியை உருவுகிறார் அனுரா.

தேர்தலோடு வேட்டிகள் தட்டுப்பாடாம்.

அதோடு அச்சுக் காகிதங்களும் தட்டுப்பாடாம்.

ஒருவருடத்தில் உழைக்க வேண்டியதை 

ஒரு தேர்தலில்...

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் . .......மக்களின் காணிகளும் வீதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் . ...... காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் விடயங்களிலும் கரிசனை கொள்ள வேண்டும் . ......!

இப்பதானே வந்திருக்கிறார்கள் . ..... எல்லாவற்றையும் உடனே எதிர்பார்க்க முடியாதுதானே ........நல்லதே நடக்கட்டும், நல்லதே செய்யட்டும் . .......!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:
பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

sumanthiran.jpg

465158739-10229835211836814-5538514553356697910-n.jpg

IMG-2822.jpg

அனுர சார்.... அந்த வீதியை, சுமந்திரன் கேட்டுத்தான், நீங்கள் திறந்தீர்களாமே... உண்மையா. 😂  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரை இம்முறை தமிழ் மக்களில் இருந்து பாராளுமன்றம் செல்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை உணர்நதவர்களாகவும்,  அதனை தீர்க்கும் ஆற்றல் மற்றும் விருப்பு மிகுந்தவர்களகவும், ஜதார்தத ரீதியில் சிந்தித்து நடைமுறை சாத்தியமான வழியில் ஒரு அரசியல் தீர்வுக்கு ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து  புரிந்துணர்வை ஏற்படுத்தி அரசியலமைப்பு மாற்றங்களில் தமது பங்களிப்புகளையும் வழங்கி  அதிகாரப்பரவலக்கலை ஏற்படுத்தி,  அதனை நடைமுறைப்படுத்த அதில் முன்னேற்றம் காண  தமது ஆற்றலையும் புத்திசாலித்தனத்தையும் பிரயோகப்படுத்துபவர்களாகவும்,  சில்லறை அரசியலுக்காக தம்முள் முரண்பாடுகளை மேற்கொள்ளாதவர்களாகவும் கட்சி வேறுபாடுகளை கடந்து புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுபவர்களாகவும் இருத்தல் வேண்டும். மக்களின் கலவி பொருளாதார மேம்பாட்டை ஆளும் அரசுகளுடன் கெளவரமான  இணக்கப்பாட்டை  மேற்கொண்டு வட கிழக்குல் தமிழரின் வாழ்ககை தரத்தை உயர்த்த முன்னுரிமை கொடுப்பவராக இருத்தல் வேண்டும். மக்கள்  தமது பொருளாதார வாய்பபுகளை தேடி வெளிநாடு ஒடாது உள்நாட்டில் உரிய வருமானமீட்டி மகிழ்வுடன் வாழும் நிலையை சிறிது சிறிதாகவேனும் ஏற்படுத்துவது   எமது மக்களின் மக்கள் செறிவை தாயகத்தில் பாதுகாக்கும். 

 உனக்கு ஏன் இந்த பேராசை என்று உறவுகள் நினைக்கலாம். இருந்தாலும  பேராசையை பதிவு செய்ததில் தவறில்லையே😂

 தீவிர தமிழ் தேசிய வெறி நோய் முற்றி   அதனை வைத்து அரசியல் பிழைப்பு  நடத்தும் மரமண்டை அரசியல்வியாதிகள் கட்சி வேறுபாடு இன்றி  முற்றாக தோற்கடிக்கப்படல் வேண்டும்.  ஏனெனில் எனது முதல் பந்தியில் கூறிய  Eligibility யில் ஒன்று கூட  இல்லாத வெறுமையாளர்கள் அவர்கள். 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

போற போக்கை பார்த்தா என் பி பி யாழில் 6/6 எடுக்கும் போல கிடக்கு🤣.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு நிக்க வைத்து வேட்டியை உருவுகிறார் அனுரா.

தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சார  கூட்டம், இம்முறை பெரிய அளவில் நடைபெறவில்லைப் போல் தெரிகின்றது. 
வழமையாக புலம் பெயர் தேசங்களில் இருந்து பெருந்தொகைப் பணம் தேர்தல் நேரம் அங்கு ஆறாக பாயும். இம்முறை... அதிலும் துண்டு விழுந்து விட்டது என நினைக்கின்றேன்.
அல்லது... தோற்கிறதுக்கு, எதுக்கு வீணாக செலவழிப்பான் என நினைத்து விட்டார்களோ. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

முக்கியமாக அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் . .......மக்களின் காணிகளும் வீதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் . ...... காணாமல் போன பிள்ளைகளின் பெற்றோர் விடயங்களிலும் கரிசனை கொள்ள வேண்டும் .

அப்ப இனி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப இனி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லையோ?

அனுரா கூறியதுபோல் அப்பழுக்கில்லாத  இளந்தலைமுறை செல்ல வேண்டும் . .......செல்லரித்துப் போனதுகளைத் தவிர்த்து விடவேண்டும் . ......!  

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப இனி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லையோ?

கஜேந்திரகுமார், சுமந்திரன் இருவரும் மீண்டும் கொழும்பு சென்று தமது சட்டதரணி தொழிலுக்கு திரும்பலாம். மணிவண்ணன் மீண்டும் யாழ் மாநகரசபை மேயராகி நகரை அபிவிருத்தி செய்யலாம். செலவம், சுரேஷ் ஓய்வெடுக்கலாம், சுகாஷ் “நான் லோயர்” என்று கத்திக்கொண்டு அடுத்த பைத்தியமான குதிரை கஜோட சேர்ந்து   தெரு தெருவா அலையலாம்.  மற்றயவர்கள் ஏதோ தெரிந்த தொழிலைச் செய்து பிழைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்ப இனி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லையோ?

தப்பு ...என்.பி.பி யில் வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் வேட்பாளர்கள் தான் நிற்க வேணும் அவர்கள் மண்ணின் மைந்தர்கள் ...அவர்களுக்கும் சிங்கள இனவாத செயல்களினால்  ஏதோ ஒரு வகையில் பாதிக்க பட்டவர்கள் தான் ...
வடபகுதியில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை தமிழர் பிரதிநிதியாக தமிழ் மக்கள் அனுப்ப மாட்டார்கள் என நம்புவோம்...சிறிலங்கா தேசிய கட்சியில் இணைந்து தமிழருக்கு  நிவாரண அரசியல் செய்யாமல் தமிழரின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை கொடுக்க  வேண்டும் ஐலன்ட் கூறியது போல...
அனுரா நிரந்தர தீர்வை கொடுத்தால் இந்தியா மீண்டும் தமிழர் பிரச்சனையை வைத்து சிறிலங்காவை ஆட்டிப்படைக்கும் நிலைக்கு செல்ல முடியாது ...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தக் கூட்டத்தின் பின் கந்தப்புவின் கேள்விகளுக்கு பதிலளித்திருந்தால் கொஞ்சம் வித்தியாசமாக பதிலளித்து புள்ளிகளும் பெற்றிருக்கலாம்.

உண்மைதான்.

நீங்களா அல்லது @தமிழ் சிறி அண்ணாவா தெரியவில்லை என் வாக்கு யாருக்கு என கேட்டார்.

அப்போ அருச்சுனா குழுவில் அவர் தவிர வேறு மூவருக்கு என சொன்னே.

இன்று அருச்சுனா, திசைகாட்டி என்மனதில் 50:50.

ஆனால் இதன் பின்னால் உள்ள பேரினவாதம் பற்றி ஒரு சிறு குறிப்பு யாழில் வரையலாம் என எண்ணியுள்ளேன்.

1 hour ago, island said:

என்னைப் பொறுத்தவரை இம்முறை தமிழ் மக்களில் இருந்து பாராளுமன்றம் செல்பவர்கள் மக்கள் பிரச்சனைகளை உணர்நதவர்களாகவும்,  அதனை தீர்க்கும் ஆற்றல் மற்றும் விருப்பு மிகுந்தவர்களகவும், ஜதார்தத ரீதியில் சிந்தித்து நடைமுறை சாத்தியமான வழியில் ஒரு அரசியல் தீர்வுக்கு ஆளும் அரசுக்கு அழுத்தம் கொடுத்து  புரிந்துணர்வை ஏற்படுத்தி அரசியலமைப்பு மாற்றங்களில் தமது பங்களிப்புகளையும் வழங்கி  அதிகாரப்பரவலக்கலை ஏற்படுத்தி,  அதனை நடைமுறைப்படுத்த அதில் முன்னேற்றம் காண  தமது ஆற்றலையும் புத்திசாலித்தனத்தையும் பிரயோகப்படுத்துபவர்களாகவும்,  சில்லறை அரசியலுக்காக தம்முள் முரண்பாடுகளை மேற்கொள்ளாதவர்களாகவும் கட்சி வேறுபாடுகளை கடந்து புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுபவர்களாகவும் இருத்தல் வேண்டும். மக்களின் கலவி பொருளாதார மேம்பாட்டை ஆளும் அரசுகளுடன் கெளவரமான  இணக்கப்பாட்டை  மேற்கொண்டு வட கிழக்குல் தமிழரின் வாழ்ககை தரத்தை உயர்த்த முன்னுரிமை கொடுப்பவராக இருத்தல் வேண்டும். மக்கள்  தமது பொருளாதார வாய்பபுகளை தேடி வெளிநாடு ஒடாது உள்நாட்டில் உரிய வருமானமீட்டி மகிழ்வுடன் வாழும் நிலையை சிறிது சிறிதாகவேனும் ஏற்படுத்துவது   எமது மக்களின் மக்கள் செறிவை தாயகத்தில் பாதுகாக்கும். 

 உனக்கு ஏன் இந்த பேராசை என்று உறவுகள் நினைக்கலாம். இருந்தாலும  பேராசையை பதிவு செய்ததில் தவறில்லையே😂

 தீவிர தமிழ் தேசிய வெறி நோய் முற்றி   அதனை வைத்து அரசியல் பிழைப்பு  நடத்தும் மரமண்டை அரசியல்வியாதிகள் கட்சி வேறுபாடு இன்றி  முற்றாக தோற்கடிக்கப்படல் வேண்டும்.  ஏனெனில் எனது முதல் பந்தியில் கூறிய  Eligibility யில் ஒன்று கூட  இல்லாத வெறுமையாளர்கள் அவர்கள். 

ஐலண்ட் - நீங்கள் எதிர்பார்க்கும் காலம் இலங்கைக்கு வருமோ என்ற சிறு நம்பிக்கை வரும். தேர்தலுக்கு முன் ஒரு தொகுதி கைதிகளாவது விடுவிக்கப்படின்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, putthan said:

வடபகுதியில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை தமிழர் பிரதிநிதியாக தமிழ் மக்கள் அனுப்ப மாட்டார்கள் என நம்புவோம்..

இல்லை தமிழர்கள்தான் நிக்கிறார்கள்.

முதன்மை வேட்பாளர் டாக்டர் சிறிபவானந்தராஜாவின் அயலவர் ஒருவரிடம் இன்று பலதை பேசினேன். 

அடித்து சொல்கிறார், பத்தரைமாத்து தங்கமாம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இல்லை தமிழர்கள்தான் நிக்கிறார்கள்.

முதன்மை வேட்பாளர் டாக்டர் சிறிபவானந்தராஜாவின் அயலவர் ஒருவரிடம் இன்று பலதை பேசினேன். 

அடித்து சொல்கிறார், பத்தரைமாத்து தங்கமாம்.

எவ்வளவோ கண்டிட்டோம் இதையும் பார்ப்பமே..

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

எவ்வளவோ கண்டிட்டோம் இதையும் பார்ப்பமே..

இதுதான் கதைக்கும் போது என் மனதில் ஓடியது.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

ஆனால் இதன் பின்னால் உள்ள பேரினவாதம் பற்றி ஒரு சிறு குறிப்பு யாழில் வரையலாம் என எண்ணியுள்ளேன்.

எழுதுங்கள் 

நான் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் தேசிக்காய்களின் வரைபாக பார்க்கப்படும் என்பதால் விட்டு விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

எழுதுங்கள் 

நான் எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் தேசிக்காய்களின் வரைபாக பார்க்கப்படும் என்பதால் விட்டு விட்டேன். 

நான் தொடங்குகிறேன்…. நீங்கள் தொடரவும் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, putthan said:

வடபகுதியில் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தி அவர்களை தமிழர் பிரதிநிதியாக தமிழ் மக்கள் அனுப்ப மாட்டார்கள் என நம்புவோம்...

அனுரகுமார திசநாயக்கவின் கட்சியில் தமிழர்களே அவர் பிரதிநிதிகளாக இருக்கின்ற போது தமிழர்கள் பிரதேசங்களில் அவர் ஏன் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தபோகின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அப்ப இனி தமிழ் அரசியல்வாதிகளுக்கு வேலையே இல்லையோ?

அவையள் எப்பதான் வேலை செய்திருக்கினம்? இதுவரைக்கும் சிங்களம் தானாய் பார்த்து செய்ததை தவிர வேறேதும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அனுரகுமார திசநாயக்கவின் கட்சியில் தமிழர்களே அவர் பிரதிநிதிகளாக இருக்கின்ற போது தமிழர்கள் பிரதேசங்களில் அவர் ஏன் சிங்கள வேட்பாளர்களை நிறுத்தபோகின்றார்

தமிழன் அநியாயத்துக்கு நல்லவன்....சில சமயம் அணுராவுக்கு செம்பு தூக்க வேணும் என்று அடிபட்டு போய் சிங்கள வேட்பாளர்களை வடபகுதியில் நிறுத்துங்கோ ..தேசிய ஒருமைபாட்டுக்கு நல்லது என சொன்னாலும் சொல்லுவினம் அடுத்த தேர்தலில் நடந்தாலும் நடக்கலாம் ...

நம்ம டக்கிளஸ் ஐயா பிக்குமார் இருவரை தன‌துகட்சி வேட்பாளராக கொழும்பில் நிறுத்தி உள்ளார் என நினைக்கிறேன் ....அதுபோல நல்லிணக்கம் என்று வரும்பொழுது ...

சிங்கள வேட்பாளர் தமிழர் பகுதியில் அதிக வாக்கு பெற்று வெற்றியடைந்தால் அது நல்லிணக்கத்தின் உச்சம்,,கண்டியளோ 

5 minutes ago, குமாரசாமி said:

அவையள் எப்பதான் வேலை செய்திருக்கினம்? இதுவரைக்கும் சிங்களம் தானாய் பார்த்து செய்ததை தவிர வேறேதும் இல்லை.

அப்படி சொல்லப்படாது....தமிழ் தேசிய்த்தை கூறு போட்டு வித்து ....தமிழர் /சிங்கள பிரச்சனைக்கு டீர்வு கிடைக்க வழி விட்டவையள் அல்லோ

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஐலண்ட் - நீங்கள் எதிர்பார்க்கும் காலம் இலங்கைக்கு வருமோ என்ற சிறு நம்பிக்கை வரும். தேர்தலுக்கு முன் ஒரு தொகுதி கைதிகளாவது விடுவிக்கப்படின்

கோஷன், நான் எழுதியது தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடுகளை கடந்து எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற எனது விருப்பத்தை மட்டுமே.  அவ்வாறு நடந்து கொள்ளும் போது நாம் விரும்பும் முழுமையான அரசியல் தீர்வு கிடைக்காமல் விட்டாலும் எதிர் காலத்தில் சேதாரமாவது இல்லாமல் இருக்கும்.

கடந்த 75 ஆண்டுகளாக தமிழருக்கு அதிகளவில் சேதாரத்தைக்  கோடுத்து எதையும் பெற்றுக்கொள்ளாத, போராட்டத் தொடக்கப்புள்ளியில் இருந்த வாழ்வியலையும்  கெடுத்து  குட்டிச்சுவராக்கிய இறுதி புள்ளியை அடைந்ததுடன்  தீர்வை மேலும் சிக்கலாக்கிய  அரசியல் தொடர்சசியை விடுத்து  அறிவு பூர்வமான அரசியலை எதிர்காலத்தில்   செய்ய வேண்டும் என்பதே  எனது விருப்பம்.  

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_7482.jpeg.3b86c687eba626197f06

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் அரசியல்வாதிகளின் தேர்தல் பிரச்சார  கூட்டம், இம்முறை பெரிய அளவில் நடைபெறவில்லைப் போல் தெரிகின்றது. 

இன்று ஆட்சியில் இருப்பவரே நேரடியாக வந்து நாங்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்கின்றோம் என சொல்ல்லும் போது தமிழ் தலைவர்களுக்கு தற்போது வேலையில்லாமல் போகின்றது. அவர்களும் எதை சொல்லி பிரச்சார மேடை அமைத்து வாக்கு கேட்பது?

அதை விட பல இடங்களில்  நாமல் ராஜபக்ச தமிழ் தலைவர்கள் கள்ளர்கள் என தொனிபட பேட்டியளித்துள்ளார்.கரடியே காறித்துப்பிய தருணம் அது.

இருந்தாலும் தமிழர்களின் அடிப்படை பிரச்சனையை அனுர தீர்த்து வைப்பாரா என்பதுதான் கேள்விக்குறி?

அவர் சொல்வது மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும். நாடு அபிவிருத்தியடைய வேண்டும். வீதிகளை திறப்பேன். வீதிகளை திருத்துவேன்.கைதிகள் விடுதலை. என வாக்குறுதிகளை அடுக்கிக்கொண்டே போகின்றார்.2009க்கு பின்னர் வந்த பிரச்சனைகளை தமிழர்களின் பிரச்சனைகளாக்கி விட்டு அதை தீர்த்த விண்ணராகவும் அனுர சித்தரிக்கப்படக்கூடும்.

இனி வரும் மாதங்கள் எதிர்பார்ப்புகள் நிறைந்த மாதங்களாக  இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

முதன்மை வேட்பாளர் டாக்டர் சிறிபவானந்தராஜாவின் அயலவர் ஒருவரிடம் இன்று பலதை பேசினேன். 

அடித்து சொல்கிறார், பத்தரைமாத்து தங்கமாம்.

அதனாலேயே இடமாற்றப்பட்டார் என அறிந்தேன்.

ஆனால் எங்கும் பிரசாரம் செய்ததாக தெரியவில்லை.

மக்களுக்கு தெரியாமலே இருக்கிறார்.

பழையபடி யாழுக்கு மாற்றி பதவி உயர்வு கொடுக்கலாம்.

இவரை 2-3 டாக்ரர்கள் மீது வீண்பழி போட்டு விரட்டப்பட்டுள்ளார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.