Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, வீரப் பையன்26 said:

எப்ப‌டி தான் இந்த‌ ம‌னுஷ‌ன் இவ‌ள‌வு விம‌ர்ச‌ன‌ங்க‌ளை அவ‌மான‌ங்க‌ளை தாங்கி கொண்டு க‌ட்சிய‌ வ‌ழி ந‌ட‌த்துகிறார் என்று க‌வ‌லைப் ப‌ட்டும் இருக்கிறேன் 

@வீரப் பையன்26 கவலைப்படாதீர்கள், நாம் அவமானமாக கருதலாம், ஆனால் நம் அண்ணன் வருமானமாய் கருதுவார். நம் அண்ணனுக்கு வருமானங்கள் பெருகட்டும்.

  • Replies 58
  • Views 6.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • சர்வதேச சட்டப்படி எந்த ஒரு நாட்டுக்கும் கரையிலிருந்து 12 கடல்மைல்கள் அவற்றின் சொந்த கடல்பகுதியாகவே கருதப்படும் என்கிறார்கள், ஆதலால் அனைத்துநாட்டிற்கும் கடல் எல்லைகள் உண்டு. பாக்குநீரிணை மன்னார் வ

  • அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ?  நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட  மீனவர்களைத்தானே?  இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்ற

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    நாசாவில் மேலதிகாரியாக இருக்கும் என்னை  உங்கள் வட்டத்தில் உள்ளடக்காதது வேதனையளிக்கிறது தம்பீ.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, valavan said:

படிக்காதவர் வட்டத்திலிருப்பது நான் ஒருவன் மட்டுமே.

வட்டமோ சதுரமோ நானும் படிக்காதவன் தான்!

 

கற்றது கையளவு கல்லாதது உலகளவு!

ம் வாழ்க்கையில் கற்றலுக்கான தேடல் எப்போதுமே இருந்துக்கொண்டேதான் இருக்கும். எந்த சமயத்திலும், “நான் கற்று தேர்ந்துவிட்டேன். எனக்கு எல்லாம் தெரியும்” என்று சொல்லும் தருணம் வரப்போவதில்லை. ஒவ்வொரு நொடியிலும் புதிதாக ஏதோ ஒன்றை கற்று தெரிந்து கொண்டேதான் இருக்கிறோம். அதற்கான அவசியமும் நம் வாழ்வில் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

நம் வாழ்க்கையில் நாம் கற்றதை விட நமக்கு தெரியாத விஷயங்கள் நிறையவே இருக்கிறது. ஒரு சிங்கத்தை நேருக்கு நேர் எதிர்க்கொள்ளும்போது எப்படி தப்பிப்பது என்பதை எந்த பித்தகோரஸ் தியரத்தை வைத்தும் தீர்த்து விட முடியாது. அந்த தருணத்தில் நாம் இதுவரை கற்ற அனைத்தும் ஒன்றுமில்லாமல் போய்விடும்.

ஒரு மெரைன் இஞ்சினியருக்கோ, கம்ப்யூட்டர் இஞ்சினியருக்கோ அவரவர்  துறையிலே அவர்கள் கோலோச்சினாலும் அதை தவிர்த்து வேறு என்ன தெரியும் என்று வரும்போது கேள்விக்குறியாகி விடுகிறது.

 

உலகத்திலே பெரிய மலைத்தொடரான ஆன்டீஸில் மாட்டிக்கொண்டு உயிர் தப்பியவர்களின் கதையை கேட்கும்போது வியப்பாகவே உள்ளது. நம் வாழ்க்கையில் எதிர்ப்பாராத தருணம் எந்த நொடி வேண்டுமானாலும் வரலாம் அதற்கு நாம் எப்போதுமே தயாரான நிலையில் இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.

சமைக்க தெரிந்திருக்க வேண்டியது கூட சர்வைவலுக்கான முதற்படியேயாகும். நம் தேவைக்கு நாம் சமைக்க கற்று கொள்ள வேண்டும். யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க கூடாது.

எப்போதும் வாழ்க்கையில் கம்பர்ட் ஸோனிலேயே இருந்து விட முடியாது. கஷ்டங்களை எதிர்க்கொண்டால் தான் தேவையான நேரத்தில் அதற்கு தகுந்தார் போல நம்மை மாற்றி கொண்டு வாழ முடியும்.

கற்றல் என்பது புத்தகத்தில் இருப்பதை மட்டும் பயில்வதில்லை. அதை தாண்டி வாழ்வில் அவசர தேவைகளுக்காக நாம் புதிதாக என்ன கற்றுக்கொண்டோம் என்பதிலும் உள்ளது.

நம் வாழ்க்கையில் கற்றல் என்பது ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

அது வேறு யாருடைய வாழ்க்கையை பார்த்து வந்ததாகவோ இருக்கலாம் அல்லது நம்முடைய வாழ்க்கையில் செய்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடமாக இருக்கலாம். எப்படி பார்த்தாலும் கற்றலே நம்மை மேம்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

https://kalkionline.com/lifestyle/motivation/katradhu-kai-alavu-kalladhathu-ulagalavu-motivation-articles

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஏராளன் said:

வட்டமோ சதுரமோ நானும் படிக்காதவன் தான்!

நீங்கள் ஆற்றும் சமூக தொண்டு பல படித்தவர்களே செய்யாத ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

நீங்கள் ஆற்றும் சமூக தொண்டு பல படித்தவர்களே செய்யாத ஒன்று.

நன்றி சகோதரா. உங்கள் பார்வையில் தொண்டு ஆக இருக்கலாம். எனக்கு அது ஒரு கடமையாகப்படுகிறது. என்னை கொஞ்சம் சிந்திக்கும் திறனோடு இயங்க இயற்கை அனுமதித்தது என்னிலும் மோசமான நிலையில் இருப்போரை கவனிக்கத்தானோ என நான் நினைப்பதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, செவ்வியன் said:

@வீரப் பையன்26 கவலைப்படாதீர்கள், நாம் அவமானமாக கருதலாம், ஆனால் நம் அண்ணன் வருமானமாய் கருதுவார். நம் அண்ணனுக்கு வருமானங்கள் பெருகட்டும்.

அவ‌ர் மீது இருக்கும் தேவை இல்லா குற்ற‌ சாட்டுக‌ளில் இதையும் ஒன்றாக‌ பார்க்கிறேன்

 

ப‌ண‌த்துக்கு விலை போப‌வ‌ர் என்றால் எப்ப‌வோ விலை போய் இருப்பார்🫤.........................

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வீரப் பையன்26 said:

அவ‌ர் மீது இருக்கும் தேவை இல்லா குற்ற‌ சாட்டுக‌ளில் இதையும் ஒன்றாக‌ பார்க்கிறேன்

 

ப‌ண‌த்துக்கு விலை போப‌வ‌ர் என்றால் எப்ப‌வோ விலை போய் இருப்பார்🫤.........................

பந்தி பந்தியாக என்னவெல்லாமோ எழுதியிருக்கிறீங்கள், ஆனால் வடபகுதி தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் தமிழக மீனவர்களை என்ன செய்வது என்று ஒன்றும் சொல்லவில்லையே? "சீமான் வழியில் அரசியல்" என எடுத்துக் கொள்கிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்
On 14/11/2024 at 15:01, colomban said:

ஒயில் செஞ்சிங், ஜக் அடித்தல், வச‌லின் குப்பி, வேலை முடிய

இதைப்பாத்தால் கராஜுக்கு ஆடிட்டிங் போனது போல் இல்லையேவா...
எங்கேயோ பசந்தா ஈந்து போட்டு வந்த போல எலுவா இருக்கி  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 14/11/2024 at 01:29, valavan said:

நான் அறிந்து யாரையும்மட்டம் தட்டியோ எகத்தாளம் பண்ணியோ காயப்படுத்தியோ  கருத்திட நினைத்ததில்லை., அடுத்தவரை மட்டம் தட்ட என்னிடம் எந்த தராதரமும் இல்லை.

நீண்ட காலத்தின் பின்னர் சிறிதுகாலம் விடுமுறையில் உள்ளேன் அதனால் கொஞ்சம் அதிகமாக பேசி அதிகமாக பதிவுகளிட்டதால்  உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம், 

இயல்பில் அதிகம் பேசுவதில்லை, அதனால்தான் ஏறக்குறைய யாழில் இணைந்து 9 வருடங்களாகியும் 1500  கருத்துக்களைகூட என்னால் தொட முடியவில்லை.

எனினும்  உங்கள் கருத்து பெறுமதி மிக்கது, முடிந்தவரை எகத்தாளமின்றி என்னை அமைதிப்படுத்த இனி  கூடுதல் முயற்சி செய்கிறேன் நன்றி 🙏

வணக்கம் வளவன்! நான் விரும்பும் கருத்தாளர்களில்  நீங்களும் ஒருவர். அது ஒரு புறமிருக்க...
யாழ்களம் ஒரு பொதுவான களம் என நான் மட்டும்   கருதியிருந்தேன். ஆனால் நான் யாழ்களத்தில் இணைந்த காலம் தொட்டு படித்தவர்கள் படிக்காதவதர்கள் என்றொரு வட்டம் இருக்கின்றது என கண்டு கொண்டேன். இதை எத்தனை பேர் உணர்ந்தார்களோ தெரியவில்லை. நான் மட்டும் உணர்ந்துள்ளேன்.
இதன் காரணமாகவே நான் யாழில் இணைந்த காலங்களில் எனது சுயவிபரத்தில் தொழில் கோப்பை கழுவுதல் என குறிப்பிட்டிருந்தேன். இது எனது சுய பாதுகாப்பிற்காக மட்டுமே.

ஊரில் யாழ்ப்பாணத்தவரிடம் அல்லது தமிழரிடம் இருக்கும் படிச்ச கிறவுட் மேட்டுக்குடி அட்டகாச அஜாரகங்கள்/குணங்களை எங்கு கண்டாலும் அடியோடு  நறுக்க என்றுமே பின்னிற்க மாட்டேன்.

நன்றி உங்கள் பதில் கருத்திற்கு...:cool:

  • கருத்துக்கள உறவுகள்
On 15/11/2024 at 11:19, அக்னியஷ்த்ரா said:

இதைப்பாத்தால் கராஜுக்கு ஆடிட்டிங் போனது போல் இல்லையேவா...
எங்கேயோ பசந்தா ஈந்து போட்டு வந்த போல எலுவா இருக்கி  

ஆடிட்டிங் இனிய முடிவுடன் அமைந்திருக்கும் போலயே.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.