Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான சீனத் தூதுவர் நாளை யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார்.

பாராளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக யாழ்ப்பாணத்துக்கு சீனத் தூதுவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொள்கின்றார்.

இதன்போது அவர் பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

https://thinakkural.lk/article/312232

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தூதரகத்தை மூடி யாழ் நகரில் சீனா தூதரகம் திறக்குமாறு யாழ் நகர் ஜெ.வி.பி தோழர்கள் கோரிக்கை வைக்க வேணும்...அப்படி யாழ்ப்பாண்த்தில் என்ன தான் இருக்கு ...சீனர்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் சீன தூதரகம் திறக்கப்பட்டு யாழ் மாணவர்களுக்கு சீன பல்கலைக்கழகங்களில் படிக்க புலமைப் பரிசில்கள் வழங்கப்படல் வேண்டும் 

பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும் 

பண்டைய தமிழர்களுக்கும் சீனார்களுக்கும் இடையில் இருந்த வியாபார கலாச்சார உறவுகள் பற்றி ஆராய நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும் 

கன்பூசியஸ் தத்துவங்கள் குறித்து தமிழில் சீன அரசின் உதவியுடன் தமிழில் நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டு வெளியிடப்பட வேண்டும்

சீன உதவியுடன்  யாழ்ப்பாணம் வவுனியா வன்னி முல்லைத்தீவு போன்ற இடங்களில் திறன் சார் தொழில்நுட்ப கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியமில்லையே. 1987 இல் மைசூர் பருப்பையும்.. பம்பாய் வெங்காயத்தையும் வெறுத்தவர்கள் ஆட்சிப் பீடம் ஏறி இருக்கும் நிலையில்... கிந்தியா எனி வாய் தான் பார்க்க முடியும். எனி ரகன் இன்னும் பூந்து விளையாடும். 

2009 மே யின் விளைவுகளை விரைவில் கிந்தியா தீவிரமாக உணர்ந்து கொள்ளும். 

ஜே வி பி மறக்காது... சிறிமாவோ அம்மையார் கிந்தியப் படை உதவியோடு ஜே வி பியினரை கொன்று குவித்ததை.. 1970 களில். இது  1987 - 90 பிரேமதாச, உடுகம்பொல.. டக்கிளஸ் செய்த கூட்டு ஜே  வி பி படுகொலையை விட மோசமானது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Long Live the Victory of Mao Zedong Thought Statue      

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு  பக்கத்தில்... மாசேதுங் சிலை வைக்க வேணும். அத்துடன்... அங்கு இனி காந்தி ஜெயந்தி, காந்தி வசந்தி... எல்லாம் இனி கொண்டாட முடியாது என்று தடை செய்ய வேண்டும். 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பகிடி said:

யாழ்ப்பாணத்தில் சீன தூதரகம் திறக்கப்பட்டு யாழ் மாணவர்களுக்கு சீன பல்கலைக்கழகங்களில் படிக்க புலமைப் பரிசில்கள் வழங்கப்படல் வேண்டும் 

பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும் 

பண்டைய தமிழர்களுக்கும் சீனார்களுக்கும் இடையில் இருந்த வியாபார கலாச்சார உறவுகள் பற்றி ஆராய நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும் 

கன்பூசியஸ் தத்துவங்கள் குறித்து தமிழில் சீன அரசின் உதவியுடன் தமிழில் நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டு வெளியிடப்பட வேண்டும்

சீன உதவியுடன்  யாழ்ப்பாணம் வவுனியா வன்னி முல்லைத்தீவு போன்ற இடங்களில் திறன் சார் தொழில்நுட்ப கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் 

சிறப்பு ....அந்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு வருமானம் வரும் வழிகளை செய்ய வேண்டும்...
இந்தியா போல கோவில்களை கட்டி வருமானங்களை இந்தியாவுக்கு எடுத்து செல்லாமல் ...

அனுராவின் அரசு பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமானமாக்கி(இந்தியா மட்டும் சர்வதேசம் இல்லை)
புலம்பெயர்ஸ்  நேரடியாக யாழ்மண்ணை முத்தமிட வழிவகை செய்தால் பொருளாதாரம் நிச்சயமாக தன்னிறைவு பெரும் மத்திய அரசு வரிகள் ஊடாக வருமான்ம் பெறலாம் (யாவும் கற்பனையே)

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

இலங்கைக்கான சீனத் தூதுவர் நாளை யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கின்றார்.

பாராளுமன்றத் தேர்தலின் பின்பு முதலாவது இராஜதந்திரியாக யாழ்ப்பாணத்துக்கு சீனத் தூதுவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொள்கின்றார்.

இதன்போது அவர் பல தரப்பினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

https://thinakkural.lk/article/312232

போனமுறை போய் பருத்திதுறை காபரி ல் நின்று தமிழ்நாட்டை பார்த்தவரெல்லோ...இந்தமுறை போய் ஆறுதலாய் இருந்து பார்க்கப் போறார்....நானு ஊருக்குப்போய் ..அதேகாபரில்போய் ஆறுதாலாய் இருந்து பார்த்தனான்...இசுடாலினின் ..தலையிலை கிடக்கிற டோப்பே தெரியுது..😎

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

.இசுடாலினின் ..தலையிலை கிடக்கிற டோப்பே தெரியுது..😎

அடுத்த முறை போய் பாருங்கோ அவரின்ட கோவணமும் தெரியும்,மோடியின் மொட்டையும் தெரியும் ...சீனாக்காரன் யாழ்நகரில் கார்த்திகை பூ கோபுரம் கட்டபோறானாம்...அதில  ஆகாச கடையில் சிங்கள தோழர்கள் பாம்பு சூப் கொடுப்பினம் நாங்கள் நடுத்துண்டு சூப் எங்கடை என அடிபட்டு குடிக்க வேண்டிய‌துதான்...

  • கருத்துக்கள உறவுகள்

இனி அவர்களின் நாடு இது அவர்கள் எங்கும் செல்வார்கள் அது ஒரு செய்தி அல்ல 

இந்தியர்கள் இந்த 14 வருடங்களில் தமிழருக்கு ஏதாவது ஒன்று செய்து இருக்கணும் அல்லது மலையக மக்களுக்கு தன்னும் செய்து இருக்கணும் செய்ய வில்லையே ?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

Long Live the Victory of Mao Zedong Thought Statue      

யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு  பக்கத்தில்... மாசேதுங் சிலை வைக்க வேணும். அத்துடன்... அங்கு இனி காந்தி ஜெயந்தி, காந்தி வசந்தி... எல்லாம் இனி கொண்டாட முடியாது என்று தடை செய்ய வேண்டும். 😂

இல‌ங்கையில் சீன‌ன் என்ன‌ தான் செய்தாலும் குள்ள ந‌ரி இந்திய‌ர்க‌ளுக்கு அதை ப‌ற்றி க‌வ‌லை இல்லை த‌மிழ் சிறி அண்ணா.....................அதுக்கு ஆதார‌ம் ப‌ல‌ இருக்கு.........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

அடுத்த முறை போய் பாருங்கோ அவரின்ட கோவணமும் தெரியும்,மோடியின் மொட்டையும் தெரியும் ...சீனாக்காரன் யாழ்நகரில் கார்த்திகை பூ கோபுரம் கட்டபோறானாம்...அதில  ஆகாச கடையில் சிங்கள தோழர்கள் பாம்பு சூப் கொடுப்பினம் நாங்கள் நடுத்துண்டு சூப் எங்கடை என அடிபட்டு குடிக்க வேண்டிய‌துதான்...

ரொம்ப ஓவருங்க..என்றாலும் ஒரு சின்ன ஆசை...உதயநிதி தங்கிற கோட்டல் ரூம் தெரிந்தாலே காணும்...ஒண்ணுக்கு இரண்டா பார்த்திடலாமே..

கோபுரம் கட்டினால் திறப்பு விழாவுக்கு அழைப்பு வரும்..

கூடவந்ததுகள் ஆக்கினை தாழாமல் ..தல செவனுக்குள்  சாப்பிடப் போயாச்சு...நாம இருவர் சைவம்...பெரிய் கோட்டல் வித்தியாசமா சாப்பாடு வருமென்றால்..பூசனிகாயில் தேங்க்கய் பூ போட்டு பிரட்டல் ..பச்சைகீரைக்கும் அதே..எல்லாம் அதே....சாப்பாடு சாப்பிட்டது ஓகே..ராத்திரி வீட்டை வந்த ஒரு விசிட்டர்  போட்ட குண்டுதான் வயித்தைக் கலக்குது...ஆமிக்காரனின்..கோட்டலில் சாப்பிட்டவைக்கு கான்சர் வருகுதாம் ..தன்னுடைய சொந்தக்க் காரனுக்கும் வந்திட்டுதாம்...ராத்திரி தொட ங்கி  கலங்கின கலக்கம் இன்னும் முடியவில்லை ..இதுக்கிள்ளை நீங்கள்  பாம்பு சூப் க்தை விடுகிறியள்

Edited by alvayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவு எடுத்துள்ளார்கள்; யாழில் சீனத் தூதுவர் கருத்து

china-2.jpg

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் "தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.” – இவ்வாறு நேற்று யாழ்ப்பாணம் வந்த இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ்ப்பாணத்துக்கு வந்ததுள்ளமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதிலும் அனைவரும் எதிர்பார்க்கின்ற ஊடக அமையத்துக்கு வந்துள்ளமை மேலும் சந்தோசமாக உள்ளது.

வடக்கு மாகாணத்தில் வாழுகின்ற எங்களுடைய சகோதர – சகோதரிகளின் வாழ்க்கை முறை எவ்வாறு இருக்கின்றது, இங்கு அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள், இந்த வாழ்க்கையை எவ்வாறு கொண்டு செல்கின்றார்கள் என்பவற்றை அறிந்துகொள்வதே எமது இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது.

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மிகப் பெரிய அளவில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் தெற்கை மையப்படுத்திய ஒரு தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் மிகப் பெரும்பான்மையாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

நான் இன்று பருத்தித்துறைக்குச் சென்றிருந்தேன். அங்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்த ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன். அதாவது பன்மைத்துவத்தில் ஒற்றுமை என்று இருந்தது.

உண்மையில் அந்த வாக்கியம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சரியாவே பிரதிபலித்துள்ளது. தற்போது இவையெல்லாம்  யாழ்ப்பாணத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையே காட்டுகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நான் இங்கு விஐயம் செய்வது மிகவும் அர்த்தம் உள்ள ஒன்றாகவே கருதுகின்றேன்.

நான் வடக்கு மாகாணத்துக்கு முதல் தடவையாகக் கொவிட் கால கட்டத்திலேயே வந்திருந்தேன். அந்தக் கால கட்டத்திலேதான் சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை சீன அரசு இலங்கைக்கு வழங்கி இருந்தது.

அப்போது சினோபாம் என்ற எமது தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கு முழுவதும் முழுமையாகப் பாவிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் சீன அரசு வலியுறுத்திக் கூறியிருந்தது. இவ்வாறு நாம் வலியுறுத்திக் கூறியதாலேயே இங்குள்ள மக்களுக்கும் அந்தத் தடுப்பூசிகள் பாவிக்கப்பட்டன.

இவ்வாறு வடக்கு, கிழக்கிலுள்ள எங்களுடைய சகோதர – சகோதரிகளுக்கு நாம் தடுப்பூசிகளை வழங்கியதைத் தொடர்ந்து இங்குள்ளவர்களுக்கு  எங்களுடைய பல்வேறு உதவிகளைச் செய்தோம்.

அதனடிப்படையில் வடக்கில் உள்ள ஐந்து  மாவட்டங்களிலும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கினோம். அதேபோன்று ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும், மீன்பிடி உபகரணங்களையும் வழங்கினோம்.

அந்த ஆண்டின் முதல் அரைநாண்டு காலத்தில் சீன அரசால் பல மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகளை வடக்கு மாகாணத்துக்கு மட்டும் வழங்கியிருக்கின்றோம். இதற்கமைய வீட்டுத் திட்டம், அரிசி, மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றை வழங்கினோம்.

இவற்றில் அரிசியை முழுமையாக வழங்கியுள்ளோம். ஆனாலும், வீட்டுத் திட்டம் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.

சீன அரசு வழங்கிய உதவிகளின் பட்டியல் இலங்கை அரசால் தயாரிக்கப்பட்டவைதான். அந்தப் பட்டியலுக்கமைய எமது உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.

சீனாவினுடைய நீண்டகால நண்பனாக இலங்கை இருக்கின்றது. ஆகையினால் இலங்கை அரசு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் சீன அரசும் மதிக்கும்.

இலங்கை அரசுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு இணக்கப்பாட்டுக்கு முன்னேற்பாடான ஒரு ஒப்பந்தத்தை முதன் முதலில் சீனாதான் எழுதியது.

அதனைக் கடந்த ஆண்டு செய்திருக்கின்றோம். இதில் இருந்து நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளக் கூடியது என்னவெனில் சீன அரசு ஒரு  முன்னுதாரணமாக இந்த விடயங்களைச் செய்து வருகின்றது என்பதைப்  பார்க்கலாம்.

இலங்கையினுடைய மிக நெருக்கமான அயல்நாடாக இந்தியா இருக்கின்றது. அதனால் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு பலப்படுவதையும், பொருளாதார ரீதியான நெருக்கம் பலப்படுவதையும் நாங்களும் விரும்புகின்றோம்.

இவ்வாறான நிலைமையில் வருகின்ற டிசம்பர் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்குச் செல்லவுள்ளார் என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜித ஹேரத் கூறியிருக்கின்றார்.

இது மிகவும் சந்தோசமான விடயம். அவ்வாறு அவர்கள் விஜயம் செய்வதை நாங்கள் விரும்புகின்றோம். அதன் பிற்பாடு இலங்கை ஜனாதிபதி அவருக்கு ஏற்ற வகையில் பொருத்தமான நேரத்தில் சீனாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளலாம்.

ஏனெனில் சீனாவுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையில் பொருளாதார மேம்பாடுகளும் பரிமாற்றங்களும் வளர்ந்து வர வேண்டுமென்றே நாங்களும் விரும்புகின்றோம்.

சீனாவுக்கு வடக்கு மக்களுடன் செய்ய வேண்டிய கலாசார மற்றும் கல்வி ரீதியான இரு தரப்பு பரிமாற்றங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன.

சீன அரசு இலங்கைக்கு அதிகூடிய வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் வழங்குகின்ற ஒரு நாடாகவே இருந்து வருகின்றது.

ஏனென்றால் சீனாவைப் பொறுத்த வரையில் இலங்கை மக்களின் ஆற்றலும் திறமையும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பமாக உள்ளது.

எனக்குத் தெரிந்தவரைக்கும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கும்  சீனாசார் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் கல்விசார் செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றே வருகின்றன.

நான் அறிந்த வரையில் சீன புலமையாளர் யாழ். பல்கலைக்கழகத்திலும், யாழ். பல்கலைக்கழகப் புலமையாளர்கள் சீனப் பல்கலைக்கழகத்திலும் தங்களுடைய கற்கை நெறிகளைக் கற்று வருகின்றார்கள்.

எனக்கு குழப்பகரமான ஒரு உணர்வை ஏற்படுத்துவது என்னவெனில் என்னுடைய சக உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கும்  சீனப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதற்கு விரும்புகின்றதால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தோடு தொடர்பை ஏற்படுத்துகின்றபோது அவர்களால் உரிய முறையில் தொடர்பை ஏற்படுத்துவதில்லை என்பது  குழப்பகரமான உணர்வைத் தருகின்றது.

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன்.

அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை இப்போது நோக்க ஆரம்பித்திருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.

இதனூடாக இனங்களுக்கிடையிலான ஒற்றுமையும் நல்லிணக்கமும் ஏற்பட்டு ஒளிமயமான எதிர்காலம் இந்த நாட்டில் ஏற்படுவதற்கான ஒரு குறியீடாகவே நான் இதனைப் பார்க்கின்றேன்.” – என்றார்.

https://thinakkural.lk/article/312419

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி!

பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி!

வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுர குமார திசாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங் பருத்தித்துறை - சக்கோட்டை முனையில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறைக்கு நேற்று (19)  விஜயம் மேற்கொண்டனர்.

வடக்கு மாகாணத்திற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள சீன தூதுவர் நேற்று மதியம் 01.00 மணிக்கு பருத்தித்துறை - சக்கோட்டை முனைக்கு குழுவினரோடு வந்து சென்றுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது சீன தூதுவர் இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

வடக்கிற்கு வரும் சந்தர்ப்பங்களில் பருத்தித்துறை - சக்கோட்டை முனைக்கு வந்து செல்லவதனை வழக்கமாக கொண்டிருப்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, 

இந்த இடம் மிகவும் அழகான இடம் என்றும் மிகவும் விருப்பமான இடம் எனவும் கூறியதுடன் வடக்கு கிழக்கில் சீன அரசாங்கத்தின் சார்பில் தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்ததுடன் வடக்கு கிழக்கில் உள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறியளவிலான கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீனவ குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் என்பன பல கட்டங்களாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைந்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, 

இலங்கை வரலாற்றில் தெற்கை சேர்ந்த தலைவர் ஒருவர் வடக்கை வெற்றி பெற்றிருப்பது முக்கியமான நிகழ்வாகும் என மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

இடதுசாரி பின்னணி கொண்ட அரசு இலங்கையில் ஆட்சிக்கு வந்திருப்பது தொடர்பில் சீனா எப்படி பார்க்கிறது என கேள்வி எழுப்பிய போது, 

இலங்கை அரசு என்று அடிப்படையில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் வேறுபாடு இல்லை. யாராக இருந்தாலும் அரசு என்ற முறையில் சீனாவின் ஆதரவு தொடரும் என்றார்.

வட கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவது மகிழ்ச்சி என்றும் இருப்பினும் அரசியல் தீர்வு விடயத்தில் சீன அரசின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களர்கள் என எல்லோரும் வேறுபாடுகளை கடந்து எல்லோரும் இலங்கையர்களாக வாழ்வதற்கு சீனா ஒத்துழைப்புகளை வழங்கும் என்று பதிலளித்தவர் சக்கோட்டை முனையில் நிறுவப்பட்டிருக்கும் நல்லிணக்க நினைவுத்தூணில் பொறிக்கப்பட்டிருக்கும் பன்முகத்தன்மையில் ஒற்றுமையே இலங்கையின் பலம் (unity in diversity is the stength of srilanka) என்ற வாசகத்தை படித்துக்காட்டி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=196167

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வட பகுதிக்கு நாம் விஜயம் செய்வதில் மறைமுக நிகழ்ச்சி நிரல் எதுவுமில்லை - சீன தூதுவர்

image

“நாங்கள் வடக்குக்கு வருவதை பலரும் சந்தேகக் கண் கொண்டு பாா்க்கின்றாா்கள். ஆனால், வடபகுதிக்கு நாங்கள் வருவதில் எமக்கு எந்தவித மறைமுக நிகழ்ச்சியிலும் இல்லை” என்று யாழ்ப்பாணம் சென்ற இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தெரிவித்தார். 

இலங்கையின் உள்விவகாரங்களில் தாங்கள் தலையிடப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

சீனத் தூதுவருக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (19) இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது உரையாற்றிய போதே சீன தூதுவர் கீ சென் ஹொங் இவ்வாறு தெரிவித்தார். 

இங்கு தொடர்ந்து உரையாற்றிய சீனத் தூதுவர், 

“ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொது தேர்தலில் பின்னர் வடபகுதியில் சாதகமான ஒரு நிலை உருவாகியிருக்கின்றது, ஒரு முன்னேற்றம் காணப்படுகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு முன்னேற்றம் ஆகும். 

கடந்த காலங்களில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளையும் சீனா வழங்கி இருக்கிறது. அதேபோல் எதிர்காலத்திலும் உதவிகள் வழங்கப்படும். 

நான் யாழ்ப்பாணத்திற்கு பல தடவைகள் வந்து சென்றிருக்கின்றேன். யாழ்ப்பாணத்தில் வீடமைப்புக்கான பொருத்து வீடுகள் மற்றும் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் போன்றவற்றை வழங்கி இருக்கிறோம். 

யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற மூன்று தீவுகளில் மின் சக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான யோசனைகளை சீன நிறுவனம் ஒன்று முன் வைத்திருந்தது. அதற்கான அங்கீகாரமும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. ஆனால் பின்னர் இந்த ரத்து செய்யப்பட்டது. நம்மைப் பொறுத்தவரையில் இது ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றது.

வடபகுதியில் செயல்படுத்தக்கூடிய பல திட்டங்கள் இருக்கின்றன. இதற்கான சட்ட ரீதியான வரையறைகளை மேற்கொள்வதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று அவசியம். இவ்வாறான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுமாக இருந்தால், பெரிய நாடு என்ற வகையில் சீனா தான் அதனால் பயன்பெறும் என சிலர் கூறுகிறார்கள். அதாவது அது சீனாவுக்கு சாதகமாக அமையும் என்பது சிலருடைய கருத்து. ஆனால் அவ்வாறான கவலை அவசியமற்றது. 

1952 ல் சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ரப்பர் -  அரிசி உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. அதன் போது இலங்கையில் இருந்து ரப்பரை சர்வதேச சந்தை விலையை விட அதிக விலைக்கு சீனா கொள்வனவு செய்தது. மறுபுறத்தில் இலங்கைக்கு அரிசியை சர்வதேச சந்தை விலையை விட குறைவான விலைக்கு சீனா வாங்கியது. பின்னர் சீனாவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலைமையிலும் இந்த உடன்படிக்கையை தொடர்ந்து முன்னெடுத்தது. மியன்மாரில் இருந்து அரிசியை வாங்கி இலங்கைக்கு அது வழங்கியது.

சீனாவின் கடன் பொறி தொடர்பாகவும் சிலர் கூறியுள்ளார்கள். அதுவும் தவறான ஒரு தகவல். இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு நாம் பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டி உள்ளது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் முதலாவதாக கைச்சாத்திட்ட நாடாக சீனாவே இருந்தது” என்றும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/199284

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி!

பருத்தித்துறையில் சீன தூதர் மகிழ்ச்சி!

வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுர குமார திசாநாயக்க என இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங் பருத்தித்துறை - சக்கோட்டை முனையில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் பருத்தித்துறைக்கு நேற்று (19)  விஜயம் மேற்கொண்டனர்.

வடக்கு மாகாணத்திற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்துள்ள சீன தூதுவர் நேற்று மதியம் 01.00 மணிக்கு பருத்தித்துறை - சக்கோட்டை முனைக்கு குழுவினரோடு வந்து சென்றுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது சீன தூதுவர் இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

வடக்கிற்கு வரும் சந்தர்ப்பங்களில் பருத்தித்துறை - சக்கோட்டை முனைக்கு வந்து செல்லவதனை வழக்கமாக கொண்டிருப்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, 

இந்த இடம் மிகவும் அழகான இடம் என்றும் மிகவும் விருப்பமான இடம் எனவும் கூறியதுடன் வடக்கு கிழக்கில் சீன அரசாங்கத்தின் சார்பில் தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்ததுடன் வடக்கு கிழக்கில் உள்ள யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறியளவிலான கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் மீனவ குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிகள் என்பன பல கட்டங்களாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது என்றார்.

இலங்கையில் புதிய அரசாங்கம் அமைந்துள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, 

இலங்கை வரலாற்றில் தெற்கை சேர்ந்த தலைவர் ஒருவர் வடக்கை வெற்றி பெற்றிருப்பது முக்கியமான நிகழ்வாகும் என மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

இடதுசாரி பின்னணி கொண்ட அரசு இலங்கையில் ஆட்சிக்கு வந்திருப்பது தொடர்பில் சீனா எப்படி பார்க்கிறது என கேள்வி எழுப்பிய போது, 

இலங்கை அரசு என்று அடிப்படையில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் வேறுபாடு இல்லை. யாராக இருந்தாலும் அரசு என்ற முறையில் சீனாவின் ஆதரவு தொடரும் என்றார்.

வட கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவது மகிழ்ச்சி என்றும் இருப்பினும் அரசியல் தீர்வு விடயத்தில் சீன அரசின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களர்கள் என எல்லோரும் வேறுபாடுகளை கடந்து எல்லோரும் இலங்கையர்களாக வாழ்வதற்கு சீனா ஒத்துழைப்புகளை வழங்கும் என்று பதிலளித்தவர் சக்கோட்டை முனையில் நிறுவப்பட்டிருக்கும் நல்லிணக்க நினைவுத்தூணில் பொறிக்கப்பட்டிருக்கும் பன்முகத்தன்மையில் ஒற்றுமையே இலங்கையின் பலம் (unity in diversity is the stength of srilanka) என்ற வாசகத்தை படித்துக்காட்டி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=196167

சீனர்களுக்கு... பருத்தித்துறையில் ஒரு கண்.
அது இந்தியாவை குறி வைப்பதாகவோ, அல்லது கடுப்பு ஏற்றுவதாக மட்டுமே இருக்க முடியும்.

இந்த முறை... சீனத் தூதுவர், இங்கிருந்து இந்தியா எத்தனை கிலோ மீற்றர் என கேட்கவில்லை.
போன முறை கேட்டு அறிந்து கொண்டது நினைவு இருக்கும் என நம்புகின்றேன்.   😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.