Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் சதங்கள் குவிப்பு; பலமான நிலையில் அவுஸ்திரேலியா

15 DEC, 2024 | 04:51 PM
image

(நெவில் அன்தனி)

பிறிஸ்பேன், கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3ஆவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது.

ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் அபார சதங்கள் குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 405 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடர்ந்தபோது முதல் 3 விக்கெட்கள் மதிய போசன இடைவேளைக்கு முன்னர் வீழ்த்தப்பட்டது.

உஸ்மான் கவாஜா (21), நேதன் மெக்ஸ்வீனி (9), மானுஸ் லபுஷேன் (12) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர்.

எனினும் இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 241 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் பலனான அவுஸ்திரேலியா பலமான நிலையை அடைந்தது.

மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் சதம் குவித்த சூட்டுடன் 101 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார்.

தனது 112ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவன் குவித்த 33ஆவது சதம் இதுவாகும். அத்தடன் 18 மாதங்களின் பின்னர் அவர் குவித்த முதலாவது சதமாகும்.

அவரை விட மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து 152 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ட்ரவிஸ் ஹெட் சதம் குவித்து அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார்.

மத்திய வரிசையில் அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும் பெட் கமின்ஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த இரண்டாவது 5 விக்கெட் குவியல் இது என்பதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவுசெய்த 12ஆவது 5 விக்கெட் குவியலாகும்.

https://www.virakesari.lk/article/201358

  • Replies 53
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரசோதரன்

பகலில் போட்டியை வைத்தாலும் நாங்கள் போகிறது இல்லை........... அது தான் இரவில் இரகசியமாக வைக்கின்றார்களோ............... இரகசியங்களை இரவில் செய்து கொள்வது வழக்கம் தானே.............🤣. டி 20 உலகக் கோ

ரசோதரன்

🤣............ கிரிக்கட் பார்த்து எத்தனையோ வருடங்கள் ஆன பின், இங்கு களத்தில் நடந்த டி-20 போட்டியினால் அந்த நேரத்தில் கிரிக்கட் பார்த்தேன். ரோகித்தை அப்பதான் பார்த்தேன். அவர் ஒரு சூப்பர் பாட்ஸ்மேன்

ரசோதரன்

பையன் சார்,  அரிஸ்டாட்டில், பிளேட்டோ வரிசையில் ஒரு தத்துவஞானியாக வளர்ந்து வருவோம் என்று பார்த்தால், கவுண்டமணி செந்திலுக்கு பின்னர் ஒரு இடைவெளி வந்து விட்டது, அங்கே தான் நான் நிற்கின்றேன் என்று நீ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஸி 445 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. 

இந்தியா 22 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்து திணறிக்கொண்டிருக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய துடுப்பாட்டக்காரர்களினால் Gabba போன்ற உயிர்ப்பான ஆடுகளங்களில் பெரிதாக சாதிக்கமுடியாது. மட்டையான ஆடுகளங்களில் வெளுத்து வாங்குவார்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/12/2024 at 10:20, vasee said:

இங்கு கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியர்கள் பெரிதாக கண்டு கொள்ள மாட்டார்கள் ஆனால் இந்தியர்கள் அதனைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் அவர்கள் அணி தோற்றால் செத்த வீடு மாதிரி இருக்கும் வித்தியாசமான மனிதர்கள்.

இவர்கள் வெளிநாடுகளில் ஆடி தோற்றுவிட்டால், இந்திய விமான நிலையத்தில் எதிர்ப்பை சமாளிக்க சாதாரணமாக மக்கள் வெளியேறும் பாதையை தவிர்த்து முக்கிய.பிரமுகர்கள் செல்லும் பாதையால் வெளியேறி விடுவார்கள். இல்லையென்றால்; சாணாக வீச்சுத்தான் இவர்கள்மேல். அதிலும் பாகிஸ்தானோடு விளையாடி வென்றுவிட்டால்; ஒரே வெடி கொழுத்தல் ஆரவாரந்தான். அது அவர்களின் மானப்பிரச்சனை. 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மூஞ்சூறு ஒன்று, வலியப்போய் பொறியில் தலையை கொடுத்திருக்கு. அதாவது நாமலின் கல்வித்தகமை குறித்து குற்றபுலனாய்வுத்திணைக்களத்தில் முறைப்பாடு பதியப்பட்டுள்ளது. 'வண்டியும் ஒருநாள் ஓடத்திலேறும், ஓடமும் ஒருநாள் வண்டியிலேறும்.' இனி தங்கள் தங்கள் கல்வித்தகமையை நிரூபிக்க வேண்டிய நேரமிது. நிரூபிப்பார்களா? கள்ள சான்றிதழ் கொடுப்பதும் வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம். அந்த நேரம் இதை தெரிவித்த மாணவன் பலதாக்குதல்களுக்கு முகம் கொடுத்து நாட்டை விட்டு வெளியேறினான். "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்." நான் நினைக்கிறன் மஹிந்தவின் ஒரு மகன் யோசித்தவோ தெரியவில்லை தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கடற்படை கப்ரனாகவோ என்னவோ பெரிய பதவி வகித்தவர்.    
    • அந்த ஐந்த ஆண்டுகளுக்காக நீங்க சின்னவயசில் இருந்து வெயிற்றிங் போல. 😂
    • அதே! அடுத்தவரின் கல்வித்தகமை பற்றிபேசுபவர்கள், தங்கள் கடந்தகால, நிகழ்கால ஊழல்களை விசாரிப்பதற்கு ஒத்துழைப்பார்களா? அல்லது அவரைப்போல் பதவி விலகும் தைரியம்தான் உள்ளதா?  மாண்புமிகு ஜனாதிபதி சொன்னால் சொன்னதுதான்! 
    • இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. adminDecember 15, 2024 இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக நாம் வளர்வோம். எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை நெறியைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சுதுமலை குபேரமஹாலில் இன்று ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சூரிய நிறுவகத்தின் ஸ்தாபகரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவும் கலந்துகொண்டார். அத்துடன் சுவிஸர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் ஒலிவர் கௌரவ விருந்தினராகப் பங்கேற்றிருந்தார். மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கிய பின்னர் பிரதம விருந்தினர் உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டச் செயராக பணியாற்றிய காலத்தில் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தவர் கரு ஜயசூரிய. அவர் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கிய ஒருவர் கரு ஜயசூரியவைப்போன்று  நினைவுகூரப்படும் மற்றொருவராக மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இருக்கின்றார் என்  யாழ். மாவட்டச் செயலராக பணியாற்றியபோது நிதி அமைச்சராக இருந்த அவர் பல்வேறு வகைகளிலும் உதவினார். இன ஐக்கியத்துக்காகவும் தேசிய ஒருமைப்பாட்டுக்காகவும் சிங்கள மக்கள் தமிழ் மொழியையும், தமிழ் மக்கள் சிங்கள மொழியையும் கற்கும் வகையில் இலவசமாக வகுப்புக்களை நடத்திவரும் சூரிய நிறுவகத்தையும் அதன் நிறுவுனர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கும் பாராட்டுக்கள். சிங்கள மொழியை இரண்டாம் மொழியாக கற்பது இந்த நாட்டில் எங்கும் சென்று சேவையாற்றக் கூடிய வாய்பை உருவாக்கும். கூடுதலான மொழியறிவு எங்களை மேம்படுத்த உதவும். இதன் ஊடகாக ஆய்வுக்கான திறன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை வளர்க்க அது உதவும் என மேலும் தெரிவித்தார்.  இந்த நிகழ்வில் மாணவர்களால் பல்வேறு கலை நிகழ்வுகள் சிங்கள மொழியிலும் நடத்தப்பட்டன.   https://globaltamilnews.net/2024/209309/
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.