Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
சென்னை, போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாடினார்.
 

இது தொடர்பான புகைப்படம் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இது அன்பின் நிமித்தமான சந்திப்புதான். இருவரும் திரையுலகம், அரசியல் குறித்து விவாதித்தோம். என்னைவிட அனுபவம் வாய்ந்தவர். அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிபட்டு வராது என்றுதான் முன்பு அவரை விமர்சித்தேன்.

இந்தக் களத்தில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். ஓர் ஆட்சியாளர் சிறப்பாக ஆட்சி செய்யும்போது மக்கள் அந்த ஆட்சியைக் கொண்டாடுவார்கள். இதைத்தான் ரஜினி ‘சிஸ்டம் சரியில்லை’ என்று கூறியிருந்தார். நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசியல் ஆர்வம் நிச்சயம் இருக்கும். ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசியிருப்பதும் அரசியல்தான். விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. சம்பந்திகளைப் போல முதல்வரும், பிரதமரும் சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் வெளியில் எங்களை சங்கி என்கிறார்கள். சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம். தி.மு.க-வை எதிர்த்தாலே சங்கி என்றால், அதை பெருமையாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்" என்றார். சீமானின் இந்த பதில் அடுத்த விவாதத்துக்கு வழிவகுத்தது.

இதற்கு பொதுக்கூட்டத்தில் விளக்கம் கொடுத்த சீமான், "நானும் ஐயா ரஜினிகாந்தும் இரண்டே கால் மணி நேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்குதான் தெரியும். அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை, அவருக்கும் இல்லை. உங்கள் வீட்டில் காதுகுத்து, கல்யாணம், புத்தகம் வெளியீடு என அனைத்துக்கும் அவரை கூப்பிட்டு கூட வைத்துக் கொள்கிறீர்கள். ஆனால் ஒருமுறை தான் நானும் அவரும் ஒன்றாக நின்றோம். ஐயோ ஐயோ என்று குதிக்கிறார்கள். ஏன் தெரியுமா? காரணம் அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார், நான் அரசியலில் சூப்பர் ஸ்டார். இரண்டு ஸ்டாரும் சந்தித்த உடன் பயந்து விட்டார்கள். நான் இல்லையென்றால் எட்டு வழிச் சாலை, பரந்தூரில் விமான நிலையம், காட்டுப் பள்ளியில் துறைமுகம் கட்டி இருப்பார்கள். ஆனால் நானும் என் படையும் இருக்கும் வரை உங்களால் இவற்றை கட்டிவிட முடியுமா? நான் சாத்தியமில்லாததை பேசுவேன் என்று சொல்கிறார்கள். சாத்தியம் இல்லாதவற்றை சாத்தியப்படுத்துபவனுக்கு பெயர்தான் புரட்சியாளன்" என கொதித்தார்.

 
வானதி சீனிவாசன்
 
வானதி சீனிவாசன்
 

சீமானின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், "காவி என்பதை சீமான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். காவி என்பது பா.ஜ.க-விற்கு சொந்தமான நிறம் கிடையாது. காவி என்பது பாரம்பரியம், தியாகம், சனாதனத்தைக் குறிக்கிறது. சூப்பர் ஸ்டார் பட்டத்தை அடுத்தவர்தான் தர வேண்டும். சீமான் தனக்குத்தானே வைத்துக் கொள்ளக்கூடாது. அரசியலில் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடிதான். 3-வது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற அவருக்கு மிகச்சிறந்த தலைவர் என்று உலக நாடுகள் எல்லாம் பட்டமளித்து கொண்டிருக்கின்றன. இதைவிட வேறு என்ன பட்டம் வேண்டும்?" என்றார்.

 

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், "எம்ஜிஆருக்கு புரட்சி நடிகர் என்கிற பட்டத்தைக் கலைஞர் கொடுத்தார். கிருபானந்த வாரியார் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை கொடுத்தார். எனவே பட்டங்கள் மற்றவர்களால்தான் கொடுக்கப்பட வேண்டும். நமக்கு நாமே பெற்றுக்கொள்வது பட்டமாக இருக்காது. இந்த விஷயத்தில் வானதி சொல்வதில் அர்த்தம் இருக்கிறது" என்றார்.

 
தராசு ஷ்யாம்
 
தராசு ஷ்யாம்
 

ஆனால், 'சீமானின் இந்த கருத்து விஜய்யை சீண்டும் வகையில் இருக்கிறது' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "ஏற்கெனவே யார் சூப்பர் ஸ்டார் என்பதில் ரஜினிக்கும், விஜய்க்கும் பிரச்சினை இருக்கிறது. இந்தசூழலில்தான் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்கிறார் சீமான். இதன் மூலமாக விஜய்யை ஓரம்கட்டுகிறார். இந்த பேச்சு விஜய் மற்றும் அவரது ரசிகர்களை வெறுப்பேத்தும் வகையிலும், வம்புக்கு இழுக்கும் வகையிலும் இருக்கிறது. மேலும் அரசியல் சூப்பர் ஸ்டார் என தன்னை எப்படி சீமான் சொல்லிக் கொள்கிறார் எனத் தெரியவில்லை. தனியாக தேர்தலை சந்தித்து 8 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 
ப்ரியன்
 
ப்ரியன்
 

எனவே தனித்துவமான அரசியல்வாதியாக இருக்கிறார். அரசியல் சூப்பர் ஸ்டார் என்றால் பிரபலமாகவும், செல்வாக்கு மிக்கவராகவும், தேர்தல்களில் அதிக வாக்குகளும் பெற்றிருக்க வேண்டும்.

 

இதையெல்லாம் தமிழக அரசியலில் சீமான் இன்னும் நிரூபிக்கவில்லை. எனவே அவர் இவ்வளவு சீக்கிரமாக அரசியல் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்துக்குத் தகுதியுடைவராக இருப்பாரா என்பது சந்தேகத்துக்குரியதுதான். தன்னைத்தானே அரசியல் சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொள்வது அவரது தன்னம்பிக்கையாக இருக்கலாம். பிறர் அதை நாகரீகமான விஷயமாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதை சீமான் புரிந்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

 

`அரசியல் சூப்பர் ஸ்டார்' - சீறும் சீமான்; சீண்டும் வானதி; என்ன சொல்கிறார்கள்? - Vikatan

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு பட்டம் கொடுக்க இந்த உலகில் எவனுக்கும் ஜோக்கிதை இல்லை. இனியும் எவனும் அந்த தகுதியுடன் பிறக்கப்போவதில்லை. எனவே எனக்கு நானே அரசியல் சுப்பர்ஸ்ரார் என்று பட்டத்தை சூட்டிக் கொண்டேன். 
புஹ்ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா😂😂😂😂😂😂😂😂😂

(தம்பிகளின் விசிலடி அரங்கம் அதிர்ந்தது ) 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நன்றாக முத்திவிட்டது என்று மட்டும் தெரிகிறது 🤣🙂

Posted
2 hours ago, விசுகு said:

நன்றாக முத்திவிட்டது என்று மட்டும் தெரிகிறது 🤣🙂

சீமானுக்குத் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, நிழலி said:

சீமானுக்குத் தானே?

சீமான் விசுவாச உள்நாட்டு வெளிநாட்டு தம்பிகளூக்கு.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, island said:

இனியும் எவனும் அந்த தகுதியுடன் பிறக்கப்போவதில்லை. எனவே எனக்கு நானே அரசியல் சுப்பர்ஸ்ரார் என்று பட்டத்தை சூட்டிக் கொண்டேன்.

large.IMG_7823.jpeg.03aca2e286f072ca757b

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீமான் அரசியல் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட ஈழத்தமிழர்களுக்குத்தான் வயிற்றில் புளிச்சலை ஏற்படுத்துகின்றது. 😎

கோபாலபுர விருந்தோம்பல்கள் அமர்க்களமாக இருக்கும் என கேள்விப்பட்டேன் உண்மையா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, குமாரசாமி said:

சீமான் அரசியல் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களை விட ஈழத்தமிழர்களுக்குத்தான் வயிற்றில் புளிச்சலை ஏற்படுத்துகின்றது. 😎

கோபாலபுர விருந்தோம்பல்கள் அமர்க்களமாக இருக்கும் என கேள்விப்பட்டேன் உண்மையா? 😂

😁 ஒருரே சிரிப்பாய் இருக்கு தாத்தா😁.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, வீரப் பையன்26 said:

😁 ஒருரே சிரிப்பாய் இருக்கு தாத்தா😁.............................

மற்றவர்கள் சீமானை விமர்சிக்கும் போது  ஏனையவர்கள் கருணாநிதியையும் ஸ்டாலினையும் உதயநிதியையும் பழனிச்சாமியையும் விமர்சிக்க தடை வராது என நினைக்கின்றேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

மற்றவர்கள் சீமானை விமர்சிக்கும் போது  ஏனையவர்கள் கருணாநிதியையும் ஸ்டாலினையும் உதயநிதியையும் பழனிச்சாமியையும் விமர்சிக்க தடை வராது என நினைக்கின்றேன். 🙂

ச‌ங்கி ம‌ங்கிய‌ த‌மிழ் நாட்டில் அறிமுக‌ம் செய்து வைச்சு வ‌ள‌த்து விட்ட‌தே இந்த‌ திருட்டு கும்ப‌ல் தான் தாத்தா

 

சீமான் மீதான‌ இந்த‌ விம‌ர்ச‌ன‌ம் ஏற்று கொள்ள‌ முடியாது......................த‌மிழ் நாட்டின் எல்லா அழிவுக்கும் மூல‌ கார‌ன‌ம் திமுக்கா தான்......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரஜனி தான் சூப்பர் ஸ்டார் என்றால், விஜய் சூப்பர் ஸ்டார் இல்லை என்று ஒரு அர்த்தமும் வருகின்றதே.................🤣.

இப்ப யானைக் கூட்டங்கள் மிதிக்கப் போகின்றன செந்தமிழனை................😜.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, ரசோதரன் said:

ரஜனி தான் சூப்பர் ஸ்டார் என்றால், விஜய் சூப்பர் ஸ்டார் இல்லை என்று ஒரு அர்த்தமும் வருகின்றதே.................🤣.

இப்ப யானைக் கூட்டங்கள் மிதிக்கப் போகின்றன செந்தமிழனை................😜.

ஊட‌க‌த்தை விஜேய் இதுவ‌ரை ச‌ந்திச்ச‌து கிடையாது...............த‌மிழ் நாட்டில் எவ‌ள‌வோ ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ள் போய் கிட்டு இருக்கு வெறும‌ன‌ க‌ம‌ல‌ போல‌ X த‌ள‌த்தில் இருந்து விஜேய் அர‌சிய‌ல் செய்கிறார் குருநாதா😁.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, வீரப் பையன்26 said:

ஊட‌க‌த்தை விஜேய் இதுவ‌ரை ச‌ந்திச்ச‌து கிடையாது...............த‌மிழ் நாட்டில் எவ‌ள‌வோ ம‌க்க‌ள் பிர‌ச்ச‌னைக‌ள் போய் கிட்டு இருக்கு வெறும‌ன‌ க‌ம‌ல‌ போல‌ X த‌ள‌த்தில் இருந்து விஜேய் அர‌சிய‌ல் செய்கிறார் குருநாதா😁.......................

பொதுவாக படங்களில் விஜய்யை நடிக்க வைப்பது மிகக் கஷ்டம்.......... கல்லில் கூட நார் உரித்துவிடலாம்.

முன்னேற்பாடுகள், தயாரிப்புகள் இல்லாமல் மக்களையும் ஊடகங்களையும் அவர் சந்திப்பதும் அது போலவே............... அவருக்கு வரவே வராது, கஷ்டம் தான்..........

கமல் மக்களோடு போய்ப் பேச தயாராகவே இருக்கின்றார்........... மக்கள் தான் கமலைக் கண்டவுடன் குதிக்கால் பிடரியில் பட குதித்தோடி தப்பித்து ஓடுகின்றார்கள்...............🤣

    

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ரசோதரன் said:

பொதுவாக படங்களில் விஜய்யை நடிக்க வைப்பது மிகக் கஷ்டம்.......... கல்லில் கூட நார் உரித்துவிடலாம்.

முன்னேற்பாடுகள், தயாரிப்புகள் இல்லாமல் மக்களையும் ஊடகங்களையும் அவர் சந்திப்பதும் அது போலவே............... அவருக்கு வரவே வராது, கஷ்டம் தான்..........

கமல் மக்களோடு போய்ப் பேச தயாராகவே இருக்கின்றார்........... மக்கள் தான் கமலைக் கண்டவுடன் குதிக்கால் பிடரியில் பட குதித்தோடி தப்பித்து ஓடுகின்றார்கள்...............🤣

    

யோவ் நீவீர் பேய்க்காயப்பா...😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விநாயகர் ஜோதிட நிலையம் nsdetSporo 133 fi9479df38uabml,021c4e162a0:f9r07l9mée2cu7h3i  ·  சாப்பிட்ட தட்டை கழுவுங்கள் (நீங்கள்) சாப்பிட்ட தட்டை கழுவ கற்றுக் கொடுங்கள்.... (உங்கள் உங்கள் பிள்ளைக்கு) இது எனது அப்பாவின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து விடுவார். "அப்பா இருக்கட்டும் நானே கழுவுறேன்" என்று சொல்லியும் கேட்பதில்லை. "ஏன் அப்பா ஒரு தட்டு தானே நான் கழுவ மாட்டானா " என்று கேட்டேன். "இல்ல... இது என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்தது". மூன்று வேலை சாப்பிடுறோம்னு வச்சுக்குவோம் அப்போ ஒரு நாளைக்கு 3 தட்டு அப்போ ஒரு மாசத்துக்கு 90 தட்டு ஒருத்தருக்காக எங்க அம்மா கழுவ வேண்டிருக்கு. நாங்களோ எங்க அப்பாவுக்கு 4 குழந்தை அப்போ எங்க அம்மா எங்க நாலு பேருக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 4 * 90 = 360 தட்டு கழுவனும். நம்ம சாப்பிட தட்ட நாமே கழுவுனா எவ்ளோ வேலை சுமை அம்மாவுக்கு குறையும்னு எங்க அப்பா கேட்டதுல இருந்து தட்ட நானே கழுவ ஆரம்பிச்சுட்டேன் என்றார்... சில வீடுகளில் ஆண்கள் சாப்பிட தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள்.... மனைவிதான் கழுவி வைப்பாள். அதில ஒரு பெருமை. இதுல என்ன இருக்கோ தெரியாது... முடிந்தவரை தான் சாப்பிட தட்டை தானே கழுவுங்கள். நேரம் கிடைக்கையில் உதவி செய்யுங்கள். பாத்திரம் கழுவுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை இது என்னுடைய அனுபவம்,... (வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் முடித்து பார்) என்பது ஒரு பழமொழி.. . இந்த பழமொழியோட உன் வீட்டில் பாத்திரத்தை கழுவிப் பார். என்றும் சேர்த்து கொள்ளலாம். சமையல் கூட ஈசியாக செய்து முடித்துவிடலாம் ஆனால் பாத்திரங்கள் கழுவது என்றால் அது ஒரு பெரிய சுமை.. ஆண்கள் உங்கள் வீட்டில் ஒரு நாள் பாத்திரத்தை கழுவி பாருங்கள்.... பெண்களின் நிலை உங்களுக்கு நன்றாகவே புரியும்... படித்த பதிவு சற்று எனது கருத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளேன். ..ஆம் !மனிதநேயம் மற்றும் சமத்துவம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது........!  👍   கந்த கணேசதாஸக் குருக்கள்
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • ரஸ்யா, ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாகவே அசாத்தின் அரசு கலைக்கப்பட்டது - துருக்கிய வெளிவிவகார அமைச்சர்.  We paved the way': Turkey negotiated fall of Assad with Russia, Iran, Turkish FM says - report https://m.jpost.com/middle-east/article-833382
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.