Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
 
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்  என வெளியான தகவல்கள் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

ரஸ்ய தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது

பிரான்ஸ் பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரைனிற்கு எதிராக போரிடுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான செய்தி குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கவனம் செலுத்தியது.

இவ்வாறான தகவல்கள் ஆதாரமற்றவை அடிப்படையற்றவை என்பதை தூதரகம் வலியுறுத்த விரும்புகின்றது.

உறுதிப்படுத்தப்படாத தகவல்களை  நாங்கள் உன்னி;ப்பாக அவதானித்து வருகின்றோம்,இந்த தகவல்களின் நோக்கம் இலங்கை ரஸ்யா இடையிலான பாரம்பரிய நட்புறவை சீர்குலைப்பதாகும்.

எங்கள் நாட்டிற்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டவர்களையும் ரஸ்ய அதிகாரிகள் மதிக்கின்றனர். அவர்களின் விருப்பத்திற்கு தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளை வழங்க தயாராகவுள்ளனர்.

ரஸ்யாவில் தங்கியிருக்கின்ற இலங்கையர்கள் தொடர்பான விடயத்தினை மொஸ்கோவில் உள்ள ரஸ்யாவிற்கான இலங்கை தூதரகமே கையாள்கின்றது என்பதையும் கவனத்தில் எடுக்கவேண்டும்.

நேர்மையற்ற வேலைவாய்ப்பு முகவர்கள் இலங்கையர்களை ரஸ்யாவிற்கு அனுப்புவது  குறித்து தூதரகத்திற்கு எந்ததகவலும் கிடைக்கவில்லை.

இதேவேளை இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கத்திடமிருந்து உதவிகள் கோரப்பட்டால் அதற்கு உதவுவதற்கு நாங்கள் தயாராகவுள்ளோம்.

உக்ரைனிற்கு எதிரான போரில் யாழ் இளைஞர்களா?மறுக்கின்றது ரஸ்ய தூதரகம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய தூதரகம் வழங்கும் தகவல் உண்மையோ? நம்மோட ஆட்கள்தான் வெளிநாடு ஆசையில் கழுத்தை கொண்டுபோய் நீட்டினார்களோ? ஏஜென்சிகாரன் ரஷ்யா அரசாங்கத்திற்கு அறிவுத்துகொண்டா ஆட்களை ரஷ்யாவூடு அனுப்புகின்றான்?

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஒரு காலத்தில் எங்களில் சிலர் அமெரிக்காவின் ஊடாக கனடா போனதுண்டு. அமெரிக்காவிற்குள் வந்ததவுடன் அவர்களை சிறையில் போட்டுவிடுவார்கள். பின்னர் பிணையில் வெளியே விடுவார்கள். அப்படியே எல்லை கடந்து கனடாவிற்குள் போய்விடுவார்கள்.

இப்பொழுது முகவர்கள் அதே போல ஒரு கதையை ரஷ்யாவைப் பற்றியும் சொல்லி எங்கள் ஆட்களை ஏமாற்றுகின்றார்களோ தெரியவில்லை.  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

அண்டபுளுகு புளுகுவதில் ரஷ்ய ராணுவமும் இலங்கை ராணுவம்போல்தான்,

சில மாதங்களின் முன்னர் முகவர்களால் ரஷ்யா கொண்டு செல்லப்பட்டு பின்னர் பெலாரசில் கைவிடப்பட்டு ரஷ்ய ராணுவத்திடம் கையளிக்கப்பட்டஇந்திய இளைஞர்களை 10 வருஷம் ஜெயிலுக்கு போகிறாயா அல்லது ராணுவத்தில் சாரதி போன்ற சாதாரண வேலைகளில் சேர்கிறாயா என்று எழுத்துமூலமான ஒப்பந்ததில் கையெழுத்து வாங்கி ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்த்ததாக செய்தி ஆதாரத்துடன் வந்தது, அப்போது ரஷ்யா அது அப்பட்டமான பொய் என்று  அதை மறுத்தது.

பின்னர் மோடியின் ரஷ்ய பயணத்தின் பின்னர் அந்த செய்தி காணாமலே போனது .

இப்போது அதே பாணியில் முகவரால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய ராணுவத்திடம் சிக்கிய இலங்கை இளைஞர்கள், உலக வல்லரசு நாடு ஒன்றில் அவர்கள் ராணுவநாட்டின் உடையுடன் அவர்களுக்கு தெரியாமலே இந்த இளைஞர்கள் நடமாடுகிறார்களா?

இந்தாபாரு ரஷ்யா தம்பி ஒரு மனிசன் பொய் பேசலாம் இப்படி ஏக்கர் கணக்கில புளுக கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

முன்னர் ஒரு காலத்தில் எங்களில் சிலர் அமெரிக்காவின் ஊடாக கனடா போனதுண்டு. அமெரிக்காவிற்குள் வந்ததவுடன் அவர்களை சிறையில் போட்டுவிடுவார்கள். பின்னர் பிணையில் வெளியே விடுவார்கள். அப்படியே எல்லை கடந்து கனடாவிற்குள் போய்விடுவார்கள்.

இப்பொழுது முகவர்கள் அதே போல ஒரு கதையை ரஷ்யாவைப் பற்றியும் சொல்லி எங்கள் ஆட்களை ஏமாற்றுகின்றார்களோ தெரியவில்லை.  

ரைசியவின் லைன்  சென்றிக்கு ஆள் எடுப்பதாக சொல்லியே இவர்களுக்கு சொல்லபட்டு அனுப்ப பட்டு உள்ளார்கள் என்கிறார்கள் இம்முறை குளிர் தொடக்கதிலே கில்லி விளையாட பயந்து போய் அலறி இருக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

பழைய காலங்களில் ரஷ்யா விமானத்திலேயே ரஷ்யாவுக்குள் சென்று இறங்கி ஒன்னுத்துக்கும் உதவாத இந்த நாட்டில் இருக்கவே கூடாது என்று வெளியேறி மேற்குலகாடுகளில் குடியேறிய கம்யுனிஸ ஈழதமிழர்கள் சாதாரண ஈழதமிழர்க்களுக்கு இருந்த புத்தி கூர்மை தொலை நோக்கு பார்வை இப்போதைய தமிழர்களுக்கு இல்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பழைய காலங்களில் ரஷ்யா விமானத்திலேயே ரஷ்யாவுக்குள் சென்று இறங்கி ஒன்னுத்துக்கும் உதவாத இந்த நாட்டில் இருக்கவே கூடாது என்று வெளியேறி மேற்குலகாடுகளில் குடியேறிய கம்யுனிஸ ஈழதமிழர்கள் சாதாரண ஈழதமிழர்க்களுக்கு இருந்த புத்தி கூர்மை தொலை நோக்கு பார்வை இப்போதைய தமிழர்களுக்கு இல்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகின்றது .

முதளாளித்துவ நாடுகளில் நன்கு செட்டில் ஆகிக்கொண்டு கம்மினியூச வகுப்பு எடுப்பார்கள்!😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, வாலி said:

முதளாளித்துவ நாடுகளில் நன்கு செட்டில் ஆகிக்கொண்டு கம்மினியூச வகுப்பு எடுப்பார்கள்!😂

முதலாளித்துவ நாடுகளிலும் கம்யூனிச கட்சிகள் இருக்கின்றன. :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரசோதரன் said:

முன்னர் ஒரு காலத்தில் எங்களில் சிலர் அமெரிக்காவின் ஊடாக கனடா போனதுண்டு. அமெரிக்காவிற்குள் வந்ததவுடன் அவர்களை சிறையில் போட்டுவிடுவார்கள். பின்னர் பிணையில் வெளியே விடுவார்கள். அப்படியே எல்லை கடந்து கனடாவிற்குள் போய்விடுவார்கள்.

இப்பொழுது முகவர்கள் அதே போல ஒரு கதையை ரஷ்யாவைப் பற்றியும் சொல்லி எங்கள் ஆட்களை ஏமாற்றுகின்றார்களோ தெரியவில்லை.  

80களில் நாடு விட்டு நாடு வந்து பலஸ்தீன போருக்குள் நுழைந்த எம்வர்கள் பலர் ஐரோப்பிய நடுகளிலும் அமெரிக்க நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அப்படி வந்த ஒருவரை ஜேர்மனியில் சந்தித்தேன். கதை கொடுமையானது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

80களில் நாடு விட்டு நாடு வந்து பலஸ்தீன போருக்குள் நுழைந்த எம்வர்கள் பலர் ஐரோப்பிய நடுகளிலும் அமெரிக்க நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அப்படி வந்த ஒருவரை ஜேர்மனியில் சந்தித்தேன். கதை கொடுமையானது. ☹️

போர் என்று தெரிந்தும் எம்மவர்களோ அல்லது எந்த அந்நியர்களும் அதை ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்தும் தொழிலாக நினைத்து அதில் ஈடுபடுவதை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கின்றது. அமெரிக்காவில் இப்படியான நிறுவனங்கள் இருக்கின்றன............... உலகெங்கும் இருக்கின்றன போல...................

சுதந்திரத்திற்கான போர், உரிமைக்கான போர் அல்லது தன் நாட்டிற்கான போர் போன்றவற்றில் ஈடுபடுவதை நான் சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
31 minutes ago, ரசோதரன் said:

போர் என்று தெரிந்தும் எம்மவர்களோ அல்லது எந்த அந்நியர்களும் அதை ஒரு வாழ்க்கையை கொண்டு நடத்தும் தொழிலாக நினைத்து அதில் ஈடுபடுவதை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கின்றது. அமெரிக்காவில் இப்படியான நிறுவனங்கள் இருக்கின்றன............... உலகெங்கும் இருக்கின்றன போல...................

ஒரு காலத்தில் பிரான்ஸ்ல் இருந்தது என நினைக்கின்றேன்...அதில் எம்மவர்களும் இருந்திருக்கலாம்.ஆதாரம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தாருங்கள் : ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருக்கு மகஜர்

Published By: Digital Desk 7

05 Dec, 2024 | 09:04 AM
image

(ஆர்.ராம்)

வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை உடன் மீட்டுத்தருமாறு, பாதிக்கப்பட்டவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளபோதும் ரஷ்ய தூதரகம் அவர்களின் மகஜரை பெற்றுக்கொள்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது.

ரஷ்யப் படையில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர்களின் உறவினர்கள் கையளித்துள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்காக எமது உறவினர்கள் முகவர் ஊடாக பணம் செலுத்தி கடந்த மாதம் பயணமாகியிருந்தனர். அவர்களை கொழும்பு கட்டுநாயக்கவிலிருந்து ரஷ்யாவுக்கு கொண்டு செல்வதாகவும் பின்னர் அங்கிருந்து ஐரோப்பியாவுக்கு அழைத்துச் செல்வதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

அதற்கு அமைவாக, அவர்களுக்கு 60இலட்சம் முதல் 70இலட்சம் வரையிலான பணம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் எமது உறவினர்கள் ரஷ்ய விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அவர்களுக்கு இராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

15நாட்கள் பயிற்சியின் பின்னர் அவர்கள் உக்ரேனுக்கு எதிரான போருக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்வதாக பணம்பெற்றுக்கொண்ட முகவர்களுடன் தொடர்புகளைக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, தற்போதும் போர் உக்கிரமாக நடைபெற்று வருவதால் அவர்களின் உயிர்களைப் பாதுகாத்து எமது உறவுகளை பத்திரமாக மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது. மிதுர்ஷன், பகிரதன், பாலச்சந்திரன்,பிரதாப், சிவாஸ் ஆகியோரே ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.virakesari.lk/article/200463

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட இளைஞர்கள்- மீட்குமாறு சிறிதரன் எம்பி கோரிக்கை

December 7, 2024

ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ் இளைஞர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்

இந்த விடயத்தினை வெளிவிவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது

யாழ்ப்பாணத்திலிருந்து பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்ல முயற்சித்த இளைஞர் குழுவொன்று ரஷ்ய இராணுவத்தினரால் உக்ரைன் எல்லையில் கட்டாய போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்

முகவர் ஊடாக அவர்கள் ரஷ்ய இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்

இதேவேளை இந்த விடயம் ஆதாரமற்றவை என இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் தெரிவித்திருந்தது

இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்களின் உறவினர்கள் யாழ் காவல்  நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தமது பிள்ளைகளை மீட்டு தருமாறு வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.
 
https://www.ilakku.org/ரஷ்ய-இராணுவத்தில்-வலுக்க/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.