Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, putthan said:

அது சரி ...புத்தருக்கு இங்கிலிசு தெரியுமே உலகத்தின் அரைவாசி பேரை தன்ட காலில் விழபண்ணியுள்ளார்.......
21 ஆம் நூற்றாண்டின் அவதாரம் ...ஜனாதிபதி பதவி ஏற்கும் பொழுது அவரின் தலையில் ஒர் ஒளிவட்டம் வந்து சுழன்று கொண்டிருந்தது அதை எந்த யூ டியுப்காரரும்  படம் எடுக்க முடியவில்லை ...பல அதிரடி முயற்சிகளை எடுத்தும் அவர்களால் படம் பிடிக்க முடியவில்லை

புத்தர். தமிழன்    தமிழ் நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன் 

பிழை என்றால் திருத்தவும்.   

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, Kandiah57 said:

புத்தர். தமிழன்    தமிழ் நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன் 

பிழை என்றால் திருத்தவும்.   

அப்படியே பிழையாக இருந்தாலும், இனி திருத்தி என்ன, திருத்தா விட்டால் என்ன............ இப்படியே போய்ச் சேர வேண்டியது தான்.................🤣.

ஒரு நேபாளத்து நண்பன் புத்தர் உண்மையில் நேபாளத்தில் தான் பிறந்தார் என்று சொல்லியிருக்கின்றான். 

கொரிய நாட்டவர் ஒருவர் தங்களின் புத்தரே வேற ஆள் என்று சொல்லியிருக்கின்றார்.

வியட்நாம், சைனா இப்படி இன்னும் நிறையப் பேரை விசாரிக்கப் போகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ரசோதரன் said:

என்ன இப்படி சொல்லி போட்டீர்கள்   நான்  நீங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நினைத்தேன்” 🤣

அவரது தமிழ் பெயர் சித்தார்த்தர்   அரச குடும்பத்தை சேர்நதவர். 

நல்ல வசதியானவர். எல்லாத்தையும் விட்டுட்டு  அரச மரத்தடியில் வந்து இருந்தார்.  தேடி பாருங்கள்  முழு வரலாறு கிடைக்கும் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

Reassessing S. W. R. D. Bandaranaike

எல்லாப் புகழும்... சிங்களம் மட்டுமே என்ற சட்டத்தை கொண்டு வந்த பண்டாரநாயக்காவுக்கே. 😂

சிறித்தம்பி! பண்டாரநாயக்காவுக்கு சிங்களம் எழுத வாசிக்கத் தெரியாதாம் மெய்யே? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Kandiah57 said:

என்ன இப்படி சொல்லி போட்டீர்கள்   நான்  நீங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நினைத்தேன்” 🤣

அவரது தமிழ் பெயர் சித்தார்த்தர்   அரச குடும்பத்தை சேர்நதவர். 

நல்ல வசதியானவர். எல்லாத்தையும் விட்டுட்டு  அரச மரத்தடியில் வந்து இருந்தார்.  தேடி பாருங்கள்  முழு வரலாறு கிடைக்கும் 🙏

🤣..............

அப்ப உடுவில் முன்னாள் எம்பி தர்மலிங்கம் ஒரு தமிழ்ப் பெயரைத் தான் தன் மகனுக்கு வைத்திருக்கின்றார் என்கிறீர்கள்...........................

சித்தார்த்தரின் மனைவியின் பெயரையும், என்னுடைய களப் பெயரையும் உற்றுப் பார்த்தீர்கள் என்றால், ஒரு உண்மை துலங்கும். இங்கே குளிர் குறைவான இடத்தில் ஒரு பெரிய மரமாக தேடிக் கொண்டிருக்கின்றேன்.............

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, Kandiah57 said:

புத்தர். தமிழன்    தமிழ் நன்றாக தெரியும் என்று நினைக்கிறேன் 

பிழை என்றால் திருத்தவும்.   

எந்த கல்வெட்டு ஆதாரமும் இல்லை .....ஆனால் எனது புலனாய்வு ஆராச்சி படி அவர் தமிழராக இருக்க வாய்ப்பு உண்டு...😅
சொந்த மண்ணில்/சொந்த இனத்தில் உதித்த பலரை புறந்தள்ளி வந்துள்ளோம் ,புறந்தளிக்கொண்டும் இருக்கின்றோம்... உதாரணத்திற்கு 
 கண்ணகி வழிபாட்டை புறக்கணித்து பல அம்மன் வழிபாட்டை உள்வாங்கி கொண்டிருக்கின்றோம் ...கண்ணகி வழிபாடு என்று வரும் பொழுது அங்கு பெளத்தம் தமிழனின் அடையாளமாக வருகின்றது ....ஆனால் இன்று பூஜை வழிபாடாக மாறி அர்ச்சனை என ஒர் சாதியினர் மட்டும் கடவுள் உடன் தொடர்பு கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள் நம்மவர்கள் ...
மற்றையது 
யோக சுவாமிகளை எடுத்து கொள்ளுங்கள் அவரைப்பற்றி தெரிந்த இள‌வயதினர் புலத்திலுமில்லை ,தாயகத்திலும் இல்லை....ஆனால் புட்டபத்திசாய்பாபா,சீரடி சாய்பாபா போன்றோரை தெரியாத புலம் பெயர் இளசுகள்,தாயக இளசுகள் இருக்க மாட்டார்கள் ...
 
8 minutes ago, ரசோதரன் said:

🤣..............

அப்ப உடுவில் முன்னாள் எம்பி தர்மலிங்கம் ஒரு தமிழ்ப் பெயரைத் தான் தன் மகனுக்கு வைத்திருக்கின்றார் 😅......................

சித்தார்த்தரின் மனைவியின் பெயரையும், என்னுடைய களப் பெயரையும் உற்றுப் பார்த்தீர்கள் என்றால், ஒரு உண்மை துலங்கும். இங்கே குளிர் குறைவான இடத்தில் ஒரு பெரிய மரமாக தேடிக் கொண்டிருக்கின்றேன்.............

😅என்னுடைய பழைய கிறசுக்கும் அந்த பெயர் அதற்காக நான் துறவியே 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! பண்டாரநாயக்காவுக்கு சிங்களம் எழுத வாசிக்கத் தெரியாதாம் மெய்யே? 😂

பண்டாரநாயக்காவுக்கு… சிங்களம் எழுத, வாசிக்கத் தெரியாது என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் குமாரசாமி அண்ணை. 
ஆனால்…  அனுரா பண்டாரநாயக்கா, அவ்வளவு புத்திசாலியான ஆள் இல்லை என்று அரசல் புரசலாக கேள்விப் பட்டுள்ளேன்.
அப்படி இருந்தும் வாரிசு அரசியல் மூலம் பல முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார்.
சந்திரிக்காவின் இடத்திற்கு… அனுரா பண்டாரநாயக்காவை நியமிப்பதே ஶ்ரீமாவோவின் விருப்பமாக இருந்ததாக அறிகின்றேன்.

இதனைப் பற்றி @goshan_che க்கு கூடுதலாக தெரியலாம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! பண்டாரநாயக்காவுக்கு சிங்களம் எழுத வாசிக்கத் தெரியாதாம் மெய்யே? 😂

அதுதான் அவருக்கு மொழிபற்று பிச்சுகொண்டு வந்திருக்குது போல....அதன் விளைவு லட்சகணக்கில் இனிய இன்னுயிர்கள் பலியாகியிருக்கின்றன...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, putthan said:

😅என்னுடைய பழைய கிறசுக்கும் அந்த பெயர் அதற்காக நான் துறவியே 

உங்களின் களப்பெயருக்கு காரணம் தம்மமாக இருக்குமோ என்று நினைத்ததுண்டு................... அக்காவின் நினைவுகள் தான் அதற்கான காரணம் என்று இப்ப நாங்கள் தெரிந்துகொண்டோம்..................🤣.

என்ன ஆகினாலும், முடிவு துறவு தான்...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ரசோதரன் said:

உங்களின் களப்பெயருக்கு காரணம் தம்மமாக இருக்குமோ என்று நினைத்ததுண்டு................... அக்காவின் நினைவுகள் தான் அதற்கான காரணம் என்று இப்ப நாங்கள் தெரிந்துகொண்டோம்..................🤣.

என்ன ஆகினாலும், முடிவு துறவு தான்...............

அதென்றால் உண்மை தான் ...இப்பவே துறவின் அறிகுறிகள் இயற்கையாகவே வர தொடங்கிவிட்டது ..முக்கிய குறிப்பு (துறவு விருப்பம் இல்லை என்றாலும் இயறகை விடாது....)கடந்து போக வேண்டிய நிலை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, தமிழ் சிறி said:

பண்டாரநாயக்காவுக்கு… சிங்களம் எழுத, வாசிக்கத் தெரியாது என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் குமாரசாமி அண்ணை. 

இன்றைய ஜனாதிபதியும் அன்றைய  பக்கா சிங்கள அரசியல்வாதியுமான அனுரவின் பேட்டியை கேட்டுப்பாருங்கள்.

இந்த காணொளியை நுணாவிலான் வேறொரு திரியில் இணைத்திருந்தார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மருத்துவர் அருச்சுனா தனது விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கு உரையாற்றியுள்ளார்( play to the gallery). மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என விழித்து அவர்களை அவமதித்து உள்ளார், இலங்கையில் உள்ள கிட்டதட்ட அனைவருமே இந்திய வம்சாவளியினர் ஆவார்கள்.

Edited by zuma
எழுத்துப்பிழை
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, zuma said:

மருத்துவர் அருச்சுனா தனது விசில் அடிச்சன் குஞ்சுகளுக்கு உரையாற்றியுள்ளார்( play to the gallery). மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என விழித்து அவர்களை அவமதித்து உள்ளார், இலங்கையில் உள்ள கிட்டதட்ட அனைவருமே இந்திய வம்சாவளியினர் ஆவார்கள்.

சிங்களவர்கள் உட்பட என்று சொல்ல உங்களுக்கு மனம் வருகிதுல்லை 😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பெருமாள் said:

சிங்களவர்கள் உட்பட என்று சொல்ல உங்களுக்கு மனம் வருகிதுல்லை 😄

சிங்களவர்கள் மட்டுமல்ல முஸ்லிங்களும் சேர்த்துதான்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, தமிழ் சிறி said:

பண்டாரநாயக்காவுக்கு… சிங்களம் எழுத, வாசிக்கத் தெரியாது என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் குமாரசாமி அண்ணை. 
ஆனால்…  அனுரா பண்டாரநாயக்கா, அவ்வளவு புத்திசாலியான ஆள் இல்லை என்று அரசல் புரசலாக கேள்விப் பட்டுள்ளேன்.
அப்படி இருந்தும் வாரிசு அரசியல் மூலம் பல முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார்.
சந்திரிக்காவின் இடத்திற்கு… அனுரா பண்டாரநாயக்காவை நியமிப்பதே ஶ்ரீமாவோவின் விருப்பமாக இருந்ததாக அறிகின்றேன்.

இதனைப் பற்றி @goshan_che க்கு கூடுதலாக தெரியலாம். 🙂

ஓம் தகப்பன் பண்டாவுக்கு சிங்களம் பெரிதாக எழுத வாசிக்க தெரியாதாம்.

 புனித தோமையர், பின் ஆக்ஸ்போர்ட், அதன் பின் இன்னர் டெம்பிளில் பாரிஸ்டர் என சிங்களத்தில் சொல்லும் களு சுட்த்தா (கறுப்பு-வெள்ளைகாரன்) அவர்.

ஆக்ஸ்போர்ட்டின் முதல் ஆசிய மாணவர் சங்க செயலாளர் என நினைக்கிறேன்.

அதே போல் அத்துலத் முதலி முதலாவது ஆசிய மாணவர் சங்க தலைவர் என நினைக்கிறேன்.

அனுர கொஞ்சம் மந்த புத்திதான். அஜால் குஜாலிலுல் ஆர்வம் அதிகம். அவர் ஒரு கட்சிக்கு போனால் அது சிலமாதங்களில் எதிர்கட்சியாகும் யோகமும் இருந்தது🤣.

தொண்டா, அஷ்ரப், டக்லஸ் அநேக காலம் ஆளும்கட்சி. அதேபோல் அனுர அநேக காலம் எதிர்கட்சி🤣.

78க்கு பின் சிறிமாவின் வாக்குரிமை பறிக்கப்பட்ட பின் சு க வை முழுவதும் அழிந்து விடாமல் காப்பாற்றினார். சந்திரிகா விஜே குமாரதுங்கவை முடித்து, குடும்பம், கட்சி சகலதையும் விட்டு வெளியேறிய பின் தாய்க்கும், கட்சிக்கும் பலமாக இருந்தார்.

குமாரதுங்க, பிரேமதாச மறைய 1993 இல் சந்திரிக்கா நாடு திரும்பி அரசியலில் இறங்கினார். சிறிமா, சந்திரிகாவை ஏற்க, சில காலத்தில் அனுர யூ என்பிபக்கம் தாவினார்.

பின்னர் மாறி மாறி தாவினார்.

தந்தையின் கட்சியை, ஆட்சியை அவருக்கு விசுவாசமான அடிப்பொடியாக இருந்த டி ஏ ராஜபக்சவின் மகன்கள் கைப்பறிய காட்சியையும் கண்டு கண்மூடினார்.

ஆனால் கடைசிவரை மகிந்த இவரை “லொக்கா” (பெரியவர்) என்றே அழைத்தார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

இன்றைய ஜனாதிபதியும் அன்றைய  பக்கா சிங்கள அரசியல்வாதியுமான அனுரவின் பேட்டியை கேட்டுப்பாருங்கள்.

இந்த காணொளியை நுணாவிலான் வேறொரு திரியில் இணைத்திருந்தார்

பல மொழிகளை பேசி, அபிவிருத்திகளை காட்டி மக்களை ஏமாற்றுவது நீடித்து நிற்கக்கூடியதல்ல. மாறாக மக்களின் தேவைகள், இழப்புகள், பாதிப்புக்களை இனங்கண்டு மனந்திருந்தி,  மன்னிப்பு கேட்டு, பரிகாரம் செய்து அந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதபடி உறுதி செய்வதே அரசின் பொறுப்பு. பேசுவதோடு கடமை முடிவதில்லை, மக்களின் நிஞாயமான ஆசைகளை வெளிகொண்டுவந்து தீர்த்து வைப்பதே மக்களின் தலைவர்களின் கடமை. அனுரா நடந்த கொடுமைகள், அதற்கான காரணங்கள், தீர்க்கப்படவேண்டிய முறைகளை தொட்டுச்சென்றிருக்கிறார். அவரின் சொந்த அனுபவங்கள் அதை புரிந்துகொள்ள உதவியிருக்கின்றன. அதை அவர் அரசியலுக்கப்பால் செயலாற்ற முன்வரவேண்டும். அர்ச்சுனா சிங்கள மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முன்வரவேண்டும். அப்போதான் மாற்றம் வரும். வெறும் பாராளுமன்றத்திற்குள் வீர வசனம் பேசுவதால் மாற்றம் ஏற்படவோ, மக்கள் மத்தியில் நல்லிணக்கமோ வரப்போவதில்லை. அனுரா செய்வார். ஆனால் அவரோடு கூட இருப்பவர்கள், இனவாதத்தை வளர்த்து அரசியல் ருசி கணடவர்கள் அவரை அனுமதிக்கப்போவதில்லை. மக்களே  மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள்.  

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, putthan said:

இப்ப சிங்களவனிடம் தமிழன் அடிமைப்பட்டு சொந்த மொழியில முன்னுக்கு வந்தாலும் அவனில பிழை பிடிக்கினம் ...வெளிநாட்டு தூதுவர்களாக ஆங்கிலத்தில் வியாக்கியானம் பேசி என்னத்தை கண்டோம்.... 

உண்மை தான் அண்ணா

12 hours ago, putthan said:

அனுராவுக்கு ஆங்கில புலமை எப்படி?

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தது என்பதற்காக இலங்கை ஜனாதிபதியோ பாராளுமன்ற உறுப்பினரோ பிரிட்டனில் கல்வி கற்றிருக்க வேண்டியது இல்லை.

9 hours ago, zuma said:

மருத்துவர் அருச்சுனா தனது விசில் அடிச்சான் குஞ்சுகளுக்கு உரையாற்றியுள்ளார்( play to the gallery). மலையக மக்களை இந்திய வம்சாவளியினர் என விழித்து அவர்களை அவமதித்து உள்ளார், இலங்கையில் உள்ள கிட்டதட்ட அனைவருமே இந்திய வம்சாவளியினர் ஆவார்கள்.

உண்மை தான்  Zuma. விசில் அடிச்சான் குஞ்சுகளை குசிபடுத்துவதே அவரது செயற்பாடாக இருக்கபோகின்றது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

உண்மை தான்  Zuma. விசில் அடிச்சான் குஞ்சுகளை குசிபடுத்துவதே அவரது செயற்பாடாக இருக்கபோகின்றது.

கவனம் லண்டனில் உள்ள ஒர் யூ டியுப் அடிப்பொடி  (சிங்கள அடியான்) க்கு தெரிந்தால் எங்களை வறுத்தெடுத்து விடுவார்.... 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, satan said:

 பாதிப்புக்களை இனங்கண்டு மனந்திருந்தி,  மன்னிப்பு கேட்டு, பரிகாரம் செய்து அந்த நிகழ்வுகள் மீண்டும் நிகழாதபடி உறுதி செய்வதே அரசின் பொறுப்பு. பேசுவதோடு கடமை முடிவதில்லை, .  

மன்னிப்பு கேட்டா அவர் அடுத்த தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை..சிங்கள புத்திஜீவிகள்/மற்றும் ஜெ.வி.பி அரசியல்வாதிகள் யாழ் நூலக எரிப்பை பற்றி ,மேடைக்கு மேடை.வீட்டுக்கு வீடு பேச தாயார் ஆனால் இனக்கலவரங்கள்,மற்றும் இனவிடுதலைக்காக போராடியவர்களின் உயிர் இழப்பை பற்றி பேச தயார் இல்லை ..அதை பகிரங்கமாக கூறவும் மாட்டார்கள் ...சில சமயம் தமிழ் இனத்தை முற்றாக அந்த மண்ணில் இருந்து துடைத்தெரிந்த பின்பு ,மீண்டும் தமிழ் இனம் அந்த மண்ணில்(வடக்கு கிழக்கில்) உயிர்ப்புடன் செயல் படாத நிலை ஏற்பட்ட பின்பு சிங்கள ஜனதாவின் முன்றாம் நாங்காம் தலை முறை சிங்களத்தில் மன்னிப்பு கேட்பார்கள் ....அதை அடையாளங்களை தொலைத்த தமிழர்கள் சிங்கள மொழியில் புரிந்து கொள்வார்கள்....
வெளிநாடுகளின் பூர்வீக குடிகளிடம் ஆக்கிரமிப்பாளர்களின் தற்போதைய த‌லைமுறையினர் ஆங்கிலத்தில் மன்னிப்பு கேட்பது போல... 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, putthan said:

எல்லாம் மாறும். விடுதலைப்போர் முடிவுக்கு வந்தபின், மஹிந்த கோஷ்டியை யாரும் அசைக்க முடியாது என்கிற நிலையே இருந்தது. இப்போ, அவர்களால் இனி அரசியல் கதிரை ஏற முடியுமா என்பதே கேள்வி. பெரும்பான்மையோடு கம்பீரமாக ஆட்சியேற்ற கோத்தா அந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்படுவார் என்பதை நினைத்துப்பார்க்க முடிந்ததா? ஆனால் அந்த வரலாற்று அவமானம் நிகழ்ந்தது. மக்களோடேயே நாம் பேச வேண்டும், நமது கோரிக்கைகளை அவர்கள் பக்கம் வைக்க வேண்டும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/12/2024 at 20:11, putthan said:

கவனம் லண்டனில் உள்ள ஒர் யூ டியுப் அடிப்பொடி  (சிங்கள அடியான்) க்கு தெரிந்தால் எங்களை வறுத்தெடுத்து விடுவார்.... 

சிங்கள அடியான் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக காணொளியில் அடிச்சுவிடுகிறாராம் காரணம் புலம் பெயர் அர்ச்சுனா ஆதரவாளர்களை எல்லாம் கூட்டோடு அள்ளி கொண்டு அநுரகுமார திசாநாயக்கவின் பக்கம் கொண்டு செல்வதற்காகவாம்.  புலனாய்வு தகவல் தெரிவிக்கின்றன.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிங்கள அடியான் அர்ச்சுனாவுக்கு ஆதரவாக காணொளியில் அடிச்சுவிடுகிறாராம் காரணம் புலம் பெயர் அர்ச்சுனா ஆதரவாளர்களை எல்லாம் கூட்டோடு அள்ளி கொண்டு அநுரகுமார திசாநாயக்கவின் பக்கம் கொண்டு செல்வதற்காகவாம்.  புலனாய்வு தகவல் தெரிவிக்கின்றன.

ஓ ஓ ...விசயம் அதுவா?..ம்ம்ம்...லண்டனிலிலிருந்து யூ டியுப் பை தொழிலாக கொண்டு வாழ்வது என்பது இலகுவான காரியம் அல்ல...ஏதோ பிழைச்சு போகட்டும் 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, putthan said:

ஓ ஓ ...விசயம் அதுவா?..ம்ம்ம்...லண்டனிலிலிருந்து யூ டியுப் பை தொழிலாக கொண்டு வாழ்வது என்பது இலகுவான காரியம் அல்ல...ஏதோ பிழைச்சு போகட்டும் 

🤣................

உங்களின் எழுத்து ஒரு தனிவகை.................👍.

இந்த யூடியூப்காரர்கள் அர்ச்சுனா, அநுர அலை முடிந்தவுடன், வேற ஏதாவது ஒன்றை முன்னுக்கு கொண்டுவந்து நிற்பாட்டுவார்கள்.............. நியாய தர்மம் பார்க்காமல்.............

சமீபத்தில் இந்தியாவில் ஒரு கணவன் - மனைவி யூடியூப்பர்கள் தங்களின் தளத்திற்கு ஆதரவு குறைந்தவுடன் தற்கொலை செய்துகொண்டனர். அது போல ஏதாவது முடிவுகளை இவர்களும் எடுக்காவிட்டால் சரிதான்..........

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ரசோதரன் said:

🤣................

உங்களின் எழுத்து ஒரு தனிவகை.................👍.

இந்த யூடியூப்காரர்கள் அர்ச்சுனா, அநுர அலை முடிந்தவுடன், வேற ஏதாவது ஒன்றை முன்னுக்கு கொண்டுவந்து நிற்பாட்டுவார்கள்.............. நியாய தர்மம் பார்க்காமல்.............

சமீபத்தில் இந்தியாவில் ஒரு கணவன் - மனைவி யூடியூப்பர்கள் தங்களின் தளத்திற்கு ஆதரவு குறைந்தவுடன் தற்கொலை செய்துகொண்டனர். அது போல ஏதாவது முடிவுகளை இவர்களும் எடுக்காவிட்டால் சரிதான்..........

தற்கொலை செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல லண்டன் கனக துர்க்கா அம்மன் அருள் புரியட்டும்...
யூ டியுப் ,டிக்டொக் தொல்லை தாங்க முடியவில்லை...தடி எடுத்தவன் சண்டியன் என்ட மாதிரி கமரா வைத்திருப்பவன் எல்லாம் டிக்டொக்,யூ டியுப் ஜாம்பவான்கள்

On 8/12/2024 at 11:39, satan said:

எல்லாம் மாறும். விடுதலைப்போர் முடிவுக்கு வந்தபின், மஹிந்த கோஷ்டியை யாரும் அசைக்க முடியாது என்கிற நிலையே இருந்தது. இப்போ, அவர்களால் இனி அரசியல் கதிரை ஏற முடியுமா என்பதே கேள்வி. பெரும்பான்மையோடு கம்பீரமாக ஆட்சியேற்ற கோத்தா அந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்படுவார் என்பதை நினைத்துப்பார்க்க முடிந்ததா? ஆனால் அந்த வரலாற்று அவமானம் நிகழ்ந்தது. மக்களோடேயே நாம் பேச வேண்டும், நமது கோரிக்கைகளை அவர்கள் பக்கம் வைக்க வேண்டும்.

நிச்சயமாக பேச வேண்டும் ..அதில தப்பில்லை...ஆனால் எத்தனை தடவை எம்மவர்கள் பேசினார்கள் பலன் பூச்சியம் அதனால மக்கள் விரக்தி நிலையில் உள்ளார்கள்....இவர்களுடனும் பேசட்டும்...நல்லது நடக்கட்டும்...நாட்டுக்கு நல்லது நடக்க வேணுமென்றால் தேசிய இனங்கள் அங்கிகரிக்கப்பட் வேணும் ..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, putthan said:

யூ டியுப் ,டிக்டொக் தொல்லை தாங்க முடியவில்லை...தடி எடுத்தவன் சண்டியன் என்ட மாதிரி கமரா வைத்திருப்பவன் எல்லாம் டிக்டொக்,யூ டியுப் ஜாம்பவான்கள்

யூரியூப் ரிக்ரொக் இலையான்களின் தொல்லை தாங்கமுடியவில்லை.ஏதோ தாங்கள் பிபிசி சிஎன் என் எண்ட நினைப்பில திரியினம். நடக்கேலாத வயோதிபர்களும் யூரியூப் ஸ்டார் ஆக மாறீட்டினம்.

  • Haha 1

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.