Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் !

image
 
ஒரு கிலோ நாட்டரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இது தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நாட்டில் நெடுஞ்சாலைத் துறைக்காகவே அதிகளவில் முதலீடு செய்யப்படுவதாகவும், அடுத்து நீர்ப்பாசனத் துறைக்கும் விவசாயத் துறைக்குமே அதிக முதலீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, விவசாயிகளுக்கே அதிக நிவாரணங்கள் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்தார்.

நெல் கொள்வனவிற்காக வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுவதாகவும் அதனால் மக்களின் அரிசியை நுகரும் உரிமையில் கைவைக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதன்படி அரிசி விலைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நாடு அரிசி ஒரு கிலோ மொத்த விலை 225 ரூபா. சில்லறை விலை 230 ரூபா

வெள்ளை அரிசி மொத்த விலை 215 ரூபாய். சில்லறை விலை 220 ரூபா

இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி கிலோ 220 ரூபா

சம்பா அரிசி மொத்த விலை 235 ரூபா. சில்லறை விலை 240 ரூபா

கீறி சம்பா அரிசி மொத்த விலை 255 ரூபா. சில்லறை விலை 260 ரூபா

அதேபோல் நாளாந்தம் அரிசி ஆலைகளிலிருந்து வெளிவரும் அரிசியின் அளவினைக் கணக்கிடுமாறும் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தார்.

அதேபோன்று அரிசி தொடர்பான பிரச்சினைகளை அரசாங்கத்துடன் சுமூகமாக தீர்த்துக் கொள்ளுமாறும் அரிசி வர்த்தகர்களிடம் ஜனாதிபதி கோரினார்.

வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்திக குமாநாயக்க, வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.விமலேந்திரராஜா,விவசாய,கால்நடைகள்,காணி, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ.விக்ரமசிங்க,அபிவிருத்தி நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மலர்மதி கங்காதரன், விவசாய திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ்.கே.வாசல,நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஏ.எம்.யூ.பின்னலந்த, ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆய்வு மற்றும் பயிற்சி நிலையத்தின் பணிப்பாளர் ஏ.எல்.சந்திக்க ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.

  •  
  • கருத்துக்கள உறவுகள்

கார் லைசென்ஸை பிடிக்கின்றேன், பார் லைசென்ஸை பிடிக்கின்றேன் என்ற படங்கள் எல்லாம் தியேட்டரிலிருந்து ஒரு வாரத்திலேயே ஓடி விடும்............... ஆனால் அரிசிப் பிரச்சனை தெய்வம் போல........... நின்று கொல்லும்................🤣.

அரிசியை உடனடியாக இறக்கிக் கொடுங்கப்பா.............. சந்தையில் இல்லாத அரிசிக்கு நீங்கள் என்ன கட்டுப்பாட்டு விலையைப் போட்டால் என்ன, போடாவிட்டால் என்ன...............

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

இவர் விளையாடிய துருப்பு சீட்டை ..இவருக்கே பாவித்தாலும் பாவிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

எடுத்தோம் கவுத்தோம் என இதில செயல்பட முடியாது, ஏற்கனவே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விட்டது என தெரிந்தவுடன் அரிசி மொத்த வர்த்தகம் செய்யும் பெரிய முதலாளிகள் அரிசினை பதுக்குவார்கள் என்பதற்காகத்தான் அரிசி இறக்குமதி, விலைக்கட்டுப்பாடு என இப்படி அறிவுப்புகள் வருகின்றன.

ஏற்கனவே நட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு இறக்குமதி செய்யும் அரிசியினால் மேலும் நட்டம் ஏற்படும் ஆனால் அதே நேரம் அர்சி விலை ஏறினால் இந்த அரசிற்கு அது ஒரு அரசியல் தற்கொலையாக முடியும் இரு தலை கொள்ளி எறும்பின் நிலையில் இந்த அரசுள்ளது.

ஆனால் உடனடி பிரபலத்திற்காக அரிசி இறக்குமதி அரிசி விலைக்கட்டுப்பாடு என போனால் உள்நாட்டு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும், அதனால் நீண்டகால அடிப்படையில் பொருளாதார பாதிப்பு ஏற்படுவதனை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முற்படுவதுடன் விலை கட்டுப்பாட்டினை கொண்டு வரும் நோக்கில் மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இறக்குமதியினை மேற்கொள்ளவேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறு நிகழாதவாறு அரிசி களஞ்சியங்களை உருவாக்கி அதிக உற்பத்தி நிகழும் காலப்பகுதியில் ஏற்படும் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாமல் அடிப்படை விலையில் அரிசியினை கொள்வனவு செய்து அதனை களஞ்சியப்படுத்தி அரிசி தட்டுப்பாட்டு காலத்தில் அதனை வினியோகிப்பதன் மூலம் விலையினை சீராக பேணுவதற்காகான அடிப்படை சந்தைப்படுத்தும் கட்டமைப்பில் அரசு மூலதன செலவீடுகளை செய்ய முன்வரவேண்டும்.

நீண்ட கால அடிப்படை திட்டத்துடன் அரசு செயற்பட முன் வரவேண்டும், அரசு திட்டமிட்ட முறையில் அரிசி கையிருப்பை பேணவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, putthan said:

இவர் விளையாடிய துருப்பு சீட்டை ..இவருக்கே பாவித்தாலும் பாவிக்கலாம்

குமார் குணரட்ணம் எப்போதும் தயாராகவே இருக்கின்றார்.............. காலிமுகத் திடலில் ஒரு மாதம் கூடாரம் அடிக்க..............

இந்தச் சைனாக்காரப் பயல்களுக்கு வெறும் வாய் தான்............. இந்த நேரத்தில் கப்பல் கப்பலாக பச்சை அரிசியை அனுப்பி வைக்கலாம் தானே..................

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ரசோதரன் said:

குமார் குணரட்ணம் எப்போதும் தயாராகவே இருக்கின்றார்.............. காலிமுகத் திடலில் ஒரு மாதம் கூடாரம் அடிக்க..............

இந்தச் சைனாக்காரப் பயல்களுக்கு வெறும் வாய் தான்............. இந்த நேரத்தில் கப்பல் கப்பலாக பச்சை அரிசியை அனுப்பி வைக்கலாம் தானே..................

விலைப்படாமல் இருக்கிறா பிளாஸ்டிக் அரிசியையும் தட்டிவிட  நல்ல சந்தர்ப்பம்..சீனாக்காரனட்டை சொல்லிவிடுங்கப்பா

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரசோதரன் said:

குமார் குணரட்ணம் எப்போதும் தயாராகவே இருக்கின்றார்.............. காலிமுகத் திடலில் ஒரு மாதம் கூடாரம் அடிக்க..............

இந்தச் சைனாக்காரப் பயல்களுக்கு வெறும் வாய் தான்............. இந்த நேரத்தில் கப்பல் கப்பலாக பச்சை அரிசியை அனுப்பி வைக்கலாம் தானே..................

குமார் குணரெட்ணம் தெமிளு...என்ன தான் சிறிலங்கன் எண்டு புலம்பினாலும் இந்த விடயத்தில் அனுராவும் விட்டு கொடுக்க மாட்டார் உடனே இனவாதம் பேசி ஆட்சியை தக்க வைப்பார்...

சைனாக்காரன் நேரடியாக பருத்திதுறையில் இறக்க பார்க்கிறான் போல...

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

விலைப்படாமல் இருக்கிறா பிளாஸ்டிக் அரிசியையும் தட்டிவிட  நல்ல சந்தர்ப்பம்..சீனாக்காரனட்டை சொல்லிவிடுங்கப்பா

ஓ.............. அந்த அரிசியா................ அதை இணையத்தில் மட்டுமே வாங்கி, சமூக ஊடகங்களில் மட்டுமே சமைத்துச் சாப்பிடமுடியும்.................................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

ஓ.............. அந்த அரிசியா................ அதை இணையத்தில் மட்டுமே வாங்கி, சமூக ஊடகங்களில் மட்டுமே சமைத்துச் சாப்பிடமுடியும்.................................🤣.

இதை இணை அரிசி என்றும் சொல்லலாமே....😃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முற்படுவதுடன்

2 hours ago, vasee said:

அரிசி களஞ்சியங்களை உருவாக்கி அதிக உற்பத்தி நிகழும் காலப்பகுதியில் ஏற்படும் விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு நட்டம் ஏற்படாமல் அடிப்படை விலையில் அரிசியினை கொள்வனவு செய்து அதனை களஞ்சியப்படுத்தி அரிசி தட்டுப்பாட்டு காலத்தில் அதனை வினியோகிப்பதன் மூலம் விலையினை சீராக பேணுவதற்காகான அடிப்படை சந்தைப்படுத்தும் கட்டமைப்பில் அரசு மூலதன செலவீடுகளை செய்ய முன்வரவேண்டும்.

இதுகெல்லாம் டப்பு வேணுமே, டப்பு.

ஐ எம் பிடம் விவசாயிக்கு நிவாரணம் கொடுக்க பணம் கேட்டால் கிடைக்குமா?

5 hours ago, ரசோதரன் said:

சந்தையில் இல்லாத அரிசிக்கு நீங்கள் என்ன கட்டுப்பாட்டு விலையைப் போட்டால் என்ன, போடாவிட்டால் என்ன...............

அதே நாலு ரூபாய் சாப்பாட்டு சட்டம்🤣.

நான் நினைத்ததை விட விரைவாக நாட்டை போட்டடிப்பார்களோ?

அரிசி மாபியாவை வேறு பகைக்கிற மாரி போகுது கதை.

விரைவில் அதிகாரத்தின் அத்தனை பலங்களையும் பிரயோகிக்க வேண்டி வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

இவர் விளையாடிய துருப்பு சீட்டை ..இவருக்கே பாவித்தாலும் பாவிக்கலாம்

இப்படி அரசியை இறக்கி விலையை குறைத்து  விவசாயிகளின் வயிற்றில் அடித்தால் அனுராவை வழக்கமான அரசியல்வாதியாகவே பார்க்க தோணுது இவர்களின் ஆட்சியில் மக்களிடம் நல்லபெயர் வாங்க இப்படி அரசியல் செய்தால் மீட்சி என்பது கிடையாது இவ்வளவு காலமும் தமிழர் எதிர்ப்பு இனவாத போதையில் இருந்த சிங்களவர்கள் பழி சுமக்கத்தான் வேணும் இல்லையென்றால் எந்தபக்கமும் மூவ்  பண்ணினாலும் checkmate தான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, பெருமாள் said:

இப்படி அரசியை இறக்கி விலையை குறைத்து  விவசாயிகளின் வயிற்றில் அடித்தால் அனுராவை வழக்கமான அரசியல்வாதியாகவே பார்க்க தோணுது இவர்களின் ஆட்சியில் மக்களிடம் நல்லபெயர் வாங்க இப்படி அரசியல் செய்தால் மீட்சி என்பது கிடையாது இவ்வளவு காலமும் தமிழர் எதிர்ப்பு இனவாத போதையில் இருந்த சிங்களவர்கள் பழி சுமக்கத்தான் வேணும் இல்லையென்றால் எந்தபக்கமும் மூவ்  பண்ணினாலும் checkmate தான் .

ஒரு கட்சி ஆட்சியேற்ற பின் மூன்று மாதங்களுக்கு அதன் ஆட்சி பற்றி எவ்வித கருத்துக்களும் கூற முடியாது. இது உலக நியதி. ஆனால் இங்கு அனுர ஆட்சி பற்றி சாத்திரமும் வாஸ்துவும் கூறுகின்றார்கள். அவர் இனவாதிதான். ஆனால் ஆட்சி ஏற்ற பின் என்ன நிலையில் இருக்கின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அவர் இனவாதிதான். ஆனால் ஆட்சி ஏற்ற பின் என்ன நிலையில் இருக்கின்றார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தரின் போதி மரம் போல ஜனாதிபதி மாளிகையில் புதிதாக ஏதும் முளைத்திருக்க கூடும், அதன் கீழ் இருந்தபடியால்…

நேற்றுவரை இனவாதியாக இருந்தவர் இன்று இனவாதத்தை துறந்து விட வாய்புள்ளது. 

அப்படியா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இதுகெல்லாம் டப்பு வேணுமே, டப்பு.

ஐ எம் பிடம் விவசாயிக்கு நிவாரணம் கொடுக்க பணம் கேட்டால் கிடைக்குமா?

அதே நாலு ரூபாய் சாப்பாட்டு சட்டம்🤣.

நான் நினைத்ததை விட விரைவாக நாட்டை போட்டடிப்பார்களோ?

அரிசி மாபியாவை வேறு பகைக்கிற மாரி போகுது கதை.

விரைவில் அதிகாரத்தின் அத்தனை பலங்களையும் பிரயோகிக்க வேண்டி வரலாம்.

159   பேர் கை உயர்த்தினால் காணாது..கையிலை..காசில்லாட்டி கதை கந்தல்

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் திட்டமிட்டு அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது - அஜித் பி பெரேரா

08 Dec, 2024 | 01:07 PM

image

(எம்.மனோசித்ரா)

அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் திட்டமிட்டு நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அரிசி இறக்குமதி விவகாரத்திலும் பாரிய மோசடிக்கான திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.

தேவைக்கு அதிகமான அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் அடுத்த அறுவடையின்போது விவசாயிகளுக்கு நியாயமான விலையில் நெல்லை விற்பனை செய்ய முடியாத அபாயம் காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், அரிசி தட்டுப்பாடு, அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் ஏற்படுத்தப்பட்டவை ஆகும். 

இவர்கள் நெல் மற்றும் அரிசி என்பவற்றை மறைத்து வைத்திருக்கின்றனர். இவர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் அரிசியின் அளவை அரசாங்கத்தால் இலகுவாக கண்டுபிடிக்க முடியும்.

சில அதிகாரிகள் இந்த அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அடிபணிந்துள்ளதால் அல்லது அவர்களால் அரசாங்கத்துக்கு தவறான தகவல் வழங்கப்படுவதன் காரணமாகவே அதனை அரசாங்கத்தால் கணிப்பிட முடியாதுள்ளது. அரிசி தட்டுப்பாட்டை அரசாங்கத்தால் முகாமைத்துவம் செய்ய முடியும். அதற்கான தீர்வும் காணப்படுகிறது.

அதேபோன்று வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறப்படுவது சந்தேகத்துக்கிடமானதாக காணப்படுவதோடு ஊழல் மிக்கதாகவும் உள்ளது. 

அரிசியை இறக்குமதி செய்வதற்கான பணம் இந்த பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களாலேயே வழங்கப்படவுள்ளது. அரிசியைப் பதுக்கி தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ள அவர்களாலேயே அரிசியை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

இதன் பின்புலத்தில் பாரதூரமான பின்விளைவு ஏற்படும். அடுத்த அறுவடையின்போது நாட்டினுள் தேவைக்கதிகமான அரிசி காணப்பட்டால், விவசாயிகளுக்கு நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்காது. விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். 

எனவே, நாட்டுக்கு தேவையான அரிசியின் அளவு எவ்வளவு? அதனை விநியோகிப்பதற்கான வழிமுறை என்ன? எந்த வகை அரிசி தேவையாக உள்ளது? உண்மையில் அரிசி பதுக்கப்பட்டுள்ளதா? பதுக்கப்படாவிட்டால் அரிசிக்கு என்ன ஆயிற்று? என்பன குறித்து தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

அதனை விடுத்து அரசாங்கம் எதிர்க்கட்சியைப் போன்று செயற்படக்கூடாது. மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் உடனடியாக குறைக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்னர் தேசிய மக்கள் சக்தியின் கோஷமாக இருந்தது. உடனடியாக என்ற அந்த சொல்லை தற்போது 'இரண்டரை அல்லது மூன்று ஆண்டுகள்' என்று அர்த்தப்படுத்தியுள்ளனர். அரசாங்கம் மக்களை எந்தளவுக்கு ஏமாற்றியிருக்கிறது என்பது இதிலிருந்தே தெளிவாகிறது என்றார். 

  •  

https://www.virakesari.lk/article/200703
 
  • கருத்துக்கள உறவுகள்

சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் குற்றச்சாட்டு

December 8, 2024  08:04 am

சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களின் குற்றச்சாட்டு

அரிசியின் விலையை முன்னைய விலையை விட 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

அரிசியின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. நம் நாட்டில் அரிசி தொடர்பில் வர்த்தமானி விலையொன்று காணப்படுகிறது. பச்சை அரிசி கிலோ 210 ரூபாவாகவும், நாடு அரிசி கிலோ 220 ரூபாவாகவும், சம்பா கிலோ 230 ரூபாவாகவும், கீரி சம்பா 260 ரூபாவாகவும் இருந்தது. ஆனால் இன்று முதல் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய 3 அரிசி வகைகளுக்கு 10 ரூபா அதிகரிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அல்ல செய்திருக்க வேண்டும். விதிமுறைக்கு உட்பட்டு அரிசி விற்பனை செய்வது தொடர்பாக ஆராய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இன்று முதல் நுகர்வோர் அதிகாரசபை ஊடாக அரிசி சோதனைகள் ஆரம்பிக்கப்படும் என நம்புகின்றோம். அவ்வாறு செய்யாவிட்டால், இந்நாட்டு நுகர்வோர் பாரிய அநீதிக்கு உள்ளாக நேரிடும். அரிசியை 10 ரூபாவால் அதிகரித்து, அதனூடாக ஆலை உரிமையாளர்களின் இலாபத்தையும் 10 ரூபாவால் உயர்த்தும் நிலைமை இதுவாக இருக்கக் கூடாது. எனவே, நுகர்வோர் அதிகாரசபை இலங்கை முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் அரிசி ஆலைகளிலும் சோதனை நடத்தி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

https://tamil.adaderana.lk/news.php?nid=196985

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2024 at 09:46, goshan_che said:

இதுகெல்லாம் டப்பு வேணுமே, டப்பு.

ஐ எம் பிடம் விவசாயிக்கு நிவாரணம் கொடுக்க பணம் கேட்டால் கிடைக்குமா?

அதே நாலு ரூபாய் சாப்பாட்டு சட்டம்🤣.

நான் நினைத்ததை விட விரைவாக நாட்டை போட்டடிப்பார்களோ?

அரிசி மாபியாவை வேறு பகைக்கிற மாரி போகுது கதை.

விரைவில் அதிகாரத்தின் அத்தனை பலங்களையும் பிரயோகிக்க வேண்டி வரலாம்.

அரிசி மட்ட்டுமல்ல தேங்காய், வெங்காயம் என்பவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறதாக கூறுகிறார்கள் இதனை நிவர்த்தி செய்ய இறக்குமதி, மானியங்கள், சீரான வினியோகத்தின் மூலம் விலை உயர்வை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு அரசிற்கு பெருந்தொகை பணம் செலவாகும், தற்போதுள்ள இலங்கை  பொருளாதார நிலையில் இது சாத்தியமா?

ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள்  இலங்கை அரசிற்கு நன் கொடை வழங்குவதாக கூறப்படுகிறது, அதன் அளவு மிக சிறிதாக இருக்கிறது. இதில் இந்த நீண்டகால திட்டத்திற்கு அரசிற்கு பணம் திரட்டலில் சிக்கல் நிலவும், நான் நினைக்கிறேன் அரசு உடனடியாக அவசரகால பாதீட்டினை கொண்டு வரவேண்டும்.

இல்லாவிட்டால் நிலமை மோசமாகி விடலாம், தாமதித்தால் தவிக்க நேரிடலாம்.

புலம் பெயர் தமிழர்கள் இலங்கைக்கு தேவையான நிதியுதவியினை செய்வதன் மூலம் இந்த அரசிற்கும் இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் ஏற்பட போகும் பேரிடரினை தவிர்க்கலாம்.

 அதே நேரம் விவசாயிகளின் நலன், நாட்டின் நலன் என்பவற்றினை கருத்திற்கொண்டு செய்யப்படும் நீண்டகால திட்டங்களுக்கும் புலம் பெயர் தமிழர்களும் வெளிநாட்டின் நன் கொடையின் மூலம் அதற்கான  நிதியினை பெறலாம்.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடு தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற இந்த அரசினை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அரிசிக்கான அதிகப்பட்ச விலை நிர்ணயம் - வர்த்தமானி வௌியீடு

December 10, 2024  06:18 am

அரிசிக்கான அதிகப்பட்ச விலை நிர்ணயம் - வர்த்தமானி வௌியீடு

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை  215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் படி, ஒரு கிலோகிராம் உள்நாட்டு கிரிசம்பாவின் மொத்த விலை 255 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
https://tamil.adaderana.lk/news.php?nid=197070

  • கருத்துக்கள உறவுகள்

வரி செலுத்தப்பட்டால் அரிசி விடுவிக்கப்படும்

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலை தொடர்பான முக்கிய அறிவித்தல்!

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தலொன்று நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை 215 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோகிராம் உள்நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலோகிராம் உள்நாட்டு கீரிசம்பாவின் மொத்த விலை 255 ரூபாவாகவும், அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பச்சை அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபாவாகவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1411635

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.