Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!

சர்ச்சைக்குள்ளான சபாநாயகரின் கலாநிதி பட்டம்!

சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சையான விவாதம் உருவாகியுள்ளது.

அவர் உண்மையில் கலாநிதி பட்டம் பெற்றுள்ளாரா என்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் எனவும், இந்த சந்தேகத்தை அரசாங்கம் நீக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

சபாநாயகர் அசோக ரன்வல நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே, அவரைப் பற்றிய அறிமுகங்களில் கலாநிதி என்ற பட்டம் பயன்படுத்தப்பட்டது.

அவர் சபாநாயகரான பின்னரும், இலங்கை நாடாளுமன்ற இணையதளத்தில் அவரது பெயர் கலாநிதி அசோக ரன்வல என்று பதிவு செய்யப்பட்டது.

எனினும், அவருக்கு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட கலாநிதி பட்டம் வழங்கப்படவில்லை என பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதனால், அவரது கலாநிதி பட்டம் குறித்து விவாதம் உருவானது.

இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிப்பதாக சபாநாயகர் அசோக ரன்வல குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1411726

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

469862333_990953416402964_44943701232833

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் ஜப்பானிய பல்கலைகழகம் வெளியிட்டுள்ள தகவல் | Speaker Ashoka Sapumal Ranwala S Doctorate Issue

சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் ஜப்பானிய பல்கலைகழகம் வெளியிட்டுள்ள தகவல்.

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வெல (Ashoka ranwala), ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்வில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அசோக ரன்வெல, ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளது.

இந்நிலையில், அசோக சபுமல் ரன்வால என்னும் நபர் தமது பல்கலைகழகத்தில் கல்வி கற்கவில்லை என அப்பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார். 

 

பத்தாவது நாடாளுமன்றத்தின் 22ஆவது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். 

சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் தகவல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கை ஒன்றினை வெளியிடுவார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். 

இவற்றிற்கு மத்தியில் ஜப்பானிய பல்கலைக்கழகம் வழங்கிய இந்த தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/speaker-ashoka-sapumal-ranwala-s-doctorate-issue-1733840862?itm_source=parsely-api

  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகருடனான தொடர்புகளை இராஜதந்திர சமூகங்கள் புறக்கணிக்க வேண்டும் - கீதநாத் தெரிவிப்பு

11 DEC, 2024 | 03:59 PM
image
 

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் "கலாநிதி ” பட்டம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் வலியுறுத்தியுள்ளதாகவும்  சபாநாயகருடனான தொடர்புகளைப் பேணுவதை இராஜதந்திர சமூகங்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.

இது குறித்து கீதநாத் காசிலிங்கம் கூறுகையில்,

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவின் "கலாநிதி ” பட்டம் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியள்ளனர். சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுடன் தொடர்புகளைப் பேணுவதை இராஜதந்திர சமூகங்கள் புறக்கணிக்க வேண்டும்.

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனக்கு "கலாநிதி” பட்டம் கழங்கியதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் கலாநிதி பட்டம் பெறவில்லை. நாட்டின் சபாநாயகர் தனது தகுதிகளைத் தவறாகச் சித்தரித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுக்கள் உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தாம் நம்புவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

https://www.virakesari.lk/article/200998

  • கருத்துக்கள உறவுகள்

பதவி விலகுவாரா? அல்லது அனுர பதவி விலகச் செய்வாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

பதவி விலகுவாரா? அல்லது அனுர பதவி விலகச் செய்வாரா?

சபாநாயகர் பதவி... சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டும்.
அவராகவே... பதவி விலகினால், கௌரவமாக இருக்கும்.
"ஜவ்வு" மாதிரி இழுத்துக் கொண்டு இருந்தால்.. 
அனுர அரசு இந்தப் பிரச்சினையிலேயே, மல்லுக்கட்ட நேரம் சரியாக இருக்கும்.

ஏற்கெனவே... அரிசி, தேங்காய், உணவுப் பொருட்கள் என்று...  
விலைவாசி உயர்ந்து மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 
போதாக்குறைக்கு... இதுவும் சேர்ந்தால், 
ரணில் பரவாயில்லை என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை

11 DEC, 2024 | 05:39 PM
image

(நமது நிருபர்) 

பாராளுமன்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் விபரத் திரட்டு கோவையில் சபாநாயகர் அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

சபாநாயகர் அசோக்க ரன்வல தனது கலாநிதி பட்டத்தின் சான்றிதழை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும், அல்லது தவறை ஏற்றுக்கொண்டு கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும். 

நாட்டின் மூன்றாம் பிரஜையாக கருதப்படும் சபாநாயகர் ஒட்டுமொத்த மக்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் கடந்த வாரம் ' சபாநாயகர் தனது கலாநிதி பட்டம் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும்' என பதிவேற்றம் செய்திருந்தார்.

அதேபோல் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னின்று செயற்பட்ட ஒருசில பேராசியிர்கள் மற்றும் சிவில் அமைப்பினர்கள் சபாநாயகரின் கலாநிதி பட்டத்தை சவாலுக்குட்படுத்தி தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பியிருந்தனர்.

இவ்வாறான பின்னணில் பொது நிகழ்வில் ஒன்றில் கலந்துக் கொண்டிருந்த சபாநாயகர் அசோக்க ரன்வலவிடம் இவ்விடயம் குறித்து ஊடகங்கள் வினவிய போது தன்னிடம் இரண்டு கலாநிதி பட்டங்கள் இருப்பதாகவும், முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.

 சபாநாயகரின் கலாநிதி பட்டம் அரசியல் களத்தில் பிரதான பேசுபொருளானதன் பின்னர் பாராளுமன்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பாராளுமன்றத்தில் விபரகோவை பகுதியில் 'கலாநிதி கௌரவ அசோக்க ரன்வல' என்ற பதிவு நீக்கப்பட்டு 'கௌரவ சபாநாயகர் அசோக்க ரன்வல' என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சபாநாயகராக அசோக ரன்வல்ல தெரிவு செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற ஊடக பிரிவு 2024.11.21 ஆம் திகதியன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் 'அசோக்க ரன்வெல, மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தொடர்பில் இரசாயனவியல் தொடர்பான பொறியியல் பட்டத்தையும், ஜப்பானின் வஷேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொடர்பில் கலாநிதி பட்டத்தை முழுமைப்படுத்தியுள்ளதாக' குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பியதை தொடர்ந்து ஒன்று சபாநாயகர் தனது கலாநிதி பட்டத்துக்கான சான்றிதழை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

சபாநாயகர் அசோக்க ரன்வல ஜப்பான் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்ததாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.நாட்டு மக்களுக்கு தவறான கல்வி தகைமையை குறிப்பிட்டுள்ளமை ஒழுக்கமற்றது. ஆகவே சபாநாயகர் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும். 

நாட்டின் மூன்றாம் பிரஜையாக கருதப்படும் சபாநாயகர் நாட்டு மக்களுக்கு உண்மையுடன் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகர் தொடர்பான விபர படிவத்தில் சபாநாயகரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்தின் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கல்வி தகைமை குறித்து இன்னும் ஓரிரு தினங்களின் சபாநாயகர் அறிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/201001

  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது சபாநாயகரோ விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

அவர் உண்மையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய கலாநிதி பட்டம் பெற்றிருந்தால், இந்தக் கதைக்கு எந்த அர்த்தமும் இல்லை. ஆனால் அதற்கு பதில் தராமல் காலம் தாழ்த்தி வருவதும், அரசாங்கம் தரப்பில் பேசப்பட்ட ஊடகவியலாளர் செய்தியில் பதில் அளிக்காமல் இருப்பதும், கலாநிதி பட்டம் தொடர்பான விவகாரத்தை பாராளுமன்ற இணையதளத்தில் இருந்து நீக்கியதும் பெரும் சிக்கலைக் காண முடிகிறது. அவரது கலாநிதி பட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவுடன் நாங்கள் கலந்துரையாடப் போகிறோம். அப்படி நடந்தால், தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்களும் தங்கள் மனசாட்சிப்படி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது வாக்களிப்பார்கள் என்றார்.
 

https://thinakkural.lk/article/313594

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of text

 

 

May be an image of text

 

May be pop art of text

  • கருத்துக்கள உறவுகள்

கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சை : பாராளுமன்றத்துக்கு விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளார் சபாநாயகர்

12 DEC, 2024 | 05:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கலாநிதி பட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வல எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றத்துக்கு விசேட அறிவிப்பை விடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17), புதன்கிழமை (18) ஆகிய இரு தினங்களில் கூடவுள்ளது.

சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பில் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் பாரிய சர்ச்சை எழுந்துள்ளன. முடிந்தால் கலாநிதி பட்டத்தை பகிரங்கப்படுத்துங்கள் அல்லது பதவி விலகுங்கள் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  பகிரங்க சவால் விடுத்ததை தொடர்ந்து சபாநாயகரின் கல்வி தகைமை குறித்து அனைவரும்  கவனம் செலுத்தினர்.

சபாநாயகரின் கல்வி தகைமை குறித்த சர்ச்சை தீவிரமடைந்த நிலையில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகரின் சுயவிபரக் கோவையில் இருந்து கலாநிதி பட்டம் நீக்கப்பட்டு ' கௌரவ சபாநாயகர்' என்ற மரியாதைக்குரிய விழிப்பு மாத்திரம் சேர்க்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் தனது கல்வி தகைமையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குறிப்பிடுகின்ற நிலையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அவதானம் செலுத்தியுள்ளது.

சபாநாயகரின் கல்வி தகைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க, சபாநாயகர் அசோக்க ரன்வலவை காட்டிலும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் நேர்மையானவர். தனக்கு ஆங்கிலம் தெரியாது, புகையிரதத்தில் வடை விற்ற நிலையில் மக்களுக்கு சேவையாற்றி அரசியலுக்கு பிரவேசித்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாக சாமர சம்பத் பாராளுமன்றத்திலும், பொது இடங்களிலும் பலமுறை பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் அசோக்க ரன்வல இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டார். படித்தவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு மக்கள் இவ்வாறானவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்துள்ளார்கள் என்று அதிருப்தி வெளியிட்டார்.

தான் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் சபாநாயகர் அசோக்க ரன்வல மின்சார சபையின் தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தராக பணிபுரிந்தார். கலாநிதி பட்டம் உள்ளவர் தொழில்நுட்ப உத்தியோகஸ்த்தராக பணிபுரிய வேண்டிய அவசியம் கிடையாது. சபாநாயகர் விவகாரத்தில் விரைவான தீர்மானம் எடுக்க வேண்டும். நாட்டு மக்களும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/201105

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

தன்னிடம் இரண்டு கலாநிதி பட்டங்கள் இருப்பதாகவும், முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.

அவரிட்ட இரண்டு இருக்காம் ஒன்று ஜப்பான் கொடுத்தது மற்றது எது? அது தான் இது ...பகிடி மாதிரி ....

அனுரா இந்தியாவில் கலாநிதி பட்டம் ஒன்றை வாங்கி கொண்டு வந்து கொடுப்பார் ...

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒர் செயலை தமிழ் எம்.பி செய்திருந்தால் இந்த களம் போர்களமாக மாறியிருக்கும்...அந்த இனத்தின் போராட்ட கால வரலாற்றை துவசம் பண்ணவே வெளிக்கிட்டிருப்போம் .... ரஜனி(காந்த்)கஞ்சா அடிச்ச காலம் தொடக்கம் இன்று வரை 

  • கருத்துக்கள உறவுகள்

செய்தது அதி உத்தமர் அநுரகுமார திசாநாயக்கவின் சகா எல்லோ

அதி உத்தமராக தமிழர்களுக்கு காட்டபடும் அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் இப்படி பொய் பட்டங்கள் வைத்து மக்களை ஏமாற்றலாமா

15 minutes ago, putthan said:

அனுரா இந்தியாவில் கலாநிதி பட்டம் ஒன்றை வாங்கி கொண்டு வந்து கொடுப்பார் ...


ஓம் கொடுப்பார் இந்திய தமிழ்நாட்டு பாணியில் புரச்சி தளபதி என்ற ஒரு பட்டத்தை கொண்டு வந்து சபாநாயகரருக்கு வழங்குவார்

  • கருத்துக்கள உறவுகள்

சபாநாயகர் ஒரு பெரிய sabbatical leave ஆகப் போட்டு விட்டு, போய் எங்காவது பட்டம் பெற்றுக் கொண்டு வரலாம்.............

அவராகவே பதவி விலகினார் என்றால் அது முறை..............

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

செய்தது அதி உத்தமர் அநுரகுமார திசாநாயக்கவின் சகா எல்லோ

அதி உத்தமராக தமிழர்களுக்கு காட்டபடும் அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியில் இப்படி பொய் பட்டங்கள் வைத்து மக்களை ஏமாற்றலாமா


😅

😅தமிழ் தேசியவாதிகளே! எமது அதி உத்தம தோழரின் தோழர் செய்த சிறு தப்பை வைத்து நீங்கள் குளிர்காய வேண்டாம் ...உங்களுக்கு பட்டம் முக்கியமா? பணியாரம் முக்கியமா? பணியாரம் தான் முக்கியம்   ...உயிர் வாழ்வதற்கு...  காகிதத்தில் இருக்கும் பட்டத்தை வைத்து நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் ...தமிழ் தேசிவாதிகளே மீண்டும் உங்களுக்கு நான் சொலவது ஒன்றே ஒன்று பட்டத்தை வைத்து பட்டம் செய்து விளையாடலாம் ....ஆனால் விளையாடுவதற்கு சக்தி தேவை அதாவது பணியாரம் தேவை ...

இப்படிக்கு சிங்கள அடியான்😅 

  • கருத்துக்கள உறவுகள்
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல, முனைவர் பட்டம் பெற தமது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் அறிவித்தது.
சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல முனைவர் பட்டம் பெற ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சபாநாயகர் ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளதுடன், அவ்வாறானவொருவர் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
கொழும்பு 07 இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பத்தாவது பாராளுமன்றத்தின் 22வது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
அவர் உடனடியாக சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து்ள்ளார்.
“கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது தேசிய மக்கள் விடுதலை முன்னணியும், ஜனதா விமுக்தி பெரமுனாவும் பாராளுமன்றத்தை தூய்மைப்படுத்துவதற்கு மக்களிடம் ஆணையைக் கேட்டன. பாராளுமன்றத் தேர்தலின் போது கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு தலைமை தாங்கிய அமைச்சர் விஜித ஹேரத் வழங்கிய கையேட்டில், கம்பஹா வேட்பாளர் அசோக சபுமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் சின்ஜுகு வசேதா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதனை பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.
பாராளுமன்றம் இந்த நாட்டின் மிக உயர்ந்த ஸ்தாபனம். இந்த நாட்டின் நிலைப்பாடுகளின் படி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக சபாநாயகர் பதவி வகிக்கின்றார். பாராளுமன்றத்தில் உயர் அதிகாரிகள் குழு உள்ளது. இந்தக் குழுவில் இருந்துதான் அமைச்சுக்களின் செயலாளர்கள், தூதர்கள் நியமிக்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். சபாநாயகரே இந்த குழுவின் தலைவராகவும் உள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் அடுத்த வாரத்திற்குள் அறிக்கை வெளியிடுவார் என ஊடகப் பேச்சாளர் கூறியதை நாம் பார்த்தோம். ஆனால், பாராளுமன்றத் தேர்தலின்போது, எங்கள் கட்சியில் இருந்துதான் அறிஞர்கள் முன்வைக்கப்பட்டுள்ளனர் என ஊடகப் பேச்சாளர் கூறினார்,”
சபாநாயகர் தெரிவின் பின்னர், பாராளுமன்ற இணையத்தளத்தில் கௌரவ கலாநிதி அசோக சபுமல் ரன்வல என அவரது பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், நேற்று (09) குறித்த மருத்துவர் பகுதி நீக்கப்பட்டு கௌரவ அசோக சபுமல் ரன்வல என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேவேளை, இன்று (10) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில், சபாநாயகர் இதுவரை எந்த அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அவரது முனைவர் பட்டம், மற்றும் அவருக்கு முனைவர் பட்டம் இருக்கிறதா இல்லையா என்பதை அறிவிக்க வேண்டும்.
இது தொடர்பில் இன்னும் சில தினங்களில் சபாநாயகர் தெளிவான அறிவிப்பை வெளியிடுவார் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இங்கு தெரிவித்தார்.
“அவ்வப்போது, ஒவ்வொரு குழுவும் அந்தப் பிரச்சினையை எழுப்பி வருகின்றன. அந்த விடயங்களைச் சொல்ல அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம். சபாநாயகர் தரப்பில் பொறுப்பான அறிக்கை வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
சபாநாயகர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தகவல்கள் உண்மையாக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் கேட்டதற்கு, சபாநாயகர் தனது தகுதிகளை முன்வைத்த பின்னர் பார்ப்போம் என அமைச்சர் தெரிவித்தார்.
May be an image of 1 person and dais
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

அசோக்க ரன்வல தொடர்ந்து சபாநாயகராக இருக்க தகுதி அற்றவர், அவராக பதவிவிலக வேண்டும் அல்லது விலக்கப்படவேண்டும்.

இப்படித்தான் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கம் அவர்களும் கலாநிதி என்று சொன்னவர்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

சபாநாயகர் ஒரு பெரிய sabbatical leave ஆகப் போட்டு விட்டு, போய் எங்காவது பட்டம் பெற்றுக் கொண்டு வரலாம்.............

அவராகவே பதவி விலகினார் என்றால் அது முறை..............

ஆம் இதை நானும் கேள்விப்பட்டுள்ளேன் ரசோ. 2000 அல்லது ௨001 காலத்தில் நைஜீரியர் ஒருவருடன் வேலை செய்தேன். இவர் அமெரிக்காவில் degree mill    ஒன்றை ந்டத்துபவர். எந்த டிகிரியும் accredited இல்லை. ஆனால் வேலை அனுபவங்களை convert டிக்ரி செய்து degree கொடுப்பார்கள்.

இவை அமெரிக்கவில் சட்டரீதியானது, தொழில் வழன்குனோரினால் எற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறினார்

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்ள தயார்

சபாநாயகர் அசோக ரன்வலவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்தால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ளத் தயார் என  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவர உத்தேசித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டுமெனவும்  தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறான பதில் கிடைக்கும் என்பது பற்றி கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சபாநாயகரின் கூற்றினை கருத்திற் கொண்டு செயற்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு இது பொருத்தமான காலம் கிடையாது என பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி,  சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.

https://thinakkural.lk/article/313642

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

ஆம் இதை நானும் கேள்விப்பட்டுள்ளேன் ரசோ. 2000 அல்லது ௨001 காலத்தில் நைஜீரியர் ஒருவருடன் வேலை செய்தேன். இவர் அமெரிக்காவில் degree mill    ஒன்றை ந்டத்துபவர். எந்த டிகிரியும் accredited இல்லை. ஆனால் வேலை அனுபவங்களை convert டிக்ரி செய்து degree கொடுப்பார்கள்.

இவை அமெரிக்கவில் சட்டரீதியானது, தொழில் வழன்குனோரினால் எற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறினார்

👍......................

இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன. 

அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம்.

கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள்.

நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும்.

ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன.

ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே. 

ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான்.

ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம்.

அப்ப  எனக்கு ஒர் கலாநிதி பட்டம் பிளீஸ்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, putthan said:

அப்ப  எனக்கு ஒர் கலாநிதி பட்டம் பிளீஸ்

🤣...................

கட்டணம் எவ்வளவு என்று கேட்டுச் சொல்கின்றேன். அது சரி, உங்களுக்குக்காக கையெழுத்து போடப் போடும் மற்ற மூவரும் யார்....... நாலு பேர்களில் நான் ஒன்று............🤣.

ஊரில் அந்த நாட்களில் 'கலாநிதி ஸ்டோர்ஸ்' என்று ஒரு பலசரக்கு கடை இருந்தது.......... இந்தப் பட்டம் கொடுக்கும் வியாபாரத்திற்கு அது நல்ல தோதான பெயர்................😜.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

🤣...................

கட்டணம் எவ்வளவு என்று கேட்டுச் சொல்கின்றேன். அது சரி, உங்களுக்குக்காக கையெழுத்து போடப் போடும் மற்ற மூவரும் யார்....... நாலு பேர்களில் நான் ஒன்று............🤣.

ஊரில் அந்த நாட்களில் 'கலாநிதி ஸ்டோர்ஸ்' என்று ஒரு பலசரக்கு கடை இருந்தது.......... இந்தப் பட்டம் கொடுக்கும் வியாபாரத்திற்கு அது நல்ல தோதான பெயர்................😜.

ஊழல் அற்ற பட்டம் வேணும் ...லஞ்சம் கொடுப்பது வாங்குவது எல்லாம் நம்ம தோழருக்கு பிடிக்காது..😅

மிச்ச மூன்று பேரையும் யாழில் இலகுவாக எடுத்து போடுவேன் என்ட கிறுக்கல்கள் யாழில் ஒரு மாதத்தில் 500 பேருக்கு மேல பார்க்கினம் வெள்ளி விழா,வைர விழா எல்லாம் தாண்டி ஒடுது ...ஆகவே கலாநிதி பட்டத்திற்கு கையொப்பம் எடுப்பது   இலகுவான விடயம் என நினைக்கிறேன்....😅

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மை மக்களின் மதிப்பை பெற்ற கட்சிக்கு அசௌகரியம் ஏற்படுத்தாமல் தான் (சபாநாயகர்)பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக ஒரு செய்தி வந்துள்ளது. இருக்க, கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள்  எதை சாதித்தார்கள் கடந்த ஆட்சிகாலங்களில்? அவர்களின் தகுதியை யாராவது ஆராய்ந்தார்களா? கேள்விதான் கேட்டார்களா? முன்னாள் ஜனாதிபதி கோத்த ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவரா? எந்த தகுதியில் மக்கள் தெரிந்தெடுத்தார்கள்? அவர் வெளிநாட்டு குடியுரிமையை துறந்ததை உறுதிப்படுத்தாமலேயே தேர்தலில் நின்றார். அப்போ இந்த மஹிந்த தேசப்பிரிய அதை உறுதிசெய்யவில்லை சரி பாக்கவுமில்லை. நாடு எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய சபாநாயகரின் செயற்பாடுமொன்று. ஆனால் அவர் தான் பதவி விலகுவதாக அறிவித்து விட்டார், ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கப்படுமென கூறியுள்ளார். கூட்டம் கலைந்து செல்வதாக!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.