Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

14 டிசம்பர் 2024, 05:53 GMT
ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈவிகேஎஸ் இளங்கோவன்

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75. 

உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

''இளங்கோவன் வெளிப்படையாக பேசக்கூடிய ஒரு தைரியமான தலைவர். அவர் ஒருமித்த கருத்தை உருவாக்குபவர். காங்கிரஸ் கட்சி மற்றும் தந்தை பெரியாரின் முற்போக்கு கொள்கைகளை நிலைநிறுத்த தனது முழு வாழ்க்கையை அர்ப்பணித்தார். உறுதியான அர்ப்பணிப்புடனும் தமிழக மக்களுக்கு சேவை செய்தார்'' என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது இரங்கலை தெரிவித்துள்ளார்

அரசியல் பயணம்

மத்திய அமைச்சராக இருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்குடன் இளங்கோவன்

Getty Images

மத்திய அமைச்சராக இருந்தபோது பிரதமர் மன்மோகன் சிங்குடன் இளங்கோவன்

தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் குடும்பத்தில் இருந்த வந்த இளங்கோவன், பெரியார் ஈ.வெ.ராமசாமியின் பேரன்.

பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகன் ஈ.வெ.கி.சம்பத். திமுக, காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கட்சி என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த சம்பத்தின் மகன் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய இணை அமைச்சர் என பல பதவிகளை இளங்கோவன் வகித்துள்ளார்.

அவரது தந்தை ஈவிகே சம்பத்தின் மரணத்திற்கு பிறகு, இளங்கோவன் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் முக்கிய தமிழ் திரையுலக நடிகரும், ஈவிகே சம்பத்தின் நண்பருமான சிவாஜி கணேசனுடன் ஒன்றாக காங்கிரஸ் கட்சியில் பயணித்தார்.

1984 ஆம் ஆண்டு, அதிமுக – காங்கிரஸ் கூட்டணியில், சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்ட இளங்கோவன் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு சென்றார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுவரை இரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும்(சத்தியமங்கலம், ஈரோடு கிழக்கு ) ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்(கோபிசெட்டிபாளையம் தொகுதி,2004) வெற்றிபெற்றுள்ளார். இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியுள்ளார்.

இளங்கோவன் இருமுறை தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளார்.

கடந்த 2004–2009 காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய ஜவுளிதுறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார்

https://www.bbc.com/tamil/articles/clygqjp9k17o?at_campaign=ws_whatsapp

  • கருத்துக்கள உறவுகள்
Posted

470182703_9180461781976084_7530217659267559720_n.jpg?stp=dst-jpg_p480x480_tt6&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=vOhQXFi79XMQ7kNvgHmBnh_&_nc_zt=23&_nc_ht=scontent-fra3-1.xx&_nc_gid=A2O_eqgQ6Im8SKMYHRNXkqF&oh=00_AYBXuxrYfNGL6k2QqrUpN-W5JnGF75Q4XEOSiPROz4Nh9g&oe=676323E7

2006 - 2009 வரை  தமிழர் தாயகத்தில் வகை தொகையின்றி  சிறீலங்கா ராணுவத்தினரால் கொல்லப்பட்டபோது அதனை இந்தியாவில் நியாயப்படுத்தி அறைகூவித் திரிந்த இந்த நபர் இன்று மரணம்.

Kunalan Karunagaran

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னெண்டு என்ரை வாயால சொல்லுவன்.கொண்டாட்டத்தை நீங்களே போய் பாருங்கோ.அதில சொல்லியிருக்கிற கருத்துக்களையும் பாருங்கோ....😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

11 hours ago, கிருபன் said:

ஈவிகேஎஸ் இளங்கோவன்

Some people are going to leave a mark on this world while others will leave a stain.
Fleonor Bookerell

சிலர் வரலாற்றில் தம் முத்திரையை பதித்துச் செல்வார்கள். இன்னும் சிலர் வரலாற்றில் ஒரு அழுக்காக படிந்துவிடுவார்கள்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

சிலர் வரலாற்றில் தம் முத்திரையை பதித்துச் செல்வார்கள். இன்னும் சிலர் வரலாற்றில் ஒரு அழுக்காக படிந்துவிடுவார்கள்.

 ஒருவன் தன் மரணத்தில் அனுதாபங்களை சேகரிப்பது அவன் வாழ்ந்த வாழ்க்கையின் பெறுபேறுகள்.
தமிழினத்தை பொறுத்தவரை  சம்பந்தனின் மரணச்சடங்கும் இளங்கோவனின் மரணச்செய்தியும் இப்போதிருக்கும் தமிழின தலைவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வைரமுத்துவின் இரங்கல் பா...

10 பேர் கூட இல்லாத கடைசி ஊர்வலம் இளங்கோவன் செய்த கேவலமான செயல்களுக்கு இதுவே சாட்சி! ஒருவன் இறப்பில் தான் தெரியும் அவன் நல்லவனா கெட்டவனா என்று இதிலிருந்து தெரிகிறது இந்த இளங்கோவன் யார் என்று!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஒரு குழந்தையின் இறப்பில் மகிழ்சி கொள்ளும் ஒருவன் இருந்தும் பிணம் இறந்தும் பிணம்.

Edited by theeya
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 hours ago, தமிழ் சிறி said:

470182703_9180461781976084_7530217659267559720_n.jpg?stp=dst-jpg_p480x480_tt6&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=vOhQXFi79XMQ7kNvgHmBnh_&_nc_zt=23&_nc_ht=scontent-fra3-1.xx&_nc_gid=A2O_eqgQ6Im8SKMYHRNXkqF&oh=00_AYBXuxrYfNGL6k2QqrUpN-W5JnGF75Q4XEOSiPROz4Nh9g&oe=676323E7

2006 - 2009 வரை  தமிழர் தாயகத்தில் வகை தொகையின்றி  சிறீலங்கா ராணுவத்தினரால் கொல்லப்பட்டபோது அதனை இந்தியாவில் நியாயப்படுத்தி அறைகூவித் திரிந்த இந்த நபர் இன்று மரணம்.

Kunalan Karunagaran

இளங்கோவன் மரணத்தில் எந்த திருப்தியும் இல்லை, 

அவர் தன் வாழ்நாளை முழுமையாக வாழ்ந்துவிட்டே போயிருக்கிறார்.

ஆனால் பிறர் மகன் மரணத்தில் மகிழ்ந்த உன்னை உன் வாழ்நாளிலேயே உன் மகன் மரணத்தை காண வைத்தான் இறைவன் அதுதான் காலத்தின் மிக பெரும் பழிக்குபழி.

470182703_9180461781976084_7530217659267559720_n.jpg?stp=dst-jpg_p480x480_tt6&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=vOhQXFi79XMQ7kNvgHmBnh_&_nc_zt=23&_nc_ht=scontent-fra3-1.xx&_nc_gid=A2O_eqgQ6Im8SKMYHRNXkqF&oh=00_AYBXuxrYfNGL6k2QqrUpN-W5JnGF75Q4XEOSiPROz4Nh9g&oe=676323E7

எம் மரணத்தை கொண்டாடிய உன் மரணம் எமக்கு கொண்டாட்டம் அல்ல, எவர் மரணமும் எமக்கு இனிப்பானதல்ல.

ஆனால் உன் வார்த்தைகளால் நாம் சுமந்த வலியை உன் வாழ்நாளிலேயே நீயும் உன்  கண்முன்னே பார்த்து, அனுபவித்துவிட்டுத்தான் போனாய் என்பதில் அக மகிழ்ச்சி.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, குமாரசாமி said:

வைரமுத்துவின் இரங்கல் பா...

சின்மயி சர்ச்சை நேரம் தாங்களும், நாதமும் டயமண்ட் பேர்ளை என்னமா தாங்கினீர்கள் என எண்ணிப்பார்த்தேன்…

கண்கள் வியர்த்து விட்டன 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, goshan_che said:

சின்மயி சர்ச்சை நேரம் தாங்களும், நாதமும் டயமண்ட் பேர்ளை என்னமா தாங்கினீர்கள் என எண்ணிப்பார்த்தேன்…

கண்கள் வியர்த்து விட்டன 🤣

வைரமுத்துவின்ர  இரங்கல் பாவ வெட்டி ஒட்டினதுகூட  ஒரு குத்தமா? 😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, குமாரசாமி said:

வைரமுத்துவின்ர  இரங்கல் பாவ வெட்டி ஒட்டினதுகூட  ஒரு குத்தமா? 😁

குத்தம் இல்லை…

மலரும் நினைவுகள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 7 people and text

470203353_599271025922832_18819859955089

இளங்கோவன் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய சீமான். 😎
.
.
.
.
ஸ்ரார்ட் மியூசிக். 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

இளங்கோவன் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய சீமான். 😎

செத்தது உண்மையிலையே இளங்கோவன் தானா என செக்பண்ணி பார்க்க போயிருக்கலாம் எண்டது என்ரை கருத்து.... :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

செத்தது உண்மையிலையே இளங்கோவன் தானா என செக்பண்ணி பார்க்க போயிருக்கலாம் எண்டது என்ரை கருத்து.... :cool:

உண்மைதான்... தெலுங்கர்களை நம்ப முடியாது.
செத்த மாதிரி நடித்து, அனுதாபம் தேடக்கூடிய ஆட்கள்.
செந்தமிழன் சீமானுக்கும் அந்தச் சந்தேகம் வந்ததில் வியப்பு இல்லை. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

வைரமுத்துவின்ர  இரங்கல் பாவ வெட்டி ஒட்டினதுகூட  ஒரு குத்தமா? 😁

🤣

2 hours ago, goshan_che said:

குத்தம் இல்லை…

மலரும் நினைவுகள் 🤣

🤣 

எங்களுக்கும் பொழுது போகணுமில்லே....

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

செத்தது உண்மையிலையே இளங்கோவன் தானா என செக்பண்ணி பார்க்க போயிருக்கலாம் எண்டது என்ரை கருத்து.... :cool:

உங்கள் இருவருக்கும் மனம் வெம்புகிறது…

ஆனால் அதை பொது வெளியில் ஒத்து கொள்ள ஈகோ விடுகுதில்லை என்பது உங்கள் கருத்துக்களிலேயே தெரிகிறது…

@புலவர் மனநிலையும் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்.

@வீரப் பையன்26 என்ன புதிய, அரிய வகை முட்டுடன் வரப்போகிறார் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன்🤣.

————- 

கவுன்சிலிங் உதவி தேவை எனில் நான் தயார். முன்பு சம்-சும்-விக்கி யை ஆதாரித்து பின் நிலைமாறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்🤣.

2 hours ago, தமிழ் சிறி said:

உண்மைதான்... தெலுங்கர்களை நம்ப முடியாது.
செத்த மாதிரி நடித்து, அனுதாபம் தேடக்கூடிய ஆட்கள்.
செந்தமிழன் சீமானுக்கும் அந்தச் சந்தேகம் வந்ததில் வியப்பு இல்லை. 😂 🤣

பிகு

சீமானின் இந்த செயல் அவர் எப்படிபட்ட பச்சோந்தி என அறிந்தோருக்கு எந்த வியப்பையும் தராது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, goshan_che said:

கவுன்சிலிங் உதவி தேவை எனில் நான் தயார். முன்பு சம்-சும்-விக்கி யை ஆதாரித்து பின் நிலைமாறிய அனுபவத்தை பகிர்ந்துகொள்ளலாம்🤣.

பலரை நம்பி ஏமாந்த அனுபவத்தைப் போல சிலரை நம்பாமல் ஏமாறும் சந்தர்ப்பங்ளும் எதிர்காலத்தில் வரலாம்.
சீமான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் சம்பிரதாயத்திற்கு அதைத் செய்திருக்கலாம்.அவரது ஆதரவாளர்களும் தம்பிமார்களும் இதை விருமபமாட்டார்கள் என்பது உண்மை. இளங்கோவனுக்கு சம்பிரதாயத்துக்கு கூட சீமான் அஞ்சி செலுத்தாமல் விட்டிருந்தால்  எதிர்க்கட்சிகள் விமர்சிக்கலாம்.ஆதரவாளர்களும் கட்சிக்காரர்களும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.மற்றும் வயறு முத்துவின் கவிதையைப்பற்றி அலட்டிக்கொள்ள அவசியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர் ஏற்றுக்கொண்ட கொள்கை வேறு நாம் ஏற்றுக் கொண்ட கொள்கை வேறு சுரக்கமாக முடித்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நீண்ட காலம்  போராடி ஒரு இரண்டு தலைமுறையை இழந்து   ஈழத்தமிழர்களின்  political goal   இறுதியில்  அடைந்தது,  இப்படியாக முகநூல்களிலும் இணையத்திலும்  கிடைக்கும் சின்ன  சின்ன சந்தோசங்கள் மட்டுமே.  இதை வைத்து திருப்தி கொள்ள வேண்டியது தான்.  எஞ்சியது இது தான். 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.