Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

தமிழரசுக் கட்சியிலிருந்து சிலர் நீக்கப்படுவர்- எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு,  சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர் எனவும்  முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (14) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது கட்சிக்கு எதிராக போட்டியிட்டவர்களை  உடனடியாக கட்சியிலிருந்து நீக்குவதற்கு பொதுச் செயலாளருக்கு அதிகாரம் இருக்கிறது என மத்திய குழு ஏற்றுக் கொண்டுள்ளதாகவும்,  அதனை பொதுச்செயலாளர் எதிர் வரும் நாட்களில் செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்சிக்கும், கட்சியினுடைய வேட்பாளருக்கு எதிராகவும் செயல்பட்டமை தொடர்பில் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர்கள் கட்சியின் செயற்பாடுகளில் இருந்து இடை நிறுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த காலத்தில் அரசியல் உருவாக்கம் சம்பந்தமான விடயங்களில் தமிழரசு கட்சி தீர்க்கமான நிலைப்பாடுகளை எடுது்துள்ளது எனவும், தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழரசு கட்சி தமிழர்களுடைய பிரதான கட்சி எனவும்,   மக்கள் கொடுத்த அந்த ஆணையை மீறி தாம்  செயற்படப்போவதில்லை எனவும், தமது நிலைப்பாட்டோடு இணைந்து செயல்படுவதற்கு வருவார்களாக இருந்தால் தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1412326

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்... சுமந்திரன், இந்த வருட ஆரம்பத்தில்.... தமிழரசு கட்சியின் தலைவர் போட்டியில்,  தனது சொந்தக் கட்சிக்காரர்களாலேயே தோற்கடிக்கப்பட்டவர்.

சென்ற மாதம்  நடந்த தேர்தலில்.... சுயேட்சை வேட்பாளர்களான... 
அர்ஜுனா, கௌசல்யா
போன்றவர்கள் எடுத்த வாக்குகளை விட குறைவான 
வாக்குகளை எடுத்து
தாயக மக்களால் நிராகரிக்கப் பட்டவர்தான்... முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.   

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்... சுமந்திரனின், வாய்க் கொழுப்புக்குத்தான்... அவரை மக்களும், கட்சியும்  சேர்ந்து  தோற்கடித்து உள்ளார்கள் என்பதை உலகமே அறியும். 

மூஞ்சூறு  தான்போக வழியை காணேல்லை... விளக்குமாத்தை காவின கதையாய் இருக்கு.

இப்படியே... தொடர்ந்தால்...  இன்னும் நிறைய அவமானங்கள் காத்திருக்கு 

சென்ற தேர்தல் வாக்கு நிலவரம்: 
சிவஞானம் சிறீதரன் - 32,833 வாக்குகள்.
அர்ச்சுனா ராமநாதன்  20,487 வாக்குகள்.
கௌசல்யா  15,800 வாக்குகள்.

ஆபிரகாம் சுமந்திரன் 15,039 வாக்குகள். (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.)

இந்த லட்சணத்திலை மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றார்.
இனியாவது... பெற்ற தோல்விகளில் இருந்து உங்களை திருத்திக் கொள்ளப் பாருங்கள்.

நெடுகவும்... வாய்ச் சவடால், கைகொடுக்காது. 
திருந்தவில்லை என்றால்...  மக்கள் தகுந்த பாடம் படிப்பிப்பார்கள் மறவாதீர்கள்.

Edited by தமிழ் சிறி
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து சிலர் நீக்கப்படவுள்ளதோடு,  சிலர் இடைநிறுத்தப்படவுள்ளனர்

தமிழரசுக் கட்சியிலிருந்து சுமந்திரன் நீங்கிவிட்டால் அதுதேறி நலமாகி வீடுவந்து சேர்ந்துவிடும் என்ற உண்மை யாருக்கும் புரியவில்லையே!!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, Paanch said:

தமிழரசுக் கட்சியிலிருந்து சுமந்திரன் நீங்கிவிட்டால் அதுதேறி நலமாகி வீடுவந்து சேர்ந்துவிடும் என்ற உண்மை யாருக்கும் புரியவில்லையே!!

என்னைப் பொறுத்தவரை 

சுமந்திரன் வெளியே விடப்படக்கூடாதவர். எங்கள் பக்கத்திலேயே வைத்திருக்க வேண்டிய இருபக்கமும் கூரான ஆயுதம். வெளியே விட்டால் காலம் பதில் சொல்லும்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்... சுமந்திரன், இந்த வருட ஆரம்பத்தில்.... தமிழரசு கட்சியின் தலைவர் போட்டியில்,  தனது சொந்தக் கட்சிக்காரர்களாலேயே தோற்கடிக்கப்பட்டவர்.

சென்ற மாதம்  நடந்த தேர்தலில்.... சுயேட்சை வேட்பாளர்களான... 
அர்ஜுனா, கௌசல்யா
போன்றவர்கள் எடுத்த வாக்குகளை விட குறைவான 
வாக்குகளை எடுத்து
தாயக மக்களால் நிராகரிக்கப் பட்டவர்தான்... முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.   

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்... சுமந்திரனின், வாய்க் கொழுப்புக்குத்தான்... அவரை மக்களும், கட்சியும்  சேர்ந்து  தோற்கடித்து உள்ளார்கள் என்பதை உலகமே அறியும். 

மூஞ்சூறு  தான்போக வழியை காணேல்லை... விளக்குமாத்தை காவின கதையாய் இருக்கு.

இப்படியே... தொடர்ந்தால்...  இன்னும் நிறைய அவமானங்கள் காத்திருக்கு 

சென்ற தேர்தல் வாக்கு நிலவரம்: 
சிவஞானம் சிறீதரன் - 32,833
அர்ச்சுனா ராமநாதன்  20,487 வாக்குகள்.
கௌசல்யா  15,800 வாக்குகள்.

ஆபிரகாம் சுமந்திரன் 15,039 வாக்குகள். (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.)

இந்த லட்சணத்திலை மற்றவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றார்.
இனியாவது... பெற்ற தோல்விகளில் இருந்து உங்களை திருத்திக் கொள்ளப் பாருங்கள்.

நெடுகவும்... வாய்ச் சவடால், கைகொடுக்காது. 
திருந்தவில்லை என்றால்...  மக்கள் தகுந்த பாடம் படிப்பிப்பார்கள் மறவாதீர்கள்.

சும் கொடுத்த பேதி மருந்து  இன்னும் வேலை செய்கிறது. 

🤣

22 minutes ago, Paanch said:

தமிழரசுக் கட்சியிலிருந்து சுமந்திரன் நீங்கிவிட்டால் அதுதேறி நலமாகி வீடுவந்து சேர்ந்துவிடும் என்ற உண்மை யாருக்கும் புரியவில்லையே!!

முதலில் தமிழரசுக் கட்சியினரைக் கூரை ஏறச் சொல்லுங்கோ. வைகுண்டம் போவதைப் பற்றி பிறகு பார்க்கலாம். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

சும் கொடுத்த பேதி மருந்து  இன்னும் வேலை செய்கிறது. 

🤣

முதலில் தமிழரசுக் கட்சியினரைக் கூரை ஏறச் சொல்லுங்கோ. வைகுண்டம் போவதைப் பற்றி பிறகு பார்க்கலாம். 

🤣

தோற்றாலும் இவர் திருந்திற வாய்ப்பில்லையா?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாதவூரான் said:

தோற்றாலும் இவர் திருந்திற வாய்ப்பில்லையா?

அவர் ஒரு மனநிலை பிழைத்தவர் எப்படி திருந்துவார் ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, வாதவூரான் said:

தோற்றாலும் இவர் திருந்திற வாய்ப்பில்லையா?

நுணலையும் தன் வாயால் கெடும் என்பதற்கு சுமந்திரன் நல்ல உதாரணம். 

இனிமேல் சிலவேளை அடக்கி வாசிக்கலாம். 

🤣

31 minutes ago, பெருமாள் said:

அவர் ஒரு மனநிலை பிழைத்தவர் எப்படி திருந்துவார் ?

வீரத் தமிழன் பெருமாள் என்கிற உளவியலாளர்  Sigmund Freud கூறினால் சரியாகத்தான் இருக்கும்,.....🤣

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.