புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
By
ஏராளன்
in ஊர்ப் புதினம்
Share
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By கிருபன் · பதியப்பட்டது
மனோ உள்ளிட்ட நால்வர் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவியேற்பு! பத்தாவது பாராளுமன்றத்தில் நான்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிச் சபாநாயகர் கௌரவ (வைத்தியகலாநிதி) ரிஸ்வி சாலி அவர்கள் முன்னிலையில் இன்று (17) பதவிச் சத்தியம் செய்துகொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக கௌரவ அர்ஜுன சுஜீவ சேனசிங்க, கௌரவ முகம்மது இஸ்மாயில் முத்து முஹம்மது, கௌரவ மனோ கணேஷன் ஆகியோரும், புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ பைசர் முஸ்தாபா ஆகியோரும் பதவிச் சத்தியம் செய்துகொண்டனர். பிரதிச் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர்கள் கையொப்பமிட்டனர். கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றதுடன், அன்றைய தினம் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர். அதுவரை ஐக்கிய மக்கள் சக்திக்குக் கிடைத்த நான்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கவில்லை. கடந்த 12 ஆம் திகதி இந்தப் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டிருந்தது. இதற்கு அமைய நான்கு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவர் இன்றையதினம் பதவிச் சத்தியம் செய்தனர். அதேநேரம், புதிய ஜனநாயக முன்னணிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஒருவருடைய பெயர் அறிவிக்கப்படாதிருந்ததுடன், குறித்த பதவிக்கான பெயர் கடந்த 11ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டது. இதற்கு அமைய அக்கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ பைஸர் முஸ்தாபா இன்று பதவிச் சத்தியம் செய்துகொண்டார். இதற்கு முன்னர் கௌரவ அர்ஜுன சுஜீவ சேனசிங்க, கௌரவ மனோ கணேஷன் மற்றும் கௌரவ பைஸர் முஸ்தாபா ஆகியோர் இலங்கை பாராளுமன்றத்தின் உறுப்பினர்களாகப் பணியாற்றியுள்ளனர். -(3) http://www.samakalam.com/மனோ-உள்ளிட்ட-நால்வர்-பார/ -
By ஏராளன் · பதியப்பட்டது
பட மூலாதாரம்,RONNY SEN/BBC படக்குறிப்பு, புச்சுவுக்கு ஒன்பது வயதாகும் போது, அவர் பந்து என்று நினைத்த ஒரு பொருள், பயங்கரமான வெடிப்பை ஏற்படுத்தியது. கட்டுரை தகவல் எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ், நுபுர் சோனர் மற்றும் தனுஸ்ரீ பாண்டே பதவி, பிபிசி உலக சேவை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் குறைந்தது 565 குழந்தைகள் நாட்டு வெடிகுண்டுகளால் காயமடைந்துள்ளனர், உடல் உறுப்புகளை இழந்துள்ளனர், பார்வை இழந்துள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் என்று பிபிசி உலக சேவை புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொடிய பொருட்கள் என்ன, அவை மேற்கு வங்கத்தில், அரசியல் வன்முறையுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன? ஏன் பல வங்க குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்? 1996-ஆம் ஆண்டு மே மாதம், பிரகாசமான கோடைகாலத்தின் ஒரு காலை வேளையில், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு குடிசைப்பகுதியில் இருந்து ஆறு சிறுவர்கள், ஒரு குறுகிய சந்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றனர். ஜோத்பூர் பூங்காவின் நடுத்தர வர்க்க சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள அவர்களது குடிசைப்பகுதி, சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் என்பதால் அன்று விடுமுறை. ஒன்பது வயதான புச்சு சர்தார் என்ற சிறுவன், கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த தன் தந்தையைக் கடந்து அமைதியாகச் சென்றார். சிறிது நேரத்தில், பந்தைத் தாக்கும் கிரிக்கெட் மட்டையின் கூர்மையான சத்தம் குறுகிய சந்தின் வழியாக எதிரொலித்தது. அவர்களின் தற்காலிக ஆடுகளத்தின் எல்லைகளுக்கு வெளியே அடிக்கப்பட்ட பந்தை, அருகிலுள்ள ஒரு சிறிய தோட்டத்தில் சிறுவர்கள் தேடினர். அங்கு, ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில், ஆறு உருண்டையான பொருட்களை அவர்கள் கண்டனர். யாரோ விட்டுச்சென்ற கிரிக்கெட் பந்துகள் போல அவை காணப்பட்டன. கிரிக்கெட் பந்துகள் என்று நம்பி அவற்றை எடுத்துக்கொண்டு, சிறுவர்கள் மீண்டும் விளையாடத் திரும்பினர். பையில் இருந்த "பந்து" ஒன்று புச்சுவுக்கு வீசப்பட்டது. அவர் அதை தனது மட்டையால் அடித்தார். உடனே அங்கே பயங்கரமான வெடிப்பு நிகழ்ந்தது. சிறுவர்கள் பந்து என நினைத்த அந்த பொருள், உண்மையில் ஒரு வெடிகுண்டு. புகை வெளியேறியதும், அக்கம் பக்கத்தினர் வெளியே விரைந்தபோது, புச்சு மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் தெருவில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். அவர்களின் தோல் கருப்பாகி, உடைகள் கருகி, உடல்கள் கிழிந்த நிலையில் இருந்தன. கொந்தளிப்புக்கு மத்தியில், பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது. அத்தையால் வளர்க்கப்பட்ட, ஆதரவற்ற சிறுவரான ஏழு வயது ராஜு தாஸ் மற்றும் ஏழு வயதான கோபால் பிஸ்வாஸ் ஆகியோர் காயங்களால் இறந்தனர். மேலும் நான்கு சிறுவர்கள் காயமடைந்தனர். இந்த வெடிப்புச் சம்பவத்தால், புச்சு பலத்த தீக்காயங்களை அடைந்தார். அவரது மார்பு, முகம் மற்றும் வயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அவதிப்பட்டார். புச்சு ஒரு மாதத்திற்கும் மேல் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. அவர் வீடு திரும்பியதும், அவரது குடும்பத்தினரால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலவழிக்க முடியவில்லை. எனவே அவர் உடலில் சிக்கிக் கொண்டிருந்த சிறு உலோகத் துண்டுகளை அகற்ற சமையலறையில் பயன்படுத்தபடும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு குறைவு: எம்.பி தொகுதி குறையும் ஆபத்தை தாண்டியும் காத்திருக்கும் புதிய சவால் திண்டுக்கல் தீ விபத்து: 'புகைசூழ்ந்து கண்ணே தெரியவில்லை' - உயிர் பிழைத்தவர்கள் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு ஆப்ரிக்காவை விட மோசம்: இந்தியாவில் குழந்தை வளர்ச்சி குறைபாட்டிற்கு சாதி ஒடுக்குமுறையே காரணமா? ஆய்வில் புதிய தகவல் குறைந்த வருவாய் கொண்ட ஆண்களிடையே 'குழந்தையின்மை' அதிகமாக இருப்பது ஏன்? குண்டுகளால் கொல்லப்பட்ட அல்லது கடுமையாக காயமடைந்த பல குழந்தைகளில் புச்சுவும் அவரது நண்பர்களும் அடங்குவர். பல ஆண்டுகளாக மேற்கு வங்க மாநிலத்தில், அரசியலில் ஆதிக்கம் செய்ய வன்முறை போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில், வெடிகுண்டு தாக்குதலில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை. மேற்கு வங்கத்தின் இரண்டு முக்கிய செய்தித்தாள்களான ஆனந்தபஜார் பத்ரிகா மற்றும் பர்தாமன் பத்ரிகா ஆகியவற்றின் 1996 முதல் 2024 வரையிலான ஒவ்வொரு பதிப்பையும் மதிப்பாய்வு செய்து, குண்டுகளால் குழந்தைகள் காயமடைந்ததை அல்லது கொல்லப்பட்டதைக் கண்டறிய பிபிசி விரிவான புலனாய்வை நடத்தியது. நவம்பர் 10 வரை, குறைந்தது 565 பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்துள்ளோம். 94 குழந்தைகள் இறந்துள்ளனர் மற்றும் 471 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அதாவது சராசரியாக ஒவ்வொரு 18 நாட்களுக்கும் ஒரு குழந்தை வெடிகுண்டு வன்முறைக்கு பலியாகிறது. வெடிகுண்டுகளால் குழந்தைகள் காயமடைந்த சம்பவங்களை பிபிசி கண்டறிந்துள்ளது. இதுகுறித்த செய்திகள் அந்த இரண்டு செய்தித்தாள்களிலும் இடம்பெறவில்லை. எனவே உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம். இந்த சம்பவங்களில் 60% க்கும் அதிகமானவை குழந்தைகள் வெளியில் விளையாடும் போது நடந்துள்ளன. பொதுவாக தேர்தல்களின் போது எதிரிகளை பயமுறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் குண்டுகள் தோட்டங்கள், தெருக்கள், பண்ணைகள், பள்ளிகளுக்கு அருகில் கூட மறைத்து வைக்கப்பட்டிருந்தன. பிபிசியிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோர் ஏழைகளாக , வீட்டு உதவியாளர்களாக, தற்காலிக வேலை செய்பவர்களாக அல்லது பண்ணையில் வேலை செய்பவர்களின் குழந்தைகளாக இருந்தனர். அமெரிக்கா, ஜெர்மனியில் மாறும் நிலவரம்: 2025-ஆம் ஆண்டில் மக்களின் இடப்பெயர்வு எப்படி இருக்கும்?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிரியாவின் கோலன் குன்றுகளில் இஸ்ரேலியரை குடியமர்த்த நெதன்யாகு திட்டம் - அசத் வீழ்ந்த பிறகு என்ன நடக்கிறது?16 டிசம்பர் 2024 மேற்கு வங்கத்தில் வெடிகுண்டுகளின் வரலாறு 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலமான மேற்கு வங்கம், அரசியல் வன்முறையில் நீண்ட காலமாக சிக்கியுள்ளது. 1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, மேற்கு வங்கத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன. காங்கிரஸ் கட்சி இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தது. அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்தது. 2011 முதல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. 1960 களின் பிற்பகுதியில், நக்சலைட்டுகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே கடுமையான ஆயுத மோதலை, மேற்கு வங்கம் சந்தித்தது. பல ஆண்டுகளாக எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், குறிப்பாக தேர்தல் காலங்களில் எதிரிகளை அச்சுறுத்துவதற்கு , அரசியல் கட்சிகளால் குண்டுகள் முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகின்றன. "குண்டுகள் மோதல்களைத் தீர்ப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் நீண்ட காலமாக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்று நடந்து வருகிறது" என்று மேற்கு வங்க காவல்துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பங்கஜ் தத்தா எங்களிடம் கூறினார். பட மூலாதாரம்,RONNY SEN/ BBC படக்குறிப்பு, மேற்கு வங்காளத்தில் உள்ள வெடிகுண்டுகள் தற்போது சணல் கயிறுகளால் கட்டப்பட்டு, ஆணிகளைப் போன்ற சிறு உலோகத் துண்டுகள் மற்றும் கண்ணாடிகளால் அடைக்கப்பட்டுள்ளன. 1900 களின் முற்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் இருந்து , வங்காளத்தில் வெடிகுண்டு தயாரிப்பு முறை அதன் வேர்களைக் கொண்டுள்ளது. வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில், அது தொடர்பான விபத்துகள் பொதுவானவை: கிளர்ச்சியாளர் ஒருவர் தனது கையை இழந்தார், மற்றொருவர் வெடிகுண்டு சோதனையில் இறந்தார். அதன் பிறகு ஒரு கிளர்ச்சியாளர் பிரான்சில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் திறமையுடன் திரும்பினார். அவரது புத்தக குண்டில், வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்ட கேட்பரி கோகோ டின் இருக்கும். அவரது இலக்கான பிரிட்டிஷ் மாஜிஸ்திரேட் அதைத் திறந்திருந்தால், அவர் கொல்லப்பட்டிருப்பார். 1907-ஆம் ஆண்டு மிட்னாபூர் மாவட்டத்தில் முதல் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. கிளர்ச்சியாளர்கள் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்ததால், ஒரு மூத்த பிரிட்டிஷ் அதிகாரியை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டது. இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, முசாஃபர்பூரில் ஒரு மாஜிஸ்திரேட்டைக் கொல்ல குதிரை வண்டி மீது வீசப்பட்ட வெடிகுண்டு இரண்டு ஆங்கிலேயப் பெண்களின் உயிரைப் பறித்தது. "ஊரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப்பெரிய வெடிப்பு" என்று ஒரு செய்தித்தாள் இந்தச் சம்பவத்தை விவரித்தது. இந்த நிகழ்வு, குதிராம் போஸ் என்ற இளம் வயது கிளர்ச்சியாளரை ஒரு தியாகியாகவும், பல குழுக்களின் இந்திய புரட்சியில் முதல் ''சுதந்திரப் போராளியாகவும்'' மாற்றியது. 1908-ஆம் ஆண்டு தேசியவாதத் தலைவரான பாலகங்காதர திலகர், வெடிகுண்டுகள் வெறும் ஆயுதங்கள் அல்ல என்றும், வங்காளத்தில் இருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் ஒரு புதிய வகை "மாயக் கதை" அல்லது "மாந்திரீகத்தின்" ஒரு வடிவம் என்றும் எழுதினார். இன்று மேற்கு வங்கத்தில் பெட்டோ என்று அழைக்கப்படும் இந்த குண்டுகள் சணல் கயிறுகளால் சுற்றப்பட்டு, ஆணிகளைப் போன்ற சிறு உலோகத் துண்டுகள் மற்றும் கண்ணாடிகளால் அடைக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுகளை எஃகு கொள்கலன்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களிலும் அடைத்து வைக்கலாம். போட்டி மிகுந்த அரசியல் கட்சிகளுக்கு இடையிலான வன்முறை மோதல்களின் போது பிரதானமாக இவை பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில், அரசியல்வாதிகள் எதிரிகளை மிரட்டவும், வாக்களிக்கும் நிலையங்களை சீர்குலைக்கவும் அல்லது எதிரிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கவும் இந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் பெரும்பாலும் வாக்குச்சாவடிகளை சேதப்படுத்தவோ அல்லது அந்தப் பகுதிகளின் மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவோ இக்குண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து பிரேசிலுக்கு சென்று தேவாலயங்களில் பணியாற்றும் பாதிரியார்கள்2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் 'ஹாங்காங்' திட்டத்தால் இந்த தீவில் வாழும் மக்கள் கலக்கம் ஏன்?15 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RONNY SEN/ BBC படக்குறிப்பு, பௌலமி ஹால்டர் பூக்களை பறித்துக்கொண்டிருந்தபோது பந்து என்று நம்பிய ஒரு பொருளைக் கண்டார். பௌலமி ஹல்டர் போன்ற குழந்தைகள் இத்தகைய வன்முறைகளின் சுமைகளை சுமக்கிறார்கள். 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஏழு வயதான பௌலமி ஹல்டர், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் குளங்கள், நெல் வயல்கள் மற்றும் தென்னை மரங்கள் நிறைந்த கோபால்பூர் கிராமத்தில் காலை பிரார்த்தனைக்காக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார். கிராம சபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது. பக்கத்து வீட்டுக்காரரின் தண்ணீர் பம்ப் அருகே ஒரு பந்து கிடப்பதை பௌலமி பார்த்தார். "நான் அதை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். பௌலமி உள்ளே நுழைந்ததும், டீ குடித்துக் கொண்டிருந்த அவரது தாத்தா, பௌலமியின் கையில் இருந்த பொருளைப் பார்த்து உறைந்து போனார். " 'இது பந்து அல்ல - வெடிகுண்டு! தூக்கி எறி!' என்று அவர் சொன்னார். நான் அதைச் செய்யும் முன்பே, அது என் கையில் வெடித்தது." அந்த குண்டுவெடிப்பு கிராமத்தின் அமைதியைக் குலைத்தது. பௌலமியின் கண்கள், முகம் மற்றும் கைகளில் அடிபட்டது, அவரைச் சுற்றி குழப்பம் நிலவியதால் பௌலமி மயக்கமடைந்தார் . ''என்னை நோக்கி மக்கள் ஓடி வருவது எனக்கு நினைவில் உள்ளது. ஆனால், என்னால் மிகவும் குறைவாகவே பார்க்க முடிந்தது. எனக்கு எல்லா இடங்களிலும் அடிப்பட்டது." கிராம மக்கள் விரைவாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது காயங்கள் கடுமையாக இருந்தன. அவரது இடது கையை இழந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. ஒரு சாதாரண காலைப் பழக்கம் கெட்ட கனவாக மாறி, ஒரே ஒரு நொடியில் பௌலமியின் வாழ்க்கையை மாற்றிவிட்டது. பெங்களூரு பொறியாளர் தற்கொலை வழக்கில் அவரது மனைவி உள்பட 3 பேர் கைது - என்ன நடக்கிறது?15 டிசம்பர் 2024 OpenAI மீது குற்றம்சாட்டிய இந்திய வம்சாவளி கணினி ஆய்வாளர் திடீர் மரணம் - என்ன நடந்தது?15 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RONNY SEN/ BBC படக்குறிப்பு, ஏப்ரல் 2020 இல் சபீனா காதுன் கையில் ஒரு வெடிகுண்டு வெடித்தபோது அவருக்கு 10 வயதுதான். இது போன்ற சம்பவங்கள் பௌலமிக்கு மட்டும் நடக்கவில்லை. ஏப்ரல் 2020 இல் சபீனாவின் கையில் ஒரு வெடிகுண்டு வெடித்தபோது அவருக்கு 10 வயதுதான். இந்த சோகமான சம்பவம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நெல் மற்றும் சணல் வயல்களால் சூழப்பட்ட கிராமமான ஜித்பூரில் நடந்தது. அவர் ஆட்டை மேய்ச்சலுக்கு வெளியே அழைத்துச் சென்ற போது, புல்வெளியில் வெடிகுண்டு கிடந்ததை தற்செயலாக கவனித்தார். ஆர்வத்தால், சபீனா அதை எடுத்து விளையாட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அது சபீனாவின் கைகளில் வெடித்தது. "வெடிப்புச் சத்தம் கேட்டவுடனே நான் நினைத்தேன், இந்த முறை யார் பாதிக்கப்படப் போகிறார் ? சபீனா மாற்றுத்திறனாளியாகப் போகிறாரா?," என்று தான் நினைத்ததாக அவரது தாயார் அமீனா பீபி கூறுகிறார், அவரது குரல் வேதனையுடன் கனத்தது. "நான் வெளியில் அடியெடுத்து வைத்த போது, சபீனாவைக் கைகளில் ஏந்தியவர்களைக் கண்டேன். சபீனாவின் கையிலிருந்து சதை தெரிந்தது." சபீனாவின் கையை துண்டிக்க வேண்டிய நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டனர். வீடு திரும்பியதில் இருந்து, சபீனா தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப சவால்களை எதிர்கொண்டார். அவருடைய பெற்றோர் சபீனாவின் நிச்சயமற்ற எதிர்காலத்தை நினைத்து விரக்தியில் மூழ்கினர். இந்தியாவில் குறைபாடுகள் உள்ள பெண்கள் பெரும்பாலும் சமூக புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த குறைபாடு அவர்களது திருமணம் மற்றும் வேலை வாய்ப்புகளை பாதிக்கும். "என் கைகள் திரும்ப கிடைக்காது என என் மகள் அழுதுகொண்டே இருந்தாள்" என்கிறார் அமீனா. "உன் கை மீண்டும் வளரும், உன் விரல்கள் மீண்டும் வளரும்" என்று நான் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தேன்." சபீனா இப்போது கையின்றி வாழ்வதில் அன்றாட சவால்களை எதிர்கொள்கிறார். "நான் தண்ணீர் குடிக்கவும், சாப்பிடவும், குளிக்கவும், ஆடை அணியவும், கழிப்பறைக்குச் செல்லவும் சிரமப்படுகிறேன்." சினைப்பையில் நீர்க்கட்டி: டயட் மற்றும் ஊட்டச்சத்து மூலம் குணப்படுத்தலாம் என்ற சமூக ஊடக டிப்ஸ்களை நம்பலாமா?16 டிசம்பர் 2024 கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?16 டிசம்பர் 2024 குண்டுவெடிப்பில் இருந்து உயிர் பிழைத்த போதிலும், உடல் உறுப்பு இழப்பால் இத்தகைய குழந்தைகளின் வாழ்க்கை நிரந்தரமாக மாறிவிட்டது தற்போது 13 வயதாகும் பௌலமி செயற்கைக் கையைப் பெற்றுள்ளார். ஆனால் அதைப் பயன்படுத்த முடியவில்லை. செயற்கைக் கை, மிகவும் கனமாக இருந்ததாலும், பௌலமி விரைவாக வளர்ந்துவிட்டதாலும் அவரால் அதை பயன்படுத்த முடியவில்லை. தற்போது 14 வயதாகும் சபீனா, கண் பார்வை குறைபாட்டுடன் போராடுகிறார். அவரது கண்களில் இருந்து வெடிகுண்டு துண்டை அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் அதற்கான பணம் அவர்களிடம் இல்லை இப்போது புச்சுவுக்கு 37 வயதாகிறது. இந்தச் சம்பவத்தால் பயந்த புச்சுவின் பெற்றோர், அவரைப் பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்தனர். புச்சு பல ஆண்டுகளாக வெளியே செல்ல மறுத்து, சிறிய சத்தம் கேட்டால் கூட படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டார். அதன்பிறகு அவர் மீண்டும் கிரிக்கெட் மட்டையை எடுக்கவில்லை. அவரது குழந்தைப் பருவம் களவாடப்பட்டுவிட்டது. அவ்வப்போது கிடைக்கும் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகிறார். அவரது கடந்த காலத்தின் வடுக்களை சுமந்து வாழ்கிறார். ஆனால் , இன்னும் எல்லா நம்பிக்கையும் இழக்கப்படவில்லை. . பௌலமி, சபீனா இருவரும் ஒரு கையால் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டு பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இருவருக்கும் ஆசிரியர்களாகும் கனவு உள்ளது. புச்சு, ஐந்து வயதாகும் தனது மகன் ருத்ராவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். ஒரு காவல்துறை அதிகாரியாக சீருடை அணியும் வகையில் அவரது மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என புச்சு எதிர்பார்க்கிறார். செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல்15 டிசம்பர் 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RONNY SEN/ BBC படக்குறிப்பு, சபீனாவும் பௌலமியைப் போலவே ஒரு கையால் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டு ஆசிரியையாக வேண்டும் என்று கனவு காண்கிறார். கொடூரமான பல சம்பவங்கள் நடந்தபோதிலும், மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வன்முறை முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அரசியல் லாபத்திற்காக வெடிகுண்டுகளை பயன்படுத்துவதை எந்த அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்ளவில்லை. மேற்கு வங்கத்தில் உள்ள நான்கு முக்கிய அரசியல் கட்சிகள் நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ வெடிகுண்டுகளை தயாரிப்பதில் அல்லது பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதா என்று பிபிசி கேட்டதற்கு, ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் (டிஎம்சி) எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் (பிஜேபி) பதிலளிக்கவில்லை. தாங்கள் இதில் ஈடுபடுவதில்லை என கூறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ''சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ளோம். மனித உரிமைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில், குழந்தைகள் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்'' என தெரிவித்துள்ளது இந்திய தேசிய காங்கிரஸும் (INC) தேர்தல் ஆதாயத்திற்காக குண்டுகளைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்தது. மேலும் "அரசியல் அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை" என்றும் அக்கட்சி கூறியது. எந்தவொரு அரசியல் கட்சியும் இச்சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்காது என்றாலும், இந்த படுகொலைச் சம்பவங்கள் மேற்கு வங்க அரசியல் வன்முறை கலாசாரத்தில் வேரூன்றியுள்ளது என்பதில் சந்தேகமில்லை என பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் கூறினர். ''எல்லா முக்கியத் தேர்தலின் போதும் இங்கு வெடிகுண்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை நீங்கள் காண்பீர்கள்" என்று பங்கஜ் தத்தா கூறினார். "குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது சமூகத்தின் அக்கறையின்மை" என்று கூறினார் நவம்பர் மாதம் காலமான தத்தா. "குண்டுகளை வைத்தவர்கள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர். குண்டுகளை யாரும் அலட்சியமாக கைவிடக்கூடாது. இனி எந்த குழந்தைக்கும் இதுபோல் தீங்கு நடக்கக்கூடாது." என்று பௌலமி மேலும் கூறுகிறார். அமேசானின் இந்த 'கொதிக்கும் நதி' சூடாவது எப்படி? மனித குலத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன?14 டிசம்பர் 2024 கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 'என் மகனுக்கு என்ன செய்தார்கள் என்று பாருங்கள்' ஹூக்ளி மாவட்டத்தில் ஒரு மே மாதம் காலை, ஒரு குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள், பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை எதிர்கொண்டனர். இந்த வெடிப்பில் ஒன்பது வயதான ராஜ் பிஸ்வாஸ், கொல்லப்பட்டார் மற்றும் அவரது நண்பர் ஒரு கையை இழந்து, மாற்றுத்திறனாளியானார். மற்றொரு சிறுவன் கால் எலும்பு முறிவுகளுடன் உயிர் தப்பினார் . "எனது மகனை என்ன செய்துவிட்டார்கள் பாருங்கள்" என்று ராஜின் தந்தை தனது இறந்த குழந்தையின் நெற்றியை வருடியபடி அழுதார். ராஜின் உடல் புதைகுழியில் இறக்கப்பட்டபோது, அருகிலுள்ள தேர்தல் பேரணியில் இருந்து அரசியல் கோஷங்கள் காற்றில் ஒலித்தன: "வங்காளம் வாழ்க!" என்றும் "வாழ்க பெங்கால்!" என்றும் கூட்டத்தினர் கோஷமிட்டனர். அது தேர்தல் நேரம். மீண்டும், குழந்தைகள் அதற்கான விலையைக் கொடுத்துள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cge9qz35p8go -
By கிருபன் · பதியப்பட்டது
சீனாவின் ACWF துணைத் தலைவர், பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு! adminDecember 17, 2024 அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் (ACWF) துணைத் தலைவியான சாங் டோங்மேய், பிரதமர் ஹரிணி அமரசூரியவை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பரஸ்பர முயற்சிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார் சாங் டோங்மேய் மற்றும் அவரது தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர் அமரசூரிய, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவைப் பாராட்டியதுடன் பெண்களின் சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு ஆகியவற்றில் பகிரப்பட்ட சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மையமாகக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதில்இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong அவர்கள் உட்பட இலங்கை சீனத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கைக் குழுவில் பிரதமரின் செயலாளர் .பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு அமைச்சின் கிழக்கு ஆசியாவிற்கான பணிப்பாளர் நாயகம் ருவந்தி தெல்பிட்டிய மற்றும் கிழக்கு ஆசியப் பிரிவின் பணிப்பாளர் உதானி குணவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றியிருந்த்னர் https://globaltamilnews.net/2024/209370/ -
இந்திய முன்னணி வர்த்தகர்களுடன் ஜனாதிபதி! adminDecember 17, 2024 மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று (16.12.24) பிற்பகல் புதுடில்லியில் இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்திய கைத்தொழில் சம்மேளத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கலந்துரையாடலில் இந்தியாவின் முன்னணி தொழில் முனைவோர் கலந்து கொண்டனர். இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கையில் முதலீடு செய்யுமாறு இந்திய தொழில் முனைவோரிடம் கோரிக்கை விடுத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் அடிப்படையில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை விஸ்தரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கவனம் செலுத்த இந்திய முன்னணி வர்த்தகப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்ததுடன், அதற்குத் தேவையான முதலீட்டு வசதிகளை வழங்க இலங்கை அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது. தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவும் இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/209367/
-
புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு Published By: DIGITAL DESK 3 17 DEC, 2024 | 09:52 AM 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இடம்பிட்டிய கெதரயோ வணிகசூரிய முதியான்சலாகே ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/201475
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts