Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஊதாரி ஊடகங்கள்

************************

எங்கு பார்த்தாலும் வலையொளித்தளங்கள்

எதையெடுத்தாலும் எம்நாட்டுச் செய்திகள்.

உழைப்புக்காக ஊடக தர்மத்தை-சிலர்

விலைக்கு விற்கும் வேடதாரிகள்.

 

தலைப்பில் மட்டும் உழைப்பை தேடுவார்-உள்ளே

தரமில்லா செய்தியால் மடையராக்குவார்

ஒருவரை உயர்வாய் ஓங்கியே கத்துவார்

ஒருசில நாட்களில்  ஏறியும் மிதிப்பார்.

 

செய்திகள் பற்றி கவலையே இல்லை

சேரும் பணம்தான் அவர்களின் எல்லை

ஆளுக்கொரு கமறா கிடைத்தால்

அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார்.

 

ஏழை மக்களின் படங்களைக் காட்டி

எல்லோர் மனதிலும் நெருடலை மூட்டி

புலம்பெயர் பணத்தை தன்வசப்படுத்தும்-சில

போக்கிரியர்களும் இணையத்தில் திரிகிறார்.

 

நல்லசெய்தியும் சிந்தனை உயர்வும்

நலம்கெடா நடுநிலை ஊடகத் தெழிவும்

உள்ள பலபேரின் உண்மைத் தன்மையும்

உலகமறியும் இதுஉங்களுக்கில்லை.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆளுக்கொரு கமறா கிடைத்தால்

அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார்.

 

ஐயோ..அதையேன் கேட்பான்..நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டேன்

அருமையான கவிதை..வாழ்த்துக்கள்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு காட்சியை பத்து தலைப்புகளில் போடுகிறார்கள் . ....... அதுசரி காலத்துக்கு ஏற்ற பிழைப்பு .........! 

கவிதைக்கு நன்றி கோபி ..........!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தற்போதைய ஊடகங்கள் பற்றி தாங்கள் கொண்ட கோபம் நியாயமானது.
கவிதைக்கு நன்றி பசுவூர்கோபி. 👍🏽

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 உண்மையை உரத்துச்சொல்லி உள்ளீர்கள்.   இவர்களின் தமிழ் எழுத்து பிழைகள் அர்த்தங்களை தவறாக சித்தரிக்கின்றன. நன்றி 

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பசுவூர்க்கோபி said:

ஊதாரி ஊடகங்கள்

************************

எங்கு பார்த்தாலும் வலையொளித்தளங்கள்

எதையெடுத்தாலும் எம்நாட்டுச் செய்திகள்.

உழைப்புக்காக ஊடக தர்மத்தை-சிலர்

விலைக்கு விற்கும் வேடதாரிகள்.

 

தலைப்பில் மட்டும் உழைப்பை தேடுவார்-உள்ளே

தரமில்லா செய்தியால் மடையராக்குவார்

ஒருவரை உயர்வாய் ஓங்கியே கத்துவார்

ஒருசில நாட்களில்  ஏறியும் மிதிப்பார்.

 

செய்திகள் பற்றி கவலையே இல்லை

சேரும் பணம்தான் அவர்களின் எல்லை

ஆளுக்கொரு கமறா கிடைத்தால்

அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார்.

 

ஏழை மக்களின் படங்களைக் காட்டி

எல்லோர் மனதிலும் நெருடலை மூட்டி

புலம்பெயர் பணத்தை தன்வசப்படுத்தும்-சில

போக்கிரியர்களும் இணையத்தில் திரிகிறார்.

 

நல்லசெய்தியும் சிந்தனை உயர்வும்

நலம்கெடா நடுநிலை ஊடகத் தெழிவும்

உள்ள பலபேரின் உண்மைத் தன்மையும்

உலகமறியும் இதுஉங்களுக்கில்லை.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி.

இவ்வளவும் அறிந்த நாங்கள்

தினம்தினம் அவற்றை நோண்டி பார்க்கிறோமே?

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவும் அறிந்த நாங்கள்

தினம்தினம் அவற்றை நோண்டி பார்க்கிறோமே?

தினம் தினம் பார்த்து....  நல்லதை எடுத்து பொருத்தமற்றதை விலக்குவோம்😄

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, alvayan said:

ஆளுக்கொரு கமறா கிடைத்தால்

அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார்.

 

ஐயோ..அதையேன் கேட்பான்..நொந்து நூடுல்ஸ் ஆகிவிட்டேன்

அருமையான கவிதை..வாழ்த்துக்கள்

உண்மைதான் பொறுக்கமுடியல்லையே!
நெஞ்சார்ந்த நன்றி alvayan அவர்களே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, suvy said:

ஒரு காட்சியை பத்து தலைப்புகளில் போடுகிறார்கள் . ....... அதுசரி காலத்துக்கு ஏற்ற பிழைப்பு .........! 

கவிதைக்கு நன்றி கோபி ..........!

நீங்கள் சொல்பதுபோல் லைக்குக்கு பிச்சையெடுக்கும் விஞ்ஞான உலகமாகி விட்டது.
மிக்க நன்றிகள்🙏

22 hours ago, தமிழ் சிறி said:

தற்போதைய ஊடகங்கள் பற்றி தாங்கள் கொண்ட கோபம் நியாயமானது.
கவிதைக்கு நன்றி பசுவூர்கோபி. 👍🏽

நெஞ்சார்ந்த நன்றிகள்🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவும் அறிந்த நாங்கள்

தினம்தினம் அவற்றை நோண்டி பார்க்கிறோமே?

பாஸ்பண்னினாலும் பெயில் விட்டாலும் பாடசாலைக்கு போறமாதிரி ஒரு பழக்கதோசம்தான்😀
உங்களின் கருத்துக்கு உளமார்ந்தநன்றிகள்.

16 hours ago, நிலாமதி said:

 உண்மையை உரத்துச்சொல்லி உள்ளீர்கள்.   இவர்களின் தமிழ் எழுத்து பிழைகள் அர்த்தங்களை தவறாக சித்தரிக்கின்றன. நன்றி 

அன்போடு நன்றிகள் அக்கா 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிலாமதி said:

தினம் தினம் பார்த்து....  நல்லதை எடுத்து பொருத்தமற்றதை விலக்குவோம்😄

நல்லதா கெட்டதா என்று நோண்டிப் பார்க்க அவரகளுக்கு பணம் சேர்ந்திடுமே?

அந்த நம்பிக்கையிலேயே எதையும் நம்பிபோட்டு பணம் பண்ணுகிறார்கள்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.