Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார் ..

manmohan.jpg

டிஸ்கி :
 2009 மே மாதம் நினைவுக்கு வருது ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த ஆத்மாவிற்கு  நரகத்தில் கூட இடம் கிடைக்கக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொம்மையை முன்னால் வைத்துக்கொண்டே ஈழத்தில் சோனியா தனது நரவேட்டையினை ஆடி முடித்தார். தான் செய்வது என்னவென்று தெரிந்தும் சோனியாவின் தாளத்திற்கு ஆடி ஆடியே தமிழினக்கொலையிற்கான அனுமதியை, கட்டளையினை இந்தியாவின் பிரதமர் எனும் சோனியாவினால் வழங்கப்பட்ட பிச்சையைப் பாவித்து இவர் நிறைவேற்றி வந்தார்.

80 களில் தனது சொந்த இனமான சீக்கியர்களைப் படுகொலை செய்த அதே இந்திரா காந்தி குடும்பத்திற்கு, குறிப்பாக 1984 ஆம் ஆண்டு தில்லியில் நடந்த சீக்கியப் படுகொலையின் சூத்திரதாரியான ரஜீவின் மனைவிக்கு சேவகம் ஆற்றியதன் மூலம் இரு தேசிய இனங்களின் இனக்கொலையில் நேரடியான பங்களிப்பை இந்த நிதித்துறை வித்துவான் வழங்கிச் சென்றிருக்கிறார். 

இந்தக் காணொளியில் சோனியா கைகாட்டும் இடத்தில் நிற்கவும், அமரவும் துடிக்கும் நன்றியுள்ள நாயான மன்மோகனைப் பாருங்கள். 

மன்மோகனை அட்டைப் பிரதமராக வைத்துக்கொண்டு அமைச்சரவையினைத் தானே முடிவெடுத்த சோனியா

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ரணில் இறுதி அஞ்சலி!

டெல்லியில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு ரணில் இறுதி அஞ்சலி!

நேற்றிரவு உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது, ரணில் விக்ரமசிங்க மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கு (Gursharan Kaur Kohli) தனது இரங்கலைத் தெரிவித்ததார்.

அதேநரேம், இறுதி அஞ்சலிக்காக புதி டெல்லியில் உள்ள இந்திய முன்னாள் பிரதமரின் இல்லத்துக்கு வருகை தந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

ரணில் விக்கிரமசிங்க தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இந்திய பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20241227-WA0031.jpg

IMG-20241227-WA0033.jpg

https://athavannews.com/2024/1414330

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங்: இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலமானார்

 

26 டிசம்பர் 2024
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92.

உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் இன்று இரவு 10.30 மணியளவில் அறிவித்தது.

இது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழப்பை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். வயது மூப்பு காரணமாக சிகிச்சையில் இருந்த அவர் டிசம்பர் 26ஆம் தேதி சுயநினைவை இழந்தார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இரவு 8.06 மணி அளவில் மன்மோகன்சிங் கொண்டுவரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்த போதிலும், அவர் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cy7kj2rv2jpo

 

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு மூத்த அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

Published By: DIGITAL DESK 3   27 DEC, 2024 | 04:27 PM

image

(எம்.மனோசித்ரா)

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் நேற்று வியாழக்கிழமை டில்லியில் உயிரிழந்தார். 

அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள இலங்கையின் மூத்த அரசியல் தலைவர்கள், போரின் பின்னரான காலப்பகுதியில் மீள் குடியேற்றம், மறுசீரமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் போன்றவற்றில் இலங்கைக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்புக்களை நினைவு கூர்ந்துள்ளனர். அத்தோடு  தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்மையாக உழைத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை டில்லியில் மன்மோகன் சிங்கின் உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது, 'இலங்கை - இந்திய உறவுகளை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதில் மன்மோகன் சிங் ஆர்வத்துடன் செயற்பட்டிருந்தார்.

கடந்த சில வருடங்களாக அவரது உடல் நிலை ஆரோக்கியமானதாக இல்லாததால் நேரடியாக சந்தித்து பேச முடியாமல் போனது. இருப்பினும் இரு நாடுகளுக்குமான இழப்பாக அவரது மறைவை கருத முடிகிறது. 

இலங்கையில் உள்நாட்டு போர் முடிந்ததன் பின்னர் 50 ஆயிரம் வீட்டு திட்டத்தை இலங்கைக்கு வழங்குவதில் அவர் முன்னின்று செயற்பட்டிருந்தார். இந்தியாவின் பொருளாதாரத்துக்கு மன்மோகன் சிங்கின் சேவை என்பது முக்கியத்துவமுடையதாகக் காணப்பட்டது.

அதேபோன்று தான் தற்போதும் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம் உலக தரத்தை நோக்கி பயணிக்கிறது. 

மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலத்தில் இலங்கையின் உள்ளகப் போர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இந்த போரின் பின்னரான காலப்பகுதியில் மீள் குடியேற்றம், மறுசீரமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்கள் போன்றவற்றில் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்யிருந்தார். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது.' எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரும் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்திகளைப் பகிர்ந்துள்ளனர்.

அந்த வகையில் 'முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. மன்மோகன் சிங் ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணர். இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பியுமாவார். அவரது பங்களிப்புகள் இந்தியாவிற்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 'முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைகிறோம். அவர் அறிமுகப்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை மாற்றியமைத்தன. அவை முழு பிராந்தியத்திற்கும் ஒரு உத்வேகமாக அமைந்தன. முன்னேற்றம் மற்றும் நேர்மை மீதான அவரது அர்ப்பணிப்பு எமக்கு  தொடர்ந்தும் ஊக்கமளிக்கும். இந்த துயரமான தருணத்தில், அவரது குடும்பத்தினருக்கும் இந்திய மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.' எனக் குறிப்பிட்டுள்ளார்.

'முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்காக இந்திய மக்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள். நவீன இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சியின் சிற்பியான ஒரு சிறந்த மனிதர், இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்மையாக உழைத்தவர்.' என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, 'மன்மோகன் சிங், ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணரும் அரசியல்வாதியுமாவார். அவரது நுட்பமான தலைமையின் கீழ் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியா குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சியடைந்தது. அவரது நடைமுறைக் கொள்கைகள் மற்றும் பொருளாதார தாராளமயமாக்கலுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவின் வளர்ச்சி மற்றும் செழுமையை நோக்கிய பயணத்தை விரிவாக்கி , உலக அரங்கில் முடிவற்ற எழுச்சிக்கு களம் அமைத்தன.' எனக் குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/202285

  • கருத்துக்கள உறவுகள்

1991 ல்  பொருளாதார நெருக்கடி சந்தித்த இந்தியாவில் அன்று நிதி அமைச்சராக பொறுப்பேற்ற திரு மன்மோகன் சிங் மாபெரும் மறுசீரமைப்பை( reform) செய்தவர். 

இந்திய பொருளாதாரத்தை சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து தாராளமயமாக்கல் பொருளாதாரமாக மாற்றிவர். உலக வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு நாட்டைத் திறந்து விட்டார். பிரதமராக இருந்த காலத்தில், இந்தியா நீடித்த பொருளாதார வளர்ச்சியை அனுபவித்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்   

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, island said:

1991 ல்  பொருளாதார நெருக்கடி சந்தித்த இந்தியாவில் அன்று நிதி அமைச்சராக பொறுப்பேற்ற திரு மன்மோகன் சிங் மாபெரும் மறுசீரமைப்பை( reform) செய்தவர். 

இந்திய பொருளாதாரத்தை சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து தாராளமயமாக்கல் பொருளாதாரமாக மாற்றிவர். உலக வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு நாட்டைத் திறந்து விட்டார். பிரதமராக இருந்த காலத்தில், இந்தியா நீடித்த பொருளாதார வளர்ச்சியை அனுபவித்தது. 

நீங்கள் சொல்வது சரி தான் 

அப்ப. ஏன்   அமெரிக்கா   கனடா    பிரித்தானியா  அவுஸ்திரேலிய ..மத்திய கிழக்கு ..இப்படி எல்லா நாடுகளிலும்  இந்தியா  குடி மக்கள்  போக வேண்டும்  ??வாழ வேண்டும்??   இப்படி பெரும் தொகையில் மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தால்  .....இந்தியா பொருளாதாரத்தில் வளர்த்து விட்டது   என்பது சரியா?? 

மிகப்பெரிய நாடு

அனைத்து மக்களும் வசதியாக வீடுகள் கட்டி  சொந்தமாக சுய தொழில் செய்ய சகல வசதிகளும் உண்டு” ஆனாலும் முடியவில்லை ஏன்  ? 

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங்: மூத்த அமைச்சர்கள் மீது புகார் எழுந்தபோது என்ன செய்தார்? பகிரும் பழனிமாணிக்கம்

மன்மோகன் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
  • பதவி, பிபிசி தமிழ்

"எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது என்ற அவநம்பிக்கை அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. எப்போதும் அணுகக் கூடியவராக அவர் இருந்தார்."

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனான தனது அனுபவம் குறித்து திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பிபிசி தமிழிடம் இவ்வாறாகக் குறிப்பிட்டார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக முரண்பட்டபோதும், கூட்டணிக் கட்சிகளை மன்மோகன் சிங் அரவணைத்துச் சென்றதாகவும் பழனிமாணிக்கம் கூறுகிறார்.

பிரதமர் என்பதையும் தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கு உற்ற நண்பராக மன்மோகன் சிங் இருந்ததாகத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்த காலத்தில் அவரது அணுகுமுறை எப்படி இருந்தது? அதுகுறித்து திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சொல்வது என்ன?

 

கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது.

தமிழ்நாட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைத்தது. திமுக, 16 இடங்களில் வெற்றி பெற்றது. நாடு முழுவதும் 215 தொகுதிகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது.

இடதுசாரிக் கட்சிகளும் மதிமுகவும் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. தேர்தல் முடிவில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. புதிய அரசில் திமுகவுக்கு 3 கேபினட் அமைச்சர் பதவிகளும் நான்கு இணை அமைச்சர் பதவிகளும் கிடைத்தன.

திமுக சார்பாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி ஆகியோர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், பழனிமாணிக்கத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது.

எளிதில் அணுகக்கூடிய பிரதமர்

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்
படக்குறிப்பு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்

"மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் ஒன்பது ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்தேன். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்துவார். என்னுடைய பணிகள் பற்றிக் கேட்டு ஊக்கப்படுத்துவார்" என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் ஆறு மாதங்கள் தான் வேலை பார்த்ததாகக் கூறும் பழனிமாணிக்கம், "அனைவராலும் எளிதில் அணுகக் கூடியவராக மன்மோகன் சிங் இருந்தார்" என்கிறார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் உடன் தனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவம் ஒன்றையும் பிபிசி தமிழிடம் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் விவரித்தார்.

மூத்த அமைச்சர்கள் மீது புகார்

மன்மோகன் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மன்மோகன் சிங்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் மூத்த அமைச்சர்கள் பலரும், இணை அமைச்சர்களுக்குப் போதுமான வேலைகளை ஒதுக்காமல் தாங்களே வைத்துக் கொள்வதாகப் புகார் ஒன்று எழுந்துள்ளது.

"இதற்காக அனைத்து இணை அமைச்சர்களும் சேர்ந்து ஒரு கூட்டத்தைக் கூட்டினர். அந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டதாக" கூறுகிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

தொடர்ந்து பேசிய அவர், "அப்போது நிதித்துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தார். என்னைப் பேசுமாறு மன்மோகன் சிங் கூறினார். நான் பேசும்போது, 'என்னுடைய துறையில் எல்லா உரிமைகளையும் பிரணாப் தருகிறார். போதுமான வேலைகளும் ஒதுக்கப்படுகிறது' எனக் கூறினேன்."

"எனக்கு புதிதாக வேலைகள் தேவைப்பட்டாலும் பிரணாப் முகர்ஜி ஒதுக்குவதாகவும் அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் பேசினேன்" என்ற பழனிமாணிக்கம் இதை முன்னுதாரணமாகக் காட்டி மன்மோகன் சிங் பேசியதாகத் தெரிவித்தார்

`அதிகார தோரணை கிடையாது'

மன்மோகன் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மன்மோகன் சிங்

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுக இணைந்தது. கூட்டணிக் கட்சிகளுக்கு இலாகாக்களை ஒதுக்குவது தொடர்பாக நடந்த சம்பவம் ஒன்றையும் பழனிமாணிக்கம் நினைவுகூர்ந்தார்.

"நிதித்துறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் யாரும் இணைப் பொறுப்பை வகித்ததில்லை. எனக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த பிறகு, மீண்டும் இதே துறையை திமுக தலைவர் கருணாநிதி கேட்டார்.

அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் உடனே வழங்கிய மன்மோகன் சிங், 'அவர் நல்ல இளைஞர். அவரை ஊக்கப்படுத்துங்கள்' எனப் பாராட்டினார். எனக்கு மீண்டும் அதே துறை கிடைக்கவும் மன்மோகன் சிங் காரணமாக இருந்தார்" என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

பிரதமராக நரசிம்மராவ் பதவி வகித்த காலத்தில் புதிய பொருளாதார கொள்கைகளை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்களிப்பை நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அளித்ததாகக் கூறுகிறார் பழனிமாணிக்கம்.

"அவரது அமைச்சரவையில் இருந்த காலகட்டத்திலும், நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் நான் இருந்த காலத்திலும் கமிட்டி கூட்டங்களில் எந்தவிதமான அதிகார தோரணையையும் அவர் வெளிக்காட்டியது இல்லை" என்று கூறினார்.

தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன?

திமுக தலைவர் கருணாநிதி உடன் மன்மோகன் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, திமுக தலைவர் கருணாநிதியுடன் மன்மோகன் சிங்

திமுக தலைவர் கருணாநிதியோடு நல்ல நட்புடன் மன்மோகன் சிங் இருந்ததாகக் கூறும் பழனிமாணிக்கம், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கென திமுக தலைவர் கொடுத்த திட்டங்களை மன்மோகன் சிங் நிறைவேற்றிக் கொடுத்தார்" என்றார்.

அதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பட்டியலிட்ட பழனிமாணிக்கம், "தமிழ்நாட்டில் கார் தொழிற்சாலைகளில் அந்நிய முதலீட்டைக் கொண்டு வரும் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை மிகுந்தவராக மன்மோகன் சிங் இருந்தார்" என்கிறார்.

இதையே தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் இருந்தார். தேசிய அளவிலான திட்டங்களிலும் கொள்கைகளிலும் தென்னக மக்களின் குரல்கள் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார்" என்கிறார்.

தமிழ்நாட்டு மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அவற்றைத் தீர்த்து வைத்ததாகக் கூறியுள்ள ஸ்டாலின், "மன்மோகன் சிங்கின் செயல்பாடு, இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்கைச் செலுத்துவதற்குத் துணை புரிந்தது" என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் இல்லாதபோதும்கூட சுனாமி பாதித்த பகுதிகளில் வீடுகளைக் கட்டுவதற்கும் கடற்கரையோர பகுதிகளில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் மன்மோகன் சிங் அரசு உதவி செய்ததாகக் கூறுகிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியாவில் வாட் வரி அமல்படுத்தப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக (2001-2006), வாட் வரிக்கான மாநில பகிர்வைக் கேட்காமல் இருந்ததாகக் கூறுகிறார் அவர்.

அந்தச் சூழ்நிலையில், " தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் (2006) காலம் தவறியதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, வரிப் பகிர்வில் சிறப்பு சலுகையை வழங்குமாறு கருணாநிதி கேட்டார். அதை ஏற்று உடனே மன்மோகன் சிங் நிறைவேற்றிக் கொடுத்தார்" எனவும் அவர் கூறுகிறார்.

மேற்கு மண்டலத்துக்கு கிடைத்த உதவி

மன்மோகன் சிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2009ஆம் ஆண்டு சோனியா காந்தியின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சந்திப்பில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படம்.

அடுத்ததாக, 2006 சட்டமன்றத் தேர்தலின்போது நடந்த சம்பவம் ஒன்றை பழனிமாணிக்கம் குறிப்பிட்டார்.

கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்த கருணாநிதி, கைத்தறி நெசவாளர்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

அவர்களின் தொழிலுக்குப் பெரும் தடையாக சென்வாட் (cenvat) வரி இருந்தது. அதை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி உறுதி கொடுத்திருந்தார். அதன்படி ஆட்சிப் பொறுப்பேற்றதும், மன்மோகன் சிங்கின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றார்.

"சென்வாட் வரியை நீக்கி கைத்தறி துணி ஏற்றுமதியாளர்களுக்கு மிகப் பெரிய சலுகையை கருணாநிதி பெற்றுத் தந்தார். அதேபோல், தமிழ்நாட்டுக்கான நெடுஞ்சாலைத் திட்டங்களில் பலவும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கிடைத்தது" என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

"பொருளாதார நிபுணராகவும் சிறந்த பிரதமராகவும் இருந்தது மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதிலும் தனது சகாக்களை மதிப்பதிலும் சிறந்தவராக மன்மோகன் சிங் இருந்தார்" என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

திமுகவின் நெருக்கடிக் காலத்தில் மன்மோகன் சிங் செய்தது என்ன?

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம்,MKSTALIN X PAGE

படக்குறிப்பு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாம் பகுதியில் இறுதிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக முரண்பட்டது. இதையடுத்து, ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் திமுக திரும்பப் பெற்றது.

இதன் பின்னணியில் 2ஜி விவகாரம் பேசப்பட்டது. அப்போது திமுகவுக்கு பவ்லேறு வகைகளில் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடிகளின்போது மன்மோகன் சிங்கின் செயல்பாடு குறித்து பழனிமாணிக்கத்திடம் பிபிசி தமிழ் கேட்டது.

"ஆட்சியின் இரண்டாம் பகுதியில் நெருக்கடிகள் ஏற்படும்போது, ஏ.கே.ஆண்டனி, குலாம் நபி ஆசாத் போன்றோர் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படக்கூடிய நெருடல்களை தீர்ப்பதில் அக்கறையுடன் இருந்தனர்.

ஆனால், மன்மோகன் சிங்கை பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளிடம் எந்தவகையிலும் வருத்தத்தையோ கோபத்தையோ காட்டியதில்லை" என்கிறார்.

அதற்கேற்ப, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 2017ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.

இதுதொடர்பாக அதே ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மன்மோகன் சிங்குக்கு ஆ.ராசா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், 'என்னை வெளிப்படையாக ஆதரிக்க முடியாமல் உங்களைத் தடுத்த நிர்பந்தங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதில் அளித்து 2018ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி கடிதம் ஒன்றை ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் எழுதியிருந்தார். அதில், 'நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டீர்கள். இறுதியில் உண்மை நின்றது என்பதில் உங்கள் நண்பர்களுக்குப் பெரிய நிம்மதி' எனக் கூறியிருந்தார்.

கூட்டணிக் கட்சிகள் இடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து ஆட்சியைத் தொடர வைப்பதில் மன்மோகன் சிங் தீவிர கவனம் செலுத்தியதாகக் கூறும் பழனிமாணிக்கம், "எந்தப் பிரச்னையிலும் 'தீர்க்க முடியாதது' என்ற அவநம்பிக்கையை அவரிடம் ஒருபோதும் பார்த்ததில்லை" என்கிறார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kandiah57 said:

நீங்கள் சொல்வது சரி தான் 

அப்ப. ஏன்   அமெரிக்கா   கனடா    பிரித்தானியா  அவுஸ்திரேலிய ..மத்திய கிழக்கு ..இப்படி எல்லா நாடுகளிலும்  இந்தியா  குடி மக்கள்  போக வேண்டும்  ??வாழ வேண்டும்??   இப்படி பெரும் தொகையில் மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் வாழ்ந்தால்  .....இந்தியா பொருளாதாரத்தில் வளர்த்து விட்டது   என்பது சரியா??

நியாயமான கேள்வி தான். அவர் முன்னைய பிரதமர் சோசலிஷ பொருளாதாரத்தில் இருந்து இந்தியாவை மாற்றாமல் இருந்திருந்தால் இந்தியா பழைய மோசமான ஏழ்மையில் தொடர்ந்து இருந்திருக்கும். பழைய காலங்களில் இலங்கைக்கே தேயிலை தோட்ட வேலை தேடி வந்திருக்கிறார்களே

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2024 at 16:44, ஏராளன் said:

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்மையாக உழைத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

21 Vadivelu memes ideas | vadivelu memes, comedy memes, comedy pictures

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் சிங்கை அரசு அவமதித்துவிட்டது!” - இறுதிச் சடங்கு இட விவகாரத்தில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

29 Dec, 2024 | 09:59 AM

image

புதுடெல்லி: “மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கு இடம் ஒதுக்காமல், நிகம்போத் காட் எரியூட்டுத் தலத்தில் நிகழ்த்த வேண்டிய நிலையை உருவாக்கியதன் மூலம் அரசு அவரை முற்றிலுமாக அவமதித்துவிட்டது” என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்திய அன்னையின் மகத்தான புதல்வரும், சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை நிகம்போத் காட்டில் நிகழ்த்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியதன் மூலம் தற்போதைய அரசு அவரை முற்றிலும் அவமதித்துள்ளது. அவர் 10 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரது பதவிக் காலத்தில் நாடு பொருளாதார வல்லரசாக மாறியது. அவரது கொள்கைகள் இன்னும் நாட்டின் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆதரவாக உள்ளன.

இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்துக்கு மதிப்பளித்து, அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட நினைவிடங்களில் நடத்தப்பட்டன. இதனால் ஒவ்வொரு நபரும் எந்தவித சிரமமும் இன்றி அஞ்சலி செலுத்தினர். டாக்டர். மன்மோகன் சிங் நமது உயரிய மரியாதைக்கும் தனி நினைவிடத்துக்கும் தகுதியானவர். தேசத்தின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது புகழ்பெற்ற சமூகத்துக்கும் அரசு மரியாதை காட்டியிருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குக்கு இடம் ஒதுக்காததன் மூலம் அரசு தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்திவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டாக்டர் மன்மோகன் சிங் போன்ற ஒரு சிறந்த ஆளுமையின் தகனம் மற்றும் நினைவிடம் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கம் தேவையற்ற சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்பின், மக்களின் உணர்வுகளின் அழுத்தத்தால், பாஜக அரசு நினைவிடம் கட்ட எதிர்காலத்தில் இடம் ஒதுக்கப்படும் என அறிவித்தது. மரியாதைக்குரிய ஒரு நபரின் தகனத்தை எந்த விசேஷ இடத்திலும் நடத்தாமல் நிகாம் போத் மயானத்தில் இந்திய அரசு நடத்துகிறது.

2010-ல், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் இறந்தபோது, பாஜகவின் கோரிக்கை இன்றி, காங்கிரஸ் அரசு, அவரது குடும்பத்தினரிடம் பேசி, ஜெய்ப்பூரில் அவரது இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக ஒரு சிறப்பு இடத்தை ஒதுக்கி, அங்கு நினைவிடம் கட்டப்பட்டது. 2012-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பால் தாக்கரேவின் மரணத்துக்குப் பிறகு, காங்கிரஸ் அரசு அவரது இறுதிச் சடங்குகளுக்காக மும்பை சிவாஜி பூங்காவில் ஒரு சிறப்பு இடத்தை ஒதுக்கியது. அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் காங்கிரஸ் எப்போதும் மரியாதையுடன் விடை அளித்துள்ளது. ஆனால், மன்மோகன் சிங் விஷயத்தில் பாஜகவின் இத்தகைய நடத்தை துரதிருஷ்டவசமானது" என்று தெரிவித்துள்ளார்.
 

https://www.virakesari.lk/article/202427

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.