Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண ரீதியில் நடைபெற்ற ஆணழகன் மற்றும் பெண்ணழகி போட்டி!

613758720.jpg

யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது  வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன் மற்றும் பெண் உடலமைப்பு அழகி ஆகிய போட்டிகள் யாழ்ப்பாணத்தில் நேற்றுமுந்தினம் (28) இடம்பெற்றன.

வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனுக்காக இடம் பெற்ற போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சத்தியசீலன் பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்று வட மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகனாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில், இரண்டாம் இடத்தை மன்னார்  TSP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட லியோன் ஜோயல் பெற்றுக்கொண்டார்.

மூன்றாம் இடத்தை வவுனியா JRP உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட சுகுமார் ரன்சித்குமார் பெற்றுக்கொண்டார்.

spacer.png

spacer.png

இதேவேளை, பெண்கள் உடலமைப்பு  அழகிகளுக்காக நடத்தப்பட்ட போட்டியில், வவுனியா DFC உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜோசப் ஜோன்சன் தவச்செல்வி வட மாகாண பெண் உடலமைப்பு  அழகியாக தெரிவு செய்யப்பட்டார்.

இந்தப் போட்டியில்,இரண்டாம் இடத்தை நியூ கெல்த் பிற்னஸ் சார்பாகப் போட்டியிட்ட மோனிஷா மகேந்திரராஜா பெற்றுக் கொண்டார்.

மூன்றாவது இடத்தை நோத் சென்ரர் உடற்கட்டமைப்பு நிலையம் சார்பாக போட்டியிட்ட ஜெயபாணி ஜெகநாதன் பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடப்பட்டது.  (ப)

 

https://newuthayan.com/article/வடக்கு_மாகாண_ரீதியில்_நடைபெற்ற_ஆணழகன்_மற்றும்_பெண்ணழகி_போட்டி!

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

 

613758720.jpg

spacer.png

வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!! ஆனால் தலையங்கத்தில் சிறிது மாற்றம் தேவை.🧐😌

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்!! ஆனால் தலையங்கத்தில் சிறிது மாற்றம் தேவை.🧐😌

பாஞ்ச் அவர்களே.... என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லி விடுங்க. 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஜோசப் ஜோன்சன் தவச்செல்வி நல்லாச் சவர்க்காரம் போட்டு பொச்சுமட்டைத் தும்பினால் முழங்கால் பகுதியை நன்றாகத் தேய்த்துக் கழுவிவிட்டு வந்திருக்கலாம்!👀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச் அவர்களே.... என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லி விடுங்க. 😂

உடற்கட்டமைப்பு ழகன் மற்றும் பெண் துடையமைப்பு அழகி போட்டி!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பாஞ்ச் அவர்களே.... என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லி விடுங்க. 😂

 

ஆட்களின் வடிவை கேலி செய்யக்கூடாது. என்றாலும் வட மாகாணத்தின் பெண்ணழகி படத்தை பார்க்க ஓடிவருபவர்களுக்கு ஏமாற்றம் தான் போல.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

 பெண் துடையமைப்பு அழகி போட்டி!

அப்படி ஏதாவது இதில் இருக்கா....தேடிப்பார்த்தேன் காணலியே

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

 

ஆட்களின் வடிவை கேலி செய்யக்கூடாது. என்றாலும் வட மாகாணத்தின் பெண்ணழகி படத்தை பார்க்க ஓடிவருபவர்களுக்கு ஏமாற்றம் தான் போல.

 

அழகு என்பதை எப்படி வரையறுப்பது? 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

அப்படி ஏதாவது இதில் இருக்கா....தேடிப்பார்த்தேன் காணலியே

இப்படி ஒரு புத்திரனைப் பெற உங்கள் அப்பா அம்மா என்ன புண்ணியம் செய்தார்களோ?🙌

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, RishiK said:

அழகு என்பதை எப்படி வரையறுப்பது? 

வெள்ளைக்காரங்கள் அதுக்கெண்டு அளவு கணக்குகள் வைச்சிருக்கிறாங்கள். 😎
நம்ம திரிஷா வடிவுதான். அதுக்காக உலக அழகுராணியாக எல்லாம் வரேலாது. அவவுக்கு கைகால், விரல்  நீட்டு காணாது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Paanch said:

தலையங்கத்தில் சிறிது மாற்றம் தேவை

பாஞ் அவர்களே! தலையங்கங்களுக்கும் உங்களுக்கும் என்ன ஒரே பிரச்சனை? எப்போதுமே தலையங்கத்தை குறை பிடிக்கிறீர்களே?  தலையங்கத்துக்கு  முன்னுரிமை கொடுப்பீர்கள் போலுள்ளதே.

14 minutes ago, குமாரசாமி said:

வெள்ளைக்காரங்கள் அதுக்கெண்டு அளவு கணக்குகள் வைச்சிருக்கிறாங்கள். 😎
நம்ம திரிஷா வடிவுதான். அதுக்காக உலக அழகுராணியாக எல்லாம் வரேலாது. அவவுக்கு கைகால், விரல்  நீட்டு காணாது. ☹️

ம்... திரிஷாவை அங்கம் அங்கமாக ரசித்திருக்கிறார்.    

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, RishiK said:

அழகு என்பதை எப்படி வரையறுப்பது? 

செய்தியின் பிரகாரம் பெண் உடலமைப்பு அழகிகளை தெரிவு செய்துள்ளார்கள். போட்டி விதிமுறைகள், புள்ளி வழங்கல் விபரங்களை செய்தியை இணைத்த @கிருபன் மேற்கொண்டு விபரிப்பார் என எண்ணுகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நியாயம் said:

செய்தியின் பிரகாரம் பெண் உடலமைப்பு அழகிகளை தெரிவு செய்துள்ளார்கள். போட்டி விதிமுறைகள், புள்ளி வழங்கல் விபரங்களை செய்தியை இணைத்த @கிருபன் மேற்கொண்டு விபரிப்பார் என எண்ணுகின்றேன்.

அதுக்கெல்லாம் எக்ஸ்ட்றாவாக ஏதாவது கொடுத்தால்தான் உண்டு🤪

2 hours ago, satan said:

ம்... திரிஷாவை அங்கம் அங்கமாக ரசித்திருக்கிறார்.    

ஒரு காலத்தில திரிஷா குளிக்கிற வீடியோ ஒன்று ஓடியது. பார்த்திருப்பாரோ?😍😜

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

பாஞ் அவர்களே! தலையங்கங்களுக்கும் உங்களுக்கும் என்ன ஒரே பிரச்சனை? எப்போதுமே தலையங்கத்தை குறை பிடிக்கிறீர்களே?  தலையங்கத்துக்கு  முன்னுரிமை கொடுப்பீர்கள் போலுள்ளதே.

எண்சாண் உடம்பிற்கும் தலையே பிரதானம் போல, செய்திகள், பதிவுகள் போன்ற அனைத்திற்கும் தலையங்கம் பிரதானமாக இருக்கிறது. வாசகர்களுக்கு ஓரிருவரித் தலையங்கமே முதலில் அதற்கான வரைவுகளை வாசிப்பதற்கு முன்னர் அதுபற்றிய எண்ண ஓட்டங்களை உருவாக்குகிறது. வாசித்தபின்பு அவர் எண்ண ஓட்டங்களுக்கு ஒவ்வாத நிலையில் வரைவுகள் இருந்தால் அது ஏமாற்றத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்திக் கலங்கடிக்கிறது. ஆகவே தலைப்புக்கு முன்னுரிமை கொடுப்பது அவசியமாகிறது. தலைப்பில் குறைபாடு கண்டால், அது அதன் வரைவையே நோண்டிப் பார்த்து குறைதேடும் முயற்சிக்கும் ஆதாரமாக அமைந்துவிடுகிறது.😳

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@வாலி,

பெண்ணழகிகளைப் பார்க்க 24 நிமிடத்தில் இருந்து பாருங்கள்🥰

 

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ட் டிரஸில் வரும் ஆரணங்கு ஓரளவில் பராவாயில்லை. ஆனால்….😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாலி said:

கறுப்பு ட் டிரஸில் வரும் ஆரணங்கு ஓரளவில் பராவாயில்லை. ஆனால்….😂

கிளி இல்லாத ஊரில் காகம்தான் கிளி என்று சொல்ல வாறீங்களோ?

🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கிளி இல்லாத ஊரில் காகம்தான் கிளி என்று சொல்ல வாறீங்களோ?

🤣

யாழ்ப்பாணத்து ஆழகிகளை   இப்படியா சொல்வது???? 😀

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2024 at 16:25, நியாயம் said:

வட மாகாணத்தின் பெண்ணழகி படத்தை பார்க்க ஓடிவருபவர்களுக்கு ஏமாற்றம் தான் போல.

பொதுவாக எங்கள் ஊர் பெண்கள் இப்படியான நிகழ்ச்சிகளுக்கு வருவது குறைவு. அதற்கும் தைரியம் வேண்டும். வந்தவர்களை வென்றவர்களை வாழ்த்துவோம்.

அமெரிக்காவைச் சேர்ந்த ரொபேர்ட் கொப்மன் (Robert  Hoffman) ஒரு இசை அல்பத்தை உருவாக்குவதற்காக 2020இல் இந்தியா வந்திருந்தார். அவர் உருவாக்க இருந்த இசை அல்பத்துக்கு சேரியில்  வாழும் ஒரு சிறுமி தேவைப்பட்டாள். மும்பை  சேரிக் குடிசை வாழ் சிறுமியைத் தேடிய போது அவரால் கண்டு பிடிக்கப் பட்டவள் தான் மலேஸா. அப்பொழுது அவள் 12 வயதுச் சிறுமி.

 “மும்பையின் நடுப்பகுதியில், தெருக்களில் அவள் வசிக்கிறாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை, இன்னும் யாரும் அவளைக் கண்டுபிடிக்கவில்லை. இதற்கான காரணமாக, கருமையான தோலை அழகற்றதாகப் பார்ப்பதுதான் இந்திய க் கலாச்சாரம் என்பது எனக்குப் புரிந்தது.ஆனால் சர்வதேச அழகுத் துறை அவளை வித்தியாசமாகப் பார்க்கும் என்பதை நான் உறுதியாக அறிவேன்இப்படிச் சொல்கிறார் ரொபேர்ட் கொப்மன்.

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.