Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

சும் இன் மீதான உங்களின் ஈர்ப்பு இவற்றை / யாதார்த்தத்தை ஏற்க மறுக்கின்றது.

இல்லை, ஒத்த குண இயல்புடையவர்கள் அவ்வாறே இருப்பார்கள். அதிலும், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள். எதிர்க்கருத்து வைக்க முடியாமல் ஒதுங்குவோர் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் உண்மையை ஏற்க மறுத்து, தான்பிடிச்ச முயலுக்கு மூன்று காலென்று காட்ட முயன்று, எந்தளவுக்கு எதிர்க்கருத்தாளரை வசை பாட முடியுமோ அந்தளவுக்கு பாடி,  கேலி பண்ணி, மற்றவரின் கருத்துக்களை மூர்க்கத்தனமாக எதிர்ப்பவருடன் எந்தப்புத்திசாலியும் கருத்தாடி, தனது நேரத்தை வீணாக்கி, வாசிப்பவரை குழப்பமாக்கி, அவரோடு எங்களையும் ஒப்பிட வைக்க விரும்ப மாட்டார்கள் என்பதே யதார்த்தம்!

2 hours ago, MEERA said:

இங்கு படம் தொடர்பாக கருத்து வைத்தது தாங்கள்.

இது, இன்று நேற்றல்ல, எப்போதுமே இப்படித்தான். தானே ஒரு கருத்தை வைப்பார், அது பிழையென நிரூபிக்கப்படவுடன் உங்களையே தப்பு சொல்லி அடாவடி பண்ணுவார். இல்லை உங்களுக்கு பகிடியும் வெற்றியும் தெரியவில்லை என்று நழுவுவார். அதனாற்தான், பலதடவை நான் எச்சரிப்பது உண்டு. "நேரம் பொன்னானது." "ஒரு சொல் போதுமென்றால், இரு சொற்களை செலவு செய்யாதே, எவ்வளவு சொல்லியும் பயன் இல்லையென்றால், ஒரு சொல்லையும் விரயமாக்காதே." என்பது எவ்வளவு உண்மையானது என்பதை இங்கு அனுபவத்தில்  புரிந்து கொண்டேன். 

  • Replies 78
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக அங்கீகரிக்க முடியுமா என்று கேட்டால் என்ன? 

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    சுமந்திரனின்  அந்த வேதனையை…  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அமைச்சர் கனவில் இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால், தாங்க முடியாதுதானே. 😂 எல்லாம் அவரே தனது தலையில் அள்ளிப் போட்டுக் கொண்ட மண். 👍🏽

  • இந்த படம் வீரகேசரியினால் அண்மையில் இணைப்பட்டது.   இது @Kapithan குறிப்பிடும் 2017 சம்பவத்தின் போது.     இது வீரகேசரியின் இணைப்பு December 2024

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

வேலைப்பழு காரணமாக எனது ஒரே ஒரு சமூக ஊடகமான யாழ் களத்தில் இருந்து முற்று முழுதாக விலகும் தேவை அதிகரித்து வருகிறது. அனேகமாக ஓரிரு தினங்களில்  முற்றாக விலகுவேன் என்று நினைக்கிறேன்.

பேராண்டி உங்கள் முடிவை மாற்றி கொள்ளுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

பேராண்டி உங்கள் முடிவை மாற்றி கொள்ளுங்கள் .

அடிபட்டுக் களைச்சுப்போனேன் பெரிசு ,.🤣

உண்மையில் 7 நாளும் 12 மணித்தியால வேலை. ஒரு விடயத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. வேலையும், கொஞ்ச உடற்பயிற்சியும்,  வீடும் என்றிருக்கப்போவதாக முடிவெடுத்துள்ளேன். அனேகமாக ஞாயிறுடன் விடைபெறுவதாக முடிவு. அதுவரை பெரிசுடனும், அல்வாயனுடனும், சாத் மற்றும் சிறியருடன் முடிந்த அளவில் மல்லுக்கட்டுவதாக இருக்கிறேன். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, Kapithan said:

அடிபட்டுக் களைச்சுப்போனேன் பெரிசு ,.🤣

3 minutes ago, Kapithan said:

அனேகமாக ஞாயிறுடன் விடைபெறுவதாக முடிவு.

ஏன் என்ன நடந்தது? ☹️

எனக்கும் அந்த ஐடியா ஒண்டு இருக்கு....

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

 அனேகமாக ஞாயிறுடன் விடைபெறுவதாக முடிவு. 

கபிதன்… தயவு செய்து அப்படி செய்ய வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன @Kapithan, @குமாரசாமி அண்ணா.............. குழந்தைப் பிள்ளைகள் போல விட்டுவிட்டுப் போகின்றேன் என்று சொல்கிறீர்கள். வேலை கூடிவிட்டது என்றால், முடியுமான நேரங்களில் வாருங்கள், ப்ளீஸ்......... நீங்களும், மற்றவர்களும் இல்லாமல் என்ன களம்...............🤝.

என்னைப் போன்ற ஒரு ப்ரியம் உள்ள உறவை இழக்க உங்களுக்கு எப்படி மனம் வருகின்றதோ............😜

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

எல்லாம் Justin Trudo செய்த வேலை. பொக்கற்றில் இருந்த, கிறடிற் காட்டில் இருந்த கடைசிக் காசையும் சுரண்டிப்போட்டு வெறும் பொக்கற்றுடன் விட்டால் என்ன செய்வது. 

அடுத்த 10  வருடத்திற்கு Canada வின் உழைக்கும் நடுத்தர வர்க்கத்தின் நிலை இதுதான். 

🥺

36 minutes ago, குமாரசாமி said:

ஏன் என்ன நடந்தது? ☹️

எனக்கும் அந்த ஐடியா ஒண்டு இருக்கு....

23 minutes ago, தமிழ் சிறி said:

கபிதன்… தயவு செய்து அப்படி செய்ய வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்

@Kapithan

IMG-3057.jpg
 
இது தொடர்பான உங்கள் பார்வை யாது?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/1/2025 at 09:42, Kapithan said:

November 07, 2017 கொழும்பில் U.S.  Acting Deputy Assistant Secretary Tom Vajda வைச் சந்திக்கும்போது எடுக்கப்பட்ட படம். 

என்னது? அப்பவே சாணக்கியன் தமிழரசுக்கட்சியில் அங்கம் வகித்தாரா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

என்னது? அப்பவே சாணக்கியன் தமிழரசுக்கட்சியில் அங்கம் வகித்தாரா?

எனக்கும் இந்த டவுட்டு இருக்கு… 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

என்னது? அப்பவே சாணக்கியன் தமிழரசுக்கட்சியில் அங்கம் வகித்தாரா?

11 minutes ago, MEERA said:

எனக்கும் இந்த டவுட்டு இருக்கு… 

2020’ம் ஆண்டுதான்…. சாணக்கியன் தமிழரசு கட்சிக்குள் வந்து போட்டியிட்டவர்.
அதற்கு முன் அவர்… மகிந்த கட்சியில் இருந்தவர்.

@Kapithan…. சுமந்திரனுக்கு  வெள்ளை அடிக்கும், அவசரத்தில்… இதுகளை கவனிக்காமல் விட்டு விட்டார். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

👇

கபிதன்... நான் இணைத்த படம் மூன்று கிழமைக்கு முன்பு,
யாழில் ஏராளனால், இணைக்கப்பட்ட செய்தியில் இருந்து எடுக்கப் பட்டது.

17. 12. 2024´ல் இணைக்கப் பட்ட  தலைப்பில், நீங்களும் கருத்து எழுதிவிட்டு.
இப்போ வந்து.... அது 2017´ம் ஆண்டில் எடுத்த படம் என்று
பச்சைப் பொய் சொல்லி,
சுமந்திரனுக்கு.. வெள்ளை அடிப்பதாக நினைத்துக் கொண்டு, 
மற்றவர்கள் மீது அவதூறு பரப்பி... முட்டாளக்கும் செயலை  செய்யாதீர்கள்.

இந்தத் தலைப்பு, தன்னுடைய பாட்டில்...  "தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!" என்பதுடன் முடிந்து இருக்க வேண்டியது.

அதற்குள்... நீங்களும், இன்னும் ஒருவரும்... திரிக்கு சம்பந்தமே இல்லாமல்,
பார் லைசன்சைப்  பற்றி கதைத்து,
சுமந்திரனை முச்சந்தியில் வைத்து 
துகில் உரியப்  பண்ணி விட்ட  பெருமை,
உங்கள் இருவரையுமே சாரும்.  😂

நீங்கள் இங்கு வந்து, சுய நினைவுடன் தான்  கருத்து எழுதுகின்றீர்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகின்றது.   மற்றவர்கள் மீது குற்றம் சொல்ல முதல் நன்கு யோசித்து சொல்வது உங்களுக்கு நல்லது. இத்தகைய செய்கைகளால்  உங்களுடன்  பலர்  கருத்தாடுவதை தவிர்த்து விட்டார்கள் என்பதை அறிவீர்கள் என நினைக்கின்றேன். 

இனியாவது சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் போது.... 
உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எழுதவும். 
அது, உங்கள் மீதுள்ள மரியாதையை தக்க வைக்கும்.
நன்றி.  🙏

19 hours ago, alvayan said:

அவர் கண்டுபிடிக்கமாட்டார்...தேவையற்ற விடையத்தை புகுத்தி திரியை மாற்றிவிடுவார்...

22 hours ago, Kapithan said:

பெருசு, 

2017 ல் எடுத்த படத்தை இணைத்த சிறியர் ஆதாரத்தை இணைத்தவுடன் ஆள் எஸ்கேப். 

தாங்ளும்  அல்வாயனும் வந்து அல்லாடுகிறீர்கள். 🤣

என்னது? அன்றே சாணக்கியன் தமிழரசுக்கட்சியில் இருந்தாரா?  ஐ .நா. பிரதிநிதி எப்போ அமெரிக்க தூதுவரானார்? சிலர் மற்றவரை முட்டாள்கள்,  தாங்கள் மேதாவிகள் என  நினைத்து தங்கள் முட்டள்தனத்தை பகிரங்கப்படுத்துகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

@Kapithan

IMG-3057.jpg
 
இது தொடர்பான உங்கள் பார்வை யாது?

அது என்ன விஷயமென்றால்; சிறிதரனுக்கும் விஷேட அழைப்பு வந்ததாம், அவர் விமான நிலையம் சென்றபோது, சி. ஐ. டி. அவரது பாஸ்போட்டில் தவறு இருக்கிறதென்று தடுத்து விட்டார்களாம். இதே கடவுச்சீட்டுடன் அண்மையில் மூன்று தடவைகள் இதே விமான நிலையத்தினூடாக வெளிநாட்டுக்கு சிறிதரன் சென்றிருக்கிறார். அப்போ இல்லாத பிழை இப்போ எப்படி வந்தது? அவரை தடுத்துவிட்டு, இவர்கள் முன்னுக்கு ஓடிப்போய் தங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என ஆதாரம் தெரிவிக்கினமாம். இதுதான் சட்ட மேதையின் திறன். "உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய்." என்று இருவரும் புலம்பும் நேரம் வரும். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தார்களா? உல்லாசம் அனுபவிக்க வந்தார்களா? "அழியிற காலத்துக்கு எழுகிறது அகந்தை." இதைத்தான் அத்தைக்குணம் என்று ஊரில் சொல்வார்கள்!     

சாணக்கியனோடு ஒட்டிக்கொண்டு திரிந்து பயிற்சி அளிக்கிறாராம். மக்களை எப்படி ஏமாற்றுவது, இரகசிய சந்திப்புகளை எப்படி நடத்துவதென்று. இருக்கட்டும், அவ்வளவு திறமையானவரை ஏன் கட்சியும், மக்களும் நிராகரித்தார்கள் என்பதை ஆய்ந்தறிய சாணக்கியனுக்கு அனுபவம் இல்லை. இவரில தொங்கிக்கொண்டு திரிந்தால் அது வராது, கபடப்புத்திதான் வளரும். 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, MEERA said:

@Kapithan

IMG-3057.jpg
 
இது தொடர்பான உங்கள் பார்வை யாது?

ஒருவரையும் நம்ப முடியாது. என்களுக்கென்று ஒரு தனி பேரம்பேசும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிங்களமும் எமக்கெதிரியல்ல , இந்தியனும் எமக் கெதிரியல்ல. எமது நலன் மட்டுமே எமக்கு முக்கியம். 

இதில் சாணக் சுமன் கனிமொழி எல்லோரும் காய்கள் மட்டுமே. 

(திமுக வின் அடுத்த தலைமை கனிமொழியிடம் போவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றது. அதற்கு ஸ்ராலினின் உடல் நலம் தொடர்பான வதந்தியும், தலைமை  உதயநிதியிடம் போவதற்கு தடையாக  அவரது  வயது கூட காரணமாக இருக்கலாம்.) 

23 minutes ago, satan said:

என்னது? அன்றே சாணக்கியன் தமிழரசுக்கட்சியில் இருந்தாரா?  ஐ .நா. பிரதிநிதி எப்போ அமெரிக்க தூதுவரானார்? சிலர் மற்றவரை முட்டாள்கள்,  தாங்கள் மேதாவிகள் என  நினைத்து தங்கள் முட்டள்தனத்தை பகிரங்கப்படுத்துகிறது. 

தங்களின் வாதம் சரியானது.  தலையைக் காட்டும் அவசரத்தில் கோவணம் அவிழ்ந்து விழுவதைக் கவனிக்க மறந்துவிட்டேன். ....🤣

28 minutes ago, தமிழ் சிறி said:

2020’ம் ஆண்டுதான்…. சாணக்கியன் தமிழரசு கட்சிக்குள் வந்து போட்டியிட்டவர்.
அதற்கு முன் அவர்… மகிந்த கட்சியில் இருந்தவர்.

@Kapithan…. சுமந்திரனுக்கு  வெள்ளை அடிக்கும், அவசரத்தில்… இதுகளை கவனிக்காமல் விட்டு விட்டார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

போன வாரந்தான், இந்தியாவின் கால் கழுவுகிறார்கள், ஏதோ குடிக்கிறார்கள் என்று ஒருவர் அநாகரிகமாக வர்ணித்தார். இப்போ, உறவு சிறிதரனுக்கு  முன் போய் இந்தியாவில் இறங்கி நின்று ஆதாரம் வெளியிடுகிறார். மாவையர் கூட்டத்துக்கு வருவதற்குமுன், அவரின் பதவியை பறிக்க அந்தரப்பட்ட சாணக்கியன் சுமந்திரன் கூட்டு, சிறிதரன் எங்கோ இருந்தார், நான் அவரோடு கதைக்கவுமில்லை, கட்சி எடுத்த முடிவை நான் அறிவித்தேன் என்று சிறுபிள்ளைத்தனமாக விளக்கம் கொடுக்கும் சுமந்திரன், ஆதாரத்தை வெளியிட்டு எங்கப்பன் குதிருக்குள்ளே இல்லை என்கிறார். பொய்யும் புரட்டும் பண்பாளர்களை ஒன்றும் பாதிக்காது. மாறாக தீயவர்கள் தாங்கள்  மக்களின் உண்மையான தலைவர்கள் இல்லை, அதற்கு பின்னால் இருக்கும் அவர்களின் சுயநலத்தை திரும்ப திரும்ப வெளிப்படுத்துகிறார்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, தமிழ் சிறி said:

2020’ம் ஆண்டுதான்…. சாணக்கியன் தமிழரசு கட்சிக்குள் வந்து போட்டியிட்டவர்.
அதற்கு முன் அவர்… மகிந்த கட்சியில் இருந்தவர்.

தெரியும் சிறியர். 2020’ம் ஆண்டு, தான் தேர்தலில் வெல்வதற்காக, அந்த அப்பாவி மக்களுக்கு தூசணப்பிக்கரை இறக்கி நாடகம் ஆடியதை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இந்த தேர்தலின்பின், வடக்கை எங்களிடம் தாருங்கள் என்று அறைகூவல் விட்டவர். அடுத்த தேர்தலில் காணாமல் போவார், உந்த குழப்பியின் சகவாசத்தை விட்டு விலகி உண்மையாக மக்களுக்கு சேவை செய்யாவிடில். கிழக்கில் மேய்ச்சல் தரை பறிப்பு விவகாரம் இன்னும் தீர்க்கப்படாமல் மக்கள் போராடுகிறார்கள். இதில வடக்கையும் தன்னட்ட தரட்டாம். அவ்வளவுதான் அவரின் அறிவு. தன்னை முன்னுக்கு கொண்டுவந்து, காட்ட துடிப்பவர். அதற்காக எப்படியும் மாறுவார், யாரோடும் சேர்வார், எந்தக்கட்சிக்குள்ளும் நுழைவார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அடிபட்டுக் களைச்சுப்போனேன் பெரிசு ,.🤣

உண்மையில் 7 நாளும் 12 மணித்தியால வேலை. ஒரு விடயத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. வேலையும், கொஞ்ச உடற்பயிற்சியும்,  வீடும் என்றிருக்கப்போவதாக முடிவெடுத்துள்ளேன். அனேகமாக ஞாயிறுடன் விடைபெறுவதாக முடிவு. அதுவரை பெரிசுடனும், அல்வாயனுடனும், சாத் மற்றும் சிறியருடன் முடிந்த அளவில் மல்லுக்கட்டுவதாக இருக்கிறேன். 🤣

உங்களுக்காக என் கருத்துக்கள் (போர் முறை) காத்துக்கிடக்கும்...

2 hours ago, குமாரசாமி said:

எனக்கும் அந்த ஐடியா ஒண்டு இருக்கு....

என்ன சாமியர் ..சமர் பார்ட்டி ஏதும் ஒழுங்குபண்ணப் போறியளோ...

நேரமுள்ள நேரம் காலாற ..ஒரு எட்டுநடை நடந்து வாருங்கோ..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

அடிபட்டுக் களைச்சுப்போனேன் பெரிசு ,.🤣

சரி உங்க ஆளை இனி உங்க நேரே திட்ட மாட்டேன் இது சத்தியம் பேராண்டி .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

@Kapithan

IMG-3057.jpg
 
இது தொடர்பான உங்கள் பார்வை யாது?

உந்த இரண்டு சகுனியளும் சேர்ந்து, வெகுவிரைவில் வடக்கு கிழக்கு பிரதேசவாதத்தை உருவாக்கி மக்களை அடிபட தூண்டப்போகுதுகள். போரின்பின், கனிமொழி இலங்கைக்கு வந்து மஹிந்தவின் உபசாரத்தில் மகிழ்ந்து வந்த நோக்கத்தையே மறந்து போனவா. பக்கத்தில நிக்கிற இரண்டும் மகிந்தவின் தரகர்கள், இதுகள் எங்கை தமிழர் பிரச்சனையை கதைக்கப்போகுதுகள்? அதில அவவின் அப்பா, ஈழத்தமிழர் அழியும்போது தனக்கு ஆதரவு தேடி நாடகம் நடித்த கதாநாயகன்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

அது என்ன விஷயமென்றால்; சிறிதரனுக்கும் விஷேட அழைப்பு வந்ததாம், அவர் விமான நிலையம் சென்றபோது, சி. ஐ. டி. அவரது பாஸ்போட்டில் தவறு இருக்கிறதென்று தடுத்து விட்டார்களாம். இதே கடவுச்சீட்டுடன் அண்மையில் மூன்று தடவைகள் இதே விமான நிலையத்தினூடாக வெளிநாட்டுக்கு சிறிதரன் சென்றிருக்கிறார். அப்போ இல்லாத பிழை இப்போ எப்படி வந்தது? அவரை தடுத்துவிட்டு, இவர்கள் முன்னுக்கு ஓடிப்போய் தங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என ஆதாரம் தெரிவிக்கினமாம். இதுதான் சட்ட மேதையின் திறன். "உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய்." என்று இருவரும் புலம்பும் நேரம் வரும். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தார்களா? உல்லாசம் அனுபவிக்க வந்தார்களா? "அழியிற காலத்துக்கு எழுகிறது அகந்தை." இதைத்தான் அத்தைக்குணம் என்று ஊரில் சொல்வார்கள்!     

சாணக்கியனோடு ஒட்டிக்கொண்டு திரிந்து பயிற்சி அளிக்கிறாராம். மக்களை எப்படி ஏமாற்றுவது, இரகசிய சந்திப்புகளை எப்படி நடத்துவதென்று. இருக்கட்டும், அவ்வளவு திறமையானவரை ஏன் கட்சியும், மக்களும் நிராகரித்தார்கள் என்பதை ஆய்ந்தறிய சாணக்கியனுக்கு அனுபவம் இல்லை. இவரில தொங்கிக்கொண்டு திரிந்தால் அது வராது, கபடப்புத்திதான் வளரும். 

ஓம் சிறிதரன் இதே கடவுச் சீட்டுடன் பிரித்தானியா கனடா என்று போய் வந்தவராம். 

தென் பகுதியும் இணைந்து சும் சாணக்ஸ் கூட்டை வளர்க்கிறார்கள் போல் தென் படுகிறது.

6 hours ago, Kapithan said:

ஒருவரையும் நம்ப முடியாது. என்களுக்கென்று ஒரு தனி பேரம்பேசும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும். சிங்களமும் எமக்கெதிரியல்ல , இந்தியனும் எமக் கெதிரியல்ல. எமது நலன் மட்டுமே எமக்கு முக்கியம். 

இதில் சாணக் சுமன் கனிமொழி எல்லோரும் காய்கள் மட்டுமே. 

(திமுக வின் அடுத்த தலைமை கனிமொழியிடம் போவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றது. அதற்கு ஸ்ராலினின் உடல் நலம் தொடர்பான வதந்தியும், தலைமை  உதயநிதியிடம் போவதற்கு தடையாக  அவரது  வயது கூட காரணமாக இருக்கலாம்.) 

நன்றி,

உங்கள் சுருதி சும் என்றவுடன் மாறுகிறதே!

இந்திய கோமியம், இந்தியாவின் கைக்கூலி என மற்றவர்களை நோக்கி கூச்சலிடும் தாங்கள் சும் என்றவுடன் பெட்டிப் பாம்பாகிறீர்கள்.

இனி தயவு செய்து மற்றவர்களை பார்த்து இப்படி கூறாதீர்கள். அதற்குரிய தகுதியையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

வேலைப்பழு காரணமாக எனது ஒரே ஒரு சமூக ஊடகமான யாழ் களத்தில் இருந்து முற்று முழுதாக விலகும் தேவை அதிகரித்து வருகிறது. அனேகமாக ஓரிரு தினங்களில்  முற்றாக விலகுவேன் என்று நினைக்கிறேன்.  இப்போது அல்வாயனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் . அப்பாடா,...சனியன் தொலைந்தது என்று நினைப்பார்,...🤣

தொடர்ந்து இருங்கள் . இதுவே இங்கு பலரது விருப்பமும் கூட. ஆனால் விலகினால் தயவு செய்து இன்னொரு முகமூடியை ( பெயரை) பயன்படுத்த வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அது என்ன விஷயமென்றால்; சிறிதரனுக்கும் விஷேட அழைப்பு வந்ததாம், அவர் விமான நிலையம் சென்றபோது, சி. ஐ. டி. அவரது பாஸ்போட்டில் தவறு இருக்கிறதென்று தடுத்து விட்டார்களாம். இதே கடவுச்சீட்டுடன் அண்மையில் மூன்று தடவைகள் இதே விமான நிலையத்தினூடாக வெளிநாட்டுக்கு சிறிதரன் சென்றிருக்கிறார். அப்போ இல்லாத பிழை இப்போ எப்படி வந்தது? அவரை தடுத்துவிட்டு, இவர்கள் முன்னுக்கு ஓடிப்போய் தங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என ஆதாரம் தெரிவிக்கினமாம். இதுதான் சட்ட மேதையின் திறன். "உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய்." என்று இருவரும் புலம்பும் நேரம் வரும். இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தார்களா? உல்லாசம் அனுபவிக்க வந்தார்களா? "அழியிற காலத்துக்கு எழுகிறது அகந்தை." இதைத்தான் அத்தைக்குணம் என்று ஊரில் சொல்வார்கள்!     

சாணக்கியனோடு ஒட்டிக்கொண்டு திரிந்து பயிற்சி அளிக்கிறாராம். மக்களை எப்படி ஏமாற்றுவது, இரகசிய சந்திப்புகளை எப்படி நடத்துவதென்று. இருக்கட்டும், அவ்வளவு திறமையானவரை ஏன் கட்சியும், மக்களும் நிராகரித்தார்கள் என்பதை ஆய்ந்தறிய சாணக்கியனுக்கு அனுபவம் இல்லை. இவரில தொங்கிக்கொண்டு திரிந்தால் அது வராது, கபடப்புத்திதான் வளரும். 

பின் கதவால்... கள்ள  பெட்டிசம் போடுவது, சுமந்திரனின்  தொழில்.
இந்த வேலையை, பல சந்தர்ப்பங்களில்....
தமிழரசு  கட்சி விவகாரங்களில்   செய்து விட்டு...
வெளியே தெரிந்தவுடன்...  நல்ல பிள்ளை மாதிரி, 
மறுப்பு தெரிவிப்பது அவரின் இரத்தத்தில் ஊறியது. 

"நாய் வாலை, நிமிர்த்த முடியாது."
"கிளீன் ஸ்ரீலங்கா"வில்... இதைப்  பிடித்து, குப்பை வாளிக்குள் போட வேண்டும். 

சுமந்திரனின் சுத்துமாத்து தெரிந்தும்..., அவருக்கு வக்காலத்து வாங்கும் 
ஒரு சிலரின் 
நோக்கம்  எப்படிப் பட்டது என்று, பார்க்கவே தெரிகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

பின் கதவால்... கள்ள  பெட்டிசம் போடுவது, சுமந்திரனின்  தொழில்.

சாதாரண மக்களுக்கெல்லாம் உந்தப்புத்தி வராது. உதுகள் பிறப்பிலேயே கிரிமினல் புத்தியோடு பிறந்திருக்குங்கள். அதென்ன பழக்கம்? ஒருவரின் நல்ல பெயரை கெடுப்பது, தான் விட்ட பிழையை முந்திக்கொண்டு மற்றவர் மேல் சுமத்துவது, ஒருவருக்கு சிறப்பு விருந்தினராக வந்த அழைப்பை தடுத்து, தான் போவது? ஒரே கட்சியை சேர்ந்தவர்கள், ஒரே நிகழ்வுக்கு போகிறார்கள், சிறியரை, தனிய சிக்கலில் மாட்டி விட்டு ஓடிப்போய்சந்திக்கினமாம்.  அங்குள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் இந்த பிரிச்சுக்கொட்டிகளை பார்த்து? இந்தத்திறத்தில இது, கட்சியின் தலைவர் பதவிக்கு அடிபடுகுது. சி .ஐ. டிக்கு இவரின் கடவுச் சீட்டில் தவறு இருக்கிறது என்று அறிவித்து, அவர்கள் குடி வரவு அகல்வு நிலையத்துக்கு அறிவித்தார்களாம். இந்த இரண்டு கோணங்கிகளை தவிர, யார் இதை செய்திருப்பார்கள்? இன்று சிறியர் விமான நிலையத்துக்கு வருவார் என்று யாருக்கு தெரியும்? யாருக்கு அந்த அவசியம்? முன்பெல்லாம் என்னை தனியாக அழைத்தார்கள் என்று ஓடித்திருந்தார், இப்போ அழையா விருந்தாளியா முன்னுக்கு ஓடித்திரியிறார். இப்ப, சிறியர் இதை மேல் விசாரணைக்கு கொண்டு போனால் தெரியும் யார் அந்த களவாளிகள் என்பது. பலநாள் கள்ளன் ஒருநாள் வசமாய் மாட்டாமலே போகப்போகிறார். கட்சியை முடக்கி வைத்துக்கொண்டு, அதன் பெயரால் ஊர் சுற்றுகிறார்கள். இந்த, கட்சி யாப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும். இப்படியான கோணங்கிகள் கட்சியை முடக்கி அவசர நிலையை ஏற்படுத்தும்போது, கட்சி வேலைகள் தடங்கல் ஏற்படாமல் எப்படி மீள்வது, இப்படியான குழப்பிகளை எப்படி கையாள்வது, அல்லது கட்டுப்படுத்துவது, கண்டிப்பாக, கொள்கைகளை மீறி செயற்படுபவர்களை உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும், இப்படியான கண்டிப்பான மாற்றங்களை கொண்டுவரவேண்டும் யாப்பில்.       

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, MEERA said:

நன்றி,

உங்கள் சுருதி சும் என்றவுடன் மாறுகிறதே!

இந்திய கோமியம், இந்தியாவின் கைக்கூலி என மற்றவர்களை நோக்கி கூச்சலிடும் தாங்கள் சும் என்றவுடன் பெட்டிப் பாம்பாகிறீர்கள்.

இனி தயவு செய்து மற்றவர்களை பார்த்து இப்படி கூறாதீர்கள். அதற்குரிய தகுதியையும் நீங்கள் இழந்து விட்டீர்கள். 

இங்கே சும் சாணக் என்பது அல்ல நான்  கூறியது.

இந்தியாவின் தென் கோடியில் அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பானது. இந்தியாவிலிருந்து தென் மாநிலங்களை இந்தியாவில் இருந்து  உடைக்கும் உளவியல் வேலைகள் ஆரம்பமாகி விட்டது. அதில் திமுக வின் பங்கு மிக  முக்கியம். திமுக வில் கனிமொழிக்கு இந்திய அரசியல்வாதிகளிடையே  மரியாதை உண்டு. அதற்கு அவரது கல்விப் பின்னணி முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் இவர்களது சந்திப்பு  Positive ஆக எனக்குத் தோன்றியது.

சாணக்கியனும் சுமந்திரனும் இந்திய பின்புலம் இல்லாதவர்கள். இதே இடத்தில் செல்வம் அடைக்கலநாதனோ அல்லது சுரஸ் பிறேமச்சந்திரன் கனிமொழியைச் சந்தித்திருந்தால் எனது பதில் வேறுவிதமாக இருந்திருக்கும். ஏனென்றால் அவர்கள் இந்தியாவின் கருவிகள். 

6 hours ago, MEERA said:

தொடர்ந்து இருங்கள் . இதுவே இங்கு பலரது விருப்பமும் கூட. ஆனால் விலகினால் தயவு செய்து இன்னொரு முகமூடியை ( பெயரை) பயன்படுத்த வேண்டாம்.

இன்னொரு முகமூடியுடன் வருவதற்கு எனக்குத் தேவையிருப்பதாகக் கருதுகிறீர்களா? 

நான்  எப்போதுமே முகத்துக்கு நேராகக் கதைப்பவன். உங்களுடன் முரண்படும்போது கூட இரட்டை அர்த்தத்தில் கருத்துக் கூறுவதில்லை. எனவே தங்களுக்கு அந்தப் பயம் தேவையற்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

இங்கே சும் சாணக் என்பது அல்ல நான்  கூறியது.

இந்தியாவின் தென் கோடியில் அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தொடர்பானது. இந்தியாவிலிருந்து தென் மாநிலங்களை இந்தியாவில் இருந்து  உடைக்கும் உளவியல் வேலைகள் ஆரம்பமாகி விட்டது. அதில் திமுக வின் பங்கு மிக  முக்கியம். திமுக வில் கனிமொழிக்கு இந்திய அரசியல்வாதிகளிடையே  மரியாதை உண்டு. அதற்கு அவரது கல்விப் பின்னணி முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் இவர்களது சந்திப்பு  Positive ஆக எனக்குத் தோன்றியது.

சாணக்கியனும் சுமந்திரனும் இந்திய பின்புலம் இல்லாதவர்கள். இதே இடத்தில் செல்வம் அடைக்கலநாதனோ அல்லது சுரஸ் பிறேமச்சந்திரன் கனிமொழியைச் சந்தித்திருந்தால் எனது பதில் வேறுவிதமாக இருந்திருக்கும். ஏனென்றால் அவர்கள் இந்தியாவின் கருவிகள். 

இவ் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது.

இன்று இந்திய புலம் இல்லாதவர்கள் நாளை இந்திய புலம் உள்ளவர்களாக மாற முடியும்.

மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இன்று  சாணக்கியனின் செருப்பில்  தொங்கி / பயணம் செய்து அரசியல் செய்ய வேண்டிய நிலை.

சும் மின் மீதான உங்களின் அடிமைத்தனம் உங்களை ஒருபோதும் விட்டகலாது. 

பிகு : கனியின் திகார் சம்பவத்தை மறந்து விட்டீர்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.