Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

நான் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னின் கொள்கையை பார்த்து வள‌ந்த‌வ‌ன்💪👍.................

ஓம்…நான் 95 போர் நிறுத்தம் வரைக்கும் ஊரில் வாழ்ந்தவன், அதன் பின் 2001 வரை தெற்கில் இருந்த போதும் வடக்கு கிழக்கு எங்கும் போய் வந்தவன், வாழ்ந்தவன்.

ஒழுங்காக பிடித்து உச்சா போக தெரியாத வயதில் டென்மார்க் வந்து, சீமானிடம் ஈழப்போராட்டம் பற்றி படித்தவர் நீங்கள்.

நீங்கள் சொல்வது சரிதான்.

யாழ்பாணத்தில் உங்கள் ஊரை விட்டு வெளியே கொண்டே அடுத்த ஊரில் விட்டால் கூட வழி தெரியாது தொலையகூடியவர்கள் எல்லாம், பிராபாக்ரனிடம் கொள்கை படித்தார்களாம் 🤣.

அண்ணனை போலவே, அளப்பதில் ஒரு வஞ்சகமும் தம்பி செய்வதில்லை. 

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஓம்…நான் 95 போர் நிறுத்தம் வரைக்கும் ஊரில் வாழ்ந்தவன், அதன் பின் 2001 வரை தெற்கில் இருந்த போதும் வடக்கு கிழக்கு எங்கும் போய் வந்தவன், வாழ்ந்தவன்.

ஒழுங்காக பிடித்து உச்சா போக தெரியாத வயதில் டென்மார்க் வந்து, சீமானிடம் ஈழப்போராட்டம் பற்றி படித்தவர் நீங்கள்.

நீங்கள் சொல்வது சரிதான்.

யாழ்பாணத்தில் உங்கள் ஊரை விட்டு வெளியே கொண்டே அடுத்த ஊரில் விட்டால் கூட வழி தெரியாது தொலையகூடியவர்கள் எல்லாம், பிராபாக்ரனிடம் கொள்கை படித்தார்களாம் 🤣.

அண்ணனை போலவே, அளப்பதில் ஒரு வஞ்சகமும் தம்பி செய்வதில்லை. 

நானும் சின்ன‌ ப‌ய‌தில் குண்டு ச‌த்த‌ங்க‌ளை கேட்டு ப‌சி ப‌ட்டினியோடு இருந்து இருக்கிறேன்.................பெரிய‌வ‌ர்க‌ள் ச‌மைச்சு த‌ர‌ அந்த‌ உண‌வை த‌னி ஒருவ‌னாக‌ கொண்டு போய் போராளிக‌ள் கையில் கொடுத்து இருக்கிறேன் என‌து வ‌ய‌துக்கும் செய‌லுக்கும் நிறைய‌ வித்தியாச‌ம்

ஈழ‌ போராட்ட‌த்தை நான் ஈழ‌ ம‌ண்ணிலே க‌ரைச்சு குடிச்ச‌ நான் புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்தாப் பிற‌க்கு ஊரில் பார்க்க‌ முடியாத‌ சில‌ காணொளிக‌ள் புல‌ம்பெய‌ர் நாட்டில் பார்த்தேன்.................மீசாலையில் இருந்த‌ போது புலிகளின்குரல் வானொலியில் பணி புரிபவர்கள் எங்க‌ட‌ வீட்டுக்கு வ‌ந்து போவ‌து வ‌ழ‌க்க‌ம்...............கார‌னம் என்ர‌ சித்த‌ப்பா தான் அவ‌ர்க‌ளின் வாக‌ன‌ங்க‌ளை திருத்தி கொடுப்பார்..............புலிக‌ளின்குர‌ல் வானொலி இர‌வு நேர‌ம் நாம் தொட‌ர்ந்து கேக்க‌ கூடிய‌ மாதிரி இருந்த‌து.................. க‌ருத்து எழுதும் உற‌வுக‌ளை ப‌ற்றி தெரியாட்டி க‌ம்ம‌ன்ன‌ இருக்க‌னும்.................சும்மா க‌ண்ட‌ மேனிக்கு எழுத‌க் கூடாது....................

நான் பொட்டு அம்மானையும் பார்க்க‌ வில்லை த‌ள‌ப‌திக‌ளையும் பார்க்க‌ வில்லை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் போல் என‌க்கு க‌ற்ப‌னையில் அடிச்சுவிட‌வும் தெரியாது..............எங்க‌ட‌ சொந்த‌த்தில் 6பேர் மாவீர‌ர்க‌ள்🙏😢......................

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

ஓம்…நான் 95 போர் நிறுத்தம் வரைக்கும் ஊரில் வாழ்ந்தவன், அதன் பின் 2001 வரை தெற்கில் இருந்த போதும் வடக்கு கிழக்கு எங்கும் போய் வந்தவன், வாழ்ந்தவன்.

ஒழுங்காக பிடித்து உச்சா போக தெரியாத வயதில் டென்மார்க் வந்து, சீமானிடம் ஈழப்போராட்டம் பற்றி படித்தவர் நீங்கள்.

நீங்கள் சொல்வது சரிதான்.

யாழ்பாணத்தில் உங்கள் ஊரை விட்டு வெளியே கொண்டே அடுத்த ஊரில் விட்டால் கூட வழி தெரியாது தொலையகூடியவர்கள் எல்லாம், பிராபாக்ரனிடம் கொள்கை படித்தார்களாம் 🤣.

அண்ணனை போலவே, அளப்பதில் ஒரு வஞ்சகமும் தம்பி செய்வதில்லை. 

1996ம் ஆண்டு சிங்க‌ள‌ இரானும் சாவகச்சேரிய‌ பிடிச்சு மீசாலையை பிடிக்கும் முனைப்புட‌ன் ப‌ய‌ங்க‌ர‌ செல் தாக்குத‌லோட‌ முன்னேறி கொண்டு வ‌ந்தாங்க‌ள்

மீசாலை அருகில் எப்ப‌வும் இல்லாத‌ அள‌வுக்கு குண்டு ம‌ழை அந்த‌ குண்டு ம‌ழைக்கு அருகில்  த‌னிய‌ போய் சொன்னான் மாமாவுக்கு நாங்க‌ள் வ‌ன்னிக்கு போக‌ போகிறோம் அத்தை உங்க‌ளையும் வ‌ர‌ சொல்லுகிறா என்று 

சிங்க‌ள‌ இராணுவ‌ம்  அடிச்ச‌ செல்க‌ள் நில‌ ந‌டுக்க‌ம் போல் எல்லா ப‌க்க‌மும் அதிருது அந்த‌ சிறு வ‌ய‌தில் நினைத்தேன் திரும்ப‌ அத்தை வீட்டை உயிருட‌ன் போவேனா என‌

ஏதோ த‌ப்பிச்சு கிளாலி க‌ட‌லில் ஒரு இர‌வு த‌ங்கி அடுத்த‌ நாள் பின்னேர‌ம் தான் ப‌ர‌ந்த‌ன் வ‌ந்து சேர்ந்தோம் அப்ப‌வும் ஜெட் விமான‌ம் வானால் ப‌ற‌ந்த‌ ப‌டி..................இப்ப‌டி ப‌ல‌ துய‌ர‌ங்க‌ளை ஈழ‌ ம‌ண்ணில் அனுப‌வித்து விட்டு தான் புலம்பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்தேன்................இதே துய‌ரம் நீங்க‌ளும் ப‌ட்டு இருக்க‌லாம்😞...................

  • கருத்துக்கள உறவுகள்

2015 இல் அமரதாஸ் எழுதிய பதிவு பத்து வருடம் கழிந்தும் அடிப்படை மாறாமல் உள்ளது.

ஓ ரசிக்கும் சீமானே…

widevisionstudio2025-01-26T21:34:06+00:00
Snap-2025-01-26-at-20.32.35.jpg
Snap-2025-01-26-at-20.32.35-1024x689.jpg

தமிழ்த் திரைப்பட இயக்குநராக அறியப்பட்டு ஈழப் பயணத்திற்குப் பின்னர் ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருக்கும் சீமான் அவர்கள், ஈழப் பயணம் தொடர்பான பொய்களையும் புனைவுத் தகவல்களையும் பொதுவெளியில் அவ்வப்போது பகிர்ந்திருக்கிறார்.

புனைகதைகளை உருவாக்கிப் பிறர் ரசிக்கும் விதத்தில் நடித்து ரசித்து வெளிப்படுத்துவதில் ‘வல்லவர்’ என்று சீமான் அறியப்படுகிறார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திரைப்பட உருவாக்கப் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த சேரலாதன் அவர்களால் வன்னிக்கு வரவழைக்கப்பட்டிருந்த சீமான், ‘எல்லாளன்’ திரைப்படக் குழுவினரோடு தங்கவைக்கப்பட்டிருந்தார். சேரலாதனின் ஏற்பாட்டில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்கள் பலரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மற்றபடி, ‘எல்லாளன்’ திரைப்பட உருவாக்கத்திற்கும் அவருக்கும் தொடர்பு இருக்கவில்லை.

இரண்டு வாரங்களுக்கான பயண அனுமதியோடு (Visa) இலங்கை வந்து சில நாட்கள் மட்டுமே வன்னிக்குள் இருந்துவிட்டு, தமிழ்நாட்டுக்குத் திரும்பிச் சென்றவர் சீமான். பிறகு, ஒரு மாதம் வன்னியில் இருந்ததாகப் பொதுவெளியிற் பொய் சொல்லியிருக்கிறார்.

வெள்ளை மேலாடை அணிந்த நிலையில் ஆயுதங்களுடன் சீமான் இருப்பது போன்ற ஒளிப்படங்கள் பரவலாக்கப்பட்டு, அவை ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டபோது பதிவுசெய்யப்பட்டவை என்னும் தவறான ‘தோற்றப்பாடு’ உருவாக்கப்படுகிறது.

‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நிகழ்ந்துகொண்டிருந்த ஒரு இடத்திற்கு வந்திருந்த சீமானின் விருப்ப வேண்டுகோளுக்கு அமைவாக, அந்த ஒளிப்படங்களை நான் உருவாக்கியிருந்தேன். 

அப்போது, ‘எல்லாளன்’ திரைப்படத்திற்கான ஒளிப்படக்கலை சார்ந்த பணிகள் அனைத்தும் எனது பொறுப்பில் மேற்கொள்ளப்பட்டன.

அத் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு ஒரு நாள் வந்திருந்த சீமான், படப்பிடிப்பு சார்ந்த பயன்பாட்டிற்காக அங்கிருந்த ஆயுதங்களைக் கண்டு ஆவலாதிப்பட்டார். அவற்றோடு தான் இருப்பதுபோல ஒளிப்படங்களை உருவாக்குமாறு வேண்டிக்கொண்டார். அதன் பிறகு, பின்னணியைத் தேர்வுசெய்து அவரை நிறுத்தி வைத்து ஆயுதங்களைப் பிடிக்கும் விதத்தை ‘ஓரளவு’ சரிசெய்து ஒளிப்படங்களை உருவாக்கினேன். அப்போது அங்கு நிகழ்ந்த அங்கதச் சம்பவங்களை இப்போது விரித்துரைக்க வேண்டியதில்லை. அப்போது அருகில் இருந்த ஒருவர் மூலம், அந்த ஒளிப்படங்களைத் தமிழ்நாட்டில் இருந்து பின்னர் பெற்றுக்கொண்டார் சீமான்.

எல்லாளன் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஸ் அவர்களுடன் இறுதிப் போர் முடியும் தறுவாயில் சூசை அவர்கள் (கடற்புலிகள் பிரிவின் தளபதி) தொலைபேசி மூலம் உரையாடியிருந்தார். அந்த உரையாடலின் பதிவைக் கேட்டு வாங்கிய சீமான், பொய்யான தகவல்களோடு அரசியல் உள்நோக்கத்துடன் பயன்படுத்தியிருக்கிறார். (அதில் சூசை பேசியிருக்கும் விடயங்கள் தனியாக நோக்கப்பட வேண்டியவை.) 

தான் உறக்கத்தில் இருந்தபோது தனது தொலைபேசியில் சூசையின் அழைப்பு வந்ததாகவும் தனது உதவியாளர் அந்த அழைப்பில் சூசையுடன் உரையாடியதாகவும் ஒரு புனைகதையைக் கட்டிவிட்டிருக்கிறார் சீமான். சந்தோஸ், சீமானின் உதவியாளர் அல்ல. சூசையுடன் அவர் உரையாடியபோது சீமான் அருகிலேயே இருக்கவில்லை. சூசை, சந்தோஸ் ஆகியோருடன் பழகியிருக்கும் என்னால், அந்த உரையாடலின் ‘உண்மைத்தன்மை’ உறுதிசெய்யப்படக்கூடியது. எல்லாளன் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஸ், அத் திரைப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். 

சூசையின் தொலைபேசி உரையாடல், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரபூர்வ அறிக்கையிடல் அல்ல. நெருக்கடிகள் நிறைந்த சூழ்நிலையில் அவர் காயப்பட்டிருந்தபோது தனக்குத் தெரிந்த தமிழ் நாட்டு ‘ஆதரவாளர்கள்’ சிலரது பெயர்களை மட்டும் நினைவுபடுத்திப் பயன்படுத்தியிருக்கிறார். அந்த உரையாடல், சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை சார்ந்து (context) புரிந்துகொள்ளப்பட வேண்டியது. 

சந்தோஸ் வைத்திருந்த உரையாடலின் பதிவைத் தருமாறு கேட்டுப் பெற்றுக்கொண்ட சீமான், அது பற்றிய பொய்யான தகவல்களோடு தன் கட்சி அரசியலுக்கான முதலீடு ஆக்கிக்கொண்டார். கட்சியின் தொடக்க நிகழ்வில் அதை அவர் ஒலிபரப்பியதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகச் சூழலில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் அவர்களை வலிந்து திணிக்கும் வகையிலான சீமானின் பிரயத்தனங்கள் ஆபத்தானவை.

வன்னியில் மட்டுமல்ல, இறுதிப் போர் முடிந்த பிறகு தமிழ்நாட்டிலும் சீமானை நான் சந்தித்திக்க முடிந்தது..ஒரு திரைப்படக் கலைஞராக அறிமுகமாகியிருந்த சீமான், ‘நாம் தமிழர் கட்சி’ ஒருங்கிணைப்பாளராக மாறியிருந்தார். 

அவரது ஈழப் பயணம் பற்றி நான் அறிந்திருந்ததாலோ என்னவோ, ஒருவித எச்சரிக்கை உணர்வுடன் அல்லது தயக்கத்துடன் அப்போது அவர் இருந்ததாகத் தோன்றியது. அவர் கேட்ட முதற் கேள்வி ‘அண்ணனுக்கும் (பிரபாகரன்), சேரா வுக்கும் (சேரலாதன்) என்ன நடந்தது?’ என்பதுதான். அவர்கள் ‘தியாகச் சாவு’ அடைந்துவிட்டமை பற்றிச் சொன்னேன். திரு. கொளத்தூர் மணி, திரு. தியாகு போன்றவர்களையும் அக் காலத்தில் நான் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.

சீமானின் ஈழப் பயணம், அவரது அரசியற் செயற்பாடுகளின் போதாமைகள் போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பல வருடங்களுக்கு முன்னர் ஒரு திறந்த மடல் எழுதியிருந்தேன்.

வன்னியில் சீமான் தங்கியிருந்தபோது பிரபாகரனைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தார். அதற்கு முன்னரே தமிழ்நாட்டில் இருந்து ஈழத்திற்கு வந்து சென்ற சிலர் பிரபாகரனைச் சந்தித்திருக்கிறார்கள். அவருடன் சாதாரணமாக நிகழ்த்தப்பட்ட சந்திப்பை மையப்படுத்தி, அரசியல் ரீதியான ஆதாயங்களைப் பெறும் உள்நோக்கத்துடன் கட்டுக்கதைகளை உருவாக்கியிருக்கிறார் சீமான். 

நடந்து முடிந்த நிகழ்வுகளைத் திரிபுபடுத்தியும் நடக்காதவற்றைப் புனைந்தும் சீமான் சொல்லியிருப்பவற்றைப் பகுப்பாய்வு செய்து பட்டியலிடுவது சிரமமான காரியம். பல விடயங்களையும் அவர் சிக்கலாக்கி வைத்திருக்கிறார். ஈழப் பயணத்தில் அவரோடு சம்மந்தப்பட்டிருந்த பலர் இப்போது இல்லை. வன்னியில் அவரோடு பழகிய சிலர் அவரது ஆதரவாளர்களாக மாறிப் பொய் சொல்லக்கூடும். அவரது குளறுபடிகளை அறிந்த சிலர் அமைதியாக இருக்கிறார்கள். இக் கட்டுரை சார்ந்த எதிர்வினைகள், அவதூறுகளாகவோ மடைமாற்றக் கருத்துகளாகவோ அல்லாமல் ஆக்கபூர்வமானவையாக வெளிப்படுமாயின் நன்று.. 

எனக்குத் தெரிந்த விடயங்களையும் நான் சம்மந்தப்பட்டிருந்த நிகழ்வுகளையும் ஒரு சுயாதீன ஊடகராகப் பதிவு செய்வது அவசியம் என்று தோன்றியது.

ஈழத்தமிழ்த் தேசியம் தமிழ்நாட்டுத் தமிழ்த் தேசியத்திற்கு மாற்றீடு ஆக முடியாது. ஆனால், இரண்டுக்குமான அடிப்படை வேறுபாடுகள் மற்றும் பொதுத் தன்மைகள் விவாதிக்கப்பட வேண்டியவை.

சீமானின் சில பேச்சுகளும் நடவடிக்கைகளும், தேசியவாதம் சார்ந்த சிந்தனைகளைத் தமிழ்த் தேசிய அடிப்படைவாதமாக மடைமாற்றும் வகையில் அமைந்துவிடுகின்றன.பொதுவெளியில் அவர் பேசும் சில விடயங்களும் கேள்விகளை எதிர்கொள்ளும் தோரணைகளும் ஒரு அடிப்படைவாதியாக அவரைக் காண்பித்துவிடுகின்றன. அண்மையிற் கூட, ‘தூய இரத்தம்’ பற்றிப் பேசியிருக்கிறார். அடிப்படைவாத மனத்தின் ஆபத்தான குரல் அது. ‘இனத்தூய்மைவாதம்’ சார்ந்த நிலைப்பாடுகள் மானுட விரோதச் செயல்களுக்கு இட்டுச்செல்லக்கூடியவை.

தமிழ் நாட்டின் அரசியற் சூழல், ஈழத்தமிழ் அரசியற் சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. ஈழத்தின் போராட்ட இயக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்த பிரபாகரனை வலிந்து முன்நிறுத்துவதன் மூலம் புதியதொரு அடையாள அரசியலைக் குறுக்கு வழியிற் கட்டமைக்க விழைகிறார் சீமான்.  

சமூகச் சீர்திருத்தவாதி ஈ. வெ. ராமசாமி அவர்களையும் ஏனைய சில அரசியற் கட்சிகளையும் அரசியல் சார்ந்த தலைவர்களையும் எதிர்ப்பதற்கான ஆயுதமாகப் பிரபாகரனைச் சீமான் கட்டமைத்துப் பயன்படுத்திக்கொள்ளும் விதம் ஆரோக்கியமானதல்ல..  

பிரபாகரனை மகிமைப்படுத்துவதான தோரணையில், அவரைக் கேடயமாக்கிக் கட்சி அரசியற் களத்தில் முன்நிறுத்தும் சீமானுக்குப் பிரபாகரனின் ‘புகழ் வெளிச்சம்’ மட்டுமே இப்போதைய தேவை. மற்றபடி, பிரபாகரனை விமர்சனபூர்வமாக அணுகக்கூடிய திராணியும் நேர்மையும் விடுதலை அரசியல் சார் புரிதலும் சீமானிடம் இல்லை. 

தமிழ்நாட்டில் பிரபாகரனைப் ‘பணயம்’ வைத்து, அரசியல் ரீதியாகச் சீமான் தொடரக்கூடிய ‘சூதாட்டம்’ கண்டனத்திற்குரியது.

ஈ. வெ. ரா. போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளும் பிரபாாகரன் போன்ற போராளிகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.  நடைமுறைத் தேவைகளுக்கும் சனநாயக விழுமியங்களுக்கும் மனித உரிமைகளுக்கும் அமைவாக, எத்தகைய சித்தாந்தங்களும் மேம்படுத்தப்பட வேண்டியவை. மாற்றுக் கருத்துகளையோ அவதூறுகளையோ கண்டு பதற்றமடையாமல் அறிவுபூர்வமாக எதிர்வினையாற்றுவதன் மூலமே ‘எதிர்ப்பு அரசியல்’ நடைமுறைகளைப் பலப்படுத்த முடியும். தனிமனித வழிபாடு’ மற்றும் ‘தனிமனித அவதூறு’ போன்றவை, மானுட இழி செயல்களாகவே பார்க்கப்பட வேண்டியவை. எத்தகைய விடயங்களும் ஆரோக்கியமான வழிமுறைகளில் விவாதிக்கப்படக்கூடியவை.

தனது ஈழப் பயணம் தொடர்பான புனைகதைகளைச் சுயலாப அரசியல் உள்நோக்கத்துடன் இட்டுக்கட்டி வெளிப்படுத்தும் இழி செயலை இனியாவது சீமான் நிறுத்த வேண்டும். 

தவிர்க்க முடியாத ஒரு அரசியற் சக்தியாகத் தமிழ் நாட்டில் ‘நாம் தமிழர் கட்சி’ உருவாகி வருகிறது. அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொண்டும் அரசியல் நிலைப்பாடுகளைத் திருத்தியமைத்துக்கொண்டும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை ஆரோக்கியமான வழிமுறைகளில் மேற்கொள்ள முன்வருவாரா?

சீமானின் இப்போதைய அதிகபட்ச இலக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவது. அதனால், தமிழ்நாட்டுத் தமிழருக்கும் ஈழத்தமிழருக்கும் புதுவித நன்மைகள் நடக்குமென்றால் அது வரவேற்கப்படலாம். இந்திய அரசியல் அமைப்பின் விதிகளுக்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டிய முதலமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு அவரால் என்னவெல்லாம் செய்ய முடியும்?   

2015-01-25

அமரதாஸ்

20250120_133614.jpg

இவை, ‘எல்லாளன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் உருவாக்கப்பட்ட ஒளிப்படங்கள்.

https://widevisionstudio.com/archives/3812?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0isTEPYSOPsx80PY_CUOgdyqft-okNG13REK0hbGfwJnt77nIVS4wy5vw_aem_Niv3yqN7HZJetZhNUOIRig

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

2015 இல் அமரதாஸ் எழுதிய பதிவு பத்து வருடம் கழிந்தும் அடிப்படை மாறாமல் உள்ளது.

சிறப்பான கட்டுரை

அடிப்படைவாத மனத்தின் ஆபத்தான குரல்   சீமானுடையது
மானுட விரோத செயல்பாடுகள்  சீமானுடையது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

சிறப்பான கட்டுரை

அடிப்படைவாத மனத்தின் ஆபத்தான குரல்   சீமானுடையது
மானுட விரோத செயல்பாடுகள்  சீமானுடையது

த‌லைவ‌ரின் ப‌ட‌த்தை எங்கு போட்டாலும் ஓடி ஓடி வ‌ந்து நீக்கும் உல‌கில் அவ‌ரை ப‌ய‌ங்க‌ர‌வாதி அது இது என‌ ப‌ல‌ க‌ட்டுக்க‌தைக‌ள்

அவ‌ர்க‌ளுக்கு ம‌த்தியில் சீமான் த‌லைவ‌ர் ப‌ட‌த்தை ப‌ல‌ரிட‌ம் கொண்டு சேர்ப்ப‌து இங்கு ப‌ல‌ருக்கு பிடிப்ப‌தில்லை

அப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ள் யார் இவ‌ர்க‌ள் யாருக்கான‌ ஆட்க‌ள்............சொல்லுங்கோ உற‌வே 

அர‌சிய‌லில் வைக்கோ , க‌ருணாநிதி சொல்லாத‌ பொய்யையா சீமான் சொல்லி விட்டார்  , அவ‌ர் அவ‌ர் க‌ற்ப‌னையில் ஆயிர‌ம் சொல்லுவினம் ஆனால் அது உண்மை ஆகி விடுமா

சீமான் ச‌ரி இல்லை

2009க்கு முன் த‌லைவ‌ருக்கு வேண்ட‌ ப‌ட்ட‌வை 2009ம் ஆண்டு என்ன‌ செய்தார்க‌ள்..............இத‌ற்க்கு உங்க‌ளிட‌த்தில் ப‌தில் இருக்கா இருந்தா எழுதுங்கோ வாசித்து தெரிந்து கொள்ளுகிறேன் உற‌வே👍......................

  • கருத்துக்கள உறவுகள்
On 25/1/2025 at 18:33, வைரவன் said:

உங்கள் டிசைன் அப்படி பாஸ்

ஒருத்தர் ஒன்றை சொன்னால் அப்படியே நம்புவது

நீங்கள் இந்த திரியை இணைக்கும் போதே உங்கள் நோக்கம் நன்றாக தெரிகிறது. இதில உங்கட ப்ரோபைலை வேற தேடவா வேண்டும். 

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான காலத்தில் தினமும் 1 டாலர், என்ற மாதிரி ஒரு திட்டத்தைப் புலிகள் வெளிநாட்டுத் தமிழ் மக்களிடம் கொண்டு வந்தார்கள். அதற்கே பெரும் பிரச்சனை பண்ணி, அந்தந்த நாட்டு அரசுகளிடம் போட்டுக் கொடுத்துப் புலிகளுக்கு தடைகள் விழவும் சிலர் சிறை செல்லவும் காரணங்களை உருவாக்கியவர்கள், சீமானுக்கு ஏதோ  புலம்பெயர் நாடுகளில் இருந்து கோடிகளாகப் பணம் போவதாக உருட்டுவது எல்லாம் நகைச்சுவை. 

ஐயா. பொன் தியாகத்தின் செலவுகளுக்குக் கூட நாம் தமிழர் தான் செய்து கொண்டிருக்கின்றது. 

இங்கே சீமான் பொய்  பேசுகின்றார், புரணி பேசுகின்றார் என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் 15 வருடங்களாக ஈழத்தையே பேசுகின்றார். வைகோ,  கௌத்தூர் மணி எல்லாம் 15 வருடங்களாக எங்கே சென்றுவிட்டார்கள். புலிகள் அழிந்து விட்டார்கள் என்று அப்படியே தூக்கி எறிந்துவிட்டார்கள். ஒரு வேளை சீமான் இல்லை என்றால் இவர்கள் அங்கே ஒரு போராட்டம் நடந்தது என்பதையே தமிழக மக்களிடம் மறைத்திருப்பார்கள் அல்லவா?

சீமான் ஈழப் போராட்டத்தில் மற்றவர்கள் போல விளக்கம் உள்ளவர் அல்ல.  என்ன, எவற்றை எப்போது பேச வேண்டும் என்ற தெளிவின்மை அவரது குறைபாடு தான்.  புலிகளின் விருந்துபுசாரத்தை விட,  அங்கே நடந்த போரக்குற்றங்களை முன்னிலைப்படுத்தி இருக்க வேண்டும். அவர் பேசிய ஆமைக்கறி விடயம் இப்படி. எதிராக மாற்றப்படும் என்பதை அவர் எதிர்பார்த்து இருக்கமாட்டார்.  ஆனால் அது ஒன்றும் பெரிய குற்றமல்ல. 

தலைவர் தமிழகத்தில் ஏற்படுத்த நினைத்த மாற்றத்தை சரியாகவே உருவாக்கினார். புதுவை இரத்தினதுரையின் குரலில் தமிழக ஆதரவை வேண்டி வெளியிடப்பட்ட 2 ஒளிப்பதிவுகளை வன்னியரசு சரியாகத் தமிழக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கவில்லை.  அதைச் சீமான் கிட்ட கொடுத்துவிட்டிருக்கலாம்.

கருணா, டக்ளஸ் பற்றிப் பேசதா வாய்கள், எதற்காகச் சீமானை விழுத்தத் துடிக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட காலத்தின் பின் தூயவனை காண்பதில் மகிழ்ச்சி!

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தூயவன் said:

நீங்க‌ள் எழுதின‌தை யாழில் சில‌ உற‌வுக‌ளும் அந்த‌க் கால‌த்தில் எழுதி இருந்த‌வை.............எம் போராட்ட‌த்துக்கு காசு சேர்க்கும் ந‌ப‌ர்க‌ள் போனால் க‌த‌வே திற‌க்க‌ மாட்டின‌மாம்.............அப்ப‌டி இருக்கையில் சீமானுக்கு எங்கை இருந்து ப‌ண‌ம் போகுது என்று என‌க்கு தெரியாது..............

குள‌த்தூர் ம‌ணி , வைக்கோ , இவ‌ர்க‌ள் திராவிட‌ வெறிய‌ர்க‌ள் , இவ‌ர்க‌ளுக்கு ஈழ‌த்தை விட‌ திராவிட‌ம் தான் முக்கிய‌ம் , குள‌த்தூர் ம‌ணி மூன்று வ‌ருட‌த்துக்கு முத‌லே அதை வெளிப்ப‌டையாய் சொல்லி இருந்தார் ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் உங்க‌ளுக்காக‌ நாங்க‌ள் இங்கு அர‌சிய‌ல் செய்ய‌ வில்லை என‌ , 

 சீமான் ஓங்கி சொறியார‌ அடிக்க‌ , ப‌துங்கி இருந்த‌ கூட்ட‌ங்க‌ள் நானும் சொறியாரிஸ் தான் அது இது என‌ வெளியில் வ‌ருதுக‌ள்.............இதுக‌ள் எல்லாம் 2009க‌ளில் என்ன‌ செய்திச்சின‌ம் ஒன்றும் இல்லை...........முத்துக்குமார் மூட்டிய‌ தீயை திராவிட‌ம் முத்துக்குமார் காத‌ல் தோல்வியால் தீ மூட்டி இற‌ந்து விட்டார் என‌ அவ‌தூற‌ ப‌ர‌ப்பி முத்துக்குமாரின் தியாக‌த்தை கொச்சை ப‌டுத்திய‌து தான் திராவிட‌ம்..................சில‌ அரைவேக்காடுக‌ளுக்கு நினைப்பு த‌மிழில் எழுத‌ தெரிஞ்சாப் போல‌ தாங்க‌ள் ஏதோ பெரிய‌ சூப்ப‌ர் கீரோ என‌ , அவ‌ர்க‌ள் கீரோ கிடையாது சீரோ 000000000000

ஆம் நீங்க‌ள் சொல்வ‌து போல் சீமான் ப‌ல‌ இட‌ங்க‌ளில் தானாக‌வே பொல்லை கொடுத்து அடி வேண்டின‌ மாதிரி என‌க்கு ப‌டுது , த‌லைவ‌ரின் உப‌ச‌ரிப்பை ஒருக்கா சொல்லி முடித்து இருந்தால் ஆமைக் க‌றி இட்லி க‌றி விவாத‌ம் வ‌ந்து இருக்காது.................சீமான் சொன்ன‌ சில‌தை நான் இன்றும் ம‌றுக்கிறேன் த‌லைவ‌ர் கூட‌ தான்  நின்று துப்பாக்கியால் சுட்ட‌து ம‌ற்றும் அந்த‌ இட்லி க‌றி விவ‌கார‌ம் அது சீமானின் வெட்டி பேச்சாய் தான் பார்க்கிறேன் அல்ல‌து சீமானின் க‌ற்ப‌னைக்கே அதை விட்டு விடுகிறேன்

ஆனால் சீமான் 2009க்கு பிற‌க்கு ப‌ல‌ நூறு ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ள் செய்து இருக்கிறார் அதை ப‌ற்றி யாரும் விவாதிப்ப‌து கிடையாது...............யார் என்ன‌ த‌ப்பு பொய்க‌ள் சொன்னாலும்

நெற்றிக் க‌ண் திற‌ப்பினும் குற்ற‌ம் குற்ற‌மே.............இது வைக்கோ , திருமாள‌வ‌ன் , சீமானுக்கும் , பொருந்தும்

த‌லைவ‌ர் அருகில் இருந்து துரோகிய‌ல் ஆக‌ மாறி ஆட்க‌ள் யார் என்றால் , 

1 வைக்கோ

1 திருமாள‌வ‌ன்

3 குள‌த்தூர் ம‌ணி

இவ‌ர்க‌ளின் துரோக‌ங்க‌ளை க‌ண் கூடாக‌ பார்க்க‌ முடிந்த‌து.................சீமான் எதிரி யார் துரோகி யார் என‌ பார்த்து த‌ன‌து அர‌சிய‌லை ச‌ரியா காய் ந‌க‌ர்த்துகிறார்..............மாவீர‌ நாளை 2010ம் ஆண்டில் இருந்து ப‌ல‌ ஆயிர‌ம் பேர‌ திர‌ட்டி சிற‌ப்பாக‌ செய்கிறார் இன்னும் ப‌ல‌தை ச‌ரியாக‌ செய்வ‌தால் அவ‌ர் செய்வ‌து ச‌ரி என்று என் போன்ற‌வ‌ர்க‌ள் சீமானுக்கு வெளிப்ப‌டையாய் ஆத‌ர‌வு கொடுக்கிறோம்🙏👍.......................

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஒ…

இதுதான்..

ஆட்டுக்க மாட்ட விடுவதா 🤣.

சீமானை பற்றிய திரிக்கும் ஆட்டுக்கும் என்னையா சம்பந்தம்.

செய்யிற கோக்கு மாக்கை எல்லாம் செய்து போட்டு…

பிறகு நிர்வாகத்தின் மீது பிராது🤣.

யாருக்கு கருத்தெழுதுகிறோம் என்றுகூடவா தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஓம்…நான் 95 போர் நிறுத்தம் வரைக்கும் ஊரில் வாழ்ந்தவன், அதன் பின் 2001 வரை தெற்கில் இருந்த போதும் வடக்கு கிழக்கு எங்கும் போய் வந்தவன், வாழ்ந்தவன்.

ஒழுங்காக பிடித்து உச்சா போக தெரியாத வயதில் டென்மார்க் வந்து, சீமானிடம் ஈழப்போராட்டம் பற்றி படித்தவர் நீங்கள்.

நீங்கள் சொல்வது சரிதான்.

யாழ்பாணத்தில் உங்கள் ஊரை விட்டு வெளியே கொண்டே அடுத்த ஊரில் விட்டால் கூட வழி தெரியாது தொலையகூடியவர்கள் எல்லாம், பிராபாக்ரனிடம் கொள்கை படித்தார்களாம் 🤣.

அண்ணனை போலவே, அளப்பதில் ஒரு வஞ்சகமும் தம்பி செய்வதில்லை. 

எதோ நீங்கள் Albert Einstein என்ற நினைப்புபோல இருக்கு.  

  • கருத்துக்கள உறவுகள்

கோஷானிட‌ம் எழுத்து திற‌மை இருக்கு ஆனால் அத‌ற்காக‌  அவ‌ர்  க‌ற்ப‌னையில் எழுதும் அவ‌தூறுக‌ளை ஒரு போது ஏற்க்க‌ முடியாது...............இதில் சீமானை ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து😁🙈........................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வீரப் பையன்26 said:

நான் பொட்டு அம்மானையும் பார்க்க‌ வில்லை த‌ள‌ப‌திக‌ளையும் பார்க்க‌ வில்லை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் போல் என‌க்கு க‌ற்ப‌னையில் அடிச்சுவிட‌வும் தெரியாது..............எங்க‌ட‌ சொந்த‌த்தில் 6பேர் மாவீர‌ர்க‌ள்🙏😢......................

நீங்கள் உண்மையாக இருப்பதற்கு வாழ்த்துகள். உயிர் கொடையளித்த மாவீரர்களுக்கு எனது நன்றிகளும், அஞ்சலிகளும்🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

எதோ நீங்கள் Albert Einstein என்ற நினைப்புபோல இருக்கு.  

பின்ன, இவ்வளவு கஸ்டப்பட்டு, யாழ் களத்தை, பெரியார் திராவிட களம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, பல ஐடிக்களில் வந்து பத்தி, பத்தியா, நம்பர் போட்டு, பாயாசம் வைச்சா, Einstein என்று கூப்பிட்டா குறைஞ்சா போவீங்க என்று நம்ம உடான்ஸ் சாமியார் சார்பா, அவரது சிஸ்ஜனா கேட்கிறேன். 🤪😜🤣

சீமான் பிரபாகரனை, தமிழகத்துக்கு கொண்டு போறாரோ இல்லையோ, உடான்சர், பெரியாரை ஈழத்துககு, குறிப்பா யாழ் களத்துக்கு கொண்டு வந்துட்டார். கடும் உழைப்பாளி.

அவரது profile image பெரியார் தான்!!

நான் இப்ப பெரியார் அபிமானி!

இதற்கான அவரது உழைப்பு அளப்பரியது, உண்மையானது.

(உடான்சர், இதை screenshot) எடுத்து வைக்கிறேல்ல!!

🤣😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 20/1/2025 at 12:04, Kavi arunasalam said:

சைமன், பிரபாகரனைச் சந்தித்தது உண்மை. ஆனால் இந்தப் படத்தைப் பார்க்கையில் பிரபாகரனின் வலது கை எங்கே என்ற கேள்வி ஒன்று வருகின்றது.

க‌வி ஜ‌யா இது உங்க‌ளுக்கான‌ காணொளி

இனி சீமானின் ப‌ட‌ம் எடிட் செய்ய‌ப் ப‌ட‌ வில்லை என‌ உறுதியாகி விட்ட‌து

சீமாம் ச‌ந்தோஷ் இருவ‌ரும் ( நியூஸ் 18 த‌மிழ் நாட்டு ஊட‌க‌த்தில்  நேர‌டி விவாத‌த்தில் க‌ல‌ந்து கொள்ள‌ போகின‌ம் மீதியை அதில் தொட‌ரும்வோம் ஜ‌யா )👍....................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

கடைசிவரை செந்தமிழன் சீமான் அண்ணா என்ற அயோக்கியன் நியூஸ் 18 விவாதத்துக்கு வரவேமாட்டார்!😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

எதோ நீங்கள் Albert Einstein என்ற நினைப்புபோல இருக்கு.  

ஏன் இண்டைக்கு ஜஸ்டீன் வரவில்லையோ என் மேல பாயுறியள் திரி, திரியாக🤣.

ஆனால் யாழில் குழுமோதலின் சூத்திரதாரி திரும்பி வந்து பலவாறு முயற்சித்தாலும்…அந்த பழைய சகதியில் நான் இறங்க விரும்பவில்லை.👇

2 hours ago, Nathamuni said:

பின்ன, இவ்வளவு கஸ்டப்பட்டு, யாழ் களத்தை, பெரியார் திராவிட களம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, பல ஐடிக்களில் வந்து பத்தி, பத்தியா, நம்பர் போட்டு, பாயாசம் வைச்சா, Einstein என்று கூப்பிட்டா குறைஞ்சா போவீங்க என்று நம்ம உடான்ஸ் சாமியார் சார்பா, அவரது சிஸ்ஜனா கேட்கிறேன். 🤪😜🤣

சீமான் பிரபாகரனை, தமிழகத்துக்கு கொண்டு போறாரோ இல்லையோ, உடான்சர், பெரியாரை ஈழத்துககு, குறிப்பா யாழ் களத்துக்கு கொண்டு வந்துட்டார். கடும் உழைப்பாளி.

அவரது profile image பெரியார் தான்!!

நான் இப்ப பெரியார் அபிமானி!

இதற்கான அவரது உழைப்பு அளப்பரியது, உண்மையானது.

(உடான்சர், இதை screenshot) எடுத்து வைக்கிறேல்ல!!

🤣😜

நாதம் என்னை போல ஒரு ஐடியை இறக்கி எழுத வைக்காவா உங்களுக்கு ஒரு வருட விடுப்பும் பயிற்சியும் தேவைபட்டது 🤣.

ஆனால் ஒரு கொண்டையை மறைக்க மறந்து விட்டீர்கள்.

அதையும் நானே சொல்லித்தாறன்.

நான் கருத்தின் முடிவில் ஆங்கிலத்தில் எழுதுவது நானாக எழுதுவது அல்ல, பொதுவாக ஒரு மேற்கோளை அல்லது ஒரு பழமொழியைத்தான் எழுதுவேன்.

ஆனால் இதற்கு ஆங்கில பழமொழி, உலக மாந்தர் கூறிய மேற்கோள்கள் தெரிந்திருக்க வேண்டும், அதை சந்தர்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

மற்றைய ஐடியில் நீங்கள் எழுதும் ஆங்கில வார்த்தைகள் - அது உங்களுடைய பொருத்து-ஆங்கிலம் என்பதை காட்டி கொடுக்கிறது.

உங்கள் தமிழின் எழுத்து பாணியை வலிந்து என்னை போல் மாற்றியதை போலவே ஆங்கில பாணியையும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

பிகு

ஆனால் யார் என்ன நோக்கத்துக்காக எழுதினாலும் “சீமானை பற்றிய விமர்சனம் எழுதப்பட்டால் எனக்கு போதுமானது”.

ஆகவே அந்த ஐடியில் என்னை போல் நீங்கள் எழுதுவதையும் நான் என் profit இல்தான் சேர்க்கிறேன்🤣.

அதுவும் நீங்களே மாங்கு மாங்கு என சீமானை விமர்சிக்கும் போது - அப்படி ஒரு நிலைமையை நான் உருவாக்கி உள்ளேன் என எண்ணும் போது - மனம் ஆனந்த கூத்தாடுகிறது (உண்மையிலேயே).

ஒன்று தெரியுமா.

கோஷான் செவ்வியன் என்ற ஐடியில் வருவதாக 12 வருடமாக என்னை அறிந்த உறவுகள் நம்பமாட்டார் என நினைக்கிறேன்.

அப்படி நம்பினாலும் எனக்கு அதில் பெரிய பிரச்சனையும் இல்லை.

அடிப்படையில் எவர் என் மீது வைத்துள்ள அபிமானமும் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. 

ஆகவே…

செவ்….மன்னிக்க வேண்டும், நாதம் 🤣

Keep calm and carry on…

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வாலி said:

கடைசிவரை செந்தமிழன் சீமான் அண்ணா என்ற அயோக்கியன் நியூஸ் 18 விவாதத்துக்கு வரவேமாட்டார்!😂

கல‌ந்து கொள்ளுவேன் என்று சொன்னால் க‌ல‌ந்து கொள்ளுவ‌ர் தானே

200ரூபாய் கைகூலிக‌ளை மிட‌ நீங்க‌ள் ப‌டு மோச‌ம் யாழில்😒.......................

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வீரப் பையன்26 said:

கல‌ந்து கொள்ளுவேன் என்று சொன்னால் க‌ல‌ந்து கொள்ளுவ‌ர் தானே

200ரூபாய் கைகூலிக‌ளை மிட‌ நீங்க‌ள் ப‌டு மோச‌ம் யாழில்😒.......................

கலந்து கொள்லாவிட்டால் என்ன முட்டு கொடுக்கலாம் என்பதையும் இப்போதே யோசிக்க தொடங்குங்கள்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

கலந்து கொள்லாவிட்டால் என்ன முட்டு கொடுக்கலாம் என்பதையும் இப்போதே யோசிக்க தொடங்குங்கள்🤣.

அந்த‌ ஊட‌க‌ நெறியாள‌ர் தானே சொல்லி இருக்கிறார் சீமான் நேர‌டி விவாத‌த்துக்கு தயார் என‌

அப்ப‌டி க‌ல‌ந்து கொள்ள‌ விட்டால் அந்த‌ நெறியாள‌ரிட‌ன் கேள்வி கேக்கும் உரிமை உங்க‌ளுக்கு உண்டு👍..................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

கலந்து கொள்லாவிட்டால் என்ன முட்டு கொடுக்கலாம் என்பதையும் இப்போதே யோசிக்க தொடங்குங்கள்🤣.

தலைவர் நீங்கள்தான முந்தாநாத்து சீமான் பிக்காலிப்பய வார்த்த சொன்ன வீடியோ காட்டமுடியாது ஓணாண்டி முக்காடு போட்டாப்ல எண்டு எழுதின ஆளு.. நீங்களே இப்பிடி இன்னும் ரெண்டு மூண்டு சவால் எங்கிட்ட விட்டிட்டி கல்லுமாரி திரியேக்க அவனுக்கு என்ன சின்னப்பொடியனுக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவர் நீங்கள்தான முந்தாநாத்து சீமான் பிக்காலிப்பய வார்த்த சொன்ன வீடியோ காட்டமுடியாது ஓணாண்டி முக்காடு போட்டாப்ல எண்டு எழுதின ஆளு.. நீங்களே இப்பிடி இன்னும் ரெண்டு மூண்டு சவால் எங்கிட்ட விட்டிட்டி கல்லுமாரி திரியேக்க அவனுக்கு என்ன சின்னப்பொடியனுக்கு..

அதுக்கு ஆதாரம் தந்துதிட்யாளா? நான் மிஸ் பண்ணி விட்டேன் போல ?

மிச்ச விடயம் எல்லாம் அப்படியேதான் இருக்கு “சைக்கிளை விடும் போது வாடகை தரலாம்” என சுற்றுபவர் நீங்கள்தான்.🤣

13 minutes ago, வீரப் பையன்26 said:

அந்த‌ ஊட‌க‌ நெறியாள‌ர் தானே சொல்லி இருக்கிறார் சீமான் நேர‌டி விவாத‌த்துக்கு தயார் என‌

அப்ப‌டி க‌ல‌ந்து கொள்ள‌ விட்டால் அந்த‌ நெறியாள‌ரிட‌ன் கேள்வி கேக்கும் உரிமை உங்க‌ளுக்கு உண்டு👍..................

ப்பா…இப்பவே முட்ட தயார் பண்ணிடிங்களே பையா 🤣.

(ஆனால் உங்கள் லொஜிக்கலான பதில் 👌).

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

அதுக்கு ஆதாரம் தந்துதிட்யாளா? நான் மிஸ் பண்ணி விட்டேன் போல ?

திரியிலையே போட்டாச்சு.. இனி என்ன உங்கட வீட்டு அட்ரெசுக்கு அனுப்ப முடியாது..

8 minutes ago, goshan_che said:

மிச்ச விடயம் எல்லாம் அப்படியேதான் இருக்கு “சைக்கிளை விடும் போது வாடகை தரலாம்” என சுற்றுபவர் நீங்கள்தான்.🤣

அதெல்லாம் தந்தாச்சே உடனையே..

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவர் நீங்கள்தான முந்தாநாத்து சீமான் பிக்காலிப்பய வார்த்த சொன்ன வீடியோ காட்டமுடியாது ஓணாண்டி முக்காடு போட்டாப்ல எண்டு எழுதின ஆளு.. நீங்களே இப்பிடி இன்னும் ரெண்டு மூண்டு சவால் எங்கிட்ட விட்டிட்டி கல்லுமாரி திரியேக்க அவனுக்கு என்ன சின்னப்பொடியனுக்கு..

கோஷான் மூத்தா ஒழுங்கா பெய்ய‌த் தெரியாத‌ வ‌ய‌தில் டென்மார்க்கு என்னை ஓடி வ‌ந்த‌து என்று எழுதினார் ந‌க்க‌ல் அடித்தார்

அத‌ற்க்கு ச‌ரியான‌ செருப்ப‌டி ப‌திவுவை எழுதினேன் அதோட‌ வாய‌ மூடின‌வ‌ர் இப்ப‌ சீமான் விடைய‌த்தில் என்னை சீண்டுகிறார் ஹா ஹா...........கோஷானுக்கு இது ஒரு பிழைப்பாய் போச்சு😁...................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.