Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் இன்று பதவியேற்பு!

 

ஜனவரி 20ஆம் திகதியான இன்று டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.

நாட்டின் 47 ஆவது ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்பது பாரம்பரியத்திலிருந்து ஆடம்பரமான முறிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பதவியேற்பு நிகழ்வானது 2020 தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை முறியடிக்க முயன்ற கலகக்காரர்களால் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைப்பற்றப்பட்ட கேபிட்டல் கட்டிட வளாகத்தின் திறந்த வெளியில் நடைபெறுவது வழக்கம்.

எனினும், அங்கு நிலவும் கடும் குளிர் நிலவும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டதால், பதவியேற்பு நிகழ்ச்சி கேபிடல் கட்டிடத்தின் ரோட்டுண்டா அரங்கில் நடத்தப்படும்.

பதவியேற்ப்பினை அடுத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவியேற்புடன் டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்புவார்.

அதேநேரம், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸும் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்.

பதவியேற்பு விழாவைக் காண முதல்முறையாக வெளிநாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலி மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி போன்ற பழமைவாத உலக தலைவர்களை பதவியேற்புக்கு அழைத்துள்ளார்.
-(3)

 

http://www.samakalam.com/அமெரிக்க-ஜனாதிபதியாக-டி/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

ஜனவரி 20ஆம் திகதியான இன்று டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கிறார்.

large.IMG_8036.jpeg.81b30dc136187d19d8f9

  • கருத்துக்கள உறவுகள்

பதவியேற்பதற்காக ரொட்டுன்டா வந்தார் டிரம்ப்

20 JAN, 2025 | 10:26 PM
image
 
அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்பதற்காக டொனால்ட் டிரம்ப் கப்பிட்டல் ரொட்டுன்டா அறைக்குவந்துள்ளார். அவரது மனைவி தற்போதைய ஜனாதிபதி துணை ஜனாதிபதி ஆகியோரும் அங்கு காணப்படுகின்றனர்.
  • கருத்துக்கள உறவுகள்

செத்தகிளி இனித்தான் உனக்கு இருக்குடி ஆப்பு!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

large.IMG_8036.jpeg.81b30dc136187d19d8f9

Elon Musk நாஜி சல்யூட் அடிக்கிறமாதிரிப் போட்டிருக்கலாம்..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் அவசரகாலநிலை-குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்படுவார்கள் - டிரம்ப்

20 JAN, 2025 | 11:09 PM
image
 

அமெரிக்க மெக்சிக்கோ எல்லையில் தேசிய அவசரகாலநிலையை அறிவிக்கும் பிரகடனம் இன்று வெளியிடப்படும் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைவது உடனடியாக தடுக்கப்படும் என தெரிவித்துள்ள அவர் மில்லியன் கணக்கான அமெரிக்காவிற்கு சொந்தமில்லாத குற்றவாளிகள் எங்கிருந்து வந்தார்களே அவர்களை அங்கே அனுப்பும் நடவடிக்கை ஆரம்பமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.virakesari.lk/article/204393

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வைச்சு செய்வார் என எதிர்பார்க்கலாம்.இங்குள்ள அரசியல் ஆய்வாளர்களின் கருத்தை பார்த்தால் அப்படித்தான் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள்

20 JAN, 2025 | 10:19 PM
image

டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள் ஜோர்ஜ் புஷ் பில்கிளின்டன் பராக் ஒபாமா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். எனினும் மிச்செல் ஒபாமா டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

29530ce0-ddeb-4c7d-ba67-8ad8b1081023.jpg

 

93bc1831-4aa3-4d9a-80fc-d376b7613eb2.jpg

1ee6de31-81f3-4087-8922-cbe0caefb8b5.jpg

https://www.virakesari.lk/article/204388

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக பதவியேற்றார் டிரம்ப்

20 JAN, 2025 | 10:45 PM
image
 

அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார்.

அரசியலமைப்பை பாதுகாப்பேன் என அவர் சத்தியப்பிரமாணம் செய்தார்.

ஜனாதிபதி தேர்தலொன்றில் தோல்வியுற்ற ஒருவர் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்றுள்ளமை 1890ம் ஆண்டின் இதுவே முதல் தடவை.

டிரம்ப் இரண்டு பைபிள்களை பயன்படுத்தி பதவியேற்றார் ஒன்று அவரது தாயார் வழங்கியது மற்றையது லிங்கன் பைபிள்.

1861 முதல் ஏனைய ஜனாதிபதிகள் அனைவரும் இந்த பைபிளை பயன்படுத்தி வந்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/204390

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் பதவியேற்பு விழா: கேமராவில் உறைந்த வரலாற்றுத் தருணங்கள்

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,JULIA DEMAREE NIKHINSON/AFP

படக்குறிப்பு, அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். மகத்தான பாரம்பரியம் கொண்ட அந்த நிகழ்வின் சில குறிப்பிடத்தக்க சில புகைப்படங்களை இங்கே காணலாம்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,ANDREW HARNIK/GETTY IMAGES

விழாவில் கடைசி நிமிட மாற்றம்

இந்த விழா வழக்கமாக அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்கு முன்னால் நடைபெறும். முக்கிய விருந்தினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த விழாவை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

ஆனால், -13 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் குளிர் காற்றுடன் உறைபனி குறித்த வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், இந்த விழா நாடாளுமன்ற கட்டடத்தின் ரோட்டுண்டா அரங்குக்குள் மாற்றப்பட்டது.

விழாவைக் காண தலைநகருக்குச் சென்ற டிரம்ப் ஆதரவாளர்கள் அரங்கில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பை கண்டனர்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,KENNY HOLSTON/POOL/REUTERS

படக்குறிப்பு, ரோட்டுண்டா அரங்கு

தேவாலயத்தில் பிரார்த்தனை

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,JEENAH MOON/REUTERS

படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப்

பதவியேற்புக்கு முந்தைய இரவை ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து பென்சில்வேனியா அவென்யூவுக்கு சற்று குறுக்கே உள்ள பிளேயர் மாளிகையில் கழித்தார். இது புதிதாக பொறுப்பேற்கும் அதிபர்களுக்கான பாரம்பரியமாகும்.

டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் பொறுப்பேற்க இருக்கும் துணை அதிபர் ஜே டி வான்ஸ், அவரது மனைவி உஷா ஆகியோர் செயின்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,JEENAH MOON/REUTERS

படக்குறிப்பு, ஜே டி வான்ஸ் மற்றும் உஷா வான்ஸ்
அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,CARLOS BARRIA/REUTERS

படக்குறிப்பு, ஜே டி வான்ஸ் மற்றும் டிரம்ப் பிரார்த்தனையில் பங்கேற்ற போது.

ரோட்டுண்டா விழா

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,SHAWN THEW/POOL/AFP

படக்குறிப்பு, பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஈலோன் மஸ்க் ( வலதுபுறத்தில் முதலில் இருப்பவர்)

நாடாளுமன்ற கட்டடத்தின் ரோட்டுண்டாவில் நடந்த விழாவில் முன்னாள் அதிபர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், டிரம்பின் குடும்பத்தினர் மற்றும் அவரது புதிய நிர்வாகத்திற்கு டிரம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பங்கேற்றனர்.

டிரம்ப் பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,CHIP SOMODEVILLA/GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா (வலதுபுறத்தில் முதலில் இருப்பவர்) இந்நிகழ்வில் பங்கேற்றார்.
அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,CHIP SOMODEVILLA/POOL/REUTERS

படக்குறிப்பு, டிரம்பின் மகள் இவாங்கா, தந்தையின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.
டிரம்ப் பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,CHIP SOMODEVILLA/POOL/AFP

டிரம்பின் தொடக்க உரையைத் தொடர்ந்து நாட்டுப்புற இசை நட்சத்திரம் கேரி அண்டர்வுட் "அமெரிக்கா தி பியூட்டிஃபுல்" என்ற பாடலை பாடினார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,EVELYN HOCKSTEIN/REUTERS

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மைலி ஆகியோர் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட வெளிநாட்டுத் தலைவர்களாவர்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,SAUL LOEB/POOL/AFP

இந்த நிகழ்வில், ஜே டி வான்ஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,SHAWN THEW/POOL/AFP

விழா முடியும் முன்பு, பாதிரியார் லொரென்சோ செவெல் ஆசி வழங்கி துதிப்பாடல் பாடினார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,JULIA DEMAREE NIKHINSON/AFP

டிரம்ப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, குடும்பத்தினருடன் கொண்டாடினார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,CHIP SOMODEVILLA/POOL/EPA

தனது தொடக்க உரையில், குடியேற்றத்தை சமாளிப்பது, பனாமா கால்வாயின் கட்டுப்பாட்டை மீண்டும் எடுத்துக்கொள்வது மற்றும் செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடியை நாட்டுவது உள்ளிட்ட தனது அதிபர் பதவிக்கான திட்டங்களை டிரம்ப் அறிவித்தார்.

பொதுமக்கள் எதிர்வினை

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,AMANDA PEROBELLI/REUTERS

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,AMANDA PEROBELLI/REUTERS

கேபிடல் ஒன் அரங்கில் இருந்த டிரம்ப் ஆதரவாளர்கள் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர். மயாமி உள்ளிட்ட நகரங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள், பதவியேற்ற விழாவை ஒன்றாக கூடி காணும் நிகழ்வுகளில் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,CRISTOBAL HERRERA-ULASHKEVICH/EPA-EFE

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,JACK GRUBER/POOL/REUTERS

விழாவுக்குப் பிறகு, டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடனுடன் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தை விட்டு வெளியேறினர்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,ANNA ROSE LAYDEN/EPA-EFE

படக்குறிப்பு,ஹெலிகாப்டரில் ஜோ மற்றும் ஜில் பைடன் புறப்பட்டனர்.
அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப், பதவியேற்பு விழா

பட மூலாதாரம்,JOE RAEDLE/GETTY IMAGES

ஜோ மற்றும் ஜில் பிடன் ஹெலிகாப்டரில் வெளியேறிய போது உஷா வான்ஸ், ஜே.டி.வான்ஸ், டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் கையசைத்து வழியனுப்பி வைத்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration of text

 

 

May be pop art of text

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

ஜேர்மனிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். வைச்சு செய்வார் என எதிர்பார்க்கலாம்.இங்குள்ள அரசியல் ஆய்வாளர்களின் கருத்தை பார்த்தால் அப்படித்தான் தெரிகின்றது.

உண்மை.  ஆனால்  நான்கு வருடங்கள்  பறந்து ஓடி விடும்  ட்ரம்பு. ஒரு பயம் இருக்கும்  இனிமேல் ஐனதிபதியாக முடியாது  எனவே…  அடங்கி. வாசிப்பர்.  என. எதிர்பார்ககலாம் [ எதிர்கட்சிகளுடன். ].   வெளிநாடுகளுடன்.  சண்டித்தானம்.  விடுவார்  ஜேர்மனி  அடங்கி. நடக்காது”   பிரித்தானியா போல்  சொன்னதுக்கு எல்லாம்  தலையாட்டியது இல்லை  🤣

கிட்லர் இறந்து விட்டார் தான் ஆனால் அவரது பெயர் வாழ்ந்து கொணடிருக்கிறது,.....தொடர்ந்தும் வாழும்   எனவே ஜேர்மனி அடங்கி போகும் என்று கருதக்கூடாது  .....சீனா உடன் நெருக்கம் ஏற்படலாம்  ....

இலங்கையில் அர்ச்சுனாவும்.  அமெரிக்காவில் ட்ரம்பும். இருக்கிறது நான்கு வருடங்களுக்கு பொழுதுபோக்குக்கு.  பஞ்சமிலலை 🤣

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் உரையில் இடம் பெற்ற 5 முக்கிய விஷயங்கள் - இந்தியாவை பாதிக்கும் ஒரு அறிவிப்பு என்ன?

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார்.
21 ஜனவரி 2025, 02:40 GMT
புதுப்பிக்கப்பட்டது 21 ஜனவரி 2025, 02:47 GMT

அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு அவர் அதிபராக பதவியேற்றார்.

டிரம்பின் பதவியேற்பு விழாவில் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள், தொழிலதிபர்கள், அமெரிக்க முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தனது நிர்வாகத்தின் கீழ் அமெரிக்காவின் "எதிர்காலம்" எப்படி இருக்கும் என்பதை டிரம்ப் தனது உரையில் பகிர்ந்து கொண்டார்.

"அமெரிக்காவின் பொற்காலம் இன்று துவங்குகிறது. இனி நம் நாடு செழிப்பாகவும், மதிப்புக்குரியதாகவும் இருக்கும். நான் எப்போதும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொடுப்பேன் என்பதை தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்" என்றார் அவர்.

டிரம்பின் முதல் உரையில் இடம்பெற்ற ஐந்து முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

"அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசரநிலை"

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக குடியேறுவது உடனடியாக நிறுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறிய பல லட்சக் கணக்கானவர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அரசு தொடங்கவுள்ளது என்றும் டிரம்ப் கூறினார்.

மேலும், "மெக்சிகோவிலேயே இருங்கள்" என்ற கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது மற்றும் எல்லையில் அதிக துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களையும் அவர் குறிப்பிட்டார்.

இது தவிர, விரைவில் மெக்சிகோ வளைகுடாவின் பெயர் " அமெரிக்க வளைகுடா" என மாற்றப்படும் என்றார் டிரம்ப்.

பனாமா கால்வாய் - சீனாவை சாடும் டிரம்ப்

பனாமா கால்வாய் நிர்வாக உரிமையை பனாமா நாட்டிற்கு அமெரிக்கா வழங்கியது "ஒரு முட்டாள்தனமான பரிசு" என்று குறிப்பிட்ட டிரம்ப், "பனாமா கால்வாயை சீனா இயக்குகிறது" என்று கூறினார்.

அதை சீனாவிடம் நாங்கள் கொடுக்கவில்லை, திரும்பப் பெறுவோம் என்றும் தெரிவித்தார். அவர் இதை கூறிய போது, கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். முன்னாள் அதிபர் பைடனும் முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸும் எந்த எதிர்வினையும் இல்லாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

கடந்த மாதம், டிரம்ப், பனாமா கால்வாய்க்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் அல்லது அதன் மீதான கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பனாமாவை வலியுறுத்தியிருந்தார்.

பனாமா கால்வாய் சீனாவுக்கானது அல்ல என்றும் இந்த கால்வாய் தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது என்று கூறியிருந்தார். ஆனால், இந்த கால்வாய் மீது சீனா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்று பனாமா அதிபர் கூறுகிறார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டிரம்பின் பதவியேற்பு விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர்களான பாரக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

"அமெரிக்க விண்வெளி வீரர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வார்கள்"

டிரம்ப், அமெரிக்காவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று பேசினார். அமெரிக்கா தனது செல்வத்தை பெருக்கும், தனது எல்லையை விரிவுபடுத்தும், செவ்வாய் கிரகத்தில் கொடியை நாட்டும் என்று அவர் உறுதிபூண்டார்.

"நாங்கள் நட்சத்திரங்களை அடைந்து செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கக் கொடியை ஏற்றுவோம்," என்று அவர் கூறினார்.

மத்திய கிழக்கு விவகாரம் : டிரம்ப் கூறியது என்ன?

மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் தலைவராக இருப்பேன் என்று டிரம்ப் தனது தொடக்க உரையில் கூறினார்.

காஸாவில் ஹமாஸிடம் பணய கைதிகளாக இருந்த மூன்று இஸ்ரேலியர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் குடும்பத்தினருடன் இணைந்ததை அவர் குறிப்பிட்டு பேசினார்.

"உலகின் மிகப் பெரிய, சக்திவாய்ந்த மற்றும் மதிப்புக்குரிய நாடாக அமெரிக்கா அதன் சரியான இடத்தை மீண்டும் பெறும். உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், அவர்கள் போற்றும் வகையிலும் மாறும்" என்று டிரம்ப் கூறினார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,CHIP SOMODEVILLA/POOL/ EPA

படக்குறிப்பு, அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார்.

இரு பாலினங்கள் மட்டுமே

இன்று முதல் அமெரிக்க அரசு கொள்கையின் படி ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்கள் மட்டுமே இருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

பைடன் தலைமையிலான நிர்வாகம், புலம்பெயர்ந்தோர் நெருக்கடியைக் கையாண்ட விதத்தை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

பிபிசி ராஜதந்திர விவகார நிருபர் பால் ஆடம்ஸ் இந்த உரை உலகிற்கு டிரம்பின் தீர்க்கமான செய்தியை தெரிவிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

டிரம்பின் பேச்சு உலக அரங்கில் அமெரிக்காவின் பலம் மற்றும் சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டும் ஒரு வலுவான செய்தியை அளித்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் டிரம்ப் பேசினார். கட்டணங்கள் குறித்தும் டிரம்ப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். "மற்ற நாடுகளுக்கு வரி மற்றும் கட்டணங்கள் விதித்து நமது மக்களை பணக்காரர்களாக்குவோம்" என்று டிரம்ப் கூறுகிறார்.

அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பணவீக்கம் மற்றும் எரிசக்தி தேவைகள் அதிகரிப்பது குறித்தும் டிரம்ப் பேசினார். தேர்தல் பிரசாரத்தில் இவற்றை முக்கிய பிரச்னைகளாக அவர் முன்வைத்திருந்தார்.

பணவீக்கத்தை குறைக்கவும், செலவுகள் மற்றும் விலையை விரைவாகக் குறைக்கவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தனது அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவுறுத்துவதாக அவர் கூறினார்.

டிரம்ப் "தேசிய எரிசக்தி அவசரநிலையை" அறிவிப்பதாகவும் கூறினார். தனது ஆட்சியில் அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வுகளை விரைவுபடுத்துவதற்கான வாக்குறுதியை அளித்தார்.

அமெரிக்கா மீண்டும் 'பொருட்களின் உற்பத்தி மையமாக' மாறும் என்றார்.

உலகிலேயே அதிக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமெரிக்காவிடம் உள்ளது, அதை முழுமையாக பயன்படுத்துவோம் என்று டிரம்ப் கூறினார். 'டிரில் பேபி டிரில்' என்ற கோஷத்தையும் முன் வைத்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு இனி வரும் காலங்களில் இந்தியாவையும் பாதிக்கும். எண்ணெய் நுகர்வில் உலக அளவில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவே உள்ளது. இந்தியா தனது எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

47வது அமெரிக்க ஜனாதிபதியாக நேற்று 20ம் திகதி பதவி ஏற்றார் டொனால்ட் ட்ரம்ப். 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சமயம் என்னதான் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என்று அறிவித்தாலும் கமலா ஹாரிஸ் மட்டும் வந்துவிடக் கூடது என்று உறுதியாக இருந்தேன். எதிர்பார்த்தது போலவே “நா வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு சொல்லு.” என மாஸ் re-entry கொடுத்தார் டொனால்ட் ட்ரம்ப். 

முதல் தடவை ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவர் செய்த சேஷ்டைகளால் மீம் material ஆன ட்ரம்ப் இம்முறை பாட்ஷாவாக இறங்கி அடிப்பார் என்று எதிர்பார்க்கிறேன். 

வந்த முதல் நாளே “இனிமேல் அமெரிக்காவில் ஆண் பெண் என்ற இரு பாலினம் மட்டும் தான், ஆண்-பெண் என்ற இரு பாலினத்தவருக்கு மட்டுமே இங்கு அங்கீகாரம் அளிக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்து, LGBTQ சமூகத்துக்கு மிகப் பெரிய ஆப்பு வைத்துள்ளார்… (இத தானடா எங்க தல இவ்ளோ நாளா சொல்லிட்டு இருந்துச்சு...) 

இப்போது புடினின் பல கொள்கைகளுக்கு ஆதரவாக தன் நிலைப்பாடுகளை மாற்றி வரும் டிரம்ப்புக்கு இன்று புடின் தன் வாழ்த்துக்களை பகிரங்கமாக தெரிவித்து (சூர்யான்னா யாரு தெரியுமா), யார் என்ன சொன்னாலும் நாங்க நண்பர்கள் தான் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளனர். 

“The Golden age of America begins right now!”என்று சொல்லி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார் ட்ரம்ப். “அமெரிக்காவின் பொற்காலம் இன்று துவங்குகிறது. நான் எப்போதும் அமெரிக்காவுக்கே முன்னுரிமை கொடுப்பேன்” என்பதையும் கறாராக சொல்லியே முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறார் மனுஷன். 

இதுவரை காலம் அமெரிக்கா என்றால் வளர்ந்த நாடு என்று தான் நாம் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால் பனாமா கால்வாயில் அமெரிக்காவுக்கு விதிக்கப்படும் அதி உயர் வரி போன்ற பல காரணங்களால் இனி நாங்களும் வளரும் நாடுதான், ‘நானும் வளர்க்கிறேனே மம்மீ….’ என்ற புதிய உருட்டையும் சேர்த்து உருட்டி இருக்கிறார். 

டென்மார்க்குக்கு சொந்தமான கிரீன்லாந்து, பனாமா கால்வாய், கனடா என ட்ரம்ப்பின் அடுத்தடுத்த காய் நகர்த்தல்கள் இது வரை பெரிய அண்ணாவுக்கு சொம்பு தூக்கிக் கொண்டு இருந்த பலரின் வயிற்றிலும் தற்போது புளியை கரைத்திருக்கிறது (ஒட்டகத்துக்கு இடம் கொடுத்த கதை தெரியுமா சார்..). 

அது தவிர சட்டவிரோத குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்படும் என்றும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாடு கடத்தப் படுவார் என்றும் அடுத்த கடப்பாரையை இறக்கி உள்ளார். 

பொதுவாக தேர்தல் காலங்களில் மேற்கேத்தைய நாடுகள் அனைத்தும் கையில் எடுக்கும் முக்கிய ஆயுதம் இந்த குடியேறிகளை கட்டுப்படுத்துவோம் எனும் வாக்குறுதி தான். பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் என பல நாடுகளின் சமீபத்தைய தேர்தல்களில் மக்களை கவர்ந்த முக்கிய பிரச்சாரமே இது தான். காரணம் இன்று வளர்ந்த நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களின் ஒன்று இந்த asylum seekers. 

சென்ற வருடம் பாரிஸ் சென்று வந்து நான் எழுதிய பதிவில் மிக விரிவாக இது பற்றி எழுதி இருந்தேன். 

ஒரு காலத்தில் காதலர் தேசமாக இருந்த பாரிஸ் இன்று களவாணிகள் தேசமாக மாறி, இந்த குடியேற்றவாசிகளால் சிதைந்து உருக்குலைந்து போய் எப்படி கேவலமான நிலையில் உள்ளது என்பதை நேரில் கண்டு வந்தேன். அதுவே அப்படி என்றால் கொஞ்சம் கொஞ்சமாக ஆயுத மற்றும் போதை கலாச்சாரத்தில் புதைந்து கொண்டிருக்கும் அமெரிக்கா எல்லாம் நிச்சயம் விழித்து எழ வேண்டிய நேரம் இது. 

இதனாலேயே இந்த நாடுகளின் குடிமக்கள் இது போன்ற புகலிடம் கோருவோரை கட்டுப்படுத்துவோம் என்று யார் சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கிறார்கள். எனவே ட்ரம்ப்பின் இந்த அதிரடி தீர்மானம் அடுத்த தேர்தல் நாற்காலியில் இப்போதே கர்ச்சீஃப்பை போட்டு வைக்க நிச்சயம் உதவும். 

அதே போல ஏற்கனவே அமெரிக்க மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பி “ஆறடி சுவரு தான் அமெரிக்க ஆசையை தடுக்குமே கிளியே மெக்சிகன் கிளியே..” என்று பாடப் போவதாக ஒற்றைக் காலில் நின்றவர் இம்முறை ‘ஆணியே புடுங்க வேணாம்’ என்பது போல "(நீ) மெக்சிகோவிலேயே இரு(ங்கள்)" என்ற கொள்கையை மீண்டும் நடைமுறைப்படுத்தி, எல்லையில் அதிக துருப்புக்களை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார். (இந்த சுவரு இன்னும் எத்தனை பேர காவு வாங்க போவுதோ..) 

அமெரிக்கா மீண்டும் பொருட்களின் உற்பத்தி மையமாக மாறும், செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா தன் கொடியை நாட்டும் (அத மட்டும் விட்டு வச்சிடுவோமா என்ன, அஸ்கு புஸ்கு), மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டி அனைவரையும் ஒன்றிணைக்கும் (அவரே குண்டு வைப்பாரம் அவரே எடுப்பாராம்.....), வெளிநாடுகள் மீது கூடுதல் வரி விதித்து அமெரிக்கர்களை பணக்காரர்களாக மாற்றுவேன்,  WHO வில் இருந்து விலகல், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து விலகல், 
போன்ற பல தடாலடியான திட்டங்களோடு “இனிமே தான் இந்த காளியோட ஆட்டத்தை பார்க்க போற” என்று கோதாவில் குதித்துள்ளார் டிரம்ப். 

எனக்கு எப்போதுமே அமெரிக்கா மேல் பல விமர்சனங்கள் இருந்தாலும் அமெரிக்காவை பார்த்து நான் ஆச்சரியப்படும் ஒரே விடயம் its a land of opportunity. 

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். உங்களுக்கு திறமை இருக்கிறதா, புதிய innovative ஐடியா உள்ள ஆசாமியா நீங்கள், அப்படினா “வாடி என் செல்லம்..” என இரண்டு கைகளாலும் உங்களை வாரி அள்ளி அரவணைத்துக் கொள்ளும் நாடு அது. 

இது இன்று நேற்றல்ல, 1800களில் இருந்து தொடரும் ஒன்று தான். 

1800களில் பிரான்சில் பிறந்து, பிரெஞ்சு இராணுவத்துக்கு பயந்து அமெரிக்க சென்ற John James Audubon, ஜெர்மனியில் பிறந்து நாஜிக்களுக்கு பயந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த Albert Einstein, செக்கோஸ்லோவாக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த Gerty Cori முதல் நிகோலா டெஸ்லா, பராக் ஒபாமா, சுந்தர் பிச்சை வரை எல்லாருமே அமெரிக்காவில் குடியேறிய வெளிநாட்டவர் தான். ஏன் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் எலான் மஸ்க்கே சவுத் ஆபிரிக்காவில் பிறந்தவர் தான். 

ஆக, நீங்கள் யாராக இருந்தாலும் உண்மையான திறமை இருந்தால் உங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் தேசம் அமெரிக்கா (Win - Win….!!). 

இஸ்ரேல் பாலஸ்தீன போர் நிறுத்தம், ரஷ்ய உக்ரைன் சமாதான பேச்சுவார்த்தை திட்டம் என “ஆரம்பமே சும்மா அதிருதுல்ல…” ன்னு வந்த முதல் நாளே தன்னைப் பற்றி பேச வைத்த ட்ரம்ப்பின் வருகை நிச்சயம் உலக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டு பண்ணும் என்பது மட்டும் நிச்சயம். 

எல்லாம் சரி தான் ஆனால் "அமெரிக்கா, ஏனைய நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்தி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும், அவர்கள் போற்றும் வகையிலும் மாறும்" என்று ‘நாதஸ் திருந்திட்டான்’ என்று நாதஸே சொல்லி இருப்பது தான் கொஞ்சம் நம்பற மாதிரி இல்லை….

 

நன்றி - Tf rinnozah https://www.facebook.com/share/p/14pMPdTAvq/?mibextid=wwXIfr

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள். உங்களுக்கு திறமை இருக்கிறதா, புதிய innovative ஐடியா உள்ள ஆசாமியா நீங்கள், அப்படினா “வாடி என் செல்லம்..” என இரண்டு கைகளாலும் உங்களை வாரி அள்ளி அரவணைத்துக் கொள்ளும் நாடு அது. 

ஏன் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் எலான் மஸ்க்கே சவுத் ஆபிரிக்காவில் பிறந்தவர் தான். 

ஆக, நீங்கள் யாராக இருந்தாலும் உண்மையான திறமை இருந்தால் உங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் தேசம் அமெரிக்கா (Win - Win….!!). 

நன்றி - Tf rinnozah https://www.facebook.com/share/p/14pMPdTAvq/?mibextid=wwXIfr

இந்த  Tf rinnozah  என்ற முகப்புத்தகக்காரார் சும்மா அடித்தும் விட்டிருக்கின்றார். ஒரு உதாரணம்: அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக வருவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படும் எலான் மஸ்க்.............. என்று இவர் எழுதியிருப்பது.

எலான் மஸ்க்கோ அல்லது நானோ அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக வரவே முடியாது. ஏனென்றால் நாங்கள் இருவரும் இங்கே பிறக்கவில்லை.............😜.

வெளிநாடுகளில் ட்ரம்ப் என்ன செய்கின்றார் என்பது இங்கே முக்கியமேயில்லை. ஒரு கலன் பெட்ரோல் இரண்டு டாலருக்கு வரும் என்று சொன்னார், அது எங்கே என்று தான் முதல் கேள்வி வரும். நானே இந்த வாரம் காரை கொஞ்சமாக பெட்ரோல் விட்டுத் தான் ஓடிக் கொண்டிருக்கின்றேன். இன்றும் ஒரு கலன் $ 3.70............... இரண்டு டாலருக்கு வந்தவுடன் நிரப்பும் திட்டத்துடன்................🤣.

இது போலத் தான் மேலே ஏறிய எல்லா விலைவாசிகளும்............ இவை கீழே வராவிட்டால், அடுத்த வருட இடைத் தேர்தல்களில் இவரின் கட்சி காலி.............. காங்கிரஸும், செனட்டும் இவரின் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டால், அதிபர் வெளிநாடுகளுடன் மல்லுக்கட்டுவதை விட்டு விட்டு, அமெரிக்க தலைநகரில் தான் மல்லுக்கட்டவேண்டும்.

அல்பேர்ட் ஐன்ஸ்டைனும், எலான் மஸ்க்கும், சுந்தர் பிச்சையும் மட்டும் தான் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு தேவை என்றில்லை. தக்காளித் தோட்டத்தில் வேலை செய்வதற்கும், பாதாம் மரங்களை பார்த்துக் கொள்வதற்கும், வீடுகளில் புல்லு வெட்டுவதற்கும் கூட ஆட்கள், மில்லியன் கணக்கில், தேவை............... இங்கேயும் அமெரிக்காவிற்கு வின் - வின் தான்.

24 மணிநேரம் ஆகிவிட்டதே............... நின்று விட்டதா சண்டைகள்..................... அப்புறம் செய்து வைத்திருக்கின்ற ஆயுதங்களை யாருக்கு விற்பதாம், புதிய ஆயுதங்களை எப்ப செய்வதாம்.................. இது அமெரிக்க ஜனாதிபதிக்கே அப்பாற்ப்பட்ட விடயம்................... 

 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ரசோதரன் said:

இன்றும் ஒரு கலன் $ 3.70............... இரண்டு டாலருக்கு வந்தவுடன் நிரப்பும் திட்டத்துடன்......

விளங்கவில்லை,....எத்தனை லீற்றர் ??? 

ஒரு கலன். = ஆறு போத்தல்.    அல்லது    ??? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

விளங்கவில்லை,....எத்தனை லீற்றர் ??? 

ஒரு கலன். = ஆறு போத்தல்.    அல்லது    ??? 🤣

என்ன சிரிப்பு அண்ணா............... கலன் என்று தான் நாங்களும் சொல்லுவம், ஆனால் அமெரிக்க கலன் வேற.............🤣.

ஒரு அமெரிக்க கலன் - 3.7854 லீற்றர்

ஒரு பிரிட்டிஷ் கலன் - 4.546 லீற்றர்

இந்த விடயம் நம்ம தலைக்கு தெரிந்தால், தல ட்ரம்ப் இரண்டு கலன்களையும் இன்றே ஒன்றாக்கி விடுவார்...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

என்ன சிரிப்பு அண்ணா............... கலன் என்று தான் நாங்களும் சொல்லுவம், ஆனால் அமெரிக்க கலன் வேற.............🤣.

ஒரு அமெரிக்க கலன் - 3.7854 லீற்றர்

ஒரு பிரிட்டிஷ் கலன் - 4.546 லீற்றர்

இந்த விடயம் நம்ம தலைக்கு தெரிந்தால், தல ட்ரம்ப் இரண்டு கலன்களையும் இன்றே ஒன்றாக்கி விடுவார்...............🤣.

நன்றி    பதிலுக்கு   யாசோதரன்.  ....அப்படி என்றால் லீற்றர்.  வெறும்  ஒரு டொலர்  மட்டுமே தான்    குப்பை மலிவு இல்லையா??? ஜேர்மனியில் ஒரு லீற்றர்.    1.75   இருந்து 1,90.  வரை  போகுது   பயங்கர விலை    .....🤣🤣🤣.    

போக்குவரத்து  இலவசமாகக்க வேண்டும்  .......மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kandiah57 said:

நன்றி    பதிலுக்கு   யாசோதரன்.  ....அப்படி என்றால் லீற்றர்.  வெறும்  ஒரு டொலர்  மட்டுமே தான்    குப்பை மலிவு இல்லையா??? ஜேர்மனியில் ஒரு லீற்றர்.    1.75   இருந்து 1,90.  வரை  போகுது   பயங்கர விலை    .....🤣🤣🤣.    

போக்குவரத்து  இலவசமாகக்க வேண்டும்  .......மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள்.  

ஏது................ குப்பை மலிவா............... உலகம் பூரா குண்டு போட்டு, சண்டையை மூட்டி, வெருட்டோ வெருட்டோ என்று வெருட்டுகின்ற அமெரிக்காவும், இருக்கின்ற இடம் தெரியாமல் இருக்கின்ற ஜேர்மனியும் ஒன்றா............ முறைப்படி, அமெரிக்காவின் முயற்சிகளின் படி, அமெரிக்காவில் ஒரு லீட்டர் பெட்ரோல் 25 சதத்திற்கு கிடைக்கவேண்டும்................😜. ஒரு கலன் ஒரு டாலர்.......... அப்படித்தான் இருந்தது........... 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கிருபன் said:

Elon Musk நாஜி சல்யூட் அடிக்கிறமாதிரிப் போட்டிருக்கலாம்..

உங்கள் விருப்பம்

IMG-8044.jpg

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ரசோதரன் said:

ஏது................ குப்பை மலிவா............... உலகம் பூரா குண்டு போட்டு, சண்டையை மூட்டி, வெருட்டோ வெருட்டோ என்று வெருட்டுகின்ற அமெரிக்காவும், இருக்கின்ற இடம் தெரியாமல் இருக்கின்ற ஜேர்மனியும் ஒன்றா............ முறைப்படி, அமெரிக்காவின் முயற்சிகளின் படி, அமெரிக்காவில் ஒரு லீட்டர் பெட்ரோல் 25 சதத்திற்கு கிடைக்கவேண்டும்................😜. ஒரு கலன் ஒரு டாலர்.......... அப்படித்தான் இருந்தது........... 

கவலைப்படதீர்கள்.  .......ட்ரம்ப.  சொல்லி உள்ளார்  அமெரிக்கர்கள் அனைவரையும் பணக்காரர்கள் ஆக்குவது என்று   🤣,.       எனவே    பெட்ரோல் விலை    ஒரு    இரண்டு மூன்று டொலர்  கூடலாம்.     

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

கவலைப்படதீர்கள்.  .......ட்ரம்ப.  சொல்லி உள்ளார்  அமெரிக்கர்கள் அனைவரையும் பணக்காரர்கள் ஆக்குவது என்று   🤣,.       எனவே    பெட்ரோல் விலை    ஒரு    இரண்டு மூன்று டொலர்  கூடலாம்.     

அண்ணா, எங்களின் விட்டுக்கொடுப்பிற்கும் ஒரு அளவு தான் உள்ளது............... நாங்கள் என்ன ஒரு கலன் ஒரு டாலருக்கா கேட்கின்றோம்................ உலகத்தின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு, ஒரு கலனை இரண்டு டாலர்களுக்கு வாங்குவதற்கு இறங்கி வந்திருக்கின்றோம்...........................🤣

பெரிய சிரிப்பே அமெரிக்கர்கள் அல்ல, அவர்களின் தெரிவிற்கு நியாயங்கள் உள்ளன. ஆனால், மற்றைய நாட்டவர்கள் பலர் ட்ரம்ப் வந்தால் உலகத்துக்கே ஒரு விடிவு வந்தது போல என்று சொல்வது தான் பெரிய சிரிப்பு........ 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பெரிய சிரிப்பே அமெரிக்கர்கள் அல்ல, அவர்களின் தெரிவிற்கு நியாயங்கள் உள்ளன. ஆனால், மற்றைய நாட்டவர்கள் பலர் ட்ரம்ப் வந்தால் உலகத்துக்கே ஒரு விடிவு வந்தது போல என்று சொல்வது தான் பெரிய சிரிப்பு.......

பைடன், ட்ரம்ப், கமலா........, ஏன் அமெரிக்காவில் தலைவர்களுக்கு பஞ்சமா? 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, vasee said:

பைடன், ட்ரம்ப், கமலா........, ஏன் அமெரிக்காவில் தலைவர்களுக்கு பஞ்சமா? 

ஓபாமாவின் பின்னர் ஒரு மாற்றம் திடீரென்று வந்தது, பூமியில் ஒரு ice age வந்தது போல............... இது அமெரிக்காவிற்கு மட்டும் இல்லை............ ட்ரம்ப், கோதபாய, மோடி, போரிஸ் ஜான்சன், இன்னும் பலர் என்று ஒரு விதமான தீவிர மற்றும் வெளிப்படையான பிரிவினைகளைத் தூண்டி, அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றும் குழுக்கள் உலகெங்கும் உருவாகிவிட்டன. ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு காரணங்களால் இவை வலுப்பெற்றன. இதை ஏற்க மறுத்தவர்கள் ஒதுங்கினர் அல்லது தலைவர்களாக அந்த அந்தக் கட்சிகளிலேயே மேலே வர முடியவில்லை என்று நினைக்கின்றேன். இப்படித்தான் எதிர்காலத் தலைவர்களை இழந்தோம் என்று நினைக்கின்றேன்.

சில மாதங்களின் முன், ஏதோ ஒரு திரியில் மனிதர்களின் நாகரீக முன்னேற்றம் என்பது ஒரு நீர்க்குமிழியோ என்று ஐயம் வருகின்றது என்று இதையே எழுதியிருந்தேன். மிக இலகுவாக, முன்னே போய்க் கொண்டிருக்கும் நாங்கள் சில தலைமுறைகள் பின்னே போய்விட்டோம்.

அமெரிக்காவில் மிகச் சாதாரண மனிதர்களிலேயே மிகவும் அற்புதமானவர்கள் இருக்கின்றனர். தலைவர்களாகும் தகுதி கொண்டவர்களும் நிச்சயம் இருப்பார்கள். இங்கிருக்கும் கல்விமுறையும் ஓரளவிற்கு சுதந்திரமான சிந்தனையை ஊக்குவிக்கின்றது. ஆனாலும் மக்கள் ஒரு உணர்ச்சிப் பெருக்கில் சிக்கி நிற்கின்றனர், ஒரு போராட்ட காலம் போல, காட்டாற்றில் பலதும் மூழ்குவது போல சில மூழ்கி விட்டன................. மீண்டு வந்து விடுவார்கள் என்பதே என் நம்பிக்கை.  

 

   

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவிலிருந்து வரும் பொருட்களிற்கு பத்து வீத வரி - டிரம்ப் அறிவிப்பு

Published By: RAJEEBAN

22 JAN, 2025 | 11:00 AM
image
 

சீனாவை இலக்குவைத்து மேலும் வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களிற்கும் பத்துவீத இறக்குமதியை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் மெக்சிக்கோ கனடாவிலிருந்து வரும் பொருட்களிற்கு 25 வீத வரியை விதிக்கப்போவதாக அறிவித்திருந்த ஜனாதிபதி பின்னர் சீன பொருட்கள் மீதான வரிகள் குறித்துஅறிவித்துள்ளார்.

சீனாவிலிருந்து வரும் அனைத்து பொருட்களிற்கும் 60 வீத வரியை விதிப்பேன்  ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப் தெரிவித்திருந்தார்.

சீனாவிலிருந்து மெக்சிக்கோ கனடா வழியாக அதிகளவு பெண்டானையில் வருகின்றது என தெரிவித்துள்ள டிரம்ப் வரிகளை அதிகரித்தால் சீனா இந்த ஆபத்தான போதைபொருளை கட்டுப்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/204512

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் பிறந்தால் இனி குடியுரிமை கிடையாது: ட்ரம்பின் அறிவிப்பினால் ஏற்படவுள்ள விளைவு

பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என புதிய அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட டொனால்டு டிரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்யும் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டிரம்ப், எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு தடாலடியான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முக்கியமாக, பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்தார். இது, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியர்களிடையே பெரிதும் பாதிப்பை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில், லட்சக்கணக்கான இந்தியர்கள் தற்காலிக விசா அடிப்படையில் அமெரிக்காவில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அங்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில், பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அந்த குழந்தைகளுக்கு தானாக அமெரிக்க குடியுரிமை வழங்கும் சட்ட நடைமுறை இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது அந்த கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இனி அமெரிக்காவில் பிறப்புரிமை அடிப்படையில் எவரும் அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்த புதிய உத்தரவு 30 நாட்களில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குடியேற்ற கொள்கை தொடர்பான அதிபர் டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை கோருவதை முடிவுக்கு கொண்டு வரும் நிர்வாக ரீதியிலான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்ட சில மணி நேரங்களுக்குள்ளாகவே அதனை எதிர்த்து நியூ ஹாம்சையரில் உள்ள குடியேற்ற வழக்கறிஞர்கள் வழக்கை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/314762

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.