Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

பிசிறு என்று காளிஅம்மாவை சீமன் குறிப்பிட்ட பின்பும் அவா அந்த கட்சியில் தானாம் இருக்கின்றார்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விளங்க நினைப்பவன் said:

@goshan_che

பிசிறு என்று காளிஅம்மாவை சீமன் குறிப்பிட்ட பின்பும் அவா அந்த கட்சியில் தானாம் இருக்கின்றார்

ஓம்…இதுவரைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/1/2025 at 03:12, Kandiah57 said:

முற்றிலும் உண்மை   ......போராட துணிவு வேண்டும்    பயம் அறவே இருக்க கூடாது      இவர்கள் தமிழ்நாட்டு மக்கள் தமிழகத்துக்கு  போராடி என்ன பெற்றுக் கொண்டார்கள் ?? 

இயற்கை தந்த தண்ணீர் 

இந்தியாவில் இருக்கும் தண்ணீர்   

காவேரி  தண்ணீரை போராடி பெற முடியாதவர்கள்.  அது தேவையற்று கடலில் கலக்கிறது    ஏன் போராடி பெறவில்லை  ???   நம்ம தலைவர் பிரபாகரன் மாதிரி ஒரு போராட்டத்தை.   முப்பது ஆண்டுகளுக்கு மேலாக 

செய்ய முடியுமா இவர்களால்    ??   முடியவே முடியாது,....ஒருசில மாதங்களில் ஐம்பது பிரிவுகளாக.  பிரிந்து விடுவார்கள்,.....🙏

இலங்கையரசு மே 16ம் திகதியை ஏன் தெரிவு செய்தது? இந்தியாவில் காங்கிரஸ்,- திமுக ஆட்சி மாற்றம் வந்துவிட்டதா என்று  காத்திருந்து தான் மே 16ம் திகதியைத் தெரிவு செய்தது. ஒருவேளை வேறு அரசுகள் வந்திடக் கூடும் என்ற அவதானிப்புக்காக தேர்தல் முடிவு வரை சிங்கள அரசு பொறுத்திருந்தது. திமுக மற்றும் காங்கிரஸ் முழுமையான ஆதரவோடு தான் சிங்கள அரசு முள்ளிவாய்க்கால் படுகொலையை நடத்தியது.

அதனால் தமிழகத்தில் ஏற்பட்டிருந்த எந்தப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்த முடியாது. அவர்கள் இன்னமும் பெரும்போராட்டமாகக் கொண்டு சென்றிருந்தால் மனிதப்படுகொலைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். 

தமிழகத்தில் ஒரு மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்து சில நாட்களில் தான் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, போர் நிறுத்தம் வந்ததாகத் தமிழக மக்களை நம்ப வைத்தார். கருணாநிதிக்குக் கொடுக்கப்பட்ட பணி அது தான். தமிழகத்தில் எந்தவொரு எழுச்சியும் வராமலும், புலிகளுக்கான மருத்துவ உதவிகள் கிடைக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது. அதை அவன் சரியாகவே செய்தான். கடைசிவரை புலிகளால் ஒரு வலிந்த தாக்குதலைச் செய்யவே முடியவில்லை. எல்லாமே. முறியடிப்புத் தாக்குதல் தான். வலிந்த தாக்குதல் செய்து கொள்ளும் அளவு போராளிகளுக்கான மருத்துவ தேவைகளை அறுதிவரை பூர்த்தி செய்ய முடியவில்லை.

9 hours ago, விளங்க நினைப்பவன் said:

@goshan_che

பிசிறு என்று காளிஅம்மாவை சீமன் குறிப்பிட்ட பின்பும் அவா அந்த கட்சியில் தானாம் இருக்கின்றார்

அது அவர் விருபப்ம். உங்களுக்கு என்ன அதில் பிரச்சனை?

On 25/1/2025 at 07:13, island said:

சீமான் கூட இப்படித் தான், “உலகத்துக்கே நாகரீகம் சொல்லிக்கொடுத்தது எம் தமிழ் பேரினம் தான் என்று காட்டு மிருகம் போல் கத்த, தற்குறித் தம்பிகள்  அது உண்மை என்று நம்பி  விசிலடிப்பர். 

அப்படிச் சொல்லலவில்லை என்றால் பெரியார் தான் சொல்லிக் கொடுத்தாக நீங்கள் பெருமை பேசுவீர்கள். அசோகர் காலத்துக் கல்வெட்டில் கூடத் தமிழும் பாளியும் தான் இருக்கின்றது. சமஸ்கிருதம் இல்லவே இல்லை. அப்படி இருந்தும் சமஸ்கிருதம் 20 ஆயிரம் பழையது என்று சங்கிகள் உருட்டும்போது உங்களுக்கு கேள்வி எழவில்லை அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தூயவன் said:

அது அவர் விருபப்ம். உங்களுக்கு என்ன அதில் பிரச்சனை?

அது ஏன் என்றால் அவா ஒரு நேர்மையானவா என்று பலர் சொல்கின்றனர் தன்னை பிசிறு என்று சீமான் சொன்ன பின்பும் அவா ஏன் அங்கே இருப்பான் என்ற ஒரு ஆதாங்கம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அது ஏன் என்றால் அவா ஒரு நேர்மையானவா என்று பலர் சொல்கின்றனர் தன்னை பிசிறு என்று சீமான் சொன்ன பின்பும் அவா ஏன் அங்கே இருப்பான் என்ற ஒரு ஆதாங்கம் தான்.

உறவே திராவிட‌ அர‌சிய‌லுக்கை இதை விட‌ அசிங்க‌மா சொற்க‌ள் ம‌லிந்து போய் இருக்கு

சிறு பூவம்பம் அவ‌ர்களுக்குள் வெடித்தால் ஒவ்வொன்றாய் வெளியில் வ‌ரும்

பிசுறு பிர‌ச்ச‌னை அவ‌ர்க‌ள் பேசி தீர்த்து விட்டின‌ம் அதை ஏன் நீங்க‌ள் இப்பவும் தூக்கி பிடிக்கிறீங்க‌ள்

சொறியார் வ‌ழி வ‌ந்த‌ இன‌த்துரோகி க‌ருணாநிதி இந்திரா காந்தி அம்மையாரின் உட‌ம்பில் இருந்து வ‌ந்த‌ ர‌த்த‌ம் எங்கு இருந்து வ‌ந்த‌தென‌ கேவ‌லமாய் சொன்ன‌தை விட‌வா இது உங்க‌ளுக்கு த‌ப்பாக‌ தெரியுது😒................... 

  • கருத்துக்கள உறவுகள்

த‌ந்த‌தை செல்வா

பெரியாரின் உத‌விய‌ நாடின‌ போது

பெரியார் சொன்ன‌ வார்த்தாஇ நானே ஒரு அடிமை உன‌க்கு எப்ப‌டி உத‌ முடியும்

இதை ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே கேட்டு இருக்கிறேன் மீண்டும் அதை இப்போதும் சோச‌ல் மீடியாக்க‌ளில் த‌மிழ‌க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளே சொல்லிக் காட்டின‌ம்.........................

  • கருத்துக்கள உறவுகள்

ஒளிப்பதிவாளர் சந்தோசுடன் விவாதிக்க செந்தமிழன் சீமான் அண்ணா ரெடி. நியூஸ் 18 ஒருங்கிணைக்கின்ற

👇

செத்தாண்டா சேகர்

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாலி said:

ஒளிப்பதிவாளர் சந்தோசுடன் விவாதிக்க செந்தமிழன் சீமான் அண்ணா ரெடி. நியூஸ் 18 ஒருங்கிணைக்கின்ற

👇

செத்தாண்டா சேகர்

 உண்மையே வெல்லும்...............சீமான் அண்ணா மாஸ்🙏👍...................

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20250127-134336-Collage-Maker

🙏👍...................

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காணொளி 

https://www.facebook.com/share/r/156wHgZyPY/

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தூயவன் said:

அப்படிச் சொல்லலவில்லை என்றால் பெரியார் தான் சொல்லிக் கொடுத்தாக நீங்கள் பெருமை பேசுவீர்கள். அசோகர் காலத்துக் கல்வெட்டில் கூடத் தமிழும் பாளியும் தான் இருக்கின்றது. சமஸ்கிருதம் இல்லவே இல்லை. அப்படி இருந்தும் சமஸ்கிருதம் 20 ஆயிரம் பழையது என்று சங்கிகள் உருட்டும்போது உங்களுக்கு கேள்வி எழவில்லை அல்லவா?

சங்கிகள் அப்படி காலாகாலமாக உருட்டியபோது தமிழர்களே அந்த புரட்டை நம்பிய போதும்    19 ம் நூற்றண்டில் மொழியியல் ஆய்வுமூலம்   அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் கார்டுவேல் தனது “திராவிட மொழிகளுக்கான ஒப்பிலக்கணம்” என்ற நூலின் மூலம் அந்த  உருட்டுகளை உடைத்தார். அதன் பின்னர்   எங்களுக்கு அந்த கேள்வியே எழவில்ல. 

இன்று சீமான் பச்சை தமிழர்கள் என்று போற்றும் அனைவருமே தமிழ் தேசியத்தை புறந்தள்ளி இந்திய தேசியத்தை ஆதரித்தவர்களே.  

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தூயவன் said:

ஒருவேளை வேறு அரசுகள் வந்திடக் கூடும் என்ற அவதானிப்புக்காக தேர்தல் முடிவு வரை சிங்கள அரசு பொறுத்திருந்தது

வேறு அரசு  வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்.??? இலங்கையில் தான் போர் நடந்தது     இந்தியாவில் இல்லை     எனவே… எந்த இந்தியா அரசும் போரை நிறுத்தி இருக்காது       ஆயுதம் கொடுப்பதை  குறைத்து இருக்கலாம் அல்லது கொடுக்காமல் விட்டிருக்கலாம்…   இந்தியா கொடுக்கவில்லை என்றால்   சீனா கொடுக்கும்   

அப்படியான நிலையில்  எந்தவொரு கட்சி இந்தியாவை ஆட்சி செய்தாலும்  இல்லை இல்லை   சீனாவில் வேண்டாதீர்கள்   நாங்கள் சும்மா   இலவசமாக ஆயுதங்களையும்  ஆலோசனைகளும் தருகிறோம்   என்பார்கள் 

தமிழ்நாடு  இந்தியா அரசு  இலவசமாக இலங்கைக்கு ஆயுதம் கொடுப்பதை  தடுக்கவில்லை    தடுக்க முடியவில்லை  ஏனெனில் தமிழ்நாடு இந்தியாவை ஆளவில்லை   இந்த ஆயுதங்கள் ஏன் கொடுக்கப்பட்டது   போர் செய்வதற்கு   தமிழ் பகுதிகளில் வடக்கு கிழக்கு இல் தமிழர்களை சுடுவதற்க்கு    குண்டுகள் போடுவதற்கு.    இதை தடுக்க முடியாதவர்கள்  எப்படி போரை நிறுத்த முடியும்   ???  

இவர்கள் போராடி இருந்தால் ஒரு குண்டு போட    சீமான் உள்பட  எல்லோரும்   வீட்டில் போய் இருந்து விடுவார்கள்   மட்டுமல்ல உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் வீட்டிலேயே இருங்கள்’   வெளியில் போக வேண்டாம் என்பார்கள்    

இவர்கள் போராடி வென்ற ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவத்தை சொல்லுங்கள் பார்ப்போம் .......🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வீரப் பையன்26 said:

 உண்மையே வெல்லும்...............சீமான் அண்ணா மாஸ்🙏👍...................

சீமனே வெல்வார் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும், உண்மையே சீமான், சீமானே உண்மை.

Edited by செவ்வியன்
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

பெரியார் சொன்ன‌ வார்த்தாஇ நானே ஒரு அடிமை உன‌க்கு எப்ப‌டி உத‌ முடியும்

பெரியார்-செல்வா காலம் அல்ல, இன்று வரைக்கும் இதுதான் உண்மை. யதார்த்தம்.

பாகிஸ்தானின் நதிகள் பல ஆரம்பமாவது இந்தியாவில் - ஆனால் அவற்றை மறித்து இந்தியா அணை கட்ட முடியாது.

காரணம் சர்வதேச ஒப்பந்தங்கள்.

ஆனால் - கர்நாடகா, ஆந்திரா, கேரளா தமிழ் நாட்டுக்குள் பாயும் நதியை மறிக்கலாம்.

உச்ச நீதி மன்றம் சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.

தமிழக தமிழர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

அதே போலத்தான் நீட்….

வடநாட்டுக்காரர் குடியேற்றம்….

இந்திய ஒன்றியத்தில் அங்கமாக தமிழ் நாடு இருக்கும் வரை, சீமான் அல்ல, தலைவர் பிரபாகரனே தமிழ் நாட்டின் முதல்வர் ஆனாலும் இதுதான் யதார்த்தம்.

இதைத்தான் பெரியார் தமது அடிமை நிலை என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

பெரியார் சொன்ன‌ வார்த்தாஇ நானே ஒரு அடிமை உன‌க்கு எப்ப‌டி உத‌ முடியும்

உண்மை   முழுக்க முழுக்க உண்மை   ஒவ்வொரு தமிழ்நாடு தமிழனும் அடிமை   தான்  உங்கள் தலைவர் சீமான்   இதை இன்னும் புரியவில்லை   ...பெரியார் அறிவை  சீமான் பெற்றுக் கொள்ள    100 ஆண்டுகள் போதாது  ...படிக்கட்டும்.   தொடர்ந்து    2009 இல் இலங்கையில்  போரை நிறுத்த. முடியாமைக்கு    காரணம்    பெரியார் சொன்னது தான்    

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

இவர்கள் போராடி வென்ற ஒரு நிகழ்ச்சி அல்லது சம்பவத்தை சொல்லுங்கள் பார்ப்போம்

இந்தி எதிர்ப்பு போராட்டம், ஜல்லி கட்டு இவை இரெண்டும் மட்டுமே எனக்கு நினைவில் வருகிறன.

ஆனால் இங்கே சிலர் தமிழ் நாட்டு மக்கள் பெரும்பாலோனோர் சுயநலமற்ற தமிழ் உணர்வாளர்கள் என ஒரு மாயை தாமும் நம்பி, ஏனையோரையும் நம்ப வைக்கிறார்கள்.

அப்படி அல்ல…அவர்களுக்கு தமிழ் உணர்வு, இன உணர்வு உள்ளது, ஆனால் அது தமது வாழிடத்தில் தமக்கு இன்னல் எனும் போதுதான் வெளிகிளம்ப்பும். அதுவும் மேலே சொன்ன இரு உதாரணங்கள் போல.

1983 இல் எமக்கு பாரிய ஆதரவு அலை இருந்தது - ஆனால் த.நா வில் அது பாரிய போராட்டமகவில்லை.

80 களின் மத்தியில் பம்பாயில், 1991 இல் - பக்கதில் இருந்த கர்நாடகா தமிழர் அடித்து துரத்தபட்ட போது கூட தமிழ் நாடு கொதிக்கவில்லை.

நாடளாவிய பந்த் - ஒரு நாள். இதுதான் தாம் சம்பந்த படதா விடயங்களில் தமிழ் நாட்டு மக்களின் போராட்ட எல்லை.

முன்பே எழுதியுள்ளேன்.

கருணாநிதி பதவி விலகினால், மத்திய ஆதரவை விலக்கி இருந்தாலும், போர் நின்றிராது - ஆனால் அவர் விலகி இருக்க வேண்டும். 

ஈழத்தமிழரை போலவே தமிழ்நாட்டு தமிழரும் சுயநலமிகள்.

அத்தோடு அவர்கள் எதையும் முதலில் இந்தியன் என்ற கோணத்தில்தான் அணுகுவார்கள், ஆகவே ஒரு அளவுக்கு மேல் அவர்கள் எமக்காக இறங்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

ஈழத்தமிழரை போலவே தமிழ்நாட்டு தமிழரும் சுயநலமிகள்.

அத்தோடு அவர்கள் எதையும் முதலில் இந்தியன் என்ற கோணத்தில்தான் அணுகுவார்கள், ஆகவே ஒரு அளவுக்கு மேல் அவர்கள் எமக்காக இறங்க மாட்டார்கள்.

சரி!

ஆனால் என் கேள்வி, தமிழ் நாட்டுத் தமிழர் ஏன் வீதிக்கு இறங்க வேண்டும்? இங்கே தமிழ் நாட்டுத் தமிழரைத் திட்டிக் கொண்டிருக்கும் சீமான் தம்பிகளே இறங்கவில்லை, மாறாக ஏறினார்கள்
😎: கிளாலிப் படகில், உழவு யந்திரத்தில், ட்ரெயினில், விமானத்தில்! இப்ப வந்து "வயசுக்கு வராமையால் ஏறினேன்" என்று சொல்லிக் கொண்டு தமிழ் நாட்டுத் தமிழர் எல்லோரும் ஈழவருக்காக தீ குளிக்க வேணுமெண்டு அட்வைஸ் வேற.

இன்னொரு தரப்பு : ஆமி ஊருக்குள் நுழைய முன்னரே "ஆமி என்னைத் தேடினது" என்று வந்த ஆட்கள்.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால், வெளிநாட்டில் இருந்து இணையப் போராளிகளாக படம் காட்டும் குழு தான் தமிழ் நாட்டுத் தமிழர் ஏதோ கடமை தவறி விட்டதாகக் காட்டாப்புக் காட்டுகின்றனர்! 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Justin said:

இறங்க வேணுமா இல்லையா என்ற தார்மீக கேள்விக்கோ….

நாம் இறங்காமல் ஓடி வந்து விட்டு அவர்களை நோகலாமா?

என்ற நியாயமான கேள்விக்கோ கூட பதில் தேவையில்லை.

இறங்க மாட்டார்கள்.

நாமும் அவர்களுக்காக இறங்க மாட்டோம்.

ஜல்லிகட்டு இலண்டன் போராட்டத்துக்கு நான் போனேன் - மருந்துக்கு கூட ஈழதமிழரை காணவில்லை. சில இளையோரை தவிர.

இந்தியன் ஹைமிசன் முன் வெளிநாட்டிலோ, இலங்கையிலோ காவிரி, நீட், தூத்துகுடி விடயங்களில் நாம் போராடி உள்ளோமா?

இதுதான் எமது தொப்புள்-கொடி உறவின் யதார்த்தம். இரு பக்கத்திலும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che @Justin  இநு தான் உலக ஜதார்ததம். பல தலைமுறைகளாக மலையகத்தில் வாழ்ந்த மலையக மக்களை நாடற்றவர்களாக்க சட்டம் நிறைவேற்றப்பட்ட போதோ எந்த விதமான வாழ்வாதார கட்டமைப்பும் இன்றி அவர்கள் நாடு கடந்தப்படும் ஒப்பந்தம் செய்யப்பட்ட போதோ ஈழத்தமிழர்கள் பொங்கி வீதிக்கு வந்தார்களா?  உலக ஜதார்த்தத்தை  புரிந்து அதை அனுசரித்து போராட்டத்தை கொண்டு செல்லாமல. அழிந்துவிட்டு இப்படி தமிழ்நாட்டு தமிழர் உதவ வில்லை என்று மூக்கால்்அழுவதில் பயன் இல்லை. 

தமிழ் நாட்டில் எத்தனை இயற்கை அழிவுகள் நடந்தன எந்த ஒரு ஈழத்தமிழர் அமைப்பாவது நிதி சேர்தது அவர்களுக்கு  உதவினார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

இறுதி போர் காலத்தில் உலக நாடுகள் எப்படி அணுகியது, என்ன எதிர்பார்த்தது என்பதை விக்கிலீக்ஸில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பபட்ட கேபிள்களை படித்தால் சில புதிய விடயங்கள் தெரிய வரும், புது கேள்விகளும் பிறக்கும். 

நமது எதிர்ப்பார்ப்புக்கும் உலக நாடுகளின் அணுகுமுறைக்கும் பாரிய தூரமுண்டு. நான் அறிந்தவரை இதுபோன்ற நாடுகளுக்குயிடையேயான போர்களிலும் சரி, உள்நாட்டு போர்களிலும் சரி இருபக்கத்திற்கும் ஆதரவு கிடைக்கும். பெரும்பாலும் அது அமெரிக்க- உருஷ்ய ஆதரவு நாடுகளாய் பிரிந்து நிற்கும். இது தற்போதைய சண்டைகளான சிரியா , உக்ரைன், காசா போன்றவற்றில் பார்க்கலாம். ஆனால் ஈழப் பிரச்சனையில் எல்லா நாடுகளும் ஒரு பக்கமாய் இருந்தது. ராஜபக்சேவிற்கு ஒருவருக்கு தலையையும் மற்றவருக்கு வாலையும் ஆட்டி தனக்கு வேண்டியதை சாதிக்க முடிந்தது.

என்னைப் பொறுத்தவரை இந்தியா எப்பவுமே ஈழம் அமைய விரும்பியதில்லை, அவர்களின் தேவை இலங்கை அவர்களின் கீழிருக்க வேண்டும். இதை சாதித்துக் கொள்ள இங்குள்ள இயக்கங்களை பயன்படுத்திக்கொண்டனர். வங்காளதேசம் அமைந்ததை ஒரு உதாரணமாக சொல்வார்கள், அது பாகிஸ்தான் எதிரி நாடாகயிருந்ததால் நடந்தது, இலங்கை அப்படியல்ல.

இறுதிப்போரில் கூட இந்தியாவின் எண்ணம் புலிகளின் தலைமை அழிந்தால் போதும் என்பதாய் தான் இருந்திருக்கும், அவர்களுக்கு இசைவாய் ஒரு போராளி குழுயிருந்தால் இலங்கை அரசை கட்டுப்படுத்த ஏதுவாயிருக்கும். ஆனால் ராஜபக்சே தன்னுடை அரசியல் எதிர்காலத்தை உறுதிபடுத்திக்கொள்ள அனைத்து நாடுகளையும் சாட்சியாக வைத்து வெறியாட்டம் ஆடிவிட்டார்கள்.

இந்த நாடுகளாடும் சதுரங்கத்தில் வீழ்த்தப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாலி said:

ஒளிப்பதிவாளர் சந்தோசுடன் விவாதிக்க செந்தமிழன் சீமான் அண்ணா ரெடி. நியூஸ் 18 ஒருங்கிணைக்கின்ற

👇

செத்தாண்டா சேகர்

Screenshot-20250127-193726-Chrome.jpg

😁👍..................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

Screenshot-20250127-193726-Chrome.jpg

😁👍..................

ஆண்களே அருகில் போக அஞ்சுமளவுக்கு வாழும் 'காம'ராஜர் தான் நம் அண்ணன்!!!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, செவ்வியன் said:

இறுதி போர் காலத்தில் உலக நாடுகள் எப்படி அணுகியது, என்ன எதிர்பார்த்தது என்பதை விக்கிலீக்ஸில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பபட்ட கேபிள்களை படித்தால் சில புதிய விடயங்கள் தெரிய வரும், புது கேள்விகளும் பிறக்கும். 

நமது எதிர்ப்பார்ப்புக்கும் உலக நாடுகளின் அணுகுமுறைக்கும் பாரிய தூரமுண்டு. நான் அறிந்தவரை இதுபோன்ற நாடுகளுக்குயிடையேயான போர்களிலும் சரி, உள்நாட்டு போர்களிலும் சரி இருபக்கத்திற்கும் ஆதரவு கிடைக்கும். பெரும்பாலும் அது அமெரிக்க- உருஷ்ய ஆதரவு நாடுகளாய் பிரிந்து நிற்கும். இது தற்போதைய சண்டைகளான சிரியா , உக்ரைன், காசா போன்றவற்றில் பார்க்கலாம். ஆனால் ஈழப் பிரச்சனையில் எல்லா நாடுகளும் ஒரு பக்கமாய் இருந்தது. ராஜபக்சேவிற்கு ஒருவருக்கு தலையையும் மற்றவருக்கு வாலையும் ஆட்டி தனக்கு வேண்டியதை சாதிக்க முடிந்தது.

என்னைப் பொறுத்தவரை இந்தியா எப்பவுமே ஈழம் அமைய விரும்பியதில்லை, அவர்களின் தேவை இலங்கை அவர்களின் கீழிருக்க வேண்டும். இதை சாதித்துக் கொள்ள இங்குள்ள இயக்கங்களை பயன்படுத்திக்கொண்டனர். வங்காளதேசம் அமைந்ததை ஒரு உதாரணமாக சொல்வார்கள், அது பாகிஸ்தான் எதிரி நாடாகயிருந்ததால் நடந்தது, இலங்கை அப்படியல்ல.

இறுதிப்போரில் கூட இந்தியாவின் எண்ணம் புலிகளின் தலைமை அழிந்தால் போதும் என்பதாய் தான் இருந்திருக்கும், அவர்களுக்கு இசைவாய் ஒரு போராளி குழுயிருந்தால் இலங்கை அரசை கட்டுப்படுத்த ஏதுவாயிருக்கும். ஆனால் ராஜபக்சே தன்னுடை அரசியல் எதிர்காலத்தை உறுதிபடுத்திக்கொள்ள அனைத்து நாடுகளையும் சாட்சியாக வைத்து வெறியாட்டம் ஆடிவிட்டார்கள்.

இந்த நாடுகளாடும் சதுரங்கத்தில் வீழ்த்தப்படுவது அப்பாவி பொதுமக்கள் தான்.

இதே கருத்தை….

வரிக்கு வரி…

இதே யாழ்களத்தில்….

எழுதிய நினைவு?

நான் நினைக்கிறேன்…

நீங்களும் நானும் சரியான ஈயடிச்சான் கொப்பி போல யோசிக்கறம் எண்டு🤣

#cut and paste 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

இதே கருத்தை….

வரிக்கு வரி…

இதே யாழ்களத்தில்….

எழுதிய நினைவு?

நான் நினைக்கிறேன்…

நீங்களும் நானும் சரியான ஈயடிச்சான் கொப்பி போல யோசிக்கறம் எண்டு🤣

#cut and paste 🤣

அப்படியா? அந்த திரி கிடைத்தால் மீள்பதிவிடுங்கள், நீங்கள் இன்னும் அதிக தகவலோடு பதிவிட்டிருக்ககூடும். எனக்கு இதை ஒட்டி பல கேள்விகள் உண்டு, சிலவற்றிருக்கான பதில் உங்கள் திரியில் இருக்கக்கூடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.