Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை

எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.

எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி(Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனை கூறினார்.

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் உரிய தரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரிய தரத்தில் மீன் உற்பத்தி செய்வது குறித்த தெளிவின்மையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கையில் மீன் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 70 ஆண்டுகளாகவே நாட்டின் உற்பத்தி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காடடியுள்ளார்.

கொள்ளைககளின் மூலம் நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தவர்கள் தற்பொழுது பொருளாதாரம் பற்றி தம்மிடம் கேள்வி எழுப்பி வருவதாகவும் அதில் பயனில்லை எனவும் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

இந்த யதார்த்தம் கசப்பானது என்றாலும் அதனை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1418106

  • கருத்துக்கள உறவுகள்

உப்பில்லை...மீனில்லை...தேங்காயில்லை,அரிசியில்லை..அப்ப வேறை என்ன சாமான் உங்களிடலம் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் உரிய தரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்...

 நாற்புறமும் கடலால் சூழப்படட இலங்கையில் மீன்கள் இருக்கின்றன . ஆனால் "தரம்  "  தான் இல்லை. அதை தரக்கட்டுப்பாடு செய்பவர்களிடம்   கேட்க வேண்டும் .ஐஸ் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் .அதற்கான தொழில் நுட்ப வசதியை   பெருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

உப்பில்லை...மீனில்லை...தேங்காயில்லை,அரிசியில்லை..அப்ப வேறை என்ன சாமான் உங்களிடலம் இருக்கு

அவர்களிடம் புத்த விகாரைகள் கட்டச் செங்கற்களும் சீமேந்தும் நிறையவே இருக்கு.அல்வாயன் அவர்களே!!😳

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

அவர்களிடம் புத்த விகாரைகள் கட்டச் செங்கற்களும் சீமேந்தும் நிறையவே இருக்கு.அல்வாயன் அவர்களே!!😳

ஓ..ஓ ..அதை மறந்திட்டன்....நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

அவர்களிடம் புத்த விகாரைகள் கட்டச் செங்கற்களும் சீமேந்தும் நிறையவே இருக்கு.அல்வாயன் அவர்களே!!😳

பச்சை முடிந்து விட்டது பாஞ்.....😀

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

கடந்த 70 ஆண்டுகளாகவே நாட்டின் உற்பத்தி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காடடியுள்ளார்.

"தமிழ் மக்களுக்கும் இதே பிரச்சனை தான் இருக்கு அவர்களுக்கு தனியாக ஒர் பிரச்சனை இல்லை என சொல்ல மறந்திட்டியளே தோழர்"...

4 minutes ago, பெருமாள் said:

பச்சை முடிந்து விட்டது பாஞ்.....😀

ஒன்று கடன் தரட்டே🤣 ...வட்டியுடன் திருப்பி தாங்கோ...(இந்தியா ஸ்டைலில் நரி வட்டியும் உண்டு,சீனா ஸ்டைலில் ஆக்கிரமிப்பு வட்டியும் கிடைக்கும்)🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிலாமதி said:

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் உரிய தரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்...

 நாற்புறமும் கடலால் சூழப்படட இலங்கையில் மீன்கள் இருக்கின்றன . ஆனால் "தரம்  "  தான் இல்லை. அதை தரக்கட்டுப்பாடு செய்பவர்களிடம்   கேட்க வேண்டும் .ஐஸ் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் .அதற்கான தொழில் நுட்ப வசதியை   பெருக்க வேண்டும்

செத்தாப்பிறகு..பிணத்துக்கு ஏற்றும் போமலினை மீனுக்குஏற்றச் சொல்கிறவை எந்த தரக்கட்டுபாட்டாளர்கள்...ஊழல் மலிந்த நாட்டில்..எந்த தரமும் இருக்காது..உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, தமிழ் சிறி said:

உரிய தரத்தில் மீன் உற்பத்தி செய்வது குறித்த தெளிவின்மையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கையில் மீன் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 70 ஆண்டுகளாகவே நாட்டின் உற்பத்தி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காடடியுள்ளார்.

தமிழர்களாகிய நாங்களும் 70 வருசமாய் எங்கடை உரிமைகளை கேட்டு போராடுறம்.
நீங்களோ 70 வருசமாய் நாடு பொருளாதாரத்தில வீழ்ச்சி அடைந்து கொண்டு போகுது எண்டுறியள்.🤣

இதுக்கு காரணம் என்னவெண்டு யாராவது உங்களுக்கு புரிய வைப்பார்களா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

தமிழர்களாகிய நாங்களும் 70 வருசமாய் எங்கடை உரிமைகளை கேட்டு போராடுறம்.
 
இது இலங்கைத் தமிழன்.....

4 hours ago, குமாரசாமி said:

நீங்களோ 70 வருசமாய் நாடு பொருளாதாரத்தில வீழ்ச்சி அடைந்து கொண்டு போகுது எண்டுறியள்.🤣

பெரும்பன்மை இனம் சாப்பிடும் மீனின் பிரச்சனை...

எனக்கு விளங்கியது சாமியர்🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, alvayan said:

உப்பில்லை...மீனில்லை...தேங்காயில்லை,அரிசியில்லை..அப்ப வேறை என்ன சாமான் உங்களிடலம் இருக்கு

வெளிநாடுகளில் பெற்ற ஆயுத தளபாடங்களும், புலிகளிடம் கைப்பற்றி ஆயுத தளபாடங்களும், தமிழரிடம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமும், மகாவம்சமும் புத்தர்சிலைகளும் உள்ளன. இவற்றைப் பாதுகாக்கப் போதுமான படையினரும் உள்ளனர். 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, alvayan said:

உப்பில்லை...மீனில்லை...தேங்காயில்லை,அரிசியில்லை..அப்ப வேறை என்ன சாமான் உங்களிடலம் இருக்கு

 தமிழருக்கு எதிரான இனவெறி நிறைந்து உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தமிழர்களாகிய நாங்களும் 70 வருசமாய் எங்கடை உரிமைகளை கேட்டு போராடுறம்.
நீங்களோ 70 வருசமாய் நாடு பொருளாதாரத்தில வீழ்ச்சி அடைந்து கொண்டு போகுது எண்டுறியள்.🤣

இதுக்கு காரணம் என்னவெண்டு யாராவது உங்களுக்கு புரிய வைப்பார்களா? :cool:

அவர்கள் நித்திரை கொள்கின்றனராம்....இன்றும் அவர்கள் விழித்து கொள்ளவில்லை...நாங்கள் என்ன தான் செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

அவர்கள் நித்திரை கொள்கின்றனராம்....இன்றும் அவர்கள் விழித்து கொள்ளவில்லை...நாங்கள் என்ன தான் செய்ய முடியும்.

தேங்காய் நாலயிரம் ஒன்று அரிசி பத்தாயிரம் ஒரு கிலோ   வரும்போது சிங்களவர்கள் விழித்து கொள்வார்கள் அது மட்டும் பொறுத்து கொள்ளுங்க அது மட்டும் ப..றை தமிழு என்று சொல்லிக்கொண்டு இனவாதம் கக்கி கொண்டு  இருக்கட்டும் .

அது வரும் வெகு விரைவில் சிங்களத்தின் முக மூடி மாற்றபட்டு இருக்கே தவிர உண்மை முகம் மாற்றப்படவில்லை .

Edited by பெருமாள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை வந்தடைந்த 1,485 மெற்றிக் தொன் உப்பு!

நாட்டை வந்தடைந்த 1,485 மெற்றிக் தொன் உப்பு!

இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெற்றிக் தொன் உப்பின் முதல் தொகுதி இன்று இலங்கைக்கு வந்துள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் (STC) அறிவித்துள்ளது.

30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

அண்மைய பருவமழை காலத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் காரணமாக உள்ளூர் சந்தையில் உப்புத் தட்டுப்பாட்டைத் தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, 2025 பெப்ரவரி 28 வரை இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த வாரம் உப்பு இறக்குமதி பற்றிய புதுப்பிப்பை வழங்கிய STC தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ, ஜனவரி 31 க்குள் கூடுதலாக 12,500 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதிக்கு எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.

நாட்டின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1418400

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 26/1/2025 at 22:52, பெருமாள் said:

தேங்காய் நாலயிரம் ஒன்று அரிசி பத்தாயிரம் ஒரு கிலோ   வரும்போது சிங்களவர்கள் விழித்து கொள்வார்கள் அது மட்டும் பொறுத்து கொள்ளுங்க அது மட்டும் ப..றை தமிழு என்று சொல்லிக்கொண்டு இனவாதம் கக்கி கொண்டு  இருக்கட்டும் .

அது வரும் வெகு விரைவில் சிங்களத்தின் முக மூடி மாற்றபட்டு இருக்கே தவிர உண்மை முகம் மாற்றப்படவில்லை .

அவர்களின் இனவாதம் பொருளாதார ரீதியாக 2009 வரை கை கொடுத்தது.
இன்று உப்புக்கு கூட அயல்நாடுகளை கையேந்த வேண்டிய நிலை.. திருந்துவார்களா என்றால் அதுதான் இல்லை. ஏனென்றால் அவர்களின் பௌத்த சாசனத்தினது சிறப்பு அந்தமாதிரி....😂 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of car and text

May be a doodle of text

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.