Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'சீமான் துப்பாக்கி படம்' சூட்டிங் போட்டோ-பிரபாகரனை வைத்து சூதாட்டம்- ஈழ போட்டோகிராபர் அமரதாஸ் தாக்கு

Mathivanan MaranUpdated: Tuesday, January 28, 2025, 15:20 [IST]
 

periyar seeman prabhakaran

சென்னை: ஈழத்தில் பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்தார்; வகை வகையான அசைவ உணவுகளை பிரபாகரன் மனைவி மதிவதினி சமைத்துக் கொடுத்தார்; தமது பாதுகாப்புக்கு மெய்ப்பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாட்டு மேடைகளில் பேசிவருவது அத்தனையும் கட்டுக்கதை; திரிபுவாதம்- பிறருக்கு நடந்தவற்றை தனக்கு நடந்ததாக திரித்து பேசி வருகிறார்; அத்துடன் பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாட்டம் நடத்துகிறார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படக் கலைஞர் -போட்டோகிராபர் அமரதாஸ் கடுமையாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

Also Read

 

தூத்துக்குடியை மிரள வைத்த 20 ரூபாய் பிரியாணி கடை.. ரெய்டுக்கு போன ஆபீசர்ஸ்.. ட்விஸ்ட்

துப்பாக்கிகள் மீது பிரியப்பட்ட சீமான்

அப்போது, திரைப்பட இயக்குநராக சீமான் ஈழத்துக்கு வந்திருந்தார். 2,3 நாட்கள் எல்லாளன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கும், சீமான் வந்தார். அங்கே இருந்த நவீன ரக துப்பாக்கிகள் மீது சீமானுக்கு அலாதியான பிரியம் இருந்தது. இதனால் அவற்றை வைத்து போட்டோ எடுக்க வேண்டும் என விரும்பினார். நான் தான் அந்தப் படங்களை எடுத்தேன். அந்தப் படத்தின் ஸ்டில்போட்டோகிராபராக நான் பணியாற்றும் போட்டோக்களும் இருக்கின்றன.

Coimbatore | IT Company fires 2000 employees overnight | Oneindia Tamil

சூட்டிங் போட்டோ எடுத்தது நான்தான்..

பிரபாகரன் தமக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்த போது எடுத்த படங்கள் என தமிழ்நாட்டில் சீமான் வெளியிட்டிருப்பவை அனைத்தும் என்னால் எல்லாளன் திரைப்பட படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவைதான். அந்தப் படங்களை உற்று நோக்கினால் சினிமா படப்பிடிப்புகளில் பயன்படுத்தக் கூடிய தெர்மகோல் சீமானின் பின்னால் இருக்கும். அதேபோல சீமான் துப்பாக்கி ஒன்றை தமது கை இடுக்கில் வைத்திருப்பார். பொதுவாக ஆயுதங்களைக் கையாள்வதற்கு என ஒரு முறை இருக்கிறது. சீமான் பிடித்திருப்பது போல கை இடுக்கில் வைத்துக் கொண்டு எல்லாம் சுட்டுவிடவும் முடியாது. அதேபோல படப்பிடிப்பு நடந்த இடத்தில் ஒரு குண்டு கூட சுடவும் முடியாது. சில கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை ராணுவ முகாம் இருந்ததால் அப்படி பயிற்சி எடுக்கவும் முடியாது.

 

periyar seeman prabhakaran

Recommended For You

 

தேசிய பாதுகாப்பு சட்டம் போட்ட போது கெஞ்சிய சீமான், படகில் செல்லாமல் ஓடி வந்தவர்..கரு.அண்ணாமலை சாட்சி

திரித்து பொய் பேசும் சீமான்

சீமானுக்கு பிரபாகரன் ஆயுதப் பயிற்சி தரவே இல்லை. அதற்கான சூழலும் அப்போது அங்கு இல்லை. அதேநேரத்தில் எல்லாளன் படத்துக்காக தமிழ்நாட்டில் இருந்து வந்து பல மாதங்களாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சந்தோஷ்-க்கு இத்தகைய துப்பாக்கி சுடும் வாய்ப்பு தரப்பட்டது. அது பயிற்சி அல்ல. சந்தோஷ்க்கு ஆமைகறியும் ஒரு முறை வழங்கப்பட்டதாக அறிந்தேன். இப்படி ஒளிப்பதிவாளர் சந்தோஷுக்கு நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் தமக்கு நடந்ததாக திரித்து பொய் பேசி வருகிறார் சீமான்.

சீமான் மீது விடுதலைப் புலிகள் அதிருப்தி

அத்துடன் பிரபாகரனுடன் சீமான் சந்தித்தது சில நிமிடங்கள்தான். அப்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ் உடன் இருந்தார். அப்போது போட்டோ எடுக்கப்பட்டது உண்மை. ஆனால் அதனை சீமானிடம் தரவே கூடாது என விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியாக சொல்லிவிட்டது. ஏனெனில் சீமான், கொழும்பு வழியாக விமானத்தில் வந்திருந்தார்; மற்றொன்று சீமான் புகழ் விரும்பியாகவே இருக்கிறார் என்பதை விடுதலைப் புலிகள் அந்த சில நாட்களிலேயே உணர்ந்திருந்தனர்; இதனால் தமிழ்நாட்டுக்கு சென்ற உடன் இந்த படங்களை எல்லாம் சீமான் வெளியிடலாம்; இதனால் எல்லாளன் படப்பிடிப்புக்காக தமிழ்நாட்டில் வந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணங்களால் சீமானுக்கு இந்த படங்களைத் தரவே கூடாது என்பதில் விடுதலைப் புலிகள் உறுதியாக இருந்தனர்.

 

periyar seeman prabhakaran

You May Also Like

 

பெரியார் சிலையை உடைப்போம் என பேசும் நாம் தமிழர் கட்சி.. திமுக வேடிக்கை பார்ப்பதா? திருமுருகன் காந்தி

பிரபாகரன் உணவு பரிமாறவே இல்லை

மேலும் சீமானுக்கு பிரபாகரன் உணவு பரிமாறவும் இல்லை; பிரபாகரன் மனைவி மதிவதினி விதம் விதமாக அசைவ உணவுகளை சமைத்துப் போடவும் இல்லை. 2008-ம் ஆண்டு காலத்தில் ஈழத்தின் களச் சூழல் அப்படியானதாகவும் இல்லை. போர் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த தருணம். பிரபாகரன், சீமானை சில நிமிடங்கள்தான் சந்தித்தார்; அதன் பின்னர் வேறு சில முக்கியமான சந்திப்புகளுக்கு சென்றும்விட்டார். சீமான் சொல்வது போல ஒரு மாதமோ, 2 அல்லது 3 மாதமோ ஈழத்தில் தங்கி இருக்கவில்லை. சில நாட்களிலேயே சீமான் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஈழத்தில் தவறு செய்த சீமான் - திருப்பி அனுப்பிய புலிகள்

சீமான் ஈழத்தில் இருந்த போது ஒரு தவறு செய்திருந்தார்; அத்துடன் பிரபாகரனை மீண்டும் மீண்டும் சந்திக்க வேண்டும் என நச்சரித்தும் கொண்டிருந்ததால் அவரை உடனே அங்கிருந்து அனுப்பிவிட வேண்டும் என்பதில்தான் புலிகள் உறுதியாக இருந்தனர். ஆனால் அப்போது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லாளன் படப்பிடிப்பில் கரும்புலி இளங்கோவாக பாத்திரம் ஏற்று நடித்த புகழ்மாறன் உள்ளிட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர்; இதனால் சீமான் சில நாட்கள் கழித்தே தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

 

periyar seeman prabhakaran

பிரபாகரனை முன்வைத்து அரசியல் சூதாடும் சீமான்

அத்துடன் வீரச்சாவடைந்த புகழ்மாறனுடன் இருக்கும் படத்தை காண்பித்து அவர்தான் தமக்கு மெய்ப்பாதுகாப்பாளராக பிரபாகாரனால் நியமிக்கப்பட்டிருந்தவர் என்றெல்லாம் சீமான் கதை பேசி வருகிறார். தமிழ்நாட்டில் சீமான் பேசி வருவது அத்தனையும் கட்டுக்கதைகள்தான். தற்போது பெரியாரா? பிரபாகரனா? என சீமான் பேசுவது பிரபாகரனை முன்வைத்து நடத்தும் அரசியல் சூதாட்டம். தம்மை புலிகள் யாரும் கேட்கப் போவது இல்லை என்ற போக்கினால் திரித்து பேசிக் கொண்டிருக்கிறார். இது மோசடித்தனமானது. இந்தப் போக்கு தமிழ்த் தேசியத்தில் இருந்து அடிப்படைவாதம் நோக்கியதாக இருக்கிறது. இது ஆபத்தானது.

பிரபாகரனுடன் இருப்பது பொய்யான போட்டோ

பிரபாகரனுடன் சீமான் இருக்கும் படங்கள் அனைத்தும் போலியானவை; சித்தரிக்கப்பட்டவை. அந்தப் படங்கள் உண்மையானவை எனில் எப்போது எங்கே எடுக்கப்பட்ட என்ற பதிவுகள் அந்த படங்களில் இருக்க வேண்டும் அல்லவா? அதை சீமான் தரப்பு வெளியிட்டிருக்கலாமே? ஏன் இத்தகைய சர்ச்சை?

 

periyar seeman prabhakaran

சூட்டிங் படங்கள் என நிரூபிக்க தயார்

சீமான் துப்பாக்கியுடன் நிற்கும் படங்கள் அனைத்தும் எல்லாளன் சூட்டிங் ஸ்பாட்டில்தான் எடுக்கப்பட்டன என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க நான் தயாராகவே இருக்கிறேன். அந்த படங்கள் அனைத்தும் எங்கே எப்போது எடுக்கப்பட்டன என்பது டிஜிட்டல் காமிராவில் பதிவாகி இருக்கின்றன. இவ்வாறு அமரதாஸ் தெரிவித்துள்ளார்.

(நன்றி: சன் நியூஸ் செய்தி)

https://tamil.oneindia.com/news/chennai/eelam-photographer-amardoss-slams-ntk-seemans-political-gamble-in-the-name-of-prabhakaran-675099.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் அரசியல் பிரவேசம் ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டதாகத் தெரிகிறது. அன்றிலிருந்து அவர் தலைவர் பிபாகரனுடனும், விடுதலைப் புலி வீரர்களுடனும் இணைந்த படங்களையும் வெளியிட்டு வருகிறார். அப்போதெல்லாம் மௌனமாக இருந்த அமரதாஸ் இப்போது ஆரவாரப்படுவதன் நோக்கம் என்ன? சந்தேகமாக இருக்கிறது.🤔

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் சீமானை எவ்வளவு நேரம் சந்திக்கபோகிறேன் என்று படப்பில் பிஸியாக இருந்த அமரதாசுக்கு வோக்கியில் அறிவித்துவிட்டுத்தான் கூப்பிட்டவர் சீமானை..

 

அமரதாசுக்கு என்ன நல்லா நாபகம் இருக்கும்.. அமரதாஸ் தன்னிடம் இருக்கும் படங்களை 2009 இறுதி யுத்தமுடிந்து வந்தபின்  தன்னிடம் இருந்த இறுதிக்கட்ட படங்களில் ஒரு தொகுதியை அனுப்பி தன்னிடம் இப்படி நிறைய படங்கள் இருப்பதாக சொல்லி அவற்றை ஜநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு அனுப்பலாம் என்னை வெளிநாட்டுக்கு எடுத்துவிடுங்கோ அல்லது பணம் அனுப்புங்கோ என்று உரையாடி இருந்தார்.. காசுகுடுத்து வாங்கிய அந்த படங்களை முதன்முதலில் இணையவெளியில் யாழில் நான் தான் எனது பழைய ஜடியில் பதிவேற்றி இருந்தேன்.. இப்படி பின்னர் பலரிடம் அந்த படங்களை காட்டி பணம்பெற்றதாக அறிந்தேன்..இப்படி இறுதிக்கட்டத்தில் மக்களினதும் போராளிகளினதும் இறப்பையும் அளிவையும் வலியையும் படம்பிடித்து அதை காசாக்கதெரிந்த அமரதாசுக்கு இது ஒன்றும் புதிதல்ல.. வெளிநாட்டுக்கு வந்தபின்னாவது மிச்ச படங்களையும் ஜநாவுக்கு குடுத்தாரா இல்லை புத்தகம் அடித்ததுடன் நிறுத்திவிட்டார தெரியவில்லை.. குடுத்திருந்தால் நன்றி..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

 

அமரதாசுக்கு என்ன நல்லா நாபகம் இருக்கும்.. அமரதாஸ் தன்னிடம் இருக்கும் படங்களை 2009 இறுதி ய காசுகுடுத்து வாங்கிய அந்த படங்களை முதன்முதலில் இணையவெளியில் யாழில் நான் தான் எனது பழைய ஜடியில் பதிவேற்றி இருந்தேன்.. 

அப்படியா?

அந்த பதிவின் , திரியின்

லிங் இனை பகிர ஏன் தயக்கம்?

அதனை தாருங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வைரவன் said:

அப்படியா?

அந்த பதிவின் , திரியின்

லிங் இனை பகிர ஏன் தயக்கம்?

அதனை தாருங்கள்

 

@பாலபத்ர ஓணாண்டிஓணாண்டி,

ஆதாரம் எங்கே?

நீங்கள் இணைத்த படங்கள் உள்ள

திரி எங்கே?

அல்லது உங்கள் தலீவர்

பொய்யிலே பிறந்து

பொய்யிலே உழலும் 

சீமான் போல்

ஆதாரம் கேட்டால்

எஸ்கேப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

 வைரவன் கேட்டது கிடைக்குமா இல்லாட்டி இன்னும் வெய்ட் பண்ணோண்ணுமா?👀

  • கருத்துக்கள உறவுகள்

லிங் தரமுடியாது.. உங்கட அவசரம் விளங்குது ஏனென்டு🤣.. நிழலிக்கு இணையவனுக்கு மோகனுக்கு தெரியும் நான் இனைச்சனா இல்லையா எண்டு.. லிங் எடுத்தாலும் போடவேண்டாம் என்டு கேட்டுக்கொள்கிறேன் நிர்வாகத்தை.. அது எனது மற்ரைய ஜடியில் இருப்பதால் நான் விரும்பவில்லை.. அவ்வளவுதான்.. வேறு காரணங்கள் இல்லை.. மற்ரது அமரதாஸ் விரும்பினால் நான் அவருடன் பேசிக்கொள்கிறேன் அப்போ அவருக்கு தெரியும்..

  • கருத்துக்கள உறவுகள்

இங்கையும் ரீல் அந்து போச்சா!😂

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

இங்கையும் ரீல் அந்து போச்சா!😂

ஓம்..மூடிட்டு படுக்கவும்..🤣

  • கருத்துக்கள உறவுகள்

பொய் சொன்னால் அதை நிரூபிக்க முடியாட்டி கோபம் தான் வரும். அடுத்த கட்ட மா குழுவா சேர்ந்து தனிமனிதத் தாக்குதல் வரும்!😂

அந்திடுச்சே !😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

பொய் சொன்னால் அதை நிரூபிக்க முடியாட்டி கோபம் தான் வரும். அடுத்த கட்ட மா குழுவா சேர்ந்து தனிமனிதத் தாக்குதல் வரும்!😂

கோபம் இல்லை.. றீல் அறுந்து விட்டதால் மேற்கொண்டு எதுவும் வராது என்பதால் முக்காடுபோட்டுகொண்டு முழிச்சிருப்பது வீண் அதான் படுக்க சொன்னான்..🤣

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முக்காடு நான் போடத் தேவையில்லை நீங்க தான் போடவேணும். ரெடியா எடுத்து வச்சிருக்கீங்க போல!😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

அந்த முக்காடு நான் போடத் தேவையில்லை நீங்க தான் போடவேணும். ரெடியா எடுத்து வச்சிருக்கீங்க போல!😂

இல்லை ஏதும் கிடைக்குமா எண்டு நாக்க தொங்க போடுற ஆக்களும் முக்காடு போட்டிருக்கிறவை..அதான் சொன்னன்..🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2025 at 12:08, பாலபத்ர ஓணாண்டி said:

பிரபாகரன் சீமானை எவ்வளவு நேரம் சந்திக்கபோகிறேன் என்று படப்பில் பிஸியாக இருந்த அமரதாசுக்கு வோக்கியில் அறிவித்துவிட்டுத்தான் கூப்பிட்டவர் சீமானை..

 

அமரதாசுக்கு என்ன நல்லா நாபகம் இருக்கும்.. அமரதாஸ் தன்னிடம் இருக்கும் படங்களை 2009 இறுதி யுத்தமுடிந்து வந்தபின்  தன்னிடம் இருந்த இறுதிக்கட்ட படங்களில் ஒரு தொகுதியை அனுப்பி தன்னிடம் இப்படி நிறைய படங்கள் இருப்பதாக சொல்லி அவற்றை ஜநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு அனுப்பலாம் என்னை வெளிநாட்டுக்கு எடுத்துவிடுங்கோ அல்லது பணம் அனுப்புங்கோ என்று உரையாடி இருந்தார்.. காசுகுடுத்து வாங்கிய அந்த படங்களை முதன்முதலில் இணையவெளியில் யாழில் நான் தான் எனது பழைய ஜடியில் பதிவேற்றி இருந்தேன்.. இப்படி பின்னர் பலரிடம் அந்த படங்களை காட்டி பணம்பெற்றதாக அறிந்தேன்..இப்படி இறுதிக்கட்டத்தில் மக்களினதும் போராளிகளினதும் இறப்பையும் அளிவையும் வலியையும் படம்பிடித்து அதை காசாக்கதெரிந்த அமரதாசுக்கு இது ஒன்றும் புதிதல்ல.. வெளிநாட்டுக்கு வந்தபின்னாவது மிச்ச படங்களையும் ஜநாவுக்கு குடுத்தாரா இல்லை புத்தகம் அடித்ததுடன் நிறுத்திவிட்டார தெரியவில்லை.. குடுத்திருந்தால் நன்றி..

இது நிரூபிக்கப்பட முடியாத அமரதாஸை களங்கப்படுத்துவதற்காக புனையப்பட்ட பொய்ப் பதிவு!

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

இல்லை ஏதும் கிடைக்குமா எண்டு நாக்க தொங்க போடுற ஆக்களும் முக்காடு போட்டிருக்கிறவை..அதான் சொன்னன்..🤣

நாங்களோ எங்கட ஆக்களோ அப்பிடியில்லை நீங்கள் பழகுகின்ற சமுகம் அப்பிடியாக்கும்!😂

ஒரு பொய்யச் சொன்னா அத மூடிமறைக்கப்படுற பாடுகள் இருக்கே அது இயாசு நாதர் கூடப் படாத பாடு!😂

நன்றி வணக்கம்!

3 minutes ago, வாலி said:

இது நிரூபிக்கப்பட முடியாத அமரதாஸை களங்கப்படுத்துவதற்காக புனையப்பட்ட பொய்ப் பதிவு!

நாங்களோ எங்கட ஆக்களோ அப்பிடியில்லை நீங்கள் பழகுகின்ற சமுகம் அப்பிடியாக்கும்!😂

ஒரு பொய்யச் சொன்னா அத மூடிமறைக்கப்படுற பாடுகள் இருக்கே அது இயேசு நாதர் கூடப் படாத பாடு!😂

நன்றி வணக்கம்!

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாலி said:

இது நிரூபிக்கப்பட முடியாத அமரதாஸை களங்கப்படுத்துவதற்காக புனையப்பட்ட பொய்ப் பதிவு!

 

கண்டுபிடிப்பு.. நோபால்பரிசு கன்பார்ம்..😂🤣

 

6 minutes ago, வாலி said:

நாங்களோ எங்கட ஆக்களோ அப்பிடியில்லை நீங்கள் பழகுகின்ற சமுகம் அப்பிடியாக்கும்!

ஆ சரி சரி நல்ல சம்முவமே..🤣

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் என்னை அழைத்து சென்ற சந்தோஷ் ! |

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

லிங் தரமுடியாது.. உங்கட அவசரம் விளங்குது ஏனென்டு🤣.. நிழலிக்கு இணையவனுக்கு மோகனுக்கு தெரியும் நான் இனைச்சனா இல்லையா எண்டு.. லிங் எடுத்தாலும் போடவேண்டாம் என்டு கேட்டுக்கொள்கிறேன் நிர்வாகத்தை.. அது எனது மற்ரைய ஜடியில் இருப்பதால் நான் விரும்பவில்லை.. அவ்வளவுதான்.. வேறு காரணங்கள் இல்லை.. மற்ரது அமரதாஸ் விரும்பினால் நான் அவருடன் பேசிக்கொள்கிறேன் அப்போ அவருக்கு தெரியும்..

அண்ணன் எவ் வழியே

தம்பியும் அவ் வழியே!

முட்டுக் கொடுக்க தொடங்கி

தாயக விடுதலைக்காக பாடுபட்ட

பொட்டம்மானை துதித்ததையும் சகித்து

முட்டுக் கொடுக்கும் ஒருவர்

இறுதி யுத்தத்தின் கொடூர இறுதி

நிமிடங்கள் வரைக்கும் தன்னாலான பணியை செய்த

அமரதாஸ் மீது பொய் குற்றச்சாட்டைத் தான்

அடுக்குவது

ஒன்றும் அதிசயம் அல்ல!

ஆதாரம் காட்ட முடியாது என்றதுக்கு சிரிப்புக் குறியிட்டவர்

யார் என்று பாருங்கள்.

போலி துவாராகாவின் சிஷ்ய கேடி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@பாலபத்ர ஓணாண்டி,

நிச்சயமாக உங்களுக்கும், வாலிக்கும் இடையான தர்கத்தில் தலையிடும் எண்ணம் இல்லை.

ஆனால் சில விளக்கம் எனக்கு தரமுடியுமா?

1. இந்த ஓணாண்டி பெயரில் முதலில் உள்ளே வரும் போது, நான் இலண்டனில் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறேன், போராட்டம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாது, சைக்கிளில்தான் சுத்துகிறேன், அதிகம் தகமைகள் இல்லாதவன், பல கால யாழ் வாசகன், கோஷானை எனக்கு நல்லா பிடிக்கும், இப்போதுதான் எழுத ஆரம்பிக்கிறேன் என்பதே உங்கள் சுய அறிமுகமாக இருந்தது.

காலப்போக்கில் நீங்கள் ஐடி துறையில் வல்லுனர் என்பதும், இலண்டனில் இருந்து மீண்டும் நாட்டுக்கு குழந்தை குட்டிகளோடு திரும்பும் அளவு வசதியானவர் என்பதையும் நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டோம். 

இது நீங்கள் இணையும் போது உங்களை பற்றி சொல்லியதற்கு (கட்டிய விம்பத்துக்கு?) மாறாக இருந்த போதும், மனதில் குறித்து கொண்டேன், கேட்கவில்லை.

இப்போ நீங்களே முன்பு வேறு ஒரு ஐடியில் வந்து, மிகவும் வினைதிறனாகவும் செயல்பட்டவர் என்கிறீர்கள்.

தனிப்பட்டு உங்கள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையை இது பலத்த கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

முடிந்தால் விளக்கம் தரவும்.

இல்லை கோஷான் எல்லாம் என்ன ஹைகோர்ட்டா - என கடந்து போனாலும், காரியமில்லை.

2. அமரதாஸ் பற்றி நீங்கள் சொல்லியது பாரிய குற்றசாட்டு. 

அதை நீங்கள் செய்த போது வேறு ஐடியில் இருந்தீர்கள் - இப்போ ஊரில் வசிக்கிறீர்கள். அந்த ஐடி வெளியில் வந்தால் ஆபத்து நேரலாம். இதை நான் முழுமையாக ஏற்கிறேன்.

ஆனால் நீங்களும் அந்த குற்றசாட்டை வீச முன்னர் இதை யோசித்து இருக்க வேண்டும்.

ஒருவரை குற்றம் சாட்டும் போது நம்மிடம் உள்ள ஆதாரத்தை நாம் வெளியிட தயாராக இருக்க வேண்டும். இல்லை எண்டால் குற்றசாட்ட கூடாது.

இப்போதும் சொல்கிறேன்…உங்கள் பழைய ஐடி விபரம் எனக்கு தேவையில்லை. உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியேனும் அதை காணும் ஆவல் எனக்கு அறவே இல்லை.

ஆனால் - நீங்கள் ஆதாரம் தரும் வரை அமரதாஸ் மீதான உங்கள் குற்றச்சாட்டை ஆதாரம் அற்ற பதிவு என்றே கருத முடியும்.

யாழ்களத்திலேயே எழுதாத அமரதாசை “வேணும் எண்டால் என்னுடன் கதைக்க சொல்லுங்கள்” என்பது “அண்ணை வந்ததும் காசை தாறோம்” டைப் லொஜிக்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இது யாழ் மீது இருந்த நம்பிக்கையினை குறைக்கிறது. போற போக்கில் இப்படியான அவதூறூகளை (நிரூபிக்கப்படும்வரை அது அவதூறு தான்) எழுதிவிட்டு அதற்கு நக்கலாக வேறு பதில் சொல்வதை எப்படி யாழ் நிர்வாகம் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கிறது? அவர் இன்னொரு பெயரில் இருந்தார் என்பது அவரே சொன்னது தான். அதைப்பற்றி அவரே கலவைப்படாத போது நிர்வாகம் அந்த திரியை வெளியிடுவதில் என்ன தயக்கம்? 

ஒன்றில் அந்த திரியை வெளியிட்டு அது அவதூறு இல்லை என்று நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவதூறு பரப்பியவர்களிற்கு எச்சரிக்கை கொடுத்து அந்த அவதூறு கருத்தினை நீக்க வேண்டும். 

யாழ் நிர்வாகம் செய்யுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஊர்க்காவலன் said:

யாழ் நிர்வாகம் செய்யுமா? 

நிர்வாகம் தான் இதற்குப் பதில் சொல்ல முடியும் என்றாலும், நான் ஊகிப்பது: இது இரண்டையும் யாழ் களம் செய்ய முடியாது.

1. ஒருவரின் பழைய அவதாரை அவரது அனுமதியில்லாமல் யாழ் நிர்வாகம் வெளியிடாது. ஓணாண்டியார் அதை வெளியிட வேண்டாமென்று கேட்டிருக்கிறார், எனவே செய்ய மாட்டார்கள்.

2. அவதூறு களத்தில் இருக்கும் இன்னொரு உறுப்பினர் மீதானதாக இருந்தால் யாழ் களம் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கும். இங்கே அவதூறு களத்தில் இல்லாத ஒருவர் மீது, கள உறுப்பினரால் . யாழ் களம் பொறுப்பெடுக்காது, ஆனால் அவதூறைச் செய்த  உறுப்பினருக்குத் தான் அவதூறின் பொறுப்பு. இதைத் தான் கோசானும், வாலியும், வைரவனும் அந்த உறுப்பினரை நோக்கி எதிர்பார்த்திருக்கிறார்கள்.

(இந்த சட்டப் பொயின்ற்றுகள் நான் சட்டக் கல்லூரிக்குப் போய் படித்து எடுத்தவையல்ல! "விதி" பட திரைவசன ஒலி நாடாவை  பதின்ம வயதில் அடிக்கடி கேட்டு வளர்ந்ததால் அறிந்தவை!😎)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனதில் பட்டவை சில

1. @பாலபத்ர ஓணாண்டி கட்டாயம் தன் பழைய ஐடியை வெளிகாட்ட வேண்டியதில்லை. அதை வெளிக்காட்டி - படங்கள் தரவேற்ற பட்டது நிருபணமானாலும், படம் யாரிடம், எப்படி பெறப்பட்டது என்பதோ, “இதே போல் பலரிடம் பணம் பெறப்பட்டதாக கேள்விப்பட்டேன்” என்பதோ நிருபணமாகாது.

இவற்றை ஓணாண்டி நிருபிக்க இன்னும் பலதை பொதுவெளியில் கூற வேண்டி வரும்.

ஆனால் ஓணாண்டிக்கு இன்னும் ஒரு கெளரவமான தெரிவு மிச்சம் இருக்கிறது.

நான் சொன்னதை என்னால் ஆதாரம் காட்டி நிருபிக்க முடியாது ஆகவே அமரதாஸ் மீதான குற்றசாட்டை நான் வாபஸ் வாங்குகிறேன் என சொல்லலாம்.

அவர் நிலையில் நான் இருந்தால் இப்படித்தான் செய்வேன்.

2. அமரதாஸ் கைவசம் இருந்த படங்களை இலங்கை அரசிடம் கையளித்து ஊரிலேயே சுக போகமாக வாழ்ந்திருக்கலாம். இப்படி வாழும் பலரை எனக்கு தெரியும்.

அப்படி இல்லாமல் இதை வெளிகொணர்ந்த அவர் போற்றுதலுக்குரியவரே.

அவர் பணம் கேட்டாலும் கூட இலங்கை அரசின் கோரப்பிடியில் இருந்து தானும், ஆதாரங்களும் தப்பத்தான் கோரி உள்ளார்.

எப்படி பார்த்தாலும் அமரதாஸ் என் மனதில் இன்னும் உயர்ந்தே உள்ளார்.

அமரதாஸ் இது உங்கள் கண்ணில் பட்டால் - இனத்தின் சார்பாக நன்றி🙏.

3. @பாலபத்ர ஓணாண்டி க்கும் பெரிய நன்றி - மேலே நான் எழுதியவைக்கு அப்பால் - இதை வெளிகொணர நீங்கள் முயன்றுள்ளீர்கள். சொந்த பணத்தை கொடுத்து வெளிகொணர்ந்துள்ளீர்கள் (நீங்கள் சொல்வது உண்மையானால்). 

நன்றி🙏.

பிகு

ஆனால் ஒரு நரிக்கு மரண முட்டு கொடுக்கப்போய் உங்கள் மீதான நம்பிக்கையை மீள முடியாதவாறு சிதைத்து கொண்டுள்ளீர்கள்.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2025 at 18:08, பாலபத்ர ஓணாண்டி said:

அமரதாஸ் தன்னிடம் இருக்கும் படங்களை 2009 இறுதி யுத்தமுடிந்து வந்தபின்  தன்னிடம் இருந்த இறுதிக்கட்ட படங்களில் ஒரு தொகுதியை அனுப்பி தன்னிடம் இப்படி நிறைய படங்கள் இருப்பதாக சொல்லி அவற்றை ஜநாவின் போர்க்குற்ற விசாரணைக்கு அனுப்பலாம் என்னை வெளிநாட்டுக்கு எடுத்துவிடுங்கோ அல்லது பணம் அனுப்புங்கோ என்று உரையாடி இருந்தார்.

பாலபத்திர ஓணாண்டி,

2009 மேயுடன் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது.  அத்துடன்   விடுதலைப் புலிகள் அமைப்பும் இல்லாது போகிறது. விடுதலைப் புலிகள் இருக்கும்வரை போராளிகளுக்கும், அமைப்பில் பணி புரிந்தோருக்குமான தேவைகளை எல்லாம் விடுதலைப் புலிகளே பார்த்துக் கொண்டார்கள். திடீரென எல்லாம் அழிந்தபின் அவர்கள் வாழ்வதற்கான வழி என்ன? என்ற கேள்வி எழுகிறது. போதாததற்கு அரசாங்கத்தினால் ஏற்படும் அச்சமும் அவர்களிடம் சேர்ந்து கொள்கிறது.

விரைந்து அவர்கள்  நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல். எங்களில் பலர் வீட்டை, காணியை, நகைகளை விற்று அல்லது கடன் வாங்கியே வெளிநாடுகளுக்கு வந்து விட்டோம். அவர்கள் என்ன செய்வார்கள்? தங்கள் கையில் உள்ளதைத்தானே விற்பார்கள். ஆகவே நீங்கள் அமரதாஸை குறை சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் உங்களை அவர் தங்களில் ஒருவனாகத்தான் பார்த்திருக்க வாய்ப்புண்டு. அவர் உங்களுக்குப் photoக்களை அனுப்பியிருந்தால், அது அவர் உங்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையாகவும் இருக்கலாம். உங்கள் கைகளில் படங்கள் வரும் போது அது பரவலாக பலரைச் சென்றடைய வாய்ப்பிருக்கிறது என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.

பணம் தந்தால்தான் படங்களைத் தருவேன் என்று அவர் சொல்லியிருந்தாலும் கூட அதை பிழை என்று நான் சொல்ல மாட்டேன்.

அவருக்கும் வாழ வழி வேண்டும் அல்லவா?

On 29/1/2025 at 14:38, பாலபத்ர ஓணாண்டி said:

லிங் தரமுடியாது.. உங்கட அவசரம் விளங்குது ஏனென்டு🤣.. நிழலிக்கு இணையவனுக்கு மோகனுக்கு தெரியும் நான் இனைச்சனா இல்லையா எண்டு.. லிங் எடுத்தாலும் போடவேண்டாம் என்டு கேட்டுக்கொள்கிறேன் நிர்வாகத்தை.. அது எனது மற்ரைய ஜடியில் இருப்பதால் நான் விரும்பவில்லை.. அவ்வளவுதான்.. வேறு காரணங்கள் இல்லை.. மற்ரது அமரதாஸ் விரும்பினால் நான் அவருடன் பேசிக்கொள்கிறேன் அப்போ அவருக்கு தெரியும்..

அமரதாஸ் பற்றி என்னிடம் மிக உயர்வான அபிப்பிராயம் இருப்பினும், அவர் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்துவதற்குரிய ஆதாரம் உங்களிடம் இருக்கலாம் எனும் நம்பிக்கையில், எதிர்ப்பார்ப்பில் உங்கள் பதிலை அனுமதித்து இருந்தோம்.

ஆயினும், வைரவன் ஆதாரம் கேட்டதற்கான பதிலில் என் பெயரையும், நிர்வாகத்தில் உள்ளவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு பதில் எழுதியமையால், நீங்கள் அமரதாஸிடம் வாங்கி படங்களை யாழில் இணைத்த விடயம் தொடர்பாக மட்டும் நிர்வாகம் சார்பான நான் பதிலளிக்க விரும்புகின்றேன்.

நானும், நியானியும் யாழ் முழுதும் அலசி தேடினாலும் நீங்கள் அவ்வாறு அமரதாஸிடம் வாங்கி இணைத்த படங்களையோ அல்லது திரியையோ கண்டு பிடிக்க முடியவில்லை.

அவ்வாறு இணைத்த திரியை உங்களின் முதல் ஐடியின் உதவியுடன், உங்களால் கண்டு பிடிக்க முடியும் என்பதால், அவ்வாறு கண்டு பிடித்து எமக்கு தனி மடலில் அனுப்பினால், அவற்றை பார்த்த பின், உங்களின் முதல் ஐடியை குறிப்பிடாமல், எம்மால் அதனை உறுதிப்படுத்த முடியும். முதல் ஐடியின் கடவுச்சொல் மறந்து விட்டால், எம்மால் அதனை reset செய்து தனி மடலில் அனுப்பி வைக்க முடியும்.

இதன் மூலம் நீங்கள் அமரதாஸிடம் படங்களை வாங்கி யாழில் இணைத்த விடயம் பொய்யானது அல்ல என்பதை நிரூபிக்க முடியும்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிழலி said:

அமரதாஸ் பற்றி என்னிடம் மிக உயர்வான அபிப்பிராயம் இருப்பினும், அவர் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்துவதற்குரிய ஆதாரம் உங்களிடம் இருக்கலாம் எனும் நம்பிக்கையில், எதிர்ப்பார்ப்பில் உங்கள் பதிலை அனுமதித்து இருந்தோம்.

ஆயினும், வைரவன் ஆதாரம் கேட்டதற்கான பதிலில் என் பெயரையும், நிர்வாகத்தில் உள்ளவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு பதில் எழுதியமையால், நீங்கள் அமரதாஸிடம் வாங்கி படங்களை யாழில் இணைத்த விடயம் தொடர்பாக மட்டும் நிர்வாகம் சார்பான நான் பதிலளிக்க விரும்புகின்றேன்.

நானும், நியானியும் யாழ் முழுதும் அலசி தேடினாலும் நீங்கள் அவ்வாறு அமரதாஸிடம் வாங்கி இணைத்த படங்களையோ அல்லது திரியையோ கண்டு பிடிக்க முடியவில்லை.

அவ்வாறு இணைத்த திரியை உங்களின் முதல் ஐடியின் உதவியுடன், உங்களால் கண்டு பிடிக்க முடியும் என்பதால், அவ்வாறு கண்டு பிடித்து எமக்கு தனி மடலில் அனுப்பினால், அவற்றை பார்த்த பின், உங்களின் முதல் ஐடியை குறிப்பிடாமல், எம்மால் அதனை உறுதிப்படுத்த முடியும். முதல் ஐடியின் கடவுச்சொல் மறந்து விட்டால், எம்மால் அதனை reset செய்து தனி மடலில் அனுப்பி வைக்க முடியும்.

இதன் மூலம் நீங்கள் அமரதாஸிடம் படங்களை வாங்கி யாழில் இணைத்த விடயம் பொய்யானது அல்ல என்பதை நிரூபிக்க முடியும்.

நன்றி

பய புள்ள செமையா கோத்துவிட்டிருக்கு  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஐடியில் இனி வருவது கஸ்டம் போல் உள்ளது🤣….

புதிய ஐடிக்கான என் பரிந்துரைகளாவன:

1. லகடபாண்டி

2. மங்குனி பாண்டியன்

3. ஒற்றன் வாதகோடாரி

4. அக்காமாலா

பிகு

@பாலபத்ர ஓணாண்டி வந்து குற்றசாட்டை வாபாஸ் வாங்கி விட்டு தொடர்ந்து எழுதவும் புலவரே.

Edited by goshan_che

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.