Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 JAN, 2025 | 04:28 PM
image
 
சென்னை: “பிரதமர் மோடி இலங்கை  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும். அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க முடியும். இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை இந்திய அரசு தர வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதன் மூலமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்தி நாகப்பட்டினம் மயிலாடுதுறை காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அட்டூழியம் செய்துள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் கடுமையாக காயமடைந்த இரண்டு மீனவர்கள் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காயடைந்த 3 மீனவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை கடற்படையினரின் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் தகுந்த சிகிச்சை பெற்று தமிழகம் திரும்ப உரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2024-ம் ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படை 72 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்தும் 554 தமிழக மீனவர்களையும் கைது செய்தும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய பாஜக அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பலமுறை கடிதம் எழுதியும் இப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை. ஆனால் பாஜகவினர் கச்சத்தீவு குறித்து பேசி பிரச்சினையை திசைத்திருப்பும் முயற்சியை செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கும் கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை அனைத்து மீனவர்களும் நன்கு அறிவார்கள்.

ராமேஸ்வரத்திலிருந்து சர்வதேச கடல் எல்லை 12 கடல் மைல் தூரத்திலும் கச்சத்தீவு என்பது 14 கடல் மைல் தூரத்திலும் உள்ளது. இந்நிலையில் சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தமிழக மீனவர்களை பொறுத்தவரை இந்திய கடல் பகுதியில் மீன்வளம் இல்லாத நிலையில் இலங்கை கடல் பகுதியில் மீன்வளம் அதிகமாக இருப்பதாலும் அங்கே மீன்பிடிக்க செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் தொடர்ந்து இருந்து வருகிறது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மன்மோகன்சிங் எடுத்த முயற்சியின் விளைவாக இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமையை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்த நிலையில் தமிழக மீனவர்கள் பின்பற்றுகிற இழுவலை மீன்பிடி முறையை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்து விட்டது. இதற்கான மாற்று ஏற்பாடுகள் பேசப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தது.

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 31 ஜனவரி 2014-ல் தமிழக பாஜக சார்பாக ராமேஸ்வரம் மண்டபத்தில் கடல் தாமரை மாநாடு நடைபெற்றது. இதில் அன்றைய மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் பங்கேற்று உரையாற்றும் போது பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தற்போது மீனவர்கள் கைது செய்யப்படுகிற நிலை தொடராது. படகுகள் பறிமுதல் செய்யப்படுவது தடுத்து நிறுத்தப்படும்.

Fight-Between-Fishermen-One-Person-Arres

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கிற உரிமை பெற்றுத் தரப்படும். மீனவர் துறைக்கென மத்திய அரசில் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும். கச்சத்தீவையும் மீட்க நடவடிக்கை எடுக்கபப்டும். அதன்மூலம்இ தமிழகம் உள்ளிட்ட இந்திய மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜோ பிரதமர் மோடியோ தொடர்ந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்படுவதையும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்பது தான் தமிழக மீனவர்களின் கேள்வியாகும். கடந்த 10 ஆண்டு காலத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு 42 கடிதங்கள் எழுதியும் மீனவர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்படவில்லை என்று அன்று குற்றம்சாட்டியதை எவரும் மறந்திட இயலாது.

அதேபோல தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021-ல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து பல கடிதங்களை பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கிறார். ஆனால் இப்பிரச்சினையை தீர்க்க பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுஷ்மா சுவராஜ் கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தமிழக மீனவர்கள் நீண்ட நெடுங்காலமாக பாரம்பரியமாக இந்திய - இலங்கை கடல் பகுதியில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற தொழிலை மேற்கொண்டு வந்தனர்.

இந்திய - இலங்கை அரசுகள் மேற்கொண்ட 1974 - 1976 ஒப்பந்தத்தின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் சர்வதேச கடல் எல்லை வகுக்கப்பட்டது. சர்வதேச கடல் எல்லை என்பது பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த மீனவர்களுக்கு தடையாக இருக்க முடியாது. சர்வதேச கடல் எல்லையை மீறி மீன்பிடிக்க வருபவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதற்கு எந்த உரிமையும் இல்லை. ஏனெனில்இ இலங்கை கடல் பகுதியில் காலம் காலமாக பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த அனுபவ உரிமையை இலங்கை அரசு மறுக்க முடியாது.

இந்திய அரசு இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் 35இ000 கோடி அளவுக்கு நிதியுதவி செய்ததோடுஇ கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கு நிறைய உதவிகளை செய்து வருகின்றது. இந்தப்பகுதியில் மிகப்பெரிய வல்லரசாக இருக்கிற இந்தியாவின் பிரதமரான மோடி சின்னஞ்சிறிய நாடான இலங்கை ஜனாதிபதி  அநுர குமார திசாநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும்.

அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க முடியும். இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை இந்திய அரசு தர வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதன் மூலமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/205248

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

அந்த ஒப்பந்தத்தின் மூலமே தமிழக மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க முடியும். இத்தகைய ஒப்பந்தத்தினால் யாழ்ப்பாண தமிழ் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உறுதியை இந்திய அரசு தர வேண்டும். அந்த வகையில் பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பதன் மூலமே தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்தவன் சொத்துக்கு ஒப்பந்தம்! இந்தியன் இந்தியன் தான்! ஒருவேளை ஆமைப்படையணியை இறக்கினாலும் இறக்குவான்கள் இந்தியனுகள்! 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

பிரதமர் மோடி இலங்கை  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோடு பேச்சுவார்த்தை நடத்தி ஒரு ஒப்பந்தத்தை போட வேண்டும்.

இன்னும் கொஞ்ச காலத்தில் வடக்கை இந்தியா தானே ஆட்சி செய்ய போகிறது.

அப்புறம் ஏன்தான் இந்த ஒப்பந்தங்கள்?
 
  • கருத்துக்கள உறவுகள்

அடங் கொய்யால,......😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

இன்னும் கொஞ்ச காலத்தில் வடக்கை இந்தியா தானே ஆட்சி செய்ய போகிறது.

அப்புறம் ஏன்தான் இந்த ஒப்பந்தங்கள்?
 
பழம் நழுவி பாலில் வீழ்ந்தது போல் ஒரு கருத்தை சொல்லியுள்ளீர்கள்.இன்றைய தமிழ்நாட்டு அரசியலை வைத்து என் கருத்தை சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

தமிழக மீனவர்கள் பின்பற்றுகிற இழுவலை மீன்பிடி முறையை இலங்கை அரசு அனுமதிக்க மறுத்து விட்டது.

அந்த முறை உலகம் முழுவதும் தடை விதிக்கப்பட்ட ஒன்று முடிந்தால் தமிழக கடற்கரையில் 1௦ மைலுக்குள் அதே இழுவை படகு களை ரோலிங் செய்து காட்ட சொல்லுங்க சிறு தொழில் செய்பவர்களுக்கும் ரோலிங் பன்னுவர்களுக்கும் பெரும் கலவரமே உருவாகிவிடும் .

இப்படியான இலங்கையின் வடகிழக்கு ஆழம் குறைந்த சூரிய ஒளி இலகுவாக கடலின் அடி வரை செல்லும் இந்த இயற்க்கை சூழ்நிலை ஒரு வரம் மீன்கள் இலகுவாக இனப் பெருக்கம் அடையும் கருவறை இப்படியான கருவறையில் 1௦௦லிருந்து 15௦ தமிழக ரோலர்கள் சொல்லி வைத்தது போல்  ரோலிங் பண்ணி கடலின் அடியை பாலைவனமாக்கும் செயலை யார் பொறுத்து கொள்வார் ?

முதலில் ஆசியாவில் அரசியலில் ஈடுபடனும் என்றால் குறிப்பிட்ட படிப்பு தகுதி இருக்கணும் என்ற நிலையை கொண்டு வாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, பெருமாள் said:

அவுசின் வட மானிலப் பகுதிக்கு நிறைய இந்தோனேசிய படகுகள் நிறைய வந்து களவாக மீன் பிடிக்க வரும்.

சொல்லிப் பார்த்தார்கள். கேட்கவில்லை.

மீனவர்களை வேறொரு படகில் பத்திரமாக ஏற்றி விட்டு, அவர்களது படகுகளை அப்படியே கடலில் வைத்தே கொழுத்தி விடுவார்கள். அவை எரிந்து அவ்விடத்திலேயே தாண்டு போகும்.

நோ மீடியா. நோ பப்பிளிசிற்றி…!

பிரச்சனை தானே தீர்ந்து விட்டது.

இப்போது அவர்கள் படகுகள் வருவதில்லை.

சுறாவைப் பிடித்து, அதன் செட்டையை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு, சுறாவை உயிருடன் கடலில் போட்டு விடுவார்கள்.

இந்திய மீனவர்கள் போலத் தான், இவர்களும்…!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புங்கையூரன் said:

அவுசின் வட மானிலப் பகுதிக்கு நிறைய இந்தோனேசிய படகுகள் நிறைய வந்து களவாக மீன் பிடிக்க வரும்.

சொல்லிப் பார்த்தார்கள். கேட்கவில்லை.

மீனவர்களை வேறொரு படகில் பத்திரமாக ஏற்றி விட்டு, அவர்களது படகுகளை அப்படியே கடலில் வைத்தே கொழுத்தி விடுவார்கள். அவை எரிந்து அவ்விடத்திலேயே தாண்டு போகும்.

நோ மீடியா. நோ பப்பிளிசிற்றி…!

பிரச்சனை தானே தீர்ந்து விட்டது.

இப்போது அவர்கள் படகுகள் வருவதில்லை.

இந்த ரோலிங் படகுகளால் இந்திய அரசு வேண்டுமென்றே செய்கின்றது போல் உள்ளது வடகிழக்கில்  வரிசையாக 15௦ ரோலர் இடைவெளி இல்லாமால் மீன்வளம் உள்ள கண்டமேடையை குஞ்சு குருமான் உள்ள அனைத்து மீன்களையும் அள்ளி எடுப்பதால் அந்த மீன் விளைவிக்கும் கருவறையை இல்லாமல் நாசம் பண்ணுகிறார்கள் இதனால் மீனையும் இறக்குமதி செய்யும் நிலையில் இலங்கை ? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

சாராயம் விக்கிற தமிழக அரசியல் வாதிகள் தான் இந்த இழுவைப் படகுகளின் முதலாளிகள்..! தர்மம், நியாயம் என்று இவர்களுக்குக் கிடையாது. 

எந்த வழியிலும் பணம்…பணம்…பணம்…!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புங்கையூரன் said:

சாராயம் விக்கிற தமிழக அரசியல் வாதிகள் தான் இந்த இழுவைப் படகுகளின் முதலாளிகள்..! தர்மம், நியாயம் என்று இவர்களுக்குக் கிடையாது. 

எந்த வழியிலும் பணம்…பணம்…பணம்…!

நம்ம பார் சிறிதரன் போல் அங்கும் உண்டு .

என்னடா இவனும் சிறியை திட்டு கிறானே என்று பார்க்க வேணாம் யார் பிழை செய்தாலும் குற்றம் குற்றமே ஆனால் என்னால் கூட மாற முடியும் இந்த சும் அடிவருடிகளால் மாறவே முடியாது காரணம் அதுகளின் பிறப்பு ஜீ.........😄

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, புங்கையூரன் said:

அவுசின் வட மானிலப் பகுதிக்கு நிறைய இந்தோனேசிய படகுகள் நிறைய வந்து களவாக மீன் பிடிக்க வரும்.

சொல்லிப் பார்த்தார்கள். கேட்கவில்லை.

மீனவர்களை வேறொரு படகில் பத்திரமாக ஏற்றி விட்டு, அவர்களது படகுகளை அப்படியே கடலில் வைத்தே கொழுத்தி விடுவார்கள். அவை எரிந்து அவ்விடத்திலேயே தாண்டு போகும்.

நோ மீடியா. நோ பப்பிளிசிற்றி…!

பிரச்சனை தானே தீர்ந்து விட்டது.

இது நல்ல வேலை. மீடியா இருந்தால் தானே ஊதி பெருப்பித்து எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றுவார்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

இந்த ரோலிங் படகுகளால் இந்திய அரசு வேண்டுமென்றே செய்கின்றது போல் உள்ளது

இந்தியா, துணைத் தூதுவராக சடை வளர்த்த ஒருவரை யாழ்ப்பாணத்தில் குந்த வைத்திருக்கிறதே? அவருக்குத் தெரியாதா காங்கேசன்துறை, நெடுந்தீவு, பருத்தித்துறை, வலவெட்டித்துறை எல்லாம் எங்கே இருக்கிறது என்று.

அவர்கள் நினைத்ததைத்தான் செய்து முடிப்பார்கள். சர்வதேசக் கடலில் பயணிக்கும் கப்பலையும் தங்கள் கரைக்கு இழுத்து வருவார்கள். மாற்றான் கடலிலும் இழுவைப் படகை ஓட்டியும் வருவார்கள்.

கடப்பாரை விழுங்கியவன் மாதிரி  முழுசிக் கொண்டிருக்கும் எங்கள் எம்பியும் என்னத்தைக் கிழிக்கப் போகிறார்?

எல்லாம் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

குரானை எரித்தவன் போல் நம்ம சாவும் என்கிறிர்கள் உண்மையான பெருமாள் யார் என்று தெரியாமல் .😃

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அதிசயம்…

பார் ஶ்ரீயின் இலண்டன் டிரைவர் தான் இன்னார்தான் என்று இந்த திரியில் ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் கொடுக்கிறார்….

அடுத்து தன் உறவினர் பெயரில் பார் லைசன்ஸ் இருப்பதையும் ஒத்துகொள்வார்…ஒத்து கொள்ளவைக்கப்படுவார்😎

#எடுடா ஸ்கிரீன் ஷாட்ட 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2025 at 23:27, goshan_che said:

என்ன அதிசயம்…

பார் ஶ்ரீயின் இலண்டன் டிரைவர் தான் இன்னார்தான் என்று இந்த திரியில் ஒப்புதல் வாக்குமூலம் எல்லாம் கொடுக்கிறார்….

அடுத்து தன் உறவினர் பெயரில் பார் லைசன்ஸ் இருப்பதையும் ஒத்துகொள்வார்…ஒத்து கொள்ளவைக்கப்படுவார்😎

#எடுடா ஸ்கிரீன் ஷாட்ட 🤣

சார் நான் இங்கு லண்டனில் என்ன செய்கிறேன்  என்பதை மறைத்து பார் லைசன்ஸ் ஸ்ரீயின் கார் டிரைவர் என்ற லெவலுக்கு காட்டி கொடுக்காமல் இருகிரியல் அதுக்கு நான் உங்களுக்கு நன்றி சொல்லுகிறேன் சார் நன்றி சொல்லுகிறேன் சார் .

ஆனால் உங்களுக்கு தெரியாமல் இல்லை நான் என்ன செய்கிறேன் என்று உங்களுக்கும் தெரியும்   எனக்கு அதுவும் தெரியும் 😆சில எல்லைகள் தாண்ட கூடாது வடிவேலு போல்  உங்கள் எல்லைக்குள் நானும் வரமாட்டன் நீங்களும் வரகூடாது இது வார்த்தைகள் அல்ல 😀

வாழ்வே எல்லாம் பகிடிதான் .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.