Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

1882224770.jpeg

 

யாழ்.மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். 

அதன் போது , தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு , அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு , அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார். 

ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் ஏற்றுக்கொண்டார். 

இருந்த போதிலும் , நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டவிரோதமான முறையில் மதில் கட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில் சட்டவிரோதமான முறையில் , ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறி அடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும். அது எந்த விதத்திலும் இந் நல்லிணக்கத்திற்கோ , மாற்றத்திற்கோ ஏற்றதல்ல என தெரிவித்தார்.  (ப)

 

தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்!

  • கருத்துக்கள உறவுகள்

“தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்” என்று உதயன் தலையங்கத்தில் போட்டுள்ளது.
நல்ல செய்தியாக உள்ளதே என்று உள்ளே போய் பார்த்தால்…            விகாரையை அகற்றுவதைப் பற்றி ஜனாதிபதியோ அரச அதிகாரிகளோ எதுவும் சொல்லாமல் நட்ட ஈடு கொடுப்பதைப் பற்றி கதைத்துள்ளார்கள்.

தலையங்கத்தின் படி… விகாரை எப்ப அகற்றப்படும் என்று உதயன் சொன்னால் நல்லது.

43 minutes ago, தமிழ் சிறி said:

“தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்” என்று உதயன் தலையங்கத்தில் போட்டுள்ளது.
நல்ல செய்தியாக உள்ளதே என்று உள்ளே போய் பார்த்தால்…            விகாரையை அகற்றுவதைப் பற்றி ஜனாதிபதியோ அரச அதிகாரிகளோ எதுவும் சொல்லாமல் நட்ட ஈடு கொடுப்பதைப் பற்றி கதைத்துள்ளார்கள்.

தலையங்கத்தின் படி… விகாரை எப்ப அகற்றப்படும் என்று உதயன் சொன்னால் நல்லது.

ஐய்.. நல்லா கனவு காண்கின்றீர்கள்.

இனவாத ஜேவிபி அகற்றுவதற்கு பதிலாக நிதி கொடுத்து மேலும் கட்டுமானத்தை அதிகரிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

“தையிட்டி விகாரையை அகற்ற திட்டம்” என்று உதயன் தலையங்கத்தில் போட்டுள்ளது.
நல்ல செய்தியாக உள்ளதே என்று உள்ளே போய் பார்த்தால்…            விகாரையை அகற்றுவதைப் பற்றி ஜனாதிபதியோ அரச அதிகாரிகளோ எதுவும் சொல்லாமல் நட்ட ஈடு கொடுப்பதைப் பற்றி கதைத்துள்ளார்கள்.

தலையங்கத்தின் படி… விகாரை எப்ப அகற்றப்படும் என்று உதயன் சொன்னால் நல்லது.

நானும் அவசரபட்டு அனுரவை திட்டிப்போடனே என்ற ஒரு மறுகலோடுதான் ஓடி வந்து பார்த்தனான்🤣.

ஆனால் அனுர என் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை🤣.

மாம்பழம் கொண்டு வந்த எங்களுகே இப்படி எண்டால், பின்னால சாத்ஸ்

@satan பிலாப்பழத்தோட வாறார்🤣.

பிகு

வல்லவனுக்கு வல்லவன் வையத்திலுண்டு. இந்திய ஹைகொமிசனையே ஏமாத்தின ஆளுக்கு உதயன் வச்சான் ஆப்பு 🤣

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, நிழலி said:

ஐய்.. நல்லா கனவு காண்கின்றீர்கள்.

இனவாத ஜேவிபி அகற்றுவதற்கு பதிலாக நிதி கொடுத்து மேலும் கட்டுமானத்தை அதிகரிக்கும்.

 

8 minutes ago, goshan_che said:

நானும் அவசரபட்டு அனுரவை திட்டிப்போடனே என்ற ஒரு மறுகலோடுதான் ஓடி வந்து பார்த்தனான்🤣.

ஆனால் அனுர என் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை🤣.

மாம்பழம் கொண்டு வந்த எங்களுகே இப்படி எண்டால், பின்னால சாத்ஸ்

@satan பிலாப்பழத்தோட வாறார்🤣.

பிகு

வல்லவனுக்கு வல்லவன் வையத்திலுண்டு. இந்திய ஹைகொமிசனையே ஏமாத்தின ஆளுக்கு உதயன் வச்சான் ஆப்பு 🤣

உதயன் பத்திரிகை வைத்த தலைப்பும்,
அனுரவின் இன்றைய நிகழ்ச்சி நிரல்களான….
மாவை வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி,
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டமை,
வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்கள் மத்தியில் சந்திப்பும்,
தமிழ் ஆச்சிமாரை… எம். ஜி. ஆர். பாணியில் கட்டிப் பிடித்த்தையும் பார்த்து,
தையிட்டி விகாரையை… அனுர,   அத்திவாரத்துடன் கிளப்பப் போறார் என்று நம்பி ஏமாந்து போனன். 😂 

உதயனுக்கு…. நெடுகவும், “ஏப்பிரல் பூல்” செய்யுறதே… வேலையாய் போச்சுதுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

 

உதயன் பத்திரிகை வைத்த தலைப்பும்,
அனுரவின் இன்றைய நிகழ்ச்சி நிரல்களான….
மாவை வீட்டிற்கு சென்று இறுதி அஞ்சலி,
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டமை,
வல்வெட்டித்துறையில் பெருந்திரளான மக்கள் மத்தியில் சந்திப்பும்,
தமிழ் ஆச்சிமாரை… எம். ஜி. ஆர். பாணியில் கட்டிப் பிடித்த்தையும் பார்த்து,
தையிட்டி விகாரையை… அனுர,   அத்திவாரத்துடன் கிளப்பப் போறார் என்று நம்பி ஏமாந்து போனன். 😂 

உதயனுக்கு…. நெடுகவும், “ஏப்பிரல் பூல்” செய்யுறதே… வேலையாய் போச்சுதுது. 🤣

உதயன் மட்டுமில்லை...யாழ்ப்பாணத்திலை இருக்கிற ..சில்லறை மீடியா வரை....நல்ல மலையாள மாந்திரீகரை..வைத்து வசியம் செய்துபோட்டாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

விசயத்திற்கு ஏற்ற தலைப்பு போட முடியாத வக்கற்ற பத்திரிகைகள், போலி அரசியல்வாதிகள் உள்ளவரையும், மக்களும் ஏமாற்றப் பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் உள்ள சட்டவிரோத விகாரை பற்றிய முழுமையான விடயங்களை கஜேந்திரகுமார் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியதை பார்த்தேன். அது ஒரு தனியார் காணி எனவே அங்கு கட்டியிருக்கும் சட்டவிரோத விகாரை அகற்றப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கையாக அமைந்தது.

இடையில் குறுக்கிட்ட ஆளுநர் அந்த காணி உரிமையாளர்கள் வேறு பகுதியில் இதற்கு பதிலாக காணியை எடுத்துக்கொள்ள்ச் இணங்குவதாக குறிப்பிட்டார். இது அடி முட்டாள்த்தனமான கருத்து, ஆளுநரின் காணிக்குள் போய் நான் வீடு கட்டிவிட்டு அவருக்கு வேறு காணி வழங்கினால் ஏற்பாரா? 

இது இப்படியிருக்கு இறுதியில் பேசிய அர்ச்சுனா கட்டிய விகாரையை இடிக்க முடியாது எமது இந்து சமயம் இதைத் தான் சொல்லுகிறதா என்றார். உண்மையில் இவனைப் போல ஒரு பைத்தியத்தை என் வாழ் நாளில் கண்டதில்லை. ஒரு ஆக்கிரமிப்பின் அடிப்படையே விளங்காமல் எல்லா விடயத்திலும் தனது அரைகுறைத் தனத்தை காட்டிக்கொண்டே இருக்கின்றார்.

Monisha Kokul

 

###############   #################   #################   ##################

 

May be an image of text that says 'விருப்பம் பதில் 1 Sarujan Saru இழப்பீட்டினை வாங்கிக்கொண்டு போகச்சொல்றதுக்கு அர்ச்சுனாவுக்கு என்ன உரிமை இருக்கு பைத்தியர் கதை இங்கு தேவை இல்லை தையிட்டி எந்தப்பக்கம் இருக்கு என்ற விசயம் கூட தெரியாத பைத்தியம். நானும் காணி உரிமையாளர்களில் ஒருவர்தான் மாற்றுக்காணியாக பாராளுமன்ற உறுப்பினர் கயேந்திரகுமார் கூறியது போன்று பெௌத்த கோயிலுக்கு உரித்தான 20 பரப்பையும் ஆக்கிரமித்து வைத்துள்ள 150 பரப்பில் 130 பரப்பையும் தரும்படியே கேட்டோமே தவிர பிறிதொரு இடத்தில் மாற்றுக்காணியை தரும்படி சம்மதிக்கவில்லை. விருப்பம் பதில் 1'

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி விகாரை காணி விவகாரம் : ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது – கஜேந்தரகுமார்

 

சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட தையிட்டி விகாரை காணிக்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்றுக்காணி வழங்கும் ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி  முன்னிலையில் ஏற்க முடியாது என தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

ஒருங்கிணைப்பு குழுவு விடயதானங்களில் தையிட்டி விகாரை தொடர்பான விடயம் பேசப்பட்டது. இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் சிங்கள மக்களின் இன ஒற்றுமையை இந்த அரசாங்கம் எடுத்துக்காட்ட விரும்பினால் ஆரம்ப புள்ளியாக தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்ற வேண்டும்

இந்த விகாரை தனியார் மக்களுடைய காணிகளில் அடாத்தாக கட்டப்பட்ட ஒரு விகாரை. இந்த விவகாரம் தொடர்பில் பிரதேச செயலாளர் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு விவரம் வழங்கியுள்ளார்.

தற்போது மாற்றம் என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த நீங்கள் தமிழ் சிங்கள உறவை இனவாதம் இல்லாமல் நோக்குகிறீர்கள் என்றால் சட்ட விரோதமாக கட்டப்பட்ட விகாரையை அகற்றுங்கள் என்றார்.

 

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அது தொடர்பில் ஆராய்வோம் என கூறிய நிலையில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் குறித்த விகாரை அமைந்துள்ள கணிகளின் சொந்தக்காரர்களுடன் கலந்துரையாடி வருகிறோம்.

அவர்கள் மாற்றுக்கானியை வாங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

இதன்போது குறிப்பீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆளுநரின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. வேண்டுமென்றே தனியார் காணிகளில் விகாரையை கட்டிவிட்டு மக்களுக்கு மாற்றுக்காணியை வழங்குவதாக் கூறுவதை ஏற்க முடியாது மக்களும் அதனை எதிர்பார்க்கவில்லை.

நாங்கள் மக்களுடன் போராடி வருகிறோம் மக்கள் அவ்வாறு காணியை கேட்கவில்லை ஆளுநரின் கருத்தை ஏற்க முடியாது என்றார்.

https://www.ilakku.org/taiyiti-viharaya-land-issue-cannot-accept-the-governors-opinion-gajendrakumar/

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

போலி அரசியல்வாதிகள்

யாரை சொல்கிறீர்கள்?

அருச்சுனா? ஆளுனர்? அனுர?

மேற்கூறிய அனைவரும் ?

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of temple

30 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்டிருந்த தம்புள்ள நகரிலிருந்து பத்ரகாளி அம்மன் கோவில் 2013 ஆம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக பௌத்த பிக்குகள் முறைப்பாடுகள் செய்த நிலையில் ஒரே இரவில் ஆலயம் முழுமையாக  இடிக்கப்பட்டது.
 
கோவிலை மூடுவதற்கு முன்னர் சில  மதச் சடங்குகள் செய்ய முயற்சித்த ஆலய நிர்வாகம்  அவகாசம் கேட்ட போதும் அவர்களின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு ஆலயம் இடிக்கப்பட்டிருந்தது.
  
அதே நாட்டில்  உயர் பாதுகாப்பு வலயம் என்கின்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் திருட்டுத்தனமாக  சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையை சட்டபூர்வமாக முயலுகின்றார்கள்.
  
அதாவது கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலுருந்த போது ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் கட்டப்பட்ட 100 அடி உயரமான தூபி (Stupa)  மற்றும் மைத்திரி-ரணில் காலத்தில்  ஆளுநராகவிருந்த ரெஜினோல்ட் குரே தலைமையில் கட்டப்பட்ட விகாரை  (Vihara) ஆகிய இரு சட்டவிரோத கட்டுமானங்களையும் நியாயம் செய்கின்றார்கள்.
 
குறிப்பாக சிங்கள நிலபரப்புகளில் நிறுவப்பட்டுள்ள ருவன்வெலிசாய (338 அடி), ஜெதவனாராமய (400 அடி) அபயகிரி (246 அடி),  மிரிசவெட்டி (197 அடி), தூபாராமய (66 அடி) ஆகிவற்றுக்கு இணையாக தமிழ் நிலப்பரப்பில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு சின்னமாக  100 அடியில்  தூபியை நிறுவி உரிமை கோருகின்றார்கள்  
இது போதாதென்று தனியாருக்கு சொந்தமான காணிகளில் சட்டவிரோதமாக நிறுவப்பட்டுள்ள மேற்படி கட்டுமானங்களுக்கு பௌத்த சாசன அமைச்சு ஊடக நிதி உதவி பெற்று பெற்று இருக்கின்றார்கள் 
இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த விகாரை அமைந்துள்ள பகுதியில் 406 சிங்களக் குடும்பங்கள் வசித்ததாகவும் அந்த அடிப்படையில் தமிழ் மக்கள் தங்களுடைய காணி என்று உரிமை கோருவதை ஏற்க முடியாது என இராணுவத்தினர்  நாடாளுமன்ற மேற்பார்வை குழுவில் நியாப்படுத்துகின்றார்கள் 
இது போதாதென்று பௌத்த சாசன அமைச்சு அந்த நிலம் முழுமையாக விகாரைக்குரியது என வாதிடுகின்றது.

ஆனால் நியத்தில் எந்தக் காலத்திலும் அங்கு  பௌத்த கட்டுமானங்கள்  இருந்தற்குரிய எந்தவித   ஆவணங்களும் கிடையாது. 
அதே நேரம் அந்த பகுதி தமிழ் மக்களின் நிலம் என உறுதிப்படுத்தி அதற்குரிய ஆதன உறுதிகளை  கூட திரு கஜேந்திரகுமார் பாராளமன்றத்தில் முன்வைத்து இருக்கின்றார் 
இந்த நிலையில் தற்போது  தமிழ் ஆளுநர் திரு வேதநாயகன் ஊடாக சட்டவிரோத  ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக முயலுகின்றார்கள்.
 
சில வாரங்களுக்கு முன் சட்டபூர்வமற்ற  ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு இருப்பதாக அறிவித்த திரு வேதநாயகன் தற்போது சட்டவிரோத விகாரையை நியாயம் செய்கின்றார். 
தனது அதிகாரத்தை தக்க வைக்க பௌத்த சிங்கள அதிகாரத்திற்கு துணை போகின்றார்.
 
சட்டவிரோதமான முறையில் ஒரு மதில் காட்டினாலே அகற்ற அப்பாவி பொது சனம் மீது சட்டங்களை ஏவி விடும் இவர்கள்  சட்டவிரோத விகாரையை எப்படி நியாயப்படுத்துகின்றார்கள்   என தெரியவில்லை. 
சட்டவிரோத கட்டுமானங்களை நியாயப்படுத்தி ஒருபோதும் இன நல்லிணக்கத்தையோ மாற்றத்தையோ ஏற்படுத்த முடியாது.
 
அதே நேரம் சட்டவிரோத விகாரையை ஏற்றுக்கொண்டால் தையிட்டியில் மற்றுமொரு சிங்கள குடியேற்றத்தை தவிர்க்க முடியாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
 
நாவற்குழியில் நிர்மாணிக்கப்பட்ட  சட்டவிரோத விகாரையை தேச வீடமைப்பு அதிகார சபையூடாக சட்டபூர்வமாக்கி அந்த சூழலில் குடியேற்றப்பட்ட சிங்கள குடியேற்றத்தை காணி உரிமம் பெற்று கொடுத்து சட்டபூர்வமாக்கி இருப்பது போல தையிட்டியில் இராணுவம் வாதிடுவது போல சிங்களவர்களை குடியேற்றுவார்கள்.
 
அதாவது தையிட்டி ஒரு போதும் முடிவாக இருக்க போவதில்லை. 

தொல்லியல் திணைக்களம் பௌத்த ஆலயங்கள் இருப்பதாக உரிமை கோரும்  காங்கேசன்துறை , பலாலி, நயினாதீவு, நாவற்குழி, நெடுந்தீவு, வல்லிபுரம் ஊர்காவத்துறை, வலிகாமம், மட்டுவில், நிலாவரை, சுன்னாகம்,உடுவில், புலோலி கந்தரோடை,உட்பட்ட பகுதிகள் தோறும்  நிறுவ முயற்சிக்கும் பௌத்த ஆக்கிரமிப்புகளுக்கான  ஆரம்பமாக தையிட்டி இருக்கும்.

Kunalan Karunagaran

  • கருத்துக்கள உறவுகள்
👇 அர்ஜுனாவின் ஒரு நிமிட காணொளியை கேட்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்.
 
இந்த வைத்தியரை இயக்குவது NPP தான் என்று ஏற்கனவே கூறி உள்ளேன்.
NPP-யின் பின்னால் இருந்து தான் வைத்தியர் இயக்குகின்றார். அதில் இனியும் சந்தேகம் வேண்டுமா?
தமிழண்டா, அதடா இதடா என்று அடிக்கடி வெடி கொழுத்தி போடும் வைத்தியர் 100 கருணாவிற்கு சமமான ஒருவர் தான். ஆகவே வைத்தியர் ஓர் அப்பட்டமான தமிழின துரோகி.
பாராளுமன்ற முதல் அமர்விலும் கஜேந்திரகுமார் அவர்கள் தையிட்டி விகாரை தொடர்பாக பேசிய போது சிவ பூஜையில் கரடி புகுந்தது போல் வைத்தியர் "நாங்கள் யாழ்பாணத்தில் இன ஒற்றுமையாக உள்ளோம்...." என்று பேரினவாத சிங்கள பெளத்த அடிப்படைவாததிற்கு ஆதரவாக கதைக்க முற்பட்டார். ஆனால் Parliament Speaker தடுத்து விட்டார்.
பின்னர் 31.01.2025 நேற்றைய தினம் யாழ்பாணம் DCC கூட்டத்தில் தையிட்டி விகாரை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அவர்கள் கதைக்கும் போது கரடி போல் இடையே புகுந்த வைத்தியர் "தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கு நட்ட ஈடு வழங்கினால் போதும்..." என்றார்.
மக்களின் காணி என்பதை தாண்டி அவை தனியார் காணி ஆகும். ஆகவே இதுவரையில் தையிட்டி விடயதில் குறித்த மக்களுடன் வைத்தியர் கதைத்து உள்ளாரா?
கதைத்து இருந்தால் அவரின் பாணியில் கேட்பதாக இருந்தால் facebook live வந்திருக்குமே?
அல்லது வீடியோ பதிவு என்றாலும் வந்து இருக்குமே?
எதுவும் இல்லாமல் பேரினவாத சிங்கள அரசின் பௌத்த பேரினவாத அடாவடி செயலுக்கு துணை போகும் செயலாக வைத்தியர் உள்ளார்.
இங்கே வைத்தியரை வைத்து முற்று முழுதாக இயக்குவது NPP தான் என்பதை மறுபடியும் கூறிக் கொள்கிறேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 31/1/2025 at 08:57, பிழம்பு said:

ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் ஏற்றுக்கொண்டார். 

இவருக்கும் ஒரு காணி இருக்கிறது.அதற்குள் வீடு கட்டப் போகிறேன் என்றார்.

அந்தக் காணிக்குள் விகாரையை கட்டிவிட்டு 10 வருடத்தின் பின் அதற்கான நஸ்டஈடு வழங்க வேண்டும்.

காச்சலும் தலையிடியும் தனக்கு தனக்கு வந்தாலே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ஈழப்பிரியன் said:

இவருக்கும் ஒரு காணி இருக்கிறது.அதற்குள் வீடு கட்டப் போகிறேன் என்றார்.

அந்தக் காணிக்குள் விகாரையை கட்டிவிட்டு 10 வருடத்தின் பின் அதற்கான நஸ்டஈடு வழங்க வேண்டும்.

காச்சலும் தலையிடியும் தனக்கு தனக்கு வந்தாலே தெரியும்.

இதனைவிட ..விகாரை கட்டப்பட்டால் .அந்த மத காட்டுபாடுகள்  வரும் ..சுற்றிவர 300 அந்த இன குடும்பம் இருக்கவேண்டும்...இப்படி பல....கூத்தடிக்கிற அர்ச்சனவுக்கு இதுவெல்லாம் தெரியுமா..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடாவடிக்கு நாம் இடம் கொடுத்தால், இந்த பௌத்த மத, இன பரம்பல் வடக்கில் கூடும். மாற்றீடு, இழப்பீடு என்று சொல்வார்கள். அதிலும் பார்க்க, சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. மதிலென்றாலென்ன, வீடென்றாலென்ன, விகாரையென்றாலென்ன ஒன்றே கடைபிடிக்க வேண்டும். வேண்டுமானால், ஆளுநர் காணியிலோ, அர்ச்சுனாவின் காணியிலோ விகாரையை கட்ட பரிந்துரை செய்யலாம்.

11 hours ago, nunavilan said:

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி, அது தொடர்பில் ஆராய்வோம் என கூறிய நிலையில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் குறித்த விகாரை அமைந்துள்ள கணிகளின் சொந்தக்காரர்களுடன் கலந்துரையாடி வருகிறோம்.

கலந்துரையாடுகிறார்களோ, அச்சுறுத்தி வற்புறுத்துகிறார்களோ தெரியவில்லை. தானாகவே சிங்கள குடியேற்றம், இராணுவ இருப்பை அங்கீகரிக்கிறார்கள்.         

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

30 ஆண்டுகள் பழமையான வரலாற்றை கொண்டிருந்த தம்புள்ள நகரிலிருந்து பத்ரகாளி அம்மன் கோவில் 2013 ஆம் ஆண்டு முற்றிலுமாக இடிக்கப்பட்டது.

இந்த ஆலயத்தை இடிக்க முடிந்ததென்றால், ஏன் தையிட்டி விகாரையை இடிக்க முடியாதென்று ஆளுநரையும் அர்ச்சுனாவையும் கேட்க்கிறேன். சட்டம் எல்லோருக்கும் சமம். அன்று, மத குருக்கள் என்று கூறிக்கொள்ளும் அடாவடிகள் செய்த முறைபாட்டுக்கமைய கோவிலுக்குரிய காணியில் அனுமதி பெறாமல் காட்டியதற்காக இடித்தார்கள். ஆனால் இங்கு வேறொருவருக்கு பொதுமகனுக்கு சொந்தமான காணியை அபகரித்து, எந்தவொரு அனுமதியும் இல்லாமல், வெறும் ஆக்கிரமிப்புக்காக கட்டப்பட்ட விகாரையை இடிப்பதில் என்ன பிரச்னை? அங்கு உள்ள மக்களால் தமது வழிபாட்டிற்காக கட்டப்பட்ட ஆலயம் அது. இது, வழிபடுவதற்கு ஆட்களே இல்லாத, அதிகாரத்தை நிலைநாட்ட கட்டப்பட்ட திருட்டு விகாரைக்கு, வக்காலத்து வாங்க சில தரகர்கள். அப்படி இடிக்க முடியாதென்றால், மற்றைய அரசுகளுக்கும் இன்றைய அரசுக்கும் என்ன வித்தியாசம்? புதிய மொத்தையில் பழைய கள். இதற்கு ஏன் பெரிசாக அலட்டிக்கொள்ள வேண்டும் நாம்?  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆளுனர் ஒரு இனவாத-மாமா என நான் எழுதிய போது பலர் இல்லை இல்லை நேர்மையானவர் அது இது என தூக்கி பிடித்தார்கள்.

அதே போல் அருச்சுனா, ஆளுனரை குறை சொல்லும் அனுர காவடி தூக்குவோர், அனுர சொல்லித்தான் இவர்கள் இப்படி உளறுகிறார்கள் என்பதையும் மறைத்து, ஏதோ இவர்களில் மட்டுமே பிழை என்பது போல் முழு பிலாப்பழத்தை சோற்றுகோப்பைக்குள் மூடிவிடப்பார்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த ஆளுனர் ஒரு இனவாத-மாமா என நான் எழுதிய போது பலர் இல்லை இல்லை நேர்மையானவர் அது இது என தூக்கி பிடித்தார்கள்.

அதே போல் அருச்சுனா, ஆளுனரை குறை சொல்லும் அனுர காவடி தூக்குவோர், அனுர சொல்லித்தான் இவர்கள் இப்படி உளறுகிறார்கள் என்பதையும் மறைத்து, ஏதோ இவர்களில் மட்டுமே பிழை என்பது போல் முழு பிலாப்பழத்தை சோற்றுகோப்பைக்குள் மூடிவிடப்பார்கிறார்கள்.

கதிராமர்....பிள்ளையானோ...

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திற்கு  ஜனாதிபதி வரும்போது... அர்ச்சுனா,  கேள்வி கேட்டு துவைத்து எடுக்கப்போறார். தமிழர்களுக்கு ஞாயம் கிடைக்கும் என்று மக்கள் எதிர் பார்த்து இருக்க, அங்கே சென்று தமிழர்களுக்கு எதிராக கதைக்குறான் பைத்தியம் , தையிட்டி விகாரை கட்டி முடிக்கப்பட்ட விகாரை அதை இடிக்க கூடாது , சிங்கள வைத்தியர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படுகிறார்கள் இனபாகுபாடு காட்டும் தமிழர்கள் என்கிறான் , பைத்தியம் இந்து கோவில் அடையாளங்களை அகற்றி குருந்தூர்மலையில் விகாரை கட்டும் பொழுது பைத்தியம் கோமாவில் இருந்தானா? வேம்பு மரங்கள் அழித்து அரசமரம் நடும் போது ஊசி அர்ச்சுனா  சிங்களப் பெண்களுடன் உறவில் இருந்து விட்டு, இப்போ கூறுகிறான் தமிழர்கள் விகாரைகளை இடிக்க வேண்டும் என்று அரசியல் செய்கிறார்கள் என்றும் முட்டாள் தமிழர்கள் என்றும் கூறுகிறான். இவன் தமிழர்களை ஏமாற்றி வோட்டை பெற்று வெளிநாட்டு தமிழர்களின் காசைப்பெற்று சிங்களனைக்கு வேலை செய்கிறான் தமிழர்கள் ஏமாளிகள்.

நவம் சின்னத்தம்பி.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த   வெள்ளிக்கிழமை (31) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் 
இடம் பெற்ற யாழ். மாவட்ட  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கலந்துரையாடலில்...
தமிழரசு கட்சியை சேர்ந்த  சிறிதரன்,  சி.வி.கே.சிவஞானம் போன்றோரும் கலந்து கொண்டார்கள். அவர்கள் எதிர்த்து குரல் கொடுக்காததால்... தையிட்டி விகாரையை தமிழரசு கட்சி வரவேற்கின்றதா?

இவ்வளவு தூரம்  கட்டிய விகாரையை, இடிக்க மாட்டார்கள் என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும். ஆனால் கஜேந்திரமாருக்கு தமது தார்மீக ஆதரவை வழங்கி, தமது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு முன் பதிவு செய்யாமல் விட்டது மாபெரும் தவறு.
 
தமிழனின் பொது விடயத்தில் ஒன்றாக நிற்க முடியாத தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்,  தமிழனின்  சாபக்கேடுகள்.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 

சட்டவிரோத விகாரைக்கு காணியை தாரைவார்க்க தையிட்டி மக்கள் தயார்! -வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் மாற்றுக்காணிகளைக் கேட்டார்கள் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.


கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருந்தார். இந்தவிடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.


இந்த விடயத்தில் ஜனாதிபதி கருத்துத் தெரிவிக்க முன்னதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கட்டப்பட்ட விகாரையை அகற்ற முடியாது என்றும், அந்தக் காணிகளின் உரிமையாளர்கள் மாற்றுக்காணிகளைப் பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளனர் என்றும் தெரிவித்திருந்தார். தங்கள் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் செயலரும், தற்போதைய ஆளுநருமான நா.வேதநாயகன் தெரிவித்திருந்த கருத்து விமர்சனங்களைத் தோற்றுவித்திருந்தது. இந்தப் பின்னணியில் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
காணியின் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, காணியின் உரிமையாளருடன் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள் விகாரைக்குச் சொந்தமான அயலில் உள்ள காணியை மாற்றீடாகத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.


இந்தச் சந்திப்பில் விகாரை தற்போதுள்ள காணி தனியாருக்குச் சொந்தமானது என்று தெரிவித்த அவர்கள் அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தனர். திஸ்ஸ விகாரைக்குரிய காணி பிறிதொரு இடத்தில் அமைந்துள்ளதையும் தெளிவுபடுத்தினர்.


விகாரை தற்போது அமைந்துள்ள காணிக்கு மேலதிகமாகவும் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த காணி உரிமையாளர்கள், அந்தக் காணியை விடுவித்துத் தருவதுடன் விகாரைக்குச் சொந்தமான அயலிலுள்ள காணியையும் மாற்றீடாகத் தமக்கு வழங்க வேண்டும் என்று கோரினர்.
காணி உரிமையாளர்களின் கோரிக்கைக்கு அமைய இதுதொடர்பாக விகாராதிபதியுடனும், நயினாதீவு விகாராதிபதியுடனும் பேச்சு நடத்தப்படுகின்றது. இந்த இணக்கப்பாடு யோசனை தொடர்பாக புத்தசாசன அமைச்சின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - என்றுள்ளது.

சட்டவிரோத விகாரைக்கு காணியை தாரைவார்க்க தையிட்டி மக்கள் தயார்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.