Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க சந்தையை ஆட்டம் காண வைத்துள்ள டீப்சீக் ஏஐ செயலி பற்றி ஆஸ்திரேலியா சந்தேகத்தை கிளப்புகிறது. அமெரிக்கா கடற்படை தனது வீரர்கள் இந்த செயலியை பயன்படுத்த தடை விதித்திருப்பதாக ஊடக செய்திகள் கூறுகின்றன. உண்மையில் என்ன நடக்கிறது. இந்த ஏஐ செயலி பாதுகாப்பானதா?

டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஏ.ஐ செயலியான டீப் சீக் குறித்து ஆஸ்திரேலிய அறிவியல் துறை அமைச்சர் எட் ஹுசிக், தனியுரிமை பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சீன செயலி குறித்து முதல் மேற்கத்திய அரசாங்க உறுப்பினராக பாதுகாப்பு கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார் எட் ஹுசிக்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "டீப்சீக் அமெரிக்கா விழித்தெழுவதற்கான ஒரு அழைப்பு" என்று கூறினார். ஆனால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அவர் குறிப்பிடவில்லை.

இந்த செயலி குறித்த கவலைகளை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அமைச்சர் ஹுசிக், தரவு மற்றும் தனியுரிமை மேலாண்மை உட்பட பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன என, ஏபிசி செய்தியிடம் கூறினார்.

எனினும், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் உள்ள பயனர்கள் இதுவரை அத்தகைய எச்சரிக்கையைக் வெளிப்படுத்தவில்லை.

டீப் சீக் செயலியை இந்த இரண்டு நாடுகளிலும் 3 மில்லியன் பேர் டவுண்லோடு செய்திருப்பதாக டிஜிட்டல் சந்தை ஆய்வுத் தளமான சென்சார் டவர் கூறுகிறது.

சாத்தியமான பாதுகாப்பு மற்றும் நெறிமுறை கவலைகள் காரணமாக அமெரிக்க கடற்படை அதன் உறுப்பினர்கள் டீப்சீக் செயலிகளைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தடை செய்துள்ளதாக CNBC ஊடகம் தெரிவித்துள்ளது.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cnvqgdvz554o

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய ஏ.ஐ செயலியான டீப் சீக் குறித்து ஆஸ்திரேலிய அறிவியல் துறை அமைச்சர் எட் ஹுசிக், தனியுரிமை பாதுகாப்பு குறித்த கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார். இந்த சீன செயலி குறித்து முதல் மேற்கத்திய அரசாங்க உறுப்பினராக பாதுகாப்பு கவலைகளை வெளிப்படுத்தி உள்ளார் எட் ஹுசிக்.

நான் இதை இப்போதைக்கு தரவிறக்கம் செய்யப் போவதில்லை. வேறு ஏதாவது வழிகளில் உபயோகித்து பார்க்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கின்றேன். ஆனால் இதன் source code ஐ எடுத்துப் பார்ப்பதாக உள்ளேன்.

சீனாவிற்கு என்னுடைய தகவல்கள் எல்லாம் போய்விடும் என்ற பயமில்லை.................. என்னிடம் எதுவுமே இல்லை என்ற விபரம் சீனாவிற்கு தெரிந்து போய் விடுமே என்ற கவலையில் தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை..................🤣.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

சீனாவிற்கு என்னுடைய தகவல்கள் எல்லாம் போய்விடும் என்ற பயமில்லை.................. என்னிடம் எதுவுமே இல்லை என்ற விபரம் சீனாவிற்கு தெரிந்து போய் விடுமே என்ற கவலையில் தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை..................🤣.

அமெரிக்காவுக்கு குண்டு போடுகில் ...உங்கடை வீட்டை தவிர்த்தே போடுவார்கள்...☺️

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, alvayan said:

அமெரிக்காவுக்கு குண்டு போடுகில் ...உங்கடை வீட்டை தவிர்த்தே போடுவார்கள்...☺️

10 வீதம் வரி போடப் போகின்றோம் என்று ட்ரம்ப் சொன்னவுடனேயே, 'இங்கே பாருங்கோ............ பேச்சு வெறும் பேச்சாகவே இருக்க வேண்டும்..................' என்று பவ்வியமாக நிற்கிறவர்கள் குண்டு எல்லாம் அமெரிக்காவிற்கு போடமாட்டார்கள். அடக்க முடியாத கோபம் அவர்களுக்கு வந்தால், இந்திய எல்லைப் பகுதிக்கு போய், அங்கே போடுவார்கள்....................😜.

தாவடியில் முதலாவது விமானக்குண்டு வீச்சு. இரண்டாவது குண்டு வீச்சு என் ஊரில். என் வீட்டிற்கு சில வீடுகள் பின்னால் இருந்த ஒரு வீட்டிற்கே குண்டு போட்டார்கள். என்னுடைய வீட்டின் மேலே விமானங்கள் இரண்டு குத்தி இறங்கின. 'இது என்ன, நல்ல சர்க்கஸ் ஆக இருக்குதே................' என்று நாங்கள் ஆவென்று பார்த்துக் கொண்டு நின்றோம். அப்படியே கழட்டி விட்டார்கள் குண்டுகளை..................... விழுந்தடிச்சு ஓடிப் போய் முற்றத்தில் நின்ற கறுத்த கொழும்பான் மாமரத்துக்கு கீழே பதுங்கினோம்..................🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ரசோதரன் said:

நீங்கள் வெறும் அப்பாவியாக இருக்கிறீர்கள்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

இந்த செயலி குறித்த கவலைகளை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அமைச்சர் ஹுசிக், தரவு மற்றும் தனியுரிமை மேலாண்மை உட்பட பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளன என, ஏபிசி செய்தியிடம் கூறினார்.

மற்றவர்களின், அறிவை, நிபுணத்துவத்தை  openai, microsoft போன்றவை திருடி, செயற்கை விவேகத்தை கட்டி எழுப்பும் போது ஆஸ்திரேலியாவின், அமெரிக்க கடற்படை போன்றவற்றுக்கு திருடுவது  கண்ணு க்கு  தனியுரிமை மேலாண்மை போன்றவை கிஞ்சித்தும் தெரியவில்லை.

ஏன் உறுத்தி சொல்லியது கூட மூடப்பட்டது, கணிசமான துறைசார் நிபுணர்கள் பல கட்டுப்பாடு சீர்திருத்தங்களுக்கு உள்ளாகினர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

தாவடியில் முதலாவது விமானக்குண்டு வீச்சு. இரண்டாவது குண்டு வீச்சு என் ஊரில். என் வீட்டிற்கு சில வீடுகள் பின்னால் இருந்த ஒரு வீட்டிற்கே குண்டு போட்டார்கள். என்னுடைய வீட்டின் மேலே விமானங்கள் இரண்டு குத்தி இறங்கின. 'இது என்ன, நல்ல சர்க்கஸ் ஆக இருக்குதே................' என்று நாங்கள் ஆவென்று பார்த்துக் கொண்டு நின்றோம். அப்படியே கழட்டி விட்டார்கள் குண்டுகளை..................... விழுந்தடிச்சு ஓடிப் போய் முற்றத்தில் நின்ற கறுத்த கொழும்பான் மாமரத்துக்கு கீழே பதுங்கினோம்..................🤣.

இந்த குத்தல்..கொட்டுதல் ..எல்லாவற்றையும் ஊரில் பனைவடலி மறைவில் நின்று பார்த்தவர்கள்...எனினும் பயமற்ற...வேகம் அப்போதிருந்தது...

வேதனையான கருத்துத்தான் இது...எனினும் தாங்கமுடியாமல் எழுதுகின்றேன்..அந்த வீரம் எல்லாம் .எங்கே பறந்தது ..மறைந்தது....முடியவில்லை....

ஊரில் நின்ற காலத்தில்...சிறிய கால நேரம் கிடைத்தாலும் ..தம்பியுடன் போவது உங்கள் ஊருக்குத்தான்...அதில் ஒரு மனநிறைவை அடைந்து மகிழ்ந்தேன்....அம்மக்கள் அடக்கு முறைக்குள் ..வாழ்வதையும் உணர்ந்தேன்...மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, alvayan said:

ஆயுத பலத்தினூடாக ஒர் இனத்தை எதிரி அழிக்கும் பொழுது அந்த இனம் வீரத்துடன் தீரத்துடன் எதிர்த்து நின்று போராடும்...இதில் எதிரிக்கு கெட்ட பெயர் உலகில் வரும் (சில வல்லரசுகளின் நலன் சார்ந்து)அத்துடன் எதிரி பலமாக இருந்தால் தனியாகவும் ,இல்லையென்றால்  ஏனைய நாடுகளின் உதவியுடன் அழித்து விடுவான்...
முதலில் வன்முறையினுடாக இப்பொழுது நடப்பது அரவணைத்து அழிப்பது ..
இதை ஆகிரமிப்பாளர்கள் யாவரும்  பல நூற்றாண்டு காலத்துக்கு முன் செய்து வெற்றி கண்ட ஒர் கொள்கை...
அசோகர் வன்முறையினால் மதம் பரப்பினார் ஆனால் இன்று "பெளத்தம்"உலகின் சமாதான சித்தாத்தம் என அமெரிக்கா முதல் ஆசியா வரை   (ஏனைய மதங்களை பின் பற்றுபவர்களும் விரும்பி பின்பற்றும் மதமாக )
அதே போன்று இந்து மதம்,கிறிஸ்தவம் ,இஸ்லாம்...முதலில் வன்முறை பின்பு அர‌வணைப்பு...
அவுஸ்ரேலியா பூர்வீக குடிகளை  அழித்து துவசம் பண்ணிய பின்பு அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் ,பூர்வீக குடிகள் என கிராமங்களில் மன்னிப்பும் ,மரியாதையும் செலுத்துதல் (அந்த பூர்வீக குடிகள் அந்த கிராமத்தில் ஒருத்தரும் இருக்க மாட்டார்கள் ஆனால் மன்னிப்பு செலுத்துவார்கள்) 

ஆயுத ஆக்கிரமிப்ப இன்றி மெளன ஆக்கிரமிப்பு (அரவணைத்து ஆக்கிரமிப்பு)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

10 வீதம் வரி போடப் போகின்றோம் என்று ட்ரம்ப் சொன்னவுடனேயே, 'இங்கே பாருங்கோ............ பேச்சு வெறும் பேச்சாகவே இருக்க வேண்டும்..................' என்று பவ்வியமாக நிற்கிறவர்கள் குண்டு எல்லாம் அமெரிக்காவிற்கு போடமாட்டார்கள். அடக்க முடியாத கோபம் அவர்களுக்கு வந்தால், இந்திய எல்லைப் பகுதிக்கு போய், அங்கே போடுவார்கள்....................😜.

தாவடியில் முதலாவது விமானக்குண்டு வீச்சு. இரண்டாவது குண்டு வீச்சு என் ஊரில். என் வீட்டிற்கு சில வீடுகள் பின்னால் இருந்த ஒரு வீட்டிற்கே குண்டு போட்டார்கள். என்னுடைய வீட்டின் மேலே விமானங்கள் இரண்டு குத்தி இறங்கின. 'இது என்ன, நல்ல சர்க்கஸ் ஆக இருக்குதே................' என்று நாங்கள் ஆவென்று பார்த்துக் கொண்டு நின்றோம். அப்படியே கழட்டி விட்டார்கள் குண்டுகளை..................... விழுந்தடிச்சு ஓடிப் போய் முற்றத்தில் நின்ற கறுத்த கொழும்பான் மாமரத்துக்கு கீழே பதுங்கினோம்..................🤣.

இரண்டாவது சியா மாசெட்டி தாக்குதல் வல்வெட்டி துறையில் அல்ல வல்வெட்டியில் அயலூரில் நடந்ததாய் ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இரண்டாவது சியா மாசெட்டி தாக்குதல் வல்வெட்டி துறையில் அல்ல வல்வெட்டியில் அயலூரில் நடந்ததாய் ஞாபகம்.

நீங்கள் சொல்வது சரியே. பழைய போலீஸ் நிலைய ஒழுங்கையால் வந்து எள்ளங்குளம் போகும் ஒழுங்கையில் அந்த வீடு இருந்தது. அது வல்வெட்டி தான். அப்பொழுது நாங்கள் வேவில் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் குடியிருந்தோம்.

வல்வெட்டி, கம்பர்மலை, பொலிகண்டி, தொண்டைமனாறு இப்படி சுற்றி இருக்கின்ற எல்லா சிறு ஊர்களையும் என் ஊர் என்றே சொல்லுகின்றேன். வல்வை நகரசபைக்குட்பட்ட பகுதிகள்...........👍.   

தங்கத்துரை அவர்களையும், ஜெகனையும், பண்டிதரையும், சங்கரையும், சூசையையும், கஸ்ட்ரோவையும் இப்படி இன்னும் எத்தனையோ பேர்களை அயலூர்க்காரர்களாக ஒருபோதும் எண்ணியதேயில்லை...............   

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, alvayan said:

அந்த வீரம் எல்லாம் .எங்கே பறந்தது ..மறைந்தது....முடியவில்லை....

என்னதான் வீரம், திறமை என்று பலரிடமும் இருந்தாலும், எல்லாவற்றையும் ஒருங்கமைக்கவும், ஒழுங்கமைக்கவும் ஒரு நல்ல தலைமை தேவை போல.......😔

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

தங்கத்துரை அவர்களையும், ஜெகனையும், பண்டிதரையும், சங்கரையும், சூசையையும், கஸ்ட்ரோவையும் இப்படி இன்னும் எத்தனையோ பேர்களை அயலூர்க்காரர்களாக ஒருபோதும் எண்ணியதேயில்லை............... 

நன்றி .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
On 1/2/2025 at 14:07, பெருமாள் said:

இரண்டாவது சியா மாசெட்டி தாக்குதல் வல்வெட்டி துறையில் அல்ல வல்வெட்டியில் அயலூரில் நடந்ததாய் ஞாபகம்.

தாவடிக்கு அடுத்து, இரண்டாவது தாக்குதல் நீர்வேலியில் நடந்ததாக ஒரு ஞாபகம், அதில் 3 அல்லது 4 பேர் இறந்தார்கள். நாங்கள் அப்பொழுது ரோட்டில் விளையாடிக்கொண்டிருந்தோம், முன் அனுபம் இல்லாததால், ஏன் plane இப்பிடி சரியுது என்று விளையாட்டை நிறுத்திவிட்டு பார்த்தோம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.