Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைரஸ் தாக்கம் காரணமாக பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் உயிரிழப்பு ; பண்ணை உரிமையாளர் கவலை !

ShanaFebruary 2, 2025
 
p-1-1170x527.jpg

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் பன்றி பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் வைரஸ் தாக்கம் இறந்து விட்டதாக பண்ணை உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.

பல இலட்சங்கள் முதலீடு செய்து பன்றி பண்ணையை நடாத்தி வந்த நிலையில் தற்போது நாடாளவிய ரீதியில் பரவி வைரஸ் நோய்த்தாக்கம் காரணமாக தங்கள் பண்ணையில் உள்ள அனைத்து பன்றிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர் இதன் மூலம் ரூ. 75 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பண்ணையில் உள்ள 150 வரையான பெரிய பன்றிகளும், 100 இற்கு மேற்பட்ட பன்றி குட்டிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர். இந்த வைரஸ்த்தாக்கம் ஏற்பட்டவுடன் பன்றி ஒரு நாள் உணவு உட்கொள்ளாது இருக்கும், மறுநாள் நடுக்க தொடங்கும் . இதனை தொடர்ந்து அவை இறந்துவிடும். ஆதாவது நோய்த்தாக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குள் பன்றிகள் இறந்து விடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் முதல் சுகாதாரத்துறை எனத் அனைத்து மட்டங்களிலும் அனுமதி பெற்று பெருமளவு நிதியினை முதலீடு செய்து ஆரம்பித்த தொழில் வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த வைரஸ் தாக்கம் எனது பண்ணையை முற்றுமுழுதாக அழித்துவிட்டது. மீளவும் இந்த தொழில் துறையை என்னால் ஆரம்பிக்க முடியுமா? என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது.

அரசோ அல்லது உரிய திணைக்களங்களோ இதற்கான நட்ட ஈட்டை ஓரளவு தந்துதவினால் என்னால் மீண்டும் பன்றி வளர்ப்பு தொழிலை ஆரம்பிக்க முடியும் எனவும் பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

https://www.battinews.com/2025/02/blog-post_82.html

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சோகமான செய்தி. 
பாவம் அந்த பண்ணை உரிமையாளர்.
நோய்த் தொற்று ஏற்பட முதல், அதற்குரிய தடுப்பூசிகளை போட்டிருந்தால் 
இழப்பு, குறைவாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

மிகவும் சோகமான செய்தி. 
பாவம் அந்த பண்ணை உரிமையாளர்.
நோய்த் தொற்று ஏற்பட முதல், அதற்குரிய தடுப்பூசிகளை போட்டிருந்தால் 
இழப்பு, குறைவாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். 

ஒம்.    ஆனால்   ஆடு   மாடுகள்   இறக்கவில்லை        காரணம் என்ன???  பன்றியை  மட்டுமே இந்த வைரஸ்  தாக்கியுள்ளது      

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

ஒம்.    ஆனால்   ஆடு   மாடுகள்   இறக்கவில்லை        காரணம் என்ன???  பன்றியை  மட்டுமே இந்த வைரஸ்  தாக்கியுள்ளது      

சிலவேளை இவை வெளிநாட்டு பன்றிகள் என்ற படியால்…
நம் ஊர் வைரசுகளை தாங்கும் சக்தி இல்லாமல் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது பெரிய துயரம்தான் .......என்ன செய்வது கடந்துதான் செல்ல வேண்டும் . .......!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

வைரஸ் தாக்கம் காரணமாக பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் உயிரிழப்பு ; பண்ணை உரிமையாளர் கவலை !

ShanaFebruary 2, 2025
 
p-1-1170x527.jpg

கிளிநொச்சி செல்வாநகர் கிராமத்தில் பன்றி பண்ணையில் இருந்த அனைத்து பன்றிகளும் வைரஸ் தாக்கம் இறந்து விட்டதாக பண்ணை உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளார்.

பல இலட்சங்கள் முதலீடு செய்து பன்றி பண்ணையை நடாத்தி வந்த நிலையில் தற்போது நாடாளவிய ரீதியில் பரவி வைரஸ் நோய்த்தாக்கம் காரணமாக தங்கள் பண்ணையில் உள்ள அனைத்து பன்றிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர் இதன் மூலம் ரூ. 75 இலட்சத்திற்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பண்ணையில் உள்ள 150 வரையான பெரிய பன்றிகளும், 100 இற்கு மேற்பட்ட பன்றி குட்டிகளும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர். இந்த வைரஸ்த்தாக்கம் ஏற்பட்டவுடன் பன்றி ஒரு நாள் உணவு உட்கொள்ளாது இருக்கும், மறுநாள் நடுக்க தொடங்கும் . இதனை தொடர்ந்து அவை இறந்துவிடும். ஆதாவது நோய்த்தாக்கம் ஏற்பட்டு இரண்டு நாட்களுக்குள் பன்றிகள் இறந்து விடுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் முதல் சுகாதாரத்துறை எனத் அனைத்து மட்டங்களிலும் அனுமதி பெற்று பெருமளவு நிதியினை முதலீடு செய்து ஆரம்பித்த தொழில் வெற்றிகரமாக சென்றுக்கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த வைரஸ் தாக்கம் எனது பண்ணையை முற்றுமுழுதாக அழித்துவிட்டது. மீளவும் இந்த தொழில் துறையை என்னால் ஆரம்பிக்க முடியுமா? என்ற நிலைமையே தற்போது காணப்படுகிறது.

அரசோ அல்லது உரிய திணைக்களங்களோ இதற்கான நட்ட ஈட்டை ஓரளவு தந்துதவினால் என்னால் மீண்டும் பன்றி வளர்ப்பு தொழிலை ஆரம்பிக்க முடியும் எனவும் பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

https://www.battinews.com/2025/02/blog-post_82.html

ஆபிரிக்கப் பன்றிக் காய்ச்சல் (African Swine fever) கடந்த ஒக்ரோபர் முதல் இலங்கையினுள் நுழைந்து வேகமாகச் சகல மாகாணங்களுக்கும் பரவி வருகிறது. யால காட்டில் காட்டுப் பன்றிகளுக்குக் கூட பரவி விட்டது எனக் கண்டறிந்திருக்கிறார்கள். 

பன்றிகளில் இந்த நோயின் இறப்பு வீதம் ஏறத்தாழ 100% - ஒரு பன்றியும் உயிர் பிழைக்காது. ஆனால் மனிதர்களுக்கும், ஏனைய கால் நடைகளுக்கும் ஆபத்தில்லை. 

கட்டுப் படுத்துவது மிகக் கடினம். தடுப்பூசிகள் இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை. நோய் தொற்றிய, தொற்றாத சகல பண்ணைகளையும் போக்குவரத்தைக் கட்டுப் படுத்தித் (quarantine) தான் இதைப் பரவாமல் தடுக்கலாம். பண்ணைக்குள் ஒரு சைக்கிள் வந்தால் கூட, அதன் சக்கரத்தை தொற்று நீக்கியால் சுத்திகரித்துத் தான் அனுமதிக்க வேண்டும். இப்படியான இறுக்கமான quarantine கட்டுப் பாடுகளை இலங்கையின் பெரும்பாலான பண்ணைகளில் நினைத்துப் பார்க்கவே முடியாது.

இந்த பண்ணையாளர் போன்றோர் என்ன செய்யலாம்? பண்ணைக்கு காப்புறுதி இருந்தால் (சாதாரணமாக இது எடுத்திருக்க வேண்டும்) அதன் மூலம் நட்ட ஈட்டைப்  பெற்றுக் கொள்ளலாம்.  

ஆனால், மீண்டும் புதிதாக அதே நிலத்தில் பன்றிப் பண்ணை தொடங்குவதை குறைந்தது 1 வருடமாவது தள்ளிப் போட வேண்டும். எங்கள் நாட்டில் இருக்கும் கட்டுப் பாட்டு முறைகளின் படி, இந்த வைரஸ் நோய் இலங்கையில் மறையப் போவதில்லை. எனவே பன்றிப் பண்ணையை விட்டு வேறு கால் நடைகளைப் பற்றிப் யோசிப்பது நல்லது.   
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்று உத்தரவு !

kugenFebruary 3, 2025
 
24-66ef0731e03c6.jpg

கிளிநொச்சியில் தனியார் பன்றிப் பண்ணை ஒன்றில் நோய் தொற்று காரணமாக உயிரிழந்த பன்றிகளின் உடலை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தி மன்றுக்கு அறிக்கை இடுமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. 

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பன்றி வளர்ப்பு பண்ணையில் திடீரென கடந்த சனிக்கிழமை (01) ம் திகதியும் ஞாயிற்றுக்கிழமை (02)ம் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்துள்ளன. 

இந்நிலையில், குறித்த பண்ணையிலிருந்து ஒரு தொகுதி பன்றிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) வேறு ஒரு பண்ணைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட சமயம் கால்நடை வைத்திய அதிகாரியினால் குறித்த பண்ணையாருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில் குறித்த வழக்கானது நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது உயிரிழந்த பன்றியின் மாதிரிகளை பெற்று மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது. 

இதனையடுத்து, குறித்த பண்ணையில் உயிரிழந்த பன்றியின் மாதிரிகள் உயிருடனுள்ள ஏனைய பன்றிகளின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு பேராதனையில் உள்ள மிருக வைத்திய ஆராய்ச்சி பிரிவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாவும் கால்நடை வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.battinews.com/2025/02/blog-post_93.html

  • கருத்துக்கள உறவுகள்

African swine virus சம்பந்தமாக விக்கி யில் தேடியபொழுது கிடைத்த தகவல் ஒன்று 

சில பத்தாண்டுகளுக்கு முன்பு கியூபா வில் இந்தப் பிரச்சனை வந்தபொழுது 5 லட்ஷம் பன்றிகள் வரைக்கும் இல்லாமல் செய்யப்பட்டதாம். கியூபா இதற்கு காரணமாக அமெரிக்கன் CIA ஐ குற்றம் சாட்டியது. Cuba வின் பொருளாதாரத்தை குலைக்கும் பொருட்டு இந்த உயிரியல் தாக்குதல் நடத்தப்பட்டதாம். 

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முயலும், சீனாவுடன் நல்லுறவில் இருக்கும் JVP ஆளும் இலங்கையில் இது நடப்பது சந்தேகத்தை எழுப்புகின்றது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 2/2/2025 at 10:20, தமிழ் சிறி said:

மிகவும் சோகமான செய்தி. 
பாவம் அந்த பண்ணை உரிமையாளர்.
நோய்த் தொற்று ஏற்பட முதல், அதற்குரிய தடுப்பூசிகளை போட்டிருந்தால் 
இழப்பு, குறைவாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன். 

தெரியாமல் தான் கேட்கின்றேன்.
எமது ஊர்களிலும் வளர்ப்பு பன்றி இறைச்சி சாப்பிடுகின்றார்களா?
காட்டுப்பன்றி இறைச்சி தான் சாப்பிடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.அதுவும் எல்லோரும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தெரியாமல் தான் கேட்கின்றேன்.
எமது ஊர்களிலும் வளர்ப்பு பன்றி இறைச்சி சாப்பிடுகின்றார்களா?
காட்டுப்பன்றி இறைச்சி தான் சாப்பிடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.அதுவும் எல்லோரும் இல்லை.

சீனாவுக்கு ஏற்றுமதி நடக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

தெரியாமல் தான் கேட்கின்றேன்.
எமது ஊர்களிலும் வளர்ப்பு பன்றி இறைச்சி சாப்பிடுகின்றார்களா?
காட்டுப்பன்றி இறைச்சி தான் சாப்பிடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.அதுவும் எல்லோரும் இல்லை.

நாங்கள் இங்கு வந்த புதிதில் ஜேர்மன் கடைகளில்…
கத்தரிக்காய், மரவள்ளிக்கிழங்கு, இஞ்சி, உள்ளி போன்றவற்றை காண முடியாது.  இப்போ எல்லா இடமும் வாங்கலாம்.
அதே போல் பன்றி இறைச்சியும் நம்மூருக்கு வந்திருக்கு.

அத்துடன் கணிசமான உல்லாசப் பிரயாணிகளின் வருகையால்…  
உல்லாச விடுதிகளுக்கு பன்றி இறைச்சியின் தேவை அதிகரித்து இருக்கும். 

அத்துடன் நவீன சமூக ஊடகங்கள் மூலம்… ஒவ்வொரு நாட்டு உணவு வகைகளும் மிக வேகமாக சென்று அடைந்துள்ளதால்…. மக்களும் வெவ்வேறு நாட்டு உணவுகளை உண்ண பழகி வருகின்றார்கள்.

உதாரணம்: பிட்சா, மெக்சிக்கன், சீன, ஐரோப்பிய உணவுகளை சொல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

தெரியாமல் தான் கேட்கின்றேன்.
எமது ஊர்களிலும் வளர்ப்பு பன்றி இறைச்சி சாப்பிடுகின்றார்களா?
காட்டுப்பன்றி இறைச்சி தான் சாப்பிடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.அதுவும் எல்லோரும் இல்லை.

ஞாயிற்று கிழமை ஆராதனை முடிஞ்ச கையோடு கிறிஸ்த்தவர்கள் வாங்குவார்கள்  வளர்ப்பு பன்றி (பறங்கியர்).
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டக்களப்பில் வெட்டுவார்கள் 

நமக்கெல்லாம் காட்டு பன்றிதான் கிடைக்கும் அதுவும் இப்ப அரிது 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பகிடி said:

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முயலும், சீனாவுடன் நல்லுறவில் இருக்கும் JVP ஆளும் இலங்கையில் இது நடப்பது சந்தேகத்தை எழுப்புகின்றது 

அதே போல எனக்கு இன்னுமொரு மதம் மீது சந்தேகம் இந்த இறைச்சியை கண்டால் விலகி ஒடும் மதத்தினரும் ....🤣

இடது சாரிகள் கூட்டை இல்லாது ஒழிக்க வலதுசாரிகள் கூட்டனி செய்த சதி என நினைக்கிறீயளோ..
கியூபா,சீனா,சிறிலங்கா....
அமெரிக்கா,இந்தியா......ஓ மை கொட்🤣

20 hours ago, குமாரசாமி said:

தெரியாமல் தான் கேட்கின்றேன்.
எமது ஊர்களிலும் வளர்ப்பு பன்றி இறைச்சி சாப்பிடுகின்றார்களா?
காட்டுப்பன்றி இறைச்சி தான் சாப்பிடுவதாக கேள்விப்பட்டுள்ளேன்.அதுவும் எல்லோரும் இல்லை.

கடலட்டை, யும் இந்த வகையில் ஒன்று ஏற்றுமதி ..
நாட்டுமக்களுக்கு தேவையான அரிசி,தேங்காய்,மீன் எல்லாம் தட்டுப்பாடு ஆனால் சர்வதேசத்துக்கு தேவையானவற்றை உற்பத்திசெய்து அழிந்து போனது தான் சரித்திரம்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.