Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திமுக கூட்டனிக்கட்சியில் உள்ள   எந்த ஓரு கட்சிக்கும் தங்களுடைய வாக்கு வீதம் சரியாகத் தெரியாது . அப்படித் தெரிந்து கொள்ள அவர்கள் விரும்புவதும் இல்லை.தெரிந்து கொள்ள வேண்டுமானால் தனித்து தேர்தலில் நிற்க வேண்டும்.. அப்படி ஒரு விசப் பரீட்சைக்கு அவர்கள் தயாரில்லை.இன்றைய நிலையில் சீமானை; கூட்டணிக்குப் போனால்இந்த உதிரிகள் காணமல் போவார்கள். அவர்களைக் கழட்டி விட திமுக தயங்காது.திமுக கூட்டணி என்று வரும் போது தன்னைத் திட்டியவர்கள் என்று கணக்கில் எடுக்காது. வைகோ திட்டாத திட்டா?அவர்களுக்குப் பதவியும் அதனால் வரும் ஊழல்பணமுமே பிரதானம்.இன்யைற திமுக வின்9 அமைச்சர்கள் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான். தன்ளைன நிருபிக்க சீமான் தொடர்ந்து தனித்து நிற்கிறார். மாற்றம் ஒன்றே மாறாதது . இலங்கையில் எத்தனை தடவைகள் தோற்றும் ஜேவிபி தொடர்ந்தும் தேர்தல்களில் ங்கு பற்றி வந்தது. இன்று ஆட்சியைப் பிடித்துள்ளது.ஆகையால் தொடர்து தேர்தல்களில் பங்குபற்றுவது அந்தக்கட்சிக்கு வளர்சிதான். தேர்தலுக்கு தேர்தல் அவர்கள் வாக்குகக்கு பணம் கொடுக்காமல் வளர்ச்சியைக் காட்டிக் கொண்டே யிருக்கிறார்கள். இந்த சங்கி றோவின் ஏஜன்ட் என்பதெல்லாம் ஆதாரமில்லாத கற்பனாவதாக் கருத்துகள்.அப்படி றோவின் ஏஜன்ட. முகவராக இருந்தால் உண்மை ஒருநாள் வெளிபட்டே தீரும். அப்போது அதனைப் பார்த்துக் கொள்ளலாம். எங்களுக்குத் தேவை தமிழ்த்தேசியத்தின் இருப்பு அதனைச் சீமான் உறுதியாக  வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்கிறார். இல்லாத திராவிட மாயை உடைக்கப்படும் போது தமிழ்த் தேசியத்தின் எழுச்சி பேரெழுச்சியாக இருக்கும்.

  • Replies 113
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இசைக்கலைஞன்
    இசைக்கலைஞன்

    இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது. 2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

  • பெரியாரை எதிர்ததபடி இத்தனை ஆயிரம் வாக்குகளாம்…… இதை கூற வெட்கமாய் இல்லை.  இதன்படி பார்ததால்  பெரியாரின் கைத்தடியா, பிரபாகரனின் வெடிகுண்டா என்று   அயோக்கியதனமாக பேசி அரசியல் செய்த சீமான் கும்பலின்

  • Sasi_varnam
    Sasi_varnam

    சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு  கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இத்தனை ஆயிரம் வாக்குகளை பெரியாரை எதிர்த்தபடி அவரது மண்ணில் எடுத்திருப்பதால் யார் குழம்பி நின்று மனதிடம் குழம்பித்தடுமாறுகிறார்கள் என்று இங்கே எழுதும் எல்லோருக்கும் புரியும். மக்கள் தீர்ப்புக்களை கொஞ்சமேனும் கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்து வையுங்கள். நன்றி. 

மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள் அதனால் தான் இரு கட்சிகள் மட்டுமே போட்டியிட்ட போதும் கட்டுத்தொகையை பெற முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, செவ்வியன் said:

மக்கள் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள் அதனால் தான் இரு கட்சிகள் மட்டுமே போட்டியிட்ட போதும் கட்டுத்தொகையை பெற முடியவில்லை.

இங்கே கட்டுக்காசு உங்கள் பார்வை.  வளர்ச்சி வீதம் நாம் தமிழர் நோக்கு. அது இரட்டிப்பாகி இருப்பது அவர்களுக்கு ஊக்கம் தரும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இத்தனை ஆயிரம் வாக்குகளை பெரியாரை எதிர்த்தபடி அவரது மண்ணில் எடுத்திருப்பதால் யார் குழம்பி நின்று மனதிடம் குழம்பித்தடுமாறுகிறார்கள்

பிக் ப்ரோ,

நான் உங்களை விளங்கி கொண்டே நடிக்கிறீர்கள் என எண்ணியது தவறோ என யோசிக்கவைக்கிறீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமுருகன் காந்தியின் கீச்சு 👇

———————-

 அதிமுக, பாமக, அமமுக தேமுதிக, பாஜக ஆகியவை போட்டியிடாத போதிலும் கட்டுத்தொகையை சீமானால் பெறமுடியாமல் போனதற்கும், குறைவான வாக்குகளை பெறுவதற்கும் காரணியாக களத்தில் இயங்கிய அனைத்து பெரியாரிய தோழர்களுக்கும், பெரியரை இழிவு செய்தவரை நிராகரித்த ஈரோடு மக்களுக்கும் வாழ்த்துகள்.

திமுகவின் எதிர்கட்சியாக, எதிரியாக தன்னை காட்டவிரும்பிய சீமானின் அரசியல் தோல்வியில் முடிந்துள்ளது.

எதிர்கட்சியாக இயங்க வேண்டுமெனில் மக்களை அணிதிரட்டுவதும், அரசியல்படுத்தி அரசை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவம் முக்கியமானது. ஊடக சந்திப்பில் மட்டுமே திமுக அரசை விமர்சிப்பதாக நாடகமாடி வந்தவர் சீமான் என்பதை மே17 தொடர்ந்து கூறியுள்ளது. பல முக்கிய அரசியல் கோரிக்கைகளை சீமான் முன்னெடுக்காமல் வாய்சவடாலோடு நிறுத்திக்கொண்டாரென அவரது சமரச அரசியலை அம்பலப்படுத்தியது மே17 இயக்கம்.

ஈரோடு தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில், எதிர்கட்சியாக தம்மால் உருவாக முடியாததால், பாஜகவோடு சமரசமாம் செய்து,அதன் வாக்குகளை பெறமுனைந்தார். இதற்காகவே பெரியாரை இழிவு செய்யதார். பாஜக வாக்குகள், இந்துத்துவ மனநிலை கொண்ட சாதிய வாக்குகள், அதிமுகவின் உதிரி வாக்குகளை பெற்றுவிடலாம் என்ற அவரது திட்டம் தோற்றது.

ஆனால், பெரியாரின் மீதான அவதூறும், பெரியாரிய தோழர்களின் அயராத களப்பணியும் அவரை வீழ்த்தியது.

22 சுயேட்சை வேட்பாளர்கள் மேடையை பெரியாரிய தோழர்கள் பகிர்ந்து கொண்டார்கள். தனது ஆதரவு சக்திகளின் மூலம் 50,000 வாக்குகளை கடக்கலாம் எனும் சீமானது கனவை பெரியாரிய எதிர்ப்பு தகர்த்தது.

கடந்த தேர்தலை விட அதிக வாக்குகளை வாங்கியுள்ளோம் என சீமான் தனது தம்பிகளுக்கு ஆறுதல் அளிக்கலாம், அல்லது சுயேட்சைகள் வாக்கு வாங்கவில்லையென எள்ளல் செய்யலாம். சுயேட்சைகள் தமக்கான இலக்கான சீமானை வீழ்த்துவதில் வெற்றிபெற்றுள்ளனர்.

அதிக வாக்குகள் பெறும் சீமானின் வாய்ப்பை தகர்த்தனர். குறைந்தபட்சமாக 20,000-30,000 வாக்குகளை இழந்துள்ளார். அதிமுக, தேமுதிக, பாமக, அமமுக, எஸ்.டி.பி.ஐ என பல்லாயிரம் திமுக எதிர்ப்பு வாக்குகளில் சிறுவிகிதம் மட்டுமே சீமானுக்கு கிடைத்துள்ளது.

திமுக எதிர்ப்பாளர்கள், திமுக மீதான அதிருப்தி கொண்டவர்கள், திமுகவின் எதிர்கட்சியாளர்கள் என எவரும் சீமானை திமுகவின் எதிர்க்கட்சியாக கருதவில்லை.

அதிமுக-பாஜக பிரமுகர்கள் சிலரை தோழர்கள் பிரச்சாரத்தில் சந்தித்தபோது தெரிவித்த எதிர்பார்ப்பில், ஊடகவியலாளர்கள் தெரிவித்த இலக்கில் பாதியளவு வாக்குகளை கூட அவர் பெறவில்லை.

சொத்துவரி உயர்வு, மின்சார கட்டணம் போன்றவற்றினால் திமுகவின் மீதான எதிர்ப்பு மனநிலை மக்களிடம் வெளிப்பட்டது. இவை ஏன் சீமானுக்கான வாக்குகளாக மாறவில்லை? அவருக்கு ஏன் மக்கள் வாக்களிக்கவில்லை? சீமான் மீதான அவநம்பிக்கை, அவரது நிலைப்பாடற்ற அரசியல், அநாகரீகமான அரசியல் பேச்சுகள், அவதூறுகள் மக்களிடம் கசப்புணர்வை உண்டாக்கியிருந்தன. இதில் உச்சபட்சமாக பெரியார் மீதான சீமானின் அவதூறுகள் மக்களை அவருக்கு எதிராக மாற்றியது.

பிற கட்சிகளும் போட்டியிட்டிருந்தால் சீமானின் வாக்கு விகிதம் பலமடங்கு குறைந்திருக்கும். பெரியாரின் ஆதரவாளர்களாக 22பேர் சுயேட்சையாக பரப்புரை மேற்கொண்டவர்கள் மொத்தமாக 6000-7000 வாக்குகளை பெற்றுள்ளனர். எவரும் தமக்கான வாக்கு சேகரிப்பை செய்யவில்லை. சம்பிரதாயமாக சின்னங்களை தெரிவித்து, சீமானின் அவதூறுகளை அம்பலப்படுத்தினார்கள்.

சீமான் நடத்திய பெரியார் எதிர்ப்பு எடுபடவில்லை என்பதை அண்ணாமலையின் பேச்சே உறுதிசெய்துள்ளது.

தமிழ்த்தேசியக் கூட்டணி தனது எதிர்ப்பு போராட்டத்தை ஈரோட்டிற்கும் கொண்டு சென்றது. சீமானை ஈரோடு மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டுமென்பதற்காகவும் களம் இறங்கியது. மக்களிடத்தில் சீமானின் பொய்களை அம்பலப்படுத்தி தோற்கடித்துள்ளனர்.

இந்த வெற்றிக்கு காரணாமாக விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் தோழர் குடந்தை அரசன், அவரது கட்சி தோழமைகள், தோழர் கே.எம்.சரீப் ஆகிய இருவருமே சாத்தியப்படுத்தியவர்கள். பெரியாரிய தலைவர் கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள், தோழர் சுந்தரவள்ளி, தோழர் பாண்டியன் மற்றும் எண்ணற்ற பெரியாரிய தோழமைகள் களத்தில் இயங்கி அம்பலப்படுத்தினர். வன்முறைகளை தபெ.திக தோழமைகள் எதிர்கொண்டனர். இப்பரப்புரை நிகழவில்லையெனில் சீமான் பெரியாரை இழிவு செய்தது பெரும்பகுதி மக்களுக்கு சென்று சேராமலேயே போயிருக்கும்.

இவ்வகையில் பெரியார் மீதான சீமானின் அவதூறு நாம்தமிழரின் அரசியலுக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. பெரியாரை இழிவு செய்யவேண்டும் எனும் நோக்கமுடைய பிறருக்கும் இது பாடமாக அமையும்.

பாஜக எனும் இனதுரோகியோடு கைகோர்க்கும் எவரையும் தமிழர்கள் நிராகரிப்பார்கள் என்பதை தமிழர்கள் உறுதிபட தெரிவித்துள்ளார்கள். ஈரோடு மக்களுக்கு எமது மகிழ்ச்சியும், வாழ்த்துகளும்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி

மீண்டும் ஒரு தடவை சொல்கிறேன்.

தலைவரை இகழ்ந்து ஈழத்திலும், பெரியாரை இகழ்ந்து தமிழ் நாட்டிலும் அரசியல் செய்ய முடியாது.

சீமான் பெரியாரை மூர்கமாக எதிர்த்த்தது அவரது அரசியல் வாழ்க்கையின் முடிவை விரைவாக்கியுள்ளது.

இது எனக்கு மிகவும் சந்தோசமான விடயம். 

சீமான் மேலும் மேலும் பெரியாரை தூற்றி - காணாமலே போக வேண்டும் என்பதே என் அவா. 

ஆனால் இதில் தலைவரை இழுத்து எம்மோடு தமிழக மக்களை சிண்டு முடியும் ஆபத்து கனமானது.

இதை திருமுருகன் காந்தி, குடந்தை அரசன் போன்ற ஈழ ஆதரவு சக்திகள் சீமானை எதிர்ப்பது ஓரளவுக்கு சமம் செய்கிறது.

இப்படி சீமானை வச்சு செய்யும் ஈழ ஆதரவு சக்கிகளுக்கு ஈழதமிழர் சார்பாக நன்றி.

46 minutes ago, விசுகு said:

இங்கே கட்டுக்காசு உங்கள் பார்வை.  வளர்ச்சி வீதம் நாம் தமிழர் நோக்கு. அது இரட்டிப்பாகி இருப்பது அவர்களுக்கு ஊக்கம் தரும். 

சீமான் இந்த தேர்தலில் பெரியார் பற்றி கதைக்காமல்….

சொத்து வரி, வாழ்க்கை செலவு கூடல், மின் தடை, ஊழல், அண்ணா பல்கலை விவகாரம், இத்யாதிகளை சுட்டி வாக்கு கேட்டிருந்தால் 50,000 நெருங்கி இருப்பார்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் நா த க மேல் ஆர்வம் இருந்தால் அப்படித்தான் செய்திருப்பார்.

ஆனால் அவர் செய்யுமாறு பணிக்கப்பட்டது ஒரு experiment.

சகல எதிர்கட்சிகளையும் விலக்குவோம், சீமானை கடுமையாக பெரியாரை தாக்கி அரசியல் செய்ய வாக்கு கேட்க சொல்வோம்.

அவர் 50,000 தாண்டினால் அதுதான் 2026 இல் பிஜேபியிம் பார்முலா.

ஆனால் சீமான் 24,000 ஓடு முக்கியதால்,  நோட்டா மிக பெரிய வளர்ச்சி கண்டது,  experiment விரும்பிய முடிவை தரவில்லை என்பதை காட்டுகிறது.

இதனால்தான் நேற்று அண்ணாமலையின் சுருதி மாறியது.

ஈரோடு கிழக்கில், அதீத பெரியார் எதிர்ப்பு வேலை செய்யுமா இல்லையா என்பதை சீமானை சோதனை எலியாக்கி டெஸ்ட் பண்ணியுள்ளது பிஜேபி.

———

சீமானின் விசத்தை முறியடிக்கும் எளிய விசமருந்துகள்.👇

நன்றி உறவுகளே ❤️❤️❤️😘
 

large.IMG_1951.jpeg.b14be45d023a64c7f762cb56e77f1f73.jpeg

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

சீமான் இந்த தேர்தலில் பெரியார் பற்றி கதைக்காமல்….

சொத்து வரி, வாழ்க்கை செலவு கூடல், மின் தடை, ஊழல், அண்ணா பல்கலை விவகாரம், இத்யாதிகளை சுட்டி வாக்கு கேட்டிருந்தால் 50,000 நெருங்கி இருப்பார்.

இது உங்கள் கருத்து சகோ 

அதையும் மீறி நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்து இருக்கிறது. நான் இதை எதிர் பார்க்கவில்லை. 

மற்றும் படி உங்கள் பார்வை வேறு. 2009 க்கு பின்னரான எனது பார்வை நோக்கம் வேறு. எனது பார்வையில் திராவிடம் திராவிட கட்சிகள் அழியட்டும். அதில் பெரியார் குறுக்கிடுவார் என்பது தெரியாததா????

தலைவருடனான ஒப்பீடுஙளை தவிருங்கள்.

தலைவர் பற்றி நான் எதுவும் எழுதவில்லை.  ஆனால் அவர் சொன்னது தான் பகைவரை விட துரோகியே ஆபத்தானவர்கள். 

சீமானை என் தலைவராகவோ அல்லது நல்ல தலைவராகவோ நான் ஏற்கவில்லை அவர் ஒரு தமிழக அரசியல் தலைவர். அம்புட்டு தான். நூறு வீத தூய்மை என்பது எங்கும் இல்லை எதிலும் இல்லை எப்பொழுதும் இல்லாத ஒன்று.

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கே கட்டுக்காசு உங்கள் பார்வை.  வளர்ச்சி வீதம் நாம் தமிழர் நோக்கு. அது இரட்டிப்பாகி இருப்பது அவர்களுக்கு ஊக்கம் தரும். 

பாஜகவின் வாக்குகளை பெறுவது இந்திய தேசியத்தை நோக்கிய வளர்ச்சி என்பதை ஒப்பு கொள்ளத்தான் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, செவ்வியன் said:

பாஜகவின் வாக்குகளை பெறுவது இந்திய தேசியத்தை நோக்கிய வளர்ச்சி என்பதை ஒப்பு கொள்ளத்தான் வேண்டும்

உங்கள் கற்பனை மற்றும் கோர்த்து விடுதல்களுக்கு நான் பொறுப்பல்ல. ஆனால் உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். காலம் பதில் சொல்லட்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

அதையும் மீறி நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்து இருக்கிறது. நான் இதை எதிர் பார்க்கவில்லை. 

ம்ம்…இதைத்தான் நீங்கள் விளங்காதது போல் நடிக்கவில்லை என மேலே குறிப்பிட்டேன் அண்ணை.

இது என் கருத்தல்ல. அடிப்படை தேர்தல்-கணிதம். Electoral arithmetic.

சீமான் 14, 000 மேலதிக வாக்குகளை ஒரு நான்முனை போட்டியில் எடுத்திருப்பின்,  திமுக, அதிமுகவுடன் மும்முனை போட்டியில் எடுத்திருப்பின் கூட அதை வளர்ச்சி என கொள்ளலாம்.

இது இரு முனை போட்டி. இதில் மேலதிகமாக சீமான் எடுத்த வாக்குகள் “ கடவுளே திமுக வேட்பாளர்” எனிலும் எதிர்த்து போடும் ஆட்களின் வாக்குகள் மட்டும்தான்.

இந்த முறை வேறு தெரிவு இல்லாததால் இந்த பச்சை குத்திய திமுக எதிர் வாக்காளர் நா த கவுக்கு போட்டுள்ளனர்.

இதை தவிர இங்கே வாக்கு வளர்ச்சி ஏதும் இல்லை.

இந்த இரு முனை போட்டியில் நா த க வாக்கு வளர்ந்துள்ளது என கருத அவர் 50,000 க்கு கிட்ட போயிருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ம்ம்…இதைத்தான் நீங்கள் விளங்காதது போல் நடிக்கவில்லை என மேலே குறிப்பிட்டேன் அண்ணை.

இது என் கருத்தல்ல. அடிப்படை தேர்தல்-கணிதம். Electoral arithmetic.

சீமான் 14, 000 மேலதிக வாக்குகளை ஒரு நான்முனை போட்டியில் எடுத்திருப்பின்,  திமுக, அதிமுகவுடன் மும்முனை போட்டியில் எடுத்திருப்பின் கூட அதை வளர்ச்சி என கொள்ளலாம்.

இது இரு முனை போட்டி. இதில் மேலதிகமாக சீமான் எடுத்த வாக்குகள் “ கடவுளே திமுக வேட்பாளர்” எனிலும் எதிர்த்து போடும் ஆட்களின் வாக்குகள் மட்டும்தான்.

இந்த முறை வேறு தெரிவு இல்லாததால் இந்த பச்சை குத்திய திமுக எதிர் வாக்காளர் நா த கவுக்கு போட்டுள்ளனர்.

இதை தவிர இங்கே வாக்கு வளர்ச்சி ஏதும் இல்லை.

இந்த இரு முனை போட்டியில் நா த க வாக்கு வளர்ந்துள்ளது என கருத அவர் 50,000 க்கு கிட்ட போயிருக்க வேண்டும்.

அதனால் என்ன சகோ

அடுத்த வருடம் பார்க்கலாம்.... என்ன அவசரம்? என்ன இருக்கிறது தொலைந்து போக....?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

தலைவருடனான ஒப்பீடுஙளை தவிருங்கள்.

தலைவர் பற்றி நான் எதுவும் எழுதவில்லை.  

டூ லேட் ப்ரோ…டு லேட்…

இந்த அறிவுரையை சீமான் தலைவரை அங்கே இழுத்து போன போது….

அல்லது பிரபாகரன் vs கருணாநிதி என ஆரம்பித்த போது….

குறைந்த பட்சம் பிரபாகரன் vs பெரியார் என இறங்கிய போதாவது சீமானை நிறுத்த சொல்லி சொல்லி இருக்க வேண்டும்.

(நீங்கள் இதை போன் போட்டு சீமானிடம் சொல்லி இருந்தால் - போனை வைடா புதிய மகனே என்றுதான் அவர் சொல்லி இருப்பார்).

இந்த ஒப்பீட்டை செய்வது நான் அல்ல.

தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு சக்திகள்.

சீமானின் நச்சு கருத்தை ஒழிக்க அவர்கள் பெரியாரும் பிரபாகரனும் சமாந்திர சக்திகளே என்பதை மக்களிடம் எடுத்து போகிறார்கள்.

சபேசன் பேட்டி பார்திருப்பீர்கள்.

இது உண்மை.

ஆகவே இதை நான் வரவேற்கிறேன்.

34 minutes ago, விசுகு said:

ஆனால் அவர் சொன்னது தான் பகைவரை விட துரோகியே ஆபத்தானவர்கள். 

ஓம்…அதனால்தான் ரோவினால் இயக்கப்படும் சீமானுக்கு இத்தனை எதிர்ப்பு காட்ட வேண்டி உள்ளது. 

35 minutes ago, விசுகு said:

சீமானை என் தலைவராகவோ அல்லது நல்ல தலைவராகவோ நான் ஏற்கவில்லை அவர் ஒரு தமிழக அரசியல் தலைவர். அம்புட்டு தான். நூறு வீத தூய்மை என்பது எங்கும் இல்லை எதிலும் இல்லை எப்பொழுதும் இல்லாத ஒன்று.

எனில் முட்டுகொடுக்காமல் இருக்கலாம்.

நான் உங்கள் நிலைப்பாடு என்றால் அப்படித்தான் செய்வேன். 

3 minutes ago, விசுகு said:

அதனால் என்ன சகோ

அடுத்த வருடம் பார்க்கலாம்.... என்ன அவசரம்? என்ன இருக்கிறது தொலைந்து போக....?

ஓம்…

ஒரு உத்தரவாதமும் தருகிறேன்.

2026 இல் தனித்து நின்று சீமான் 16% அல்லது கூட எடுப்பின், இன்றை உங்கள் கணிப்பு சரி என்பதை அப்போ ஏற்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சபேசன் பேட்டி பார்திருப்பீர்கள்.

சபேசன் 2009 க்கு முன்பு என்ன எழுதித் தள்ளிக்கொண்டு இருந்தார் என்றும் தெரியும். நீங்கள் தேடி வாசியுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு  கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஈரோடு தேர்தல் செய்தி பார்த்த போது தான் தெரிந்தது இந்தியாவில் டெல்லியிலும் சட்டசபை தேர்தல் நடந்துள்ளதுஅங்கே முன்பு வெற்றிபெற்றிருந்த ஆளும்கட்சி தோல்வி அடைந்து பாஜக வெற்றி பெற்றுள்ளது தோல்வி அடைந்த கட்சி நாங்கள் மக்கள் தீர்ப்பை ஏற்று கொள்கின்றோம் என்று சொல்லி பாஜகவுக்கு வாழ்த்தும் சொல்லியுள்ளது.இங்கே வெளிநாட்டு ஈழதமிழர்கள் சீமான் கட்சி படுதோல்வி அடைந்து கட்டுபணத்தை இழக்கும் போது எல்லாம் சீமான் கட்சி வெற்றி பெறுகின்றது மக்கள் ஆதரவு அதிகரிக்கின்றது என்று ஆரவாரம் செய்கின்றனர்.
சீமான் ஆதராளர்கள் சோர்வடைந்து விடுவார்களோ என்ற கவலையில் யாழ்கள உறவு  ஒருவர் அவர்களை உற்சாகபடுத்துவது  அழகாக உள்ளது 😂

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இலண்டனில் சீமானின் தம்பிகள் தங்கள் அறிவை வெளிக்காட்டினார்கள்😂

https://www.facebook.com/share/v/15fr3dTQMj/?mibextid=wwXIfr

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

சபேசன் 2009 க்கு முன்பு என்ன எழுதித் தள்ளிக்கொண்டு இருந்தார் என்றும் தெரியும். நீங்கள் தேடி வாசியுங்கள். 

இவ்வளவு வாசித்தோம் அதை வாசிக்காமலா…யாழில் அதை நக்கல் அடித்து அவர் சிரிப்பு குறி கூட போட்டுள்ளார்.

ஆனால் எப்போதும் அவர் தமிழ் தேசிய, திராவிட கொள்கைகள் எதிரிகள் என்றோ, புலிகளுக்கும் திராவிட இயக்க கொள்கைகள், ஆட்களுக்கும் இடையான தொடர்பை மறுதலித்தோ எழுதவில்லை.

ஆகவே இது பற்றிய அவர் இன்றைய கருத்தில் ஒரு வழுவும் இல்லை.

40 minutes ago, Sasi_varnam said:

சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு  கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️

இதெல்லாம் பெருமை இல்லை…கடமை😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

நேற்று இலண்டனில் சீமானின் தம்பிகள் தங்கள் அறிவை வெளிக்காட்டினார்கள்😂

https://www.facebook.com/share/v/15fr3dTQMj/?mibextid=wwXIfr

இவர்களைதான் @பகிடி முள்ளம்பண்டி தலையனுகள் என்றார்🤣. ஆனா எல்லாருக்கு மேல வெளிச்சிட்டு, தாடியில்தான் உரோமம் இருக்குது…..

முழுவதும் கஞ்சா கூட்டம்.

எத்தனை சிங்கள இனபடுகொலையாளிகள் தமிழர் வாழும் பிரதேசத்திலே வந்து நடந்து திரிகிறார்கள்.

இந்த பேடிகளில் ஒருவர் கூட அவர்களை ஒரு வார்த்தை கேட்பாரா?

யாரோ ஒரு பெண்ணுடனும், வயசான இருவரிடமும் வீரத்தை காட்டும் பேடிகள்.

இந்திய தமிழில் சொன்னால் -

பொ***ட பசங்க 🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு  கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️

இங்கே கருத்துகளை வாசிக்கும்போது உலகம் தட்டையானது (flat earth theory) என்று அமெரிக்காவில் உண்டல்லவா? அதை வாசித்தது போல் இருக்கு 😅

2014 இல் இருந்தே கேள்விப்பட்டு வருகிறேன். நாம் தமிழர் இதோ கூட்டணி வைத்து விடுவார்கள்; பெட்டி வாங்கிவிடுவார்கள். விஜயலச்சுமி இத்யாதி.. இதை தவிர வேறொன்றும் இல்லை. சலிப்பு..

இப்போ புதுசா ஒன்று ஓடுது. நாம் தமிழரை உருவாக்கியதே பாரதிய ஜனதா கட்சியாம். அதாவது 2010 இல் பாஜக ஆட்சியைப் பிடிப்போம் என கனவும் கண்டிருக்க மாட்டார்கள். ஆனால் நாம் தமிழரை உருவாக்கி விட்டார்களாம் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, இசைக்கலைஞன் said:

இங்கே கருத்துகளை வாசிக்கும்போது உலகம் தட்டையானது (flat earth theory) என்று அமெரிக்காவில் உண்டல்லவா? அதை வாசித்தது போல் இருக்கு 😅

..

😂

1. ம்ம்ம்….தட்டை உலகம் என நம்புபவர்கள்தான் 2016 இல் நாம் தமிழர் சீட் எடுக்கும் என்று நம்பி வாய்சவாடல் விட்டு விட்டு, தேர்தல் முடிவின் பின் அப்படியே யன்னல் பாய்ந்து ஓடியவர்.

இப்போ தமிழ் படத்தில் பம்பாய்க்கு ஓடிய சிறுவன் திரும்பி வருவது போல் வந்து…..

2. இன்னொரு தட்டை உலக கதை சொல்கிறார். அது என்ன? 2026 இல் நாம் தமிழர் தனித்து நின்று சீட் எடுக்குமாம்.

இப்படி ஒரு hallucination இல் தான் வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு, நா த க டெபாசிட் காலியாகும் என கணிப்பவர்களை பார்த்தால் தட்டையாகத்தான் தெரியும் 🤣.

30 minutes ago, இசைக்கலைஞன் said:

2014 இல் இருந்தே கேள்விப்பட்டு வருகிறேன். நாம் தமிழர் இதோ கூட்டணி வைத்து விடுவார்கள்; பெட்டி வாங்கிவிடுவார்கள். விஜயலச்சுமி இத்யாதி.. இதை தவிர வேறொன்றும் இல்லை. சலிப்பு..

1. அண்ணன் விஜை கூட்டணிக்கு நாக்கை தொங்கப்போட்டு காத்திருந்தார். விஜை நோஸ் கட் பண்ணி விட்டார்.

2. விஜி அண்ணி இப்போதும்தான் வீடியோ விடுகிறார். 

3. சலிப்பு வரும்தான். 15 வருடமா டெபோசிட் காலி பண்ணுவதே வழமை என்றால் எப்பேற்பட்ட ஜோம்பிக்கும் சலிப்பு வரும்தானே.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, இசைக்கலைஞன் said:

இப்போ புதுசா ஒன்று ஓடுது. நாம் தமிழரை உருவாக்கியதே பாரதிய ஜனதா கட்சியாம். அதாவது 2010 இல் பாஜக ஆட்சியைப் பிடிப்போம் என கனவும் கண்டிருக்க மாட்டார்கள். ஆனால் நாம் தமிழரை உருவாக்கி விட்டார்களாம் 😂

1. விளக்கம் பத்தாது.

2. முத்துகுமாரை கொலை செய்து சீமானை கண்டிரோலில் எடுத்தது றோ/பிஜேபி அல்ல.

3. அப்போ இதில் முக்கிய பங்காற்றியவர் -ஜாபர் சேட். திமுக எடுபிடி.

4. ரோவின் பிடியில் இருக்கும் சீமான், மத்திய அரசில் யார் ரோவை கண்டிரோல் பண்ணுகிறார்களோ அவர்கள் பிடியில்.

5. பிஜேபி ஆட்சிக்கு வந்தபின் சீமான் பிஜேபியால் திராவிட கொள்கையை எதிர்க்க பாவிக்கபடுகிறார்.

சீமான் மட்டும் அல்ல. இதே நோக்கில் பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் தமிழ் நாட்டில் இறக்கப்பட்டவர்கள்தான், மாரிதாஸ், கிசோர், பாண்டே, ஶ்ரீதர் வேம்பு, செளதாமினி போன்றோர்.

பிஜேபி ஆட்சிக்கு வரமுன் இவர்கள் எவரும் (சீமானை தவிர) அரசியலில் இல்லை.

எப்படி இவர்களை பாவித்து திராவிட கொள்கையை, பெரியாரை தமிழ் நாட்டில் பிஜேபி உடைக்க முயல்கிறதோ….

அதே போலத்தான் ஏலவே ரோவின் பிடியில் இருந்த சீமானையும் பிஜேபி ஆட்டுவிக்கிறது.

இது புதுக்கதை அல்ல. இதை பற்றி யாழில் பல வருடங்களாகவே எழுதபட்டுள்ளது.

2016 இல் யன்னலால் பாய்ந்து பம்பாய்க்கு ஓடியவர், இப்போ திரும்பி வந்து பார்க்கும் போது அவருக்கு எல்லாம் புதிதாக தெரிகிறது 🤣.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Sasi_varnam said:

சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு  கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️

இதற்கு கொஞ்சம் விரிவாக விளக்கம் எழுத வேண்டும்.

யாழ் அகவை பக்கத்தில் ஒரு கதையாகவே எழுதுகிறேன்.

Inspiration ற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க.. அதிமுக ஆட்சி காலங்களில் இடைத்தேர்தல்களில் எதிர்கட்சிகள் வெற்றி பெற்றதுண்டா..?! சனநாயகம் செத்து பணநாயகம்.. ரவுடிசம் ஆட்சி செய்யும் தமிழகத்தில் சீமானின் துணிச்சல் பாராட்டத்தக்கது. ஏனையவை எதிர்கட்சிகளாக இருக்கவே தகுதி அற்றவை. ஏனெனில் மக்களுக்கான சனநாயகம் என்றால் மக்களின் விருப்புக்கு மதிப்பளிச்சு களத்தில் நிற்கனும். மாறாக வெல்வமா தோற்பமா என்பதல்ல சனநாயகம். அதுசரி..  கிந்தியாவில் சனநாயகம் இருந்தால் தானே..?!

சீமானின் துணிச்சல் வாக்கு சதவீத வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

ஈவே ராமசாமி ஒரு கன்னடப் பொய்யர். தமிழ் மொழி வெறுப்பாளர். தமிழீழ வெறுப்பாளர். ஈழத்தில் அவருக்கு முக்கியத்துவம் எதுவும் இருந்ததில்லை.. புலிகள் காலத்தில் கூட. கறுப்புச் சட்டைகள் சில தமிழீழத்தை ஆதரித்திருப்பினும்.. புலிகள் ஈ வே ராவை தூக்கிப் பிடித்ததே இல்லை. உண்மையில் ஈழத்தில் பலருக்கு ஈவே ராவை யாரென்றே தெரியாது. இப்ப சில ஈழ புலம்பெயர் அடிபொடிகள் தாங்கள் தங்கள் சுயவிளம்பரம்... சுயதேவைகள்.. புலி துதிபாடலுக்காக ஈவே ராவை தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சீமானும் ஒரு காலத்தில் ஈவே ரா பக்தர் தான். இப்போ புத்தி தெளிந்திருப்பது நல்லது.

ஈவே ராவை கடந்து நவீன ஏ ஐ காலத்துக்குரிய அரசியல் செய்யாவிடில்.. சீமான் அல்ல.. எவருமே வளரும் சந்ததியிடம் செல்வாக்கு செய்ய முடியாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

நேற்று இலண்டனில் சீமானின் தம்பிகள் தங்கள் அறிவை வெளிக்காட்டினார்கள்😂

https://www.facebook.com/share/v/15fr3dTQMj/?mibextid=wwXIfr

சீமானின் தம்பிகள் என்றால் அறிவு அற்ற,  நாகரீகம் தெரியாத காட்டு மிராண்டிகள் என்பது தெரிந்த விடயமே. அவர்களாக வந்து  நாம் எந்த அறிவு வளர்சசியடைந்த நாடுகளில் வாழ்ந்தாலும் சீமானின் காட்டு மிராண்டி கூட்டமே என்பதை உறுதிப்படுத்தி சென்றார்கள். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.