Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   10 FEB, 2025 | 05:33 PM

image

தையிட்டி விகாரை விடயத்தில் மக்களின் விருப்பத்துக்கு அமைவாக எமது தீர்மானம் இருக்கும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மீண்டும் இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (9) சீன அரசாங்கத்தின் உதவிப்பொருட்களை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுத்திருந்த அவர் அதன்பின்னர் தையிட்டி விகாரை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் கருத்து என்னவென்பதை நாம் பார்க்க வேண்டும். தையிட்டியில் விகாரை கட்டப்படும்போது அதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள் தற்போது அந்தப்பிரச்சினையை பூதகரமாக தூக்கிப்பிடிக்கின்றார்கள்.

தையிட்டி விகாரை விடயத்தினை தூக்கிப்பிடிப்பவர்கள் உண்மையிலேயே அந்த விடயத்தினை முன்னெடுக்கின்றார்களா? இல்லை விரைவில் உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் வரவிருப்பதால் அதற்கான துருப்புச்சீட்டாக இதனைப் பயன்படுத்தப் பார்க்கின்றார்களா?

தையிட்டி விகாரை விடயம் இனவாதத்தினை, மதவாத்தினை தூண்டக்கூடியது. இனவாதத்தினையும், மதவாத்தினையும் மக்கள் தோற்கடித்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி, நாட்டின் அபிவிருத்தி வேகமாக முன்னெடுக்கப்படுகின்றது.

ஆகவே அதுபற்றிக் கதைப்பதற்கு ஒன்றுமில்லை. அந்த வகையில் மதவாத்தினை இலகுவாகத் தூண்டி அதன் மூலமாக அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்ளவே பார்க்கின்றார்கள்.

எவ்வாறாக இருந்தாலும் எமது அரசாங்கத்தின் கீழேயே இந்தப்பிரச்சினைக்கும் தீர்வினை எட்டுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம். மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் பரிந்துரைக்கும் தீர்மானத்துக்கு செல்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.

விகாரை அமைக்கப்பட்டமை சட்டவிரேதமானதா இல்லையா என்பது தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க முடியும். ஆனால், விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலமானது மக்களுடையது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதனால் அந்தக் நிலத்துக்குச் சொந்தக்காரர்களுக்கு மாற்றுக் காணிகளை அல்லது நட்டஈட்டை வழங்க வேண்டிய தேவையுள்ளது.

விகாரையை உடைத்து நொருக்குவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என்பது பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே சுமூகமான தீர்வொன்றிணை மேற்கொள்ள வேண்டும். இனவாதம், மதவாதம் தலைதூக்குவதற்கு இடமளிக்கக் கூடாது. அதில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/206339

  • கருத்துக்கள உறவுகள்

சந்து மாமா சொன்னதன் சுருக்கம்:

1. விகாரை அப்படியேதான் இருக்கும்.

2. மூச்சு காட்டாமல் இருந்தால் காணிகாரருக்கு ஏதேனும் தூக்கி போடுவோம், கவ்வி கொண்டு ஓட வேண்டும்.

3. எதிர்த்து கதைப்பவர் எல்லாம் இனவாதி, மதவாதி

அனுரகாவடிகள் விரைவில் அனுர தூக்குகாவடி ஆகுவார்கள் போல உள்ளது🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

தையிட்டியில் விகாரை கட்டப்படும்போது அதுதொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்காதவர்கள் தற்போது அந்தப்பிரச்சினையை பூதகரமாக தூக்கிப்பிடிக்கின்றார்கள்.

large.IMG_8118.jpeg.cf58f0aedbec9cdf509d

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அமைச்சராக? அல்லது சிறீலங்கா ஜனாதிபதியா? எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து....?

சிங்களத்தின் திட்டத்தை சக்கைப்போட வைக்க சரியான ஆளைத் தான் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சந்து மாமா சொன்னதன் சுருக்கம்:

1. விகாரை அப்படியேதான் இருக்கும்.

2. மூச்சு காட்டாமல் இருந்தால் காணிகாரருக்கு ஏதேனும் தூக்கி போடுவோம், கவ்வி கொண்டு ஓட வேண்டும்.

3. எதிர்த்து கதைப்பவர் எல்லாம் இனவாதி, மதவாதி

அனுரகாவடிகள் விரைவில் அனுர தூக்குகாவடி ஆகுவார்கள் போல உள்ளது🤣.

 

சந்துமாமா...நமது அரசியல்வாதிகள்(ஜீ.ஜீ...செலவநாயகம்) செய்ததை மனதிருத்தி ....கிடைத்த கேப்பில்..வடக்குத்தமிழரை...பழிதீர்க்கிறாரோ என்று எண்ணத்தோன்றிகிறது...அவரது நடவடிக்கைகள்...என்.பி.பி 3 எம்பிகளில்..ஒருவர் சுண்ணாம்புகல் லாரி பிடித்ததோடை சரி மற்றவை எங்கை இருக்கினம் என்றே  தெரியாது..வடக்கு சன்ம் விரைவில் ஸ்டாலினிடம் சரணடைவதை தடுக்க முடியாது...இதை நான் எழுதியவுடன் ..சிலர் ..மலையக ,வடக்குதமிழ் ..துவேசம் என்று பாய்ந்து வருவார்கள்...அது என் நோக்கமல்ல... இங்கு ஒரு மத்திய அமைச்சர் ...வடக்கின் எல்லாப் பிரச்சினகளிலும் மூக்கு  நுழைத்து அதிகாரம் செலுத்துவதையே குறிப்பிட்டேன்.....இதற்கு பலர் பல வர்ணம் அடிப்பர் என்பது எனக்குத் தெரியும் ...கவலைப் படப் போவதில்லை...பதில் எழுதப் போவதுமில்லை..என் பிரச்சினையல்ல... இது எம்மினத்தின் பிரச்சினை

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

சந்துமாமா...நமது அரசியல்வாதிகள்(ஜீ.ஜீ...செலவநாயகம்) செய்ததை மனதிருத்தி ....கிடைத்த கேப்பில்..வடக்குத்தமிழரை...பழிதீர்க்கிறாரோ என்று எண்ணத்தோன்றிகிறது...அவரது நடவடிக்கைகள்...என்.பி.பி 3 எம்பிகளில்..ஒருவர் சுண்ணாம்புகல் லாரி பிடித்ததோடை சரி மற்றவை எங்கை இருக்கினம் என்றே  தெரியாது..வடக்கு சன்ம் விரைவில் ஸ்டாலினிடம் சரணடைவதை தடுக்க முடியாது...இதை நான் எழுதியவுடன் ..சிலர் ..மலையக ,வடக்குதமிழ் ..துவேசம் என்று பாய்ந்து வருவார்கள்...அது என் நோக்கமல்ல... இங்கு ஒரு மத்திய அமைச்சர் ...வடக்கின் எல்லாப் பிரச்சினகளிலும் மூக்கு  நுழைத்து அதிகாரம் செலுத்துவதையே குறிப்பிட்டேன்.....இதற்கு பலர் பல வர்ணம் அடிப்பர் என்பது எனக்குத் தெரியும் ...கவலைப் படப் போவதில்லை...பதில் எழுதப் போவதுமில்லை..என் பிரச்சினையல்ல... இது எம்மினத்தின் பிரச்சினை

நீங்கள் இதில் வடக்கு மலையகம் என இல்லாத பகையை கண்டு மருள்வதாகவே நான் காண்கிறேன்.

சந்திரசேகரன்:

1. ஒரு இனவாத காவடி. 2009 க்கு முன்பே ஜேவிபியின் அத்தனை இனவாத நடவடிக்கையையும் ஆதரித்தவர்

2. கம்யூனிச காவடி - விளக்கம் தேவையில்லை.

3. சுயநல காவடி - விளக்கம் தேவையில்லை.

இப்படித்தான் இதை பார்க்க வேண்டும்.

கதிர்காமர், டக்கிளஸ் வடக்கு, பிள்ளையான், கருணா கிழக்கு.

👆மேலுள்ளதை நாம் பிரதேச கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை.

அப்படிதான் இதிலும்.

கூடவே பெரியசாமி சந்திரசேகரன் போன்றோர் போராட்டத்துக்கு அளித்த ஆதரவை அதனால் அவர் அடைந்த துன்பத்தை மறக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

 

கூடவே பெரியசாமி சந்திரசேகரன் போன்றோர் போராட்டத்துக்கு அளித்த ஆதரவை அதனால் அவர் அடைந்த துன்பத்தை மறக்க கூடாது.

ஏற்றுக்கொள்கின்றேன்....இவர்கள் மட்டுமல்ல பல தியாகிகள் ஆதரவும் எமக்கு கிடைத்தை...

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, alvayan said:

ஏற்றுக்கொள்கின்றேன்....இவர்கள் மட்டுமல்ல பல தியாகிகள் ஆதரவும் எமக்கு கிடைத்தை...

நன்றிப்

  • கருத்துக்கள உறவுகள்

இங்குள்ள இந்திய அருவருடிகளின் உதவி மற்றும் கைங்கரியத்துடன் இந்திய அரசானது இந்து மதம், தமிழர் கலை, கலாச்சாரம் என்ற போர்வையில் இங்கே யாழ்ப்பாணத்தில் தனது இருப்பை பலப்படுத்த எத்தனிக்கும் பொழுது இலங்கை அரசு அதற்கு மாற்றாக இப்படிதான் செயல்படும். 

  • கருத்துக்கள உறவுகள்

திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று போர்!

718811991.jpeg

தையிட்டி விகாரைக்கு எதிராகவும், தமது காணிகளை மீளக் கையளிக்குமாறு கோரியும் பொதுமக்களும், காணிகளின் உரிமையாளர்களும் இன்றும், நாளையும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

தையிட்டி பகுதியில் உள்ள சுமார் 7 ஏக்கர் காணியை அடாத்தாக கையகப்படுத்தி, எவ்வித அனுமதிகளும் இன்றி சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்த மக்கள் யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து வெளியேறியிருந்தனர். பின்னர் அந்தப் பகுதியை உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினர் பிரகடனப்படுத்தியிருந்தனர்.

யுத்தம் நிறைவடைந்த நிலையில் மக்கள் மீள்குடியேற, இராணுவத்தினர் கட்டம் கட்டமாக அனுமதித்தனர். அவ்வேளை தற்போது விகாரை அமைந்துள்ள மற்றும் அதனை சூழவுள்ள சுமார் 14 ஏக்கர் காணியில் மக்கள் மீள் குடியேற இதுவரை அனுமதிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்தே அங்கு சட்டவிரோதமாக விகாரை கட்டப்பட்டது.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் சுட்டிக்காட்டிய போதிலும், பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களின் முடிவுக்கு மாறாகவே இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே, விகாரையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இன்றும் நாளையும் அங்கு போராட்டங்கள் நடைபெறவுள்ளன. 

 

https://newuthayan.com/article/திஸ்ஸ_விகாரைக்கு_எதிராக_இன்று_போர்!

  • கருத்துக்கள உறவுகள்

'தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது அது அகற்றப்படவேண்டும்,அவ்வளவுதான்." மக்கள் போரட்ட முன்னணி

Published By: Rajeeban

11 Feb, 2025 | 11:04 AM
image

தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது அது அகற்றப்படவேண்டும் என மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.

மக்கள் போராட்ட முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் ராஜ்குமார் ரஜீவ்காந் இதனை தெரிவித்துள்ளார்

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

வடக்குகிழக்கு பகுதிகளிலே தமிழர் பிரதேசங்களை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகள் பல்வேறு தடவைகளில் இடம்பெற்றுள்ளன.

நாங்களும் அதற்கான எதிர்ப்புகளை தொடர்ச்சியாக பதிவு செய்துகொண்டுவருகின்றோம்.

இன்று தையிட்டி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை தொடர்பில் சில விடயங்களை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

குறிப்பாக தையிட்டி என்ற பிரதேசத்தில் தனியாருக்கு சொந்தமான காணிகளை அபகரித்து சட்டவிரோதமாக ஒரு விகாரையை கட்டிமுடித்திருக்கின்றார்கள். இராணுவத்தின் உதவியுடன்,இராணுவ ஆக்கிரமிப்பின் ஊடாக இந்த விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

பௌத்த சம்மேளனம் கிட்டத்தட்ட 14 ஏக்கர் தனக்கு சொந்தமானது என எந்த வித பொறுப்பும் இல்லாமல், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கையின் சட்டத்தின்படி ஒருவருடைய இடத்திற்கு சென்று,நீங்கள் ஒரு கட்டிடத்தை கட்டினால் அந்த இடம் அகற்றப்பட்டு அதன் உரிமையாளருக்கு கையளிக்கப்படவேண்டும்.

இந்த சட்டம் அனைவருக்கும் பொதுவானது,இந்த சட்டம் குறிப்பிட்டஒரு பிரிவினருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களிற்கு மதத்திற்கு மாத்திரம் உரியதல்ல.

இந்த சட்டம் பௌத்தபேரினவாதத்திற்கு மாத்திரம் விதிவிலக்கானது என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக உள்ளவர்கள்,அரசியல் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தங்களிற்கு தேவையானது போல சட்டத்தை வளைத்துக்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இந்த நாட்டில் நடைபெறுகின்றன.

தையிட்டி விகாரையை பொறுத்தவரை அது சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது அது அகற்றப்படவேண்டும்,அவ்வளவுதான்.

ஏனென்றால் அந்த மக்கள் வேறு ஒரு இடத்திலே தங்களிற்கு தேவையான காணியை பெறுவதற்கு தயாராகயில்லை.

குறிப்பாக ஜனாதிபதி யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது மாவட்ட அபிவிருத்தி குழுகூட்டத்தில்,இந்த பிரச்சினை எழுப்பப்பட்டது ஜனாதிபதி எந்த பதிலையும் வழங்கவில்லை ஆனால் ஆளுநர் இடையில் குறுக்கிட்டு,நாங்கள் அவர்களிடம் பேசிவிட்டோம் , அவர்களிற்கு வேறு காணிகளை வழங்குவோம், உரிமையாளர்கள் வேறு காணிகளை பெற்றுக்கொள்ள தயார் என்ற ரீதியில் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்திற்கு எதிர்ப்பை தெரிவித்த காணி உரிமையாளர்கள் தாங்கள் வேறு காணிகளை பெறதயாரில்லை என தெரிவித்திருந்தனர்.

சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட் நிலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு வடக்கு ஆளுநர் எந்த அடிப்படையில் ஆதரவை வழங்குவார்? என்ற கேள்வி எமக்குள்ளது.

ஆளுநரின் வீட்டிற்கு சென்று நாளை யாராவது அவரது வளவிற்குள் விகாரையை அமைத்துவிட்டு வேறு காணிகளை வழங்கினால் அவர் அதனை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்கின்றோம். ஏனென்றால் நாளை இந்த விடயத்தை உதாரணம் காட்டி வேறு ஒருவர் எந்த இடத்திலும் காணிகளை அபகரித்து தங்களிற்கு தேவையான காணிகளை கட்டிக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் இந்த விடயம் அமைந்துள்ளது.

இந்த அபகரிப்பிற்கும் சட்டவிரோதத்திற்கும் யாராவது ஒருவர் ஆதரவுவழங்குவாராகயிருந்தால்,இந்த நாட்டின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறிக்கு உள்ளாகும். ஏனென்றால் இது இத்துடன் நின்றுவிடப்போவதில்லை.

 

https://www.virakesari.lk/article/206380

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் அநுர உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவரா?; சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி

suresh.jpg

தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணியில் கட்டப்பட்ட புத்த கோயிலை இடிக்க முடியாது என்று அண்மையில் அனுர தெரிவித்துள்ள கருத்துக்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழ் பகுதிகளில் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் சிங்களமயமாக்கல் திட்டங்களை நிறுத்தும்படியும் கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சிங்கள மக்களோ பௌத்த மக்களோ வாழாத இடங்களில் இலங்கை அரசாங்கமும் பௌத்த பிக்குகளும் இராணுவத்தினரை முன்னிறுத்தி புதிய பௌத்த ஆலயங்களைக் கட்டத்தொடங்கினர்.

வடக்கு-கிழக்கு மாகாணங்களை சிங்கள பௌத்த மயமாக்குதலே அதனுடைய பாரிய நோக்கமாக இருந்தது. அந்த வகையில் வடக்கு மாகாணத்தின் பல்வேறுபட்ட இடங்களில் புத்த கோயில்கள் உருவாக்கப்பட்டன.

யாழ்ப்பாணத்தில் நாவற்குழி, மன்னாரில் திருக்கேதீஸ்வரம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இத்தகைய புதிய பௌத்த ஆலயங்கள் உருவாக்கப்பட்டன.

இதேபோன்று கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலும் புதிய புதிய பௌத்த ஆலயங்கள் இன்றும் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றது.

வடக்கு-கிழக்கு என்பது தமிழ் மக்களின் தாயகம் என்பதை இல்லாமற் செய்வதற்கும் இந்த சிங்கள பௌத்தமயமாக்கல் என்பது அரசிற்குத் தேவையாக இருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் பலாலி தையிட்டியிலும் பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்த தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளை பலாத்காரமாகக் கையகப்படுத்தி அங்கு ஒரு பாரிய புத்த கோயிலை நிறுவியிருக்கின்றனர்.

இந்த புத்த கோயில் கட்ட ஆரம்பிக்கின்றபொழுது யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்திக் குழுவானது தனியார் காணிகளை பலாத்காரமாகக் கையகப்படுத்தியது சட்டவிரோதமானது என்றும் எந்தவிதமான அனுமதிகளும் பெற்றுக்கொள்ளப்படாமல் புத்த கோயில் கட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அந்த செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஆரம்பத்திலேயே வலியுறுத்தியிருந்த போதிலும்கூட அது எந்த விதத்திலும் கவனத்தில் எடுக்கப்படாமல் இப்பொழுது அந்த புத்தகோயில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது புதிதாகப் பதவியேற்றுள்ள இடதுசாரி அரசாங்கமானது சாதி, மத, இன பேதங்களற்ற சமத்துவமான இலங்கையை கட்டியெழுப்ப வேண்டுமென பேசி வருகின்றது. ஆனால் வடக்கு-கிழக்கில் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டு வரும் பௌத்த ஆலயங்கள் தொடர்பாக இன்னும் வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகின்றது.

யுத்த காலத்தில் உருவாக்கப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் இருந்த பல்வேறுபட்ட சைவ கிறித்தவ ஆலயங்கள் எந்தவிதக் கேட்டுக்கேள்வியும் இல்லாமல் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

இதே போன்று தென் பகுதியிலும்கூட பள்ளிவாசல்களும் சைவக் கோயில்களும் இடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இப்பொழுது தையிட்டியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோதமான ஒரு பௌத்த ஆலயம் எக்காரணம் கொண்டும் இடிக்கப்படமாட்டாது என்று அனுரகுமார திஸ்ஸநாயகவின் தலைமையிலான இடதுசாரி அரசாங்கமும் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கின்றது.

இது சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் ஏனைய மக்களுக்கு ஒரு சட்டம் என்பதைத் தெளிவுபடுத்திக் காட்டுகின்றது. சாதி, மத, மொழி, இன பேதமற்ற ஓர் இலங்கையை உருவாக்க வேண்டுமென இப்பொழுது உள்ள புதிய அரசாங்கம் உண்மையிலேயே விரும்புமாக இருந்தால், வடக்கு-கிழக்கு எங்கும் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து பௌத்த ஆலயங்களின் கட்டுமானப் பணிகளும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

சிங்கள மக்களோ பௌத்தர்களோ இல்லாத இடங்களில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த பௌத்த ஆலயங்கள் தொடர்பாக அரசாங்கம் தெளிவான முடிவிற்கு வரவேண்டும். தன்னை ஓர் இனவாதியோ மதவாதியோ அல்ல என்று காட்ட முயற்சிக்கும் அனுர அரசாங்கமானது நடைமுறையில் இனவாதத்தையும் மதவாதத்தையும் முன்னிலைப்படுத்துவதை முழுமையாக உடனடியாகக் கைவிட வேண்டும்.

தையிட்டி புத்த கோயில் நிர்மாணம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. ஆகவே இவற்றிற்கெதிரான கடுமையான கண்டனத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பதிவு செய்வதுடன் இதற்காக மக்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் ஆதரவளிக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அனுர அரசாங்கம் மாற்றத்தை உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த கட்சியில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் சிலரை தமிழ் மக்கள் வாக்களித்து தெரிவுசெய்திருக்கின்றார்கள்.

ஆகவே அந்தப் பிரதிநிதிகள் தமது மக்கள் நலன்சார்ந்து அவர்கள் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்கு எதிராக குரல்கொடுக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

https://akkinikkunchu.com/?p=311788

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, alvayan said:

நமது அரசியல்வாதிகள்(ஜீ.ஜீ...செலவநாயகம்) செய்ததை மனதிருத்தி ....கிடைத்த கேப்பில்..வடக்குத்தமிழரை...பழிதீர்க்கிறாரோ என்று எண்ணத்தோன்றிகிறது..

இது பிரதேசவாதம்தான்.

நீங்கள் பதில் சொல்லத்தேவையில்லை, அது இன்னும் அபத்தமாக இருக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/share/v/1BmHMUPHtm/?mibextid=wwXIfr

மக்கள் போராட்ட முன்ணணி

நல்லதொரு வரவேற்க்கத்தக்க அறிக்கையை விட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அநுர அரசு இன நல்லிணக்கத்தை விரும்புமாயின் இந்த விகாரை அகற்றப்படல் வேண்டும். இந்த விகாரை பொதுமக்களின் வழிபாட்டுக்காகக் கட்டப்பட்டிருக்குமாயின் சிக்கலில்லை. ஆனால் இது கட்டப்பட்டிருப்பது இராணுவத்தினருக்காக, இது சிங்கள பௌத்த வல்வளைப்பின் சின்னம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.