Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தின் மாபெரும் சொத்து தம்பி பொஸ்கோ. ஆழமான கல்வி மற்றும் செயற்திறன் உடையவன். தனது வாழ்நாளின் ஏறக்குறைய முழுவதையும் மனித உரிமை செயற்பாட்டுக்காக கொடுத்தவன் கொடுத்து கொண்டு இருப்பவன். மிகச் சிறிய வயதிலேயே எம்முடன் இணைந்தவன். மிகவும் கவலைக்குரிய விடயம் இது. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2025 at 09:21, விசுகு said:

தமிழினத்தின் மாபெரும் சொத்து தம்பி பொஸ்கோ. ஆழமான கல்வி மற்றும் செயற்திறன் உடையவன். தனது வாழ்நாளின் ஏறக்குறைய முழுவதையும் மனித உரிமை செயற்பாட்டுக்காக கொடுத்தவன் கொடுத்து கொண்டு இருப்பவன். மிகச் சிறிய வயதிலேயே எம்முடன் இணைந்தவன். மிகவும் கவலைக்குரிய விடயம் இது. 

நல்லவற்கு இடமில்லை ...என்னசெய்வது..

  • கருத்துக்கள உறவுகள்

பாருங்கள் தமிழர்களுக்காக தமிழ் தேசியத்திற்காக பக்கம் பக்கமாக பேசும் எவரும் இந்த பக்கமே வரவில்லை.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

பாருங்கள் தமிழர்களுக்காக தமிழ் தேசியத்திற்காக பக்கம் பக்கமாக பேசும் எவரும் இந்த பக்கமே வரவில்லை.

அனேகரால் கண்டு கொள்ளப் படாமைக்குக் காரணம், யூ ரியூப் வீடியோக்களைப் பார்க்க அனேகருக்கு நேரம் இல்லை. இதனால் தான் யாழ் கள விதிகளில் வீடியோக்களை இணைப்போர், வீடியோவில் இருப்பது பற்றி "ஒரு சிறு விபரிப்பு கொடுக்க வேண்டும்" என்று இருக்கிறது (இந்த விதியை யாழ் கள மட்டுறுத்துனர் வீடியோ இணைக்கும் போது கூட பின்பற்றுவதில்லை😎).

எனக்கு பொஸ்கோ பற்றி எதுவும் தெரியாது. இந்த இணைப்பின் தலைப்பைப் பார்த்த பின்னர் தேடினேன், அப்போதும் பொஸ்கோ என்ற தமிழ் நபர் பற்றிய செய்திகள் எவையும் கிடைக்கவில்லை. இவரது முழுப்பெயர் என்ன என்று தெரிந்தால் மீண்டும் தேடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Justin said:

மொஸ்கோ மரியதாஸ்.

குரல்கொடுக்க யாரும் முன்வருவதாக இல்லை.

(இந்த ஊடகம் சம்பந்தமான உங்கள் நம்பகத்தன்மையை நான் கேள்விகளுக்குட்படுத்தமாட்டேன். அவர் சம்பந்தப்பட்ட சில தகவல்களுக்காக மட்டுமே இதை இங்கே இணைக்கிறேன்)

https://www.thesamnet.co.uk/?tag=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B

  • கருத்துக்கள உறவுகள்

அம்பலமாகிய ஜெனிவாவின் மனித உரிமை அரசியல்: மனித உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோ ஜெனிவாவில் சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டார் !

ஜெனிவாவில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு ஒப்பான சட்டத்தின் மூலம் பொஸ்கோ மரியதாஸ் சட்டத்துக்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக இவருடன் பயணித்த சக மனித உரிமைச்செயற்பாட்டாளரும் உறவினருமானவர் தேசம்நெற்க்கு நேற்றுத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்பது தெரிவிக்கப்படவில்லை, மூன்று வாரங்களாகியும் அவரது கைது பற்றிய முழுமையான விடயங்கள் அறிவிக்கப்படவில்லை. அவருடைய ஒன்றுவிட்ட சகேகாதரர் ஒருவர் மரியதாஸ் பொஸ்கோவை தடுப்புக் காவலில் வைத்து சந்தித்து வந்துள்ளார். அவரது தகவல்படி 47 வயதான பொஸ்கோ மங்கலான ஒளியுள்ள அறையில் தடுத்து வைக்கப்பட்டு முறைமைப் படுத்தப்பட்ட உளவியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மரியதாஸ் பொஸ்கோவை சிவில் உடையில் வந்தவர்களே கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டு 48 மணிநேரங்களுக்குப் பின்னரே அவரது உறவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் பொஸ்கோவை கைது செய்துள்ளனர் என்ற ஆவணரிதியான விபரம் இன்னமும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. சுவிஸ் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்திருக்கலாம் இல்லையே இன்ரபோல் அவரைக் கைது செய்திருக்கலாம் என முரண்பட்ட தகவல்கள் வெளியாகின்றது.

அவரது கைதுக்கு என்ன காரணம் என்பதும் தெளிவாக இன்னமும் தெரியவரவில்லை. பொஸ்கோ ஒடுக்கப்படும் சிறுபான்மை இனங்களுக்கெல்லாம் ஐநாவில் குரல் எழுப்ப வாய்ப்பை ஏற்படுத்தி வருவதால் அவரது செயற்பாடுகளை முடக்குவதற்காக இக்கைது இடம்பெற்றதாகவும் இலங்கை அரசும் தன்மீதான மனித உரிமை மீறல்குற்றச்சாட்டுக்களை மழுங்கடிக்க முற்பட்டிருக்கலாம் என்றும் பொஸ்கோவின் நட்புவட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன. இவருடைய அழைப்பில் மனிதி உரிமை விடயங்களைப் பேச ஜெனிவா அழைக்கப்பட்டவர்களில் ஓரிருவர் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிச் செல்லவில்லை என்றும், நிதி தொடர்பான சர்ச்சைகள் எழுப்பப்பட்டதாகவும் சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது.

ஆனால் ஐரோப்பிய தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாக அறியப்பட்ட கிருபாகரன், கஜன் மற்றும் பிரித்தானிய தமிழ் போறத்தை சேர்ந்தவர்கள் மரியதாஸ் பொஸ்கோவுக்கு எதிராகச் செயற்பட்டு பொய்க் குற்றச்சாட்டுக்களை வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் அரசியல் சமூகச் செயற்பாட்டாளர் முல்லைமதி மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் நிசா பீரிஸ் ஆகியோர் குற்றம்சாட்டுகின்றனர்.

தனது 9வது வயதில் யாழ் நாவாந்துறையில் இருந்து பிரான்ஸ்க்குப் புலம்பெயர்ந்து பிரான்ஸில் வாழும் மரியதாஸ் பொஸ்கோ ஜெனிவாவின் மனித உரிமை அரசியலை நன்கு அறிந்து வைத்திருந்தவர். கடந்த 27 ஆண்டுகளாக ஜெனிவாவில் மனித உரிமைச் செயற்பாடுகளை தனது பதின்ப வயது முதல் மேற்கொண்டுவரும் இவர், அதன் நெளிவு சுளிவுகளை எல்லாம் அறிந்து அதற்கேற்ற வகையில் காய்களை நகர்த்தி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு ஜெனிவாவில் குரல் எழுப்புவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு வந்துள்ளார். அதனால் தமிழ் மக்கள் தவிர்ந்த ஒடுக்கபட்ட சமூகங்களின் மத்தியிலும் இவர் நன்கு அறியப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நண்பராகச் செயற்பட்டு வந்துள்ளார்.

மனித உரிமைச் செயற்பாட்டாளர் பொஸ்கோ மரியதாசின் சட்டத்துக்கு முரணான கைதினை வன்மையாகக் கண்டிப்பதோடுஇ அவரை உடனே விடுதலை செய்யவும் வலியுறுத்துகிறோம் என உலகத் தமிழர் இயக்கம் அறிவித்துள்ளது.

மனித உரிமைச் செயற்பாட்டாளரும் உலகத் தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளருமான பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கடந்த 16.01.2025 அன்று சுவிற்சர்லாந்து நாட்டில் சட்டத்துக்கு முரணான வகையில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 15 மற்றும் 16 திகதிகளில் யெனீவாவில் இடம்பெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டில் கலந்துகொண்டிருந்த போது மாநாட்டின் இரண்டாம் நாளான யனவரி 16 அன்று மதியம் 13:30 இற்கு மாநாட்டு மண்டபத்தில் வைத்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர் சட்டத்துக்கு முரணான வகையில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பொஸ்கோ மரியதாஸ் அவர்கள் கைதுசெய்யப்படுவதற்கு முதல்நாள் அவர் கலந்துகொண்டிருந்த குறித்த மாநாட்டில் சுவிற்சர்லாந்து நாட்டின் தமிழர் விரோதச் செயற்பாட்டினை வன்மையாக கண்டித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவதற்காக உள்நுழைவு ( விசா ) அனுமதிக்கு விண்ணப்பிக்கும் தமிழர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புகள் உள்ளிட்ட பெரும்பாலான தமிழர்களுக்கு உள்நுழைவு அனுமதியினை கூடுதலாக மறுத்துவரும் சிறீலங்காவில் அமைந்துள்ள சுவிஸ் தூதுவராலயம் சிங்களவர்களுக்கு குறிப்பாக முன்னாள் சிறீலங்கா இராணுவத்தினருக்கு உள்நுழைவு அனுமதியினை தொடர்ந்து வழங்கிவருகிறது. இது குறித்து பல்வேறு ஐ.நா அங்கீகாரம்பெற்ற அமைப்புகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் கேள்விகளை எழுப்பிய போதும் சுவிஸ் அரசானது உப்புச்சப்பற்ற பதில்களையே வழங்கியது.

மேலும் கடந்த மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான மாநாட்டிற்கு சிறீலங்காவில் இயங்கும் சுவிஸ் தூதுவராலயத்தின் ஒருங்கிணைப்பிலேயே மூன்று தமிழர்களும் மூன்று சிங்களர்களும் பங்கெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதில் லீலாவதி நடராஜா தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி விட்டார் என தமிழ் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது.

மனித உரிமை என்பது அரசியலாக்கப்பட்டதன் விளைவு காஸாவில் அம்பலமாகியது. தற்போது பொஸ்கோ சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதும் அவருடைய கைது தொடர்பில் தமிழ் மனித உரிமைச்செயற்பாட்டாளர்கள் மௌனமாக இருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது. இலங்கையில் இருந்து ஜெனிவா மனித உரிமைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வந்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார், எம் ஏ சுமந்திரன், சிவஞானம் சிறிதரன், அனந்தி சசிதரன் ஆகியோருக்கு அதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொடுத்தர் மரியதாஸ் பொஸ்கோவே. ஆனால் அவர் தற்போது அனாதரவாக சிறை வைக்கப்பட்டுள்ளார். அவருக்காக குரல்கொடுக்க யாரும் முன்வருவதாக இல்லை.

https://www.thesamnet.co.uk/?p=111095

1 hour ago, Justin said:

அனேகரால் கண்டு கொள்ளப் படாமைக்குக் காரணம், யூ ரியூப் வீடியோக்களைப் பார்க்க அனேகருக்கு நேரம் இல்லை. இதனால் தான் யாழ் கள விதிகளில் வீடியோக்களை இணைப்போர், வீடியோவில் இருப்பது பற்றி "ஒரு சிறு விபரிப்பு கொடுக்க வேண்டும்" என்று இருக்கிறது (இந்த விதியை யாழ் கள மட்டுறுத்துனர் வீடியோ இணைக்கும் போது கூட பின்பற்றுவதில்லை😎).

எனக்கு பொஸ்கோ பற்றி எதுவும் தெரியாது. இந்த இணைப்பின் தலைப்பைப் பார்த்த பின்னர் தேடினேன், அப்போதும் பொஸ்கோ என்ற தமிழ் நபர் பற்றிய செய்திகள் எவையும் கிடைக்கவில்லை. இவரது முழுப்பெயர் என்ன என்று தெரிந்தால் மீண்டும் தேடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

உயரந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட நாட்டில் கைது செய்ததில் உள்ள முரண்களைச் சுட்டி வழக்குத் தாக்கல் செய்ய முடியாதா?!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

உயரந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட நாட்டில் கைது செய்ததில் உள்ள முரண்களைச் சுட்டி வழக்குத் தாக்கல் செய்ய முடியாதா?!

வேண்டாப்பொண்டாட்டி கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றம் அவளது தானே?

இன்றைய நிலையில் மனித நேய செயற்பாடுகளை மேற்கொள்வது மிக மிக சிரமமானது. நம்மவர்களே எல்லாம் முடிந்துவிட்டது நீங்கள் பொத்திக்கொண்டு இருந்தால் போதும் என்ற நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

வேண்டாப்பொண்டாட்டி கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றம் அவளது தானே?

இன்றைய நிலையில் மனித நேய செயற்பாடுகளை மேற்கொள்வது மிக மிக சிரமமானது. நம்மவர்களே எல்லாம் முடிந்துவிட்டது நீங்கள் பொத்திக்கொண்டு இருந்தால் போதும் என்ற நிலை.

16 ஆண்டுகளில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றமாகப்படுகிறது அண்ணை. அவருடைய நெருங்கிய நட்புகளாவது முயன்று பார்க்கலாமே?

அவர் நேரடிப்போராளி இல்லைத்தானே? மனித உரிமைச் செயற்பாட்டாளர் தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2009 அழிவுடன் இருந்த ஆத்திரத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்று அலைந்த நாட்களில் 2011 இலிருந்து சிலகாலம் இவருடன் தொடர்பில் இருந்தேன்.. காலம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டுபோய்விடும்..

இவரின் கைது வருத்தமான செய்தி.. இவரைப்பற்றி பின்னர் சிலகாலம் இணையங்களில் தவறாகவும் எழுதப்பட்டதாக ஞாபகம்.. சாத்திரியோ அல்லது வேறு யாரோ யாழிலும் எழுதியதாக ஞாபகம்.. அமரதாஸ் கதைபோல் ஆகக்கூடாது என்பதால் என்னால் சரியாக நாபகம் இல்லை தவறாகவும் இருக்கலாம் என்பதை கூறிக்கொள்கிறேன்..

8 hours ago, விசுகு said:

பாருங்கள் தமிழர்களுக்காக தமிழ் தேசியத்திற்காக பக்கம் பக்கமாக பேசும் எவரும் இந்த பக்கமே வரவில்லை.

வரமாட்டார்கள்.. ஆனால் தமிழ்தேசியத்தை சீமான் உருவாகுவதற்கு முன்னரே யாழில் எதிர்த்தவர்கள் பலர் சீமானின் திரிகளில் தமிழ்தேசியத்தை தாம் சீமானிடம் இருந்து காக்கப்போவதாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவகள் எப்பொழுதும் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.சீமானை வீழ்த்தியதும் மறுபடியும் முதலில் இருந்து புலிகளை விமர்சிக்கிறோம் என்று தமிழ்தேசியத்தை கழுவி ஊத்தும் வேலையை ஆரம்பிப்பார்கள்.. இதற்குதான் தமிழில் “நீலிக்கண்ணீர் வடிப்பது” என்று கூறுவார்கள்.. “ ஆடு நனையுது என்று ஓநாய் அழுகிறது” என்றும் கூறுவார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நன்றி சகோ மிகச் சரியான கணிப்பு.

இங்கே என்ன துயில் உரிய என் கொண்டையை வெளிக்கொண்டு வருகிறோம் என்றே சிலர் வருகிறார்கள். ஏதாவது ஒரு இடத்தில் ஏதாவது ஒரு கருத்தில் நான் எதிராக இருந்தால் போதும் அதை வைத்து எங்கெல்லாம் குற்றம் நடந்ததோ எங்கெல்லாம் தவறு நடந்ததோ அவற்றில் ஒன்றிலாவது என்னை செருகி என்னையும் அந்த சாக்கில் போடும் தந்திரம். ஆனால் அதற்காக நான் தொடர்ந்து இங்கே தனியே நின்று போராடுவது எனக்காக அல்ல என்னைப் போன்று பல ஆயிரம் செயற்பாட்டாளர்களையும் இந்த நரித்தந்திர வலையமைப்பில் இருந்து காக்கும் கடமை எனக்கிருக்கிறது.

ஏனெனில் 2004இல் நான் அங்கிருந்து என் குடும்பத்தை காரணம் காட்டி சுயநலத்தை முன் நிறுத்தி வெளியே வந்த போதும் என்னை விட நான் சொல்லி வெளியே வந்த அதே காரணம் சூழ்நிலை என்னைவிட அதிகமாக இருந்தும் தொடர்ந்து அங்கே நின்றவர்கள் தான் இன்று சிறைகளிலும் விசாக்கள் பறிக்கப்பட்டும் குடும்பம் இன்றியும் ஏன் யாருக்காக உழைத்தார்கள் அதே மக்களால் கள்ளப் பட்டம் கட்டப்பட்டும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் இந்த பொஸ்கோ.

கடைசியாக சந்தித்தபோது அண்ணா ஆட்கள் காணாது அண்ணா. மீண்டும் வாங்கோ. மக்களை விடுங்கோ என்றார். மனித நேய பணியாளர்களை எம் மக்களே வெறுக்கும் போது எப்படி தம்பி என்றபோது உங்களுக்கு நான் சொல்லமுடியுமா அண்ணா. நல்ல முடிவுகளை கொஞ்சம் கெதியாக எடுங்கள் என்றார்.

இங்கே என் குடும்பி பிரித்து மேயப்படும் வகைகளை அவர் பார்க்க நேர்ந்தால்....????

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

வரமாட்டார்கள்.. ஆனால் தமிழ்தேசியத்தை சீமான் உருவாகுவதற்கு முன்னரே யாழில் எதிர்த்தவர்கள் பலர் சீமானின் திரிகளில் தமிழ்தேசியத்தை தாம் சீமானிடம் இருந்து காக்கப்போவதாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவகள் எப்பொழுதும் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.சீமானை வீழ்த்தியதும் மறுபடியும் முதலில் இருந்து புலிகளை விமர்சிக்கிறோம் என்று தமிழ்தேசியத்தை கழுவி ஊத்தும் வேலையை ஆரம்பிப்பார்கள்.. இதற்குதான் தமிழில் “நீலிக்கண்ணீர் வடிப்பது” என்று கூறுவார்கள்.. “ ஆடு நனையுது என்று ஓநாய் அழுகிறது” என்றும் கூறுவார்கள்..

ஒரு ஈழத்தமிழ் மனித நேய போராளி கைது செய்யப்பட்டுள்ளார்….

இதை நாம் ஒரு அணியில் நின்று கண்டிக்க வேண்டும்.

கருத்து எழுதாமல் விட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக நான் கடந்த சில நாட்களாக அதிகம் யாழில் மினகெடுவதில்லை. எனது notification, மற்றும் தமிழக செய்திகளை எட்டி பார்ப்பதோடு சரி. கிரிகெட் கணிப்பை கூட கடைசி நேரத்தில்தான் பதிந்தேன்.

இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.

இந்த திரியில் உங்களை விட சீமானுக்கு காவடி தூக்கும் ஆட்களையும்தான் காணவில்லை.

இந்த விடயத்தில் கூட உங்கள் சீமான்-அரிப்பை போக்கி கொள்ளும் விதமாக, மதிலில் முதுகை தேய்ப்பது வெக்கக்டேடானது.

தயவு செய்து இப்படியான விடயங்களை உங்களை நல்லவனாக காட்டி கொள்ளும் photo opportunity போல் பாவிக்காதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

ஆனால் ஐரோப்பிய தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களாக அறியப்பட்ட கிருபாகரன், கஜன் மற்றும் பிரித்தானிய தமிழ் போறத்தை சேர்ந்தவர்கள் மரியதாஸ் பொஸ்கோவுக்கு எதிராகச் செயற்பட்டு பொய்க் குற்றச்சாட்டுக்களை வைத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும்

யார் இவர்கள்? மேலே ஓணாண்டி சொன்ன 2009 க்கு முன், பின் புலிகளை விமர்சிக்காமல் ஆதரித்த “தமிழ் தேசிய சிங்கங்கள்”.

7 hours ago, ஈழப்பிரியன் said:

யார் இந்த தேசம்நெட்? இதே யாழில் 2009 க்கு முன்பும் பின்னும் புலிகளின் எதிரிகள், தமிழின துரோகிகள் என பலராலும் விமர்சிக்கப்பட்டவர்கள்.

இப்போ சொல்லுங்கள், தமிழ் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட சாதாரண தமிழ் பொதுமகனாகிய நான் யாரை நம்புவது?

யார் கள்ளன், யார் பொலிஸ்?

நான் இப்போதான் பொஸ்கோவை பற்றி கேள்விபடுகிறேன். ஆனால் போலிகா ஆதரவு நிலை எடுக்கும் வரை கிருபாகரன் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்தது.

போலிக்கா டைமில் கிருபா நல்லவர் என எழுதிய விசுகு அண்ணா, இப்போ அவர் பொஸ்கோவை போட்டு கொடுத்தார் எனும் கட்டுரையை பகிர்கிறார்.

இதில் நான் பொஸ்கோவை நம்புவதா? கிருபாவை நம்புவதா? மாறி மாறி கதைக்கும் விசுகு அண்ணாவை நம்புவதா?

இத்தனை ஏன்? ஓணாண்டி தான் யார் என்பதிலேயே பல மாறுபட்ட கதைகளை சொல்கிறார். அவரே ஒரு சின்ன கேபி அல்லது இன்னொரு சேரமானாக இருக்கலாமா? சந்தேக பட முகாந்திரம் இருக்கிறது.

ஓட்டைகள் முழுவதும் உங்களில்தான் உள்ளது.

பொதுமக்களாகிய எமக்கு எவரை நம்புவது என்ற தெளிவு அறவே இல்லை.

ஆனால் யாரை நம்பகூடாது என்பதை விடயங்களை வைத்து உய்தறிய முடிகிறது.

கருணாவை, கேபியை, போலிகாவை, சீமானை நம்ப கூடாது என்ற தெளிவு இருக்கிறது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விசுகு said:

பாருங்கள் தமிழர்களுக்காக தமிழ் தேசியத்திற்காக பக்கம் பக்கமாக பேசும் எவரும் இந்த பக்கமே வரவில்லை.

தகவல்களுக்கு நன்றி.

தேசம் நெற் ஜெயபாலன், நிஷா ஆகியோர் சொல்வதன் படி:

கைது செய்தது யாரெனத் தெரியாது

கைது செய்த போது அடையாளப் படுத்தல் நிகழவில்லை

"கைது செய்கிறோம், இவை உங்கள் உரிமைகள்" என்று சொல்லப் பட்டதாகவும் தெரியவில்லை.

48 மணி நேரங்கள் யாருக்கும் கைது பற்றி அறிவிக்கவில்லை.

இவை யாவும் உண்மையாக இருந்தால் (இவை உண்மை என்பதில் எனக்கு சந்தேகம் இருக்கிறது) இது சட்ட விரோத தடுத்து வைப்புத் தான்.

தீர்வு? Habeas corpus எனப்படும் ஆட் கொணர்வு மனு. சுவிஸ் அரசியமைப்பிலேயே இது உள்ளடக்கப் பட்டிருக்கிறது. ஐரோப்பிய மனித உரிமைகள் சாசனத்திலும் (EHRC) இது இருக்கிறது. தடுத்து வைக்கப் படும் ஒருவருக்கு நீதிபதி முன் தோன்றி, அநீதியான கைதானால் விடுதலை பெறும் உரிமை இது.

தேவையானவை எவை? சுவிசில் பணியாற்றும் அனுமதியுடைய ஒரு சட்டத் தரணி, அவருக்கான , கொடுப்பனவு, சமர்ப்பிக்க ஒரு நீதி மன்றம்.

என் கேள்விகள்: ஒரு மாதத்திற்குத் தடுத்து வைக்க பொலிசால் மட்டும் முடியாது. எனவே ஏற்கனவே ஒரு நீதிபதி முன் கொண்டு சென்றிருப்பார்கள். அந்த நேரம் பொஸ்கோவிற்காக யாராவது சட்டத்தரணிகள் கூட இருந்தார்களா அல்லது public defender அரசே வழங்கியதா?

ஏன் கைது செய்தார்கள் என்று வெளியே இருப்போருக்குத் தெரியாது. பொஸ்கோவிற்கும் இது வரை தெரியாதா? அப்படி இருக்க வாய்ப்புகள் வெகு குறைவு. "தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்" என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் தான் இவ்வாறு சந்தேக நபருக்கே காரணம் சொல்லாமல் தடுத்து வைக்கும் ஏற்பாடுகள் இருக்கின்றன. இவர் அப்படி இருக்க வாய்ப்பில்லை.

எனவே, அவருக்குக் குடும்பம் இல்லா விட்டாலும், அவரது நண்பர்கள் "எங்களுக்கு ஒன்றுமே புரியல" என்று கையைப் பிசைவதை விட்டு, அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டிய நேரமிது.

பி.கு: உங்களதும், ஓணாண்டியாரதும் கருத்துகளுக்கு கோசான் தடித்த எழுத்தில் பதிலாகத் தந்திருப்பவை தான் எனது கருத்தும். எம்மவரான பொஸ்கொ - அவரது அரசியல் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும் - மனித உரிமைச் செயல்பாடுகளால் இந்தக் கஷ்டங்களை எதிர் கொள்கிறார். இதில் இருந்து அவரைக் காக்க இங்கே கருத்துரைப்பது பெரிய பலனைத் தரும் விடயமாக இருக்காது. ஆனால், நீங்கள் இருவரும் பொஸ்கோவின் அனுசரணையில் ஒரு தமிழக சாக்கடை அரசியல் வாதியை தேசிய ஆர்வலராகக் காட்டவும், உங்களை "நாங்கள் எவ்வளவு உசத்தி தெரியுமா?" என்று காட்டவும் முயற்சி செய்வது தான் "ஆட்டுக்காக ஓநாய் அழும்" சீனாக எனக்குத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பொதுமக்களாகிய எமக்கு எவரை நம்புவது என்ற தெளிவு அறவே இல்லை.

ஆனால் யாரை நம்பகூடாது என்பதை விடயங்களை வைத்து உய்தறிய முடிகிறது.

பொஸ்கோ யாரென்று தெரியாது. எப்படியான செயற்பட்டாளர் என்றும் தெரியாது. கேட்டுத் தெளிவுபெறலாம். ஆனால் ரகு, ரகுபதி, அப்துல்லா என்று சுவிஸில் பலர் வேறு நோக்கங்களுடன் வேலை செய்கின்றார்கள். யார் யாரைப் போட்டுக்கொடுத்தார்கள் என்பது தெரியாது. சுவிஸில் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பை போலித் துவாரகா, “தலைவரைச் சந்தித்தேன்”, “தலைவர் இல்லை” என்று அறிக்கைவிடும் அளவிற்குப் பிரித்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் 3வரின் பதிவுகளுக்கு நன்றி

என்னுடைய அனுபவங்கள் ஊடாக நடந்த சிலவற்றை சொல்ல முயல்கிறேன். அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும்விதம் வேறாக எப்போதும் இருக்கிறது.

நான் அவர் என்னிடம் சொன்ன ஆட்கள் குறைவு இருப்பவர்களும் விலகிக் கொண்டே இருந்தால் (என்னைப் போன்று) அடுத்த தலைமுறையை இணைக்காமல் இருந்தால் (என்னைப் போன்று) என்பதையையே எழுதினேன்.

இவை எதுவும் உங்கள் கண்களில் படாதது எச்சரிக்கை தருகிறது.

மேலும் உங்கள் 3 பேரையும் சாதாரண பொதுமக்களாக என்றும் நான் பார்ப்பதில்லை.

மேலும் புலம்பெயர் அமைப்புகளை சிதைக்கும் வேலைகள் முடக்கி விடப்பட்ட போதும் நான் பலமுறை இங்கே எச்சரித்தேன். கவனம் என்றேன். இதே போன்று தான் அதை கண்டும் காணாமலும் ஆட்டுக்காக ஓநாய் என்றும் கடந்து சென்றீர்கள். இன்று மீண்டும் ஒட்டமுடியாத நிரப்ப முடியாத குழிக்குள் நாம் என்றபடி நானும் நீங்களும்?????

ஆனால் நான் சொன்னவை எச்சரித்தவை இங்கே மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

உதாரணமாக இங்கே புலம்பெயர் அமைப்புகளை சிதைக்க பலம் இழக்க செய்யவேண்டாம் என்ற என்னை பங்கு பிரிப்புக்குள் போடத் துடித்த சாந்தியக்கா இப்போது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை பிரித்தது தவறு என்று அழுகிறார். அதை இங்கே வேறு தேவைகளுக்காக கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். அவரும் ஒரு யூரூப் செய்தியாளர் என்பதையும் மறந்து. காலம் எல்லாவற்றையும் காட்டும். உணர்த்தும்.

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

இத்தனை ஏன்? ஓணாண்டி தான் யார் என்பதிலேயே பல மாறுபட்ட கதைகளை சொல்கிறார். அவரே ஒரு சின்ன கேபி அல்லது இன்னொரு சேரமானாக இருக்கலாமா? சந்தேக பட முகாந்திரம் இருக்கிறது.

றோ.. ஓணாண்டி றோ. சீமான் றோ.. கபொஇத்தன் றோ.. உங்கட வீட்ட புள்ளகுட்டியையும் றோ எண்டுவியள் இன்னும் கொஞ்சநாள் போக.. 🤣🤣 இந்தாளுக்கு றோ விசர் புடிச்சிருக்கு..🤣🤣

இரவும் பகலும் கம்பியூட்டர்ல இதையே எழுதிக்கொண்டிருந்தா அடுத்தது வீட்டில மனுசியயும் நீ றோ ஆள்தான எண்டு கேக்குற நாள் கனதூரம் இல்ல..🤣🤣 புல்லா மேல்வளம் தட்டப்போகுது துலைவார் றோவால..🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

றோ.. ஓணாண்டி றோ. சீமான் றோ.. கபொஇத்தன் றோ.. உங்கட வீட்ட புள்ளகுட்டியையும் றோ எண்டுவியள் இன்னும் கொஞ்சநாள் போக.. 🤣🤣 இந்தாளுக்கு றோ விசர் புடிச்சிருக்கு..🤣🤣

இரவும் பகலும் கம்பியூட்டர்ல இதையே எழுதிக்கொண்டிருந்தா அடுத்தது வீட்டில மனுசியயும் நீ றோ ஆள்தான எண்டு கேக்குற நாள் கனதூரம் இல்ல..🤣🤣 புல்லா மேல்வளம் தட்டப்போகுது துலைவார் றோவால..🤣🤣

🤣 ப்ரோ,

உங்களை நான் எங்க றோ எண்டு சொன்னனான். ஒரு போதும் இல்லை.

அதுகெல்லாம் கொஞ்சம் தடித்த தோல் வேணும்.

நீங்கள் அந்த வேலைக்கு சரி வராயியள்🤣.

நீங்கள் அப்படி அல்ல, அமரதாஸ், பொஸ்கோ என பலருடன் பழகி உள்ளீர்கள்.

யாழில் குறைந்தது இரு ஐடிகளில் முன்னர் உலா வந்துள்ளீர்கள்.

ஆகவே நீங்கள் உள்வீட்டு விசயம் தெரிந்த ஆள்.

ஆகவே நான் யாழுக்கு புதுசு என நீங்கள் இந்த ஐடியில் வரும் போது எழுதியது பச்சை பொய்.

ஆக, ஒரு பிஸ்கோத்து கருத்து களத்தில் கூட உங்களை போன்ற ஒருவரை கூட நம்பி நடக்க முடியாத போது …

விபரம் தெரியாத பொஸ்கோ, கிருபா, தேசம்நெட் பற்றி நாம் யாரை நம்பி கதைக்க முடியும்?

இதுவே நான் சொன்னது.

பிகு

யாழில் ஒருவரை, சீமானை மொத்தம் இருவரை மட்டுமே இன் 12 வருடம் யாழ் வாசகத்தில் நான் றோ என குற்றம் சாட்டி உள்ளேன்.

இதில் எந்த மாற்றமும் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆகவே நான் யாழுக்கு புதுசு என நீங்கள் இந்த ஐடியில் வரும் போது எழுதியது பச்சை பொய்.

யோவ்.. நான் எங்கப்பா எழுதின்னான் புதிசு எண்டு.. நான் எப்பகூட சொல்லுறன் பழசு வேற ஜடில எழுதின்னான் எண்டு.. புதிசு புதிசா புரளிய கிளப்பிவிடுறது..😀

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யோவ்.. நான் எங்கப்பா எழுதின்னான் புதிசு எண்டு.. நான் எப்பகூட சொல்லுறன் பழசு வேற ஜடில எழுதின்னான் எண்டு.. புதிசு புதிசா புரளிய கிளப்பிவிடுறது..😀

சரி விடுயா.. விடு விடு…

முழுக்கா நனைஞ்சிட்டாம் முக்காடு எதுக்கு🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

மேலும் புலம்பெயர் அமைப்புகளை சிதைக்கும் வேலைகள் முடக்கி விடப்பட்ட போதும் நான் பலமுறை இங்கே எச்சரித்தேன். கவனம் என்றேன். இதே போன்று தான் அதை கண்டும் காணாமலும் ஆட்டுக்காக ஓநாய் என்றும் கடந்து சென்றீர்கள். இன்று மீண்டும் ஒட்டமுடியாத நிரப்ப முடியாத குழிக்குள் நாம் என்றபடி நானும் நீங்களும்?????

உதாரணமாக இங்கே புலம்பெயர் அமைப்புகளை சிதைக்க பலம் இழக்க செய்யவேண்டாம் என்ற என்னை பங்கு பிரிப்புக்குள் போடத் துடித்த சாந்தியக்கா இப்போது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை பிரித்தது தவறு என்று அழுகிறார். அதை இங்கே வேறு தேவைகளுக்காக கொண்டு வந்து ஓட்டுகிறார்கள். அவரும் ஒரு யூரூப் செய்தியாளர் என்பதையும் மறந்து. காலம் எல்லாவற்றையும் காட்டும். உணர்த்தும்.

சரி, இதைத் தவறாக விளங்கிக் கொண்டிருக்கிறேன், மன்னியுங்கள்!

ஆனால், இப்படி இருக்கும் அமைப்புகளில் பிளவுகள் ஏற்பட என்ன காரணங்கள் என்று பார்த்தால்:

1. இலக்கு மாறியமை.

2. இலக்கு மாறாமல், அதை அடையும் வழிகள் மாறியமை.

3. சொத்து/வருமானம் பற்றிய பிரச்சினைகள்.

4. யார் தலை எனும் ஈகோ

இவற்றுள், 1 இனை தனித்தனியாக துரோகமா அல்லது இலக்கு குறுக்கப் பட்டதா என்று ஆராய்ந்து தான் தீர்ப்பெழுத முடியும். எடுத்த வாக்கில் "துரோகி" என்று சொல்ல முடியாது.

2 வது காரணம், என் பார்வையில் துரோகம் அல்ல. சாத்தியமான வழிகள் வெளிச்சூழலுக்கேற்ப மாறிக் கொண்டிருக்கும். இதனை ஏற்றுக் கொள்ளா விட்டாலும், எதிரிகளாகப் பார்க்க வேண்டியதில்லை. சிறந்த உதாரணம், தாயகத்தில் தமிழரசுக்கும், தேசிய முன்னணிக்கும் இடையேயான வேறு பாடு.

3, 4: இது எங்கள் சமூகத்தில் இருந்து அகற்றப் பட வேண்டிய களைகள். இக்காரணங்களால் அமைப்புகளைப் பிரிப்போரை (இவர்களைத் தான் சாந்தி தன் பதிவில் சுட்டியிருந்தார் என நினைக்கிறேன்) ஒற்றுமை வேண்டுமென்பதற்காக சேர்த்து வைத்திருக்க வேண்டியதில்லை. அப்படி வைத்திருப்பது, மட்டத்தேள், கொடுக்கான், பாம்பு ஆகியவற்றை "இயற்கையை நேசிக்கிறோம்" என்ற பெயரில் வீட்டினுள் வைத்திருப்பது போல ஆகும்.

மேற்கூறிய காரணங்கள் தான் ஒருவரை தமிழ் தேசிய அமைப்புகளில் ஒற்றுமை கருதி வைத்திருப்பதா அல்லது அகற்றுவதா என்று தீர்மானிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டுபுட்டுன்னு முடிவுக்குவாங்கப்பா

இப்போ போஸ்கோவை வெளியில எடுக்கிறதா வேணாமா ...?

யோவ் போஸ்கோ உனக்கு எதுக்குயா இந்த தேவையில்லாத வேலை ...?

மின்னாடி வெளிநாட்டில பயர் விட்டு இலங்கை எயார்போர்ட்டில் மாட்டுவானுவோ . இப்போது அந்தந்த நாட்டில் பயர் விட்டு அந்தந்த நாட்டு காவல்துறையிடமே மாட்டுறானுவோ. பயர் வேணும்னா என்னை போல் பெயரில் மட்டும் வச்சுக்கோ அதை விட்டு எதுக்கு இப்படி ஒத்தபைசா பிரயோசனமல்லாத விடயத்திற்கு போய் வாழ்க்கையை அடமானம் வைக்குற

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

சரி விடுயா.. விடு விடு…

முழுக்கா நனைஞ்சிட்டாம் முக்காடு எதுக்கு🤣

சிரிங்க சிரிங்க.. சந்தோசமா இருங்க..🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.