Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

Vishnupriya RUpdated: Monday, February 17, 2025, 19:30 [IST]

court seeman vijayalakshmi

நடிகர் விஜய்யின் பிரண்ட்ஸ் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் விஜயலட்சுமி. அவர் இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானுடைய படத்தில் நடித்திருந்தார்.

Also Read

சீமான் முதல் மனைவியா நடிகை விஜயலட்சுமி? சென்னை ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி

அப்போது சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக விஜயலட்சுமி கடந்த 2011 ஆம் ஆண்டு சீமான் மீது புகாரை அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகியிருந்தார்.

Red Button-ஐ அழுத்திய Trump....பதறும் White House...அதென்ன Diet Coke? | Oneindia Tamil

இந்த நிலையில் தனக்கு எதிராக விஜயலட்சுமி பதிவு செய்த பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது காவல் துறை விசாரணை அறிக்கையை தாக்கல் செய்திருந்தது. மேலும் சீமானின் மனுவுக்கு விளக்கம் அளிக்குமாறு விஜயலட்சுமிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி நீதிபதி இளங்திரையன் முன்பு வந்தது. அப்போது "இந்த வழக்கு இத்தனை ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏன்" என நீதிபதி, காவல் துறையிடம் கேள்வி எழுப்பினார்.

Recommended For You

விஜயலட்சுமி பலாத்கார புகார்! வழக்கை ரத்து செய்ய கோரிய சீமான் மனு டிஸ்மிஸ்! ஹைகோர்ட் அதிரடி

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முகிலன், இது 376 சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் சீமான் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்தி வைக்க கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து சீமான் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி அளித்த புகாரை அவரே வாபஸ் பெற்றுக் கொண்டார். மேலும் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

எனவே யாருடைய தூண்டுதலின் பேரிலோ கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

You May Also Like

பிப்.19-ல் திருச்சியில் DIG வருண்குமார் வழக்கு,சென்னையில் விஜயலட்சுமி கேஸ் தீர்ப்பு-அல்லாடும் சீமான்

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார். மேலும் பாலியல் பலாத்கார வழக்கை விஜயலட்சுமி திரும்ப பெற்றாலும் இது பாலியல் வன்கொடுமை என்பதால் இதை விசாரிக்காமல் விட முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-asks-seeman-whether-vijayalakshmi-is-the-first-wife-of-him-680875.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி

1 minute ago, goshan_che said:

திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது

மேற்கு நாடுகளில் கூட பாலியல் வல்லுறவு வழக்குகள் தண்டணையில் முடிவது மிக குறைவான சதவீதமே.

அப்படி இருக்க - ரோவின் ஏஜெண்டான, மோடிக்கு இஸ்டமான (அவரே சொன்னது) சீமான் அதிமுக, திமுக இரு அரசுகளோடும் டீல் பேசி வழக்கை இரு தடவை ஒன்றும் இல்லாமல் ஆக்க முயன்றுள்ளார்.

விஜயலட்சுமிக்கு மனதளம்பல் இருக்கலாம். அதனால் மட்டுமே அவர் சொல்வது பொய் என்றாகாது.

தூசண திருமுருகன், பாக்கியராசன் போன்ற புரோக்கர்களிடம் பேசி, அண்ணன் இனியும் உங்களை திருமணம் செய்வார், மாதாந்த ஜீவனாம்சம் தருவார் என்ற பொய்களை நம்பாமல் - வழக்கை தைரியமாக நடத்தி, சட்டப்படி தகுந்த நட்ட ஈட்டை பெற முயல வேண்டும் விஜி அண்ணி.

அண்ணன் நீலாங்கரையில் எட்டு கோடிக்கு வீடு கட்டுகிறார். அதில் பாதி பெறுமதியை விஜி அண்ணி கேட்கலாம்.

10 minutes ago, goshan_che said:

மேலும் பாலியல் பலாத்கார வழக்கை விஜயலட்சுமி திரும்ப பெற்றாலும் இது பாலியல் வன்கொடுமை என்பதால் இதை விசாரிக்காமல் விட முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

இங்கே நான் பலதடவை இதை எழுதிய போதும் தம்பிகள் இதை கடைசிவரை விளங்கிகொள்ளவே இல்லை.

அதுசரி சீமான் மேனியாவில் - சிறுமிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கூட, இருவர் மனமொத்த உறவு என முட்டு கொடுக்க தயாரான ஜெண்டில்மேன்களும், குஞ்சுமோன்களும், இதையயா ஏற்றுகொள்ளப்போகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு

14 minutes ago, goshan_che said:

அதன் பிறகு இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி நீதிபதி இளங்திரையன் முன்பு வந்தது.

எப்படி தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ….14 வருடங்கள் வழக்கை இழுத்தடித்துள்ளார்.

நல்லதொரு நீதிபதி இப்போ வந்தமையால் வழக்கு துரிதப்படுவதாக தெரிகிறது.

மத்திய அரசின் மீதான தண் இன்புளுவன்சை பாவித்து இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற சீமான் முயல கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது' - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

RANI KARTHIC2 Min Read

இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

Published:Today at 2 PMUpdated:Today at 2 PM

சீமான்

சீமான்

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், 12 வாரத்திற்குள் இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சீமான்

சீமான்

அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தார்.

சீமான் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `ஏற்கனவே 2011 -ம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும்’ தெரிவித்தார்.தூண்டுதலின் பேரில் கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார்.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், இந்த வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது என தெரிவித்த நீதிபதி, விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

https://www.vikatan.com/government-and-politics/judiciary/vijayalakshmi-case-seeman-case-dismissed?pfrom=home-main-row

1 minute ago, goshan_che said:

சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

1 minute ago, goshan_che said:

12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்

  1. 12 வாரம் டைம் இருக்கு, தன் காவாலிகளை விட்டு விஜி அண்ணியை தாஜா பண்ண🤣.

ஆனால் நீதிபதி விடுவாரா?

  1. வழக்கை அமித்ஷா வேறு நீதிபதிக்கு மாற்றி கொடுப்பாரா?

  2. அல்லது நள்ளிரவில் உதை நிதிக்கு போன் போட்டு காலில் விழுந்து வழக்கை அணைக்கப் பாப்பாரா?

அடுத்த மூன்று மாதம் அண்ணன் சுடுதண்ணி குடிச்ச குதிரை போல ஓடி திரியப்போறார்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

விஜயலட்சுமி : `வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது' - சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

RANI KARTHIC2 Min Read

இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

Published:Today at 2 PMUpdated:Today at 2 PM

சீமான்

சீமான்

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சீமான்

சீமான்

அதில், கடந்த 2011ம் ஆண்டு அளித்த புகாரை 2012ஆம் ஆண்டிலேயே திரும்பப் பெற்துக் கொள்வதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த கடிதத்தின் அடிப்படையிலும், விசாரணையின் அடிப்படையிலும், போலீஸார் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருந்தார்.

சீமான் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `ஏற்கனவே 2011 -ம் ஆண்டு அளித்த புகாரை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக் கொண்டதாகவும், பின்னர் 2023 ஆம் ஆண்டு கொடுத்த புகாரையும் அவர் திரும்ப பெற்றுக் கொண்டதாகவும்’ தெரிவித்தார்.தூண்டுதலின் பேரில் கொடுக்கபட்ட புகார் அடிப்படையில் பதியப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2008 ஆம் ஆண்டு மதுரையில் உள்ள கோவிலில் இருவரும் மாலை மாற்றிக்கொண்டதாக தெரிவித்தார்.

மேலும், 2008 ஆம் ஆண்டு முதல் பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்திருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி கொடுத்ததாலேயே 2 முறை சீமானுக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றார் என்பதால், இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசுத்தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, விஜயலட்சுமி, சீமானின் முதல் மனைவியா? என கேள்வி எழுப்பினார்.

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

மேலும், இந்த வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது என தெரிவித்த நீதிபதி, விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் 12 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

https://www.vikatan.com/government-and-politics/judiciary/vijayalakshmi-case-seeman-case-dismissed?pfrom=home-main-row

  1. 12 வாரம் டைம் இருக்கு, தன் காவாலிகளை விட்டு விஜி அண்ணியை தாஜா பண்ண🤣.

ஆனால் நீதிபதி விடுவாரா?

  1. வழக்கை அமித்ஷா வேறு நீதிபதிக்கு மாற்றி கொடுப்பாரா?

  2. அல்லது நள்ளிரவில் உதை நிதிக்கு போன் போட்டு காலில் விழுந்து வழக்கை அணைக்கப் பாப்பாரா?

அடுத்த மூன்று மாதம் அண்ணன் சுடுதண்ணி குடிச்ச குதிரை போல ஓடி திரியப்போறார்.

இதே விஜ‌ய‌ல‌ட்சுமி விவ‌கார‌த்தில் சீமானை கைது செய்ய‌ ஊட்டிக்கு விரைந்த‌து காவ‌ல்துறை என்று இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாழில் அவ‌தூற‌ ப‌ர‌ப்பின‌ சில்ல‌றை தானே நீங்க‌ள்

உங்க‌ளை மாதிரி ஒரு அரைவேக் காடு ந‌ப‌ரை என் யாழ் அனுப‌வ‌த்தில் நான் பார்த்த‌து கிடையாது..................பேசாம‌ இணைய‌த்தை நாற‌டிக்கும் திமுக்கா 200ரூபாய் இணைய‌கைகூலிக‌ளுட‌ன் மெம்ப‌ர் ஆவ‌து உங்க‌ளுக்கு ந‌ல்ல‌ம்.................அரிப்பெடுத்தால் ச‌ரியான‌ இட‌ம் 200ரூபாய் திமுக்கா கொம்ப‌னி👍.............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, வீரப் பையன்26 said:

காவல்துறை விரையுது எண்டு செய்தி வந்தது அதை லிங்கோடு பகிர்ந்தேன்.

நான் என்ன செய்தியாளரா? காவல்துறை விரையும் முன் அண்ணன் உதய் காலில் விழுந்தால் நான் என்ன செய்ய முடியும்.

மல-ழை பையா,

(இது எழுத்து பிழை அல்ல, உங்கள் கருத்தாடும் பாணியை இட்டு காரணப்பெயர்🤣).

நான் கிமுகவோடு சேர்ந்து 200 ரூபாய்க்கு எழுதுவது இருக்கட்டும்…..திரள்நிதி கள்ளவர் உங்களுக்கு 2 ரூபாய் கூட தரமாட்டார். நீங்கள் காசும் கொடுத்து ஆதரவும் கொடுக்க வேணும்🤣.

அது சரி எப்ப இந்த திரியில் இருந்து துண்ட காணம், துணிய காணம் தூங்கும் போது money ய காணம் என ஓடப்போறியள்?🤣.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

அண்ண‌ன் உதாவாநிதின்ட‌ கால்ல‌ விழுந்த‌தை நேரில் பார்த்தியா அல்ல‌து இதுவும் ம‌ற்ற‌ அவ‌தூறுக‌ளில் ஒன்றா............சீமான் கைத்துக்கு ப‌ய‌ந்து த‌லைம‌றைவு என்று கூவின‌ சில்ல‌றைக‌ளில் நீங்க‌ளும் ஒருத‌ர்

வ‌ய‌தான‌ உற‌வுக‌ள் ஏன் உங்க‌ளுட‌ன் விவாதிப்ப‌தில்லை என்று என‌க்கு இப்ப‌ விள‌ங்குது க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அவ‌ர்க‌ள் சொல்லும் போது புரிய‌ வில்லை இப்ப‌ புரியுது................

உத‌வாநிதின்ட‌ காம‌ளிடை இப்போது இணைய‌த்தில் ப‌ர‌ப்ப‌ ப‌டுது இத‌ற்க்கு தானே ஆசைப் ப‌ட்டாய் சுட‌லை😁...............

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

பையன், நான் சொல்லும் விடயத்திற்கு "எனக்குப் பாடமெடுக்க வேணாம்" என்ற பதில் தான் வருமென்றாலும், சொல்ல வேண்டியது என் கடமை.

உங்களை சீமான் அணி மட்டுமல்ல, இங்கே இருக்கும் சீமான் அணியின் ஆதரவாளர்களும் நன்கு ஏமாற்றுகிறார்கள். இப்போது பலர் முன்வந்து சீமான் செய்திகளில் கருத்துரைக்காமல் இருக்க பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், சீமான் ஆதரவாளர்கள் கருத்துரைக்காமல் இருக்கக் காரணம், அவர்களாலேயே முட்டுக் கொடுக்க முடியாத கையறு நிலை!

உதாரணமாக, இறுதியாக நீங்கள் சீமான் தொடர்பான திரியில் இருந்து எப்படி வெளியேறினீர்கள் என்பதை நினைவு மீட்டிப் பாருங்கள்? நியூஸ் 18 இன் லோகோவைத் திருடி "சீமானுடனான விவாதத்தில் இருந்து ஒருவர் பின்வாங்கி விட்டார்" என்ற பொய்ச்செய்தியை சீமான் அணி பரப்ப அதை நம்பி இங்கே நீங்கள் அதிகம் பேசினீர்கள். ரசோ வந்து நியூஸ்18 அப்படியொன்றும் வெளியிடவில்லை என்றார். இறுதியில் நியூஸ் 18 விவாதம் நடக்கவில்லை (ஏனெனில் சீமான் சவாலை ஏற்றுக் கொள்ளாமல் மௌனமாக இருந்ததால்!). ஆனால், ஒரு பொய்ச் செய்தியினால் ஏமாந்த சோர்வில் நீங்கள் வெளியேறினீர்கள்!

இப்போது மீண்டும் வந்து சீமான் அணியின் பொய்களை நம்பி சக கள உறவுகளைக் கண்ணியக் குறைவாக விளித்திருக்கிறீர்கள். இதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் கூட, கோபம் மீண்டும் உங்கள் கண்ணியக் குறைவான விளிப்பினால் பாதிக்கப் பட்டவர் மீதே பாயும். ஏனெனில் சீமான் ஆதரவாளர்களின் டிசைன் அப்படி!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Justin said:

நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்குவில் முத‌ல் கோஷான் மேல‌ தான் எடுக்க‌னும்

காளிய‌ம்மாள் ப‌ற்றிய‌ அவ‌தூறுக்க‌ள் ம‌ற்றும் சீமான் மீது கோஷான் வைச்ச‌ பொய் குற்ற‌ச் சாட்டுக்க‌ளுக்கு ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ந‌க்க‌ல் நையாண்டி செய்வ‌து...............கோஷான் சிரிப்போடு க‌ச‌ப்பையும் க‌ல‌ந்து அடிக்கும் ந‌ப‌ர் ஆன‌ ப‌டியால் உங்க‌ட‌ பார்வைக்கு அவ‌ர் ந‌ல்ல‌வ‌ரா இருந்து விட்டு போக‌ட்டும் அதை ப‌ற்றி நான் க‌வ‌லைப் ப‌ட‌ போவ‌து கிடையாது............ச‌ட்டிக்கை இருப்ப‌து தான் அக‌ப்பேக்க‌ வ‌ரும் அதே போல் கோஷானுக்கான‌ ம‌திப்பு என் எழுத்தின் மூல‌ம் காட்டி விட்டேன்😉.............

யாழ் என்ப‌து சிறு வ‌ட்ட‌ம் சில‌ முக‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ள் வ‌ந்து எழுதி விட்டு போகும் க‌ருத்துக் க‌ள‌ம்.................சீமான் அந்த‌ விவாத‌த்தில் க‌ல‌ந்து கொள்வ‌தாக‌ தான் இருந்தார்..............அத‌ற்கான‌ ந‌ல்ல‌ விள‌க்க‌ம் க‌ட்சி பெடிய‌ங்க‌ளிட‌ம் இருந்து வ‌ந்த‌ போது என‌க்கும் அது ச‌ரி என்று ப‌ட்ட‌து அத‌னால் அதை ப‌ற்றி அல‌ட்ட‌ விரும்ப‌ வில்லை................

நீங்க‌ள் குமார‌சாமி தாத்தாவை நிர்வாக‌த்திட‌ம் சிக்க‌ வைச்ச‌ மாதிரி என்னையும் சிக்க‌ வைக்க‌ என‌க்கு அறிவுரை சொல்லுகிறேன் என்ர‌ பெய‌ரில் ப‌க்கா பிலானோட‌ வ‌ந்து இருக்கிறீங்க‌ள் அது ந‌ட‌க்க‌ வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை ..............

உங்க‌ளுக்கு நான் ஒன்றை மீண்டும் புரிய‌ப் ப‌டுத்த‌ விரும்புகிறேன் மோக‌ன் அண்ணாவின் முக‌த்துக்காக‌ தான் யாழில் இப்ப‌வும் இணைந்து இருக்கிறேன் ,

ம‌ற்றும் நான் நேசிக்கும் ஒரு சில‌ உற‌வுக‌ள் யாழில் தொட‌ர்ந்து எழுதுவ‌தால் அவ‌ர்க‌ளின் எழுத்துக்க‌ளையும் விரும்பி வாசிப்ப‌த‌ற்காக‌................ ம‌ற்ற‌ம் ப‌டி இதுக்கை எழுதி ஒரு மாற்ற‌த்தையும் கொண்டு வ‌ர‌ முடியாது.................தேவை இல்லா விரிச‌ல்க‌ள் வ‌ரும் என்று தெரிந்த‌ ப‌டியால் தான் சீமானின் ஒரு திரியில் போன‌ மாத‌மே வெளிப்ப‌டையாய் எழுதி விட்டு வில‌கி நான் இதுக்கை இனி எழுத‌ மாட்டேன் என்று ப‌ய‌ந்து அல்ல‌ புரிந்தால் ச‌ரி...................

@ரசோதரன் ர‌சோத‌ர‌ன் அண்ணா கூட‌ சீமானின் க‌ருத்துக்கு எப்ப‌வும் எதிர் க‌ருத்து வைப்ப‌வ‌ர் அவ‌ரை சீமானின் ஆதார‌வாள‌ர்க‌ள் எங்கையும் தாக்கி எழுதின‌து கிடையாது , அவ‌ர் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டி எழுதின‌தை நான் பார்க்க‌ வில்லை..............அத‌னால் ர‌சோத‌ர‌ன் குருநாதாருக்கான‌ ம‌ரியாதை எப்ப‌வும் உண்டு

நீங்க‌ளும் கோஷானும் ஏதோ பெரிய‌ அறிவுஜீவிக‌ள் போல‌ அல்ல‌து பெரிய‌ புல‌னாய்வுபுலி போல் பீத்தி கொள்ளுகிற‌து அது ப‌ல‌ரை வெறுப்ப‌டைய‌ வைக்கும் அத‌னால் தான் கோஷான் ம‌ற்றும் உங்க‌ளுட‌ன் பெரிசா விவாதிப்ப‌து கிடையாது , ச‌லிப்பு த‌ன்மை தான் வ‌ரும்................இனி நான் இதுக்கை எழுத‌ மாட்டேன்

ப‌ல‌ காணொளிக‌ள் கைவ‌ச‌ம் இருக்கு அவ‌தூறு ஆக‌ ஓவ‌ரா போனால் அனைத்து காணொளிக‌ளையும் இதுக்கை இணைப்பேன்..............

ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்👍......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, வீரப் பையன்26 said:

அண்ண‌ன் உதாவாநிதின்ட‌ கால்ல‌ விழுந்த‌தை நேரில் பார்த்தியா அல்ல‌து இதுவும் ம‌ற்ற‌ அவ‌தூறுக‌ளில் ஒன்றா............சீமான் கைத்துக்கு ப‌ய‌ந்து த‌லைம‌றைவு என்று கூவின‌ சில்ல‌றைக‌ளில் நீங்க‌ளும் ஒருத‌ர்

ஒருமையில் விளிப்பு🤣.

ம்ம்ம்….அண்ணன் காலுக்கு கீழே நெருப்பை கொழுத்த, கொழுத்த தம்பி கொதிநிலையை அடைகிறார்🤣.

சீமானே தான் உதயநிதியோடு இரவில் போன் பேசுவதை சொல்லி உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

பையன் உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன், உணர்ச்சி வசப்படாமல் கருத்தாடுங்கள், அனைவருக்கும் அவர்களது கருத்துரிமை உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, வீரப் பையன்26 said:

வ‌ய‌தான‌ உற‌வுக‌ள் ஏன் உங்க‌ளுட‌ன் விவாதிப்ப‌தில்லை என்று என‌க்கு இப்ப‌ விள‌ங்குது க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அவ‌ர்க‌ள் சொல்லும் போது புரிய‌ வில்லை இப்ப‌ புரியுது................

அப்படியா….

விசுகு அண்ணை, நெடுக்ஸ் இருவருக்கும் போலிக்கா வெளிவந்த சமயம் நீங்கள் கொடுத்த மரியாதை போலவா🤣?

யாழில் நான் இக்னோர் லிஸ்டில் போட்ட இருவர் தவிர மிகுதி எல்லாரிடமும் நான் இன்றும் சகஜமாகவே பழகுகிறேன், அவர்களும்.

15 minutes ago, வீரப் பையன்26 said:

நிர்வாக‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்குவில் முத‌ல் கோஷான் மேல‌ தான் எடுக்க‌னும்

நான் எந்த கள உறவையும் ஒருமையில் விளிக்கவில்லை.

தவிரவும் நான் சீமானின் கைப்புள்ளை அல்ல யோசிக்காமல் வார்த்தையை விட, வாயை வாடகைக்கு விட🤣.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் குமார‌சாமி தாத்தாவை நிர்வாக‌த்திட‌ம் சிக்க‌ வைச்ச‌ மாதிரி என்னையும் சிக்க‌ வைக்க‌ என‌க்கு அறிவுரை சொல்லுகிறேன் என்ர‌ பெய‌ரில் ப‌க்கா பிலானோட‌ வ‌ந்து இருக்கிறீங்க‌ள் அது ந‌ட‌க்க‌ வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை ..............

"......சிக்க வைத்தது மாதிரி.."

சீமான் ஆதரவாளர்கள் "டிசைன்" என்று நான் சொன்ன மாதிரியே நடந்திருக்கிறீங்கள் பார்த்தியளா😂?

மரியாதையாகப் பேசிக் கொண்டிருந்தவரை நோக்கி ஒருமையில் வசவு ஒருவர் எறிகிறார். நீங்களும் அதே திரியில் அவருக்கு பச்சைகள் குத்தி ஊக்குவித்துக் கொண்டு நின்றீர்கள். இப்ப ஏதோ தூங்கி எழுந்த அப்பாவி போல "சிக்க வைச்சான், மச்சமுள்ள மச்சான்" என்று புரளி கிளப்புகிறீர்கள்! இது தான் நான் குறிப்பிடும் "மென்ரல் டிசைன்": "நான் சொல்லும் எதற்கும் நான் பொறுப்பல்ல" என்ற "பொறுப்பேயில்லாத தன்மை".

இது சீமான் அலை எங்கள் ஆட்களிடையே விதைத்திருக்கும் ஒரு அரிய குணம்! எங்களுக்கு ஆப்பு, சீமான் போன்ற சாக்கடைகளுக்கு வரம்!

உங்களை நியூஸ் 18 லோகோவைத் திருடி மீம் போட்டு ஏமாற்றியிருக்கிறார்கள், அதை வைத்து நீங்கள் இங்கே மொக்கேனப் பட்டீர்கள். ஏன் அப்படி செய்தார்கள் என்று சீமான் தமிகளிடம் கேட்டு விடை பெற்றீர்களா? இல்லையென நம்புகிறேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

இனி நான் இதுக்கை எழுத‌ மாட்டேன்

மீண்டும் ஒரு திரியில் வேலி பாய்ந்தோடினார் வீரப் பையன்.

இனி என்ன பதுங்கி இருந்து -1 துப்பாக்கியால் சுட வேண்டியதுதான்🤣.

பொது நல அறிவிப்பு

  1. அறிவித்த படியே என் அடிகள் எல்லாமும் சீமான் மீது மட்டுமே. எந்த கள உறவையும் அடிக்கும் எண்ணம் அறவே இல்லை.

  2. தாமாக வந்து வாங்கினால் கம்பெனி பொறுப்பல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பொது நல அறிவிப்பு

  1. அறிவித்த படியே என் அடிகள் எல்லாமும் சீமான் மீது மட்டுமே.

நீங்க பெரிய போராளியாக என் வாழ்த்துக்கள்...., 😂😂 🏃🏃🏃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்க பெரிய போராளியாக என் வாழ்த்துக்கள்...., 😂😂 🏃🏃🏃

அதுக்கு அமரதாச, பொஸ்கோவை எல்லாம் தெரிந்து இருக்க வேணும்.

எனக்கு தெரிந்தது விசைபலகை வீரம் மட்டுமே🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

இது சீமான் அலை எங்கள் ஆட்களிடையே விதைத்திருக்கும் ஒரு அரிய குணம்! எங்களுக்கு ஆப்பு, சீமான் போன்ற சாக்கடைகளுக்கு வரம்!

விதைத்திருக்கும் விஷம்

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்து வருகின்ற சீமான் வெற்றி பெற்றது வெளிநாட்டு ஈழதமிழர்களிடம்

  • கருத்துக்கள உறவுகள்

திராவிட‌த்துன் க‌ட‌சி ஆயுத‌ம் விஜ‌ய‌ல‌ச்சுமி......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஷகி லா, பிரமி லா, சசிக லா, போல பல லாக்களை கற்று தேர்ந்த தம்பிகள் உன்குழாயில் உருட்டுகிறார்கள் இது சீமானுக்கு ஆதரவான தீர்ப்பாம் 🤣.

நீதிபதி சொன்னது கீழே.

19 hours ago, goshan_che said:

மேலும், இந்த வழக்கை சாதாரணமாக முடித்து விட முடியாது என தெரிவித்த நீதிபதி, விஜயலட்சுமி புகாரை திரும்ப பெற்றாலும் பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் காவல்துறை சீமானுக்கு எதிரான புகாரை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலே நீதிபதி சீமானின் மனுவை தள்ளுபடி செய்துள்ளார் - இது சீமானுக்கு ஆதரவான தீர்ப்பு எனில் - சீமான் தனக்கு பாதகமான மனுவை தானே சமர்பித்துள்ளாரா 🤣.

அண்ணனை கழுவி ஊத்த நான் தேவையில்லை. தம்பிகளே போதும் 🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

யுவர் ஆனர் விஜயலட்சுமிக்கு சீமான் முதல் கணவனா என்றும் கேட்க வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ஈழப்பிரியன் said:

யுவர் ஆனர் விஜயலட்சுமிக்கு சீமான் முதல் கணவனா என்றும் கேட்க வேண்டுகிறேன்.

பிச்சை எடுப்பதை விட மோசமானது…

பிச்சை பாத்திரத்தில் இருந்து எடுப்பது🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

பிச்சை எடுப்பதை விட மோசமானது…

பிச்சை பாத்திரத்தில் இருந்து எடுப்பது🤣

எடுப்பது என்று முடிவெடுத்தால் எதற்குள் எடுத்தால் என்ன?

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.

  • கருத்துக்கள உறவுகள்

பையா இங்கே பலருக்கு வீட்டில் வேலை இல்லையென்றால் ஏதாவது சீமானின் திரியை கொண்டுவந்து சொருகிவிட்டு தாமே முன்னால் நின்று விளக்குப்பிடித்து பார்த்தமாதிரி கருத்தெழுதுவதே தொழிலாகிவிட்டது. அதனால் இந்த திரியை கணக்கெடுக்காமல் நகர்வதே உனக்கு நல்லது.

அவரவர் தங்கள் ஆத்ம திருப்திக்கு எதையாவது எழுதிவிட்டு போகட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன.

அதே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.